இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மூத்த தலைமுறை அறிவிப்பாளர்களில் ஒரு விழுதான "வானொலி மாமா" என்று அன்போடு அழைக்கப்பட்டு வந்த திரு.ச.சரவணமுத்து அவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை ஒக்டோபர் 30 திகதி தனது 94 வது வயதில் காலமானார்.
ஈழத்துத் தமிழ் ஒலிபரப்புக்களின் முன்னோடியாக இருந்தவர்களில் ஒருவர் என்பதோடு இவர் ஆரம்பித்து வைத்த சிறுவர் மலர் என்ற நிகழ்ச்சி பல்லாண்டுகாலமாக நீடித்து ஒலிபரப்பாகும் நிகழ்ச்சி என்பதோடு, "வானொலி மாமா" என்ற கெளரவ அடைமொழியை இவரைத் தொடர்ந்து வந்த பல நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களும் பின்னாளில் பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. வானொலி ஒலிபரப்புக் கலையின் தனித்துவங்களான திரு சோ.சிவபாதசுந்தரம், மரைக்கார் ராம்தாஸ் போன்ற கலைஞர்களின் அறிமுகத்துக்குத் துணை புரிந்ததோடு, ஆங்கிலேயர் இலங்கை வானொலியை ஆரம்பித்த காலகட்டத்தில் தமிழில் நிகழ்ச்சிகள் வரவேண்டும் என்று முனைப்பு எடுத்துச் செயற்பட்டதோடு நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் மகன் திரு.சோ.நடராஜாவுடன் இணைந்து நிகழ்ச்சிகளைப் படைத்திருந்தார். இலங்கையர்கோனின் "விதானையார் வீடு" என்ற நாடகத்திலும் ஈழத்தின் முக்கியமான கலைஞர்களோடு இவர் நடித்திருந்தத குறிப்பிடத்தக்கது.
வானொலி மாமா ச.சரவணமுத்து குறித்த நினைவுப்பகிர்வை வழங்க ஈழத்திலிருந்து மூத்த ஊடகவியலாளர், வானொலிப் படைப்பாளி திரு.எஸ்.எழில்வேந்தன் அவர்களை வானலையில் அழைத்திருந்தேன். அந்த ஒலிப்பகிர்வைத் தொடர்ந்து கேட்கலாம். ஒலிப்பகிர்வின் முழுமையான எழுத்து வடிவைப் பின்னர் தருகின்றேன்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சிறுவர் மலர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியவரும் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக, நிகழ்ச்சி ஆலோசகராக விளங்கி வரும் வானொலி மாமா திரு.நா.மகேசன் அவர்கள் வழங்கிய நினைவுப் பகிர்வினைத் தொடர்ந்து தருகின்றேன்.
நான் அறிந்த வானொலி மாமா
அமரர் திரு. ச. சரவணமுத்து
இலங்கை வானொலியில் மிகவும் புகழ்வாய்ந்த நிகழ்ச்சி “சிறுவர் மலர்” என்னும் சிறுவர் நியழ்ச்சி. எட்டுவயது தொடக்கம் பதினைந்து வயது வரையிலான சிறுவர்களைக் கொண்டு தயாரித்து, ஞாயிறுதோறும் காலையில் 45 நிமிடங்கள் ஒலிபரப்பாகிய நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியைச் சிறுவர்கள் மட்டுமல்ல வளர்ந்தவர்களும் கேட்டு மகிழ்வார்கள். சிறுவர்கள் ஞாயிறு எப்போ வரும் என்று ஆவலுடன் காத்திருப்பார்கள். இந்த நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து, முதலாவது “வானொலி மாமா” என்ற கற்பனைப் பாத்திரமாக நிகழ்ச்சிக்கு அத்திவாரம் இட்டு நடத்தியவர் மதிப்புக்குரிய திரு. எஸ். சிவபாதசுந்தரம் என்று அறிகக் கிடக்கிறது. பெயர் ஒலிபரப்பாகாத இந்தக் கற்பனைப் பாத்திரத்தை பலர் ஏற்று நிகழ்ச்சியை நடத்தி வந்திருக்கிறார்கள்.
இந்த வானொலி மாமாக்களிலே நான் அறிந்த பலர் இருப்பினும், “வானொலி மாமா” என்ற அடைமொழியை நெடுங்காலம் தாங்கி நின்றவர் அமரர் திரு. ச. சரவணமுத்து அவர்கள். இவர் நெடுங்காலமாக கொழும்பில் வெள்ளவத்தையில் வசித்து வந்தார். நானும் வெள்ளவத்தையில் நெடுங்காலமாக வசித்து வந்தபடியால், அடிக்கடி அவரைச் சந்திக்கும் வாய்ப்பு நான் வெளிநாடு வருவதற்குமுன் கிட்டியது. பின்னரும் இலங்கை சென்ற போதெல்லாம் “மாமா” வைச் சந்திக்காது வருவதில்லை. இன்று புலம் பெயர்ந்து வாழும் பல வானொலிக் கலைஞர்களை உருவாக்கிய பெருமை, சரவணமுத்து மாமாவைச் சாரும் என்றால் அது மிகையாகாது. அன்னார் பழகுவதற்கு மிகவும் இனியவர். உயர்ந் குணங்கள் உடையவர். உயர்ந்து வளர்ந்த தோற்றம் உடையவர். இன்சொல் அன்றி வன்சொல் பேசாதவர். அவர் தனித் தன்மையோடு சிறுவர் மலர் சிகழ்ச்சியை தயாரித்து வழங்கிவந்தார். சிறுவர்களுக்கு நடிப்பைச் சொல்லிக் கொடுத்து, இயற்கையாக நடிக்க வகை செய்தவர்களிலே இவர் ஒரு முன்னோடி.
