ஈழத்துக் கலைஞர், எழுத்தாளர், டொக்டர் இந்திரகுமார் கடந்த ஞாயிற்றுக் கிழமை லண்டனில் காலமானார் என்ற துயர்மிகு செய்தியை நண்பர் ரிஷான் பகிர்ந்து கொண்டார். அன்னாரின் இழப்பில் என் துயரையும் இங்கே பதிவு செய்து, தினக்குரலில் வெளியான டொக்டர் இந்திரகுமாரின் வாழ்க்கைக் குறிப்போடு, வீரகேசரியின் கலாகேசரி இணையத்தில் வெளியான அவரின் பேட்டியையும், டொக்டர் இந்திரகுமார் அவர்கள் கதாநாயகனாக நடித்த வாடைக்காற்று திரைப்படம் குறித்து நான் மூன்று வருடங்களுக்கு முன்னர் எழுதிய பதிவையும் மீண்டும் அவர் நினைவாக மீள் பிரசுரம் செய்கின்றேன். அன்னாரின் ஆத்மா சாந்தியடைவதாக.
தினக்குரலில் வெளியான ஆக்கம்
தமிழ்த் தேசியத்தை நேசித்த டாக்டர் இந்திரகுமார், உலகத் தமிழ்ப் பேரவையின் செயலாளராகவும் பணியாற்றியவர்.
அவர் தனது ஆரம்பக் கல்வியை 1958 களில் சென்.தோமஸ் கல்லூரியிலும் பின்னர் யாழ்.இந்துக்கல்லூரியிலும் பின்னர் மருத்துவக் கல்லூரியிலும் கல்வி கற்றார். மருத்துவக் கல்லூரி மாணவனாக இருந்தபோது மண்ணில் இருந்து விண்ணுக்கு என்ற தொடர் கட்டுரையை வீர கேசரியில் எழுதினார். 1972 ஆம் ஆண்டு மேற்படி தொடர் புத்தகமாக வெளிவந்து இலங்கையின் அரசு மண்டல சாகித்திய பரிசினைப் பெற்றது.
இவர் வாடைக்காற்று திரைப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். மேற்படி திரைப்படம் ஜனாதிபதி விருதினைப் பெற்றது.
விண்வெளியில் வீரகாவியம் என்ற கட்டுரையைத் தொடராக தினகரனில் எழுதினார். பின்னர் இந்தக் கட்டுரை நூலாக இந்தியாவில் பிரசுரமாகியது. 1997 இல் மேற்படி நூலுக்கு தமிழ்நாடு அரசு விருது வழங்கி கௌரவித்தது. 1983 கலவரத்தை அடுத்து லண்டனுக்கு இடம்பெயர்ந்த டாக்டர் இந்திரகுமார் அங்கு மருத்துவராகவும் எழுத்தாளராகவும் தனது பணியினைத் தொடர்ந்தார். டயானா வஞ்சித்தாரா? வஞ்சிக்கப்பட்டாரா? இலங்கேஸ்வரன் போன்ற பல நூல்களின் ஆசிரியராகவும் அவர் திகழ்ந்தார்.
அவர் தனது இறுதித் காலத்தை மருத்துவம், எழுத்துத்துறைக்கும் அப்பால் பழ.நெடுமாறனுடன் இணைந்து செயலாற்றியதுடன் உலகத் தமிழ்ப் பேரவையின் செயலாளராகவும் பணியாற்றினார்.
இவரது மறைவு எழுத்துலகிற்கும் தமிழ்த் தேசியத்துக்கும் பேரிழப்பாகும்.
தமிழ் கலாசாரத்தை காப்பதில் புலம்பெயர்ந்த தமிழர்களே முன்னோடி - வீரகேசரிக்கு வழங்கிய பேட்டி
இலங்கையில் ஒரு சிறந்த தமிழ் எழுத் தாளராகவும், மருத்துவராகவும் தன் வாழ்க்கைப் பயணத்தை தொடங்கி, உலகத் தமிழ்ப் பேரவையின் செயலாளராக, உலக நாடுகளில் தமிழ் வளர்ச்சிக்கு உறுதுணை யாக இருப்பவரும், இலண்டன் மாநகரில் தமிழ் இலக்கியப் பணியோடு சிறந்த மருத் துவராகச் செயலாற்றி வரும் டாக்டர் இந்திரகுமார் அவர்கள் வீரகேசரிக்கு அளித்த செவ்வி:
யாழ்ப்பாணத்திலிருந்து லண்டனுக்கு ஒரு சாதனையாளராக, உங்களது வாழ்க்கைப் பயணத்தைப் பற்றிக் கூறுங்கள்?
யாழ்ப்பாணத்திலிருந்து லண்டன் மாந கரத்திற்கு நான் 1983இல் சென்றேன். அப் பொழுது இருந்த இனக்கலவரமே நான் லண்டன் செல்லக் காரணமாக அமைந்தது. இலண்டன் செல்லும் முன்னர் இலங்கையில் நாடறிந்த ஒருவனாக இருந்தேன். முதல் நிலைக்கல்வியை கொழும்பில் 1958களில் சென்ட் தோமஸ் கல்லூரியில் படித்தேன். பின்னர், யாழ்ப்பாண இந்துக் கல்லூரி யில் படிப்பை நிறைவு செய்தேன். யாழ்ப் பாணத்தில் முதல் நிலைக் கல்வியை ஒரு வருடம் படித்து முடித்தேன். மருத்துவக் கல்லூரியில் படிக்கிற காலத்தில் "மண்ணில் இருந்து விண்ணிற்கு' என்ற கட்டுரை வீரகேசரியில் தொடர்கட்டுரையாக வெளி வந்து பின்னர் நூலாக வெளியிடப்பட்டது. 1972களில் அந்தப் புத்தகத்திற்காக இலங்கையின் "அரசு மண்டல சாகித்திய பரிசினை' பெற்றேன். இலங்கையில் நான் கதாநாயகனாக நடித்த "வாடைக்காற்று' என்ற தமிழ்த் திரைப்படத்திற்கு "ஜனாதிபதி விருது கிடைத்தது. அந்தப் படப்பிடிப்பின்போது நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களு டன் ஏற்பட்ட நட்பு அவரது இறுதி நாட்கள் வரை தொடர்ந்தது.
இலங்கையில் இருந்த தினகரன் நாளேட் டிற்கு, ""விண்வெளியில் வீரகாவியம்'' என்ற கட்டுரையை ஞாயிற்றுக்கிழமை இதழுக்காக எழுதினேன். பின்னாளில் அந்தக் கட்டு ரையை நூலாக இந்தியாவில் பிரசுரித்தேன். 1997இல் தமிழ்நாடு அரசு என்னுடைய நூலுக்கு விருது வழங்கியமை என்னை வியப்பில் ஆழ்த்தியது. அந்தக் காலத்தில் இலங்கையிலிருந்து வந்த ஓர் எழுத்தாளருக்கு, இந்தியாவில் விருது கிடைப்பது ஆச்சரியம்தான்.
லண்டனில் நீங்கள் எழுதிய நூல் களைப் பற்றிக் கூறுங்கள்?
பரவலாகப் பேசப்பட்ட என்னுடைய மற் றொன்று, ""டயானா வஞ்சித்தாரா? வஞ் சிக்கப்பட்டாரா?'' என்ற நூல். இது டயானா வின் மறுபக்கத்தைப் பற்றிய முதல் நூல். தமிழில் அச்சேறாமல் இருந்த பல்வேறு நூல்களைப் பிரசுரித்திருக்கிறேன். என் னுடைய தனிமுயற்சியில் பிரசுரம் பண்ணப் பட்ட முதல் நூல் ""இலங்கேஸ்வரன்''. பின் னர் தாமரை மணாளனுடன் இணைந்து பல நூல்களைப் பிரசுரம் பண்ணினேன். அவற் றுள் யாழ்ப்பாணத்தின் கடைசி அரசனான சங்கிலியனைப் பற்றிய நூலை, எம்.ஜி.ஆர் அவர்கள் படமாக்க முயற்சித்தார்கள். அத்தகைய சிறப்புடைய நூல் அது. மற் றொரு முக்கியத்துவம் வாய்ந்த நூல் ""தீ மிதிப்பும், எரிகின்ற உண்மைகளும்''. நான் மருத்துவ கல்லூரியில் படிக்கும் போது எழுதிய நூல் அது.
உங்களுடைய அடுத்த படைப்பு என்ன? அதனைப் பற்றிக் கூறுங்கள் ?
""உலகத்திலேயே மிகப்பெரிய இந்துக் கோவில் இருப்பது "கம்போடியா'வில்தான். அது ஒரு (திருமால்) விஷ்ணு கோவிலாகும். பல்லவ சோழ கட்டிடக்கலை அடிப்படை யில் கட்டப்பட்ட கோவில் அது. கம்போடி யாவின் பழைய பெயர் ""காம்போசம்''. கம்புக முனிவரின் வழி வந்தவர்கள் வாழ்ந் ததால், அந்நாட்டின் பெயர் ""காம்போசம்'' என்றானது. அங்கு பல்லவர் ஆதிக்கம் நிறைந்து இருந்தது. கி.மு. 2 முதல் கி.பி. 1 வரை பல்லவர்கள் கம்போடியாவில் ஆதிக் கம் செலுத்தியுள்ளனர். பல்லவர்கள் தங்கள் பெயருடன் சேர்த்துக் கொள்ளும் பட்டமான "வர்மன்' என்பதையே, காம்போடியா மன்னர்களும் பெயருடன் இணைத்துக் கொண்டனர். இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. கம்போடியாவின் பழைய இனம், "மியூனன் இனம்'. அதிலிருந்து தான் "ஹெல்லா இனம்' தோன்றியது. அதன் வழியில் "ஹெமர் இனம்' உரு வானது. கி.பி.6இல் நிலவிய பல்லவப் பண்பாட்டுக் கூறுகள் இந்த இனங்களில் காணப்படு கிறது. ஹெமர் நாகரிகம் கி.பி.6இல் தொடங்குகிறது. இந்த நாகரிகத்தை தான் ""உலகின் முதல் நாகரிகம்'' என்று உலகத்தோர் கூறு கின்றனர்''. இந்தச் செய்திகளடங்கிய என் அடுத்த நூலை தொல்லியல், கட்டிடக்கலை, சிற்பக்கலை, பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களுக்குக் காணிக்கையாக அளிக்கிறேன். கம்போடிய நாட்டின் கட்டிடக்கலை, பல்லவசோழ கட்டிடக்கலை என்பது நான் கொடுக்கும் ஒரு சிறுதிறப்பு மட்டுமே.
பல்லவக் கட்டிடக்கலையையும்கம் போடியக் கட்டிடக்கலையையும்; சோழக் கட் டிடக் கலையையும் கம்போடியக் கட்டிடக் கலையையும்; பல்லவ, சோழ இணைப்புக் கட்டிடக் கலையையும் கம்போடிய கட்டிடக் கலையையும் ஒப்பிட்டு உண்மை காண வேண்டியது இளைய தலைமுறையினரின் கடமை. அதற்காகவே என்னுடைய நூலை அவர்களுக்கு காணிக்கையாக அளிக் கிறேன். கண்டுபிடிப்புகள் உண்மையாக நிகழ வேண் டும் என்பதற்காக, கல்வெட்டுச் செய்திகளை வார்த்தை மாறாமல் அப்படியே கொடுத்துள் ளேன்.
தமிழ் கலாசாரத்தை காப்பதில் இலங்கைத் தமிழரின் நிலை எவ்வாறு உள்ளது?
இலங்கைத் தமிழர்கள் எங்கு குடியேறி னாலும் நம் பண்பாட்டை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு பரப்புகிறார்கள். கலா சாரத்தைப் பரப்புவதில் தமிழ்நாட்டிற்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கின்றார்கள்.
இந்தியத் தமிழர்களிடம் இருக்கிற அளவுக்கு திறமையும், பயிற்சியும் இல்லாது இருக்கலாம். ஆனால் அவர்களது ஆர் வத்தையும், ஊக்கத்தையும் தமிழ்நாட்டில் யாரும் எட்ட முடியவில்லை. இசை, நாட் டியம், நடனம் முதலான கலைகளை மாலை வகுப்புகள் வைத்து, வெளிநாடுகளில் இலங்கைத் தமிழர்கள் வளர்த்து வருகின் றனர். பதிப்பகங்களின் இந்தச் சுரண்டலைப் போக்க என்ன செய்வது ?
