"இந்தப் போரில் ஒருவர் வெற்றி பெறுவார். மற்றவர் தோல்வி காண்பார். ஆனால், போரின் பின்னர் நாட்டின் சாம்பல் மேட்டில் நின்றாவது வெற்றி பெற்றவரும் தோல்வி கண்டவரும் ஒரே மேசையில் அமர்ந்து பேசத்தான் வேண்டும். உங்களுக்கே வெற்றி என்று நீங்கள் நினைக்கிறீர்கள். நாமே வெற்றி பெறுவோம் என்று நாங்கள் நினைக்கின்றோம்.
ஆனால், பெறுமதியான பகையாளிகள் என்ற வகையில் ஒருவரை மற்றவர் மதிப்பதற்கான வாய்ப்பை எம்மிடம் இருந்து அபகரித்து தவறிழைத்து விடாதீர்கள். இணக்கமான கருத்தைக் கொண்டவர்களாக இல்லாவிட்டாலும் நீங்களும் நாங்களும் எதிரிகளாக இருந்தாலும் உங்களை மதிப்பதற்கு ஒரு சந்தர்ப்பத்தை எங்களுக்குத், தாருங்கள்"
- நெல்சன் மண்டேலா ஐலண்ட் சிறையின் நிலைவரங்கள் குறித்து சிறைச்சாலை ஆணையாளரான வெள்ளையினத்தவர் ஜெனரல் ஜே.சி.ஸ்ரெயினுடன் பேசுகையில் சொன்னது.( தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் அரசியற் பிரிவுத் தலைவர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் ஒருமுறை ஜேவிபி இனவாதக் கட்சிக்கு இதை மேற்கோளிட்டிருந்தார், நன்றி தமிழ் நேசன் தளம்)
ஜீலை 18, 1918 இல் பிறந்த ஆபிரிக்கச் சிங்கம் நெல்சன் மண்டேலா நிறவெறி அரசுக்கு எதிராகப் போராடி 27 வருட சிறைவாசம் அனுபவித்து, பின்னர் 1990 இல் அவர் சுதந்திரக் காற்றைச் சுவாசித்த போது தன் உடன்பிறப்புக்களுக்கும் ஒரு விடியலை ஏற்படுத்தினார். தென் ஆபிரிக்காவில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர் ஆனார். நோபல் கமிட்டி அவருக்கு சமாதான விருதைக் கொடுத்தது. ஒருகாலத்தில் ஒதுக்கிய தேசங்கள் சிவப்புக் கம்பளம் இட்டு வரவேற்றன.இவரின் வாழ்வின் சரிதம் Long Walk to Freedom என்ற பெயரில் வடிக்கப்பட்டிருக்கின்றது. நெல்சன் மண்டேலா - சுதந்திரத்திற்கான விலையையும், உறுதியையும் கண் முன் காட்டி நிற்கும் சாட்சியம்.
நெல்சன் மண்டேலாவின் முதல் பேட்டி
நெல்சன் மண்டேலா விடுதலையான தினம், 1990
நெல்சன் மண்டேலாவுக்கான சிறப்புப் பாடல்
நெல்சன் மண்டேலா வாழ்க்கை வரலாறு - பாகம் 1
நெல்சன் மண்டேலா வாழ்க்கை வரலாறு - பாகம் 2
நெல்சன் மண்டேலா வாழ்க்கை வரலாறு - பாகம் 3
நெல்சன் மண்டேலா வாழ்க்கை வரலாறு - பாகம் 4
நெல்சன் மண்டேலா வாழ்க்கை வரலாறு - பாகம் 5
Friday, December 06, 2013
Wednesday, December 04, 2013
வலைப்பதிவு உலகில் நிறைந்த என் எட்டு ஆண்டுகள்
எட்டு ஆண்டுகளை எட்டிப்பிடித்து விட்டேன் வலைப்பதிவு உலகில். இத்தனை ஆண்டுகளாக எனக்குத் திருப்தியையும் நிறைவையும் மனதில் ஏற்படுத்திய விஷயங்களில், மிக முக்கியமாக வலைப்பதிவு அனுபவங்களைக் கொள்வேன்.
இந்த எட்டு ஆண்டுகளில் எதை எழுத விழைந்தாலும் அதை எழுத வேண்டுமா என்று ஒன்றுக்கு இரண்டு முறை நினைத்தே எழுதுவதால் தான் மாதத்துக்கு ஒரு பதிவு என்ற ரீதியில் தேறுகிறது. எந்த வித வலையுலக அரசியலிலும் இறங்கியதில்லை, அதில் நாட்டமும் இல்லை. ஆனாலும் அவ்வப்போது எழுதுவும் கருத்துக்களை வைத்து ஒவ்வொரு முகமாகத் தேடுபவர்களும் இருக்கிறார்கள். நமக்குப் பிடித்தவற்றைப் பேசுவதற்கும் செய்வதற்கும் கூட குழு அமைத்துக் கண்காணிக்கும் சமூக ஊடகப் பரப்பில் இது சவால் நிறைந்த விடயமும் கூட. ஆனால் எனக்குத் தெரியும், என் ஒத்த சிந்தனையுள்ள ஒரு வாசக நண்பர் உலகத்தின் எங்கோ ஒரு மூலையில் இருந்து எனக்கான ஆதரவுக்குரலாக இயங்கி வருவார் என்று. அந்த நம்பிக்கையே என்னை இத்தனை ஆண்டு கால வலைப்பதிவு வாழ்க்கையில் நீடித்து நிலைக்க வைத்திருக்கிறது.
எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் வலைப்பதிவு உலகில் நான் காலடி எடுத்து வைக்கும் போது இருந்த சக வலைப்பதிவர்கள் ஏறக்குறையக் காணாமல் போய் விட்டார்கள். இன்னும் சிலர் கால மாற்றத்துக்கேற்ப ட்விட்டர், கூகிள் ப்ளஸ் என்று தாவிவிட்டார்கள். அங்கெல்லாம் நான் இருந்தாலும் என் தாய் வீடு இந்த வலைப்பதிவு உலகம் தான். அதனால் தான் என் மடத்துவாசல் பிள்ளையாரடி என்ற மூல வலைப்பதிவில் மாதாந்தம் ஒரு இடுகையேனும் இட்டு என் இருப்பைக் காட்டி வருகின்றேன். இந்த ஆண்டைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டு ஒரு இடைவெளி இருந்த என் சக வலைப்பதிவான உலாத்தல் பதிவில் அதிக முனைப்போடு எழுதி வருகின்றேன். அத்தோடு கூடவே இருக்கு என் இசைச்சிலாகிப்புக்கும்,ஒலிப்பகிர்வுகளுக்குமென றேடியோஸ்பதி
எட்டு ஆண்டுகள் வெறும் ஆண்டுக் கணக்குத்தான் இதையும் விட இன்னும் நிறையப் பகிர வேண்டும் அது ஏதோவொரு வகையில் இன்னொருவருக்குப் பயனுள்ளதாக அமையவேண்டும் என்ற முனைப்பை அடுத்த சுற்றிலும் வைத்துக் கொள்வேன்.
நேசம் கலந்த நட்புடன்
அன்பன்
கானா பிரபா
http://www.kanapraba.com/
2011 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் படையல்
90 ஆம் ஆண்டிலிருந்து அடுத்த ஐந்து ஆண்டுகளின் இரவுகள் குப்பி விளக்கிலும், பகலில் சூரிய விளக்கிலும் கழிந்த நாட்கள் அவை. வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் பல்கலைக்கழகப் புகுமுகப் பரீட்சை எல்லாமே குப்பி விளக்கில் தான் படித்து முடித்தோம். ஆபிரகாம் லிங்கன் தெரு விளக்கில் படித்துப் பட்டம் பெற்றதற்கு நிகரான பெருமை அது. இன்றைக்குப் புலம்பெயர்ந்த சூழலில் மின்சாரம் ஒரு நிமிடம் நின்றாலே அதிசயமாக இருக்கும் சூழலிலும், என் வீட்டில் தேவையில்லாமல் மின் விளக்குகள் எரியாது, இந்த ஜாம்போத்தல் விளக்கு போதித்த பாடம் அது.
பிரிட்டிஷாரைக் கடந்து இன்று தனியார் மயமாக்கப்பட்ட தேயிலைத் தோட்டத்து
வாழ்வியலும் ஒரே மாதிரித்தான். மலையகத்தமிழரைப் பொறுத்தவரை அவர்களுக்கான
உறுதியான தலைமைத்துவம் இல்லாமை,
சோரம் போகும் பிரதிநிதித்துவம் இவற்றால் ஆண்டாண்டுகாலமாக அவர்களின்
நியாயமான வாழ்வுரிமையைத் தொலைத்துவிட்டு நிற்கின்றார்கள். இன்றைக்குக்கு
ஈழத்தின் மற்றைய பாகங்களில் இருக்கும் தமிழனும் இதே நிலையை நோக்கி மெல்ல
மெல்ல நகர்கின்றான்.
"அண்ணை பொக்கற் பக்கம் நாலு கீறு டிசைன் போட்டு, கால் பக்கம் தொள தெளவெண்டு இருக்கோணும் என்ன" என்று ஊரிலுள்ள தையல்கடைக்காரருக்கும் நவ நாகரிகம் கற்றுக் கொடுத்தாச்சு. கோயில் திருவிழாவில் நாதஸ்வரக்காரரும் வடக்கு வீதிக்கு சுவாமி உலா வரும் போது ராகமிழுக்கிறார் அட அவர் வாசிக்கிறதும் "சின்ன ராசாவே சித்தெறும்பு என்னை கடிக்குது". கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டே பாடலை ரசிக்கிறோம்.
Cisco networking முதல் வகுப்பில்
பாடமெடுத்து விட்டு செயன்முறைக்கு ஆசிரியர் பணிக்கிறார். ஒவ்வொருத்தரும்
Router ஐ நீண்ட நேரமாகக் கிண்டிக் கொண்டிருக்கிறோம்.
A Gun and A Ring - எங்கட கதை சொல்லும் சினிமா
யுத்தக்களங்களில் சுடுகுழல்கள் அணைந்திருக்கலாம், ஆனால் அவை நேரடியாகவும், உள ரீதியாகவும் ஏற்படுத்தி விட்ட வடுக்களைச் சுமந்து கொண்டுதான் இந்தத் தலைமுறை பயணப்படுகின்றது. இந்தப் படத்தில் சொன்ன ஆறு கதைகளைத் தாண்டி சொல்லப்படாத கதைகள் ஏராளம். அந்தக் கதைகளைச் சுமந்து திரிவோர் நம்மைச் சுற்றியே இருக்கிறார்கள். அந்தப் பதிவுகள் படமாக்கப்படும் போது நல்ல சினிமா மட்டுமல்ல போர் தின்ற சமூகத்தின் அவலத்தை உலக அரங்கில் கொண்டுவர ஏதுவாக இருக்கும். அதை லெனின் எம்.சிவம் குழுவினர் கச்சிதமாகச் செய்து காட்டிய அளவில், இதே தளத்தில் இயங்கும் படைப்பாளிகளும் கவனத்தில் கொள்ளவேண்டும். இன்னும் மிக முக்கியமாக, இந்தப் படத்தை நாம் எல்லோரும் பார்த்துக் கொண்டாடவேண்டிய படைப்பும் கூட.

2006 ஆம் ஆண்டில் வலைப்பதிவில் என் ஒரு வருடப் பதிவுகளின் தொகுப்பாய்.