சென்ற 29. 10. 2009 அன்று இவர் காலமாகிவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயர் எய்தினேன். அமரர் சரவணமுத்து அவர்க்ள் ஒரு வானொலி நிலையக் கலைஞர் என்றுதான் பலர் கருதுவார்கள். அன்னார் இலங்கை வொனொலின் அழைப்பை ஏற்றுச் சென்ற ஒரு தயாரிப்பாளர். (guest Producer) ஆரம்ப காலத்தில் அரச கரும மொழித் திணைக்களத்தில் கடமையாற்றிப் பின்னர் பாராழுமன்றத்திலும் மொழிபெயர்ப்பாளராகக் கடமையாற்றி ஓய்வுபெற்றவர். சரவணமுத்து மாமா கலைத்துறையில மட்டுமல்லாது, சமய, சமூகப் பணிகளிலும் நெடுங்காலமாகச் சேவை செய்த பெரும் தொண்டன். 95 ஆண்டுகள் வரை வாழ்ந்து, தனது வாழ்நாளின் பெரும் பகுதியைப் பொதுப் பணிகளுக்காக அர்ப்பணித்த ஒரு பெரியார்.
திருக் கேதீச்சர ஆலயப் புனருத்தாரனச் சபையின் செயலாளராகப் பல ஆண்டுகள் பணிபுரிந்து அவ்வாலயத்தின் வளர்ச்சிக்கு நெடுங்காலம் தொண்டாற்றியவர். கொழும்பு இந்து மாமன்றத்தின் அங்கத்தவராக இருந்து பல பணிகளில் ஈடுபட்டவர். வெள்ளவத்தையில் அமைந்துள்ள கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் 1966ம் ஆண்டில் இருந்து 2000மாம் ஆண்டுவரை அங்கத்தவராக இருந்து பொதுகச் செயலாளர், துணைத் தலைவர் பதவிகளில் நெடுங்காலம் கடமையாற்றித் தமிழ்த் தொணடு செய்தார். அன்னாரின் மறைவு, இலங்கைத் தமிழர்களுக்கு ஈடு செய்யமுடியாத ஒரு இழப்பு. அவரது பிரிவால் துயருறும் மக்களக்கும்; உறவினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். அவர் செய்த பணிகளும், தொண்டுகளும் அன்னாரைத் தக்கோன் எனக் காட்டி நிற்கின்றன.
“தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும்.”
நா. மகேசன்
சிட்னி, அவுஸ்திரேலியா
1. 11. 2009
( விதானையார் வீடு நாடகம் ஒலிப்பதிவில், இடமிருந்து வலம் கணபதிப்பிள்ளை விதானையா (கா.சிவத்தம்பி), வைரமுத்துச் சட்டம்பியார் (சரவணமுத்து), செளந்தரவல்லி ( பத்மா சோமசுந்தரம்), விசாலாட்சி (பரிமளாதேவி விவேகானந்தா), சின்னத்துரை விதானையார் ( வீ.சுந்தரலிங்கம்), ஆறுமுகம் (வி.என்.பாலசுப்ரமணியம்).
கொழும்பு தமிழ்ச்சங்கம் விடுத்த இரங்கல் அறிக்கை
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் “வானொலி மாமா” என அழைக்கப்பட்ட திரு.ச.சரவணமுத்து அவர்களின் மறைவையொட்டி கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் அஞ்சலி இலங்கையில் முதன்முதல் சிறுவர் நிகழ்ச்சிகளை ஆரம்பித்து நடாத்திய “வானொலி மாமா” என அழைக்கப்பட்ட திரு.ச.சரவணமுத்து அவர்கள் தனது 94ஆவது அகவையில் 30.10.2009 அன்று கொழும்பில் காலமானார். அன்னாரது மறைவையொட்டி கொழும்புத் தமிழ்ச் சங்கம் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கின்றது. அன்னார் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளராகவும் (1966ஃ1972) துணைத் தலைவராகவும் (1976ஃ1980) பல ஆண்டுகள் ஆட்சிக்குழு உறுப்பினராகவும் இருந்து சங்கத்தின் கலை, இலக்கிய செயற்பாடுகளில் தீவிர பங்கெடுத்து சங்கத்தின் வளர்ச்சிக்கு துணை நின்றவர். அவரது சேவையினைக் கருத்தில் கொண்டு 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற ஸ்தாகப தின விழாவில் “சங்கச் சான்றோர் - 2006’ விருது அளித்துக் கொழும்புத் தமிழ்ச் சங்கம் கௌரவித்தது. முதுமையெய்தியும் தள்ளாதவயதிலும் சங்கத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதை பழக்கமாகக் கொண்டிருந்தார். 