அவுஸ்திரேலியாவுக்கு 18 வருடங்களுக்கு முன்னர் உயர்கல்விக்காக விமானம் ஏறும் போது மறக்காமல் கே.எஸ்.பாலச்சந்திரன் அண்ணரின் நாடகங்கள் தாங்கிய ஒலிப்பேழைகளை என் பயணப்பொதிக்குள் வைத்துவிட்டேன். யாரையும் தெரியாத அந்நிய தேசத்தில் என்னோடு கதைக்கவும் சிரிக்கவும் இந்த நாடகங்கள் தான் துணை நிற்கும் என்ற என் ஆரூடம் பொய்க்கவில்லை. எனக்கான உற்ற துணையாக 95 ஆம் ஆண்டுகளில் இந்த நாடகப் பேழைகளே என்னை ஏந்தின.
கடந்த எட்டு வருடங்களுக்கு முந்திய வலைப்பதிவு அனுபவங்களில் ஈழத்து மொழி வழக்கில் எழுதப்போகும்போதெல்லாம் கே. எஸ். பாலச்சந்திரன் அண்ணன் தான் மூளைக்குள் நின்று என் எழுத்தை இயக்குமாற்போல உணர்வேன். என்னுடைய ஆகக்கூடிய பகிர்வுகளும் அவரை வைத்துத்தான் எழுதினேன்.
தொலைபேசி வழியாக நெருங்கும் போது இடைவெளி இன்னும் குறைந்தது. வலையுலக வாழ்வு தவிர்ந்து குடும்ப வாழ்வு வரை மனம் விட்டுப் பேச எனக்கு அவர் வாய்த்தார். ஒருமுறை கடும் சுகவீனமுற்று
அவர் மருத்துவமனையில் இருந்தபோது நான் கவலையோடு அவரின் தொலைபேசி பதிலுரைக் கருவியில் நான் பகிர்ந்ததைக் கேட்டு அவர் மருத்துவனையில் இருந்து திரும்பியதும் என்னிடம் நெகிழ்வாகப் பேசியது இன்னும் என் நினைப்பில் இருக்கு.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் தான் கடைசியாகப் பேசியது. "ஓ தம்பி பிரபா உங்கட குரலைக் கேக்கேக்கை எவ்வளவு சந்தோசமா இருக்கு" என்று அவர் பேசப் பேச எனக்குக் கண்ணில் அப்போது நீர் கட்டியது. நிறையப் பேசாவிட்டாலும் நிறைவாகப் பேசினோம்.
இன்று காலை சற்று முன் நண்பன் மயூரன் "பாலச்சந்திரன் அண்ணை இறந்து விட்டார்" என்ற போது எனக்கு நெஞ்சில் திக் என்றது. இத்தனை வருட காலமாக இரண்டு அந்தத்தில் இருந்து பேசினோம், பழகினோம் ஆனால் நேரில் உங்களை நான் பார்க்கவில்லையே பாலா அண்ணை? எப்படி நீங்கள் இவ்வளவு வேகமாக என்னை விட்டு விலகினீர்கள்?
உங்களின் தீராத நோய்க்கு மரணம் தான் ஆறுதல் என்று நீங்களாக முடிவெடுத்தால் அந்த ஆறுதலுக்காக என் மனதை இயன்றவரை சமாதானம் செய்து கொள்கிறேன்.
பாலா அண்ணை போய் வாருங்கள் :-(
பாலா அண்ணை பற்றி நான் எழுதியவை
ஈழத்தின் நாடக, திரைப்படக்கலைஞர் கே.எஸ். பாலச்சந்திரன் அவர்களைப் பற்றிய எனது பதிவை நீண்ட நாட்களாகத் தரவேண்டும் என்று முயற்சி யெடுத்திருந்தேன். அது இன்றுதான் கை கூடியிருக்கின்றது. 80 களில் நான் இணுவில் அமெரிக்கன் மிஷனில் ஆரம்பக் கல்வியைக் கற்கும் காலகட்டத்தில், காலை என் பாடசாலை நோக்கிய பயணத்தில் அடிக்கடி வருவது பாலச்சந்திரன் அண்ணையும் ஒறேஞ் நிற பஜாஜ் ஸ்கூட்டரும் தான்.