2007 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் தொகுப்பு
2008 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் படையல்
2009 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் படையல்
2010 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் படையல்
2011 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் படையல்
வலைப்பதிவு உலகில் என் ஏழு ஆண்டுகள் இருப்பு
2012 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் படையல்
2013 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகள் இவை
மின்சாரக் கனவுகள்
90 ஆம் ஆண்டிலிருந்து அடுத்த ஐந்து ஆண்டுகளின் இரவுகள் குப்பி விளக்கிலும், பகலில் சூரிய விளக்கிலும் கழிந்த நாட்கள் அவை. வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் பல்கலைக்கழகப் புகுமுகப் பரீட்சை எல்லாமே குப்பி விளக்கில் தான் படித்து முடித்தோம். ஆபிரகாம் லிங்கன் தெரு விளக்கில் படித்துப் பட்டம் பெற்றதற்கு நிகரான பெருமை அது. இன்றைக்குப் புலம்பெயர்ந்த சூழலில் மின்சாரம் ஒரு நிமிடம் நின்றாலே அதிசயமாக இருக்கும் சூழலிலும், என் வீட்டில் தேவையில்லாமல் மின் விளக்குகள் எரியாது, இந்த ஜாம்போத்தல் விளக்கு போதித்த பாடம் அது.
விஸ்வரூபமும் என் ரிஷிமூலமும்
"டீச்சர் இவன் ஒரு பயங்கரவாதி, எங்கள் நாட்டில் இருக்கும் எல்லோரையும் இவனின் சகோதரர்கள் அழிக்கிறார்கள்" குரல் வந்த திசையைப் பார்க்கிறேன், எங்களோடு கூட வந்த சிங்களப் பையன் லக்மால் ஆங்கிலத்தில் தட்டுத்தடுமாறிச் சொல்லிகொண்டிருக்கிறான். எனக்கு அந்த இடத்தில் மரத்தில் கட்டிவிட்டுக் கட்டெறும்புகளை உடம்பெல்லாம் பரப்பிவிட்டது போல குறுகி நிற்கிறேன்.டோண்டு சார்
ஏழு வருடங்களுக்கு முன்னர் வலைப்பதிவு உலகத்துக்கு வந்தபோது டோண்டு ராகவன் சார் மூலம்தான் இந்த இணையச்சூழலின் இன்னொரு பக்கத்தை அறிந்துகொண்டேன் அது மிக அதிர்ச்சிகரமானதும் படிப்பினையையும் என் வலைப்பதிவு உலகின் ஆரம்பகாலத்தியே கொடுத்தது என்றவகையில் அவரை என்னால் மறக்கமுடியாது. என்னுடைய ஆரம்பப்பதிவுகளில் ஒன்றில் தன் பின்னூட்டம் வழியாக அறிமுகமானார் கூடவே "உங்கள் படத்தை பார்த்தால் ஹிந்தி நடிகரும் நடிகை நூதன் அவர்களின் மகன் மோனிஷ் பெஹல் அவர்கள் ஞாபகத்துக்கு வருகிறார்" என்று அவர் சொல்லவும்உதிரம் குடிக்கும் தேயிலைத் தோட்டம் (பரதேசியை முன்வைத்து)
பிரிட்டிஷாரைக் கடந்து இன்று தனியார் மயமாக்கப்பட்ட தேயிலைத் தோட்டத்து
வாழ்வியலும் ஒரே மாதிரித்தான். மலையகத்தமிழரைப் பொறுத்தவரை அவர்களுக்கான
உறுதியான தலைமைத்துவம் இல்லாமை,
சோரம் போகும் பிரதிநிதித்துவம் இவற்றால் ஆண்டாண்டுகாலமாக அவர்களின்
நியாயமான வாழ்வுரிமையைத் தொலைத்துவிட்டு நிற்கின்றார்கள். இன்றைக்குக்கு
ஈழத்தின் மற்றைய பாகங்களில் இருக்கும் தமிழனும் இதே நிலையை நோக்கி மெல்ல
மெல்ல நகர்கின்றான்.
வருசப்பிறப்பு வந்திட்டுது
புதுவருசம் பிறக்கப் போகுதெண்டா ஊரிலை இருக்கிற குஞ்சு குருமானுகளுக்கு மட்டுமே கொண்டாட்டம், பெரியாக்களுக்கும் தானே. வருசப்பிறப்பிறப்புக்கு முதல் இரண்டு மூண்டு நாட்களுக்கு முன்னமே எங்கட வீட்டிலை குசினி (அடுக்களை) அடுப்பு எல்லாம் சாணத்தாலை மெழுகி, மச்சப்பாத்திரமெல்லாம் மீன் வெடுக்குப் போக சாம்பலால் தேச்சுக் கழுவி பின் பக்கம் இருக்கிற அறைப்பக்கமா கவுட்டு வச்சிடுவா அம்மா. அப்பாவின்ர வேலை தூசி தட்டி, எல்லா அறையும் கழுவி வச்சிடுவார்.சித்தெறும்பு என்னை கடிக்குது
"அண்ணை பொக்கற் பக்கம் நாலு கீறு டிசைன் போட்டு, கால் பக்கம் தொள தெளவெண்டு இருக்கோணும் என்ன" என்று ஊரிலுள்ள தையல்கடைக்காரருக்கும் நவ நாகரிகம் கற்றுக் கொடுத்தாச்சு. கோயில் திருவிழாவில் நாதஸ்வரக்காரரும் வடக்கு வீதிக்கு சுவாமி உலா வரும் போது ராகமிழுக்கிறார் அட அவர் வாசிக்கிறதும் "சின்ன ராசாவே சித்தெறும்பு என்னை கடிக்குது". கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டே பாடலை ரசிக்கிறோம்.
யாழ்ப்பாண யாத்திரை
வவுனியா பஸ் நிலையத்துக்கு வந்தாச்சு அங்கே வலப்பக்கமாக லைன் கட்டியிருக்கும் சிவப்புக் கலர் பஸ்கள் அரச பஸ்கள், இடப்பக்கம் இருப்பவை தனியார் பஸ்கள் என்று கைகாட்டிவிட்டு ஆட்டோக்காரர் சென்றுவிட்டார். வவுனியாச் சூரியன் விட்டேனா பார் என்று தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறார். இரண்டு நாள் தொடர்ச்சியான பயணம், பசிக்களை வேறு.ஆகாசவாணி எங்கள் வீட்டு மகாலட்சுமி
எங்கள் வீட்டில் மட்டுமல்ல அப்போதெல்லாம் யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான குடும்பத்தலைவர்களின் விருப்பத் தேர்வாக இருந்தது ஆகாசவாணி தான். "திருச்சீல விடு திருச்சீல விடு எண்டோண்ணை அவன் றேடியோவுக்குள்ளை திரிச்சீலையை (விளக்கு எரிக்கப்பயன்படும் துணி) விட்டுட்டான்" என்று அந்தக்கால அங்கதம் ஒன்று புழங்கியிருக்கிறது.ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
வகுப்பறையில் வட்ட வடிமாகக் கதிரைகளை அடுக்கிவிட்டு நடுவில் நின்று ஆசிரியை ஒவ்வொரு அடியாகப் பாட, சுற்றிவர நின்று சொல்லிவைத்தாற்போல மாணவர் கூட்டம் பலமாக ஒலியெழுப்பிப் பாடும் சின்ன வகுப்புக் காலம் நினைவுக்கு வருகிறது. ஆடி மாதம் முதலாம் நாள் பிறக்கும் தமிழ் ஆடி மாதப்பிறப்பினை வரவேற்றுப் பாடுவோம் அப்போது.தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் பிறந்த நாள் நூற்றாண்டு நினைவில்
தனிநாயகம் அடிகளாரது வாழ்க்கை என்பது அவர் சார்ந்த சமயப்பணியாகக் குறுகிய வட்டத்தோடு நின்றுவிடாது, தான் சார்ந்த தமிழ்மொழி சார்ந்த சமூகப் பணி கடந்து விரவியிருந்ததை அவரது வாழ்நாளில் எமக்களித்துவிட்டுப் போன சான்றுகள் மூலம் ஆதாரம் பகிர்கின்றன. தமிழாராய்ச்சி மாநாட்டை உலகளாவிய ரீதியிலே நடத்துவதற்கு முன்னோடியாக அமைந்து அதைச் செயற்படுத்தியவர். மேலைத்தேய, கீழைத் தேய நாடுகளுக்கெல்லாம் சென்று, தேடித் தேடி கடந்த நூற்றாண்டுகளில் பதிந்த தமிழரது சுவடுகளை வெளிக்கொணர்ந்தார்.கதிர்காமக் கந்தனிடம் போன கதை
கதிர்காமம் கோயிலுக்கு வரவேண்டும் என்ற
பிரார்த்தனையை நிறைவேற்றிய திருப்தி மட்டும் மனதில் இருந்தது. எங்கள்
அப்பாவின் சந்ததியுடன் "இப்படியெல்லாம் கதிர்காமம் இருந்ததாமே" என்ற
செவிவழிச் செய்தியும் கூட மறந்து போய்விடுமோ. இருந்த இடங்கள் மட்டுமல்ல
மட்டுமல்ல நினைவுகளின் சுவடுகளும் தொலைந்து போவதும் பெருங்கொடுமைதான்.
இடப்பெயர்வுகள் முற்றுப்புள்ளியல்ல,
அப்போது வானொலிக் கலையகத்தில் இருந்து தாயக நடப்புகளை எடுத்து வரும்போது முதல் நாள் பேசியவர் காணாமல் போயிருப்பார், பின்னர் அவர் இறந்த செய்தியை இன்னொருவர் எடுத்து வருவார். உடமைகளோடு இடம்பெயர்ந்த காலம் போய், ஒவ்வொரு ஷெல் அடிக்கும், விமானக் குண்டுவீச்சுக்கும் காணும் பக்கமெல்லாம் ஓடித் தப்ப முடிந்தோர் தப்பினார்கள். அந்த நேரத்தில் இடப்பெயர்வு என்பது நிமிடத்துளிக் கணக்கிலும் மாறிக் கொண்டிருந்தது.செல்போன் கணக்கு
Cisco networking முதல் வகுப்பில்
பாடமெடுத்து விட்டு செயன்முறைக்கு ஆசிரியர் பணிக்கிறார். ஒவ்வொருத்தரும்
Router ஐ நீண்ட நேரமாகக் கிண்டிக் கொண்டிருக்கிறோம்.
"அதிருக்கட்டும் முதலில் ஸ்விட்ச் ஐ
போட்டீர்களா" என்று கேட்டார் ஆசிரியர்.
பிரச்சனையை பெரிதாகவே சிந்திக்கப் பழகிவிட்டோம் இப்போதெல்லாம்.
