skip to main | skip to sidebar

"மடத்துவாசல் பிள்ளையாரடி"

"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்"

Pages

  • Home

Saturday, April 16, 2011

ஈழத்துத் திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன் பேசுகிறார்

கே.எஸ் சிவகுமார் அவர்கள் 1936ஆம் ஆண்டில் மட்டக்களப்பில் பிறந்து கொழும்பை வாழ்விடமாக கொண்டவர். திரைப்படம் இலக்கியம் விமர்சனம் என்று கடந்த 45 வருடங்களுக்கு மேலாக இலங்கையை மையமாகக் கொண்டு எழுதி வருபவர். கடந்த மாதம் அவுஸ்திரேலியா வந்த பொழுது அவரை நான் எமது அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் சார்பில் சந்தித்தேன். அந்தப் பேட்டியின் ஒலி வடிவத்தையும், எழுத்தில் சாராம்சமாகவும் இங்கே பகிர்கின்றேன்.







பாகம் 1


பாகம் 2




பாகம் 1 Download பண்ணிக் கேட்க இங்கே அழுத்தவும்



பாகம் 2 Download பண்ணிக் கேட்க இங்கே அழுத்தவும்




வணக்கம் கே.எஸ்.சிவகுமாரன் அவர்களே!

அவுஸ்திரேலியாவுக்கு இப்பொழுது நீங்கள் தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு இருக்கிறீர்கள். இந்த வேளையில் எமது நேயர்களுக்காக உங்களுடைய திறனாய்வுத்துறை பற்றிய விசாலமான நேர்காணலுக்காக கேட்ட போது மனமுவந்து இந்த வாய்ப்பை அளித்தமைக்காக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.


பதில்- நானும் நன்றியை தெரிவித்துக் வேண்டும். ஏனென்றால் இது குறுகிய கால விஜயம். இன்னும் சில நாட்களில் இலங்கைக்கு திரும்புவேன். அதற்கிடையில் நீங்கள் என்னிடம் தொடர்பு கொண்டது ரொம்பவும் எனக்கு சந்தோசத்தை அளிக்கிறது. முதலாவது காரணம் இந்த இளைய பரம்பரையினர் பழைய தலைமுறையினரிடம் அக்கறையில்லை என்ற பொதுவான கருத்து இருக்கிறது. அதை மீறி என்னை அழைத்தமைக்கு மிக்க நன்றி!

கேள்வி- உங்களை எப்பவுமே தவிர்க்க முடியாதளவிற்கு ஈழத்தில் எழுத்துலகிலே ஒரு தனித்துவமான ஆளுமையைக் கொண்டிருக்கிறீர்கள். அந்த வகையிலே நீங்கள் பத்திரிகை ஊடகம் தவிர்த்து வானொலி தொலைக்காட்சி என்று மாறுபட்ட விடயங்களிலும் திறனாய்வாளராக படைப்பாளியாக விளங்கி வருகின்றீர்கள். உங்களுடைய இந்த ஆரம்பம் எப்படி அமைந்தது?

பதில்- ஆரம்பம் என்றால் இரு மொழிகளிலும் எழுதுவானால் நீங்கள் எதைக் குறித்து அலசுகிறீர்கள்?

கேள்வி- பொதுவாக எழுத்துலகிலே உங்களுடைய ஆரம்பம் எப்படி அமைந்திருந்தது?

பதில்- உண்மையிலேயே சிறுவயதிலிருந்து நிறைய வாசிப்பேன். இரு மொழி நூல்களையும் வாசிப்பேன்.எழுத வேண்டும் என்ற ஆசை வாசித்தபொழுது இவர்களைப் போல நானும் எழுதலாமே என்று நினைத்தேன். அந்த வகையில் எழுதவேண்டும் என்று உண்மையிலே ஏற்பட்டது. ஆனால் பிற்காலத்தில் அதாலது 60களுக்குப் பிற்பாடு தான் கூடுதலான பரிச்சயம் கிடைத்தது. அதற்கு தூண்டுகோலாக சில நண்பர்கள். திறனாய்வுத் துறையினை நீங்கள் குறிப்பிட்டு கூறியதால் அதைப் பற்றித் தான் நான் பேச வேண்டும் என நினைக்கிறேன்...

திறனாய்வுத் துறைக்கு நான் வந்தது என்னைப் பொறுத்தமட்டில் ஒரு அதிர்ச்சி! ஏனென்றால் இந்த திறனாய்வுத் துறையைப் பற்றி எனக்குத் தெரிந்திருக்கவில்லை என்று சொல்லிச் சிரிக்கிறார்.
பத்திரிகைகளில் தமிழ் திறனாய்வு சம்பந்தமாக எதுவும் வந்திருக்கிறதோ என்று தெரியாது. ஆனால் தற்செயலாக ஒரு நாள் பேராசிரியர் கைலாசபதி அவர்கள் தினகரன் ஆசிரியராக இருந்தபொழுது சந்தித்த வேளையில் என்னிடம் உரையாடிய பின்னர் சொன்னார். சிறுகதை கவிதைகள் எழுதுவதற்கு நிறையப்பேர் இருக்கினம். ஆனால் இந்த திறனாய்வில் கவனம் செலுத்தினால் என்னவென்று!

அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தூண்டுகோலாகவும் இருந்தது. அந்த நாட்களில் தமிழ்நாட்டிலே இருந்து எழுத்து என்ற பத்திரிகை வந்தது. அந்த எழுத்து திறனாய்வு தொடர்பாகவும் சிறுகவிதைகள் தொடர்பாகவும் வந்தது.
அந்தப பத்திரிகையை காட்டினார் நீர் படித்துப் பாருமென்று! நான் படித்துப் பார்த்தேன். எனக்கு கூடுலாக ஆங்கில நூல்களை படிக்க வாய்ப்பு கிடைத்ததனால் திறனாய்வு பற்றி கொஞ்சம் தெரிந்திருந்தது. ஆனால் முழுமையாக தெரியவில்லை. அதனால் அந்த துறையை வளர்த்தெடுக்கலாம் என நினைத்தேன். அதற்கு காரணம் முன்னர் கவிதைகளும் சிறுகதைகளும் தான் எழுதியிருந்தேன்.

சிறுகதைகளும் கவிதைகளும் கூட எல்லோரும் எங்களுடைய சாதிப் பிரச்சினை மற்றது சமூகப் பிரச்சினை அதாவது ஏற்றத்தாழ்வுகள் அவைகளைப் பற்றி எழுதும் போது நான் வித்தியாசமாக உளவியல் ரீதியான கதைகளை எழுதினால் நல்லம் என நினைத்து அவற்றைத் தான் எழுதி வந்தேன். இது தான் என்னுடைய பிரவேச ஆரம்பக்கட்டம் என நினைக்கிறேன். இது நடந்தது 60களில்.

கேள்வி- நீங்கள் இரு மொழிகளில் தமிழ் ஆங்கிலத்தில் முக்கியமான மொழிகளிலே உங்களுடைய எழுத்தாண்மையைக் காட்டியிருக்கிறீர்கள். பத்தி எழுத்தாளராகவும் நீங்கள் அறியப்பட்டு இருக்கிறீர்கள் இல்லையா?

பதில்- உண்மையிலே கூறப் போனால் பத்தி என்ற தொடரை இப்பொழுது பிரபல்யப்படுத்தப்பட்ட இந்த தொடரை அறிமுகப்படுத்தியது அடியேன் என்று தான் நினைக்கிறேன். ஏனென்றால் இந்த column writing என்று விசேசமாக ஆங்கிலப் பத்திரிகைகளில் நிறைய வரும். அனேகமாக படித்தவர்கள் அல்லது இளைப்பாறிய பத்திரிகை ஆசிரியர்கள் பல்கலைக்கழக மட்டத்தில் இருப்பவர்கள் தங்களுடைய கருத்துக்களை ஒரு தனிப்பட்ட கூற்றுக்களாக எழுதுவார்கள். அதில் இலக்கியம் சம்பந்தமாக எழுதும் பத்தி எழுத்தாளர்களும் உண்டு. அதனால் நான் பத்தி எழுத்து என்ற துறையைத் தேர்ந்தெடுத்து எழுதினால் செளகரியமாக இருக்கும் என்று, ஏனென்றால் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் போன்று இல்லாது சாதாரண வாசகர்களுக்குப் புரியும் விதத்திலும் அவர்களுக்கு ஏதோ விதத்தில் உதவும் விதத்திலும் தகவல்கள் நிறைந்த ஒரு திறனாய்வு சார்ந்த ஒரு எழுத்து அமைப்பைத் தான் மேற்கொண்டேன். அது தமிழுக்கு அந்த நாட்களில் அவ்வளவு பிரபல்யம் பெறவில்லை. ஆனால் அதே மாதிரி முன்னரே ஈழநாடு, வீரகேசரி போன்ற பத்திரிகைகளில் முன்னணி எழுத்தாளர்கள் எழுதியிருக்கின்றார்கள். ஆனால் அது பிரபல்யப்படுத்தப்படவில்லை. கட்டுரைகளாகவே கருதப்பட்டன. அப்போது பத்தி எழுதுக்கள் என்றால் என்ன என்று அந்த நாட்களில் யேசுராசா, சேரன், ரவி போன்ற நண்பர்கள் புதுசு என்ற ஏட்டில் என்னைக் கண்டனம் செய்து எழுதியிருந்தார்கள். அதற்கெல்லாம் விளக்கம் கொடுக்கும் வகையில் நான் எழுதியிருந்தேன்.

