"நான் எப்போதும் நானாகத் தான் இருக்கிறேன், மற்றவர்கள் தான் என்னில் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்", சமீபத்தில் ட்விட்டரில் நான் இட்ட கருத்து ஒன்று. சிறுவயதில் இருந்து தீவிர வாசிப்புப் பழக்கமும், அவ்வப்போது சிறுவர் கதை, கட்டுரை என்று எழுதி பள்ளிக்கூடக் கையெழுத்துப் பத்திரிகைகளில் இருந்து, ஈழநாடு, அர்ச்சுனா போன்ற இதழ்களில் வந்தது ஒரு சில என்றால் அனுப்பியும் அச்சில் வராத எழுத்துக்கள் ஓரு நூறு பெறும். கடந்த ஆறுவருஷ வலைப்பதிவு அனுபவம் எனக்கான எல்லாக் கதவுகளையும் திறந்து விட்டதாகத் தான் எண்ணத் தோன்றுகின்றது.
நேற்றுப் போல இருக்கின்றது ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் வலைப்பதிவு உலகில் நானும் ஒரு பங்காளியாக மாறி எழுத வந்த நாள் இன்னும் பசுமையாக நினைவில். அன்றைய சூழலில் வலைப்பதிவு உலகில் எத்தனையோ பல சீரிய பல பதிவர்கள் இயங்கிவந்த சூழல். அப்போதெல்லாம் தமிழ்மணம் தளத்தில் ஒவ்வொரு பதிவுகளுமே தனித்துவமான படைப்புக்களாக இருந்திருந்தன. காலமாற்றத்தில் வலைப்பதிவு மோகம் மெல்ல மெல்லக் குறைந்து தனித்தளங்களுக்குத் தங்களை மாற்றிக்கொண்டோரும், அப்படியே ஓய்ந்து போனோருமாக, இன்று என்னுடய சமகாலத்திலும், அதற்கு முன்பும் தீவிரமாக இயங்கிய வலைப்பதிவர்களில் இன்று ஒரு சிலரை, அதுவும் அவ்வப்போது வலைபதிபவர்களாகத் தான் பார்க்க முடிகின்றது. இது நல்லதா என்றால், வலைப்பதிவுலகின் வாசகன் என்றவகையில் இல்லை என்பேன். எத்தனை எத்தனை நல்ல எழுத்துக்களை இனம் காட்டியது இந்தப் பதிவுலகம், இன்றோ தேடியோ, யாராவது பரிந்துரை கொடுத்தாலோ மட்டுமே எட்டிப்பார்க்க முடிகின்றது. 2009 ஆம் ஆண்டில் ஈழத்தின் அவலம் மிகுந்த நாட்களுக்குப் பின்னர் அப்படியே கொத்தாக ஒரு தொகை பதிவர்களை இழந்ததைக் காண்கின்றேன். நாடே போய்விட்டது இனி என்ன என்று சொன்னார் என் சக வலைப்பதிவர். எல்லாம் இழந்த வெறுமையில் இனிமேல் இந்தச் சூழலில் இருந்து ஒதுங்கித் தமக்கான தண்டனையாக நினைத்துக் கொண்டோரால் வாசக உலகம் தான் இழந்தது சீரிய எழுத்துக்களை.
மடத்துவாசல் பிள்ளையாரடி, எங்களூர்க் கோயில். அந்தக்காலத்து எம் நினைவுகளின் எச்சங்களை இன்னும் தாங்கிப்பிடித்திருக்கும் சூழல். எப்போது மடத்துவாசல் பிள்ளையாரடி மண்ணை மிதித்தாலும் அந்தக் கனவுலகத்தில் என்னைப் புதைத்து நிற்பேன். அதனால் தான் எம் ஊர் பற்றிய சிந்தனை வரும் போது நினைவுகளுக்கு வடிகாலாய் நான் இந்த மடத்துவாசல் பிள்ளையாரடியில் எழுதத் தொடங்குவேன். இந்தப் பதிவில் இருந்து கிளைகளாகப் பல வலைப்பதிவுகளைத் தொட்டாலும், இன்னும் என் மடத்துவாசல் பிள்ளையாரடியில் மாதம் ஒன்றாவது பதிவைக் கொடுத்து நன்றிக்கடனைக் கழிக்கின்றேன்.
