தமிழ்க் குழந்தைகளுக்கான முன்னோடிக் காணொளி
இனி Youtube தளத்திலும்
ஆஸி தேசத்தில் விக்டோரியா மாநிலத்தைத் தளமாகக் கொண்டு இயங்கும் பாரதி பள்ளி கல்விக் கூடம்
தமிழ்க் கல்வி முன்னெடுப்புகளில் பரவலான செயற்பாடுகளில் கடந்த முப்பது ஆண்டுகளாக இயங்கிச் சாதனை படைத்து வருகின்றது.
1995 ஆம் ஆண்டிலேயே தம் பள்ளி மாணவர்களைக் கொண்டு பாப்பா பாரதி என்ற ஒளி நாடாவை வெளியிட்டது ஊடகத் துறையில் ஒரு முன்னோடிச் செயற்பாடு எனலாம்.
இன்று Youtube இல் குழந்தைகளுக்கான பகிர்வுகள் இருந்தாலும் அவற்றின் பங்களிப்பு மட்டுப்படுத்தப்பட்டே இருக்கின்றது.
இந்தச் சூழலில்
"ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் இருப்பது போல, உண்மையான மனிதர்கள் தோன்றி நடிக்கும் குழந்தைகளுக்கான காணொலிகள் இன்னும் தமிழில் இல்லை. எல்லாம் கார்ட்டூன்கள் தான். இந்தக் குறையைச் சிறிதளவாவது நீக்கவும் இக் காணொலிகள் பங்களிக்கும்.
30 ஆண்டு வரலாற்றைக் கொண்ட இக் காணொலிகளை மீண்டும் அறிமுகம் செய்ய வேண்டிய தேவை உள்ளது. அத்துடன் குழந்தைகளுக்குக் களிப்பூட்டும் காட்சி ஊடகங்கள் பற்றிய சிந்தனைகளும் வளர வேண்டிய உள்ளது"
என்று பாரதி பள்ளியின் நிறுவனர் திரு.மாவை நித்தியானந்தன் குறிப்பிடுகிறார்.
Hon Julian Hill MP (Assistant Minister for Citizenship, Customs and Multicultural AffairsAssistant Minister for International Education) அவர்களால் வரும் ஜூலை 6 ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு
Tony Sheumack Centre for Performing Arts, Berwick, Vic 3806 என்ற அரங்கில்
இந்தக் காணொலித் தளப்பகிர்வுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துள்ளார்கள்.
அதனைத் தொடர்ந்து பின்வரும் தளம் வழியாக இந்தப் பெறுமதியான பகிர்வுகளைத் தமிழ்ச் சமூகம் கண்டு ரசிக்கவும் தம் பிள்ளைகளுக்குக் காட்டவும் வழியேற்படுத்தியிருக்கிறார்கள்
https://www.youtube.com/@bharathiacademy1
பாரதி பள்ளியின் இந்த முன்னோடிச் செயற்பாட்டுக்கும், தொடர்ந்து தமிழ்ச் சமூகத்துக்கு வழங்கி வரும் பன்முக இயக்கத்துக்கும் வாழ்த்துகளும், நன்றிகளும்.