கேள்வி - விமர்சகர் என்ற பதம் எழுத்துலகில் நன்று அறியப்பட்டதொன்று, ஆனால் திறனாய்வாளர் என்பது ஒரு தனித்துவமான சொல்லாடலாக இருக்கின்றது. திறனாய்வாளர் - விமர்சகர் இதை உங்கள் பார்வையில் எப்படி நீங்கள் வேறுபடுத்துவீர்கள்?

பதில் - திறனாய்வாளர் என்ற சொல்லும் விமர்சகர் என்ற சொல்லும் ஒரே கருத்தைத் தான் குறிக்கின்றது. ஆனால் என்னைப் பொறுத்தமட்டில் இந்த விமர்சனம் என்ற பெயரில் பெரும்பாலும் இடம்பெறும் கட்டுரைகள் ஆளையாள் தாக்குவதாகவும், ஒரு கண்டனம் செய்வது தான் விமர்சனம் என்ற ஒரு பிழையான பார்வை இருந்ததனால் அந்தச் சொல்லின் மீது எனக்கு வெறுப்பு வந்தது. நல்ல தமிழ்ச் சொல் திறனாய்வு என்று இருக்கும் போது ஏன் விமர்சனம் எனறு கூறவேண்டும் என்று நான் நினைத்தேன். என்னைப் பொறுத்தவரை நான் திறனாய்வு சார்ந்த எழுத்துக்களை எழுதும் ஒரு பத்தி எழுத்தாளன் என்று கூறிக்கொள்கிறேன். இந்தத் திறனாய்வு என்பது ஒரு ஆக்கப்படைப்பின் திறன்களை பிறருக்கு வெளிப்படுத்தும் முயற்சி தான். இந்த மரபு தான் எங்களுக்குத் தமிழில் இருந்து வந்திருகின்றது. உதாரணமாக உரையாசிரியர்கள் நமது முன்னோடிகள் என்று சொல்லலாம். அதாவது எழுதப்பட்ட நூல்கள் பற்றிய உரையை, உதாரணமாக திருக்குறளை பரிமேலழகர் போன்று பலர் உரை எழுதியிருக்கின்றார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக் கருத்துக்களை விளக்குவார்கள். இந்த விளங்கப்படுத்துவது தான் இந்தத் திறனாய்வின் முதல் முயற்சி. அதற்கு அத்தியாவசியமாக இருக்கவேண்டியது ரசனை. ரசனை இல்லாமல் செய்யமுடியாது. இதனை ரசனை என்று கூறிக்கொண்டே டி.கே.சி போன்ற தமிழ்நாட்டு எழுத்தாளர்களும் கனக செந்திநாதன் போன்ற நமது ஈழத்து எழுத்தாளர்களும் ரசிக விமர்சனம் மாதிரி எழுதி வந்தார்கள். அதாவது சுவைப்பதைத் தெரிவிப்பது தான். ஆனால் அவற்றை மீறி நல்லதும் கெட்டதுமான விஷயங்களைக் கூட பக்குவமாக நயமாகக் கூறலாம் இந்தப் பத்தி எழுத்து மூலம் என்று நான் நினைத்ததனால் இதனை எடுத்தேன். இந்த ரசனை கூட அகவயப்பட்டது. அதாவது முழுக்க முழுக்க நடுநிலையில் இருந்து எழுதுவது மிகவும் கஷ்டமானது. இன்னொன்று என்னுடைய குறிக்கோளாக இந்த புறக்கணிக்கப்பட்ட அல்லது கண்டுகொள்ளப்படாத எழுத்தாளர்களை ஊக்குவிக்கவேண்டும் அவர்களுடைய திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். அதாவது பிரதான நீரோடையில் சிலரைப்பற்றித் தான் அடிக்கடி சொல்லி வருகிறார்கள். சமூகப்பிரச்சனைகளைப் பற்றி முனைப்பாகச் சொல்லி வந்த அதேவேளை கலைத்துவமான விஷயங்களைப் பற்றிப் பேசுவதில் பின்தங்கி விட்டோம், நான் உட்பட. என்னைக் கூட உருவவாதி என்று சொன்னார்கள். இந்தப் போக்கு இப்போது மாறி வருகின்றது.

கேள்வி- குறிப்பாக திறனாய்வாளர் என்ற வகையை எடுத்துக் கொண்டால் அவர் ஒரு குறிப்பிட்ட வட்டத்திலே உதாரணமாக சுப்புடுவை எடுத்துக் கொண்டால் அவர் இசையுலகோடு நின்றுவிடுவார். அப்படி பொதுவாக தமிழுலகத்திற்கு நான் மீண்டும் வருகின்றேன். ஒரு எல்லைக்குள் நின்று விடுவார்கள். ஆனால் நீங்கள் எல்லை கடந்து இலக்கியமோ சினிமாவோ அல்லது இசை நடனக்கலையென்று பரந்துபட்டு உங்களுடைய எல்லையை வியாபித்துக் கொண்டதற்கு ஒரு அடிப்படையாக அமைந்தது என்ன?

பதில்- இது நல்ல கேள்வி உண்மையிலே நான் இதைப் பற்றி சிந்திக்கவேயில்லை. நீங்கள் தான் சிந்திக்க வைத்திருக்கிறீர்கள். என்னவென்றால் இந்த ஆங்கில பத்திரிகையில் நான் இலங்கையை பற்றித் தான் பேசுகிறேன். ஹிந்து பத்திரிகையிலே விசேச அனுபவங்கள் வாராவாரம் இலக்கியங்கள் தொடர்பாக போடுவார்கள். அது இலங்கைப் பத்திரிகையிலும் சிங்கள இலக்கியங்கள் கலைகள் அவைகளைப் பற்றி நிறைய கருத்துக்கள் வரும். சில பத்தி எழுத்தாளர்கள் அதாவது பல்கலைக்கழக மட்டத்தினரே பத்தி எழுத்தாளராக தம்மை அறிமுப்படுத்திக் கொண்டு வாராவாரம் எழுதி வந்தார்கள்.

அதைப் பார்க்கும் பொழுது நமது நாட்டு விசயங்களைப் பற்றியும் எழுதலாமே என்ற ஆவல் எனக்கு ஏற்பட்டது. ஆனால் அப்படி எழுதுறதுக்கு வாய்ப்பு இருக்குமா இல்லையா என்று யோசிக்கவில்லை. அதோட எனக்கிருந்த அசாத்திய துணிவில் டெய்லி நியூஸ் பத்திரிகையில் 70களில் எனக்குப் பிடித்த மேர்வின் டி சில்வா என்று ஜேர்னலிஸ்டும் இலக்கிய திறனாய்வாளரும் அவர் ஆசிரியராக வந்த பொழுது நான் அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். நீங்கள் சிங்களம் தொடர்பான இலக்கியங்களைத் தான் போடுகிறீர்கள். தமிழிலும் இலங்கையில் இலக்கியங்கள் இருக்குது அவற்றில் ஏன் கவனம்செலுத்துவதில்லை என்று கடிதம் போட்டேன். அவர் அதைப் படித்திட்டு தன்னோட அலுவலகத்திற்கு வரக் சொல்லி பேசும் போது சொன்னார். நீர் அவற்றைப் பற்றி எழுத முடியுமோ என்று. நான் துணிந்து ஓமென்று சொல்லிவிட்டேன். அதற்குப் பிறகு கணேசலிங்கன் எழுதிய முதல் 5 நாவல்கள் பற்றிய எனது திறனாய்வுக் குறிப்புகளை அனுப்பி வைத்தேன். அடுத்த வாரமே அந்தக் கட்டுரை வந்தது. அதுக்குப் பிறகு எனக்கொரு உற்சாகம் பிறந்தது.