"நினைவு நல்லது வேண்டும்" என்று சொன்ன பாரதி போல, என் எழுத்திலும் நல்ல விஷயங்களை மட்டுமே பகிர நினைத்தேன், க்கிறேன். இது தொடரும்.
எனது ஈழத்து நினைவுகளுக்கும், எம்மவர் குறித்த சிலாகிப்புக்களுக்குமாக
மடத்துவாசல் பிள்ளையாரடி
என்னை அவ்வப்போது உயிர்ப்பிக்கும் நல்மருந்தாய் அமையும் பாடல்கள்,பின்னணி இசைப் பகிர்வுகளுக்காக
றேடியோஸ்பதி
எனக்கு உலாத்தப் பிடிக்கும், அதைவிட உலாத்தியதைப் பேசப்பிடிக்கும் அதற்காக
உலாத்தல்
காணொளிகளில் நெஞ்சம் நிறைந்தவைகளைப் பகிர
வீடியோஸ்பதி
இவை தவிர ஈழத்து முற்றம் என்னும் கூட்டு வலைப்பதிவு மூலம் ஈழத்துப் பதிவர்களை ஒருங்கிணைத்து ஈழத்துப் பிரதேச வழக்குகள், பண்பாட்டுக் கோலங்கள் போன்றவற்றுக்கான களத்திலும்,
நான் வாழும் அவுஸ்திரேலிய தேசத்து அரசியல், கலாச்சார, சுற்றுலாப்பதிவுகளைத் தர
கங்காரு கெவலாவும் காய்ஞ்ச புல்லும் என்ற கூட்டுவலைப்பதிவில் எழுதி வந்தேன். தொடர்ந்து இந்த வலைப்பதிவில் பங்களிப்பாளர்கள் வெறுமையான சூழலில், என் சொந்த வலைப்பதிவான உலாத்தலில் தொடர்ந்து கவனம் செலுத்த முனைந்திருக்கின்றேன். இனிமேல் இந்த வலைப்பதிவில் என் புதிய இடுகைகள் வராது.
அருமை நண்பர் ஜி.ராகவனின் வேண்டுகோளின் பிரகாரம் இசையரசி என்னும் பி.சுசீலா அம்மாவின் பெருமைகளை அவர் தம் பாடல்கள் மூலம் காட்டும் கூட்டு வலைப்பதிவில் இயங்கி வந்தேன். ஏற்கனவே பல தளங்களில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் இந்தக் கூட்டுவலைப்பதிவிலும் நான் தொடர்ந்து பங்கேற்க முடியுமா என்பதும் சந்தேகமே.
இவற்றோடு இந்த ஆண்டில் றேடியோஸ்பதி இணைய வானொலியையும் ஆரம்பித்திருக்கின்றேன். இந்த வானொலி எதிர்காலத்தில் உலகெங்கும் பரந்துவாழும் வலைப்பதிவர்களில் வானொலி ஊடகத்துறையில் ஆர்வமுள்ளோருக்கான களமாக அமையும். றேடியோஸ்பதி 24 மணி நேர இணைய வானொலி அகப்பக்கம் இங்கே http://radiospathy.wordpress.com/
மடத்துவாசல் பிள்ளையாரடியில் ஈழத்து வாழ்வியல், கலை இலக்கியப்படைப்பாளிகள் குறித்த ஆவணப்பதிவுகளை 2012 இல் இன்னும் முனைப்போடு செயற்படுத்த எண்ணியுள்ளேன். உங்கள் ஆதரவுக்கும் தொடர்ந்த ஊக்குவிப்புக்கும் என் நன்றிகளை இவ்வேளை பகிர்ந்து கொள்கின்றேன்.
நேசம் கலந்த நட்புடன்
கானா பிரபா
www.kanapraba.com
வலைப்பதிவில் ஒரு வருஷம்
2006 ஆம் ஆண்டில் வலைப்பதிவில் என் ஒரு வருடப் பதிவுகளின் தொகுப்பாய்.
வலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று
2007 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் தொகுப்பு
வலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்
2008 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் படையல்
வலைப்பதிவுலகில் என் நான்கு வருஷங்கள்
2009 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் படையல்
வலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள்
2010 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் படையல்
2011 ஆம் ஆண்டில் என் மடத்துவாசல் பிள்ளையாரடியில் இட்ட பதிவுகள்
"முகத்தார்" என்ற எஸ்.ஜேசுரட்ணம் நினைவில்
இலங்கை வானொலி என்னும் ஆலமரம் தன் விழுதுகளாகப் பல கலைஞர்களை நிலைநிறுத்தியிருக்கின்றது. வானொலிக் கலைஞராக வருமுன்னேயே பலர் கலைத்துறையில் மேடை வெளிப்பாடுகளின் மூலம் தம்மை அறிமுகப்படுத்தியிருந்தாலும் இலங்கை வானொலி வழி அத்தகைய கலைஞர்களின் பரிமாணத்தை பரந்ததொரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியிருந்தது. அப்படியொரு கலைஞன் தான் "முகத்தார்" எஸ்.ஜேசுரட்ணம்.
1.1.11 - "கத தொடருன்னு"
1.1.11 பிறந்திருக்கின்றது. வழக்கம் போல புதிய ஆண்டு பிறக்கும் போது நாளை மற்றுமொரு நாளே என்ற எண்ணம் இல்லாத உணர்வாகத் தான் இன்றைய விடியலையும் ஆரம்பித்து வைத்தேன். காலையில் சிட்னி முருகன் கோயில் போனேன், பின்னர் ஒரு மணி நேரப் பயணத்தில் நேராக மல்கோவா மாதா ஆலயம் சென்று தரிசிக்கின்றேன்.
"இராவண்ணன்" படைத்த சுஜித் ஜி
"வான்மீகி வரைந்த இராமாயணத்தால்
ஆரியன் இராமன் ஆண்டவனானான்
அயலவன் வாலி குரங்கானான் - என்
முப்பாட்டன் இராவண்ணன் அரக்கனானான்
ஆரியத்துக்கு நான் இராவண்ணன்"
காதுக்குள்ள கேக்குது இன்ரநெற் றேடியோ
இப்போதெல்லாம் செல்பேசி நிறுவனங்கள் செல்போனில் பாவிக்கும் இணையப் பாவனையைத் தாராளமாக்கியிருக்கின்றன. எனவே அதிக கட்டணம் ஆகும் என்றெல்லாம் பயந்து பயந்து வானொலியைக் கேட்க வேண்டிய காலமும் மெல்ல மறைகிறது.
காதுக்குள்ளே இன்ரநெற் றேடியோவைக் கேட்டுக் கொண்டே பதிவு எழுதுவதும் கூடச் சுகம் சுகமே... ;-)
ஈழக்கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் ஆடிய களம்
ஈழத்தமிழர் உணர்வுகளைத் தன் கவிதைகளால் வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மவர் வ.ஐ.ச.ஜெயபாலன் அண்ணர் இப்போது தமிழகத்தவர்களால் ஒரு சிறந்ததொரு திரைக்கலைஞர் என்றதொரு அவதாரம் எடுத்திருக்கின்றார். தேர்ந்தெடுத்த புதிய களம் குறித்த அனுபவங்களை நேற்று வானொலிச் செவ்வியாக எடுத்திருந்தேன்.
முரசு, செல்லினம் முத்து நெடுமாறன் பேசுகிறார்
தமிழ் இணையப்பரப்பில் முக்கியமானதொரு ஆளுமையாக விளங்கும் மலேசியா வாழ் கணினியியலாளர் திரு.முத்து நெடுமாறன் அவர்களை அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காகச் சந்தித்தேன். இந்தப் பேட்டியின் வாயிலாக முத்து நெடுமாறன் அவர்களது தமிழ் கணிய முயற்சிகளின் ஆரம்பம் முதல் இன்றுவரையான அவரின் மனப்பதிவுகளைப் பகிர ஒரு வாய்ப்பாக அமைந்தது.
கும்பிடப் போன தெய்வம்
எச்சரிக்கை: இது என் முதல் சிறுகதை முயற்சி ;-)
ஈழத்துத் திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன் பேசுகிறார்
கே.எஸ் சிவகுமார் அவர்கள் 1936ஆம் ஆண்டில் மட்டக்களப்பில் பிறந்து கொழும்பை வாழ்விடமாக கொண்டவர். திரைப்படம் இலக்கியம் விமர்சனம் என்று கடந்த 45 வருடங்களுக்கு மேலாக இலங்கையை மையமாகக் கொண்டு எழுதி வருபவர். கடந்த மாதம் அவுஸ்திரேலியா வந்த பொழுது அவரை நான் எமது அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் சார்பில் சந்தித்தேன்.
