எமது பூர்வீக தேசத்து நிலப்பரப்பு தற்காலிகமாகச் சூறையாடப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் தாயக விடுதலைப் பயணத்தின் போது தாம் சந்தித்த நேரடியாகச் சந்தித்த அனுபவங்களையும், கண்ட சாட்சியங்கள் மூலம் பலர் இந்த ஈழப்போராட்டத்தினை மையப்படுத்திய நூல்களை எழுதியிருக்கின்றார்கள். இந்த நூற்பட்டியலைத் திரட்ட வேண்டும் என்று முயற்சி எடுத்து இரண்டு நாள் வேலைத் திட்டத்தில் எடுத்துத் திரட்டியவையே இந்த நூற் பட்டியல்.
"இன்றைய செய்தி நாளைய வரலாறு" என்பார்கள். ஈழ விடுதலைப் போராட்டத்தினைத் திரித்தோ, திசை திருப்பியோ எழுதும் எழுத்துக்களின் பொய்மைத் தோற்றத்தைக் கட்ட இந்த இந்த பரந்து பட்ட நூல் வாசிப்பு அந்தந்தக் காலகட்டத்தின் வரலாற்றின் உண்மை நிலையைச் சாட்சியமாகக் காட்டி நிற்கின்றது.
இங்கே நான் கொடுத்திருக்கும் நூற்பட்டியல் இறுதியானது அல்ல. இந்தப் பட்டியலில் விடுபட்டவை என் பார்வைக்கு வரும் போது இப்பட்டியலில் சேர்க்கப்படும். கீழே கொடுக்கப்பட்ட விபரங்களில் சிலவற்றுக்கு "விபரம் இல்லை" என்ற குறிப்பு வரும். அதற்குக் காரணம் அந்தக் காலகட்டத்தில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அந்த நூலாசிரியர்கள் மேலதிக விபரங்களைத் தராது விட்டு விட்டனர் என்றே எண்ணுகின்றேன்.
இலங்கையில் தமிழர் ஒரு முழுமையான வரலாறு (கி.மு 300 கி.பி 2000)
நூலாசிரியர்: கலாநிதி முருகர் குணசிங்கம்
வெளிவந்த ஆண்டு: 2008
வெளியிட்டோர்: எம்.வி வெளியீடு, தென் ஆசியவியல் மையம் - சிட்னி
Tamils in Srilanka A Comprehensive History (C.300 B.C. - 2000 A.D.)
நூலாசிரியர்: Murugar Gunasingam Ph.D
வெளிவந்த ஆண்டு: 2008
வெளியிட்டோர்: MV Publications, South Asian Studies Centre,Sydney
இலங்கையில் இனத்துவமும் சமூக மாற்றமும்
வெளிவந்த ஆண்டு: ஆங்கிலப்பதிப்பு 1984, தமிழ்ப்பதிப்பு 1985
வெளியிட்டோர்: சமூக விஞ்ஞானிகள் சங்கம்
Tamil Eelam Freedom Struggle (An Inside Story)
Author: S.A.David
வெளிவந்த ஆண்டு: விபரம் இல்லை
வெளியிட்டோர்:விபரம் இல்லை
IPKF in Sri Lanka
Author: Depinder Singh
வெளிவந்த ஆண்டு: 1992
வெளியிட்டோர்: South Asia Books
The Pen and the Gun - Selected Writings 1977 to 2001
வெளிவந்த ஆண்டு: விபரம் இல்லை
வெளியிட்டோர்:விபரம் இல்லை
Author: Subramaniam Sivanayagam
வெளிவந்த ஆண்டு: 2001
வெளியிட்டோர்: Tamil Information Centre, London
Evolution Of An Ethnic Identity - The Tamils in Sri Lanka (C 300 BCE to 1200 CE)
Author: Dr. K. Indrapala
வெளிவந்த ஆண்டு: 2005
வெளியிட்டோர்: The South Asian Studies Centre, Sydney
இலங்கையில் தமிழர் - ஓர் இனக்குழு ஆக்கம் பெற்ற வரலாறு
நூலாசிரியர்: கா.இந்திரபாலா
வெளிவந்த ஆண்டு: 2006
வெளியிட்டோர்: குமரன் புத்தக இல்லம், கொழும்பு
The Politics of Duplicity
Author: Anton Balasingam
