"இன்று மஞ்சத்திருவிழா! முத்துக்குமார சுவாமி திருவுலா வரும் நாள்!!!(இந்த முத்துக்குமரனில் எனக்கு மாறாப் பிரியம்; அழகொழுகும் சிலை)
இந்த நாளில் முதல் முதல் தங்கரதம் இழுத்த அன்று;( ஆண்டு நினைவில்லை.) சுவாமி வெளி வீதி சுற்றி வந்து , தேர் முட்டியடியில் திரும்பிக் கோவிலைப் பார்த்துக் கொண்டு ;தேரில் இருந்து இறங்கத் தயார் நிலையில் நிற்கும் போது; இன்குழல் வேந்தன் என்.கே. பத்மநாதன் குழலில் இருந்து பீறிட்டு வந்தது.
கலைக் கோவில் திரைப்படத்தில் இடம் பெற்ற பாலமுரளி கிருஸ்ணா பாடிய "தங்கரதம் வந்தது நேரிலிலே.. என்ற பாடல் . எல்லோர் முகமும் ஓரத்தே ஒதுங்கி நின்று சகலதையும் அவதானிக்கும் கோவில் அறக்காவலர் குகதாஸ் மாப்பாண முதலியார் பக்கமே திரும்பியது. அவர் முகத்திலோ சிறு குறு நகை... திரையிசைப் பாடலுக்கே இடமில்லாத (பக்திப் பாடலெனினும்)நல்லூர்க் கந்தனாலயத்தில்; வித்துவான் மறுப்புச் சொல்லமுடியாவண்ணம் சந்தர்ப்பத்துக்கு ஏற்பவாசித்து விட்டாரே; சட்டத்தையே தகர்த்து; விதி விலக்கு அளிக்க வைத்துவிட்டாரே என்பதாக நினைத்தாரோ!! யாரறிவார்.
வித்துவானுமோ சுரப் பிரயோகங்களுடன் அழகு சேர்த்து மிக விஸ்தாரமாக வாசித்து; இசை ரசிகர்களை மகிழ்வித்தார்.
அந்த நாள் நான் வாழ்வில் மறக்கமுடியாதநாள்.
இத்தருணத்தில் அதை நினைவு கூர்வதில் மகிழ்கிறேன்.
என் விருப்பமாக இப்பாடலையும் இப்பதிவில் சேர்க்கவும்.
மேலும் கந்தன் சரித்திரம்...எத்தனை இன்னலைக் கண்டுள்ளான். எம் கந்தன் என எண்ண வைக்கிறது.
இன்றைய பத்தாந் திருவிழாவுக்கான பதிவை எழுதிப் போட்டுவிட்டு வேறு வேலையாக இருக்கிறேன். மேலே வந்த வரிகளைத் தாங்கிய பின்னூட்டம் யோகன் அண்ணாவின் நினைவுச் சிதறலாக வந்து விழுகின்றது.
எல்லாம் வல்ல எம்பெருமான் தன் கருணை மழையைப் பொழியட்டும் என இறைஞ்சி, சங்கீத மழையைப் பரவ விடுகின்றேன்.
தங்க ரதம் வந்தது வீதியிலே.....!
|
படங்கள் நன்றி: தமிழ் நெற் மற்றும் ஊடகவியலாளர் துஷ்யந்தினி கனகசபாபதிப்பிள்ளை
4 comments:
பிரபா!
பாடலை இணைத்ததுக்கு நன்றி!
வீணை,செனாய் எல்லாம் மிக இனிமையாக ஒலிக்கிறது.
வெகு நாட்களின் பின் கேட்கிறேன்.
Pirabha,
thank you for the song.
NeengaL ezhuyirukkum NinaivukaL pola
palarin ninaivukaLum inthap paadalil piNainthirukkum.
Murukan AruL Nilaikkattum.
வணக்கம் யோகன் அண்ணா
பழைய பாடல்களில் எனக்கு அதிக ஈர்ப்பை ஏற்படுத்தும் பாடல்களில் இதுவுமொன்று, கலைக்கோயில் திரையில் வந்தது. மாசுபடாத தங்கப் புதையல் இந்தப் பாடல்
வணக்கம் வல்லியம்மா
முருகனருள் உங்களைப் போன்ற நல்லிதயங்களுக்கும் கிட்டட்டும். தங்கள் அன்புக்கு நன்றி
Post a Comment