
படையெடுப்பின் போது அழிந்துபோன தேவாலயம் இருந்த இடத்தில் மீள ஆலயத்தைக் கட்டாது புதியதொரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அமைப்பித்தான். அரண்மனை அரசமாளிகைகள் என்பன அமைந்திருந்த பண்டார வளவு, சங்கிலித் தோப்பு (பின்னர் வந்த பெயர்) என்பவற்றுக்கு அருகில் இக்கோயிலுக்கான இடம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அவ்விடம் முத்திரைச் சந்தியில் இன்று கிறீஸ்தவ தேவாலயம் அமைந்துள்ள இடமாகும்.
நல்லூர்க் கந்தசுவாமி கோயிலிலே திருவிழாக் காலங்களில் கூறப்படும் சமஸ்கிருதக் கட்டியம் (புகழ் மாலை) இக் கோவிலை சிறீ சங்கபோதி புவனேக பாகு கட்டினான் எனக் கூறப்படுகின்றது. இது கல்வெட்டாக இல்லாவிடினும் மரபு வழியாக நிலவி வந்துள்ளது. இப்புவனேக பாகு தான் ஆறாவது பராக்கிரம பாகு சார்பிலே யாழ்ப்பாணத்தை வென்று சிறிது காலம் (கி.பி 1450 - 1467) நிர்வாகம் செய்த சபுமால்குமாரய (தமிழில் செண்பகப் பெருமாள்) எனவும, இவனே பின்னர் கோட்டை அரசனாக ஆறாம் புவனேக பாகு எனும் பெயருடன் விளங்கினான் எனவும் பொதுவாகக் கொள்ளப்படுகின்றது.
ஏற்கனவே முன்னைய தமிழரசரால் அமைக்கப்பட்டுப் போரின் போது பாதிக்கப்பட்ட அல்லது பாதிக்கப்படாத கோயிலை இவன் மேலும் திருத்தியமைத்தமையால் அல்லது விசாலித்தமையால் இவன் பெயர் கோயிற் கட்டிடயத்தில் இடம் பெற்றிருக்கலாம். மேலும் சிலர் இப் புவனேகபாகு தமிழரசனின் மந்திரி என்பர். வரலாற்றிலே ஒரு நிறுவனத்தை நிறுவியவனின் மங்கிப் பின்னர் அதனைத் திருத்தியவனின் பெயர் நிலைபெறுதலுமுண்டு.

ஆறாம் பராக்கிரமபாகு தன் ஆட்சியின் முடிவிலே முடி துறந்து தன் மகள் வழிப் பேரனும் உலகுடைய தேவியின் மகனுமாகிய ஜய்வீர பராக்கிரமபாகு என்னும் இளைஞனைக் கோட்டை இராச்சியத்தின் அரசனாக முடிசூட்டிவிட்டு கி.பி 1467 இல் இறந்தான். இவற்றை அறிந்த செண்பகப் பெருமாள் யாழ்ப்பாணத்திலுள்ள தன் படைகளை அழைத்துக் கொண்டு கோட்டைக்குச் சென்று அங்கு போர் புரிந்து அதன் விளைவாக அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டான். சிறீ சங்கபூதி புவனேகபாகு என்னும் பட்டப்பெயரோடு அங்கு ஆட்சி புரிந்தான்.
அவனுடைய அதிகாரத்தை ஒப்புக்கொள்ளாத சிங்களப் பிரதானிகள் மலைநாட்டிலும் கீழ்நாட்டிலும் கலகம் விளைவித்தார்கள். கீழ் நாட்டில் ஏற்பட்ட கலகத்தைச் சிங்கள நூல்கள் சீஹள சங்கே (சிங்களக் கலகம்) என வர்ணிக்கின்றன. ஆயினும், தனது தம்பியான அம்புலாகல குமாரனின் ஆதாரவுடன் புவனேக பாகு அக்கலகங்களை அடக்கி விட்டான்.
செண்பகப்பெருமாள் யாழ்ப்பாணத்தை விட்டு நீங்கித் தென்னிலங்கைக்குப் போனபின் கனகசூரிய சிங்கையாரியான் தமிழகத்திலுள்ள அரசர்களின் உதவி பெற்று மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு வந்து தனது ஆட்சியை ஏற்படுத்திக் கொண்டான். யாழ்ப்பாண இராச்சியமானது கோட்டை அரசனின் மேலாதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றது.