"சத்யசாயி சென்ரர்" மானிப்பாய் வீதி, தாவடி
அது எண்பத்தைந்துகளின் ஒரு மாதம், எங்கள் வைரவர் கோயிலுக்கு முன் வழக்கத்துக்கு மாறாக அன்னிய முகங்கள். கூடவே அவர்களை உபசரித்துக்கொண்டு முருகேசம்பிள்ளை மாமா. நமது ஊரில் அதுநாள் வரை பழகியிருக்காத வெள்ளை குர்தாவும், பைஜாமாவும் போட்ட அந்தப் புதுமனிதர்கள் நொடிக்கொரு தடவை சாய்ராம் சொல்வதும் எங்களுக்குப் புதுமையாக இருந்தது.
அகவை எழுபதில் BBC தமிழோசை
"தம்பி! அந்த பிபிசியைத் திருப்பி விடு" அப்பா சொல்லுறார். மேசையில் படித்துக் கொண்டிருந்த என்னை உசுப்பிவிடப் பக்கத்தில் வெள்ளை விரிப்பில் உடல் போர்த்தியிருந்த வானொலியின் காதைத் திருகி சிற்றலை வரிசையில் பிபிசியைப் பிடிக்கிறேன். தாயகத்தில் இருந்த காலம் வரை இது எங்கள் வீட்டின் அறிவிக்கப்படாத கடமைகளில் ஒன்று.
விசா எடுத்து ஒரு யாழ்ப்பயணம்
கடந்த வருஷம் ஆகஸ்ட் மாதம் யாழ்ப்பாணம் சென்றபோதே எனது நண்பர்கள் அடுத்தமுறையாவது ஊர்க்கோயிற் திருவிழாவுக்கு நிக்குமாற்போல வந்துவிடு என்று அன்புக்கட்டளை இட்டிருந்தார்கள். ஊர்க்கோயில் என்பது எனது வலைத்தளத்தைத் தாங்கும் மடத்துவாசல் பிள்ளையாரடி என்ற பரராசசேகரப்பிள்ளையார் கோவில் தான் அது. ஊரில் இருக்கும் பெற்றோரையும் கூடச் சந்திக்கும் வாய்ப்பாக இதைப் பயன்படுத்திக்கொண்டேன்.
யாழ்ப்பாணத்து றோட்டுப் புராணம்
"தம்பி! நீர் இன்னாற்ற மேன் தானே"
ஊரில் இறங்கி உலாத்த ஆரம்பித்தால் எதிர்ப்படுபவர்கள் குசலம் விசாரிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அந்த விசாரிப்பில் எந்தவிதப் பிரதியுபகாரமும் இல்லாத அன்பின் தேடல் மட்டுமே இருக்கும். கொழும்பில் இருந்து வந்ததும் வராததுமாக, அள்ளிக் குளித்து விட்டுப் பிள்ளையாரடிப்பக்கம் நடக்க ஆரம்பிக்கிறேன்.
காங்கேசன்துறை வீதியால் கீரிமலை நகுலேஸ்வரர் கோயில் காண ஒரு பயணம்
"சின்ராயா அண்ணை! நாளைக்கு நாங்கள் கீரிமலைப்பக்கம் போகோணும் வெள்ளண ஆறுமணி போல வரேலுமோ"
எங்கள் ஆஸ்தான ஆட்டோக்காரர் சின்னராசா அண்ணரிடம் முதல் நாளே ஒப்பந்தம் போட்டு வைத்து விடுகிறேன். அதிகாலையிலேயே குளித்து முடித்து விட்டு உள்வீட்டுச் சுவாமி தரிசனம் முடித்து, சரியாக மணி ஆறைத் தொடவும் சின்னராசா அண்ணரின் ஆட்டோவின் சுருதி இழந்த ஒலி வீட்டு முன் பக்கம் கேட்கிறது.