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந் ததைப் போன்று, கல்கி, அகிலன், சாண்டில் யன் போன்ற முழு நேர எழுத்தாளர்களை இப்போது காணமுடிய வில்லையே ஏன்...! , ஒரே தலைமுறையில் எழுத்துத்திறனுக்குரிய ஜீன்கள் அழிந்து பட்டுப்போயினவா என்ன...!, முழுநேர எழுத்தாளர்கள் முற்றி லும் குறைந்து முழுநேரப் பதிப்பகங்கள் மட்டும் அதிகமாகியிருக்கிறதே...!, இதற்கு என்ன காரணம். வர்த்தகத் தொடர்பில் ஏதோ தப்புத்தாளம் இருக்கிறது என்றுதானே பொருள்...! ஒருவன் மற்றொருவனைச் சுரண்டுவதும், கொள்ளையடிப்பதுமே இந்த தலைகீழ் மாற்றத்திற்குக் காரணம்.
பதிப்பகங்களின் இந்தச் சுரண்டலைப் போக்க என்ன செய்வது என்றால், அதற்கு ஒரே வழி எழுத்தாளர்கள் ஒன்று கூட வேண் டும். ""எழுத்தாளர் கூட்டுறவு பதிப்பகங்கள் உருவாக்கப்படவேண்டும். சென்னை எழுத் தாளர் கூட்டுறவுப் பதிப்பகம், மதுரை எழுத் தாளர் கூட்டுறவுப்பதிப்பகம், இலங்கை எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம், ஐரோப் பிய எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம் என்று உருவானால்தான், எழுத்தாளர்களைச் சுரண்டி பணத்தைச் சேர்த்துக் கொழுப்பவன் இருக்கமாட்டான். அங்கு பதிப்பகத்தில் அமைப்பாளர் ஒருவர் இருப்பார், சரிபார்ப் பவர் ஒருவர் இருப்பார். அந்நிலை வந்தால் படைப்புகளுக்கு உரிமையாளர் எழுத்தாளர் களே!. சென்னைப் பதிப்பகத்தார் மதுரைக்கும், மதுரையிலிருந்து இலங் கைக்கும், இலங் கையிலிருந்து ஐரோப்பாவிற்கும் தொடர்பு கொண்டு பதிப்பகத்தார்களின் புத்தகங்களை விற்பதன் மூலம் இடம் பரிமாறப்படும். படைப்புப் பரவல் ஏற்படும்.இல்லாவிட்டால் அழிந்த கலைகளுள் ஒன்றாக எழுத்துக்கலையும் மாறிவிடும்.
எழுத்தாளர்களைச் சுரண்டும்சில தமிழக பதிப்பகத்தார்....
கே: தாங்கள் எழுதிய நூல்களை வெளியிடுவதில் எழுத்தாளர்கள் சந்திக் கும் பிரச்சினைகளைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
தாங்கள் வெளியிடும் நூல்கள் மக்களை முழுமையாகச் சென்றடைவதுதான் எழுத்தாளர்களுக்கு கிடைக்கும் வெற்றி. இலங்கையில் நிலவும் போர் நிலையால் அங்கு புத்தகம் பிரசுரிக்க அதிகம் பணம் தேவை. புத்தகம் வெளியிடப்படும் பொழுது, எழுத்தாள ருக்குக் கொடுக்கப்பட வேண்டிய குறிப் பிட்ட விழுக்காடு பங்குக்காக, 100 புத்தகம் கொடுத்து அதை விற்று, பங்குப் பணத்தை எடுத்துக் கொள்ளச் சொல்லி விடுவார்கள். ஆனால் பெரும்பாலும் எழுத்தாளர்களுக்கு 1015 புத்தகங்கள் மட்டுமே வரும். எழுத்தாளர்களுக்கு உங்கள் நூலை லண்டனில் வெளியிடுகிறோம் என்று அறிவிப்பை வழங்கிவிட்டு, விழாவின் பேனரில், 'ஙீ'பதிப்பகத்தாரின் வெளியீடு கள்' என்று எழுதியிருப்பார்கள். எழுத் தாளர்களின் பெயர் இருக்காது. இருந் தாலும், நம்முடைய நூல் அச்சாகின்றதே என்ற நிம்மதி மட்டுமே எம்போன்ற எழுத்தாளருக்கு மிஞ்சும். பதிப்பகத்தார் எழுத்தாளருக்கு வழங்க வேண்டிய பங்கிற்காக, என் புத்தகத்தை "மறுபதிப்பு' என்று அச்சேற்றி, மோசம் பண்ணியிருக்கிறார்கள். 14 முறை பதிப்பு செய்யப்பட்டும் ஒவ்வொரு முறையும் மறுபதிப்பு செய்யப்பட்ட பழைய பதிப்பு என்றே காட்டியிருந்தனர். எழுத்தின் அச்சு முறை மாறி இருந்ததைக் கண்டு அவர்கள் செய்த மோசடியைத் தெரிந்து கொண் டேன்.
14ஆம் பதிப்பு என்று அச்சிட்டால் அந்தப் புத்தகத்தின் எழுத்தாளருக்கு பெருமையும், வெகுமதியும் கிடைக்கும். ஆனால் மறுபதிப்பு என்று குறிப்பிட்டு எழுத்தாளர்களை ஏமாற்றுகின்றனர். இத னால் பதிப்பகத்தார்களுக்கு மட்டுமே நல்ல வருமானம் கிடைக்கும்.
வாடைக்காற்று நாவல் குறித்த என் பார்வையோடு அந்த நாவல் படமாக்கப்பட்ட போது எடுத்த புகைப்படக் காட்சிகள்
செங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் " வாடைக்காற்று எழுதினாரே, அவரா?" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற்று என்ற நாவலின் மூலம் ஒரு முகவரி தேடிக்கொண்டவர் எழுத்தாளர் செங்கை ஆழியான். வாடைக்காற்று நவீனம், நாவல் உலகில் ஒரு மைல்கல் என்றார் இரசிகமணி கனக செந்திநாதன். ஈழத்து நாவல் உலகே கண்டிராத அதிசயமாக, செட்டிக்குளம் வாழ் மக்கள் 1974 ஆம் ஆண்டு மாசி 22 ஆம் திகதி விழா எடுத்ததும் இந்த நாவலுக்குத் தான். இந்த நாவலைச் சமீபத்தில் மீண்டும் வாசித்துமுடித்தபோது எனக்குள் இப்படி நினைத்துக்கொண்டேன் நான் "இந்த நாவல் இவ்வளவு கெளரவங்களையும் பெற உண்மையில் தகுதியானதே". இணையமூடாக அரங்கேற்றும் என் முதல் நூல் விமர்சனம் என்பதிலும் நான் பெருமையடைகின்றேன்.
மேலே படத்தில் வாடைக்காற்றில் மரியதாஸாக நடித்த டொக்டர் இந்திரகுமார், நாகம்மாவாக நடித்த ஆனந்தராணி
நெடுந்தீவுப் பிரதேச மீனவர் வாழ்வு, வாடை பெயர்ந்ததும் பேசாலை, கரையூர் முதலான பகுதிகளில் இருந்து நெடுந்தீவுக்கு வரும் மீனவர்களுக்கும் உள்ளூர்வாசிகளுக்கும் ஏற்படும் தொழிற்போட்டி, காதல், குழிபறிப்பு, மீனவர் போராட்டங்கள் இவை தான் இந்நாவலின் மூலக்கரு. சொல்லப்போனால் இந்தக் கதையில் தனியே ஒருவனோ ஒருத்தியோ மையப்படுத்தப்படாமல், பயணிக்கும் பெரும்பாலான கதைமாந்தர்களே நாயகர்கள். ஓவ்வொருவர் பக்கம் தமக்குரிய நியாயம் என்ற வரையறைக்குள் இவர்கள் நன்றாகச் செதுக்கப்பட்டிருக்கிறார்கள். சொல்லப்போனால் இயக்குனர் படம் என்று சொல்வது போல இது செங்கை ஆழியான் இதன் பிரம்மாவாக இருந்து பாத்திரங்களை தனித்துவமானவர்களாகக் காட்டியிருக்கின்றார்.
இவர் அடிப்படையில் ஒரு புவியியல் ஆசிரியர்/ஆய்வாளன் என்பதால் இந்த நாவல் வெறும் கதைக்கோர்வையாக மட்டுமில்லாது மீன்பிடிப்பிரதேச வாழ்வியலையும், அவர்கள் மீன்பிடிக்கும் முறையையும் விளக்கும் விபரணப் படைப்பாகவும் திகழ்கின்றது. மற்றய படைப்பாளிகளிடம் இருந்து தனிக்கென ஒரு பாணியை ஏற்படுத்துகையில் களம் பற்றிய புவியியல் ஆதாரங்களை அவரின் மற்றைய படைப்புக்களிலும் அவதானிக்கலாம். இது வாசகர்களுக்கு சுவாரஸ்த்தையும் புவியியல் அறிவையும் தரும் என்பது மறுக்கமுடியாத உண்மை. தீவிற்கு குறிப்பிட்ட பருவகாலத்தில் வந்துபோகும் பெலிகன் எனப்படும் கூழக்கடா பற்றிய குறிப்பும் இந்நாவலில் வருகின்றது.நெடுந்தீவின் சிறப்பாக இருக்கும் போனிக்குதிரைகள், அவற்றின் சவாரி பற்றிய குறிப்பும் உள்ளது.
இவரின் உருவங்கள் பற்றிப் பேசும் போது நெருடலான ஒரு விடயத்தையும் சொல்லவேண்டும். பெண்களை வர்ணிக்கும் போது அவர்களின் மார்பழகை மையப்படுத்தி சில இடங்களில் ஒரே மாதிரியாக வர்ணிப்பதை அவர் தவிர்த்திருக்கலாம் (உதாரணம் பக் 19)
இக்கதையில் பல சுவாரஸ்யமான பாத்திரங்கள் இருந்தாலும் அனுதாபத்தை அள்ளிப்போவது நாகம்மாவின் முறைமாமன் விருத்தாசலம் பாத்திரம்.கூழக்கடாவை வேட்டையாடிக் கொண்டுபோய் நாகம்மாவைக் கவர அவன் போடும் திட்டமும், கதையின் இறுதியை முடித்துவக்கின்ற அனுதாபத்துக்குரிய பாத்திரமாகவும் அவன் படைக்கப்பட்டிருக்கின்றான்.
படிக்கும் போது அவதானித்த இன்னோர் விடயம், இந்த நாவலை சில இடங்களில் பாத்திரங்களுக்கு இடையில் வரும் உரையாடல் மூலம் கதை நகர்த்தல், இது படிக்கும் போது சுவையாக இருக்கிறதே என்று நினைக்கும் போது, அடுத்த அத்தியாயம் ஏனோ தானோவென்று கடமைக்காக எழுதப்பட்டது போல சிலபக்கங்களில் நிரப்பப்பட்டிருக்கின்றது.
மரியதாஸ் பாத்திரம், மீன்பிடிக்க நெடுந்தீவை நாடி வந்து தொடர்ந்து ஒன்றும் கிடைக்காமல் நொந்து போவது, பின் தன் புதிய யுக்தியைக் கொண்டு மீன்களை அள்ளுவது இந்தச் சம்பவக்கோர்வைகள் ஒரு தேர்ச்சிபெற்ற மீனவனின் யுக்தியோடு அழகாகக் காட்டப்படிருக்கின்றன.
செமியோன் -பிலோமினா காதல், மரியதாஸ் நாகம்மா காதல் இன்னொரு திசையில் பயணப்படும் சுவையான பக்கங்கள்.
இக்கதையில் வரும் பாத்திரங்களின் சம்பாஷணைகளை முழுமையாகப் பேச்சுவழக்கில் எழுதுவதா அல்லது இலக்கணத்தமிழில் எழுதுவதா என்று எழுத்தாளர் திணறியிருக்கிறார் போலும். சில இடங்களில் பாத்திரங்கள் இலக்கணத் தமிழ் பேசுவதன் மூலம் அன்னியப்பட்டிருக்கின்றன.
இந்தக் கதை 1974 ஆம் ஆண்டில் செங்கை ஆழியானின் ஆரம்ப கால எழுத்தாக வந்திருக்கிறது. இதை மீண்டும் விரிவாக எழுதும் போது "செம்மீன்" போன்ற கனகாத்திரமான இன்னும் உயர்ந்த இலக்கியப்படைப்பாக இருக்கும் என நினைக்கிறேன். என் இந்த ஆதங்கத்தை அண்மையில் வானொலிக்காக இவரை நேர்காணல் கண்டபோது கேட்டிருந்தேன்.