வெளிவந்த ஆண்டு: 2000
வெளியிட்டோர்: Fairmax Publishing Ltd
இலங்கைத் தமிழருக்காக இருபது ஆண்டுகள்
நூலாசிரியர்: டாக்டர் இரா.சனார்த்தனம்
வெளிவந்த ஆண்டு: 1992
வெளியிட்டோர்: விபரம் இல்லை
1983 ஜூலை சம்பவங்கள் கம்யூனிசப் பார்வையில்
நூலாசிரியர்: சரத் முத்துவேட்டுகம (பாராளுமன்ற உறுப்பினர்)
வெளிவந்த ஆண்டு: 1983 ஆகஸ்ட் 4- 5 இல் இடம்பெற்ற ஹன்சாட் அறிக்கை
வெளியிட்டோர்: விபரம் இல்லை
Reaping the Whirlwind
Author: K.M.De Silva
வெளிவந்த ஆண்டு: 1998
வெளியிட்டோர்: விபரம் இல்லை
ஐ.நாவில் தமிழன் என் முதல் முழக்கம்
Author: கிருஷ்ணா வைகுந்தவாசன்
வெளிவந்த ஆண்டு: விபரம் இல்லை
வெளியிட்டோர்: விபரம் இல்லை
இலங்கை தமிழ் தேசிய வாதம் அதன் ஆரம்பத் தோற்றம் பற்றியதோர் ஆய்வு
நூலாசிரியர்: கலாநிதி முருகர் குணசிங்கம்
வெளிவந்த ஆண்டு: 2003
வெளியிட்டோர்: தென் ஆசியவியல் மையம் சிட்னி
Sri Lankan Tamil Nationanalism
நூலாசிரியர்: Murugar Gunasingam Ph.D
வெளிவந்த ஆண்டு: 1999
வெளியிட்டோர்: MV Publications, South Asian Studies Centre,Sydney
Primary Sources For History of the Sri Lankan Tamils
நூலாசிரியர்: Murugar Gunasingam Ph.D
வெளிவந்த ஆண்டு: 2005
வெளியிட்டோர்: MV Publications, South Asian Studies Centre,Sydney
சுதந்திர வேட்கை
நூலாசிரியர்: திருமதி அடேல் பாலசிங்கம்
வெளிவந்த ஆண்டு: 2002
வெளியிட்டோர்: Fairmax Publishing Ltd
The Fall & Rise of the Tamil Nation
நூலாசிரியர்: வி.நவரட்ணம்
வெளிவந்த ஆண்டு: ஆகஸ்ட் 1991
வெளியிட்டோர்: Tamilian Library, Montreal and Toronto
International Tamil Conference on the Tamil National Struggle & the Indo-Srilankan
Peace Accord
நூலாசிரியர்: International Tamil Conference committee
வெளிவந்த ஆண்டு: 30 April 1998
வெளியிட்டோர்: International Tamil Conference London
Self Determination for the Tamils of Srilanka
நூலாசிரியர்: Brian Senewiratne
வெளிவந்த ஆண்டு: September 2003
வெளியிட்டோர்: not known
Proceedings of the International Tamil Eelam Research Conference
நூலாசிரியர்: International Tamil Eelam Research Conference committee
வெளிவந்த ஆண்டு: 1991
வெளியிட்டோர்: International Tamil Eelam Research Conference, held at California State University, 21- 22 July 1991
Why tamil Eelam?
நூலாசிரியர்: unknown
வெளிவந்த ஆண்டு: unknown
வெளியிட்டோர்: unknown
இலங்கை தேசிய இனப்பிரச்சனை
நூலாசிரியர்: சமுத்திரன்
வெளிவந்த ஆண்டு: 1983
வெளியிட்டோர்: காவ்யா
இலங்கை இனப்பிரச்சனையின் அடிப்படைகள்
நூலாசிரியர்: மு.திருநாவுக்கரசு
வெளிவந்த ஆண்டு: டிசம்பர் 1991
வெளியிட்டோர்: தமிழ்க்குலம் பதிப்பாலயம்
இலங்கையில் தமிழர் ஒரு முழுமையான வரலாறு (கி.மு 300 கி.பி 2000)
நூலாசிரியர்: கலாநிதி முருகர் குணசிங்கம்
வெளிவந்த ஆண்டு: 2008