அது தவிர கைலாசபதி அவர்கள் ஒரு வரிசையாக ஒரு கட்டுரைத் தொடரை எழுதச் சொன்னார். காவலூர் இராசதுரை என்று கேள்விப்பட்டிருப்பீர்கள் இப்போது சிட்னியில் இருக்கிறார். அந்தக் காலத்தில் வரதராசன் தான் பலரும் வாசிக்கக் கூடிய ஒரு நாவலாசிரியர். அவர் ஒரு பேராசிரியர். அதை விட நல்ல எழுத்தாளர். சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் எழுத்து. நாவலாசிரியர் வரிசையில் வரதராசனாரின் இடம் என்ற சீரிஸை தொடங்கி வைத்தார் காவலூர் இராசதுரை.

அதைத் தொடர்ந்து என்னை எழுதச் சொன்னார். எனக்கு பிடித்த வரதராசனாரின் நாவலொன்றை திறனாய்வு செய்து நான் அறிந்த படித்த அனுபவங்களால் பெற்ற திறனாய்வு அளவுகோல்களை கொண்டு எழுதினார். நெஞ்சில் ஒரு முள் என்ற நாவல் பற்றியது. அதன் பின் அதற்கு முன்னர் எழுதிய எழுத்தாளர்கள் திறனாய்வாளர்கள் விமர்சகர்களின் கதையைக் கேட்டேன். அதன் பின் எனக்கு பிடித்த எழுத்தாளர்கள், நாவலாசிரியர்கள் என்ற தொடரை தொடங்கினார் கைலாசபதி.

அதில் ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த திறனாய்வு எழுத்தாளர்களைப் பற்றி எழுதினார்கள். நானும் அப்போது திறனாய்வாளனாக இருந்தபடியால் சார்ஸ் டிகென்ஸ் எனக்குப் பிடிக்கும். A Tale of Two Cities என்ற நாவலைப் பற்றி எழுதினேன். இப்படி படிப்படியாக எழுதிக் கொண்டு வரும் பொழுது எழுத்து என்ற சஞ்சிகை பற்றி குறிப்பிட்டேன். தமிழ் நாட்டிலே சி.சு.செல்லப்பா எழுதி எடிட் பண்ணியது. புதுக் கவிதைக்கு ஊக்கம் கொடுத்தார். அவர் மணிக்கொடி கால எழுத்தாளர். எழுத்து சஞ்சிகைக்கும் சில கட்டுரைகளை அனுப்பி வைத்தேன். பிரசுரமானது.
அந்த நாட்களில் வெங்கட் சுவாமிநாதன் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். க.சுப்பிரமணியம் இலங்கையிலிருந்து தருமு.சிவராமு எல்லாருமே எழுதினார்கள். அப்போது நீங்கள் கூறியது போல இலக்கிய விமர்சனம் திறனாய்வாளராக என்னையும் சேர்த்துக் கொண்டார்கள். நீங்கள் கூறிய இன்னொரு கூற்று இந்த பரவலாக எழுதுவது. ஆங்கில பத்திரிகைகளில் எழுந்த பத்தி எழுத்தாளர்கள் ஆங்கில நாடகங்கள்... அந்த நாட்களில் நாடகம் நல்ல வளர்ச்சி பெற்றிருந்தது சிங்கள நாடகம். கதைகளைப் பற்றி இசையைப் பற்றி கவிதையைப் பற்றி இல்லாமல் நானும் அதைப் பற்றியே எழுதத் தொடங்கினேன்.

சினிமா தொடர்பாகவும் வானொலியில் அந்த நாட்களில் ஒவ்வொரு வாரமும்
படவிமர்சனம் செய்தேன். முரளிதரன் என்பவரும்; (அவர் இப்போது இறந்து விட்டார்) சேர்ந்து செய்தோம். அதிலும் கூட இந்த அளவுகோல்களை பின்பற்றி செய்தனான். பிரபல்யம் பெற்றது. பின்னா சினிமாவிலும் அக்கறை கொண்டு சினிமா தொடர்பாக பூனே திரைப்படக் கல்லூரியி; ஒரு பயிற்சிக்குப் போனேன். அதற்குப் பின்னர் அதற்குப் பின்னர் எனக்குத் தெரிந்த திரைப்பட விமர்சன அளவுகோல் எல்லாம் தவிடுபொடியாகி புதிய முறையில் இந்த திரைப்படங்களை பார்க்கும் ஒரு அனுபவம் கிடைத்தது. அதற்குப் பின் தொடர்ந்து 2 நூல்கள் தமிழில் எழுதியிருக்கிறேன். அசையும் படிமங்கள் என்று சினிமாவின் நுட்பங்கள் பற்றி அதை எப்படி ரசிப்பது என்றெல்லாம் எழுதியிருந்தேன். அந்த புத்தகம் ஓரளவிற்கு விற்பனை ஆகியது. 2வது எடிசனும் போட்டு கொஞ்சம் கால தாமதமாகத் தான் அழிந்தது. ஆனால் தமிழ் நாட்டிலேயோ வேறு பல நாடுகளிலையோ அது இருக்குமோ தெரியவில்லை.

மற்றப் புத்தகம்... நான் திரைப்பட விழாக்களுக்கு அடிக்கடி போவேன். இந்தியாவில் பர்த்த விழாக்கள் நான் பார்த்த நல்ல திரைப்படங்கள் பற்றிய திறனாய்வு கொண்ட ஒரு தொகுப்பு. சினிமா ஒரு உலக வலம் என்ற ஒரு நூல். அதுவும் அச்சில் வெளிவந்த நூல்.
திறனாய்வு என்றால் என்ன என்றொரு நூலும் எழுதியிருக்கிறேன். அதில் பல திறனாய்வுக் கேள்விக்குரிய விடயங்களுக்கு என்னுடைய பதிலாக அமைந்துள்ளது. பலரும் பாராட்டியிருக்கிறார்கள். அது மணிமேகலைப் பிரசுரம். இந்த மணிமேகலைப் பிரசுரத்திற்கு என்னுடைய புத்தகங்களை வெளியிட அனுமதி கொடுத்ததன் காரணம் இந்த வெளிநாடுகளில் இருக்கும் நம்முடைய தமிழர்களுக்கு விநியோகிக்கப்படும் என்ற எண்ணத்தினால் தான். சில நாடுகளில் அதைப் படித்திருக்கிறார்கள் போலிருக்கு சில நாடுகளில் கிடைக்கவில்லைப் போலிருக்கு. உதாரணமாக இந்த பேஸ்புக்கில் ஒரு சகோதரி சுவிஸில் இருந்து என்னுடைய இன்னொரு புத்தகத்தை படித்ததாக எழுதியிருந்தார். எனக்கு வலு சந்தோசமாக இருந்தது.

கேள்வி - அன்றும் சரி இன்றும் சரி. ஈழத்தை எடுத்துக் கொண்டால் அங்கே இருக்கின்ற இனப்பரச்சினை என்கிற பாரிய சிக்கலினால் தமிழருக்கும் சிங்களவருக்குமான ஒரு இடைவெளி! இந்த இடைவெளியின் மூலம் இரண்டு பக்கங்களும் எழுந்த செழுமையான இலக்கியங்களும் சரி கலாநுட்பங்களும் சரி இரு பக்கங்களிலுமே பரிமாற்றப்படாத இடைவெளியாக இருப்பது போல தோன்றுகின்றது.(உண்மை என ஆமோதிக்கின்றார்) அதைப் பற்றி சொல்லுங்களேன்.?

பதில்- அதற்கு காரணம் இருவருடைய மொழிகளும் பரவலாக பலருக்கும் தெரியவில்லை. சிங்கள மொழியில் எழுதுறது படித்து அறி யும் வாய்ப்பு எமக்கு கிடைக்கவில்லை. அதைப் போலவே அவர்களுக்கும் கிடைக்கவில்லை. அதனால் தான் தமிழ் மொழி சார்ந்த விடயங்களளை ஆங்கிலமொழி மூலமாக தெரியப்படுத்த வேண்டும் என்று ஆங்கிலத்தில் நான் எழுதுவேன்.
இப்பொழுது 3 4 பத்திரிகைகள். டெய்லி நியூஸ் பத்திரிகையிலும் த நேசன், லக்விம நியூஸ் போன்ற பத்திரிகைகளிலும் எழுதி வருகின்றேன். சிங்கள மக்கள் படித்து தங்களுடைய அபிப்பிராய்களை தெரிவித்து இருக்கிறார்கள். தற்காலிகமாக இந்த ஆங்கில இடைவெளியை நிரப்புவதற்கு என்னாலான உதவியை செய்து வருகிறேன். பரஸ்பரம் தெரிந்து கொண்டால் இந்த இடைவெளி குறையும் என்று நான் நினைக்கிறேன்.