13.09.2009ஆம் திகதி நடைபெற்ற சங்கத்தின் 67ஆவது ஆண்டுப் பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டு தனது பங்களிப்பையும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் உணர்வும் தமிழ்ப்புலமையும் இலக்கிய ஆளுமையும் நிரம்பியவர். சிறந்த சமூக சேவையாளரான இவர் கொழும்பு விவோகானந்த சபை, அகில இலங்கை இந்து மாமன்றம், திருக்கேதீஸ்வர திருப்பணிச் சபை, கொழும்பு இந்து வித்தியாவிருத்திச் சபை (சரஸ்வதி மண்டபம்) உலக தமிழாராய்ச்சி மன்ற இலங்கைக்கிளை ஆகிய அமைபப்புக்களிலும் அங்கம் வகித்து ஆற்றிய சேவைகள் அளப்பரியன. அரசகருமமொழித் திணைக்களத்தில் அதிகாரியாகவும், பாராளுமன்றத்தில் மொழி பெயர்பாளராகவும் பணிபுரிந்துள்ளார். வானொலியில் சைவநற்சிந்தனைகள், பௌத்த நற்சிந்தனைகள் இரண்டையும் நடாத்தினார். அன்னாரின் பிரிவினால் துயரும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினருக்கும் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நன்றி: நினைவுப்பகர்வை வழங்கிய திரு எஸ்.எழில்வேந்தன்
Saturday, October 31, 2009
Saturday, October 17, 2009
"தொப்புள் கொடி" தந்து தொலைந்த "நித்தியகீர்த்தி"
தொப்புள் கொடி என்னும் தன்னுடைய நாவலை வெளியீடு செய்ய 3 நாட்களே இருக்கும் நிலையில் படைப்பாளி நித்தியகீர்த்தி அவர்கள் வியாழன் இரவு மாரடைப்பால் இறந்தார் என்ற சோகச் செய்தி இன்று காலை கிட்டியது. வரும் ஞாயிற்றுக்கிழமை தனது நூல் வெளியீட்டுக்கான ஏற்பாடுகளைச் செய்து, வியாழன் இரவு மெல்பனில் இயங்கும் உள்ளூர் வானொலியிலும் தனது நூல் தொடர்பில் பேட்டி ஒன்றை வழங்கிவிட்டுப் போன இரவே மாரடைப்பால் காலன் அழைத்த அவரின் கடைசி இரவாக அமைந்தது ஜீரணிக்க முடியாத செய்தியாக வருத்தத்தை விளைவித்திருக்கின்றது.
நித்திய கீர்த்தி என்ற மனிதர் வெறும் படைப்பாளியாக அறியப்படவில்லை, அந்நியப்படவில்லை. எமது மக்களின் பிரச்சனைக்காகக் குரல் கொடுத்த கருணை உள்ளம் கொண்ட மனிதராக திகழ்ந்தவர் என்பதை நியூசிலாந்திலும், அவுஸ்திரேலியாவிலும் அவர் வாழ்ந்த காலத்தில் செயலாற்றிய பங்களிப்புக்கள் மூலம் பலரும் நன்கறிவர். நாடகப்பிரதி எழுத்தாளனாக, புனைகதை ஆசிரியனாகத் தன்னைப் படைப்பாளியாகக் காட்டியதோடு, அவுஸ்திரேலியாவின் விக்டோரிய மாநிலத்தின் ஈழத்தமிழ் சங்கத்தின் தலைவராகவும், தொண்டராகவும் நின்று செயற்பட்டவர். ஈழத்தமிழ்ச்சமூகம் சொல்லெணா நெருக்கடியைச் சந்திக்கும் இக்காலகட்டத்தில் ஒவ்வொரு சமூகத்தொண்டனின் பிரிவும் பேரிழப்பாக அமைந்து விடுகின்ற சூழ்நிலையில் அமரர் நித்தியகீர்த்தி அவர்களின் மறைவும் அவ்வமயம் பொருத்திப் பார்க்க வேண்டிய கவலையோடு ஒரு வெறுமையும் சூழ்ந்து கொள்கின்றது.
நித்தியகீர்த்தி அவர்களின் புகைப்படத்தினை இணையத்தில் தேடியபோது அவரைப் பற்றிய இன்னொரு புதிய தகவலும் கிட்டியது. அம்மா என்ற பெயரில் யூன் 2005 இல் வலைப்பதிவு ஒன்றைக் கூட ஆரம்பித்து எழுதியிருக்கின்றார்.
நீண்ட இடைவெளிக்குப் பின் மன ஓசை வெளியீடாக நூலுருக்கண்ட தனது "தொப்புள் கொடி" என்ற நாவலைக் கூடத் தன் ஈழ நேசத்தின் பிரதிபலிப்பாகத் தான் எழுதி வெளியிட்டார் என்பதை அந்த நாவலுக்கான சிறப்புக் குறிப்புக்கள் காட்டி நிற்கும். இந்த நாவல் வெளியீட்டின் அரங்கத்தைக் காணாது நிரந்தர உறக்கத்திற்குப் போய்விட்டார் இப்போது.
இன்றிரவு அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வாயிலாக , விக்டோரியா ஈழத்தமிழ்ச் சங்க முன்னாள் தலைவர் , படைப்பாளி "பாடுமீன்" சிறீஸ்கந்தராசா அவர்களை அமரர் நித்திய கீர்த்தி நினைவுப் பகிர்வை வழங்க அழைத்திருந்தேன். அந்த ஒலிப்பகிர்வை இங்கே தருகின்றேன்.