வெளியிட்டோர்: எம்.வி வெளியீடு, தென் ஆசியவியல் மையம் - சிட்னி
Sri Lanka at Cross Roads
நூலாசிரியர்: S.G.Hettige, Markus Mayer
வெளிவந்த ஆண்டு: unknown
வெளியிட்டோர்: unknown
1983 ஜூலை வன்செயல்கள் உண்மையின் தரிசனங்கள்
நூலாசிரியர்: சரத் முத்துவேட்டுகம
வெளிவந்த ஆண்டு: செப்டெம்பர் 22,1983 அவசரகால நிலமைகள் பற்றிய விவாதத்தின் போது பேசியது
வெளியிட்டோர்: விபரம் இல்லை
Ethnic Conflict Resolution
நூலாசிரியர்: Frtissa Balasuriya
வெளிவந்த ஆண்டு: November 1985
வெளியிட்டோர்: Unknown
Ethnic & Class conflicts in Sri Lanka
நூலாசிரியர்: Kumari Jeyawardena
வெளிவந்த ஆண்டு: April 1987
வெளியிட்டோர்: காந்தளகம்
இலங்கை இனப்பிரச்சனையில் ஒரு சிங்கள இதழ் - ராவய
நூலாசிரியர்: எம்.மோகன சுந்தரபாண்டியன்
வெளிவந்த ஆண்டு: ஜீன் 1988
வெளியிட்டோர்: விபரம் இல்லை
The Dilemma of Sri Lanka
நூலாசிரியர்: T.D.S.A.Dissanayaga
வெளிவந்த ஆண்டு: Unknown
வெளியிட்டோர்: Unknown
The Agonies of Sri Lanka
நூலாசிரியர்: T.D.S.A.Dissanayaga
வெளிவந்த ஆண்டு: Unknown
வெளியிட்டோர்: Unknown
Ethnic Conflict and Vilolence in Sri Lanka
நூலாசிரியர்: International Commission of Jurists
வெளிவந்த ஆண்டு: August 1983
வெளியிட்டோர்: International Commission of Jurists
Assignment Colombo
நூலாசிரியர்: J.N.Dixit
வெளிவந்த ஆண்டு: 1998
வெளியிட்டோர்: Konark Publishers Pty Ltd
Politics in Sri Lanka 1947 - 1973
நூலாசிரியர்: Wilson, A. Jeyaratnam
வெளிவந்த ஆண்டு: 1974
வெளியிட்டோர்: Macmillan
Sri Lanka Witness to History (A Journalist's memories 1930 - 2004)
நூலாசிரியர்: S.Sivanayagam
வெளிவந்த ஆண்டு: 2005
வெளியிட்டோர்: Sivayogam, London
Women Fighters of Liberation Tigers
நூலாசிரியர்: Adele Ann Balasingham
வெளிவந்த ஆண்டு: 1993
வெளியிட்டோர்: Unknown
Thirteenth Amendment to Sri Lanka Constitution
நூலாசிரியர்: Nadesan Satyendra
வெளிவந்த ஆண்டு: 1988
வெளியிட்டோர்: Unknown
Human rights Violations in Sri Lanka
நூலாசிரியர்: Dr Brian Senewiratne
வெளிவந்த ஆண்டு: Unknown
வெளியிட்டோர்: Unknown
Assignment Jaffna
நூலாசிரியர்: S. C. Sardeshpande
வெளிவந்த ஆண்டு: 1992
வெளியிட்டோர்: Lancer Publishers,
Emergency Sri Lanka 1986
நூலாசிரியர்: unknown
வெளிவந்த ஆண்டு: 1986
வெளியிட்டோர்: Unknown
தமிழீழம்
நூலாசிரியர்: பாவலரேறு பெருஞ்சித்திரனார்
வெளிவந்த ஆண்டு: 1990
வெளியிட்டோர்: பைந்தமிழ்ப் பாசறை
Sri Lanka 10 years of Jayawardene Rule
நூலாசிரியர்: S.Sivanayagam
வெளிவந்த ஆண்டு: Unknown
வெளியிட்டோர்: Tamil Information Research Unit
Broken Promises
நூலாசிரியர்: M.Thirunavukkarasu
வெளிவந்த ஆண்டு: 1997
வெளியிட்டோர்: Unknown
Sri Lanka Towards a Multi-Ethnic democratic Society?