நான் சிறுவனாக அந்தக் காலகட்டத்தில் அவரின் கலையுலக செயற்பாட்டின் ஆழ அகலம் முழுதுமாகத் தெரியாவிட்டாலும் நடந்து கொண்டே பள்ளி செல்லும் போது பக்கத்தில் வரும் பள்ளித் தோழன் ரூபனை உலுப்பி " உங்கை பாரும், அண்ணை றைட் பாலச்சந்திரன்" என்று விழிகள் விரிய ஒரு சினிமா உலகப் பிரபலத்தைப் பார்க்கும் அதே பிரமிப்போடு பார்ப்பேன். ஒரு முறை எங்கள் மடத்துவாசல் பிள்ளையாரடி உற்சவகாலத்தில் பார்த்த "அண்ணை றைட்" நாடகம் தான் கே.எஸ்,பாலச்சந்திரன் அவர்களை அடையாளப்படுத்தியிருந்தது. கடந்த வருடம் மின்னஞ்சல் தொடர்பில் அவர் கிடைத்தபோது இப்படிச் சொன்னார்.
//Dear Kana praba,
Lot of people around Inuvil, Kondavil, Thavadi and Kokuvil remember me with my orange scooter(Bajaj) as I was travelling to Jaffna. I was working at Income Tax office in Jaffna during 1981 - 1983, until I got transferred back toColombo. My days in Inuvil was very happy and peaceful. My family left Inuvil in 1990. When Sengai Aliyan visited Canada few years back, I gave those stills from Vadai Katru, which he has published in his book. I've Vaadai katru in NTSC video and U-matic format. I hope to release them very soon.
Anbudan
K.S.Balachandran//
அதே காலகட்டத்தில் பி.விக்னேஸ்வரன் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் இருந்தபோது வாரத்தில் அரைமணி நேரப் பகுதிகளாக வழங்கிய "நாடு போற்ற வாழ்க" படத்தைப் பார்த்து பாலச்சந்திரனின் வில்லத்தனமான நடிப்பை ரசித்திருந்தேன். கவர்ச்சிகரமான தோற்றமும் , குரலும் இவர் மீதான ஈர்ப்புக்கு ஒரு காரணம் என்றால் மிகையாகாது. "வாடைக்காற்று", "நாடு போற்ற வாழ்க", "நான் உங்கள் தோழன்", "அவள் ஒரு ஜீவ நதி" போன்ற படங்கள் இவரின் ஈழத்து சினிமா உலகின் பங்களிப்புக்கள்.
என் இளம்பிராயத்திலேயே இந்தக் கலைஞனைப் பார்த்து வளர்ந்ததாலோ என்னவோ பின்னர் தூர இருந்தாலும் இவரின் ஓவ்வொரு படைப்பையும் தேடி நுகரவைத்தது. தொண்ணூறுகளில் ஒரு நெருக்கடியான காலகட்டத்தில், இவர் தடுப்புக்காவலில் பல மாதங்கள் இருந்ததை அறிந்து வேதனையோடு, இந்தக் கலைஞன் வாழ்வில் விடிவு வராதா என்று மனதுக்குள் புழுங்கிய நாட்களையும் மறக்கமுடியாது.
1995 ஆம் ஆண்டு சந்திரிகா அம்மையார் வெள்ளைப் புறாவைக் காட்டிச் சமாதான வேடம் பூண்ட வேளை என் வாழ்க்கையிலும் ஒரு திருப்பம். என் நண்பர் குழாமிலேயே நான் மட்டுமே வெளிநாடு சென்று உயர்கல்வி கற்க வேண்டிய நிலை வந்தது. கூடவே வந்த நட்பு வட்டத்தைத் தொலைக்கின்றேன். மனதுக்குள் அழுகின்றேன். அப்போது....