விக்கிபீடியா தளத்தில் நித்தியகீர்த்தி அவர்களின் வாழ்க்கைக் குறிப்புக்கள்
தெ. நித்தியகீர்த்தி (மார்ச் 4, 1947 - ஒக்டோபர் 15, 2009, யாழ்ப்பாணம், பருத்தித்துறை, புலோலி, இலங்கை). அவுஸ்திரேலிய, ஈழத்து எழுத்தாளர். நாடக இலக்கியத்திலும், புனைகதைகளிலும் ஈடுபாடு கொண்டவர். இலங்கையின் வடபகுதியிலான நாடக மேடையேற்றங்களூடும், தினகரன் பத்திரிகையில் பிரசுரமான கடவுள் கதைப்பாரா என்ற சிறுகதையூடும் இலக்கிய உலகத்துக்கு அறிமுகமானவர்.
இவர் தெட்சணாமூர்த்தி தம்பதிகளின் இரண்டாவது புதல்வர். தொழில் நிமித்தமாக இலங்கையை விட்டுப் புலம்பெயர்ந்து உலகின் பல பகுதிகளிலும் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதால் அவ்வப்போதான ஸ்தம்பிதங்கள் ஏற்பட்டாலும் தொடர்ந்தும் இலக்கிய உலகோடு இணைந்திருப்பவர். நியூசிலாந்தில் வாழ்ந்த காலப்பகுதியில் வெலிங்டன் தமிழ்ச்சங்கத் தலைவராக இயங்கி தமிழ்ப்பணி புரிந்ததுடன் அங்கும் நாடகங்கள் எழுதி இயக்கி மேடையேற்றி தனது இலக்கியப் பணியைத் தொடர்ந்து கொண்டே இருந்தார். தற்சமயம் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் வாழ்ந்து வந்தார். அவுஸ்திரேலியாவிலும் அவர் ஓயவில்லை. அங்கும் விக்றோரியா தமிழ்ச் சங்கத் தலைவராக இருந்து பணியாற்றியதோடு நாடகங்களும் எழுதி இயக்கி மேடையேற்றியிருக்கிறார். இவர் தொலைக்காட்சி நாடகத்துறையிலும் ஈடுபாடு மிக்கவர்.
இவரது பல சிறுகதைகள் இவர் இலங்கையில் வாழ்ந்த காலத்தில் தினகரன், வீரகேசரி போன்ற பத்திரிகைகளில் பிரசுரமாகின. புலம் பெயர்ந்து வேற்று நாடுகளில் வாழ்ந்து கொண்டிருந்த காலங்களிலும் இவரது படைப்புகள் ஈழத்துப் பத்திரிகைகளிலும் மற்றும் புலம்பெயர் சஞ்சிகைகளிலும் பிரசுரமாகிக் கொண்டிருந்தன. தற்சமயம் அவுஸ்திரேலியாவில் வெளிவரும் சுடரொளி, ஞானம், அவுஸ்திரேலிய ஈழமுரசு போன்ற பல பத்திரிகைகளிலும் எழுதுகிறார். குறிப்பிடத்தக்க கட்டுரைகளும் எழுதியுள்ளார்.
* மீட்டாத வீணை (புதினம்), கமலா வெளியீடு, முதற் பதிப்பு - மார்கழி 1974, பருத்தித்துறை, சிறீலங்கா அச்சகம், யாழ்ப்பாணம்
* தொப்புள் கொடி (நாவல்) மனஓசை வெளியீடு, முதற் பதிப்பு - சித்திரை 2009, சுவடி, இந்தியா
ஈழத்தில் மேடையேறிய இவரது நாடகங்களில் சில:
* தங்கப் பதக்கம்
* தங்கம் என் தங்கை
* நீதி பிறக்குமா?
* பாட்டாளி
* பிணம்
* மரகதநாட்டு மன்னன்
* வாழ்வு மலருமா
நியூசிலாந்தில் மேடையேறிய இவரது நாடகங்களில் சில:
* கூடு தேடும் பறவைகள்
* மரணத்தில் சாகாதவன்
அவுஸ்திரேலியாவில் மேடையேறிய இவரது நாடகங்களில் சில:
* பறந்து செல்லும் பறவைகள்
* ஊருக்குத் தெரியாது
* வேங்கை நாட்டு வேந்தன்
இவரது நாடகங்களில் சில பரிசில்களும் பெற்றுள்ளன.