" எனக்கும் அந்த உணர்வு இருக்கின்றது, ஆனால் அது எப்பவோ எழுதி முடித்தகதை அதை அப்படியே விட்டுவிடுவோம்" என்றார் செங்கை ஆழியான் என்னிடம்.
நாவலைப் படித்து முடிக்கும் போது, கதையின் அவலமுடிவு மனதைப் பிசைகின்றது. இறுதி அத்தியாயம் படு விறுவிறுப்பாகவும் எழுதப்பட்டிருக்கிறது.
வாடைக் காற்று நாவல் ஒரு காட்டாறு போன்றது. இந்நாவலின் ஆழ அகலத்தை ஒரு குறுகிய விமர்சனப் பார்வையில் அடக்கிவிடமுடியாது. ஈழத்து நாவலை நுகரும் ஓவ்வொரு வாசகனும் கட்டாயம் வாசிக்கவேண்டிய நவீனம் இது. வாடைக்காற்று நாவலைப் படித்து முடிக்கும் போது என் உள்ளுணர்வு சொன்ன விடயம் இதுதான். "ஆஹா என்னதொரு அழகான திரைக்கதை பொருந்திய நவீனம் இது. எமக்கென ஒரு நல்ல திரைப்படத் தொழில்நுட்பக்குழுவும் , நல்லதொரு நடிகர் பட்டாளமும் வரும்போது இந்நாவல் மீண்டும் திரைப்படமாக உருவானால் சர்வதேசப் படங்களுக்கு மத்தியில் துலங்கும் எம் தனித்துவமான படைப்பாக இது திகழும்.
இந்த நாவலின் முக்கியபகுதிகளை எடுத்து இன்னொரு களத்தை மையப்படுத்தி இயக்குனர் பாரதிராஜா தன் கல்லுக்குள் ஈரம் திரைப்படத்தில் பயன்படுத்திவிட்டார் என்ற குற்றச்சாட்டு உண்டு. இது பற்றியும் நான் அவரின் நேர்காணலில் கேட்டபோது" படப்பிடிப்புக்காக இலங்கை வந்த மேஜர் சுந்தரராஜன் வாடைக்காற்று படத்தைப் பார்த்ததாகவும், பின் தன்னிடம் இந்த நாவல் பிரதியைப் பெற்றதாகவும், பின் அந்தப் பாத்திரப் படைப்புக்களோடு கல்லுக்குள் ஈரம் படம் சில வருடங்களில் வந்ததாகவும் செங்கை ஆழியான் குறிப்பிட்டார். பின் இது பற்றி சுந்தரராஜனிடம் இவர் கேட்டப்போது இந்த நாவலைப் படமாகவில்லையே சம்பவங்களையும் முக்கிய பாத்திரப்படைப்புக்களைத் தானே எடுத்து " கல்லுக்குள் ஈரம்" வந்தது என்றாராம்.83 கலவரத்தில் ஈழத்துத்திரைப்படங்கள் அழிந்தபோது, ஒரு ரீல் மட்டும் தீக்கிரையாகி ஆனால் முக்கிய காட்சிகள் தப்பிவிட்ட வாடைக்காற்று திரைப்படம் தன்னிடம் இருப்பதாக செங்கை ஆழியான் குறிப்பிட்டார்.
வாடைக்காற்று திரைப்படமான போது
கமலாலயம் மூவிஸ் சார்பில் ஏ.சிவதாசன், பா.சிவசுப்பிரமணியம் ஆகியோர் இந்தக் கதையைத் திரைப்படமாக்கினர். இவர்கள் தெரிவு செய்த இன்னொரு நாவல் பாலமனோகரன் எழுதிய நிலக்கிளி . ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான பாலுமகேந்திரா இவ்விரு நாவல்களையும் ஒப்பிட்டு பின் , "நிலக்கிளியில் வரும் பதஞ்சலி பாத்திரத்தில் நடிக்கக் கூடிய நடிகையைத் தென்னிந்தியாவிலேயே தேடமுடியாது , வாடைக்காற்று நாவலை இலங்கையின் சூழலுக்கு ஏற்ப படமாக்கலாம்" என்றாராம்.
நடிகர்கள்: ஏ.ஈ.மனோகரன் (செமியோன்) , டொக்டர் இந்திரகுமார் (மரியதாஸ்), சந்திரகலா (பிலோமினா) , ஆனந்த ராணி (நாகம்மா), எஸ்.ஜேசுரட்ணம் (பொன்னுக்கிழவர்), ஜவாகர் (சுடலைச்சண்முகம்), பிரான்சிஸ்( சவரிமுத்து), கே.எஸ். பாலச்சந்திரன் (விருத்தாசலம்) , கந்தசாமி (சூசை).
ஒளிப்பதிவு: ஏ.வி.எம்.வாசகர்
திரைக்கதை, வசனம்: செம்பியன் செல்வன், செங்கை ஆழியான்
இசை: ரீ.எவ்.லத்தீப்
உதவி இயக்கம்: கே.எஸ்.பாலச்சந்திரன்
இயக்கம்: பிறேம்நாத். மொறாயஸ்
படப்பிடிப்பு ஆரம்பம்: 10.02.77
(கதைக்களம் நெடுந்தீவு என்றாலும் பேசாலையில் 43 நாட்களில் படமாக்கப்பட்டது)
திரையிட்ட தேதி: 30.03.1978
இலங்கையின் அனைத்து மாகாணங்களிலும் பரவலாகத் தமிழர் அதிகம் வாழும் பகுதிகளில் திரையிடப்பட்டது. அதிக நாட்கள் ஓடிய தியேட்டர் யாழ் ராணி தியேட்டர் 41 நாட்கள்
முதற்தடவையாக சிறந்த படத்துக்கான ஜனாதிபதி விருது (1978) கிடைத்த தமிழ்த் திரைப்படம் இது. யேசுரட்ணம் சிறந்த துணை நடிகராகத் தேர்வு (ஆதாரம்: இலங்கைத் தமிழ் சினிமாவின் கதை)
"வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே" ஒரு காலத்திலே இலங்கை வானொலியில் தென்னிந்தியப்பாடல்களுக்கு நிகராக வலம் வந்த பாடல்.
மறக்கமுடியுமா இதை.
நன்றி:
தினக்குரல்
வீரகேசரியின் கலாகேசரி இணையத்தளம்
வாடைக்காற்று நாவல் - கமலம் பதிப்பகம்
Wednesday, December 24, 2008
ஈழத்துக் கலைஞர் டொக்டர் இந்திரகுமார் நினைவாக
Posted by
கானா பிரபா
at
10:08 PM
23
comments
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook
Saturday, December 13, 2008
Madagascar கொணர்ந்த கார்ட்டூன் நினைவுகள்
தர்மத்தின் வாழ்வதை சூது கவ்வும், மீண்டும் தர்மம் ஜெயிக்கும் இதையே பெரும்பாலான கார்ட்டூன் கதைகளின் சாரமாக வைத்து வித விதமான பாத்திரங்களையூம், அவற்றுக்கான களங்களையும் வைத்துக் கதை பண்ணி விடுவார்கள். இப்போதெல்லாம் பிரபல ஹாலிவூட் நடிகர்கள் மற்றும் நகைச்சுவை தனி நடிப்பாளர்களின் குரலை படத்தின் பின் குரலுக்கும் பயன்படுத்துவதும், நகைச்சுவையை அள்ளித் தெளித்து ஆங்காங்கே பாடல்களையும் செருகி நூறுவீத பொழுது போக்கு உத்தரவாதம் அளித்து விடுவார்கள். அந்த வரிசையில் இடம்பிடித்திருக்கின்றது இன்று நான் பார்த்த Madagascar: Escape 2 Africa.
வரும் வாரம் தான் அவுஸ்திரேலியாவில் Madagascar: Escape 2 Africa திரையிடப்பட இருக்கின்றது. ஆனால் இந்த வார இறுதியில் பிரீமியர் ஷோவாக மூன்று காட்சிகள் மட்டும் இட்டிருந்தார்கள். முதல் நாள், முதல் ஷோவில் பார்க்கும் த்ரில்லை அனுபவிக்க எண்ணி இந்தப் படத்துக்குப் போவதென்று முடிவு கட்டினேன். கிராமத்தில் இருந்து பட்டணத்துக்கு வேலை தேடி வருபவன் கணக்காக மெல்பனில் பட்டப்படிப்பை முடித்து விட்டு எட்டு வருஷத்துக்கு முன் சிட்னிக்கு வேலை தேடி வந்த காலத்தில், வார நாளில் ஒரு நாள் காலை பொழுது போகாமல் Dinosaurs என்ற கார்ட்டூன் படத்துக்குப் போய் நான் மட்டுமே அந்தப் பெரிய அரங்கில் இருந்து படம் பார்த்ததை இன்னும் பெருமையாகச் சொல்லிக் கொள்வேன் ;)
பின்னர் Finding Nemo என்ற இன்னொரு கார்ட்டூன் திரைப்படத்துக்கும் போய் அரங்கத்தில் அமர்ந்தால் சுற்றி வர மூன்று மாசக் குழந்தையில் இருந்து முப்பது வயது அம்மாக்கள். நடுவே நான் தனித்தீவில் விடப்பட்ட Nemo போல. படம் தொடங்கி முடியும் வரை இருபக்கமும் இருந்த வாண்டுகளும் என்னை முறைத்துக் கொண்டே இருந்தது போல ஒரு பிரமை இருந்தது. இம்முறை அந்தமாதிரி எதுவிதமான அசம்பாவிதங்களும் நடந்து விடாமல் இருக்க நண்பரின் மூன்று வாண்டுகளை பாதுகாப்புக் கவசமாக வைத்துக் கொண்டு Madagascar: Escape 2 Africa பார்க்கப் போனேன்.
Madagascar மூன்றாண்டுகளுக்கு முன்னர் வந்து சிறுவர்களின் உலகத்தையே சந்திரமுகி கணக்காட்டம் (வசூலில்) கலக்கு கலக்கிய படம். நியூயோர்க் நகரத்தின் Central Park Zoo வில் இருக்கும் பெங்குவின்கள் தமது கூண்டுச் சிறைவாசம் வெறுத்து நகரத்துக்குத் தப்பியோட முனைய Marti என்னும் அதே மிருகக்காட்சிசாலை கைதியும் தானும் வெளியுலகத்தைக் காண வேண்டும் என்று தப்பியோட அவரைத் தேடி அவரது நண்பர்கள் Alex (சிங்கம்), Melman (ஒட்டகம்), Gloria (நீர்யானை) என்று அவர்களும் திருட்டுத்தனமாக வெளியே வந்து நகரத்தை அதகளம் பண்ணி, மடகாஸ்கார் தீவெல்லாம் அலைவது என்று போகும். அந்தப் படம் கொடுத்த வசூல் தெம்பில் வந்திருக்கின்றது Madagascar: Escape 2 Africa.
இந்தப் படத்தில் ஆரம்பத்தில் மிருகக்காட்சிச் சாலையின் ராஜாவாக இருந்து கலக்கிய Alex என்ற சிங்கத்தின் பூர்வீகம் எப்படி இருந்தது என்று 80 களுக்கு முந்திய காலத்து பழிவாங்கும் பாணி தமிழ் சினிமாவின் எழுத்தோட்டத்துக்கு முந்திய காட்சியமைப்பு போல இருக்கின்றது. ஆபிரிக்காவின் காட்டு ராஜாவான Zuba வுக்கும் காட்டு ராணி Florrie க்கும் பிறந்த Alex பச்சிளம் பாலகனாக இருந்த வேளை ஒரு நாள் வேட்டைக்காரர் கையில் அகப்பட்டு கூண்டில் அடைபட்டு போகும் போது, தன் தந்தையின் ஆக்ரோஷமான தாக்குதலால் நிலைகுலைந்த வேட்டைக்காரர்களின் ஜீப்பில் இருந்து வழி தவறி நதியில் விழுகின்றது Alex இருந்த பெட்டி. அது மெல்ல நதிகளைக் கடந்து மிருகக் காட்சிச் சாலையில் வந்து சேர்கின்றது. வேட்டைக்காரர்களின் துப்பாக்கிக் குண்டில் அடிபட்ட காட்டு ராஜா Zuba வழியில் சாய்கிறார்.