நூலாசிரியர்: Neville Jeyaweera
வெளிவந்த ஆண்டு: 1990
வெளியிட்டோர்: International Peace Research Institute - Oslo
A Struggle for Justice
நூலாசிரியர்: Political committee, LTTE
வெளிவந்த ஆண்டு: 1990
வெளியிட்டோர்: Political committee, LTTE
Sri Lankan amounting tragedy of errors
நூலாசிரியர்: Paul Sieghart
வெளிவந்த ஆண்டு: March 1984
வெளியிட்டோர்: International Commission of Jurists
The Broken Palmyra
நூலாசிரியர்: Rajan, Somasundaram, Daya, Sritharan, K and Rajani Thiranagama Hoole
வெளிவந்த ஆண்டு: March 1990
வெளியிட்டோர்: The Sri Lanka Studies Institute
24 மணி நேரம்
நூலாசிரியர்: நீல வண்ணன்
வெளிவந்த ஆண்டு: 1977
வெளியிட்டோர்: வரதர் வெளியீடு
மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது
நூலாசிரியர்: நீல வண்ணன்
வெளிவந்த ஆண்டு: ஜூலை 1981
வெளியிட்டோர்: வரதர் வெளியீடு
தமிழரின் விடிவு
நூலாசிரியர்: தில்லைக் கூத்தன் (இ.நடராஜா)
வெளிவந்த ஆண்டு: விபரம் இல்லை
வெளியிட்டோர்: விபரம் இல்லை
இலங்கை தமிழர் கண்ணீர்
நூலாசிரியர்: தில்லைக் கூத்தன் (இ.நடராஜா)
வெளிவந்த ஆண்டு: விபரம் இல்லை
வெளியிட்டோர்: விபரம் இல்லை
இன ஒடுக்கலும் விடுதலைப்போரட்டமும்
நூலாசிரியர்: இமயவரம்பன்
வெளிவந்த ஆண்டு: ஜூன் 1988
வெளியிட்டோர்: புதிய பூமி வெளியீட்டகம்
செந்நீர்க்கடலில் ஈழத்தமிழன்
நூலாசிரியர்: தமிழ்க்குடிமகன்
வெளிவந்த ஆண்டு: 1983
வெளியிட்டோர்: அறிவொளி பதிப்பகம்
தமிழ் ஈழம் நாட்டு எல்லைகள்
நூலாசிரியர்: ஜே.ஆர்.சின்னத்தம்பி மற்றும் மறவன்புலவு க.சச்சிதானந்தன்
வெளிவந்த ஆண்டு: 1977
வெளியிட்டோர்: காந்தளகம்
நாம் யார்க்கும் குடியல்லோம்
நூலாசிரியர்: தில்லைக் கூத்தன்
வெளிவந்த ஆண்டு: விபரம் இல்லை
வெளியிட்டோர்: விபரம் இல்லை
தமிழீழப் போராட்டத்தில் கலைஞர் கருணாநிதியின் பங்கும் பணியும்
நூலாசிரியர்: அமரர் நவசோதியின் முதலாம் ஆண்டு மலர்
வெளிவந்த ஆண்டு: விபரம் இல்லை
வெளியிட்டோர்: அமரர் நவசோதியின் முதலாம் ஆண்டு மலர்
ஈழத்தமிழரும் நானும்
நூலாசிரியர்: ம.பொ.சிவஞானம்
வெளிவந்த ஆண்டு: 1991
வெளியிட்டோர்: பூங்கொடி பதிப்பகம்
தமிழ் அகதிகளின் சோக வரலாறு
நூலாசிரியர்: ஐ.தி.சம்பந்தன்
வெளிவந்த ஆண்டு: 1996
வெளியிட்டோர்: விபரம் இல்லை
ஆருக்கு சொல்லி அழ
நூலாசிரியர்: ஆசைத் தம்பி
வெளிவந்த ஆண்டு: ஒக்டோபர் 2004
வெளியிட்டோர்: விபரம் இல்லை
ஜனவரி 26 ஆம் திகதி பின்னூட்டம் வாயிலாக ஒரு அன்பர் சொன்ன மேலதிக நூல்கள்
Tamil Exodus and Beyond - An analysis of the national conflict in Sri Lanka
நூலாசிரியர்: Vasantha-Rajah
வெளிவந்த ஆண்டு: 1996
வெளியிட்டோர்: L. Samarasinghe, London
The Conflict in Sri Lanka: Ground Realities
நூலாசிரியர்: Ana Pararajasingham (ed.)
வெளிவந்த ஆண்டு: 2005
வெளியிட்டோர்: International Federations of Tamils, Geneva-New York
Tamils of Sri Lanka - The Historical Roots of Tamil Identity
நூலாசிரியர்: Prof S. K. Sitrampalam
வெளிவந்த ஆண்டு: 2006
வெளியிட்டோர்: Eelam Tamil Association, Sydney
Sunday, January 25, 2009
Saturday, January 17, 2009
தொல் திருமாவின் உண்ணாநிலை போராட்டம் குறித்த ஒலிப்பேட்டி மற்றும் The Unspeakable Truth மென் நூல்
கடந்த நாற்பது மணி நேரங்களைக் கடந்து ஈழத்தமிழரின் வாழ்வுரிமைக்காக விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவன் உண்ணா நிலைப் போராட்டத்தினை நடத்தி வரும் இவ்வேளை, இன்று சற்று முன்னர் எமது அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளரும், சட்டத்தரணியுமாகிய திரு.ஆர்வலன் அவர்களைத் தொடர்பு கொண்டு இந்தப் போராட்டம் குறித்த ஒலிப்பகிர்வைக் கேட்டிருந்தேன். அதனை இங்கே தருகின்றேன்.