நூலகத் திட்டத்தில் இவரது "மீட்டாத வீணை" நாவல்
வடலி இணையம் மூலமாக இவரின் புதிய நாவலான "தொப்புள் கொடி" இணைப்பு
நன்றி:
அஞ்சலியைப் பகிர்ந்து கொண்ட பாடுமீன் சிறீஸ்கந்தராஜா
அமரர் நித்தியகீர்த்தியின் வாழ்க்கைக்குறிப்பைப் பகிர்ந்த விக்கிப்பீடியா
மன ஓசை கூகிள் குழுமம்
வடலி இணையம்

Thursday, October 01, 2009
கே.எஸ்.பாலச்சந்திரனின் "கரையைத் தேடும் கட்டுமரங்கள்"
கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள் ஈழத்தின் தனி நடிப்புக் கலைஞராக ,வானொலி, தொலைக்காட்சிக் கலைஞராக,சினிமா நடிகராக ரசிகர் மனதில் நீங்கா இடம்பிடித்த கலைஞர். ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து வரும் இவர் புலம்பெயர்ந்த மண்ணிலும் தன் கலைச் சேவையை ஆற்றி வருகின்றார். இவர் நடிப்புத் துறையில் மட்டுமன்றி எழுத்துலகிலும் தன் தடத்தைப் பதித்திருக்கின்றார் என்பது பலரும் அறியாததொன்று. குறிப்பாக வடலி வெளியீடாக இவரது "கரையைத் தேடும் கட்டுமரங்கள்" ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி கனடாவின் Agincourt Community Centre இல் மாலை 5.30 மணிக்கு வெளியிடப்படுகின்றது. அதனையொட்டி திரு.கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களை அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் "ஈழத்து முற்றம்" நிகழ்ச்சிக்காக அவரை நான் வானலையில் சந்தித்த பேட்டியை இங்கே தருகின்றேன்.
ஒலி வடிவில்
வணக்கம் திரு.கே.எஸ்.பாலசந்திரன் அவர்களே
வணக்கம்
ஆரம்பத்திலே தனிநடிப்புத் துறை, பின்னர் வானொலி தொலைக்காட்சி நடிகர் அத்தோடு ஈழத்து திரைப்பட நடிகர் என்று பல முகங்களிலே உங்களுடைய நடிப்புத்திறனை ஒரு கலைஞராக நீங்கள் வெளிப்படுத்தியிருக்கின்றீர்கள். இவற்றைத் தவிர எழுத்துத்துறையிலே ஆரம்பகாலத்தில் இருந்து உங்களுடைய முயற்சிகள் எப்படி இருந்தன என்பது பற்றிச் சொல்லுங்களேன்.
நான் இளைஞனாக இருந்தபோது ஆரம்பத்தில் சிரித்திரன் சஞ்சிகையிலே சிரிப்புக்கதைகள் அதைச் "சிரி கதைகள்" என்று சிரித்திரன் ஆசிரியர் சிவஞானசுந்தரம் சொல்லுவார், அப்படிச் சிரிகதைகள் நிறைய எழுதியிருக்கிறேன். அதன் பிறகு சிறுகதைகளை அவ்வப்போது இலங்கையின் பிரபல தினசரிகளின் வாரப்பதிப்புக்களிலே எழுதியிருக்கிறேன்.
இவற்றை விட எழுத்துத்துறை என்று சொன்னால் இலங்கை வானொலியில் எனது நகைச்சுவை நாடகங்களும் அதே போல சமூக நாடகங்களும் குணசித்திர பாத்திரங்கள் நிரம்பிய சோகமயமான நாடகங்கள் கூட ஒலிபரப்பாகியிருக்கின்றன. அவற்றை நான் எழுதியிருக்கிறேன். "கிராமத்துக் கனவுகள்" என்பற தொடர் நாடகம் அவற்றுள் ஒன்று.
கிராமத்துக் கனவுகள் போன்ற நாடகப் பிரதிகள் போன்றவற்றையும், சிரிகதைகளையும் எழுதியிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கின்றீர்கள். இவற்றை சிரித்திரன் தவிர்ந்த மற்றைய பத்திரிகைகள் மூலமாக வந்திருக்கும் உங்கள் எழுத்தாக்கங்கள் பற்றி?
நான் எழுதிய சிறுகதைகள் "மலர் மணாளன்" என்ற எனது புனைபெயரிலே வீரகேசரி, தினகரன் போன்ற பத்திரிகைகளிலே வந்திருக்கின்றன. அவற்றை விட நிறைய கலை சம்பந்தமான கட்டுரைகளை இலங்கையின் தினசரிகளான தினபதி, தினகரன், வீரகேசரி போன்றவற்றின் வாரப்பதிப்புகளிலே நிறையக் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறேன்.
ஆரம்பகாலகட்டத்திலே ஈழத்து சினிமாவின் ஒரு மைல் கல் அல்லது ஒரு மகுடமாகத் திகழ்கின்ற திரைப்படமான "வாடைக்காற்று" என்ற ஒரு திரைப்படத்திலே ஒரு அருமையான பாத்திரத்தை ஏற்று நடித்திருந்தீர்கள். இப்பொழுது உங்களின் ஒரு புதிய முயற்சியாக "கரையைத் தேடும் கட்டுமரங்கள்" என்ற கிட்டத்தட்ட வாடைக்காற்று நாவல் போன்ற கடலோரத்து வாழ்வியலைப் பிரதிபலிக்கக் கூடிய நாவல் ஒன்றை உருவாக்கியிருக்கின்றீர்கள்.
உங்களின் இந்த "கரையைத் தேடும் கட்டுமரங்கள்" நாவல் பற்றிச் சொல்லுங்களேன்.