காலம் அப்படியே நிகழ்காலத்துக்குத் தாவுகின்றது. முந்திய படத்தின் இறுதிக் காட்சியில் வந்து மீண்டும் ஒட்டுகின்றது. King Julien & Maurice (Lemur -ஒருவகை பாலூட்டும் குரங்கினம், தேவாங்கு என்று இதை எங்களூரில் அழைப்பார்கள்)இன் விருந்தினர்களாக இருந்த Alex (சிங்கம்)அவரது நண்பர்கள் Marti(வரிக்குதிரை),Melman (ஒட்டகம்),Gloria (நீர்யானை), கூடவே ஒட்டிக் கொள்ளும் இரண்டு லூசுக் குரங்குகள் சகிதம் பெங்குவின்களின் விமானத்தில் நியூயோர்க் நகரத்துக்குக் கிளம்புகிறார்கள். ஆனால் விதியின் சதி அணில் ரூபத்தில் வந்து விமானத்தில் நாசவேலை செய்ய அந்த விமானம் ஆபிரிக்காவின் காட்டில் வந்து விழுகின்றது. ஆபிரிக்காவின் காட்டு ராஜா Zuba, காட்டு ராணி Florrie ஆகியோர் இங்கே வந்து அடைக்கலம் கேட்கும் Alex தமது பிள்ளை தான் என்று கண்டு பாசமழை பொழிகிறார்கள் (பாட்டு சீன் உண்டு). தமது மகன் Alex ஐ காட்டு ராஜாவாக்க முடிவெடுக்கும் போது, அதுவரை அண்ணன் எப்போது சாவான் திண்ணை எப்போது காலியாகும் என்று காத்திருக்கும் நம்பியார் ரூபத்தில் இருக்கும் Makunga என்ற இன்னொரு சிங்கம் தடையாக வந்து தன் சூழ்ச்சியால் தானே முடிசூடிக் கொள்கின்றது. தம் பதிவியையும் கெளரவத்தையும் இழந்த பழைய காட்டுராஜா Zuba குடும்பத்திற்கு எப்படி மீண்டும் சந்தோஷ வாழ்வு வருகின்றது, Alex தனது நண்பர்கள் மூலம் எப்படி இந்த காட்டின் தண்ணீர்ப் பிரச்சனையைத் தீர்த்து வளம் செழிக்க வைத்து தன் சமயோசிதத்தால் ஆட்சியைப் பிடித்தான் என்பதே Madagascar: Escape 2 Africa சொல்லும் கதை.
Etan Cohen கதையில் Eric Darnell, Tom McGrath ஆகியோர் இயக்கத்தில் வந்திருக்கின்றது இப்படம். ஆரம்பம் முதல் நளினமான நகைச்சுவையும் அந்தந்தப் பாத்திரங்களுக்கு ஏற்ற கச்சிதமான குரலையும், இனிய இசையும் பாடல்கள் உட்பட கொடுத்து அதற்கேற்றாற் போல சாதாரண கதை என்றாலும் ரசிக்கும் படி எடுத்திருப்பது இப்படத்தின் மிகப்பெரிய அனுகூலம்.
ஓவ்வொரு பாத்திரங்களையுமே சிறப்பாகக் காட்டியிருக்கின்றார்கள்.
ஆபிரிக்கா காட்டுக்குள் விழுந்து அங்குள்ள மிருகங்களிடம் அரைகுறை ஆங்கிலத்தில் (அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்று நினைத்து) சைகை பாஷை பேசிக் காட்டி நடிக்கும் Alex ஒருபுறம். மிருகங்களின் ஆபிரிக்க நடன விருந்தில் பாட்டின் நடுவே வரும் "சிக்கச் சிக்கச் ச்சா" என்று வரும் வரியை கேட்டு "சிக்கச் சிக்கச் ச்சா, what's that?" என்று கேட்டு விட்டு தானும் அதைப் பாடி ஆடும் King Julien (Lemur) படம் முழுக்க வந்து கலக்கும் குறும்புத் தனங்களும், தனக்கு மகப்பேற்று விடுமுறை (Maternity leave) கேட்டும் கொடுக்காத விமான ஓட்டி பெங்குவினை அதன் அந்தரங்க விஷயத்தை போட்டோ மூலம் காட்டி பிளாக் மெயில் செய்யும் குரங்கின் குரங்குச் சேட்டை, Gloria (நீர்யானை) மேல் மையல் கொள்ளும் Melman (ஒட்டகம்) தனது தூய காதலை நிரூபிக்க உயிரைக் கொடுக்கும் விஷயங்கள் என்று எல்லாமே ஒரு கார்ட்டூன் படத்தைப் பார்க்கின்றோம் என்பதை மறக்கடித்து விடுகின்றது.
இறுதிக் காட்சியில் அந்தக் காட்டின் வரட்சியைப் போக்க Alex (சிங்கம்)எடுக்கும் முயற்சியை ஒருபுறம் காட்டிக் கொண்டே, இன்னொரு புறம் King Julien (Lemur)இன் ஆலோசனைப் பிரகாரம் காட்டின் ஒரு திக்கில் இருக்கும் எரிமலைக்கு பலி கொடுத்தால் தான் ஆண்டவன் அருள் புரிவார் என்று நம்பி மிருகங்கள் ஒன்று சேர்ந்து ஏகமனதாக தன் உயிரைப் போக்க Melman (ஒட்டகம்)ஐ பலியாடாக ஆக்க நினைக்கையில் வஞ்சகச் சுறா அந்த எரிமலையில் வீழ்ந்து சாவதுமாகக் காட்டி அந்த மூட நம்பிக்கை மூலம் தான் தண்ணீர் கிடைத்தது போலவும் காட்டியது வித்தியாசம். "ஆண்டவனுக்கு கடல் உணவு தான் கிட்டியிருக்கு" ன்று King Julien சொல்வது கலக்கல் கலகல.
நண்பர்களின் ஒற்றுமையான செயற்பாடு மூலம் உயர்ந்த வெற்றி கிட்டுகின்றது என்ற நல்ல செய்தியையும் குழந்தைகளுக்கும், ஏன் பெரியவர்களுக்கும் சொல்லி வைத்து முடிக்கின்றது இப்படம்.
எண்பதுகளின் ஆரம்பத்தில் ரூபவாஹினி தொலைக்காட்சி வந்த போது அது எதைப் போடுதோ அதை மட்டும் சாப்பிடும் நிலை இருந்தது. அப்போது அறிமுகமானவை தான் ஐந்தரை மணி வாக்கில் வந்து போகும் கார்ட்டூன் கதாபாத்திரங்கள். தொட்டிலில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் போல என் பால்யகாலத்தில் அதிகம் பாதித்த இந்த கார்ட்டூன் படங்கள் இன்று வரை அதே ரசனையுடன் பார்க்க வைக்கின்றன. மனம் ஒடுங்கி கவலை ஆக்கிரமிக்கும் போது இளையராஜாவின் பாட்டுக்கு நிகராக ஒத்தடம் கொடுப்பது கைவசம் இருக்கும் கார்ட்டூன் சரக்குகள் தான்.
பலவகையான கார்ட்டூன் தொலைக்கார்ட்சித் தொடர்கள் தந்த திருப்தியை நான் பார்த்த கார்ட்டூன் முழு நீளப்படங்கள் கொடுக்கவில்லை. The Lion King, Finding Nemo, Shrek, Madagascar போன்றவை விதிவிலக்கானவை .
"He Man" என்ற ஒரு கார்ட்டூன் தொடர் வந்தது. எங்கே அநீதி நடக்கிந்தோ அப்போது தன் செருகிய வாளை உயரப் பிடித்துச் சபதம் செய்வான் He Man அப்போது பயந்தாங்கொள்ளிப் புலிக்கும் வீரம் வந்து ஒரு முறை பலமாக உறுமி விட்டு அவனின் வாகனமாக மாற, எதிரிகளை உண்டு இல்லையென்று ஆக்கி விடுவான். "He Man" போலவே வீட்டில் இறைச்சிக்கு வெட்டப் பாவிக்கும் நீண்ட கத்தியை எடுத்து ஒரு முறை நான் கத்த பின்னால் அம்மா வந்து பறித்தெடுத்ததும் நினைப்பிருக்கு.
Spider Man, Super Man போன்றவை மற்றைய கார்ட்டூன் தொடர்களோடு ஒப்பிடும் போது ஏனோ அதிகம் ஈர்க்கவில்லை. இப்போது வார இறுதியில் தொலைக்காட்சியின் காலை நிகழ்ச்சியை போட்டால் அதிகம் வருவது மோசமான வன்முறை கலந்த கார்ட்டூன் படங்கள்.
டிஸ்னியின் தயாரிப்பில் வந்த Mickey Mouse ஐயும் Tom and Jerry ஐயும் யாரால் மறக்க முடியும். அந்தப் பாதிப்பில் டிஸ்னியின் Golden Collection ஐயும் வாங்கி வைத்திருக்கிறேன்.
ஒரு வித அசட்டுச் சிரிப்பை நாய் சிரிக்க, எங்காவது ஆபத்தில் மாட்டி தப்புவது Scooby-Doo வின் கதையம்சம். ஏறக்குறைய எல்லா Scooby-Doo தொடர்களும் ஒரேமாதிரித் தான். யாராவது ஒரு நபர் வேஷம் போட்டுக் கொண்டே Scooby-Doo கூட்டத்தைத் துரத்துவது தான் எல்லாக் கதைகளிலும் இருக்கும். அந்த தொலைக்காட்சி தொடர் தந்த சிறப்பை அதன் முழு நீள சினிமா கொடுக்கவில்லை. (அதையும் நான் விடவில்லை ;)
"guess who" என்று விட்டு மரத்தைத் துளை போடும் Woody Woodpecker செய்யும் அட்டகாசங்கள் காலத்தால் மறக்க முடியாதவை. அந்த மரங்கொத்திப் பறவை "கொக்கககோ கோ கொக்கககோ கோ" என்று கத்திக் கொண்டே வந்து தன் குறும்பு வேலைகளை ஆரம்பிக்கும். அந்த கார்ட்டூன் படம் முடியும் தறுவாயில் அதே "கொக்கககோ கோ கொக்கககோ கோ" சொல்லி அழுது கொண்டே அது படும் அவஸ்தையைக் காட்டும். Woody Woodpecker போலச் சத்தம் போட்டுப் பழகுவது என் பால்ய கால சுட்டிப் பட்டியலில் ஒன்று. Woody Woodpecker ஐத் தேடி எடுத்து அதையும் பொக்கிஷமாக்க வேண்டும் என்ற ஆசை இன்று Madagascar பார்த்ததும் வந்தது. முதலில் போனது ஒரு முக்கியமான டிவிடிக்களை விற்கும் இடம். அவர்கள் கணினியில் தட்டிப் பார்த்துவிட்டு டிவிடியில் வந்தது ஆனால் இருப்பில் இல்லை என்று இன்னொரு கடைப் பக்கம் கையைக் காட்டினார்கள். அந்தக் கடைக்குப் போனால் கிறிஸ்மஸ்ஸுக்குப் பின் தான் வரும் என்றசொல்லி Sanity என்ற இன்னொரு கடையைக் காட்டி அங்கு போனால் விற்பனைப் பெண்மணி சொல்கிறாள், "அது ரொம்ப பழைய சரக்காச்சே" என்றாள். எனக்கு வயசு போட்டுதோ என்று உள்ளுக்குள் சுரீர் என்றது. பின் அவளே தேடிப் பிடித்து பாகம் 3 உம் பாகம் 4 உம் இருக்கு என்றாள். இன்னொரு மூலையில் இருந்த கடை தேடி பாகம் 1 ஐயும் 2 ஐயும் எடுக்க வலை விரித்தேன். டிவிடிக்களில் காணவில்லை, அங்கிருந்த பெண்மணி சொன்னாள் கீழே இருக்கும் அரங்கத்தில் Kids Section இல் இருக்கும் என்றாள் (அப்பாடா எனக்கு வயசாகவில்லை ;-).
நாலையும் சுருட்டிக் கொண்டு வந்து முதலாவது சீடியை டிவிடி பெட்டியின் வாயில் திணித்தேன். Guess who? It's Woody Woodpecker.
படங்கள் நன்றி: பல்வேறு தளங்கள்
உபகுறிப்புக்கள் உதவி: Madagascar: Escape 2 Africa

Sunday, December 07, 2008
வலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்
இன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பதிவுகளையாவது "மடத்துவாசல் பிள்ளையாரடி" தளத்தில் இட்டு வருகின்றேன்.