மாவிட்டபுரத்தில் இருந்து வல்லிபுரம் வரை
சின்னராசா அண்ணை முன்னமே சொல்லிவிட்டார், "முதலில் கீரிமலை கண்டுட்டு வரேக்கே மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் போவம்"என்று. கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் இருந்து ஆட்டோ மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலுக்குப் பறந்தது. மாவிட்டபுரக்கந்தனின் கோபுரமுகப்புக்கு முன்னால் வந்து நின்றோம்.
இலங்கையில் சந்தித்த வலைப்பதிவர்கள் - தலையில் இருந்து தலைநகரம் வரை
இணுவிலில் இருந்து லுமாலாவில் மிதித்த களைப்பு நீங்க கொக்குவில் இந்துக்கல்லூரிக்குப் பக்கமாக உள்ள கோயிலின் தேர்முட்டிக்குச் செல்லும் படிக்கட்டில் அமர்கின்றேன். இங்கு வைத்துத் தான் பதிவர்/டிவிட்டர் நிரூஜா மற்றும் சுபாங்கன் ஆகியோரைச் சந்திக்கப் போகிறேன். தொண்ணூறுகளில் ஒருநாள் ஏ/எல் ரிசல்ட்ஸ் வரப்போகுது என்று தெரிந்ததும் பதைபதைப்போடு இந்தத் தேர்முட்டியடியில் நண்பர்களோடு கூடியிருந்த நினைவுகள் மீண்டும் மனசுக்குள் தூசிப்படலம் போலத் தெரிந்தது.
"சிவபூமி" என்னும் கோயிலில் கடவுளின் குழந்தைகளைக் கண்டேன்
சிவபூமி சிறுவர் மனவிருத்திப் பாடசாலை. இந்தப் பாடசாலையின் உருவாக்கத்திலும் தொடர்ந்த செயற்பாட்டிலும் முதற்காரணியாக இருப்பவர் திரு ஆறு. திருமுருகன் என்ற சிவத்தொண்டர். ஆறு.திருமுருகன் அவர்கள் கோண்டாவிலில் இயங்கும் சிவபூமி சிறுவர் மனவிருத்திப்பாடசாலை தவிர தொல்புரத்தில் இயங்கும் சிவபூமி முதியோர் இல்லத்தையும் ஆரம்பித்து சிவபூமி அறக்கட்டளையின் கீழ் சான்றோர்களை இணைத்து, வரும் நன்கொடைகளை சீரான நிர்வாகத்தில் கையாண்டு இந்த அமைப்புக்களைக் கொண்டு நடத்தி வருகின்றார்.
பேராசான் கார்த்திகேசு சிவத்தம்பியை இழந்தோம்
தமிழ்த்துறை அறிஞர், ஆய்வாளர், பன்னெறிப்புலமையாளர், தலை சிறந்த விமர்சகர், சமூகவியலாளர், அரசியற் சிந்தனையாளர் எனப் பல்வேறு வகைப்பட்ட ஆளுமைப்பண்புகளைக் கொண்ட பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் இந்த ஆண்டு தனது எழுபத்தைந்தாவது அகவையில் காலடி வைத்திருக்கின்றார்.
ஊரும், உறவும், சொத்தும் இழந்த ஈழத்தமிழ் இனத்திற்கு கல்வியே நிரந்தரச் சொத்தாக இன்னும் இருக்கும் காலத்தில், எமது கல்விச் சொத்தின் அடையாளமாக, ஆலமரமாக இருக்கின்றார் பேராசான் சிவத்தம்பி அவர்கள்.
வட்டாரமொழி என்ற பகுப்பை மறுக்கிறேன் - நாஞ்சில் நாடன்
நாஞ்சில் நாடன், தற்காலத் தமிழ் எழுத்துச் சூழலில் நன்கு மதிக்கப்படும் எழுத்து ஆளுமை, நடைமுறை வாழ்வின் சாதாரண மாந்தர்களை அவரது மானுட நேயம் என்ற பார்வை கொண்டு பார்த்துப் படைப்பவர். இந்த ஆண்டு சாகித்ய அக்கடமி விருது அவருக்குக் கிடைத்திருப்பது அவரின் எழுத்துக்கான இன்னொரு அங்கீகாரம். இந்த வேளை அவரை நான் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காகச் சந்திக்கிறேன்.