A Gun and A Ring - எங்கட கதை சொல்லும் சினிமா
யுத்தக்களங்களில் சுடுகுழல்கள் அணைந்திருக்கலாம், ஆனால் அவை நேரடியாகவும், உள ரீதியாகவும் ஏற்படுத்தி விட்ட வடுக்களைச் சுமந்து கொண்டுதான் இந்தத் தலைமுறை பயணப்படுகின்றது. இந்தப் படத்தில் சொன்ன ஆறு கதைகளைத் தாண்டி சொல்லப்படாத கதைகள் ஏராளம். அந்தக் கதைகளைச் சுமந்து திரிவோர் நம்மைச் சுற்றியே இருக்கிறார்கள். அந்தப் பதிவுகள் படமாக்கப்படும் போது நல்ல சினிமா மட்டுமல்ல போர் தின்ற சமூகத்தின் அவலத்தை உலக அரங்கில் கொண்டுவர ஏதுவாக இருக்கும். அதை லெனின் எம்.சிவம் குழுவினர் கச்சிதமாகச் செய்து காட்டிய அளவில், இதே தளத்தில் இயங்கும் படைப்பாளிகளும் கவனத்தில் கொள்ளவேண்டும். இன்னும் மிக முக்கியமாக, இந்தப் படத்தை நாம் எல்லோரும் பார்த்துக் கொண்டாடவேண்டிய படைப்பும் கூட.
Posted by
கானா பிரபா
at
10:28 PM
14
comments
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook
Friday, November 01, 2013
A Gun and A Ring - எங்கட கதை சொல்லும் சினிமா
முப்பது ஆண்டுகளைக் கடந்த ஈழத்தமிழர் இனவிடுதலை நோக்கிய போர் ஒரு
பெரும் அழிவோடு மயானக் காடாய்க் கிடக்கிறது இன்னமும் அப்படியே. இது ஒருபுறமிருக்க, அழிவின் எச்சங்கள் ஐந்து
ஆண்டுகளைத் தொட்டும் அப்படியே இருக்க, இந்த நீண்ட போரின் முந்திய
அத்தியாங்களிலிருந்து பாதிக்கப்பட்டுத் தப்பிப்பிழைத்தவர்களிலிருந்து பயணிக்கிறது A Gun and A Ring திரைப்படம்.
போரிலிருந்து தப்பிப் பிழைத்தவர்களின் வாழ்வியலில் புலப்பெயர்வு கடந்தும் இந்தப் போரின் எச்சங்கள் எந்தவகையிலும் களைந்தெறிய முடியாத உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதை ஒரு பக்கமும், இன்னொரு பக்கம் இந்த மனிதர்கள் ஒவ்வொருவரினதும் தீர்க்கப்படாத கணக்கையும் வைத்துப் பின்னப்பட்டிருக்கிறது. தாயகத்திலிருந்து புலம்பெயர் வாழ்வு வரையான இருவேறுபட்ட வாழ்வியலை இணைத்து, வெவ்வேறு திசைகளிலிருந்து பயணிக்கும் பல்வேறு மனிதர்களை இணைக்கும் புள்ளியாக அமையும் சிக்கலான திரைக்கதையை அமைப்பது ஒன்றும் அவ்வளவு இலேசான பணியுமல்ல. இந்தப் படம் பார்த்து முடித்து இரண்டு வாரங்கள் கழித்தும் குறித்த கதை மாந்தர்கள் கண்ணுக்கு முன்னால் உலாவிக் கொண்டிருக்கிறார்கள், இதைவிட வேறெந்த வெற்றியை ஒரு படைப்பாளன் ஈட்டமுடியும்? அந்த வகையில் ஈழத்துத் தமிழ் சினிமாவைப் பேர் சொல்ல வைத்த வகையில் இயக்குனர் லெனின் எம்.சிவம் அவர்களுக்கு ஒரு கம்பீரமான கைகுலுக்கலை வைக்கலாம். அதையும் தாண்டி, நம்மவர் சினிமா தொழில் நுட்ப நேர்த்தியில் மட்டுமல்ல , கச்சிதமாகவும் விறுவிறுப்பாகவும் திரைக்கதை அமைப்பதிலும் கூடத் தன்னை நிலை நிறுத்த முடியும் என்பதைப் பெருமிதத்தோடு சொல்லி வைக்க இந்தப் படம் மிக முக்கியமானதொரு உதாரணமாகப்படுகின்றது.
லெனின் எம்.சிவம் அவர்கள் 1999 என்ற திரைப்படத்தின் மூலமாகப் பரவலாக அறியப்பட்ட இயக்குனர். 1999 திரைப்படத்தில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் இளைஞர்கள் சிலர் இலக்கற்ற, வன்முறை சார்ந்த வாழ்வியலைத் தேர்ந்தெடுக்கும் போது அவர் தம் பெற்றோருக்கும், தாம் இயங்கும் சமூகத்துக்கும் கொடுக்கும் விலை என்ன என்பதை மையப்படுத்தி எடுத்திருந்திருந்தார். இந்தமுறை மீண்டும் புலம்பெயர் வாழ்வியலின் தரிசனங்களை இன்னொரு புதிய களத்தை எடுத்துக் கையாண்டிருக்கிறார்.
நமது புலம்பெயர் சமூகத்தின் சினிமா மீதான காதல் பெரும்பாலும் தமிழகத்தின் கோடம்பாக்கத்து திசை நோக்கியே இருக்கும். தனியே புலம்பெயர் வாழ்வியல் என்று எடுத்துக் கொண்டாலேயே ஏராளம் வாழ்வனுபவங்களைக் காட்டும் கதைக் கருக்கள் கிட்டும். குறும்பட முயற்சிகளிலே நம்பிக்கை தரும் இளைய படைப்பாளிகள் தவிர அதிகம் தாயகம், புலம்பெயர் வாழ்வியல் பேசும் கதைப்பின்னணியை நேர்த்தியாகக் கையாண்டது மிகவும் சொற்பம்.
இந்தப் படத்திற்கு உலகத் திரைப்பட விழா அரங்கங்களில் கிட்டிய அங்கீகாரம், லெனின் எம்.சிவம் குழுவினர் மீதான நம்பிக்கையை வலுப்படுத்துவதோடு நம்மவர் என்ற ரீதியில் பெருமையும் கொள்ள வைக்கின்றது.
A Gun and A Ring படத்துக்குக் கிட்டிய கெளரவங்களில் குறிப்பிடத்தகுந்தவை.
படத்தின் தொழில் நுட்பக் குழு
இயக்குனர் மற்றும் கதாசிரியர் - லெனின் எம்.சிவம்
தயாரிப்பாளர் - விஷ்ணு முரளி
இசையமைப்பு - பிரவீண் மணி
ஒளிப்பதிவு - சுரேஷ் ரோகின்
படத்தொகுப்பு - ப்ராஷ் லிங்கம், லெனின் எம்.சிவம்
யுத்தக்களங்களில் சுடுகுழல்கள் அணைந்திருக்கலாம், ஆனால் அவை நேரடியாகவும், உள ரீதியாகவும் ஏற்படுத்தி விட்ட வடுக்களைச் சுமந்து கொண்டுதான் இந்தத் தலைமுறை பயணப்படுகின்றது. இந்தப் படத்தில் சொன்ன ஆறு கதைகளைத் தாண்டி சொல்லப்படாத கதைகள் ஏராளம். அந்தக் கதைகளைச் சுமந்து திரிவோர் நம்மைச் சுற்றியே இருக்கிறார்கள். அந்தப் பதிவுகள் படமாக்கப்படும் போது நல்ல சினிமா மட்டுமல்ல போர் தின்ற சமூகத்தின் அவலத்தை உலக அரங்கில் கொண்டுவர ஏதுவாக இருக்கும். அதை லெனின் எம்.சிவம் குழுவினர் கச்சிதமாகச் செய்து காட்டிய அளவில், இதே தளத்தில் இயங்கும் படைப்பாளிகளும் கவனத்தில் கொள்ளவேண்டும். இன்னும் மிக முக்கியமாக, இந்தப் படத்தை நாம் எல்லோரும் பார்த்துக் கொண்டாடவேண்டிய படைப்பும் கூட.
இந்தத் திரைப்படம் வரும் நவம்பர் 30 மற்றும் டிசெம்பர் 1 ஆம் திகதிகளில் சிட்னியில் சிறப்புக் காட்சிகளாகக் கண்பிக்கப்படவிருக்கின்றது. சிட்னி வாழ் தமிழர்கள் இந்த முயற்சிக்குத் தம் ஆதரவை வழங்கிச் சிறப்பிக்க வேண்டுகிறேன்.

இன்றைக்கு புலம்பெயர் சமூகத்தில்
இயங்கும் சினிமா சார்ந்த படைப்பாளிகளிடம் இருக்கும் தொழில் நுட்பம் சார்ந்த
அறிவு, நவீன சினிமாக்கருவிகள், அதையும் தாண்டி தான் சொல்லவந்த கருத்தைச்
சுதந்தரமாக பகிரக்கூடிய வல்லமையை ஒரு படைப்பாளிக்கு வழங்கும் ஊடக நடைமுறை
இருந்தும் அதை முறையாகப் பயன்படுத்தத் தவறிவிட்டோமா போன்ற
கேள்விகளுக்கெல்லாம் விடையாக அமைகின்றது இந்தப் படம்.
தமிழகத்து,
ஈழத்து மொழி வழக்கு என்று குழப்பியடிக்கும் வசன அமைப்பு, ஏதாவது ஒரு
பூங்காவையோ ஆற்றைச் சுற்றியோ ஆடும் நாயகன், நாயகி, தோழியர், பக்கம் பக்கமாக
வசனங்கள், அதீத நாடகப்பாணி நடிப்பு இவையெல்லாம் ஒவ்வாத நம் புலம்பெயர்
தமிழ் சினிமாக்களின் பொது ஒற்றுமை. இங்கே தான் இந்தப் படமும் தன்
தனித்துவத்தைக் காட்டி நிற்கின்றது.
படத்தில் அளவான வசனங்கள்,
முக்கியமாக ஈழத்தமிழ் பேசும் பாத்திரங்கள் மற்றும் வெள்ளைக்கார காவல்துறை
அதிகாரிகள் இவர்களின் மொழியில் அந்நியமில்லை. ஈழத்தமிழ் பாத்திரங்களின்
உரையாடலில் சரளமாகவும் இயல்பாகவும் குந்தி நிற்கிறது பிரதேச வழக்கு.
குறித்த காட்சிக்கு எவ்வளவு தூரம் வசனம் தேவையோ அங்கு மட்டும் பேனா
திறக்கப்படுகிறது. மீதி எல்லாமே ஒளிப்பதிவாளரின் கையில் போய்ச்
சேர்கின்றது.
கனேடியத் தமிழர்கள் பங்கெடுத்த, அந்தச் சூழலில் எடுக்கப்பட்ட
படமாக இருந்தாலும் இது புலம்பெயர் சமூகத்தின் பொதுவான சமூகப் பிரச்சனைகளின்
கலவையாகவே பார்க்கமுடிகின்றது. படம் முழுதும் பார்த்து முடித்த பின்னரும்
இந்தப் படத்தை கனடா மட்டுமே சொந்தம் கொண்டாடமுடியும் என்று தோன்றவில்லை.
படைப்பைக் கொடுத்த விதத்தில், இது உலக சினிமாவுக்கான இலட்சணங்கள்
பொருந்திருப்பதாலேயே சீனாவில் நிகழ்ந்த உலகப் பட விழாவிலும்
அமெரிக்காவிலும் கலந்து கொண்டு அந்த அங்கீகாரத்தை மெய்ப்பிக்கின்றது.