நான் பார்த்து ரசித்தவைகளோ, கேட்டவைகளோ, பாதித்தவைகளோ அனுபவப்பதிவுகளாகவும், அதே நேரம் ஈழத்துப் படைப்பாளிகள், கலைஞர்கள் மற்றும் ஈழ வரலாற்று விழுமியங்களை இயன்றவரை ஒலி மற்றும் எழுத்து ஆவணப்படுத்தலாகவும் இப்பதிவுகளை இன்று வரை எழுதி வருகின்றேன். எனது பதிவுலக முதல் ஆண்டில் நிறையவே எனது வாழ்வியல் அனுபவம் சார்ந்த பதிவுகள் வந்த அதே வேளை இரண்டாவது ஆண்டிலும் மூன்றாவது ஆண்டிலும் படைப்பாளிகளை, கலைஞர்களை ஆவணப்படுத்தும் பதிவுகள் அதிகம் இடம்பிடித்துக் கொண்டன.
மடத்துவாசல் பிள்ளையாரடி தவிர்ந்து,
என் பயணப் பதிவுகளுக்காக உலாத்தல்
ஒலி மற்றும் இசைக்காக றேடியோஸ்பதி
வீடியோ காட்சித் தொகுப்புக்காக வீடியோஸ்பதி
அவுஸ்திரேலிய நடப்புக்கள் குறித்த கூட்டு வலைப்பதிவு
பாடகி பி.சுசீலாவிற்கான கூட்டு வலைப்பதிவான இசையரசி
என்றும் வலைப்பதிவுகளைக் கட்டி மேய்க்கின்றேன் ;-)
கடந்த ஆண்டு பேரலை போல புறப்பட்டு வந்த ஈழத்து வலைப்பதிவர்கள் பலர் இந்த ஆண்டில் காணாமல் போனது வருந்தத் தக்க ஒரு விடயம். நாட்டின் சூழ்நிலைகளால் திசைமாறிய பறவைகளாய் அவர்கள் உலகெங்கும் சிதறடிக்கப்பட்ட கொடுமை தான் அதற்கு முதற் காரணம். ஆனாலும் கடந்த ஓராண்டு வாசிப்பில் தாயகத்தின் வலி தோய்ந்த நினைவுகளையும், வரலாற்றையும் பதியும் சிறந்த வலைப்பதிவர்களில் புதிதாகக் கிட்டிய இரண்டு எழுத்தாற்றல் மிக்க வலைப்பதிவர்களை இந்த நேரத்தில் சொல்லி வைக்கின்றேன்.ஒருவர் கிடுகுவேலி என்ற பெயரில் வலைப்பதிவை நடத்தும் கதியால் என்ற புனைப்பெயரில் ஒட்டிக் கொண்டிருப்பவர். மற்றவர் சொல்வதெல்லாம் உண்மை என்று இரண்டாண்டுக்கு முன்னரே வலைப்பதிவை ஆரம்பித்து சில மாதங்களுக்கு முன்னர் தான் தொடர்ச்சியாகத் தன் பதிவுகளைத் தரும் அருண்மொழி வர்மன்.
கடந்த மூன்று வருஷங்களில் இந்த வலையுலகிலும் ஆயிரம் அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன. எதை எழுத வேண்டும் எழுதக் கூடாது என்று ஒரு கூட்டமும் எத்தனை தரம் பின்னூட்டம் வந்திருக்கு, எத்தனை முறை பின்னூட்டக்கூடாது என்று ஒரு கூட்டமும், தேசியவாதியா/ நாட்டுப்பற்றாளனா என்று தீர்மானிக்கும் புலம்பெயர்ந்து இணையத்தில் மட்டும் அரசியல் அல்லது அதிமேதாவியாகக் காட்டிக் கொள்ளும் ஒரு கூட்டமும் என்று இந்த மூன்றாவது ஆண்டிலும் முகுதுக்கு முன்னாலும் பின்னாலும் பேசிக்கொண்டிருக்க அவர்களை புறங்கையால் விலக்கி விட்டு என்னால் முடிந்த அளவுக்கு எழுதிக் கொண்டிருக்கின்றேன். அநாநியாக வந்து தொந்தரவுப் பின்னூட்டம் போடுபவர்களை இலகுவாகவே அவரின் முகமூடியைக் கழற்றி அவரும் ஒரு தெரிந்த நண்பர் தான் என்பதை நிரூபிக்கும் கண்காணிப்பு கருவிக்கும் நன்றி ;)
தொடர்ந்தும் எழுத எனக்கு மனதில் உறுதி வேண்டி விடைபெறுகின்றேன். கடந்த என் ஓராண்டுப் பதிவுகளில் தம் கருத்துக்களை இட்டுச் சென்ற படைப்பாளிகள் எஸ்.ராமகிருஷ்ணன், இரா.முருகன் மற்றும் பின்னூட்டல் மூலம் இதுவரை என்னுடன் பயணித்த/பயணிக்கின்ற உறவுகளுக்கு என் நேசம் கலந்த நன்றிகள்.
வலைப்பதிவில் ஒரு வருஷம்
2006 ஆம் ஆண்டில் வலைப்பதிவில் என் ஒரு வருடப் பதிவுகளின் தொகுப்பாய்.
வலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று
2007 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் தொகுப்பு
தொடர்ந்து 2008 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகளை இங்கே தருகின்றேன்.
நந்தனம் - ஒரு வேலைக்காரியின் கனவு
" ஞான் கண்டு, ஞானே கண்டுள்ளு, மாத்ரம் கண்டிடுள்ளு, அது உன்னியட்டா வேஷத்தில் வந்தது"
கணவன் மார்பில் புதைந்து கொண்டு அழ ஆரம்பிக்கின்றாள் பாலாமணி. அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் எமது கண்கள் தானாகவே பனிக்கின்றன.
புலம்பெயர் வாழ்வில் பொங்கல்...!
காலையில் நேயர்களோடு இணைந்து நேரடி வாழ்த்துப் பரிமாறல்களோடு சிறப்பு வானொலி நிகழ்ச்சியாகக் கழிகின்றது. ஊரைப் பிரிந்து வாழும் உறவுகளின் மனத்தாங்கல்களோடும், வாழ்த்து நிகழ்ச்சி மலரும் நினைவுகளாகவும் அமைந்தது அந்த நிகழ்ச்சி. இத்தைப்பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியில் பகிரப்பட்ட இரண்டு கவிதைகள் வழக்கத்துக்கு மாறாக இத்தைப்பொங்கல் நாளுக்குப் புது அர்த்தம் கற்பிக்கின்றன.
எனக்குப் பிடித்த என் பதிவுகளில் ஒன்று
"எல்.வைத்யநாதன் என்கிற வைத்தி மாமா கிட்ட நிறையவே நாங்க கற்றிருக்கின்றோம், காலைலே அஞ்சு மணிக்கு ஆரம்பிச்சு பத்து மணிக்கும் அவரோட கிளாஸஸ் போகும், அவர் சொல்லிக் கொடுக்கும் போது அதை ஒரு பிரவாகம் மாதிரி அதை எடுப்பார். ஆனந்த பைரவி ராகத்தை எடுத்தாருன்னா இன்னிக்கு ஒரு மாதிரியும், அடுத்த நாள் வேறோர் அணுகுமுறையில் அதைக் கொடுப்பார்.
புத்தகச் சாம்பலில் பூத்ததொரு நூலகம்...!
அந்த விசாலமான மண்டபத்தின் தரை முழுவதுமே சாந்தும் சாம்பலுமின்றி, வேறெதுவும் காணப்படவில்லை. ஓர் இடுகாட்டின் மத்தியில் நிற்பது போன்ற உணர்ச்சி பரவியது.
"எமக்கு ஏன் இந்தக் கொடுமையைச் செய்தார்கள்?"
கலங்கிய கண்களோடு யாழ் பொது நூலகர் திருமதி நடராஜா அப்போது கேட்கின்றார்.
எழுத்தாளர் செ.யோகநாதன் - சில நினைவலைகள்
செ.யோகநாதன் குறித்து இரண்டு நினைவுப்பகிர்வுகளை, செ.யோகநாதன் அவர்களின் அஞ்சலிக்கூட்டத்தினைத் தொடர்ந்து எடுத்திருந்தேன். அவற்றின் ஒலியும் வடிவையும், செங்கை ஆழியான் வழங்கும் கருத்துக்களின் எழுத்து வடிவையும் இங்கே தருகின்றேன்.
"The Kite Runner" - பட்டம் விட்ட அந்தக் காலம்...!
இடுப்பை விட்டு நழுவும் காற்சட்டையை மெல்ல மேலே இழுத்து விட்டு நானும் இந்தப் பெடியன்களுடன் மாலை நேர விளையாட்டில் ஐக்கியமாவேன். அந்த விளையாட்டுக்களில் ஒன்று தான், சோளகக் காலத்து பட்டம் பறக்கவிடுதல். அவரவர் தம் அதி வீர பராக்கிரமங்களைத் தம் பட்டங்களைப் பறக்க விடுதலில் காட்டுவார்கள்.
"ஈழமண் தந்த குயில்" வர்ணராமேஸ்வரன்
அப்போது தோன்றிய ஈழத்துப் பாடகர்களில் ஒருவர் தான், "ஈழத்து இசைவாரிதி" வர்ணராமேஸ்வரன் அவர்கள். தொண்ணூறுகளில் இளையோராக இருந்த எம்மை ஈர்த்த வர்ணராமேஸ்வரன் அவர்களை, ஈழத்துக் கலைஞர்கள், படைப்பாளிகளை ஒலி ஆவணப்படுத்தும் முயற்சி வாயிலாகச் சந்தித்தேன். இதோ அவர் தொடர்ந்து பேசுகின்றார்.
தாய்லாந்து சிறையில் வாடும் ஈழத்தமிழ் அகதிகள் (நேரடி அனுபவம்)
தாய்மண்ணின் தாகத்தோடு எஞ்சிய உயிரை மட்டும் கையில் பிடித்தபடி வீட்டை, தோட்டத்தை, உடன்பிறந்தோரை, உற்றாரை மொத்தத்தில் தாய்நிலத்தையே விட்டு ஓடிவந்தவர்கள், இன்று தம் குடும்பங்களோடு எந்தவிதக் காரணமும் இன்றி அந்நிய நாட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழரின் துயரம் எத்தனை பேருக்குத் தெரியும்?
தாய்லாந்துச் சிறையில் வாடும் ஈழத்தமிழ் அகதிகள் (ஆங்கில மூலம்)
குட்டிக்கண்ணா போய் வா...!
பல கண்ணன்கள் இசையுலகில் இருக்க இவன் குட்டிக்கண்ணன் என்று பெயர்பெற்றான்.அவனின் சிறுவன் குரல் இருக்கும் வரை சிறுவனாக பாடினான்.ஆடினான் மக்கள் மனங்களை கொள்ளை கொண்டான்.
My Daughter the Terrorist - மூன்று பெண்களின் சாட்சியங்கள்
"எங்கட உண்மை முகம் வந்து வெளியில இருக்கிறவைக்குத் தெரியாது, அதால தான் எங்கள வந்து பயங்கரவாதிகள் எண்டு சொல்லுகினம்"
அடந்த காட்டில் மழை வெள்ளச் சக்தியிலே பாய்ந்தோடிக் கொண்டு வேவு பார்க்கும் போராளி புகழ்ச்சுடர் இப்படிச் சொல்வதில் இருந்து இந்த ஆவணப்படம் ஆரம்பிக்கின்றது.
கிடுகுவேலியும், ஒரே கடலும்...!
கிடுகுவேலி நாவலில் வரும் நிர்மலாவைப் போலத் தான் ஒரே கடலில் வரும் தீப்தி. நிர்மலாவுக்குத் தேவை தன் அபிலாஷைகளைப் புரிந்து தன்னோடு இருந்து வாழக்கூடிய அன்பான கணவன். தீப்தியும் கூட தன் ஆசாபாசங்களைப் புரிந்துகொள்ளாமல் வேலையில்லாக் கணவனின் பிள்ளை மெஷினாகவும், சாப்பாட்டு இயந்திரமாகவும் இருக்கும் நிலையில் ஒரு மேதாவி ஆணொருவனின் புத்திசாலித்தனமும், பரிவும் இவளை ஈர்க்கையில் தன்னையே இழக்கத் தயாராகிறாள்.
மேளச்சமா...!
அரை வட்டமாக இருந்து கொண்டு முதலில் அடக்கமாக ஆரம்பிக்கும் மேளச்சமா. பிறகு மெல்ல மெல்ல நாதஸ்வரங்களின் தனி ஆவர்த்தனம். பிறகு ஒராள் சொல்ற வாசிப்புக்கு பதில் சொல்லுமாற் போல இன்னொருவர் வாசிப்பார். மெல்ல மெல்ல ஆரம்பிச்சு பெரிய மழையடிக்குமாப் போல இந்த மேளச்சமா களைகட்டும்.