தொலைத்த வீட்டைத் தேடிப்போன கதை
இந்த வீடு போலத் தான் ஏறக்குறைய எல்லாவீடுகளுமே மொட்டையடிக்கப்பட்டு மரங்கள் முளைத்த புதர்களாக அனாதரவாக, தனித்து விடப்பட்டவை வீடுகள் மட்டுமல்ல அரசியல் அநாதைகளாகிவிட்ட எம்மவர்களும் தான் என்று மீண்டும் ஒருமுறை என் மனதில் நினைத்துக்கொள்ளப் பெருமூச்சு அதை வெளிக்காட்டிக்கொண்டது.
ஆட்டோவில் ஏறிக்கொண்டேன்.
திருநந்தீஸ்வரம் கண்டேன்
ஈழத்தின் புகழ்பூத்த ஐந்து ஈஸ்வரங்கள் என்று கொள்ளப்படுபவை வடக்கே மன்னார் மாதோட்டையில் விளங்கும் திருக்கேதீஸ்வரம், கிழக்கே திருகோணமலையில் அமைந்திருக்கும் திருக்கோணேஸ்வரர் ஆலயம், வடக்கே கீரிமலையில் உறைந்திருக்கும் நகுலேஸ்வரர் ஆலயம், தெற்கே விளங்கிய தொண்டீஸ்வரம் சிலாபத்திலே முன்னேஸ்வரம், ஆகியவை வரலாற்றுத் தொன்மையும் சிறப்பும் வாய்ந்து விளங்குபவை.
Steve Jobs படைத்த Apple உலகில் நான்
கடந்த இரண்டு வருஷமாக என்னைச் சுற்றி இயங்கும் உலகத்தை மீண்டும் ஒருமுறை நினைத்துப் பார்க்கவைத்தது இன்று வந்த ஆப்பிள் உலகின் பிதாமகர் Steve Jobs இன் மறைவு. அலுவலகம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் வேளை என் iPhone வழி வந்த செய்திதான் இவரின் மரணச் செய்தியைக் காவிவந்தது. அந்த நேரம் மேலதிகாரிகளும் பக்கத்தில் இருந்ததால் உடனே அந்தச் செய்தியைக் கவலையோடு பகிர்ந்தேன்.
படைப்பாளி திக்கவயல் சி.தர்மகுலசிங்கம் - அஞ்சலிப்பகிர்வு
ஈழத்தின் எழுத்தாளர்களில் ஒருவரும், சுவைத்திரள் சஞ்சிகையின் ஆசிரியராகவும் விளங்கிய திக்கவயல் சி.தர்மகுலசிங்கம் அவர்கள் நேற்று நவம்பர் 2, 2011 இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் நினைவுகளை எமது அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக, அவரோடு பழகிய நண்பரும் எழுத்தாளருமான திரு.லெ.முருகபூபதி அவர்களின் நினைவுப்பகிர்வாக எடுத்து வந்தேன்.
மலையக அன்னையின் மடி தேடி ஒரு ரயில் பயணம்
இந்தத் தடவை என் தாயகப் பயணத்தில் இதுவரை பார்க்காத யாழ்ப்பாணத்தின் மூலை முடுக்கெல்லாம் பார்க்கவேண்டும் என்ற முனைப்போடு கூடவே என் பால்யகாலத்தில் நான் வளர்ந்த மலையகப் பிரதேசத்துக்கும் ஒரு பயணம் செல்லவேண்டும் என்று நினைத்து வைத்திருந்தேன். எழுபதுகளிலே என் அப்பாவும், அம்மாவும் ஆசிரிய கலாச்சாலையில் தமது கற்கை நெறி முடிந்து, முதற்கட்ட ஆசிரியப்பணிக்காக அனுப்பப்பட்ட ஊர் மலையகப் பிரதேசமான ஹற்றன்.
தமிழ்மொழிக்கல்வியில் பேச்சுவழக்கின் அவசியம் - முனைவர் சீதாலட்சுமி
ஆங்கிலம் மற்றும் பிறமொழிகளைத் தாயகமாகக் கொண்ட புலம்பெயர் சூழலில் தமிழ்மொழிக் கல்வி என்பது இங்கு வாழும் சிறார்களுக்கு ஒரு சவால் மிகுந்த காரியம். வீட்டில் பேச்சுவழக்கில் பேசப்படும் தமிழை, வார இறுதியில் இயங்கும் தமிழ்ப்பாடசாலைகளில் இன்னொரு வடிவில் உள்வாங்கும் சிறுவர்கள் சந்திக்கும் சிக்கல்களுக்குத் தீர்வாக தமிழ்மொழிக்கல்வியில் பேச்சுவழக்கைக் கலப்பதன் அவசியம் குறித்து பரந்துபட்ட ஆய்வொன்றைச் செய்திருந்தவர் முனைவர் சீதாலட்சுமி அவர்கள்.