தரவிறக்கிக் கேட்க
British Tamils Forum தற்போது வெளியிட்டிருக்கும் The Unspeakable Truth என்ற மென்னூல் எமது ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தின் ஆரம்ப காலம் தொட்டு இன்று வரையான காலப்பகுதியில் நடந்தேறிய நிகழ்வுகள், துயரம் தோய்ந்த வரலாற்றினைப் படங்களோடும் முக்கிய ஆதாரங்களோடும் பதிவு செய்கின்றது. இந்த ஆவணம் பலரைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் இந்த மென் நூலை இங்கே இணைக்கின்றேன்.
The Unspeakable Truth தரவிறக்கம் செய்ய
நன்றி:
விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் திரு ஆர்வலன்
British Tamils Forum
புதினம் செய்தித்தளம்
Tuesday, January 13, 2009
வெடி கொழுத்தி ஒரு ஊர்ப்பொங்கல்
மூன்று வருஷங்களுக்கு முன்னர் எழுதிய பதிவினை மீள் இடுகையாகத் தருகின்றேன்.
பிள்ளையள் தைப்பொங்கலைப் பற்றிப் பத்து வசனம் எழுதுங்கோ, இது தமிழ் வகுப்புப்பாடம்.
“தைத்திருநாள் என்று சொல்லும் இனிய தமிழ்ப் பொங்கல்” என்று பெருங்குரல் எடுத்துப்பாடும் சங்கீத வகுப்பு,பொஙகல்திருநாளைப் பற்றிச் சித்திரம் வரையவும், இது சித்திர வகுப்பு. இப்பிடித்தான் எங்கட சீனிப்புளியடி பள்ளிக்கூடத்தின் முதலாம் தவணை ஆரம்பிக்கும்.
தைப்பொங்கல் வரப்போகுது என்பதின் அறைகூவல் தான் அது. இப்பிடித்தான் எங்களுக்குத் தைப்பொங்கல் வருவது தெரியும்.
பாட இடைவேளை நேரத்தில மைதானத்துக்குப் போய் நீண்ட சதுரப்பெட்டியாக இரண்டு காலாலும் செம்பாட்டு மண்ணைக் கிளறிக் கோலம் போட்டு நடுவில சூரியன் மாதிரிப் படம் வரைஞ்சு விடுவோம். ஓரமாய்க் கிடக்கிற கல்லிலை பெரிய கல்லாப் பார்த்து மூண்டை எடுத்து வைத்து பழை ரின்பால் பேணியை அவற்றின் மேல் வைத்து விட்டு குருமணலை அந்தப் பேணியில் நிறைத்துவிட்டு பொங்கலை வேகவைப்பது போல கல் இடுக்குகளில் வாய் வைத்து ஊதுவது போலப் பாவனை செய்வோம். இதுதான் தைப்பொங்கல் விளையாட்டு.
என்ர அம்மாவும் சீனிபுளியடியில ரீச்சரா இருந்தவ. பள்ளிக்கூடம் முடிஞ்சு எங்கடவீட்டுக்கு அயலில் இருக்கும் பிள்ளையளையும் என்னையும் கூட்டிக்கொண்டு வீடுதிரும்புவது அவரின்ர வழக்கம். கிட்டத்தட்ட முப்பது நிமிட நடைபயணம்.
விசுக்கு விசுக்கெண்டு அம்மாவும் மற்ற ரீச்சர்மாரும் கதைச்சுக்கொண்டு நடந்துகொண்டு போகவும் பின்னால் நானும் கூட்டாளிமாரும் கே கே எஸ் றோட்டின்ர ரண்டு பக்கமும் விடுப்பு பார்த்துகொண்டே போவோம். தைப்பொங்கல் சீசனில கடைநெடுக மண் பானையளும் அலுமினியப் பாத்திரங்களும் அடுக்கிவச்சிருக்கும்.
கோபால் மாமாவின் கடைப்பக்கம் நெருங்கும் போது எங்கட கண்கள் தானா விரியும்.
ஊரில் இருக்கின்ற கடையளுக்க அவற்ற கடைதான் பென்னான் பெரியது, புதுக்கடையும் கூட.