வதை முகாமிலிருந்து தப்பியோடி கனடாவுக்கு ஓடும் போராளி இளைஞனின் பயணத்தை
படத்தின் எழுத்தோட்டத்துக்கு முந்திய காட்சி தொடக்கி வைக்கிறது. எடுத்த
எடுப்பிலேயே ஒரு தற்கொலை இந்த இரண்டு வெவ்வேறு பட்ட நிகழ்வுகளின் முடிவு
அல்லது தீர்வு நோக்கிய பயணம் படத்தின் முடிவில் வெளிப்படுகின்றது. இதற்குள்
வெவ்வேறு கதை மாந்தரின் வாழ்வியல் தரிசனங்களை ஒரு மோதிரம், ஒரு துப்பாக்கி
இந்த இரண்டும் இணைக்கின்றன, இந்த இரண்டுமே படத்தின் தீர்வு நோக்கிய
துருப்புச் சீட்டுகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.
வதை
முகாமில் பட்ட சித்திரவதைகளால் மன உளைச்சலுக்கு ஆளாகித் தன் மண வாழ்வைத்
தொலைத்த இளைஞன், வெள்ளை
வானால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட மனைவியின் நினைவில் வாழும் தந்தையும்
சிறுமியும், மணவாழ்வை எதிர் நோக்கி கனடாவுக்கு ஸ்பொன்சர் கிடைத்தும் தன்
வாழ்வைத் தொலைத்த பாதிக்கப்பட்ட இளம்பெண்ணும் அவளைப்போலவே உள்நாட்டு
யுத்தத்தால் தன் குடும்பத்த்தைக் காவு கொடுத்த சூடானிய அகதி ஒருவனும்,
தமிழ்ச் சிறுமி எதிர்நோக்கவிருக்கும் பாலியல்
துஷ்பிரயோகத்தை கையும் களவுமாகப் பிடித்தால் குறித்த குற்றவாளியை
நிரந்தமாகக் கூண்டிலேற்றமுடியும் என்ற முனைப்போடு தருணம் பார்க்கும்
வெள்ளையினத்துக் காவல்துறை அதிகாரி, தம் ஒரே மகனின் தற்கொலை குறித்த
மர்மத்தைத் தேடமுனையும் தாயும் தகப்பனும், சுய நலத் தந்தையும் தன்
சகபாடியின் மரணத்துக்குத்
தீர்வைத் தேடமுனையும் இளைஞன் இவர்கள தான் இந்தப் படத்தின் முக்கியமான
பாத்திரங்கள். இவர்களின் கதைகள் வேறாயினும் அங்கே ஏதோவொரு மர்மமுடிச்சு கூடவே பயணிக்கிறது. அதுதான் படத்தின் முடிவில் மெல்ல அவிழ்கின்றது.
இங்கே
யார் நல்லவன், கெட்டவன், எது நீதி எது அநீதி என்ற பாடங்களெல்லாம்
போதிக்கப்படவில்லை. உள்ளதை உள்ளபடி நம்முன்னே உலாவும் மனிதர்களை, ஏன்
நம்மையே காட்டுமாற்போலத்தான் இயங்குகின்றது கதையோட்டம். இது வெறும் கதையல்ல
உளவியல் ரீதியான மன ஓட்டங்களின் ஒருமித்த கலவையே திரையில் பிம்பங்களாகப்
பரிணமிக்கின்றன.
இப்படியான
சிக்கலான கதைப்புலத்தை எடுத்துக்கொள்ளும் தேர்ந்த ஒரு இயக்குனருக்கு
தொழில் நுட்ப ரீதியான சவால்களைத் தாண்டி, நடிகர்கள் எவ்வளவு தூரம் தம்
பாத்திரப்படைப்பை உள்வாங்கி அதைப் பிரதிபலிக்கிறார்களோ அதுவே பார்வையாளன்
கொடுக்கும் அங்கீகாரத்தை முந்திக் கொண்டு இயக்குனர் பெறும் வெற்றியாக
அமைகின்றது. அந்த வகையில் இந்தப் படத்தின் ஒட்டுமொத்த நடிகர் குழுவே
பாத்திரமுணர்ந்து பாரம் சுமந்திருகிறார்கள். வசன உச்சரிப்பாகட்டும், உடல்
மொழியாகட்டும் நடிகரைத் திரையில் தரிசிக்கின்றோம் என்ற சிந்தை இம்மியளவும்
ஏற்படவில்லை. இத்தனைக்கும் ஒவ்வொரு பாத்திரங்களின் குணாம்சங்கள்
வேறுபட்டவை, வளர்ந்த சூழலும் வேறு.
இந்தப்
படத்தில் நாயகன் அல்லது நாயகி என்று யாரைச் சொல்வது? ஆனால் அந்த முன்னாள்
போராளி இளைஞனே கதையின் முதுகெலும்பு, அவனின் கோபம், இயலாமை, அழுகை எல்லாமே
போலித்தனமில்லாது வெளிப்படுகின்றது.
ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த இளைஞனில் இருந்து, கனடாவில்
இரண்டாவது தலைமுறையாக (அங்கேயே பிறந்திருக்கவும் கூடும்) வாழும் சிறுமி,
இளைஞன், யுவதி, அந்த வெள்ளைக்காரக் காவல் துறை அதிகாரி உள்ளிட்ட நடிகர்
தேர்வு கனகச்சிதம். இவர்கள் எல்லோரையும் தாண்டி, படத்தின் முடிவில் யாருமே
எதிர்பாராத ஒரு பாத்திரத்தின் கோரமுகம் வெளியாகும் போது, இப்போதும் அந்த வல்லூறுக்கண்கள் நினைவில் தேங்கிப் பயமூட்டுகின்றது.
இந்தப் படத்தின் இசையை வழங்கியிருப்பவர் தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக
அறியப்பட்ட இசையமைப்பாளர் ப்ரவீன்மணி. இவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின்
ஆரம்பப் படங்களில் இருந்து பங்களித்ததோடு தனியாகவும் பல படங்களில்
இயங்கியிருந்தவர். பாடல்கள் தேவையற்று ஆரம்பம் முதல் முடிவிடம் வரை
விறுவிறுப்பாக நகரும் கதையோட்டத்தில் இசை என்பது இன்னொரு கவச குண்டலமாக
அமைந்திருக்க வேண்டும். படத்தில் பயணிக்கும் பல்வேறு மனிதர்களின் நுட்பமான
உணர்வுகளுக்கு மொழியாக இந்தப் பின்னணி இசை அமைந்திருக்கவேண்டும். படத்தின்
ஆரம்பத்தில் கச்சிதமாக அமைந்த இசை சில முக்கிய காட்சிகளில் இன்னும்
உழைத்திருக்கலாமோ என்று எண்ணத் தோன்றியது. அதற்காக ஏகப்பட்ட வாத்தியங்களை
ஏகத்துக்கும் உருட்டிப் போட்டு படத்தையே காலி பண்ணும் இ(ம்)சையிலிருந்து
விலகியே நிற்கின்றது. அடுத்த படத்தில் லெனின் எம்.சிவம் சிரத்தையோடு
கவனிக்கவேண்டியது இது ஒன்றாகத் தான் இருக்கும்.
ஒவ்வொரு காட்சிகளிலும் நியாயம் கற்பிக்கும் திரைக்கதையோட்டத்தில் அந்த சுயநலத் தந்தையும், நண்பனைப் பறிகொடுத்த இளைஞனும் சார்ந்த பகுதி இன்னமும் தெளிவாக அமைக்கப்பட்டிருக்கலாமோ என்று எண்ணத் தோன்றியது. அந்த இளைஞன் இறுதியில் எடுக்கும் முடிவுக்கும் அது மேலும் வலுச்சேர்த்திருக்கும்.
தாயை இழந்து பூங்காவில் விளையாடப்போகும் சிறுமி, வக்கிரம் படைத்த வெள்ளைக்காரன் சார்ந்த காட்சிகளில் ஒளியோட்டத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். அந்தக் காட்சிகளில் தொலைக்காட்சிப் படம் பார்த்த உணர்வை இலேசாக எட்டவைக்கிறது.

A Gun and A Ring திரைப்படத்தின் மூளையாக இயங்கிருக்கிறது படத்தொகுப்பு.
1999 படத்தின் காட்சியமைப்பை எடுத்துக்கொண்டால் ஒவ்வொரு காட்சிகளையும் தனித்தனியாக எடுத்து அவற்றை முன் பின்னாகப் பொருத்தி அந்தத் தொழில் நுட்பத்தை முறையாகப் பயன்படுத்தியிருந்தனர்.
இந்தப் படத்தின் காட்சியமைப்பை எடுத்துக் கொண்டால் வெவ்வேறு கதைப்பின்னணியில் இயங்கும் திரைக்கதையில் மாறி மாறி அந்தந்தக் கதைகளின் சம்பவக் கோர்வைகளை சம தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ஆனால் அந்தக் கதைகளைப் பொருத்தும் சம்பவக் கோர்வை படம் முடியும் திசை நோக்கி நகரும் போதும் மெல்ல மெல்ல அவிழும் போது ஒவ்வொரு சம்பவங்களில் ஒளிந்திருக்கும் காட்சிகளை மீளக் கொணரும் போது முன்னர் பார்த்த காட்சிகளில் ஒளிந்திருக்கும் இரகசிய முடிச்சைக் காட்டும், அப்போது அந்தக் காட்சி இன்னொரு புதிய சாயத்தில் புலப்படும்.உண்மையில் இப்படியானதொரு சிந்தனையோட்டத்தில் படத்தொகுப்பில் ஒரு புதுமை பண்ணிக் கொணர்ந்த நமது தமிழ் சினிமாவில் இதுவரை பார்த்த அனுபவம் எனக்கில்லை. அந்த வகையில் இந்தப் படத்தின் முதுகெலும்பாக காட்சியமைப்பும், படத்தொகுப்பும் நமது சினிமாவை அடுத்த தளத்தில் நகர்த்துகின்றது என்பேன்.
சுமார் ஒரு லட்சம் டாலர்களுக்கு மேல் செலவு செய்து எடுக்கப்பட்டிருக்கிறது அந்தச் செலவின் தேவையைப் படத்தின் தொழில்நுட்பத் தரம் மெய்ப்பிக்கிறது. விஷ்ணு முரளி என்ற அந்த இளம் தயாரிப்பாளருக்கு சினிமா மீதான வேட்கை காரணமாக ஒரு படத்தையாவது தயாரிக்கவேண்டும் என்ற எண்ணம் கருப்பெற்றிருந்த நிலையில், லெனின் எம்.சிவம் அவர்களின் 1999 படத்தைப் பார்த்த பின்னர் இந்தப் படத்தில் முதலீடு செய்திருக்கின்றார். A Gun and A Ring படம் உலகத்தமிழரை எட்டிப் பிடிக்கவேண்டும், போட்ட முதலீடு விஷ்ணு முரளியின் கையில் கிட்டவேண்டும். அதன் மூலம் அவரும் அவரைப் போலவே இயங்கும் தயாரிப்பாளர்களுக்கும் இது போன்ற முயற்சிகளில் இறங்குவதற்கு அது ஒரு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். ஆனாலும் துணிச்சலோடு முதலீட்டைப் போட்டு நம்மவரின் இந்தப் படைப்பைக் கொண்டு வந்த அவருக்கு இந்த நேரத்தில் பாராட்டை வழங்குவது பொருத்தமாக அமையும்.
1999 படத்தின் காட்சியமைப்பை எடுத்துக்கொண்டால் ஒவ்வொரு காட்சிகளையும் தனித்தனியாக எடுத்து அவற்றை முன் பின்னாகப் பொருத்தி அந்தத் தொழில் நுட்பத்தை முறையாகப் பயன்படுத்தியிருந்தனர்.