சிவத்தமிழ்ச் செல்வி சோதியிற் கலந்தார்..!
தங்கம்மா அப்பாக்குட்டி என்றதோர் ஈழத்தின் ஆன்மீகச் சொத்து, ஆருமில்லாப் பெண்களின் ஆறுதற் சொத்து, நேற்று சிவபூமியாம் ஈழபதி யாழ்ப்பாணத்தில் இறைவனடி சேர்ந்தார்.தனது எண்பத்து நாலு வயது வரை தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தைத் தன் ஆன்மீக நிலைக்களனாகவும், ஆதரவற்ற பெண்களின் புகலிடமான துர்க்கா மகளிர் இல்லத்தைத் தனது அறத்தின் நிலைக்களனாகவும் வைத்து அறத்தொண்டாற்றிய பெருந்தகை அவர்.
"எரியும் நினைவுகள்" உருவான கதை
தென்னாசியாவின் சிறந்த நூலகமாகப் போற்றப்பட்டுப் பேணிப்பாதுகாக்கப்பட்ட அந்த அறிவுக்களஞ்சியம் ஒரே இரவில் சாம்பல் மேடாகப் போகின்றது.கனத்த மெளனத்தைக் கலைக்க ஆரம்பிக்கின்றது "எரியும் நினைவுகள்" வழியே வரும் சாட்சியங்கள்
ஒரு நினைவுப்பதிவும், ஒரு திரைப்பதிவும்
இலங்கை வானொலி என்னும் ஊடகம் உலகத் தமிழ் வானொலி ஒலிபரப்புக்கு முன்னோடியாக இருந்த காலம் அது. தனித்துவம் மிக்க ஒலிபரப்புக் கலைஞர்கள், படைப்பாளிகளை உருவாக்கிய அந்த வானொலிக் களத்தில் தோன்றிய சிறப்பு மிகு கலைஞன் அமரர் திரு. ஜோர்ஜ் சந்திரசேகரன் அவர்கள்.
ஒளிச்சுப் பிடிச்சு...!
அப்ப தான் பங்கர் வெட்ட வேணும் எண்ட யோசினை பரவலா எல்லாருக்கும் ஒரு தேவையா மாறீட்டுது. ஒவ்வொரு வீட்டிலும் வீட்டு முற்றத்திலோ, பின் வளவுக்குள்ளையோ ஒரு சோலை மறைப்பான நிலம் தேடி ஆள் உயரத்துக்கு "ட" வடிவத்தில கிடங்கு வெட்டி, கிடங்குக்கு மேல் மரக்குற்றிகளை அடுக்கி மூடி மறைத்து விட்டு, அதுக்கு மேலை மண் மூடி நிரவி விடுவினம்.
மூங்கில் பூக்கள் - குணசீலன் - கூடெவிடே
இந்த மூங்கில் பூக்கள் நாவலை மலையாளத் திரையுலகின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான பத்மராஜன் (தன்மத்ரா, காழ்ச்சா திரைப்படங்களைத் தந்த பிளெஸ்ஸியின் குருவும் கூட) இந்த மூங்கில் பூக்கள் நாவலை மலையாளத்தில் "கூடெவிடே (In Search of a Nest)" என்ற பெயரில் படமாக்கியிருக்கின்றார்.
ஓய்ந்து விட்ட கான(மூர்த்தி)சுரம்
ஈழத்தாய் பெரும் நாதஸ்வர வித்துவான்களையும், தவில் மேதைகளையும் ஈன்ற வரிசையில் வி.கே.கானமூர்த்தி - வி.கே.பஞ்சமூர்த்தி இரட்டையர்களின் வாசிப்பும் தனித்துவமானது என்பதை ஈழமண் கடந்த புலம்பெயர் தமிழ் உலகமே அறியும்.
என் சினிமா பேசுகிறது...!
தியேட்டர் பற்றி அந்த பால்யகாலத்தில் என் சகவாலுகளுடன் பேசும் போது, "திரைக்கு பின்னால் இருந்து தான் ஆட்கள் நடிக்கினமாம், ரோச் லைட் அடிச்சு தான் இங்காலிப்பக்கம் தெரியுமாம்" என்று அறிவுபூர்வமாகப் பேசியதும் நினைப்பிருக்கு.
லைப்ரரி சேர் காட்டிய "ராஜம் கிருஷ்ணன்" இன்னும் பலர்
முதுபெரும் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனின் பேட்டியை வாசித்ததும் மனம் கனக்கின்றது. மெல்ல என் மடியில் புத்தகத்தை வைத்து விட்டு பழைய நினைவுகளுக்கு என் மனம் தாவுகின்றது.
"மிருதங்க பூபதி" A.சந்தானகிருஷ்ணன்
ஈழத்தின் கலைஞர்கள், படைப்பாளிகளை வலைப்பதிவு வழியே ஆவணப்படுத்தும் முயற்சியின் தொடர்ச்சியாக இப்பதிவு வாயிலாக ஈழத்தின் புகழ்பூத்த மிருதங்கக் கலைஞர் கலாபூஷணம் திரு A.சந்தான கிருஷ்ணன் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பினைப் பதிவு செய்கின்றேன்.
"மாயினி" குறித்து எஸ்.பொ. பேசுகிறார்...!
எஸ்.பொன்னுத்துரை அவர்களை ஒலிப்பகிர்வு கண்டு அந்த நிகழ்வுக்காக அனுப்பவிருந்தேன். அவர் தன் உள்ளக்கிடக்கையைப் பகிரும் போது, இந்தப் பகிர்வு பலரைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் ஒலியை தட்டச்சியும், ஒலிப்பகிர்வாகவும் இங்கே தருகின்றேன்.
ஊரெல்லாம் வெள்ளக்காடு
ஐம்பது வருஷத்துக்குப் பிறகு இந்த வருஷம் தான் எங்கட ஊரில் கண்காணாத வெள்ளமாம். எங்கட ஆட்கள் பிரமிப்பை வெளிப்படுத்தும் விதமே தனி. கன மழை அடித்தது என்றால் "பேய் மழை பெய்தது" என்பினம், அதிக வெள்ளப்பெருக்கு என்றால் "ஊரெல்லாம் வெள்ளக்காடு" என்று ஆச்சரியம் கொட்டுவினம்.

Monday, December 01, 2008
ஊரெல்லாம் வெள்ளக்காடு
முந்தின நாளையில தலைநகர் கொழும்பில உத்தியோகம் பார்க்கிறவை இருந்திட்டு எப்பவாவது விடுமுறைக்கு யாழ்ப்பாணம் வரேக்க வாறவை போறவைக்கெல்லாம் கொழும்பைப் பற்றித்தான் ஏகத்துக்கும் புளுகித் தள்ளுவினம். அப்படி ஒருத்தர் கொழும்பால வந்து யாழ்ப்பாணத்தில் இருக்கும் தன் கூட்டாளியைக் கண்டு பேச்சுக் கொடுக்கிறார்.
"அதை ஏன் கேக்கிறாய்! அங்கத்தைய (கொழும்பு) றோட்டில சோறு போட்டுச் சாப்பிடலாம் அவ்வளவு சுத்தமான தரமான றோட்டுக்கள்"
உடனே யாழ்ப்பாணத்தவர், " உங்கட ஊரில சோறு மட்டும் தான் போட்டுச் சாப்பிடலாம், ஆனா இங்கத்தைய றோட்டில கறி, குழம்பெல்லாம் விட்டுச் சாப்பிடலாம்" என்றாராம் விட்டுக் கொடுக்காமல்.
அவர் அப்படிச் சொன்னதன் அர்த்தம் யாழ்ப்பாணத்து றோட்டுக்கள் குண்டும் குழியுமாக இருக்கும், எனவே குழம்பை ஊத்தினாலும் வழிஞ்சோடாது எண்ட அர்த்தத்தில். இந்தப் பகிடி கன வருஷத்துக்கு முந்தி சிரித்திரன் இதழின் முன் அட்டையில் வந்தது. நான் நினைக்கிறன் அந்த யாழ்ப்பாணத்துப் பாத்திரம் சின்னக்குட்டி என்று.
எங்கட ஊர்ப்பக்கம் தார் றோட்டுப் போடுவதே அரிது, அப்படியிருக்க பராமரிப்பு வேற நடக்குமா என்ன? எப்பவாவது யாராவது புண்ணியவான் றோட்டுப் போடுவம் என்று முடிவெடுத்தாலும் பறிக்கும் சல்லிக்கல்லில் அரைவாசிக்கு மேல் றோட்டுப் போடும் ஒப்பந்தகாரர் வீட்டு மதில் கட்டத்தான் போய் விடும். மிச்சம் மீதி சல்லிக்கல் கும்பலை ஆங்காங்கே பறித்து விட்டிருப்பார்கள். பிறகு றோட்டுப் போடும் நாளுக்கு முன்னரே அதில் அரைவாசி றோட்டால் போற பெடியள் எறிஞ்சு விளையாடவே போய்விடும். மிச்சம் மீதிக் கல்லை வச்சுக் கொண்டு றோட்டுப் போட்டால் அது கச்சான் அலுவா மாதிரி தார் பாதி கல் பாதியாக இளிச்சுக் கொண்டிருக்கும். நல்ல மாரி மழை அடிச்சால் அந்த றோடும் பெயர்ந்து குண்டும் குழியுமாக மீண்டும் தன் பழைய வாழ்க்கைக்குப் போய் விடும். இதான் எங்கட உள்ளூர் தெருக்களின் நிலை.
காங்கேசன்துறை வீதி யாழ்ப்பாணத்துக்குப் போகும் பெருந்தெரு. அதில் கோண்டாவில் மேற்கு எக்ஸ்போ வீடியோ கடையடியில் இருந்து தான் மதகு எண்ட ஒரு சாமானே ஆரம்பிக்குது. நல்ல மழைக்காலம் வந்தால் இந்த மதகுகள் தான் தடையில்லாமல் நீரை கொண்டு செல்ல உதவ வேணும். ஆனால் மதகு கூட காதலில் தோல்வியடைந்தவன் தாடி வளர்த்த மாதிரி நெருஞ்சி முள் பற்றையால் மூடி மறைச்சிருக்கும் மண் திட்டி. இந்த லட்சணத்தில் மழைநீர் எப்படி வெள்ளம் ஏற்படாமல் போய்ச்சேரும்? தொண்ணூற்றி இரண்டாம் ஆண்டு மாவீரர் தின வாரத்தில் எங்கள் ஊருக்கு கிடைத்த ஒரு பேறு இந்த மதகுகள் துப்பரவானது. ஒவ்வொரு வீட்டுக்காறரும் அந்தந்த வீட்டுக்கு முன்னால் உள்ள வீதியையும், மதகுகளையும் சுத்தம் செய்யவேணும் எண்டு அறிவிப்பு வந்தது. இப்படி ஏதாவது அறிவிப்பு முறையான இடத்தில இருந்து வந்தால் மறுபேச்சில்லாமல் எங்கட சனம் திருந்திவிடும்.
ஐம்பது வருஷத்துக்குப் பிறகு இந்த வருஷம் தான் எங்கட ஊரில் கண்காணாத வெள்ளமாம். எங்கட ஆட்கள் பிரமிப்பை வெளிப்படுத்தும் விதமே தனி. கன மழை அடித்தது என்றால் "பேய் மழை பெய்தது" என்பினம், அதிக வெள்ளப்பெருக்கு என்றால் "ஊரெல்லாம் வெள்ளக்காடு" என்று ஆச்சரியம் கொட்டுவினம். ஊரில் இருந்து வெள்ளத்தைச் சாட்சியம் பறையும் படங்கள் வந்திருந்தன.