கேள்வி- ரசிகமணி செந்திநாதன் மற்றும் பேராசிரியர் கைலாசபதி சிவத்தம்பி என்று செழுமையான விமர்சகர்கள் இருந்தார்கள். இப்பொழுது இந்த அடுத்த தலைமுறையிலே ஒரு துவக்க நிலை இருப்பது போல ஒரு உணர்வு! அதைப் பற்றி சொல்லுங்களேன்?

பதில்- அப்படி சொல்ல முடியாது. ஏனென்றால் யாழ் பல்கலைக்கழகத்திலிருந்தும் இன்னும் சில பல்கலைக்கழகத்தில் இருந்தும் உண்மையாக ஆய்வாளர்களாக இருக்கிறார்கள். இந்த ஆய்வு வேறு. ஆய்வறிவு வேறு. ஆராய்ச்சி வேறு. திறனாய்வு வேறு பத்தியெழுத்து வேறு விமர்சனம் வேறு என்று வித்தியாசப்படுத்தித் தான் நாம் பார்க்க வேண்டும். என்னுடைய திறனாய்வு என்றால் என்ன என்ற நூலில் விளங்கப்படுத்தியுள்ளேன். இனி எழுதுபவர்களும் வௌ;வேறு கோணங்களில் இப்போது ஆர்க்கி இலக்கியங்களிலும் சிலர் திறனாய்வாளராக இருக்கின்றனர்.

சிலர் ஆக்க இலக்கியம் படைக்காமலே திறனாய்வாளராக இருக்கின்றனர். சிலர் இதை அணுகும் முறையில் வித்தியாசமானதாக திறனாய்வு செய்பவர்களாக இருக்கின்றார்கள். இப்படி பலரும் இருக்கின்றார்கள். இந்த புதியவர்களில் நான் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பேர்கள் நிறைய வாசிக்கின்றார்கள். பல்கலைக்கழக மட்ட எழுத்தாளர்கள். சாதாரண வாசகர்கள் வாசிப்பதில்லை. அதாவது ஓரளவிற்கு பல்துறை சார்ந்த அறிவு இருக்க வேண்டும் உண்மையாக செழுமையாக திறனாய்வுத் துறையில் வளர்வதற்கு!

அந்த விதத்தில் சபா ஜெயராசா என்ற பேராசிரியர் சோ.சந்திரசேகரன் அவர்கள் இலக்கியத்தில் அதிகம் இல்லாவிட்டாலும் கூட அவர்கள் ரெண்டுபேரும் கைலாசபதி சிவத்தம்பி காலத்திற்கு பிறகு ஒரு விதமான ஓரளவு மார்க்சியம் சார்ந்த திறனாய்வாளர்களாக இருக்கிறார்கள். இவர்களை விட க.சண்முகலிங்கன் என்று ஒருத்தர். ஆனால் இவர்களெல்லாம் என்னைப் போன்று பத்தி எழுத்தை பரவலாக எழுதுவதில்லை. அதனால் என்னுடைய எழுத்து பலருக்கும் தெரியவருகிறது.

என்னுடைய நோக்கமே சாதாரண மக்களுக்கு எழுத வேண்டும் என்று! எனவே எழுத்துநடை வரதராசனார் போன்று சின்னச்சின்ன வசனங்கள். இன்னொரு சாரார் என்னவென்றால் தெளிவாக அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும் காட்டினால் அது தான் ஆழம் என்று நினைக்கிறார்கள். ஆனால் சங்ககால இலக்கியங்களோ திருக்குறளோ சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல். இந்த முறையை பார்த்து என்ன மேலோட்டமாக எழுதியிருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். அதுக்குள்ளே விசயம் இருக்கிறதென்பதை புறக்கணிக்கின்றார்கள்.

கேள்வி- அதாவது உங்களுடைய எழுத்துக்களை நிறையவே நான் படித்திருக்கிறேன். (படித்திருக்கிறீர்களா? எனக்கு சந்தோசம் என்கிறார்.) ஆமாம். டெய்லிநியூஸ் மற்றும் பத்திரிகைகளிலே குறிப்பாக இன்னும் வீரகேசரியில் அவ்வப்போது உங்களுடைய ஆக்கங்களை தவறாமல் படிப்பதுண்டு. அதிலே நீங்கள் சொன்னதையே வழிமொழிய வேண்டும். பரவலான வாசகர் வட்டத்திற்கு சென்று சேரக் கூடிய எழுத்துக்களை நீங்கள் எழுதி வருபவர்.
அதாவது நீங்கள் பலதையும் முன்மொழிந்தாலும் கூட ஒரு அக்கடமிக் லெவலிலே ஒரு குறிப்பிட்ட எல்லையிலே நின்று கொண்டு பார்க்கும் பொழுது எல்லா மட்டத்திற்கும் சென்று சேர முடியாத வாய்ப்பும் வந்து விடுகிறது. அது ஒரு ஆபத்தென்று நான் நினைக்கிறேன. அதாவது குறுகிய வாசகர் வட்டத்தை கடந்து சென்று பரவலாகச் சென்று சேர முடியாமலும் விடுமில்லையா? திறனாய்வு என்பதை வாசக உலகம் எப்படி எடுத்துக் கொள்கின்றது?


பதில்- திறனாய்வு நல்ல வாசகர்களும் நல்ல எழுத்தாளரும் என்று சொல்லப்பட்டு வருபவர்கள். அவர்களும் விரும்புகிறார்கள் என்று நான் நினைக்கின்றேன். ஏனெனில் திறனாய்வு உண்மையிலே ஒரு உதவி தானே செய்கிறது? நான் எழுதினால் என்னுடைய எழுத்திலே இருக்கும் குறைபாடு எனக்குத் தெரிய மாட்டாது. இன்னொருவர் மூன்றாம் நிலையில் இருந்து பார்க்கும் பொழுது தான் தெரியும். அது ஆக்கபூர்வமான பட்சத்திலே அதை ஏற்றுக் கொள்ளலாம். இலங்கையிலே ஆக்க எழுத்தாளர்களுக்கும் திறனாய்வாளர்களுக்கும் வித்தியாசமான அணுகுமுறை இல்லை. ஆனால் தமிழ்நாட்டிலே உண்டு. இந்த பேஸ்புக்கில் ஆளை ஆள் தாக்கி எழுதும் போது நோக்கத்தை விட்டு என்னென்னவோ எழுதுவதை அவதானிக்க முடிகிறது.

கேள்வி- அது தனிநபர் தாக்குதலாக மாறிவிடுவிகிறது இல்லையா?


பதில்- ஆமாம். இந்த தனிநபர் தாக்குதல் 60, 70களில் வெங்கட் சுவாமிநாதன் தருமு சிவராம் போன்றோர் ஆளை ஆள் கேவலமாக எழுதினார்கள். அது தான் மரபு கண்டனம் என நினைத்து எழுதினர். criticism என்ற வார்த்தை இவர்களுக்கு இலக்கிய ரீதியாக பொருந்தவில்லை.ஆனால் திறனாய்வு நல்லதையும் சொல்லி கூடாததையும் சொல்ல வேண்டும். அதே நேரம் ஆக்கபூர்வமாகவும் அமைய வேண்டும். அப்படி மிதமான எழுத்துக்கள் இருந்தால் நான் திறனாய்வுக்குட்படுத்தும் பொழுது அதை பகிரங்கமாக எழுதுவதில்லை. நான் தனிப்பட்ட அந்த அன்பரை அழைத்து என்னுடைய கருத்துக்களை கூறுவேன். அவர் ஏற்றுக் கொள்ளுவார். ஏற்றுக் கொள்ளாமலும் விடுவார்.

கேள்வி - படைப்புகள் என்று சொல்லும் பொழுது மீண்டும் தமிழ் எழுத்துலகிற்கு வருகிறேன். தமிழ் படைப்புகள் குறிப்பாக சிறுகதை நாவல்கள் போன்றவை நம்மவர்களிடையே ஆங்கிலத்திலே மொழி பெயர்க்கப்படும் பொழுது அவற்றினுடைய சாரம் நிறமிழந்து போவது போல ஒரு பிரமையை ஏற்படுத்துகிறது. அதை அவதானித்து இருக்கிறீர்களா?