இந்தப் படத்தின் காட்சியமைப்பை எடுத்துக் கொண்டால் வெவ்வேறு கதைப்பின்னணியில் இயங்கும் திரைக்கதையில் மாறி மாறி அந்தந்தக் கதைகளின் சம்பவக் கோர்வைகளை சம தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ஆனால் அந்தக் கதைகளைப் பொருத்தும் சம்பவக் கோர்வை படம் முடியும் திசை நோக்கி நகரும் போதும் மெல்ல மெல்ல அவிழும் போது ஒவ்வொரு சம்பவங்களில் ஒளிந்திருக்கும் காட்சிகளை மீளக் கொணரும் போது முன்னர் பார்த்த காட்சிகளில் ஒளிந்திருக்கும் இரகசிய முடிச்சைக் காட்டும், அப்போது அந்தக் காட்சி இன்னொரு புதிய சாயத்தில் புலப்படும்.உண்மையில் இப்படியானதொரு சிந்தனையோட்டத்தில் படத்தொகுப்பில் ஒரு புதுமை பண்ணிக் கொணர்ந்த நமது தமிழ் சினிமாவில் இதுவரை பார்த்த அனுபவம் எனக்கில்லை. அந்த வகையில் இந்தப் படத்தின் முதுகெலும்பாக காட்சியமைப்பும், படத்தொகுப்பும் நமது சினிமாவை அடுத்த தளத்தில் நகர்த்துகின்றது என்பேன்.
சுமார் ஒரு லட்சம் டாலர்களுக்கு மேல் செலவு செய்து எடுக்கப்பட்டிருக்கிறது அந்தச் செலவின் தேவையைப் படத்தின் தொழில்நுட்பத் தரம் மெய்ப்பிக்கிறது. விஷ்ணு முரளி என்ற அந்த இளம் தயாரிப்பாளருக்கு சினிமா மீதான வேட்கை காரணமாக ஒரு படத்தையாவது தயாரிக்கவேண்டும் என்ற எண்ணம் கருப்பெற்றிருந்த நிலையில், லெனின் எம்.சிவம் அவர்களின் 1999 படத்தைப் பார்த்த பின்னர் இந்தப் படத்தில் முதலீடு செய்திருக்கின்றார். A Gun and A Ring படம் உலகத்தமிழரை எட்டிப் பிடிக்கவேண்டும், போட்ட முதலீடு விஷ்ணு முரளியின் கையில் கிட்டவேண்டும். அதன் மூலம் அவரும் அவரைப் போலவே இயங்கும் தயாரிப்பாளர்களுக்கும் இது போன்ற முயற்சிகளில் இறங்குவதற்கு அது ஒரு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். ஆனாலும் துணிச்சலோடு முதலீட்டைப் போட்டு நம்மவரின் இந்தப் படைப்பைக் கொண்டு வந்த அவருக்கு இந்த நேரத்தில் பாராட்டை வழங்குவது பொருத்தமாக அமையும்.
இந்தப் படத்திற்கு உலகத் திரைப்பட விழா அரங்கங்களில் கிட்டிய அங்கீகாரம், லெனின் எம்.சிவம் குழுவினர் மீதான நம்பிக்கையை வலுப்படுத்துவதோடு நம்மவர் என்ற ரீதியில் பெருமையும் கொள்ள வைக்கின்றது.
A Gun and A Ring படத்துக்குக் கிட்டிய கெளரவங்களில் குறிப்பிடத்தகுந்தவை.
- Golden Goblet Award Nominee, Shanghai International Film Festival in June, 2013
- Official Selection, Montreal World Film Festival in August, 2013
- Official Selection, Louisville's International Festival of Film in October, 2013
- Official Selection, American CineRockom International Film Festival in October, 2013
- Best Film Award Nominee, Hamilton Film Festival in November, 2013
படத்தின் தொழில் நுட்பக் குழு
இயக்குனர் மற்றும் கதாசிரியர் - லெனின் எம்.சிவம்
தயாரிப்பாளர் - விஷ்ணு முரளி
இசையமைப்பு - பிரவீண் மணி
ஒளிப்பதிவு - சுரேஷ் ரோகின்
படத்தொகுப்பு - ப்ராஷ் லிங்கம், லெனின் எம்.சிவம்
யுத்தக்களங்களில் சுடுகுழல்கள் அணைந்திருக்கலாம், ஆனால் அவை நேரடியாகவும், உள ரீதியாகவும் ஏற்படுத்தி விட்ட வடுக்களைச் சுமந்து கொண்டுதான் இந்தத் தலைமுறை பயணப்படுகின்றது. இந்தப் படத்தில் சொன்ன ஆறு கதைகளைத் தாண்டி சொல்லப்படாத கதைகள் ஏராளம். அந்தக் கதைகளைச் சுமந்து திரிவோர் நம்மைச் சுற்றியே இருக்கிறார்கள். அந்தப் பதிவுகள் படமாக்கப்படும் போது நல்ல சினிமா மட்டுமல்ல போர் தின்ற சமூகத்தின் அவலத்தை உலக அரங்கில் கொண்டுவர ஏதுவாக இருக்கும். அதை லெனின் எம்.சிவம் குழுவினர் கச்சிதமாகச் செய்து காட்டிய அளவில், இதே தளத்தில் இயங்கும் படைப்பாளிகளும் கவனத்தில் கொள்ளவேண்டும். இன்னும் மிக முக்கியமாக, இந்தப் படத்தை நாம் எல்லோரும் பார்த்துக் கொண்டாடவேண்டிய படைப்பும் கூட.
இந்தத் திரைப்படம் வரும் நவம்பர் 30 மற்றும் டிசெம்பர் 1 ஆம் திகதிகளில் சிட்னியில் சிறப்புக் காட்சிகளாகக் கண்பிக்கப்படவிருக்கின்றது. சிட்னி வாழ் தமிழர்கள் இந்த முயற்சிக்குத் தம் ஆதரவை வழங்கிச் சிறப்பிக்க வேண்டுகிறேன்.
Wednesday, October 30, 2013
செல்போன் கணக்கு
"டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா மெல்பர்ன் மலர் போல் மெல்லிய மகளா"
பாடல் வந்த காலத்தில் நான் மெல்பர்னில் பல்கலைக்கழகப்படிப்பில் இருந்தேன்.
அப்போது தான் எனக்கும் ஒரு சொந்த செல்போன் வாய்த்தது. பல்கலைக்கழகத்தில்
என் சக நண்பன் ஆனந்த் விடாப்பிடியாக என்னை இழுத்துக் கொண்டு ஒரு செல்போன்
விற்பனை நிலையத்தில் என் பெயரில் ஒரு போனை வாங்க வைத்தான். அதுவரை எங்காவது
வீதியில் இருக்கும் பொதுத்தொலைபேசிக்கு
நாணயம் போட்டுப் பேசும் வழக்கம் தான் இருந்தது. எனக்கு முதலில் கிடைத்த
செல்போன் இன்று வைத்திருக்கும் iPhone 5S ஐ விட பல மடங்கு பாரமான
கிட்டத்தட்ட ஒரு கொள்ளிக்கட்டை அளவில் இருந்த நோக்கியா, கூடவே அதன் தலையில்
ஒரு நீட்டுக் கம்பி வேறு. அதையெல்லாம் நம்முடைய ஜீன்ஸில் வைத்தால் பிதுங்கி வெளியே தலையும், கொம்பும் தெரியும்.
90 களிலேயே செல்போன் வாங்கினாலும் அது ஒரு ஆடம்பரப் பொருளாகத் தான் காட்சிப்படுத்தப்படுத்த உதவியது. தீவிரமாகப் பாவிக்கத் தொடங்கியதென்னவோ 2000 இன் இறுதியில் தான். ஒரு காலத்தில் போனில் ஏன் காமெரா, இண்டர் நெட் இருக்க வேண்டும் என்று எதிர்ப்புக் குரல் கொடுத்த என்னையே மாற்றிவிட்டது தொழில் நுட்பம். இப்போதெல்லாம் தொலைபேசி அழைப்பை நாளொன்றுக்கு அதிகபட்சம் இரண்டோ மூன்றோ எடுத்தாலே அதிகம். இயக்குனர் சேரன் தன் படப்பிடிப்பு முடியும் வரை யாரும் செல்போன் பாவிக்கக்கூடாது என்றெல்லாம் கட்டளை போடுவாராம்.
"நான் செல்போன் பாவிப்பதில்லை" என்ற சுயவிளக்கம் சார்ந்த மிஷ்கினின் பேட்டியைப் படித்த போது அவர் போலவே செல்போனை தலையைச் சுத்தி மூன்று சுற்று சுற்றிவிட்டு எறிந்தால் என்ன என்றும் தோன்றும்.
Karthik Calling Karthik என்றொரு அட்டகாசமான மர்மப்படம் மூன்று வருடங்களுக்கு முன்னர் ஹிந்தியில் வந்திருந்தது. பர்ஹான் அக்தர் அதில் முக்கிய பாத்திரமேற்று நடித்திருந்தார். அந்தப் படத்தில் மனச்சிதைவு ஏற்பட்ட நாயகனுக்கும் தொலைபேசிக்குமிடையில் உளவியல் சார்ந்த முடிச்சு அழகாகக் காண்பிக்கப்பட்டிருக்கும்.பர்ஹான் அக்தர் நடிப்பில் பின்னியிருப்பார், படத்தின் திரைக்கதையும் விறுவிறுப்பாகச் செதுக்கப்பட்டிருக்கும்.
கடந்த வாரம் நம்முடைய அலுவலகத்திலிருந்து நான்கு பேர் வேலைத்திட்டமொன்றுக்காகப் பயணித்தோம். சில மணி நேரங்கள் கழிந்த நிலையில், நேரத்தைப் பார்ப்பதற்காக ஒவ்வொருவரும் செல்போனைத் தேடுகிறார்கள். என்னைத் தவிர யாருடைய கையிலும் கைக்கடிகாரம் இல்லை என்பதை அப்போது தான் கண்டேன். இன்று ஒரு செல்போனுக்குள் வானொலி, ஒளிப்பட, வீடியோ காமெரா என்று எல்லாவற்றையுமே நிரப்பிவிட்டது. போனின் அடிப்படை நோக்கத்திலிருந்து அதன் பயன்பாடும் மாறிவிட்டது.
இப்போது Viber போன்ற இணையத் தொடர்பு தொலைபேசி அழைப்புமுறை வந்துவிட்டதால் போன் கம்பனிக்காரனுக்கு வீணாக கட்டும் தொலைபேசிக்கட்டணத்தையும் மறுபரிசீலனை செய்ய வைத்துவிட்டது தொழில் நுட்பம். 15 வருடங்களுக்கு மேலாக Post paid என்னும் முறைமையின் கீழ் தொலைபேசி நிறுவனத்துடன் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கும் ஒப்பந்தந்தத்தை நேற்றோடு தலை முழுகிவிட்டு Pre-Paid யுகத்துக்குள் வந்தாச்சு. அதிலும் ஒரு வேடிக்கையான வேதனையை அனுபவிக்கவேண்டி நேர்ந்தது.