ஒரு பக்கம் கரும்புக்கட்டுகள், இன்னொரு பக்கம் மண் மற்றும் அலுமினியப்பாத்திரங்கள், ஓலையால் செய்த கொட்டப் பெட்டிகள் நிறைஞ்சிருக்கும்.
ஆனா என்ர கண் போறது வேற இடத்தில,
வட்டப்பெட்டி, சரவெடி, மத்தாப்பு, பூந்திரி (கை மத்தாப்பு),ஈக்கில் வாணம் (ஈர்க்கு வாணம்), அட்டை வாணம் (சக்கர வாணம்), வெடிப்புத்தகம் என்று சம்பியன், ஜம்போ, யானை, அலுமான் (ஹனுமான் வெடியை இப்பிடித்தான் அழைப்போம்) என வகை வகையான தயாரிப்புகளில கலர் கலரா ஒருபக்கம் குவிஞ்சிருக்கும். கோபால் மாமா " எல்லாத்தையும் அள்ளிக்கொண்டு போ" என்று சொல்லுவது போல ஒரு பிரமை வரும் அந்த நேரத்தில.
அவரின் கடை வரும்போது நடைவேகம் தானாகக் குறைந்து விடுப்புப் பார்க்கும் எங்களை
" கெதியா வாங்கோ பிள்ளையள்" என்று உறுக்கல் கொடுத்துவிட்டு அம்மா எட்டி நடக்கும் போது
"என்ன தங்கச்சி, பொங்கலுக்கு ஒண்டும் வாங்கேல்லையே" எண்டு கடைக்குள்ள இருந்து குரல் கொடுப்பார் கோபால் மாமா.
" இல்லையண்ணை, பிறகு உவர அனுப்பிவிடுகிறன்" என்று அம்மா சொன்னாலும் அவர் விடமாட்டார்.
" சாமான்கள் தீரமுன் கொண்டுபோ பிள்ளை" எண்டு சொல்லிப் பார்சல் போட ஆரம்பித்துவிடுவார்.
என்ர கண் பூந்திரிப்பக்கம் போவதை ஓரக்கண்ணால் பார்த்து விட்டு இரண்டு பக்கற் சம்பியன் பூந்திரிப் பெட்டியையும் பார்சலில் போடுவார். மணிபேர்சைத் திறந்து கொண்டிருக்கும் அம்மாவின் கையைச் சுறண்டி அட்டை வாணம் பக்கம் காட்டுவேன். யாரும் பார்க்காதவாறு என்ர கையில ஒரு கிள்ளுக்கொடுத்து விட்டு "பேசாம இரு அப்பா வாங்கிக்கொண்டு வருவார்" என்று சன்னமாகச் சொல்லிவிட்டுக் கடையிலிருந்து நகருவார்.
பொங்கலுக்கு முதல் நாள் அப்பா தாவடிசுந்தரலிங்கம் கடையிலிருந்து ஒரு சம்பியன் வட்டப் பெட்டி வெடியும் அஞ்சாறு அட்டை வாணமும், ரண்டு பூந்திரிப் பக்கற்ரும் வாங்கிவருவார்.
அண்ணனுக்குத் தான் வெடிப்பெட்டி. நான் சின்னப்பிள்ளையா இருக்கேக்க அலுமான், சம்பியன் வெடியளத் தொடவே பயம். (பின்னாளில ஆமியின்ர ஷெல், குண்டுகளுக்குப் பிறகு பழகிபோச்சு)
யானைப் படம் போட்ட வெடியளும் உண்டு. அந்த் வெடிகளில ஒரு பக்கற்றில அம்பது வெடி இருந்தால் பத்து வெடி தேர்றதே அபூர்வம். யானை வெடிகள் பெரும்பாலும் புடுக் எண்ட சத்ததோட நூந்து போகும்.
வெடிக்காத அந்த வெடியளை எடுத்து அவற்றின் கழுத்தை நெரித்திருக்கும் நூல்கட்டை அவிட்டுவிட்டு நூந்துபோன திரியை மேல எழுப்பீட்டு திரியில நெருப்ப வைத்தால் மத்தாப்பு போல அழகாகச் சீறிவிட்டு தன்ர சாவைத்தழுவிக்கொள்ளும்.
ஒரு பத்துப் பதினஞ்சு வயசுப் பொம்பிளைப் பிள்ளையின்ர குடும்பி போலச் சணல் கயிறைத் திரித்து இலேசாகத் தணல் வைத்தால் கனநேரம் அது அணையாமல் இருக்கும். அதுதான் வெடிகளுக்கும் பற்றவைக்கும் நெருப்பாக இருக்கும்.