வெள்ளவத்தையில் உள்ள முத்துக்கருப்பன் செட்டியார் நகை மாளிகைக்கு மேலே இருந்த என் தங்கும் அறைக்கு நேரெதிரே இருந்தது Finaaz Music Corner. (இப்போதும் அது அதேயிடத்தில் இருக்கிறது, ஒவ்வொரு முறை தாயகம் போகும் போதும் மறக்காமல் அங்கே செல்வேன்).
பயணம் செல்ல ஒரே ஒரு நாள் தான் பாக்கி. Finaaz Music Corner செல்கின்றேன். கே.எஸ். பாலச்சந்திரனின் வாத்தியார் வீட்டில் நாடகப் பேழைகளின் மூன்று பாகங்களும் . (தெனாலி படத்துக்கு கமலஹாசனின் ஈழத்துப் பேச்சுப் பயிற்சிக்கு உதவிய அதே ஒலி நாடாக்கள்) , இவரின் தனி நடிப்பு ( அண்ணை றைற், ஓடலி இராசையா, தியேட்டரிலே) மற்றும் சக ஈழத்துக் கலைஞர்களோடு வழங்கிய நகைச்சுவைப் படையல்கள் (சிதம்பர ரகசியம், சவாலுக்கு சவால்) இவற்றைக் கொண்ட ஒலிப்பேழை ஆகியவற்றை அள்ளியெடுத்துக்கொண்டேன்.
அந்த ஒலிப்பேழைகளோடு புலம் பெயர்ந்தேன். அவுஸ்திரேலியாவின் மெல்பன் நகரில் என் பகல் வேளைப் படிப்பு முடிந்து மாலை வீடு திரும்பித் தனியறையில் அடைபட்ட காலங்களில் வோக்மென்னில் (walkman) இந்த ஒலிப்போழைகள் ஒவ்வொன்றாகச் செருகிக் காதில் தமிழ் கேட்காத குறையைத் தீர்த்துக் கொண்டேன். நண்பர் வட்டத்தோடு பேசித்தீர்த்த அதே உணர்வோடு தூங்கப் போவேன்.
பின்னர் காலவோட்டத்தில் நட்பு வட்டத்திலும் வானொலியுடாகவும் தமிழ்த் தொடர்பு மீண்டாலும் என் புலம் பெயர்வாழ்வில் எனக்கு உயிர்கொடுத்து அந்நியப்படாமல் வைத்திருந்தத பாலச்சந்திரன் அவர்களின் நாடகங்களை மறவேன் நான்.
கே.எஸ்.பாலச்சந்திரனின் "கரையைத் தேடும் கட்டுமரங்கள்"
http://www.madathuvaasal.com/2009/10/blog-post.html
பாலச்சந்திரன் அண்ணை கதைக்கிறார்..!
http://www.madathuvaasal.com/2007/08/blog-post.html
"அண்ணை றைற்"
http://www.madathuvaasal.com/2007/02/blog-post_15.html

அந்த நன்றிக்கடனோ என்னவோ, பத்திரிகையோ இணைத்திலோ அறிந்து கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களின் கலையுலகில் 25 ஆண்டு நிறைவைப் போற்றி எனது முற்றத்து மல்லிகை வானொலி நிகழ்ச்சியில் ஒரு செவ்வியைக் கண்டிருந்தேன். (அந்த ஒலிப்பதிவையும் பின்னர் தருகின்றேன். )
மாதங்கள் கடந்தன. வாடைக்காற்று நாவல் மற்றும் திரைப்படம் குறித்த பதிவொன்றை தமிழ்மண நட்சத்திர வாரத்துக்காக எழுதியிருந்தேன். ஒரு நாள் ஒரு மடல் வந்தது. இப்படி.
//Dear Kana Piraba,
I'm that Balachandran from the movie "Vaadai Katru" presently living in Canada.
I was living in Inuvil for 14 years closer to Kalingan Theatre.
As I'm unable to write in Tamil using Unicode, I could'nt do any feed back on "Vaadai Katru" in your page. Anyhow thanks for your interest in Sengai Aliyan and his novels.