எனது செல்போன் பாவனை இலக்கத்தை புதிய தொலைபேசி நிறுவனத்துக்கு மாற்றிய பின்னர் முதல் வேலையாக இணைய வசதி இருக்கா என்று பார்த்தால் அவுட் என்று காட்டியது. அந்த நிறுவனத்துக்கு அழைத்தால் அம்மணி ஒருத்தி தேனொழுகப் பேசினார். என் பிரச்சனையைச் சொன்னால் "ஓ நம்ம கம்பனி இணைய வசதிக்கு முக்கியத்துவம் கொடுக்காது உங்களது iPhone 5S வேறு எனவே பேசாம iOS 7 ஐ போடுங்க" என்று பதில் வந்தது. கவுண்டர் குரலில் "பிச்சுப்புடுவேன் பிச்சு" என்று கத்தணும் போல இருந்தது. அடக்கிக் கொண்டு அம்மிணி ஐயோயெஸ் எல்லாம் போட்டாச்சு இந்த போன் வாங்கியே நாலு வாரம் என்றேன். அப்படியென்றால் சிம் கார்ட் ஐ கழற்றி விட்டு மீண்டும் iOS 7 ஐ போடுங்கள்" என்றாள். இது ஆவுறதில்லை என்று நான் மீண்டும் போராட அவளோ தனக்குத் தெரிந்த 64 கலைகளையும் செல்போன் செட்டிங்ஸ் இல் பிரயோகிக்கச் சொன்னாள். அரைமணி நேரம் கடந்து பொறுமை டாட்டா காட்ட நானும் நன்றி தாயி உன் சேவைக்கு என்று கட் பண்ணிவிட்டு மீண்டும் அழைத்தேன், வேறு யாராவது புத்திசாலி அகப்படும் என்று. இப்படிப் பலமுறை பல காரியங்களுக்குச் செய்து வெற்றியும் கண்டிருக்கிறேன் சில தடவை அதே கஷ்டமர் சேர்விஸ்காரரிடம் அகப்படுவதுமுண்டு.
"அதான் சொன்னோம்ல" என்ற தோரணையில் மீண்டும் அதே குரல் வருவதுண்டு.
என் கஷ்ட காலம் மீண்டும் இன்னொரு அம்மிணி மீண்டும் 64 கலை. பேசாமல் போனை கடாசிவிடுவோமா போனை என்று நினைத்தவாறே setting சென்று mobile data என்று பச்சையாகச் சிரித்த பொத்தானை அழுத்தி மீண்டும் அழுத்தினால் அட இணையத்தில் கூகுளான் சிரிக்கிறார் சிரிக்கிறார் சிரித்துக் கொண்டே இருக்கிறார்.
Cisco networking முதல் வகுப்பில் பாடமெடுத்து விட்டு செயன்முறைக்கு ஆசிரியர் பணிக்கிறார். ஒவ்வொருத்தரும் Router ஐ நீண்ட நேரமாகக் கிண்டிக் கொண்டிருக்கிறோம்.
"அதிருக்கட்டும் முதலில் ஸ்விட்ச் ஐ போட்டீர்களா" என்று கேட்டார் ஆசிரியர்.

Tuesday, October 22, 2013
இடப்பெயர்வுகள் முற்றுப்புள்ளியல்ல,
என் பெற்றோர் வேலை நிமித்தம் சில ஆண்டுகள் மலையகத்தில் தங்கி ஆசிரியர்களாகப் பணி புரிந்து நம் சொந்த ஊர் திரும்பிய காலம் என்பது மங்கலான பால்ய நினைவுகளிலேயே தங்கிவிட்டது. 83 ஆம் ஆண்டு கொழும்பிலே இனக்கலவரம் ஏற்பட்ட போது தம் சொந்த வீடுகளில் நிலை கொண்டிருந்தோரின் கண்ணுக்கு முன்னாலேயே அவர்களின் சொத்துக்களைச் சூறையாடிப் பின்னர் அங்கேயே அகோரமாகக் கொன்று குவிக்கப்பட்ட போது எஞ்சித் தப்பியோர்களில் எங்கள் சித்தி குடும்பமும் ஒன்று. அந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்குப் போவதென்றால் ஏதோ சீமைக்குப் போகும் உற்சாகம். யாழ்தேவி ரயிலில் ஆறு, அருவி எல்லாம் கண்டுகொண்டு போகலாம், கொழும்பிலே பென்னாம்பெரிய கட்டிடங்களைக் காணலாம் என்ற உற்சாகம் தொற்றிக்கொள்ளும் சின்ன வயதுக் காலம் அது. சித்தி வீட்டுக்கார் அப்போது யாழ்ப்பாணத்துக்கு வந்தது ஒரு புதினமாக இருந்தது. அவர்களைப் போலவே குடும்பம் குடும்பமாக நிறையப் பேர் வந்துகொண்டிருந்தார்கள். செம்பாட்டு மண் அப்பிய காற்சட்டையோடு திரியும் எமக்கு, ஸ்ரைலாக உடுப்புப் போட்டுக்கொண்டு சின்னப்பெடியளும் இங்கிலீஷ் கதைக்கிறதை ஆச்சரியமாகப் பார்ப்பதுண்டு. எங்கட பள்ளிக்கூடத்துக்கும் சில பெடியள் படிக்க வந்தவை. இனிக் கொழும்பு வேண்டாம், யாழ்ப்பாணத்திலேயே இருப்பம் என்று நினைத்த சித்தி குடும்பமும், வீடுகட்ட அறுத்த சீமெந்துக் கல் ஈரம் காயும் முன்பே வெளிக்கிட்டு விட்டார்கள். அப்படித்தான் மீண்டும் கொஞ்சம் பயம் தெளிந்ததும் கொழும்புக்குக் கிளம்பிவிட்டார்கள் அயலில் இருந்த ஒரு சில குடும்பமும். அப்பவும் எனக்கு இந்த இடப்பெயர்வின் தாக்கம் அதிகம் தெரியவில்லை.
1987 ஆம் ஆண்டு ஒபரேசன் லிபரேசன் என்று பெயரிட்டு அப்போதைய இலங்கை ராசா ஜெயவர்த்தனா தீவிர இராணுவ நடவடிக்கையை மேற்கொண்ட நேரம் அது. "பலாலி றோட்டால ஆமிக்காறன் வாறான் ஓடுங்கோ ஓடுங்கோ என்று" அம்மம்மா வீட்டில் இருந்த எல்லாரையும் எச்சரித்து விட்டு சுதுமலைப் பக்கமாக ஓடத்தொடங்கினார் தருமர் மாமா. அந்த நேரம் இப்படி அடிக்கடி ஓட்டப்பந்தயம் நடக்கும். வடமாராட்சியில் இருந்து அதைத் தாண்டியும் மக்கள் இடம்பெயரத் தொடங்கினர். ஆனால் எங்கட ஊருக்கு ஆமிக்காறரின் கால் பதியும் முன்பே, நெல்லியடியில் கப்டன் மில்லரின் முதலாவது கரும்புலித் தாக்குதலோடு அந்த முழு இராணுவ நடவடிக்கையும் முடங்கிப் போனது.
ஆனால் சில மாதங்களில் இந்திய இராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்குமிடையில் போர் மூண்ட போதுதான் எங்கள் வாழ்வில் இடப்பெயர்வின் வலியை நேரே உணர முடிந்தது. வீட்டில் போட்டது போட்டபடி கிடக்க, எல்லோரும் அண்ணா தொழிலகம் என்ற உள்ளூரில் இயங்கிய தொழிற்சாலையில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்தோம். எங்கள் ஊரிலேயே ஒரே ஒரு மாடிக்கட்டிடம் அதுதான். ஆமிக்காறன் அடிக்கிற ஷெல் அந்தக் கட்டிடத்தைப் பாதிக்காது என்ற மூட நம்பிக்கை வேறு. அந்தத் தொழிற்சாலைக்குள்ளேயே நூற்றுக்கணக்கில் குடும்பங்கள் அடைபட்டுக் கிடக்க, இருப்பில் இருந்த அரிசி தான் கஞ்சி போட்டது. ஒரு சுபயோக சுப தினத்தில் ஆமிக்காறர் அடிச்ச ஷெல் நாங்கள் இருந்த கட்டிடத்தையும் பதம் பார்க்க, ஒரு சிலர் காயத்தோடு தப்ப, மிச்சப்பேர் இனி ஆண்டவன் சந்நிதி தான் ஒரே வழி என்று மடத்துவாசல் பிள்ளையாரடி நோக்கி ஓடினர், நாங்கள் உட்பட. தற்காலிக முகாம்களில் இருந்து வீடு பார்க்கப் போவோர் பெரும்பாலும் திரும்பி வரார். அவர்களைத் தேடிச் சென்றவர்கள் பிணத்தோடு வருவர். கோயிலுக்குப் பக்கத்தில் உள்ள நெல் உமி எரிக்கும் வளவுக்குள் எரித்து விட்டு குளிப்பதோடு சரி. சிட்னியில் இருக்கும் ஒரு நண்பரின் வாழ்க்கையில் நடந்தது இது. வல்வெட்டித்துறையில் வீடு பார்க்கச் சென்றவர், தனக்கு முன்பே வீடு பார்க்க வந்த அங்கே தனது தமையன் வீட்டு முற்றத்தில் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் காண்கிறார். தூரத்தில் ஆமிக்காறன் வரும் சல சலப்புக் கேட்கிறது. உடனே தன்னுடைய தமையனின் உடம்பில் வழிந்த இரத்ததை உடம்பெல்லாம் தடவிச் செத்தது மாதிரிக் கிடந்து தப்பித்தாராம். இப்படி நிறைய இடப்பெயர்வுக் கதைகள்.
இந்திய இராணுவ முற்றுகைக்குப் பின்னர் பல இடப்பெயர்வுகளை எங்கட சனம் சந்தித்து விட்டது.
1990 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தெல்லிப்பழை தாண்டி ஒரு பெரும்பாகமே காடு வளர்த்து விட்ட பூமியாகிவிட்டது. பலாலியில் இருந்து இலங்கை இராணுவத்தின் வலிகாமம் மீதான முற்றுகையில் இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் தான் அந்தப் பகுதியெல்லாம் கொஞ்சமாக மெல்லத் திறந்து விடப்பட்டது. வீடு எங்கே வீதி எங்கே என்றே தெரியாத அளவுக்கு அடர்ந்த காட்டுப்பகுதியாக அந்த இருபது வருடங்கள் மாற்றிவிட்டிருந்தது இந்த ஊர்களை. இந்த ஊர்களை இருபது வருடங்களுக்கு முன்னர் பார்க்கச் சென்றவர்களில் பலரும் இன்னும் திரும்பவில்லை.
வீடும் காணியும் சடப்பொருட்கள் என்றாலும் அவற்றை உதறித்தள்ளிவிட்டு எங்கட சனத்தால் வரமுடியவில்லை. அந்த வீட்டு வளவில் கொண்டாடிய சொந்தங்களும், உறவுகளும் செத்து மடிந்தாலும் கூட.
தொண்ணூறுகளுக்குப் பின்னரான தீவிர யுத்தத்தில் இப்போது யார் எந்த ஊரில் இருக்கிறார் என்பதை விட நான் சொந்த ஊரில் இருக்கிறேனா என்பதே பெரிய கேள்வி. தொடர்ந்த இடப்பெயர்வுகள் பலரின் ஊரையே மாற்றி வேறோர் ஊரில் சொந்தம் கொண்டாட வைத்து விட்டது. ஆசையாக வீட்டைப் பார்க்கப் போனவர் மாண்டது போக, இன்று அநாதைகளாக இருக்கும் பல வீடுகளுக்கும் சொந்தம் கொண்டாட யாருமே இல்லை. வெளிநாட்டுக்குப் போயிருக்கலாம் அல்லது குடும்பமாகவே செத்துப் போயிருக்கலாம். தெல்லிப்பழை தாண்டி இருபக்கமும் இடிபாடுடைய வீடுகளைப் பார்க்கும் போது, தலை விரி கோலமாக நிற்கும் வாழ்வைத் தொலைத்தவள் நிலையில் தான் இருக்கும்.