எனக்கு நினைவு தெரிய இதே மாதிரி எண்பதாம் ஆண்டுகளின் நடுப்பகுதியிலும் ஒருக்கால் மழை வெள்ளம் வந்து ஊரே வெனிஸ் நகரமாக இருந்தது. எல்லா உள்ளூர் றோட்டுகளும் நெஸ்லே ரின்பாலை கடும் தேயிலைச் சாயம் போட்டுக் கலக்கின நிறத்தில ஒரே மழை வெள்ளமா இருந்தது. பள்ளிக்கூடங்களுக்கும் விடுமுறை. எங்கட வீட்டில் இருந்து பிள்ளையாரடிப் பக்கம் போகவே முடியாத வெள்ளம். ஏனெண்டால் எங்களூரில் "குளக்கரை" என்ற ஒரு பகுதி இருந்தது. குபேரன் எண்டு பெயரை வச்சுக் கொண்டு பிச்சை எடுப்பது போல குளக்கரை எண்டு பெயர் தான் ஆனால் அது ஒரு வறண்டு போன பள்ளக் காணி. சொந்தமாக மலசலகூடம் இல்லாதவர்கள் ஒதுங்கப் போவதுக்கும், எங்கள் ஊர் பற்பொடி ஆலைக்கு நெல் உமியை எரித்து எடுப்பதற்கும் அந்த இடம் தான் பயன்படும். மாரி மழை வந்து விட்டால் வர்ண பகவானின் முதல் தாக்குதல் இந்த "குளக்கரை" தான். அப்படியே முழு மழை வெள்ளத்தையும் வாரிக் குடித்து திக்கு முக்காடி றோட்டுப்பக்கமும் வந்து முறையான வாய்க்கால் வசதி இல்லாததால் உள்ளூர் றோட்டையும் தன் நிலைக்கு ஆக்கி ஒரே வெள்ளக்காடாய் ஆக்கிவிடும். அந்தக் குளக்கரைப் பக்கம் றோட்டால் போனால் மார்கழி சீசன் சங்கீதக் கச்சேரியை தவளை, நீர்ப்பாம்பு வகையறாக்கள் இரவிரவாகக் கொடுப்பினம். விடியும் போது பார்த்தால் றோட்டில் வழிந்தோடிய வெள்ளத்தில் வயிறு வெடிச்சுச் செத்த தவக்கைமார் ஆங்காக்கே இருப்பினம்.
இந்தக் குளக்கரையைத் தான் பின்னர் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி இடம்பெயர்ந்து எங்கள் ஊரில் இயங்கியபோது திருத்தி விளையாட்டு மைதானமாக்கப் படாதபாடு பட்டவை. டி.சே தமிழனுக்கு நினைப்பிருக்கும் எண்டு நினைக்கிறன்.
அந்த எண்பதுகளில் வந்த பெரு வெள்ளத்தில் போக்குவரத்துக்காக லொறி டயரை மிதக்க விட்டு ஏறிப்போனவர்களும், வாழைக்குத்திகளைப் பிணைச்சல் இட்டு சவாரி செய்தவர்களும் உண்டு.தாவடிச்சந்திக்கு அங்கால் இருக்கும் நந்தாவில் பக்கம் அதை விட மோசம். காங்கேசன் துறை வீதியில் மிதக்கும் நந்தாவில் நிலப்பரப்பு கடும் ஆழம் கொண்டது. அந்த நேரம் மழை வெள்ளம் நிரம்பி தப்பித் தவறி நந்தாவில் வெள்ளத்தில் விழுந்தவர் நேராக பரலோகம் தான் செல்லலாம், வேறு உபாயங்கள் இல்லை.
கொக்குவில், கோண்டாவில், நந்தாவில், இணுவில் என்று காரணப்பெயர்கள் வந்ததுக்கு காரணமே ஒரு காலத்தில் இந்த ஊர்களில் எல்லாம் குளங்கள் இருந்தனவாம். "வில்" என்றால் குளம். காலவோட்டத்தில் குளங்கள் மாயமாகி மழை வந்தால் தான் பூர்வீகத்தையே இவை நினைவுபடுத்துகின்றன.
ஈரச்சதுப்பு நிலத்தால் நடந்து வந்தால் பாட்டா செருப்பின் பின்புறம் சேற்றில் ஒற்றி பின்னங்கால்கள் எல்லாவற்றிலும் படிந்து போகும்.
"மழையே மழையே மொத்தப் பெய் என்று பாடினால் மழை நிண்டு போயிடுமாம், மழையே போ போ எண்டால் தான் கன மழை பெய்யும்" என்று முன்னர் கூட்டாளி ஒருவன் சொன்ன ஆலோசனையை நானும் அமுல்படுத்தியிருக்கிறேன்.
மழைக்காலம் வந்து விட்டால் காதுக்குள் வந்து கிசுகிசுத்து விட்டு ரத்ததானம் கேட்கும் நுளம்புப்படையை விரட்டுவது எங்கள் வீட்டு முற்றத்தில் இருக்கும் வேப்பமரத்தின் கொட்டைகள், அவற்றை ஏற்கனவே பதப்படுத்திக் காயப்போட்டு வைத்திருப்போம். அதுவும் இல்லாவிட்டால் இருக்கவே இருக்கு, மில்க்வைற் என்ற எங்களூர் உள்ளூர் உற்பத்தி நிறுவனம் செய்த "நீம்" என்ற வேப்பம் கொட்டைகளை அரைத்துப் பொடி செய்த பாக்கெட்டுக்கள். அவற்றை வாங்கி சட்டியிலே தணல் போட்டு அந்தப் பொடியைத் தூவிவிட்டால் நுளம்புகள் கொழும்பைத் தாண்டி ஓடும்.
எங்களைப் பொறுத்தவரை கீரிமலை, கசோர்னா பீஸ் போன்ற கடற்கரைக்கு எல்லாம் போய் காலில் நீரை நனைத்து விளையாட முடியாது, நேவிக்காறன் விளையாடி விடுவான். ஏழைக்கேற்ற எள்ளுப் பொரி போல எங்களைப் போல சிறு நடு றோட்டில் இருக்கும் வெள்ளக் குவியலைக் கண்டால் போதும். அதுவரை வீதி ஓரமாகப் போனவர்கள், சடாரென்று வீதிக்குக்கு குறுக்கால் போய் வெள்ளத்தை ஒரு கலக்குக் கலக்கி, சிலசமயம் ஆளுக்காள் காலால் நீரை எத்தி விளையாடி விட்டு வந்தால் தான் பாவ விமோசனம் கிடைக்கும். ஊர் நாய்களின் எச்சங்கள் கலந்த வெள்ளத்தை இப்ப நினைத்தால் இலேசாக குமட்டுது. வெள்ளம் கலக்கிய முதல் நாள் பெரிசாக மாற்றம் ஏதும் இருக்காது. அடுத்த நாள் இரண்டு காலில் பாதங்களைச் சுற்றி மெதுவாகக் கடிக்க ஆரம்பிக்கும். அடுத்த நாள் பின்னேரம் வாக்கில் காலெல்லாம் சொறிஞ்சு தடிச்சு புண்களாக மாறி எங்களின் முதல் நாள் குற்றத்தை ஒப்புவிக்கும். நீர்ச்சிரங்கின் கைங்கர்யம் அது.
"உமக்கு நல்லா வேணும்! உம்மை ஆர் ஆள் விட்டது வெள்ளம் கலக்கச் சொல்லி" முதுகில் நாலு சாத்தி விட்டு எங்கள் வீட்டு வைத்தியம் ஆரம்பமாகும், வேறென்ன பழைய வேஷ்டியை கிழித்து மண்ணெண்ணையை அதில் ஒற்றி காலைச் சுற்றிக் கட்டுவாள் அம்மா.
படங்கள் நன்றி: தாயகத்தில் இருந்து

Saturday, November 22, 2008
"மாயினி" குறித்து எஸ்.பொ. பேசுகிறார்...!
"அரசியல் அதிகார மையங்களுக்கு எதிராக ஒரு எழுத்துப் போராளியாக, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய விளைவுகளைச் சிந்திக்காது "மாயினி" நாவல் எழுதப்பட்டது. அதனுடைய வெற்றி, தோல்விகள் ஓர் இலக்கிய வெற்றி தோல்வியாக அல்லாமல் ஒரு இனத்தினுடைய சத்தியத்துக்கு ஏற்படக்கூடிய வெற்றி தோல்விகளூடாகத் தரிசித்து அதனை நான் எழுதியுள்ளேன்." - எஸ்.பொ மாயினி குறித்து
தமிழில் முயலப்பட்ட முதல் அரசியல் நாவலான "மாயினி"யின் நாவல் அரங்கு நேற்று பரீஸ் நகரத்தில் நடைபெற்றிருந்தது. தனது "மாயினி" குறித்து ஈழத்தின் மூத்த படைப்பாளி எஸ்.பொ என்ற எஸ்.பொன்னுத்துரை அவர்களை ஒலிப்பகிர்வு கண்டு அந்த நிகழ்வுக்காக அனுப்பவிருந்தேன். அவர் தன் உள்ளக்கிடக்கையைப் பகிரும் போது, இந்தப் பகிர்வு பலரைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் ஒலியை தட்டச்சியும், ஒலிப்பகிர்வாகவும் இங்கே தருகின்றேன்.
ஒலிப்பகிர்வைக் கேட்க
பரீஸ் நகரத்திலே நவம்பர் மாசம் 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் "மாயினி" நாவல் ஆய்வரங்கிற்கு வாழ்த்துச் செய்தி போன்று இந்தப் பேச்சினை நான் அனுப்பி வைக்கின்றேன்.
தமிழில் முயலப்பட்ட முதலாவது அரசியல் நாவல் என்ற உரிமைகோரலுடன் மாயினி நாவல் என்னுடைய எழுபத்தைந்தாவது ஆண்டு விழாவிலே சென்னையில் வெளியிடப்பட்டது. அந்த நாவல் குறித்து சாதகமாகவும், பாதகமாகவும் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஒன்று, மாயினி தான் தமிழில் முயலப்பட்ட முதலாவது அரசியல் நாவல் அல்ல, அதற்கு முன்னரும் அரசியல் சம்பந்தப்பட்ட நாவல்கள் தமிழில் முயலப்பட்டுள்ளன என்பது அதற்கு எதிராக முன்வைக்கப்படும் முதலாவது விமர்சனமாகும். என் உரிமைகோரலிலே ஒரு சத்தியம் உண்டு என்பதை தவிர்த்து, விமர்சிக்க வேண்டும், எதிர்க்கருத்தை முன்வைக்க வேண்டும் என்று முயலப்பட்டதாகவே அந்த விமர்சனத்தை நான் கருதுவேன். காரணம், மாயினி நாவல் இலங்கையின் இனப்பிரச்சனை சம்பந்தமாக எழுந்த பிரச்சனைகளிலே தமிழ்த்தேசியம் எவ்வாறு தொலைந்தது என்ற மூலக்கருத்தினைப் பாடுபொருளாகக் கொண்டு புனையப்பட்டுள்ள நாவல் மாயினி ஆகும்.
அந்தப் பொறுப்பிலே பங்குபற்றிய அரசியல் நாயகர்கள் பலரைப்பற்றியும் நடுநிலமை தேடி ஆய்வு செய்வது மாயினியுடைய ஒரு நோக்கமாக இருந்தது. மாயினி ஏன் முதல் அரசியல் நாவல் என்று நான் உரிமை கோரினேன் என்றால், வரலாறு என்பது என்ன? இன்றைய அரசியல் நாளைய வரலாறு என்றும் நேற்றைய அரசியல் இன்றைய வரலாறு என்றும் ஒரு முகச் சுலபமான எளிமையான புரிதல் நிலைத்து வருகின்றது. மாயினி நாவல் வரலாற்றுச் சம்பவங்கள் ஊடாகச் செல்லும் பொழுது கூட அவற்றை வரலாற்றுச் சம்பவங்களாகத் தரிசிக்காமல் நிகழ்காலச் சம்பவங்களாகத் தரிசிக்கின்றது. உதாரணமாக கிறீஸ்துவுக்குப் பின் ஏழாம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் ஒரு சம்பவம் மகா வம்சத்தின் புனைவு. மகாநாம தேரர் அந்த மகாவம்சத்தை இயற்றிய பொழுது அதில் ஊடாடி, உட்புகுத்தப்பட்ட ஒரு பிராமண மேலாதிக்கத்தைப் பற்றிய புனைவு அதில் வருகிறது. அது வரலாற்றில் சொல்லப்படாத ஒன்று. அது அரசியல் நிகழ்வாக ஏழாம் நூற்றாண்டில் நடப்பதாகப் புனையப்படுகிறது. அதே போன்று தான் ஒளவையார் வாழ்ந்த காலத்துக்குள்ளாகவே நாங்கள் போகிறோமே ஒளிய, ஒளவையார் வாழ்ந்த ஒரு காலத்துக்குள் போகவில்லை. ஒளவையார் வாழும் காலம், அதே போன்று அப்பரும், திருஞான சம்பந்தரும் உரையாடல் நிகழ்த்திக் கொண்டிருக்கக் கூடிய காலத்தினூடாக, இன்று ஒவ்வொரு வரலாற்று நிகழ்வுகளும், நிகழ்காலத்தின் நிகழ்வுகளாகத் தரிசிக்க்கப்படுவதனாலும் நான் மாயினி முதலாவதாகப் புனையப்பட்ட தமிழின் அரசியல் நாவல் என்று உரிமை கோர விழைந்தேன்.