பதில்- ஆம். மொழிபெயர்ப்பு என்பது லேசான விடயம் அல்ல. மொழிப் பாண்டித்தியம். பாண்டித்தியம் என்றால் மொழிவளம் மாத்திரமல்ல. அந்தந்த சமூகத்தின் அம்சங்களிலும் அடங்கி இருக்கிறது. இல்லாவிட்டால் தமிழில் கொண்டு வருவது கஷ்டம்.
இன்னொன்று ஆங்கிலத்தில் இருந்து தமிழை கொண்டு வரும் பொழுது அப்படியேசொல்ல முடியாது. பொதுவாக எங்களுக்கு மேல்நாடுகளில் இருக்கின்ற பனி போன்றவை பரிச்சயம் இல்லை. அதை தமிழில் கொண்டு வாறது கஷ்டம். எழுதினால் வேறு மாதிரிப் போய்விடும். அதே மாதிரி தமிழில சில வாய்மொழிப் பேச்சுக்கள். சாதாரணமாக பேசுற தமிழை இங்கிலிஷில் கொண்டு வாறது கஷ்டம். மொழிபெயர்ப்பும் 3 வகைப்படும் என்று சொல்கிறார்கள்.
1. சொல்லுக்குச் சொல்
2. அர்த்தத்தை புரிந்து கொண்டு முக்கியமான விசயங்களை தொகுத்து எழுதுவது.
3. மூலத்தை வைத்துக் கொண்டு பிசகாமல் அதை உள்வாங்கிக் கொண்டு அவருடைய மூலமாக இல்லாமல் அதை மெருகூட்டி ஆக்கபூர்வமாக படைப்பது.
உதாரணமாக கம்பராமாயணத்தை எழுதிய கம்பர் வால்மீகி சமஸ்கிருதத்தை வைத்துக் கொண்டு அவர் தமிழ் சூழலில் தமிழ் மாதிரியே எழுதியிருப்பார். அதனாலே அதற்;கு காவிய அந்தஸ்து கிடைக்கிறது. அப்படியும் எழுதலாம். ஆனால் எங்களிடையே ஆங்கிலம் தெரிந்த மொழிபெயர்ப்பாளர்கள் குறைவாகவே இருக்கின்றனர். முன்னர் ஏ.ஜே.கனகரட்ண சற்றடே றிவியூ சிவநாயகம் இருவரும் ஆரம்பத்திலே சில கதைகளை மொழிபெயர்த்தார்கள். இப்பொழுது வெளிநாடுகளில் இருக்கிறவர்களும் மொழிபெயர்க்கிறார்கள். கனகநாயகம் போன்றோர்கள்.

நானும் சில ஈழத்து தமிழ் சிறுகதைகளை மொழிபெயர்த்திருக்கிறேன். அவை அனேகமாக 3, 4 தொகுப்புக்களிலே வந்திருக்கின்றது. அதாவது பொதுத் தொகுப்பு. லங்கன் மொசைக் மற்றும் ப்ரிட்ஜிங் கனக்சன். அதில் இலங்கை எழுத்தாளர்களின் கதைகளை அவர்கள் கேட்டுக் கொண்டதன்படி மொழிபெயர்த்திருக்கிறேன். இது பலருக்கு பரவலாக தெரியவில்லை.

கேள்வி- நிறைவாக இந்த எழுத்து ஊடகம் தவிர்ந்து வானொலி தொலைக்காட்சி இப்படியான ஊடகங்களிலும் உங்களுடைய பங்களிப்பு அமைந்திருக்கிறது. அப்படியான மாறுபட்ட ஊடகங்களிலே உங்களுடைய பங்களிப்பை வழங்கும் பொழுது அதனுடைய அடிப்படையென்பது எவ்வளவு தூரம் மாறுபடுகின்றது? அதாவது நீங்கள் எடுத்துக் கொள்கின்ற ஸ்கிரிப்ட் அல்லது அந்த படைப்பினுடைய ஆழம் எவ்வளவு தூரம் மாறுபட்டு அமைகின்றது?

பதில்- நீங்களும் ஒரு பத்திரிகையாளர் ஒலிபரப்பாளர் என்றபடியால் உங்களுக்கு தெரியும். நான் குறிப்பிடத் தேவையில்லை. இருந்தும் ஒவ்வொரு ஊடகத்திலும் வானொலிக்கு பத்திரிகைகளில் எழுதுவது போல எழுத முடியாது. அங்கு சொற்கள் தான். சொற்கள் மைக்ரோபோன் ஒலிவாங்கிக்கு முன்னால் சொல்லும் போது தெளிவாக உச்சரிக்கப்பட வேண்டும். அது மாத்திரமல்லாமல் அவை சிறு வசனங்களாக இருந்தால் தான் பேசுபவருக்கு புரியும். நீண்ட வசனங்களாக இருந்தால் புரியாது. இன்னொன்று தொலைக்காட்சியில் வேர்ச் சுவல் வீடியோ வந்தபடியால் அங்கு அந்த பாடிலாங்குவேஜ் எப்படியும் சுருங்கச் சொல்லி பேசறது நல்லாயிருக்குமென்று நினைக்கிறேன்.
இப்பொழுது நல்ல திரைப்படங்களில் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள். நல்ல திரைப்படங்களில் அசைவுகள் தான் முக்கியம். அசைவுப் படிமங்கள் தான் சினிமா. ஆனால் துரதிஸ்டவசமாக வசனங்களும் நீண்ட கேலிக் கூத்தான நீண்ட விடயங்களும் வருவதனால் அது சினிமா இல்லாமல் நிழற்படம் பிடிக்கப்பட்ட மேடை நாடகங்கள் போல இருக்கின்றது. அதைப் பற்றி பேசுவதனால் அதற்கென்று தனியாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய வேண்டும்.

கேள்வி- இவ்வளவு நேரமாக உங்களுடைய நீண்ட பயணத்திலே பல விதமான அனுபவங்களை எல்லோருக்கும் எளிமையான விதத்திலே இந்தப் பேட்டியின் வாயிலாக நீங்கள் அறிமுகப்படுத்தியிருந்தீர்கள். அந்தவகையிலே கே.எஸ்.சிவகுமாரன் அவர்களே அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சார்பிலே எமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பதில்- நன்றி பிரபா உங்களுக்கும் நல்வாழ்த்துக்கள்.

Daily News பத்திரிகையில் கே.எஸ்.சிவகுமாரன் அவர்கள் எழுதிய ஒரு பத்தி எழுத்து

Sydney sojourn

This week this columnist features a few personal experiences he had visiting Sydney in Australia. As a piece of travelogue it gives some information that the reader might like to know.

Coming from Melbourne we decided to spend a few days in Sydney which is the capital of the New South Wales State in Australia. Melbourne as we know is the capital of the Victoria State in Australia. Melbourne is one of the finest big cities I have visited. Within the Metropolis we travelled by car, train and trams. Comfortable and pleasant journey it was. Among the personalities we met were the veteran senior journalist and political commentator H L D Mahindapala, the owner of the Victor Melder Sri Lankan Library, two illustrious men from Sri Lanka not belonging to the Tamil community and also another Australian young lady Kellie Brady who is the great grand daughter of famous R L Brohier (father of Delorine Brohier)

My son Raam Siva and I chose to travel by the domestic airlines Virgin Blue on January 29, this year to Sydney. Leaving at 8.40 in the evening we reached Sydney by 9.40 pm. It was starry night quite cold with glittering lights and tall buildings covering almost the lower floats of clouds of the shyscape. All over the most fascinating Mega City on the lines of New York City.

We understand that the authorities chose Canberra as the capital of Australia, the smallest continent in the world and the largest island in the globe as both Sydney and Melbourne – big cities though - were clamoring for the status.

We booked into the Holiday Inn in the Old City area because it was overlooking the river and the famous Opera Theatre so that we could have a panoramic view through the French windows of the hotel.

Sydney Opera house

The purpose of our three days visit was to view the landmarks in the cosmopolitan city and to meet friends and attend a concert at the impressive Opera Theatre. One of the easiest ways of City Sight Seeing was to Hop On- Hop Off in a double-decker bus. You pay A$ 35 and it is valid for 24 hours and it stops at 34 places. That was fine because one gets a bus every 15 minutes at various places you visit.

The comfortable bus takes you to places of tourist interest like the following: Circular Quay, Wynard Arcade, Queen Victoria Building. Town Hall. William Street, King Cross, El Alaein Fountain, Woolloomooloo Bay, Sydney Opera House, Botanical Gardens,, Parliament House, NSW Library, Hyde Park, Australian Museum, Central Railway Station, Power House museum, Sydney Fish Market (a large one), Star City Casino,, Maritime Museum,, Sydney Convention and exhibition Centre, Imax / Chinese Gardens, Sydney Aquarium, King Street Wharf, Campbels Cove, and the Rocks where the hotel was situated.