"கரையைத் தேடும் கட்டுமரங்கள்" என்ற இந்த நாவல் நீங்கள் குறிப்பிட்டதைப் போன்று கடலோடிகளின் கதை சொல்லும் ஒரு நாவல். எனக்கு எப்பொழுதுமே இந்தக் கடலோடிகள் மீது மிகுந்த பற்று, விருப்பம் இருக்கிறது. காரணம் இந்த நாவலின் என்னுரையிலேயே நான் குறிப்பிட்டிருக்கின்றேன். கடலில் தினமும் அலைகளோடு ஜீவமரணப் போராட்டம் நடாத்தி மீளும் அல்லது தோற்றுப் போகும் சமூகத்திடம் எனக்குள்ள நியாமான மதிப்பும், இரக்கமும் தான் இந்த நாவலை எழுதத் தூண்டியிருக்கின்றது என்று.
நீங்கள் குறிப்பிட்ட இந்த வாடைக்காற்று திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்த பொழுது அந்தத் திரைப்படத்திலே நடித்த நடிகர், உதவி இயக்குனர் என்ற வகையிலே அங்குள்ள அந்த மக்களின் வாழ்வியலை அன்றாட வாழ்க்கையை அவதானித்து என் மனதில் புடம் போட்டு அதன் அடிப்படையிலே எழுதியது தான் இந்த நாவல்.
அப்படியென்றால் "வாடைக்காற்று" காலத்தில் இருந்தே இந்த நாவல் குறித்த கரு உங்கள் அடிமனதிலே தங்கியிருக்கின்றது, அப்படித்தானே?
ஆமாம், அந்தக் களம் வேறு. நான் பாவித்த இந்த நாவலுக்கான கதைக்களம் வேறென்றாலும் கூட அந்தக் கருவை நான் நீங்கள் சொன்னது போல வாடைக்காற்றுத் திரைப்படக் காலத்தின் போது தான் நான் மனதில் உருவகித்து காலம் செல்ல விரிவு படுத்தி 306 பக்கங்கள் உள்ள ஒரு நாவலாக எழுதினேன்.
அப்படியென்றால் 33 ஆண்டுகளுக்குப் பின்னால் இந்த நாவலின் கரு இப்போது நூல் வடிவிலே பிரசவமாகியிருக்கின்றது. இந்த வேளை "கரையைத் தேடும் கட்டுமரங்கள்" என்ற நாவலை எழுதி நூல் வடிவில் கொண்டு வர வேண்டும் என்று நினைத்த போது பதிப்பாக்கம் என்ற வகையிலே நீங்கள் எடுத்த முயற்சி பற்றி விளக்கமாகச் சொல்லுங்களேன்.
உண்மையில் இந்த நாவலை நூல் வடிவில் காணவேண்டுமென்ற ஆசை நீங்கள் சொன்னது போல நீண்ட காலமாக இருந்தது. இந்தக் கதையின் பின்னணி ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முந்திய காலப்பகுதி. இதை நூல்வடிவிலே கொண்டு வருவதற்காக நான் பல பதிப்பகங்களைத் தொடர்பு கொண்டேன். ஏதோ பிற காரணிகளினால் அது தடைப்பட்டுப் போன பின்னர் நீங்கள் எழுதிய கம்போடியப் பயணம் பற்றிய "கம்போடியா - இந்தியத் தொன்மங்களை நோக்கி" என்ற அந்த நூலை வெளியிட்ட வடலி பதிப்பகம் இதற்குப் பொருத்தமானவர்கள் என்று நீங்கள் வழிகாட்டி விட அதையொட்டித்தான் நான் அவர்களைத் தொடர்பு கொண்டேன்.
மிகுந்த ஆர்வமுள்ள இளைஞர்கள், வடலிப்பதிப்பகத்தைச் சார்ந்த அகிலன் அவர் ஒரு படைப்பாளி, கவிஞர், சிறுகதை எழுத்தாளர். அதே போன்று சயந்தன், இருவரும் இணைந்து மிகவும் உற்சாகமாக எனது நாவலை வெளியிடுவதற்கு உதவி புரிந்தார்கள். மிகவும் சிரமப்பட்டார்கள். உங்களுக்குத் தெரியும் 306 பக்கமான ஒரு நாவல் பிரதியை வெளியிடும் போது அதில் பல தவறுகள், எழுத்துப் பிழைகள் எழலாம். அவற்றை எல்லாம் திருத்துவதற்கு அவர்கள் அங்கிருந்து இங்கும், இங்கிருந்து அங்குமாக நாங்கள் ஈ மெயில் மூலமாக எத்தனையோ பிழைகளைக் கண்டு திருத்தி பிழைகளற்ற ஒரு நாவலாக வெளியிடுவதற்கு அவர்கள் மிகவும் உறுதுணையாக இருந்தார்கள். அந்த வடலிப்பதிப்பகம் நம்மவர்கள் சார்ந்த பதிப்பகம் என்ற வகையிலே எமது படைப்புக்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கின்றவர்களாகவும், எமது படைப்பாளிகளை மதிக்கின்றவர்களாகவும் நான் அவதானித்தேன். அந்த வகையிலே அந்தப் பதிப்பகம் பக்கம் கைகாட்டி விட்ட உங்களுக்கு என் தனிப்பட்ட நன்றியும். இந்த நாவலை நான் நூல் வடிவில் கொண்டு வருவதற்கு என்னை விட அவர்கள் அதிகம் சிரமப்பட்டார்கள்.
