"ஆடாதே ஆடாதே சூதாட்டம் ஆடாதே.....கூடாதே கூடாதே... கூட்டத்தில் சேராதே...."
ஈழத்துப் பொப்பிசைப் பிரியர்கள் இந்தத் துள்ளிசை கலந்த போதனைப் பாடலை மறந்திருக்க மாட்டார்கள். அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் "பொப்பிசைத் திலகம்" எஸ்.ராமச்சந்திரன் அவர்கள் கடந்த 16.02.2020 இல் தாயகத்தில் மறைந்தார்.

ஈழத்தில் அரியாலை எனும் ஊரில் பிறந்த எஸ்.ராமச்சந்திரன் அவர்கள் ஈழத்து மெல்லிசைப் பாடல் உலகில் சிறுகப் பாடினாலும் பெருக ரசிகர் மனதில் நிறைந்தவர் என்பதற்கு "ஆடாதே ஆடாதே" பாடலோடு "கனவில் வந்த கனியே" https://www.youtube.com/watch?v=KtHfD-BkAH8 மற்றும் "வான நிலவில் அவளைக் கண்டேன்"https://www.youtube.com/watch?v=UcGqAirC8A4 ஆகிய பாடல்கள் குறிப்பிடத்தக்கவை.
ஒரு பக்கம்
“கள்ளுக்கடைப் பக்கம் போகாதே
காலைப் பிடித்துக் கெஞ்சுகிறேன்"
காலைப் பிடித்துக் கெஞ்சுகிறேன்"
என்று "பொப்பிசைப் பிதா" நித்தி கனகரத்தினம் அவர்கள் முழங்க, இன்னோர் பக்கம்
“ஆடாதே ஆடாதே சூதாட்டம் ஆடாதே....."
என்று "பொப்பிசைத் திலகம்" எஸ்.ராமச்சந்திரன் பாடிய அந்தப் பசுமையான பொற்கால நினைவுகள் மனதில் எழ, நித்தி கனகரத்தினம் அவர்களை எஸ்.ராமச்சந்திரன் அவர்கள் குறித்த நினைவுப் பகிர்வைத் தர அழைத்தேன்.
அந்த நாள் நினைவு சூழ்ந்த ஒலிப் பகிர்வைக் கேட்க
அந்த நாள் நினைவு சூழ்ந்த ஒலிப் பகிர்வைக் கேட்க