If that was one route there was another route too. That was more exciting to go to the Bondi & Bays excursion. The beach was marvelous. Everybody was in a holiday mood. It was a sea of many people with different skins hovering into the sea and eating and dancing and of course swimming in bikinis and even without them maybe at distances. Plenty of ethnic eateries around and one can really relax for hours there and we did that.

While on this route you start from the Central Station (the trains are superb and so were the trams and buses) and get down at any of these places and board another bus that goes that way using the same ticket. The places are Chinatown (Chinese, Vietnamese and South Asians are spread all over in Sydney as well as Melbourne and other places, but the Chinese are larger in number), Sydney Tower and Australian Opal Cutters, William Street, Paddington Town Hall, bond Beach Terminal, Rose Bay, Double Bay and Australian Museum.

We traveled by train from Circle Quarry to Strathfield to meet a few Lanka born Australians who are in the writing field and held higher positions in Colombo. They were Gnanam Rathinam, former Director of Tamil Programs of the Rupavahini Ambikaipahan, educationist and poet Kavaloor Rasadurai whose story was made into a film called Ponmani directed by Dharmasena Pathrajah and a former producer of educational programs Sathianathan. Sathianathan now holding a prestigious position in pharmaceutical trade and Gnanam Rathinam were gracious enough to take us in car from the station to visit the now retired two writers. It was a pleasant meeting with all of them.

Another Lanka born part-time anchorman over the Australian Broadcasting Station Kaana Prabha interviewed us in Tamil regarding our literary views. We also spoke a few words with Engineer Lionel Bopage who is a resident in Australia.

Visit to the stupendous Sydney Opera House with all its splendour and also being present at a concert where singer Sting entertained a large crowd were another memorable images we gathered in our Sydney sojourn.

தினகரன் வாரமஞ்சரியில் மணி ஶ்ரீகாந்தன் தொகுத்த "ஞாபக வீதியில்" கே.எஸ்.சிவகுமாரன்

தமிழில் இலக்கியம், திறனாய்வுத் துறைகளில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக மிகத் திறமையாக ஈடுபட்டு வரும் இவர் உங்களுக்கு தெரிந்தவர்தான். அவர் தான் கே. எஸ். சிவகுமாரன். மட்டக்களப்பு புளியந்தீவு சிங்களவாடிக் கிராமத்தில் பிறந்த இவருக்கு தற்போது 72 வயதாகிறது.

இவ்வாரம் ஞாபகவீதியில் நடைபயில்பவர் கே.எஸ். சிவகுமாரன்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பி. ஏ. பட்டப்படிப்பை முடித்துக் கொண்ட இவர் ஆங்கில இலக்கியப் புலமை மிக்கவர். ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதிவரும் மிகிச் சிலத் தமிழ் எழுத்தாளர்களில் முதன்மையானவர்.

ஓமான் நாட்டில் 1998 முதல் 2002ம் ஆண்டு வரை ஆங்கில இலக்கியம் கற்பித்து வந்திருக்கும் இவர் மாலைத்தீவுகளிலும் ஆங்கில ஆசிரியராக சேவையாற்றிருக்கிறார்.

அமெரிக்காவிலும் இப்பணி தொடர்ந்தது. கொழும்பு இலக்கிய வட்டாரங்களில் புகுந்து புறப்பட்டு வரும் கே. எஸ். பல நூல்களின் ஆசிரியர்.

நம் நாட்டின் பிரபல நாளேடுகளிலும் இலங்கை வானொலியிலும் முக்கிய பதவிகளை வகித்த இவரின் எழுத்துப்பணி இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஏனெனில் அது இவரின் இரத்தத்தில் ஊறிப் போன ஒன்று தணிக்கைச் சபை உறுப்பினரான இவரை மாலை மயங்கும் ஒரு அந்திப்பொழுதில் நினைத்தாலே இனிக்கும் தமது அந்தக்கால அனுபவங்களை எம்மோடு பகிர்ந்து கொண்டார்.

“என்னடா புளியந்தீவுக்கு பக்கத்தில் சிங்களவாடி என்கிற பெயர் வருதே என்று பார்க்கிaர்களா? அந்தக் காலத்தில்ல மட்டக்களப்பு பகுதியில் சிங்களவர்கள் முதலில் இங்குதான் தங்கியிருந்தார்கள்.

அதுதான் சிங்களவாடி என்ற பெயர் வரக் காரணம்!” என்று தனது ஊரின் பெயருக்கு விளக்கம் தந்த கே. எஸ். சிவகுமாரன் மேலும் தொடர்ந்தார்.

என் பெற்றோர்கள் திருகோணமலையையும் மட்டக்களப்பையும் பூர்வீகமாகக் கொண்டவர்கள். முன்னோர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள். என் அம்மம்மா கேரளாவைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

அவரின் பெயர் அம்மனி பிள்ளை.... பாருங்கள் பெயரிலேயே மலையாள வாடைவீசுகிறது! அம்மனி பிள்ளையின் கணவர் அதாவது என் அப்பப்பா கேரளாவிற்கும் இலங்கைக்கும் இடையில் புகையிலை வியாபாரம் செய்திருக்கிறார்.

அப்போதுதான் அம்முமபிள்ளையை இலங்கைக்கு அழைத்து வந்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என்று புன்னகையுடன் ஆரம்பித்த சிவகுமாரன், என்னைப் பார்க்கும் போது அந்த மலையாள சாயல் தெரியலையா? என்று சிரிக்கிறார்.

சிறுவயதில் நீங்கள் செய்த குறும்பை கொஞ்சம் ஞாபகப்படுத்திச் சொல்லுங்களேன் என்று சிவகுமாரனை அந்த கறுப்பு- வெள்ளை காலத்து கலர் கனவுகளை நோக்கி அழைத்துச் சென்றோம்.

“வரலாற்றில் பதிவு செய்யுமளவுக்கு நான் பெரிய குறும்பு எதுவும் செய்யவில்லை. நான் ஒரு அப்பாவிப் பிள்ளை. ரொம்பவும் சமத்து என்றுதான் சொல்லவேண்டும். மட்டக்களப்பு ஏரிக்கரை வீதியில்தான் என் வீடு அமைந்திருந்தது. ‘லேக்ரோட்’ என்று அதைச் சொல்வார்கள். என் வீட்டிற்கு முன்னால்தான் மட்டக்களப்பு வாவி. எனக்கு சகோதரர்கள் ஐவர். பஞ்சபாண்டவர்கள் நாங்கள்.

அதில் நான்தான் கலைத்துறையில் கொஞ்சம் நாட்டம் உடையவன். பாடசாலை விடுமுறை நாட்களில் என் உறவினரும் நண்பருமான கே. சிவலிங்கத்துடன் சேர்ந்து என் வீட்டிலேயே நாடகம் போடுவேன்.

அந்த நாடகம் என் வீட்டில்தான் அரங்கேறும். பெரும்பாலும் நாடகங்களில் நான் வில்லன் வேடம்தான் போட்டிருக்கிறேன். ஆனால் நிஜத்தில் நான் ரொம்ப நல்லவன். நான் போடும் நாடகத்தை என் உறவுக்காரர்கள் மட்டுமே பார்த்து ரசிப்பார்கள்.

நாடகம் பார்க்கும் ஒவ்வொருவரிடமும் தலா ஐந்து சதம் வீதம் கட்டணமாக வசூலிப்போம். கிடைக்கும் தொகைக்கு புத்தகங்கள் வாங்குவோம்.

அப்படி வாங்கும் புத்தகங்களை எல்லாம் சேர்த்து வீட்டிலேயே ஒரு நூலகத்தை நடத்தினேன். அந்த நூலகத்துக்கு கிருஷ்ணா லைப்ரரி என்று பெயரும் வைத்திருந்தேன்.

இளமைத் தோற்றம்

ஒருநாள் நானும் எனது தம்பியும் சேர்ந்து பாடசாலையில் குத்துசண்டை பார்க்கப் போகிறோம் என்று அப்பாவிடம் பொய் சொல்லிவிட்டு சினிமா பார்க்கப் போனோம். அதுவும் இரவுக்காட்சி.

இன்றைக்கு மாதிரி பெரிய தியேட்டர் எல்லாம் அப்போது கிடையாது. கொட்டகை தியேட்டர்தான். மண் தரையிலும் பெஞ்சிலும் அமர்ந்துதான் படம் பார்க்க வேண்டும். அந்தக் காலத்தில் மட்டக்களப்பில் இருந்த கொட்டகைத் தியேட்டரின் பெயர் சீதா டோக்கீஸ்.