செண்பகப்பெருமாள் யாழ்ப்பாணத்தை விட்டு நீங்கித் தென்னிலங்கைக்குப் போனபின் கனகசூரிய சிங்கையாரியான் தமிழகத்திலுள்ள அரசர்களின் உதவி பெற்று மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு வந்து தனது ஆட்சியை ஏற்படுத்திக் கொண்டான். யாழ்ப்பாண இராச்சியமானது கோட்டை அரசனின் மேலாதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றது.
உசாத்துணை:
"ஈழத்தவர் வரலாறு" இரண்டாம் பதிப்பு: கார்த்திகை 2000 - கலாநிதி க.குணராசா
"ஈழத்தவர் வரலாறு" இரண்டாம் பதிப்பு: கார்த்திகை 2000 - கலாநிதி க.குணராசா
6 comments:
வணக்கம் பிரபா
இதென்னடா இது!.... உயிர்த்தெழுந்த ஞாயிறு மாதிரி
உயிர்த்தெழுந்த ஆலயம் என்ற தலைப்பாக இருக்குதே எண்டு பாத்தா இது எங்கட நல்லூரானைப் பத்தி ஒரு நல்ல நேரத்தில நல்ல பதிவாகாக இருக்கு, மிக்க நன்றி பிரபா.
நீண்ட கால இடைவெளிக்குப் பின் மீண்டும் செல்லி
ஆனா திடீரெண்டு காணாமப் போனாலும் போயிடுவேன்.
நேரப் பிரச்சனைதான், எல்லாம்.....
மனசில தமிழ்மணம் மணத்துக் கொண்டேதான் இருக்கு! மறக்கக் கூடிய உலகமா இது!:-)))))
வாங்கோக்கா
கண்டு கனகாலம்,
உங்கட அடுப்படிப் பதிவுகளும் முருங்கக்காய் கறியோட நிக்குது ;).
தமிழ்மணத்தை விட்டுப் போக யாருக்கு மனம் வரும்?
//படையெடுப்பின் போது அழிந்துபோன தேவாலயம் இருந்த இடத்தில் மீள ஆலயத்தைக் கட்டாது புதியதொரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அமைப்பித்தான்.//
பிரபா!
இது யாரால் கட்டப்பட்ட தேவாலயம்....
அத்துடன் இந்தச் சிலைகள் இப்போ எங்கே உள்ளன.
//வாங்கோக்கா
கண்டு கனகாலம்,
உங்கட அடுப்படிப் பதிவுகளும் முருங்கக்காய் கறியோட நிக்குது ;).
தமிழ்மணத்தை விட்டுப் போக யாருக்கு மனம் வரும்?//
நானும் தான் கேட்கிறன்... ஏனக்கா என்ன நடந்தது தீடிரென்று காணாமல் போட்டியள்
//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
பிரபா!
இது யாரால் கட்டப்பட்ட தேவாலயம்....
அத்துடன் இந்தச் சிலைகள் இப்போ எங்கே உள்ளன. //
வணக்கம் அண்ணா
இங்கே தேவாலயம் என்று குறிப்பிடப்படுவது செண்பகப் பெருமாள் போர் தொடுத்தபோது அழித்த நல்லை முருகன் ஆலயம் ஆகும்.
போர்த்துக்கீசர் கட்டிய கிறீஸ்தவ தேவாலயம் குறித்த பகுதி பின்னர் வரும்.
படத்தில் இருக்கும் வள்ளி தேவசேனா முருகன் சிலை, தற்போதும் நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் பரிவாரத்தில் இருக்கின்றது.
சின்னக்குட்டியாரே வணக்கம்
//வாங்கோக்கா கண்டு கனகாலம்,
உங்கட அடுப்படிப் பதிவுகளும் முருங்கக்காய் கறியோட நிக்குது ;).
தமிழ்மணத்தை விட்டுப் போக யாருக்கு மனம் வரும்?//
நானும் தான் கேட்கிறன்... ஏனக்கா என்ன நடந்தது தீடிரென்று காணாமல் போட்டியள்//
வலு கரிசனையோடதான் கேட்கிறியள் எண்டதால காரணத்தைச் சொல்லுறன்.
வேரை ஒண்டுமில்ல, எல்லாம் வேலைச் சுமைதான்!
என்ர வீட்டு அடுப்படிக்கையே போக நேரமில்லாமக் கிடக்கு.
கெதீல நான் பதிவுகள் போட வருவன் நண்பர்களே
அன்புக்கு நன்றி!
Post a Comment