அண்மைக்காலங்களிலே ஈழநாட்டிலே நடைபெறக் கூடிய இனப்போராட்டம் அல்லது மண்மீட்புப் போராட்டம் அல்லாவிட்டால் விடுதலைப் புலிகளுடைய போராட்டம் அல்லது தமிழ் இனத்தினுடைய தாயக மீட்புப் போராட்டம் என்று சொன்னால் என்ன, அல்லது விடுதலைப் புலிகள் நடத்தக் கூடிய ஒரு பயங்கரவாதப் போராட்டத்துக்கு என்று விளங்கிக் கொண்டாலும் கூட நேரிய ஜனநாயக நீரோட்டத்துக்குள் செல்லப் போகின்றோம் என்று ஒரு கருத்தினை முன்வைத்து ஈழத்தில் நடைபெறக்கூடிய போராட்டத்தைக் கொச்சைப்படுத்தினாலும் கூட அவையெல்லாம் அரசியல் நாவல்கள் என்று விதந்து ஏற்றுக் கொள்வதற்கு இந்தியாவில் ஒரு ஸ்தாபனம் இருக்கிறது. அந்த ஸ்தாபனம் என்னவென்றால் பிராமண ஆதிக்கம். இன்று இந்தியாவில் தமிழர் தேசியம் தொலைந்ததற்கு ஒரேயொரு காரணம் வட இந்திய இந்தி வெறியர்களுடைய எழுச்சி மட்டுமல்ல அது அரசியல் சார்ந்த ஒரு காரணம். ஆனால் அதிகார வர்க்கத்தில் ஒட்டிக்கொண்டிருக்கக் கூடிய பிராமண ஆதிக்கம் இன்றும் தமிழர்களுக்கு எதிரான ஒன்று எழுதப்படும் பொழுது அதையே "ஆகா! உச்சம்" என்று ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு பார்ப்பனச் சூழல் இன்றும் தமிழ்நாட்டில் உண்டு. அந்தப் பார்ப்பனச் சூழலிலே தான் புலம்பெயர்ந்த நாடுகளிலே வாழக்கூடிய எழுத்தாளர்கள் சிலருடைய நாவல்களை இவை அரசியல் நாவல்கள் என்று பாராட்டும் ஒரு போக்கு இருக்கின்றது.
தமிழர் தேசியத்தை மீட்டெடுத்துப் பார்ப்பது தான் மாயினியினுடைய தரிசனப்பயணம். அதுமட்டுமல்லாமல் தமிழர் தேசியத்தைப் பற்றிய ஒரு பார்வையிலே சிங்கள தேசிய இனத்தின் விரோதங்களைக் கக்குவதும், அதன் மீது ஆத்திரங்களையும், வெறுப்புகளையும் கக்குவது அல்ல நடுநிலமை. சிங்கள இனத்தவர்களுடைய செயற்பாடுகளிலே ஒரு விரோதம் ஏற்படுத்தாத ஒரு அறிவு நாகரிகத்தை "மாயினி" நாவல் சோதனை பூர்வமாக, அறிவுபூர்வமாகப் பின்பற்றியிருக்கின்றது என்பது முக்கியமான ஒரு விஷயம். உதாரணமாக எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா தான் இலங்கையிலே ஏற்பட்ட தமிழர் சங்காரத்துக்கான பிள்ளையார் சுழியைப் போட்டார் என்ற வரலாறுமே இதுவரை காலமும் வேதமாகப் பயிலப்பட்டு வந்தது. அதுவே தமிழர்களுடைய எழுச்சியின் பாலமாகவும் குறியீடாகவும், அரசியல் பார்வையினுடைய திருப்புமுனையாகவும் அமைந்தது என்று சொல்லப்பட்டு வந்திருக்கின்றது.
ஆனால் இந்த பண்டாரநாயக்காவினுடைய காலத்திலே தான் தமிழர் தேசியத்தை மீண்டும் தமிழர்கள் கண்டார்கள். ஆங்கில மோகத்தில் இருந்து விடுபட்டு, தமிழ் மூலமே எங்களுடைய அடையாளத்தைக் கண்டறிதல் வேண்டும் என்ற உணர்வு பண்டாரநாயக்காவால் ஏற்படுத்தப்பட்டது. அதுமட்டுமல்லாமல் தமிழர் சமுதாயத்திலே ஏற்றத்தாழ்வுகள் உண்டு, சிறுபான்மைத் தமிழர்களுக்கான அரசியல் உரிமைகள் வழங்கப்படவில்லை, அவர்களுக்கான சமத்துவ உரிமைகள் வழங்கப்பட வேண்டும், என்று தமிழ்த்தலைவர்களுக்கு உரத்துச் சொன்ன ஒரு அரசியல் தலைவனாகவும் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா அமைகின்றார். எனவே பண்டாரநாயக்காவின் இருமுகங்களையும் அதாவது சிங்கள தேசிய இனத்தினுடைய உணர்வில் தேசிய இன உணர்வாக மாற்றிய ஒரு கொடுமைக்கு முன்னுதாரணமாக விளங்கிய போதிலும் கூட தமிழர்களுடைய தேசியத்தை அவர்கள் கண்டறிவதற்கு உபகாரியாக வாழ்ந்தவரும் பண்டாரநாயக்கா என்று "மாயினி" தரிசித்து செல்கின்றது. 1983 ஆம் ஆண்டு நடந்த யூலைக் கலவரத்திற்குப் பின்னர் ஏற்பட்ட எழுச்சிகளும், போராட்டங்களும் பற்றி நிறையவே "மாயினி" சொல்கின்றது.
இது வரலாற்றில் கண்டறிந்த சில தகவல்கள் என்று வைத்துக் கொண்டாலும் கூட அந்த சம்பவங்களை கடந்தகாலச் சம்பவங்களாக நோக்காமல் நிகழ்காலச் சம்பவங்களாகத் தரிசிக்க முயல்கிறது. இன்றுவரையில் தமிழர் தேசியத்திற்கு என்ன பங்களிப்புச் செய்தார் அமிர்தலிங்கம் என்பது பற்றி ஒரு நேர்மையான, நடுநிலமையான ஆய்வு நூல் வெளிவரவில்லை. 1983 ஆம் ஆண்டில் நடந்த அந்த யூலை கலவரத்திற்குப் பின்னரும், தமிழர் தேசியத்தை ஜனநாயக முறையில் சிங்கள அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளின் மூலம் முன்னெடுக்க முடியும் என்றோ அல்லது இந்திய அமைதிகாப்புப் படையினர் சிங்களவர்களால் உதைக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட காலகட்டத்தில் இந்திய தூதரகம் தமிழர்களுக்கு கொடுக்கவிருந்த உரிமைகள் குறித்து என்ன பேச்சுவார்த்தைகள் அவர் நடத்தினார் என்பதைப் பற்றியோ இதுவரையில் தகவல்கள் இல்லை. "மாயினி" அந்தத் தகவல்களைத் தராவிட்டாலும் கூட அதற்கான சூசகங்கள் இங்கே எல்லாம் உண்மைகள் மறைக்கப்பட்டிருக்கின்றன, புதிய வரலாறுகள் அந்த இடங்களிலே நடத்தப்பட வேண்டும் என்றும் சொல்கிறது.
"மாயினி" உண்மையிலேயே ஒரு முழுமையான எனக்குத் திருப்தி தந்த ஒரு நாவல் என்று நான் சொல்லவில்லை. "மாயினி" தமிழ் வாசகர்களுக்காக எழுதப்பட்ட நாவலும் அல்ல. அந்த "மாயினி" நாவல் சிங்கள வாசகர்களையும், சர்வதேச வாசகர்களையும் சென்றடைதல் வேண்டும். இன்று ஒரு ஆண்டுகாலமாக "மாயினி" நாவலை நான் ஆங்கிலத்தில் எழுதும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். ஆங்கிலத்தில் எழுதும் புதிய நூலிலே "மாயினி" தமிழ் நாவலிலே வராத பல உண்மைகள் வருகின்றன. காரணம், மாயினி நாவல் எழுதப்பட்ட பிறகு தான் எவ்வாறு ராஜீவ் காந்தி காலத்திலே விடுதலைப்புலிகளுடைய தலைமைத்துவத்தை இராணுவ ரீதியாக அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து கொல்லவேண்டும் என்ற சதிகள் நடத்தப்பட்டன என்பதைப் பற்றிய புதிய தகவல்கள் இந்திய நூலாக வெளிவந்திருக்கின்றது. அதை எழுதியவர் அக்காலத்திலே இந்திய அமைதிகாக்கும் படையின் தளபதியாக இருந்தவர். இவ்வாறு புதிதாகக் கிடைக்கும் சம்பவங்களையும், அதில் சேர்க்க முனைந்துள்ளேன்.
அத்துடன் தமிழர் தேசியத்தைத் தொலைத்தது தனியே ஈழநாட்டில் மட்டும் வைத்துக்கொண்டு ஆராய்வது தவறு. தமிழர் தேசியம் இந்திய துணைக்கண்டத்தில் எவ்வாறு தொலைக்கப்பட்டது
என்பதை ஒப்பு நோக்கு ரீதியில் "மாயினி" நாவலில் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த தமிழர் தேசியத்தைத் தொலைத்ததும் திராவிடர் கழகம் அரசியல் நோக்கிலே தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக பிரிவினை கோஷத்தை நாங்கள் கைவிட்டு விட்டோம் என்பது எல்லாம் அந்த தமிழர் தேசியம் தொலைந்த ஆய்விலே அக்கறைக்கு எடுத்துக் கொள்ளப்படவேண்டிய விஷயங்கள். அதை "மாயினி" நாவலிலே தொடப்படவில்லை. ஆனால் ஆங்கிலத்தில் எழுதப்படும் "மாயினி" நாவலிலே இந்தக் குறைபாடுகள் திருத்தி அமைக்கப்படும் என்று நம்புகின்றேன். அரசியல் அதிகார மையங்களுக்கு எதிராக ஒரு எழுத்துப் போராளியாக, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய விளைவுகளைச் சிந்திக்காது "மாயினி" நாவல் எழுதப்பட்டது. அதனுடைய வெற்றி, தோல்விகள் ஓர் இலக்கிய வெற்றி தோல்வியாக அல்லாமல் ஒரு இனத்தினுடைய சத்தியத்துக்கு ஏற்படக்கூடிய வெற்றி தோல்விகளூடாகத் தரிசித்து அதனை நான் எழுதியுள்ளேன். "மாயினி"யின் இலக்கிய வெற்றிகள், இலக்கிய மேன்மைகள், எனக்கு இலக்கியத்திலே அது சம்பாதித்துத் தரக்கூடிய இடம் ஆகியன பற்றி எவ்விதக் கவலையும் இல்லாமல் ஒரு அறுபது ஆண்டு காலம் தமிழ் எழுதுவதை என்னுடைய உயிரும் மூச்சுமாக கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது அரசியல் ரீதியாக எனக்கு ஏற்பட்ட சிந்தனைகளை, அரசியற் சிந்தனைகளாக அல்லாமல் ஒரு புதிய புனைவாக, ஒரு நாவலாக தமிழ் மக்கள் முன் வைக்கவேண்டும் என்று ஆசைப்பட்டதும் ஒரு படைப்பாகவே மாயினி உங்களுடைய விமர்சன அரங்குக்கு எடுக்கப்படுகின்றது.
இறுதியாக பரீசில் கூடக்கூடிய இலக்கிய ஆர்வலர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகின்றேன். என்னுடைய தமிழ் நாவலை நீங்கள் விமர்சியுங்கள். ஆனால் நீங்கள் சொல்லும் குறைபாடுகள், விமர்சனங்கள், எதிர்க்கட்டுக்கள் அனைத்தையும் தயவு செய்து என்னுடைய பார்வைக்கு அனுப்பி வையுங்கள். ஏனென்றால் நான் இப்பொழுது எழுதிக்கொண்டிருக்கும் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு இந்த தவறுகள் நிகழாமல் நீக்கி அதை கொண்டுவருவதற்கு எனக்கு உதவும் என்று நான் நம்புகின்றேன்.
பரீசில் நடந்தேறிய "மாயினி" ஆய்வரங்கின் படங்களும் செய்தியும் "அப்பால் தமிழில்"