Anbudan
K.S.Balachandran//
K.S.Balachandran said ... (January 17, 2007 4:46 AM) :
கானப்பிரபா,வாடைக்காற்று நாவலைப் பற்றி கூறப்போய் ஈழத்து திரைப்படங்களைப்பற்றிய பல தகவல்கள் வருவதற்கு களம் அமைத்திருக்கிறீர்கள்.//
என் புழுகத்துக்குச் சொல்லவும் வேண்டுமா? இருக்காதா பின்னை. எட்ட நின்று போற்றும் ஒரு கலைஞன் என் பதிவினை வாசித்துக் கருத்துச் சொன்னதுதான் அதற்கான ஒரே காரணம்.
ஆனால் முன்னரே அவரை வானொலியில் பேட்டிகண்டது நான் தான் என்பது அப்போது தெரிந்திருகவில்லை. என்னுடைய வாடைக்காற்று கட்டுரைத் தன் பிரத்தியோகப் பக்கத்திலும் சேர்த்துச் சிறப்புச் செய்தார்.
என் பங்கிற்கு பாலச்சந்திரன் அவர்களின் நாடகங்களைப் பலரும் கேட்கும் விதத்தில் அவ்வப்போது ஒலி வடிவில் தரவிருக்கின்றேன்.
அண்ணை றைற், ஓடலி இராசையா, தியேட்டரிலே, கோணர் சீற் கோபாலபிள்ளை, சிதம்பர ரகசியம், சவாலுக்குச் சவால், வாத்தியார் வீட்டில் (அனைத்துத் தொகுதிகளும்), கிராமத்துக்கனவுகள் போன்றவை தான் அவை.
அதற்கான அனுமதியை மின்னஞ்சல் மூலம் பாலச்சந்திரன் அவர்க்ள் தந்தது அவரின் பெருந்தன்மையில் வெளிப்பாடு.

இவர் போன்ற நம் ஈழத்துக் கலைஞர்கள் அண்டைத் தமிழகத்தில் பிறந்திருந்தால் இன்னும் வெளிச்சம் போடப்பட்டிருப்பார்களோ என்ற ஆதங்கமும் எனக்கு அடிக்கடி வருவதுண்டு.
அவற்றின் எழுத்துப் பிரதியாகவும் தட்டச்சு செய்து சமகாலத்தில் தரவேண்டும் என்பதால் நாள் எடுக்கின்றது. முதலில் "அண்ணை றைற்" வருவார்.
என் பதிவை முடிக்கும் போது ஒரேயொரு மனக்குறை என் மனதில் உழன்றுகொண்டிருந்தது. அதையும் சொல்லிவிடுகின்றேன்.
என் பத்துவயது காலத்தில் கண்ட அழகான குறும்பு தொனித்த முகத்தோடு இருந்த அந்தக் கலைஞன் இன்று இளமை தொலைத்து தாடி நிரப்பி ஏதோ சோகத்தைப் புதைத்து வைத்தது போல மூப்பின் வெளிப்பாடாக இருப்பதைக் காண மனம் ஒப்பவில்லை.
பாலச்சந்திரன் அண்ணாவின் இளமை திரும்பவேண்டும் , அவரின் இன்னும் பல கல கல கலைப்படைப்புகளின் மூலம் தான் அது முடியும்.

கே.எஸ் பாலச்சந்திரன் அவர்களின் வலைப்பக்கங்கள் இதோ:
http://actorksbalachandran.blogspot.com/
http://balachandran02.blogspot.com/
இணையம் வழி அவரின் குறும்படங்கள் மற்றும் படைப்புக்கள்
தாகம் -குறும்படம்
உயிரே உயிரே - குறும்படம்
மனமே மற்றும் காற்று - அறிமுக விழாத் துளி
மனமே மற்றும் காற்று - அறிமுக விழாத் துளி 2
வை.ரி.லிங்கம் ஷோ
தனி நடிப்பு வீடியோ
ஆரம் நிகழ்ச்சியில் வழங்கிய நேர்காணல் ஒளி
தமிழ் தகவல் விருது
வாடைக்காற்று குறித்த என் பதிவு
http://kanapraba.blogspot.com/2006/07/blog-post.html