ஊருக்கு ஒரு இடப்பெயர்வு என்ற காலம் போய், முழு யாழ்ப்பாணமே இடம்பெயர்ந்த 1995 கள் கடந்து, 2009 ஆம் ஆண்டில் இறுதிக்கட்ட யுத்தம் நடந்து கொண்டிருக்கும் போது மணிக்கொரு ஊராய் அலைந்து உயிரைப் பாதுகாத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது வானொலிக் கலையகத்தில் இருந்து தாயக நடப்புகளை எடுத்து வரும்போது முதல் நாள் பேசியவர் காணாமல் போயிருப்பார், பின்னர் அவர் இறந்த செய்தியை இன்னொருவர் எடுத்து வருவார். உடமைகளோடு இடம்பெயர்ந்த காலம் போய், ஒவ்வொரு ஷெல் அடிக்கும், விமானக் குண்டுவீச்சுக்கும் காணும் பக்கமெல்லாம் ஓடித் தப்ப முடிந்தோர் தப்பினார்கள். அந்த நேரத்தில் இடப்பெயர்வு என்பது நிமிடத்துளிக் கணக்கிலும் மாறிக் கொண்டிருந்தது.
இந்த கால் நூற்றாண்டு கடந்த யுத்தத்தில் இடப்பெயர்வுகளின் வடிவங்கள் வேறு, ஆனால் வலி ஒன்று தான்.
" சிறு நண்டு கடலோரம் படம் ஒன்று கீறும் சிலவேளை அதை வந்து அலை கொண்டு போகும்" -மகாகவி உருத்திரமூர்த்தி
Thursday, September 19, 2013
கதிர்காமக் கந்தனிடம் போன கதை
இறவாமற் பிறவாமல் எனையாள் சற்குருவாகி
பிறவாகித் திறமான பெருவாழ்வைத் தருவாயே
குறமாதைப் புணர்வோனே! குகனே! சொற் குமரசா!
கறையானைக் கிளையோனே! கதிர்காமப் பெருமாளே!
குறமாதைப் புணர்வோனே! குகனே! சொற் குமரசா!
கறையானைக் கிளையோனே! கதிர்காமப் பெருமாளே!
என்று அருணகிரி
நாதரால் திருப்புகழில் சிறப்பிக்கப்பட்ட தலமாக விளங்குகின்றது கதிர்காமம்.
என் நினைவு தெரிய நான் போனதில்லை. என் சின்ன வயசியில் எப்போதாவது கூட்டி
வந்திருக்கலாம் என்று அப்பா சொன்னார். என் அப்பாவும் அம்மாவும் மலையகத்தில்
ஹட்டன் என்ற இடத்தில் ஆசிரியர்களாக இருந்ததால் அங்கிருந்து பஸ் மூலம்
கதிர்காமத்துக்கு வந்திருக்கிறார்களாம்.
கடந்த
வருடம் கதிர்காமத்துக்குப் போயிருக்க வேண்டியது, கொழும்பிலிருந்து ஆறு மணி
நேரம் வரை பயண நேரம் பிடிக்கும் இந்தப் பயணத்துக்குத் தனியே செல்லவேண்டாம்
என்று வீட்டாரின் எச்சரிக்கை, அதையும் மீறி ஏதாவது பொது பஸ் சேவையில்
கூட்டத்தோடு கூட்டமாகப் போகலாம் என்று நினைத்து பொதுப் பேரூந்து நிலையம்
சென்று விசாரித்தால் கதிர்காமம் போகும் பாதையில் கடும் மழை காரணமாக
மண்சரிவும் வெள்ளப்பெருக்கும் ஆதலால் பஸ் ஓட்டம் இல்லை என்றார்கள். எனவே
கடந்த ஆண்டு கதிர்காமம் போகும் கொடுப்பினை இல்லை அடுத்த முறையாவது
கண்டிப்பாக முருகனிடம் செல்லவேண்டும் என்று மனதில் உறுதியெடுத்துக்
கொண்டேன்.
ஈழத்தில்
பிராமணர் அல்லாத மரபில் வந்தோர் பூசை செய்யும் ஆலயங்களில் வடக்கே
யாழ்ப்பாணத்தில் உள்ள செல்லச்சந்நிதி முருகன் ஆலயமும் தெற்கே கதிர்காமமும்
விளங்குகின்றது. மீன்பிடித் தொழிலைச் செய்த மருதர் கதிர்காமர் எனும் முருக
பக்தரின் வழியில் வாயில் வெள்ளைத் துணியால் கட்டிக் கொண்டே பூசை செய்யும்
பூசகரை அங்கே "கப்பூகர்" என அழைப்பர். இதே போல வேடுவ மரபில் வந்தோர் பூசை
செய்யும் ஆலயமாக விளங்கும் கதிர்காமத்திலும் தம் வாயைத் துணியால் கட்டிய
பின்னர் பூசை செய்யும் பூசகரை கப்புறாளை என அழைப்பர். செல்லச்சந்நிதி முருகனைச் சந்தித்த பதிவு இங்கே.
இந்த
ஆண்டு இலங்கைப் பயணத்தில் எங்களூர் மடத்துவாசல் பிள்ளையார் கோயில்
வருடாந்தத் திருவிழா எல்லாம் கண்டு முடித்து அடுத்து கதிர்காமம் தான் என்று
நினைத்தபோது ஊரை விட்டுக் கிளம்ப விருப்பமில்லாத அப்பாவிடம் மெல்லக் கதையை
விட்டேன். "அப்பா கதிர்காமம் போகப்போறன் வாறீங்களா" என் அப்பாவோ கடும்
முருக பக்தர் இந்த வாய்ப்புக்காகக் காத்திருந்தது போல "ஓமோம் வாறன்" என்று
சொல்ல அம்மாவும் கூட வர, லண்டனில் இருந்து வந்த அண்ணரும், சொந்தக்காரருமாக
ஆறு பேரைச் சேர்த்தாகிவிட்டது. எங்களூரவர் ஒருவர் கொழும்பில் பிரயாணச் சேவை
செய்பவர். அவரிடமேயே இந்தப் பயண ஏற்பாட்டைச் செய்து புது வாகனத்தில்
கதிர்காமம் நோக்கி அதிகாலை ஐந்தரை மணிக்குப் பறக்க ஆரம்பித்தோம்.
கொழும்பிலிருந்து
வெளியூருக்கோ அல்லது வெளியூரில் இருந்து கொழும்புக்கு வருவதாயின்
நடுச்சாமம் அல்லது அதிகாலைப் பயணமே உகந்தது. காலை ஆறரை மணி தாண்டினால் காலி
வீதியில் வாகனப் பொருட்காட்சி தான். எனவே எங்கள் பயணத்தில் சிரமமில்லாமல்
புதிதாக அமைக்கப்பட்ட அதிவேகப் பாதையில் வாகனம் டயர் பதித்து
ஓடத்தொடங்கியது. இந்த அதிவேகப் பாதை இலங்கை மக்களுக்குப் புதுசு என்பதால்
அடிக்கடி வாகன விபத்துகளும் நடக்குமாம், திரும்பி வரும்போது
எதிர்த்திசையில் ஒரு வாகனத்தின் சக்கரம் உருண்டோடி உலாவியதையும் கண்டேன்.
அதிவேகப்பாதை
அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து கதிர்காமத்துக்கான பயண நேரமும் கொஞ்சம்
சேமிக்கப்பட்டுவிட்டது என்றாலும் மாத்தறை என்ற பெரு நகரத்தைத் தொட்டபோது
மட்டுப்படுத்தப்பட்ட வேகமும், காலை நேர வாகன நெரிசலும் சேர்ந்து கொண்டது. இரண்டரை மணி நேர ஓட்டத்துக்குப் பிறகு எங்காவது இளைப்பாறிச் செல்லலாம் என்றெண்ணி கண்ணில்பட்ட ஒரு விசாலமான தேநீர்ச்சாலைக்குள் போனோம். ஒரு வெறுந்தேத்தண்ணி சீனி போட்டது குடித்துக் களையாறிவிட்டுத் தொடர்ந்தோம். சாலையின் இருமருங்கும் கைத்தொழில் உற்பத்திகளைக் கடை விரித்திருந்தார்கள். மலைத்தேனில் இருந்து, தயிர்ச்சட்டி, பனையோலை, தென்னோலையால் செய்த கைவினைப் பொருட்களை மேசையில் பரப்பி வைத்து விற்றுக் கொண்டிருந்தார்கள். இயற்கை அன்னையின் கருணையெல்லாம் கொட்டித் தீர்த்துப் பாயும் ஆறுகளும், சோலைகளுமாக எழில் மிகுந்த கிராமிய வனப்பைக் கண்டுகளித்துக் கொண்டே பயணப்படலாம். கதிர்காமத்துக்கு வந்து சேர்ந்ததை அண்மித்த தங்குமிடங்களின் பதாதைகள் விளம்பரப்படுத்தின. மணி காலை ஒன்பதே கால் ஆகியிருந்தது.
"முதலில பிள்ளையாரைக் கண்டுவிட்டுத்தான் முருகனிட்டைப் போகோணும்" அதுதான் முறை என்று பின் இருக்கையில் இருந்த அப்பா குரல் கொடுத்தார். வாகனம் செல்லக்கதிர்காமம் நோக்கியப் பயணித்தது. செல்லக்கதிர்காமத்தில் தான் முருகனின் சகோதரம் பிள்ளையார் வீற்றிருக்கிறார். நாங்கள் சென்றபோது குடமுழுக்குப் பணிகள் செய்யப்பட்டுக் கொண்டிருந்தன. வழியெங்கும் கற்பூரச் சரை, பழம், தேங்காய் கொண்ட பனையோலைப் பெட்டிகளை விற்றுத் தீர்த்துக்கொண்டிருந்தார்கள். அதில் ஒரு பெட்டியை வாங்கிக் கொண்டு கோயிலை நோக்கிப் போனோம்.
சிற்றோடையில் அமைந்திருந்த குன்றிலே கோயில் எழுப்பப்பட்டிருக்கிறது. மிக எளிமையாகவும், கூட்டமில்லாது அமைதியாகவும் பிள்ளையார் அமைந்திருக்கிறார். கோயிலை ஒரு சுற்று சுற்றிவிட்டு, பக்கத்தில் இருந்த படிக்காட்டால் ஏறி மேலே சென்றால் அங்கே சிறு முருகன் ஆலயம் இருந்தது.
"இதெல்லாம் ஒருகாலத்தில் எந்த விதப் பகட்டும் இல்லாமல் எளிமையா, எங்கடை கோயிலா இருந்தது, எல்லாத்தையும் எடுத்துப் போட்டாங்கள்" என்று அப்பா ஆற்றாமையால் முணுமுணுத்தார்.