திலகப்பெரியம்மாவின்ர பெடியள் வெடிகொழுத்துறதில விண்ணர்கள்.
கிழுவந்தடியில 100 சரவெடியைக் கட்டிவிட்டு அடிநுனியில் இருக்கும் வெடியில் நெருப்பை வைத்தால் பட படவெண்டு வெடித்துக்கொண்டே போகும்.
அவையின்ர வீட்டில செல்வராசா எண்டு வேலைகாரப் பெடியன் ஒருவன் இருந்தவன்.
தான் பெரிய சாதனை வீரன் எண்டு நினைச்சுக் கொண்டு ஒரு அலுமான் வெடியை எடுத்து அதன் அடிகட்டையை இரண்டு விரலுக்குள்ள வச்சு வெடிப்பான். படுத்திருக்கும் ஊர் நாய்களுக்கு மேல் அட்டை வாணத்தைக் கொழுத்திப்போடுவான். வள் வள் என்று பெருங்குரல் எடுத்து செல்வராசாவைத் திட்டிதீர்த்தவண்ணம் அவை ஓடி மறையும்.
எங்களூரைப் பொறுத்தவரையில் தீபாவளி வருசப்பிறப்பை விட தைப்பொங்கல் தான் விசேசம்.
வானம் பார்த்த பூமியாக விவசாயக்கிராமங்களே யாழ்ப்பாணத்தில் அதிகம் ஆக்கிரமிப்புச் செய்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். தமிழகத்தில் உள்ள தமிழுணர்வாளர்கள் தைபொங்கலைத்தான் தமிழரின் வருடப்பிறப்பாகக் கருதுகினம்.
பொங்கலுக்கு முதல் நாளே வெடிச்சத்தம் கிளம்பிவிடும். சின்னம்மாவின் மகன் துளசி அண்ணாவும், வெடிகளை வெடிக்க வைப்பதில் புதுப்புதுக் கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்து அவற்றை அமுல்படுத்துவதில் கெட்டிக்கார்.
பழைய மண்ணெண்ணை பரலுக்குள்ள வெடிச்சரத்தைப்போட்டு விட்டு கொள்ளிக்கட்டையைப் போடுவார். அமுக்கமான அந்த நெருக்கத்துக்குள்ள இருந்து அவை வெடிக்க ஆரம்பிக்கும் போது அந்தத் சத்ததோட ஒப்பிடேக்க ஆமிக்கறன்ர ஷெல் பிச்சை வாங்கோணும்.
அட்டைவாணத்தைக் கொளுத்திவிட்டு நிலத்தில இலாவகமாகச் சுழற்றிவிடுவார்.
சுழன்று சுழன்று ஓடிக் கொண்டு வண்ணசக்கர ஒளியைக் கக்கிகொண்டே தொலைவில் போய்க் கருகி ஓய்ந்துவிடும்.
நிலத்தில் ஒரு டப்பாவை வைத்து விட்டு ஈர்க்கு வாணத்தை எடுத்து அதன் மேல் சாய்வாக வைத்து நெருப்பை அவர் பற்றவைக்கும் போது வானத்தில் சென்று வெடித்து பூத்தூவ வேண்டியது தன் விதியை நொந்தபடி தரை மட்டத்தில் சாய்வாக விருக்கென்று சென்று வெடிக்கும்.
றேட்டில போற வாற சைக்கிள்காரற்றை திட்டு வசவுகள் தான் இதற்காக அவருக்குக்கிடைக்கும் கெளரவ விருதுகள். ஒருமுறை அவர் ஏறிந்த சக்கரவாணம் படுத்திருந்த ஒரு கிழவியின் மேல் விழுந்து " ஐயோ அம்மா" என்று அந்தக் கிழவி தைப்பொஙகல் முதல் நாள் இருட்டுகுள்ள ஓடினது இப்பவும் நினைவிருக்கு.
திருஞானசம்பந்தரின் கதையை “ஞானக்குழந்தை” எண்டபெயரில் படமா எடுத்து ரவுணில இருக்கும் லிடோ தியேட்டரில வந்த நேரம் அது. சம்பந்தருக்குக் கடவுள் வந்து காட்சி கொடுத்தது போல எனக்கும் முன்னால் கடவுள் வந்தா நான் நிறையப் பூந்திரியும், அட்டைவாணமும் கேட்பேன் என்று சின்னப் பிள்ளையா இருக்கேக்க நினைப்பேன்.