அன்று திரைப்படங்களை ஆங்கிலத்தில் டோக்கீஸ் என்றுதான் அழைப்பார்கள். தமிழில் பேசும் படம் என்று சொல்லலாம். கே. ஆர். ராமசாமி நாயகனாக நடித்த பவளக்கொடி படம் வெற்றிகரமாக அந்தக் கொட்டகையில் ஓடிக்கொண்டிருந்தது.

நானும் தம்பியும் அதை ரொம்பவும் ரசித்துப் பார்த்தோம். படம் முடிந்து வெளியே வந்த போது நல்ல இருட்டு. பயத்தைப் போக்க வீடு வரைக்கும் படத்தில் இடம் பெற்ற ‘அன்னம் வாங்கலியோ அம்மா அன்னம் வாங்கலியோ’ என்ற பாடலை பாடிக்கொண்டே வீட்டிற்கு வந்தோம்.

பிறகு இரவு சாப்பாட்டை முடித்துவிட்டு நானும் தம்பியும் படுத்துக் கொண்டோம். வீட்டாருக்கு தெரியாமல் படம் பார்த்துவிட்டோம். அதுவும் குறிப்பாக அப்பாவை ஏமாற்றிவிட்டோம் என்ற :s’>!ஷம். தம்பியிடம் மெதுவாகப் பேச்சுக் கொடுத்தேன்.

“டேய் தம்பி, நம்ம ‘பவளக் கொடி’ பார்த்தது வீட்டில் யாருக்கும் தெரியாது. எப்படியோ தப்பித்தோம்” என்று பெருமூச்சு விட்டபடி நிம்மதியாகத் தூங்கினோம்.

மறுநாள் காலை பாடசாலை செல்ல நானும் தம்பியும் தயாரானோம். அப்போது அப்பா எங்களிடம் வந்து, “அன்னம் வாங்கலியோ பாட்டு நல்லா இருக்காடா!” என்று கேட்டார். எனக்கு நெஞ்சு பகீரென்றது.

அடுத்த நொடியே ‘பவளக்கொடி எப்படி?’ என்றார். நானும் தம்பியும் மூச்சடைத்து நின்றோம். வீட்டுக்கு முன்னால் எங்களுக்கென்றே திமிசு கட்டையாக வளர்ந்திருந்த மல்லிகை செடியின் கிளையை ஒடித்து எனக்கும் தம்பிக்கும் செமத்தியாக பூசை கொடுத்தார்.

சீதா டோக்கீஸ்சில் படம் பார்த்த விசயம் அப்பாவுக்கு எப்படித் தெரியவந்தது என்று எனக்கு இது வரை தெரியவில்ல. ஒருவேளை அன்றிரவு நான் தூங்கும் போது தூக்கத்தில ஏதும் வாய் உளறி அன்னம் வாங்கலியோ... பாட்டை பாடிவிட்டேனோ தெரியவில்லை.

என்னதான் அடித்தாலும் அப்பா ரொம்ப நல்லவர். எங்கள் ஊரில் ஒரு முஸ்லிம் தையல்காரர் இருந்தார். அவர் பெயர் சரியாக எனக்கு ஞாபகத்தில் இல்லை. ‘டெய்லர் ஷா’ என்றுதான் நினைக்கிறேன். அவர் கடையில்தான் எனக்குப்பிடித்த உடையெல்லாம் தைத்துத் தருவார் அப்பா.

எனது உடையெல்லாம் மேல் நாட்டு பாணியில் தான் இருக்கும். ஈழத்து சிறுகதை படைப்பாளர்களின் முன்னோடியாக இருந்தவர் இந்த டெய்லர் ஷாவாகத்தான் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

தந்தையுடன் கே.எஸ். அருகே தம்பி

ஆனாலும் எனக்கு உறுதியாகச் சொல்லத் தெரியவில்லை. காலப்போக்கில் எங்க ஊரிலிருந்து அந்த டெய்லர் மறைந்து போனார். கடையும்தான்.

இப்படி நினைவலைகளில் பின்னோக்கிச் சென்று கொண்டிருந்த கே. எஸ்ஸிடம் தங்களின் அந்தக் கால காதல் அனுபவங்களைச் சொல்லுங்களேன் என்றோம்.

“நான் சின்ன வயசிலேயே ரொம்பவும் பயந்தாங் கொள்ளி. ஆனால் படிப்பிலகெட்டி.

ஆரம்பக் கல்வியை தமிழ் பாடசாலையில் படித்துவிட்டு பிறகு ஆங்கிலப் பாடசாலையில் என்னை முதலாம் வகுப்பில் சேர்க்கும் போது பிரச்சினை எழுந்தது.

ஆங்கிலப் பாடசாலையில் ஆரம்ப கல்வியை படித்திருந்தால் தான் கற்பது இலகுவானது என்பது அவர்களின் வாதம்.

ஆனால் நான் ஆங்கிலத்தை வீட்டிலே கற்றுத் தேர்ந்துவிட்டேன். பாடசாலையில் முதல் வகுப்பில் சேர்ந்த பிறகு எனது படிப்பைப் பார்த்த அதிபர் வியந்து என்னை இரண்டாம் வகுப்பில் விடாமல் மூன்றாம் வகுப்புக்கு உயர்ந்தினார். படிக்கும் காலத்தில் நான் ரொம்பவும் அழகாக இருந்திருக்கிறேன். (இப்போவும் வசீகரமாகத்தானே இருக்கிaர்கள்!) அதனால் என்னோடு பெண் பிள்ளைகள் பேசுவற்கு ப்ரியப்படுவார்கள்.

ஆனால் நான்தான் அவர்களை விட்டு கொஞ்ச் விலகியே நின்றேன். அந்தளவிற்கு எனக்கு கூச்ச சுபாவம். எனக்கு பத்து, பதினைந்து வயதாகும் போதே எனக்குள் செக்ஸ் உணர்வு வர ஆரம்பித்து விட்டதை நான் உணர்ந்தேன். எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் ஒரு அழகான பெண்பிள்ளை இருந்தாள். அவள் என்னோடு சேர்ந்துதான் விளையாடுவாள்.

குட்டைப் பாவாடை அணிவாள். அவள் மீது எனக்கு காதல் மாதிரி ஒரு ஈர்ப்பு. அதை அவளிடம் நான் சொல்லவில்லை. சொல்லவும் தெரியவில்லை என்பதுதான் சரி.

எப்போதும் அவளையே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்று என் மனசு சொல்லும். அவள் என் அருகே வந்தாலேயே போதும் என் உடம்பில ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் பாய்ந்தது போல் அதிர்வலை ஏற்படும். மனது கிடந்து தவியாய் தவிக்கும். ஆனால் என்ன செய்வது?

எனக்குத்தான் தைரியம் இல்லையே! அதைக் காதல் என்று சொல்வதைவிட ஒரு தலை காமம் என்றுதான் சொல்ல வேண்டும். என்னோடு படிக்கும் பொடியன்களுக்கும் அவள் மீது காதல்தான. எங்கள் வீட்டருகில் எங்களோடு கிரிக்கெட் விளையாட வரும் சாக்கில் அவளையும் எட்டிப்பார்ப்பார்கள். எனக்கு அப்போதெல்லாம் ஆத்திரம் பொத்திக்கொண்டுவரும்.

சின்ன வயதிலேயே எனக்கும், தம்பிக்கும் அப்பா நீச்சல் பழக்குவார். நான் கடைசிவரைக்கும் நீச்சல் கற்றுக்கொள்ளவில்லை. தம்பி கற்றக்கொண்டான். படிக்கும் வகுப்பில் எனக்கு பிரச்சினை என்றால் தம்பிதான் எனக்காக சண்டை பிடிப்பான். அப்படியொரு பயந்தான்கொள்ளி நான்.

பிறகு நான் கொழும்பிற்கு வந்த பிறகு அவளையும் மறந்துவிட்டேன். அவள் இப்போது திருமணம் முடித்து குழந்தை குட்டிகளோடு எங்கேயோ சிறப்பாக ஆனால் என்னைப் போலவே வயதானவளாக வாழ்ந்து கொண்டிருப்பாள். ஹும்....

கொழும்பில் ஹேமாஸ் பில்டிங்கில் இயங்கிய இலங்கை வர்த்தக சம்மேளனத்தில் உதவி பணிப்பாளராக நான் கடமையாற்றி வந்தேன். அங்கே என்னோடு பணியாற்றிய பெண்கள் அனைவருமே வசீகரமான உடைகளில் பளிச்சென வேலைக்கு வருவார்கள. என்னோடு வழிய வழிய வந்து பேசுவார்கள். எனக்கும் அவர்களோடு நெருங்கிப் பழக ஆசைதான்.