பொதுவாக ஒரு நாவலுடைய முழுத்தோற்றத்தையும் பிரதிபலிக்கக்கூடியது அதன் அட்டைப்படம், அப்படியானதொரு அட்டைப்படத்தை நீங்கள் அமைக்கவேண்டும் என்ற எண்ணம் எழுந்த பொழுது எந்த ஓவியர் இந்த நாவலுக்கு பொருத்தமானவர் என்று நினைத்தீர்கள்?
சயந்தன் ஏற்கனவே ஒரு இணையத்தளத்திலே குறிப்பிட்டிருந்தார். அதாவது ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முந்திய ஒரு கதை, கதைக்களம் எங்கள் யாழ்ப்பாண மண். இவற்றுக்குப் பொருத்தமான ஒரு ஓவியர் ஏறக்குறைய அந்தக் காலகட்டத்திலே வாழ்ந்த, அப்படியான நாவல்களுக்கு அட்டைப்படம் வரைந்த ஓவியராக இருக்கவேண்டும். ஏனென்றால் எங்கள் மண்ணின் முகங்களை அவர் சிறப்பாக வரைந்து தருவார் என்ற நம்பிக்கையை சயந்தனும் எனக்குத் தந்தார். எனவே தான் நான் இந்திய ஓவியர்களைப் பயன்படுத்தியிருக்கலாம், அது
சுலபமான காரியமாக முடிந்திருக்கும். இருந்தாலும் கூட இந்த நாவலுக்கு குறிப்பாக எங்கள் மண்ணின் ஓவியர் ஒருவர் வரைவதுதான் பொருத்தமாக இருக்கும் என நினைத்து, எனக்கு நண்பராக ஒரு காலத்திலே இருந்த, தொடர்பு அற்றுப் போய் விட்ட சிறந்த ஓவியர் ரமணி அவர்களைத் தொலைபேசி மூலம் அழைத்து இப்படியான ஒரு நாவலுக்கு நீங்கள் தான் அட்டைப்படம் வரைய வேண்டும் என்று கேட்டு, இந்த நாவலின் கதையை அவருக்கு அனுப்பி வைத்து அதைக் கொண்டு அவர் இந்த நாவலுக்கான சிறப்பான ஓவியத்தை
வரைந்து தந்தார். உண்மையிலேயே யாழ்ப்பாணம் ரமணி அவர்களுடைய ஓவியம் இந்த நாவலுக்கு அணி சேர்க்கும் சிறப்பாக நான் அதைக் கருதுகிறேன்.
நிச்சயமாக இந்த "கரையைத் தேடும் கட்டுமரங்கள்" நாவலின் அறிமுகம் இணையத்தளங்களிலே வெளியிடப்பட்ட போது இந்த அட்டைப்படத்தைப் பார்க்கக் கூடிய ஒரு வாய்ப்புக் கிடைத்தது. உண்மையிலேயே புலம்பெயர்ந்த எமது படைப்பாளிகள் தமது எழுத்துக்களை வெளிக்கொணரும் போது ரமணி போன்ற எமது தாயக மண்ணின் பிரதிபலிப்பைக் காட்டக் கூடிய ஓவியர்களை இதுவரை தேர்ந்தெடுத்ததில்லை என்று தான் என்னுடைய அறிவுக்கு எட்டியவரை எண்ணுகின்றேன். உண்மையிலேயே உங்களுடைய நாவலுக்கு ரமணியின் அட்டைப்படம் சிறப்புச் சேர்ப்பதாக அமைந்திருக்கின்றது.
இந்த கரையைத் தேடும் கட்டுமரங்கள் என்ற நாவல் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தைச் சுற்றி நடக்கின்ற கதையா, அல்லது முழுமையான அந்த கடலோர வாழ்வியலைப் பிரதிபலித்து அதிலே வருகின்ற பாத்திரங்கள் எல்லாவற்றுக்குமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கின்றதா?
உண்மையில் இந்தக் கதையில் ஒரு பிரதான பாத்திரம், அவரைச் சுற்றிய சம்பவங்கள் என்று இருந்தாலும் கூட அவர் சார்ந்த மற்றைய பாத்திரங்கள் அனைத்துக்கும் ஏதோ ஒருவகையில் முக்கியத்துவம் இருக்கும் வகையில் பார்த்துக் கொண்டேன். வழக்கமாக இந்த முரண்பாடுகளை வைத்துத்தான் அனேகமான படைப்புக்கள் வருவதுண்டு. அதாவது பாத்திரங்களுக்கிடையே, உறவுகளுக்கிடையே ஏற்படும் முரண்பாடுகள், முதலாளி - தொழிலாளி பேதங்கள் இப்படிப் பலவிதமான பிரச்சனைகளைத்தான் ஆதாரமாகக் கொண்டு நாவல்களை அமைப்பதுண்டு. அப்படியில்லாமல் யதார்த்தமாக அவர்கள் வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்தவற்றை நான் அப்படியே வழங்க முயற்சித்திருக்கின்றேன். இதில் வில்லன் பாத்திரம் என்று யாரும் இல்லை. ஆனால் எல்லோருமே கதாநாயகர்களாக இருக்கிறார்கள்.