ஒருமுறை இலங்கை அரசாங்கம் வெடிகளை எங்கட பிரதேசத்திற்கு அனுப்பத் தடை செய்துவிட்டது. திலகமாமியின்ர பெடியன் சுரேஸ் ஒரு பழைய லொறியின்ர சீற்பாகம் ஒண்டை நீண்ட துண்டாக வெட்டி எனக்கொன்று அவனுகொன்றாக வைத்துக் கொண்டான். அதைத்தூக்கி நிலத்தில் அடிக்கும் போது படார் என்று வெடிபோல் சத்தம் எழுப்பும். அதுதான் எங்களின் தற்காலிக வெடி.
இலங்கை அரசாங்கம் இந்ததடையை நிரந்தரம் ஆக்கியபோது வெடிவரத்து முற்றாக இல்லாமல் போனது.
ஒரு விளையாட்டுத்துப்பாக்கியை வாங்கி அதில் பொட்டுவெடி என்று சொல்லப்படும் வெடிறேலைப் பொருத்தி வெடிப்போம். அந்தத் துப்பாக்கி பழுதானால் அந்த வெடி றோலை ஒரு கொங்கிறீற் கல் மேல் வைத்துவிட்டு இன்னொரு கல்லால் ஓங்கி அடிக்கும் போது இதேபோல வெடியெழுப்பும்.
பொங்கல் அடுப்பு செய்வதும் ஒரு கலை.பொங்கல் ஆரம்பிப்பதற்கு ஒரு கிழமைக்கு முந்தியே செம்பாட்டு மண்ணிலை தண்ணீரைக் கலந்து நல்லாக் குழைத்து அலுமினிய வாளியில அந்தக் குழைத்த மண்ணைப் போட்டு இறுக்கி விட்டு சுத்தமான தரையில கொஞ்சம் குருமணலைப் பரவி விட்டு அப்பிடியே கவிட்டு விட்டால் அது கூம்பு வடிவில காய்ஞ்சு இறுகிவரும்.பொங்கலுக்கு ஒரு சில தினம் முன்னுக்கு சாணி கரைச்சு அந்த அடுப்புக்களின் மேல தடவித் திருநீறையும் தடவிவிடுவார்கள். பல குடும்பங்களுக்குப் பொதுவில் இந்த அடுப்புக்கள் செய்து பரிமாறப்பபடும்.
பொங்கல் நாள் வந்துவிட்டால் விடிய நாலு மணிக்கே எழுந்து ஆயத்தஙகளைத் தொடங்கிவிடுவோம்.
அரிசி இடிக்கும் உலக்கை, கோதுமை மாவை (சிலர் அரிசி மா, தினை மா பயன்படுத்துவார்கள்) எடுத்துக்கொண்டு நடு முற்றத்துக்குப் போய் கூட்டித் தெளித்த அந்த முற்றத்தில் உலக்கையை நீட்டிவைத்து மாவை அதன் மேல் தூவிச் சதுரவடிவப்பெட்டியாகக் கோலம் அமைப்போம். அதன் நடுவில் தான் பொங்கல் வேலை ஆரம்பிக்கும்.
சூரியன் வருவதற்கு முன்பு பொங்கிவிட்டுக் கணக்காச் சூரியன் வரும்போது வெடியைக் கொழுத்திப்போட்டு வாழையிலையில் கற்பூரத்தைக்காட்டிப் படைப்போம்.
முந்தின காலத்தில மண்பானைகள் தான் பொங்குவதற்கு அதிகம் பயன்படும். ஆனால் காலவோட்டத்தில அலுமினியப்பானை இதை ஓவர்ரேக் பண்ணிவிட்டுது.மண்பானையில் பொங்கும் போது பானை உடைந்தால் அபசகுணம் என்பார்கள்.
ஒருமுறை எங்கள் வீடுப் பானை பொங்கும் போது சிறிய ஒட்டை ஏற்பட்டு பொங்கும் போதே தண்ணீர் இலேசாகப் பெருகத் தொடங்கியது. வாழைபழத்தையும் கோதுமைமாவையும் பிசைந்து இலாவகமாக அந்த ஓட்டையை அடைத்துவிட்டார் அப்பா.
பானையில் இருந்து பால் பொங்கி வழிஞ்சாத் தான் நல்லது என்று அம்மம்மா அடிக்கடி சொல்லுவா.
காகங்களுக்கும் படையல் இருக்கும், ஆனால் அவை ஒழுங்காகச் சாப்பிட உந்த வெடி வெடிக்கிறவஙகள் விட்டால் தானே.