அங்கிருந்து மெல்ல நகர்ந்து, கதிர்காமக் கந்தன் ஆலயம் நோக்கி விரைந்தோம். காலை பத்துமணிக்குப் பூசை என்று சொல்லியிருந்தார்கள். கதிர்காமம் ஆலயத்தில் மாலைப்பூசை தான் விசேஷமாக இருக்குமாம். பக்தர்கள் பெரும்பாலும் இரண்டு நாள் தங்கியிருந்து கதிர்காம ஆலயத்தின் மாலைப்பூசை கண்டு மறுநாள் காலை வெய்யில் அடிக்கமுன்பே கதிரைமலைக்குப் படியேறிச் சென்று அங்கும் வழிபட்டுத் திரும்புவர். கதிரைமலைக்குப் படியேறிப் போவதே நல்ல அனுபவம், மலைக்குத் துரித கதியில் போகும் வாகனத்தின் ஓட்டம் மரண ஓட்டமாக இருக்கும் என்று எச்சரித்திருந்தார்கள். இம்முஐ எனக்குக் கதிரைமலைக்கு ஏறிப் போக வாய்ப்பில்லை என்று அங்கே போய் மலையடிவாரத்திலேயே கற்பூரம் எரித்து, தேங்காய் உடைத்துவிட்டுத் திரும்பிவிட்டோம். இன்னொரு முறை கதிர்காமத்துக்கு வந்தால் இரண்டு நாள் பயணமாக அமைக்கவேண்டும் என்று மனதில் நினைத்துக்கொண்டேன். முன்னேற்பாடாக அங்கே உள்ள Mandararosen http://www.mandararosen.com/ என்ற தங்குமிடத்தை கூட வந்த உறவினர் சிபாரிசு செய்ததால், கோயில் தரிசனம் முடிந்து அங்கு மதிய உணவை எடுத்தோம். தங்குமிடத்தைச் சுற்றிப்பார்க்கவும் வாய்ப்பாக இருந்தது. இது நல்ல தேர்வு அடுத்த முறை கண்டிப்பாக இங்குதான் தங்க வேண்டு.
கதிர்காமம் கோயிலை நினைக்கும் போது மனக்கண்ணில் முதலில் வருவது அந்தக் கோயிலைச் சுற்றிப் பாயும் தீர்த்தம் மாணிக்க கங்கை. மாணிக்க கங்கை எப்படியிருக்கும், இந்தியாவில் இருக்கும் கங்கை அளவுக்குப் பெரிசாக இருக்குமோ என்றெல்லாம் மனதில் ஆயிரம் கேள்விகள். கொத்தமங்கலம் சுப்பு எழுதிய "தில்லானா மோகனாம்பாள்" நாவலின் இறுதியில் நாட்டியமாது மோகனாம்பாள், அவளின் கணவர் நாதஸ்வரக்கலைஞர் சண்முகசுந்தரமும் திருமணம் முடித்து இலங்கை வந்து கதிர்காமத்தின் மாணிக்ககங்கையில் நீராடுவதாகத் தான் கதை முடிகின்றதாம். செங்கை ஆழியான் எழுதிய ஆச்சி பயணம் போகிறாள் நாவலிலும் யாழ்ப்பாணத்தின் நாகரிகச் சுவடுபடாத கிராமத்து ஆச்சி முதன்முதலாக கோச்சி ரயிலில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படித்த தன் பேரன், பேத்தியுடன் கதிர்காமம் காணப் போன நகைச்சுவையைப் படித்துப் படித்துச் சிரித்ததுண்டு. வாகனத்தை வாகாக ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு கோயிலை நோக்கி நடந்தோம். தூரத்தில் கோயில் தெரிந்தது, அதனை நோக்கிப் போடப்பட்ட ஒரு சீமெந்துப்பாலத்தில் நடந்து போகும் போது கீழே காட்டி "இதுதான் மாணிக்க கங்கை" என்று கூடவந்த உறவினர் கையைக் காட்டினார். மிகவும் ஏழ்மை படிந்து அழுக்கு ஆறாக ஓடிக்கொண்டிருந்தது. அங்கே சிலர் குளித்துக் கொண்டிருந்தனர். "இந்த ஆறு அந்த நாளையிலை இப்பிடி எல்லாம் இல்லை, வாற சனம் எல்லாம் மாணிக்க கங்கையில் குளித்து அந்த ஈரத்தோட கதிர்காமக் கந்தனிட்ட்டைப் போவினம்" என்று அப்பா தொடங்கினார்.
ஆலயத்தின் முன் வளைவில் ஓம் சரவண பவ என்ற பதாதகை இருந்ததாம். அதையும் தூக்கிவிட்டார்களாம். கோயிலை அண்மிக்கவும் ஆலயத்தின் பூசைக்கான மணியோசை கேட்கவும் சரியாக இருந்தது. சின்னஞ்சிறிய கோயில் தான். பரிவார மூர்த்திகளுக்கான பூசைகள் நடக்கும் போது கயிற்றால் கட்டி பக்தர்களை கடவுளுக்கு அண்மையில் வரவிடாமல் பார்த்துக் கொண்டார்கள். பெரும் புள்ளிகள் விதிவிலக்கு.
கதிர்காம ஆலயத்தின் மூல விக்கிரகம் யார் கண்ணிலும் படாமல் பெட்டியில் இருக்கிறது. கர்ப்பக்கிருகத்துள் செல்வதற்கு பூசகருக்கு மட்டுமே வாய்ப்பு. பக்தர்களை ஒழுங்குபடுத்துவதில் இருந்து கேட்கும் கேள்விக்கெல்லாம் சிங்களமே பதிலாக வந்தது. தமிழ்க்கடவுள் முருகனையும் சிங்களவன் ஆக்கிவிட்டார்களே என்று அந்தச் சூழலில் இருக்கும் போது மனதுக்குள் வேதனை வருவது தவிர்க்க முடியாது. பின்னால் இருக்கும் அரசமரமும், புனித கம்பிவேலிகளுமாக அவர் முழுபெளத்தராக மாறி முழுசாக மாறிவிட்டிருந்தார்.
யுத்த காலத்துக்கு முந்தி எல்லாம் இலங்கையின் தலைப்பகுதி யாழ்ப்பாணத்தில் இருந்து கீழ்ப்பகுதியில் இருக்கும் கதிர்காமக் கந்தனைத் தரிசிக்க, காடு, மலை, கல்லு, முள்ளு எல்லாம் பட்டு நாட்கணக்கிலும், மாதக்கணக்கிலுமாகப் பக்தர்கள் படையெடுப்பதுண்டாம். குறிப்பாக கதிர்காமக் கந்தன் உற்சவ காலத்தில் பக்திப் பரவசத்துடன் பாடல்களைப் பாடிக்கொண்டே செல்லும் முருகபக்தர்களை வரவேற்று தண்ணீர்ப்பந்தல்களும். அன்னதானச் சாலைகளும் அமைக்கப்பட்டிருக்குமாம். பல ஆண்டுகளுக்குப் பின்னர் அந்தக் கலாசாரம் மீண்டும் சமீப வருடமாக நிகழ்வதாக அறிந்தோம்.
கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்குப் பின்னர் வந்ததால் அப்பாவின் முகத்தில் பேயறைந்தது போல இருந்தது. கதிர்காமக் கோயிலின் தமிழ்ச்சூழலை ஒருவழி பண்ணிவிட்டதை செய்தி ஊடகங்களில் கேட்டு வந்திருந்தாலும், முன்னர் பார்த்த ஆலயச்சூழலை அவர் மனது ஒப்பிட்டுப்பார்த்து நொந்துகொண்டதை உணர்ந்து கொண்டேன். பிரேமதாஸ ஆட்சிக்காலத்தில் இந்தப் பகுதியைப் புனிதப் பிரதேசமாக்கி, ஆக்கிரமிப்பை அகற்றுகிறேன் பேர்வழி என்று சுற்றாடலில் இருந்த தமிழ்க்கடைகளை எல்லாம் அகற்றிவிட்டார்களாம். "அந்த நாளையில கோயிலுக்கு கிட்ட வரும்போதே வல்வெட்டித்துறையாரின் கடை வரவேற்கும்" என்று அப்பா மீண்டும் அசைபோட்டார்.
பூசை முடிந்ததும் ஆலயத்தினுள் போக நம் போன்ற சாதாரணர்களுக்கும் வழி விடப்படுகிறது. அந்தக் கூட்ட நெரிசலில் ஒரு இரண்டு நிமிடம் அங்கே நின்றாலே பெருமை தான். கிடைத்த அவகாசத்தில் நான் கொண்டு சென்ற பிரார்த்தனைகளை கதிர்காமக் கந்தனிடம் ஒப்புவித்தேன். கூட்டமே என்னை நகர்த்தி வெளித்தள்ள, வாசலில் பிரசாதமாக கறிச்சோறு ஒரு கவளம் கிட்டியது. அதை வாங்கி ருசி பார்த்துக் கொண்டே ஆலயத்தின் வெளிப்பிரகாரத்தைச் சுற்றினோம். சுற்றுப்பிரகாரத்தில் இருந்த மதுரை வீரன், வீரபத்திரன் கோயில் போன்றவை கதிர்காமம் போன்ற ஆலயத்திலேயே காணக்கிடைப்பவை. யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் இல்லை. பிரிட்டிஷார் ஆட்சியில் இந்தியாவில் இருந்து வந்த உறவுகளால் இந்தத் தனித்துவமான தெய்வ வழிபாடும் கூட வந்திருக்கலாம்.
கோயிலுக்குப் பக்கமாக அன்னதான மடமும் இன்னொரு சிறு கோயிலும் இருக்கின்றது. அது முழுமையான தமிழ்க்கோயிலாக இருந்தது. அங்குள்ள மடமும் தமிழரால் நிர்வகிக்கப்படுபவை. அந்தச் சூழல் கொஞ்சம் தெம்பைக் கொடுத்தது. ஆலய தரிசனம் முடிந்து சுள்ளென்ற வெயில் பாதங்களைப் பதம் பார்க்க, மீண்டும் கதிர்காமக் கந்தனின் மூலஸ்தானம் நோக்கிக் கைகூப்பித் தொழுதுவிட்டு சுற்றவுள்ள தனித்தனிச் சிறு ஆலயங்கள் ஒவ்வொன்றுக்கும் போனோம்.
அங்கே பூசகர்களாக நம்மவர்களே இருப்பது தெரிந்தது.
கதிர்காமக் கோயிலை அண்டி உள்ள முஸ்லீம் பள்ளிவாசலுக்கும் போனோம். அங்கே இருந்த குரு நம்மைப் பணிய இருக்க வைத்து விசேட பிரார்த்தனை ஒன்றை குர் ஆன் வாசகங்களில் இருந்து பகிர்ந்தார்.
பள்ளிவாசலில் அதிசயமாக வளரும் இரட்டைக்கிளைத் தென்னைமரம்.
கதிர்காம ஆலயத்தைச் சூழவுள்ள கடைகளில் மஸ்கெட் போன்ற தின்பண்டங்களைச் சுடச்சுட விற்கும் கடை ஒன்றிலிருந்து இருந்து பொட்டலங்களைக் கட்டிக் கொண்டோம்.
கதிர்காமம் கோயிலுக்கு வரவேண்டும் என்ற பிரார்த்தனையை நிறைவேற்றிய திருப்தி மட்டும் மனதில் இருந்தது. எங்கள் அப்பாவின் சந்ததியுடன் "இப்படியெல்லாம் கதிர்காமம் இருந்ததாமே" என்ற செவிவழிச் செய்தியும் கூட மறந்து போய்விடுமோ. இருந்த இடங்கள் மட்டுமல்ல மட்டுமல்ல நினைவுகளின் சுவடுகளும் தொலைந்து போவதும் பெருங்கொடுமைதான்.