மதிப்புக்குரிய எழுத்தாளர் கோமல் சுவாமிநாதன் (சுபமங்களா ஆசிரியர், கே.பாலசந்தர் இயக்கிய "தண்ணீர் தண்ணீர் இவர் கதை தான், மூன்று படங்களையும் இயக்கியவர் அதில் "ஒரு இந்தியக் கனவு" பிரசித்தம்)
அவர்கள் 1994 ஆம் ஆண்டில் ஈழத்துக்கு வந்த போது நான் மாணவன், அவரின் சிறப்புச் சந்திப்பு யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் நடைபெற்ற போது பார்வையாளர் நேரத்தில் எழுந்து கேள்வி கேட்டேன்.
பின்னாளில் என் ஊடகப் பணியின் கேள்வி கேட்கும் பிள்ளையார் சுழி போட்டது அந்த நிகழ்வு தான். சுபமங்களா இலங்கைச் சிறப்பிதழையும் வெளியிட்டது. அந்த நாவலர் மண்டபப் படம் கூட அங்கே உண்டு
https://www.subamangala.in/archives/199405/#p=1
கோமல் சுவாமிநாதன் அவர்களிடம் வாங்கி ஆட்டோகிராப் இன்னும் பத்திரமாகச் ஷெல் அடியிலும், செல் அரிப்பிலும் தப்பி எம் யாழ்ப்பாண வீட்டில் இருந்ததைக் கண்டு 2019 இல் பத்திரமாகக் கவர்ந்து வந்தேன்.
0 comments:
Post a Comment