போருக்குப் பின்னதான ஈழச் சமூகம் இந்த நிமிஷம் வரை முகம் கொடுக்கின்ற காணாமல் போதல், சுவீகரிப்புகள், போதைப் பொருள் கலாசாரம் என்று ஈழத்தமிழ் சமூகம் முகம் கொடுக்கின்ற முக்கியமான அபாயங்களை முன்வைத்து அவற்றின் கூறுகளோடு இணத்துக் கதை பண்ணுவது என்பது ஒரு மிகப் பெரிய சவால்.
ஊழி இதைத்தான் விரிவாகவும் பரந்து பட்டும் பேசுகிறது. இது ஈழத்தமிழ்ச் சமூகத்தின் ஒட்டுமொத்த அனுபவங்களின் நீட்சி எனலாம்.
இதற்கான உங்களின் உழைப்பைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்.
தொடர்ந்து ஈழ சினிமாவைப் பார்க்கும் அனுபவத்தில் இந்தப் படத்தின் முக்கிய பாத்திரங்கள் எல்லாமே புதுமுகங்களாகத் தெரிகிறது, ஆனால் அவர்கள் எல்லோருமே அந்தத் திரைமொழி அனுபவத்தை மிக இயல்பாகக் கடத்துகிறார்கள். இது எப்படிச் சாத்தியமாயிற்று.
இந்தப் படத்தைப் பொறுத்தவரை ஒரு non-linear நுட்பத்தில் படத்தொகுப்பு அமைந்திருக்கிறது. ஈழ சினிமா ரசிகருக்கு இதை எளிதாகக் கடத்தி விட முடியும் என்று நினைக்கிறீர்களா?
ஊழி படத்தின் இன்னொரு முக்கிய பலம், நிலம் பேசும் மொழி.
ஈழத்துப் படைப்புகளில் இவ்வளவு நுட்பமாக மண்ணோடும் கடலோடும் படைப்பை இணைத்துப் பயணித்த அனுபவம் கிடைத்ததில்லை. இதை நீங்கள் தீர்மானித்தது தானா?
சினம் கொள் படம் ஒரு போராளியின் மீள்வரவில் நிகழும் அனுபவங்களாக அமையும். அதன் நீட்சியாக அமுதன் என்ற பாத்திரம் அமைந்து விட்டதோ?
மெய்யான வரலாற்றைப் பகிரவேண்டும் என்று சொல்லும் ஆசிரியர் வில்வரத்தினம், புதுவையார், சேரன் போன்றோரை உதாரணப்படுத்தி
நம் மெய்யான வரலாற்றைக் கொடுக்க வேண்டும் என்று போகிற போக்கில் தீபச்செல்வன் கொடுத்த ஆழமான வசனங்களை இயக்குநர் என்ற வகையில் எவ்வளவு தூரம் சுதந்திரம் கொடுத்திருந்தீர்கள்?
அந்தப் புத்த பிக்குக் குறியீட்டைப் பார்த்த பின்னர் சமீபத்தில் நடந்து கொண்டிருக்கும் நிலச் சுவீகரிப்பைத் தேடிப் பார்ப்போரும் உண்டு.
இது குறித்து?
இசையமைப்பாளரின் பணியை நாம் காது கொடுத்தோம். அவர் என்ன சொன்னார்?
நாசரின் குரலோடு தான் தொடங்குகிறது. கமல்ஹாசனுக்கு நன்றி பகிர்ந்ததன் பின்னால் ஏதும் செய்தி உண்டா?
படப்பிடிப்பு நடக்கும் சமயம் கிடைத்த முட்டுக்கட்டை?
நடிகர்கள் தம் நடிப்பை வழங்கும் போது நீங்கள் எதிர்பாராத ஒரு இன்ப அதிர்ச்சி கிடைத்த அனுபவம்?
கானா பிரபா