19 comments:
தல மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)
தொடரட்டும் உங்கள் பயணம் !
வாழ்த்துகள் அண்ணா. உங்களுடன் நானும் 5 ஆண்டுகள் பயணித்ததில் மகிழ்ச்சி.
நல்வாழ்த்துகள்
wishes
வாழ்த்துகள் நண்பா!
தொடரட்டும் உங்கள் பணி!
அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me
தங்கள் எழுத்து பயணம் தொடர வாழ்த்துகிறேன்.
ஆண்டு ஆறுதான். அனுபவம் கனதியானது
வாழ்த்துக்கள் கானா அண்ணா...
வாழ்த்துக்கள் குருவே (என் வலையுலக என் குருக்களில் நீங்களும் ஒருவர்)
வாழ்த்துகள் அண்ணே..
நிறைய இருக்கே பிரபா. நேரம் கிடைக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக படித்துவிடுகிறேன்! சமீப காலமாக ட்வீட்டர் மூலம்தான் அறிமுகம் என்றாலும் உங்கள் எழுத்துகளை அவ்வப்போது படித்துக்கொண்டுதான் இருக்கிறேன்....வாழ்க....வளர்க!
ஆறு வருட நிறைவுக்கு வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணியும் வானொலிப் பணியும்.
அப்போ ஈழத்துமுற்றம் பக்கம் போக எண்ணம் இல்லையா? இதை நான் கேக்கக் கூடாதுதான். காரணம் காணாமல் போன பங்களிப்பாளர்களில் நானும் ஒருவர் :(.
இப்போ றேடியோஸ்பதி இணைய வானொலி கேட்கின்றேன்.
இங்க நீங்கள் போட்டிருக்கிற படங்கள் பலவற்றைப் பார்க்கும்போது, எனக்கு ஒன்று தோன்றுகின்றது. :) என்ன என்று தெரியும்தானே?
எனது வலையுலக துரோணருக்கு எனது வாழ்த்துக்கள்
வாழ்த்துகள்
கா.பி-க்கு வாழ்த்துக்கள்-ன்னு தனியா வேற சொல்லணுமா நானு?:))
வேணும்-ன்னா இப்படிச் சொல்லுறேன் - "நான் நானா இருக்கேன், கானா பிரபா என்னும் கா.பி யை - படித்துக் கொண்டும், கேட்டுக் கொண்டும்"
மனமார்ந்த வாழ்த்துக்கள் பிரபா.
வாழ்த்துக்கள் கானா..:)
தம்பி பிரபா!
அன்றும் என்றும்- சுவாரசியத்துக்குக் குறைவில்லாத , காத்திரமான , ஈழம் சார்ந்த பதிகளிடும்- ஈழத்தைச் சேர்ந்த பதிவர்களில் நான் என்றும் முதன்மையாகக் கருதுவது உங்களையே!
"ஏறச் சொன்னால் எருதுக்குக் கோவம், இறங்கச்சொன்னால் இயலாதவருக்குக் கோவம்" எனும் பதிவிலகில்
சிக்கலில்லாத் தலைப்புக்களில் எழுதி, இந்த பதிவுலகின் நாடியைச் சரியாகப் பார்த்து எழுதுகிறீர்கள்.
நான் இப்போது அடிக்கடி பின்னூட்டமிடாவிடிலும், படித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
நீங்கள் இனித் தடையின்றிச் செல்வீர்கள்.செல்லுங்கள்.
முதலில் வாழ்த்துக்கள்.
இந்த ஆறு வருடங்களாக நாங்கள் படும்பாட்டை எங்கு போய் முறையிடுவது. இப்போ எமக்கு உமது இம்சை பழகிவிட்டது. எனவே எழுதுவதை நிறுத்தினால் ரணகளமாகிவிடும் என்று எச்சரிக்கிறேன்.
Post a Comment