ஈழத்தில் எண்பது, தொண்ணூறுகளில் வார வெளியீடுகளைப் படித்தவர்களுக்கு மறக்க முடியாத எழுத்துலக ஆளுமைகளில் ஒருவர் எழுத்தாளர் ஜூனைதா ஷெரீப் அவர்கள். இவர் கிழக்கிலங்கையின் காத்தான்குடியைச் சேர்ந்தவர்.
சிறுகதைகள், நாவல்கள், வானொலி நாடகங்கள், சிங்களத்தில் இருந்து தமிழ் மொழி பெயர்ப்பு இலக்கியம் என்று தன் படைப்பாற்றலை வெளிக் கொணர்ந்தவரின் சிறுகதைத் தொகுப்புகள், நாவல்கள். வானொலி நாடகப் பிரதி என்று நூலுருப் பெற்றிருக்கின்றன.
இலங்கை முஸ்லீம் எழுத்தாளர் சமூகத்தில் அதிகமான நாவல்களை எழுதியவர் என்று கொள்ளப்படுபவர். நான்கு சாகித்திய விருதுகளோடு, பல கெளரவ விருதுகளையும் தன் எழுத்துப் பணிக்காகப் பெற்றிருக்கிறார்.
2011 ஆம் ஆண்டில் நான் இயங்கும் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக எழுத்தாளர் ஜூனைதா ஷெரீப் அவர்களைப் பேட்டி கண்டிருந்தேன். இன்றைய YouTube யுகத்தின் ஒலி ஆவணப்படுத்தலாக இந்தப் பேட்டியை இப்போது இணைய ஊடக வழி பகிர்கின்றேன்.
https://www.youtube.com/watch?v=AUP_kmdW6lg