இந்த நாவலுக்கு அணி சேர்க்கும் வகையிலே நாவல் குறித்த விதந்துரையைப் பகிர்ந்தவர் யார் என்று குறிப்பிடுங்களேன்
இந்த நாவலுக்கான முன்னுரையை எழுதியவர் தமிழ் கூறும் நல்லுலககெங்கும் அறியப்பட்ட ஒரு சிறந்த அறிவிப்பாளரும், கலையுலகின் ஒரு சிறப்பான கலைஞனும் என்னுடைய சமகாலக் கலைஞனுமான பி.எச்.அப்துல்ஹமீத் தான் இந்த நாவலுக்கான முன்னுரையை, என்னைப் பற்றிய அறிமுக உரையை இணைத்து வழங்கியிருக்கின்றார்.
நான் அவரை அணுகியதற்குக் காரணம் அவருடைய ரசனை எப்படியென்று எனக்குத் தெரியும். எமது நாடகங்களிலே நாங்கள் நடிக்கும் பொழுது அவர் பல நாடகங்களை இயக்கியிருக்கின்றார். அவரை அறிவிப்பாளராக அறிந்தவர்கள் ஒருபுறமிருக்க அவர் ஒரு நாடகத் தயாரிப்பாளராக, ஒரு பாடலாசிரியராக, இறைதாசன் என்ற பெயரிலே நிறையப் மெல்லிசைப் பாடல்களை எழுதியிருகின்றார். அப்படி அவருக்கு இன்னுமொரு பக்கம் இருக்கிறது. அவருக்குக் கலை மீது மாத்திரமல்ல எழுத்துத்துறையின் மீதும் அக்கறையும், திறனும் இருக்கிறது என்று நிரூபிக்க வேண்டும் என்ற அதே ஆவலுடன் என் கலையுலகத்தைப் பற்றி, என் வாழ்வைப் பற்றி மிகவும் அறிந்த அந்த நண்பரே என் நாவலுக்கும் முன்னுரை எழுத வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். அதில் தவறில்லை என்று நான் நினைக்கிறேன்.
"கரையைத் தேடும் கட்டுமரங்கள்" நாவல் நூல் வெளியீடு குறித்த விபரங்களைத் தாருங்களேன்
என்னுடைய நாவல் கனடாவிலே ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு Agincourt Community Centre என்ற இடத்திலே வெளியிடப்பட இருக்கின்றது. அதைப்போல மற்றைய இடங்களிலே விழா என்ற ரீதியில் நடைபெற முடியாவிடினும் நிச்சயமாக அறிமுகப்படுத்தப்படும், அறிமுக விழாக்களிலே அதுவும் இடம்பெறும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது. வெளிநாடுகளிலே வாழுகின்ற அன்பர்கள் இந்த நாவலை வடலி பதிப்பகத்தின் இணையத்தளத்தின் மூலமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
எமது வாழ்வியலின் பிரதிபலிப்பாக இருக்கும் இந்த நாவல் உலகளாவிய ரீதியிலே பெரும் வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கையோடு நிறைவாக நீங்கள் உங்கள் ரசிகர்களுக்குச் சொல்ல விரும்புவது என்ன?
ஒரு நீண்ட காலக் கலை வாழ்க்கையிலே பலவிதமான சந்தோஷங்களை, வெற்றிகளை, தோல்விகளைக் கூட சம்பாதித்திருந்தாலும் அவ்வப்போது ஏதோவொரு நிகழ்வு என் நெஞ்சில் பதியும் வகையிலே சிறப்பாக அமைவதுண்டு. அந்த வகையிலே வானொலி நாடகங்களிலே தணியாத தாகமும், திரைப்படங்களிலே வாடைக்காற்றும், தனி நபர் நடிப்பு என்ற வகையிலே அண்ணை றைற்றும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி என்ற வகையிலே வை.ரி.லிங்கம் ஷோவும் இப்படிப் பல வெற்றிகள் என்னை அணுகிய போதும் எழுத்துத் துறையிலே எனக்கு மிகுந்த ஒரு வெற்றியைத் தரக்கூடிய ஒரு படைப்பாக "கரையத் தேடும் கட்டுமரங்கள்" என்ற நாவல் மீது நான் அபரீதமான நம்பிக்கையை வைத்திருக்கிறேன். நிச்சயமாக உலகளாவிய ரீதியில் வாழும் என்னை நேசிக்கும் ரசிகர்கள், எனது இன்னொரு முகத்தைத் தரிசிக்கும் வகையிலே எனது நாவலுக்கும் ஆதரவுக்கரம் நீட்டு அதே வேளை நாவல் பற்றிய விமர்சனங்களை என்னோடு பங்கிட்டுக் கொள்வார்கள். என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றேன்.
கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களே ! மீண்டும் எமது வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டு அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் சார்பில் இப்போது உங்களிடமிருந்து விடைபெற்றுக் கொள்கின்றோம்
இந்த நேர்காணலை அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழ் நெஞ்சங்கள் கேட்கும் வகையிலே ஒலிபரப்புச் செய்யும் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கும் என்னை நேர்காணல் செய்த அன்புச் சகோதரன் கானா பிரபாவிற்கும் அனைத்து நேய நெஞ்சங்களுக்கும் எனது அன்பான, பணிவான வணக்கங்களைக் கூறி விடைபெறுகின்றேன்.