ஆனால் எனக்குள் இருந்த கூச்ச சுபாவம் அவர்களை என்னிடம் நெருங்கவிடாமல் செய்துவிட்டது. பிறகு ஒருநாள் ‘லயனல் வென்ட்’ அரங்கில் ஒரு நாடகம் பார்க்கச் சென்றேன். அதில் நடனம் ஆடிய ஒரு பெண்ணின் அழகில் நான் மயங்கிப் போனேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒரு நாள் அவளை லோட்டஸ் ரோட் பஸ் தரிப்பில் கண்டேன். அது இப்போது மூடிக்கிடக்கிறது. பாதையில் செல்லும் பஸ்கள் எல்லாம் அங்கே தரித்து நின்று விட்டுத்தான் செல்லும். அந்த பஸ் தரிப்பில் அவள் தனியாக நின்று கொண்டிருந்தாள்.

எனக்கு அவளைப் பார்த்ததும் அவளோடு பேச வேண்டும் என்று தோன்றியது. நான் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவளை நெருங்கினேன். உடம்பில் திடீரென்று ஒரு படபடப்பு. நா வறண்டு போய்விட்டது.

பிறகு ஒருவாறு திக்கிமுக்கி “உங்கள் நாடகம் பார்த்தேன் பிரமாதம். நான் உங்கள் ரசிகன்” என்றேன். அவள் “தேங்ஸ்” என்றாள்.

மு. தளையசிங்கத்துடன் கே.எஸ்.

அவ்வளவுதான். அதற்கு பிறகு அவளிடம் விடை பெற்று வந்துவிட்டேன். இதுதான் என் காதல் அனுபவங்கள் என்று தனது பழைய காதல் ஞாபகத்தில் மூழ்கிய சிவகுமாரனை நிகழ்காலத்துக்கு கொண்டு வர மறுபடியும் பேச்சு கொடுத்தோம். பேச்சு திருமணத்தின் பால் திரும்பியது.

“மூன்று முறை பெண் பார்க்கச் சென்றோம். மூன்றாவது பெண்ணைத்தான் எனக்குப் பிடித்திருந்தது. பட்டதாரிப் பெண்.

இருவரும் படித்தவர்களாக இருந்தால் நன்றாக இருக்குமே என்றுதான் அந்தப் பெண்ணை மணந்தேன். அவள்தான் என் மனைவி என்பதை நான் சொல்லத்தான் வேண்டுமா என்ன?”

கே. எஸ். திருமணம் 1966ம் ஆண்டு கொழும்பு கப்பிதாவத்தை கோவிலில் மிக எளிமையாக நடைபெற்றது. கொஞ்சமாகத்தான் உறவினர்கள், நண்பர்கள் வந்திருந்தார்களாம்.

அவர்களில் நான் ழிறிப்பிட்டுச் சொல்லக் கூடிய பிரமுகர், எஸ். பி. மயில்வாகனம் (ரேடியோ சிலோன் மயில்வாகனம்), தான் என்கிறார் இவர். திt hoசீலீ ஏதேனும் நடந்ததாஎன்றால், என் அலுவலக நண்பர்களுக்கு ஒரு ‘டி பார்ட்டி’ வைத்தேன் என்கிறார். தேன்நிலவுக்கு எங்கும் போகவில்லையாம்.

வாழ்க்கையில் மறக்க முடியாத நபர்கள் என்றால், யோசித்துவிட்டு, கைலாசபதி என்றார். திறனாய்வுத்துறைக்குள் தன்னைப் பிடித்துத் தள்ளியவர் இவர்தான் என்று சொல்லும் கே. எஸ். சிவகுமாரன், தன்னால் மறக்க முடியாத மற்றொரு நபர் முன்னாள் டெய்லி நியூஸ் பிரதம ஆசிரியர் மேர்வின் டி சில்வா என்கிறார்.

ஆனால் தன் வாழ்க்கையில் பிரமிக்கத்தக்க ஆகிருதி கொண்ட நபர் என்று தான் எவரையுமே காணவில்லை என்று சொல்லும் இவர், இந்த வயதில் வாழ்க்கையை கொஞ்சம் சலிப்புடன் பார்ப்பது மாதிரியும் தெரிகின்றது.

வாழ்வில் உங்களை உலுக்கி எடுத்த சம்ப வம் ஒன்றைச் சொல்ல முடியுமா என்றால், வாழ்க்கையில் நான் எதிர்பார்த்தவை எதுவுமே நடக்காமற் போனதுதான் சோகம் என்கிறார் கே. எஸ்.

“வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் தோல்விகளும் ஏமாற்றங்களும் தான் எஞ்சி நிற்கின்றன. எனினும் நான் நானாகவே இருக்க விரும்புகிறேன். பொருளாதார ரீதியாக எனக்குப் பிரச்சினை கிடையாது.

நல்லவற்றை சிந்தனை செய். நல்லவற்றையே பேசு; முடிந்தவரையில் நல்ல வழியிலேயே நட என்பது நான் வாழ்நாள் முழுவதும் கைக்கொண்டு வந்திருக்கும் வழிமுறை. அப்படித்தான் தொடர்ந்தும் இருந்து வருவேன்.

என்பதோடு இதைத்தான் ஏனையோரிடமும் நான் எதிர்பார்க்கிறேன்” என்று கூறும் கே. எஸ்.

தனக்கு நிறைவுதரும் விஷயம் தன் பேரப்பிள்ளைகள் தான் என்கிறார். இவருக்கு இரண்டு மகன்மார். இருவருமே வெளிநாடுகளில். ஆகவே, பேரப்பிள்ளைகளும் அங்கேதான். இவர் அங்கே சென்றிருக்கும் போதெல்லாம் மனமாற அவர்களுடன் விளையாடுவாராம்.

“நாம் சில சமயம் வீட்டில் தனிமையில் இருக்கும் போது என் பேரப்பிள்ளகளை நினைத்துக் கொள்வேன். என்னைக் கீழே புரட்டிப் போட்டு முதுகில் குத்தமாட்டார்களா என்றிருக்கும்.

இப்போதும் அவர்கள் என்னைக் குத்துவதைத்தான் விரும்புகிறேன்” என்று சொல்லும் கே. எஸ்.

மிக நிறைவைத்தரும் விஷயமாக எதைக் கருதுகிறார்?

“என்னிடம் கற்ற மாணவர்கள் அவர்கள் பெரிய பெரிய படிப்புகளை முடித்து பெரிய இடங்களில் இருக்கிறார்கள். எனினும் என்னை மறக்கவில்லை Face book மூலம் என்னுடன் அவ்வப்போது தொடர்பு கொள்கிறார்கள்.

எனக்கு மட்டுமல்ல எந்த ஒரு ஆசிரியனுக்கும் நிறைவைத் தரும் விஷயம்தான் இது”

சாய்பாபா மீது நம்பிக்கை கொண்ட கே. எஸ். இறை நம்பிக்கை மிக்கவர். இறைவன் மக்களை மறைமுகமாக வழிநடத்துகிறான் என்று நம்பும் இவர், இறைவன் மனிதருடன் பேசுகிறான் என்கிறார். கே. எஸ்., பல்லாண் டுகள் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்!
Posted by கானா பிரபா at 9:15 PM Email This BlogThis! Share to Twitter Share to Facebook

4 comments:

வர்மா said...

இன்றும் இளமையுடன் இயங்கும் பல்கலைவித்தகரைப்பற்றிய புதியபரிமாணம் இது.சபா ஜேசுராசா அல்ல சபாஜெயராஜா . எழுத்துப்பிழை எனநினைக்கிறேன்.
அன்புடன்
வர்மா

April 18, 2011 1:33 AM
கானா பிரபா said...

வருகைக்கு நன்றி வர்மா, சபா ஜெயராசா தான் அவர் எங்களூரைச் சேர்ந்தவர் கூட. தட்டச்சும் போது மாறி வந்து விட்டது. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி திருத்தி விட்டேன்

April 18, 2011 9:26 PM
எஸ் சக்திவேல் said...

“நாம் சில சமயம் வீட்டில் தனிமையில் இருக்கும் போது என் பேரப்பிள்ளகளை நினைத்துக் கொள்வேன். என்னைக் கீழே புரட்டிப் போட்டு முதுகில் குத்தமாட்டார்களா என்றிருக்கும்.

அவர் ஆய்வுகள் academic மட்டத்தில் உயர்வானது. ஆனால் மேலுள்ள வரிகள் அவரின் இயல்பான உள்ளத்தைக் காட்டுகின்றது.

April 30, 2011 7:01 PM
எஸ் சக்திவேல் said...

>>படிக்கும் காலத்தில் நான் ரொம்பவும் அழகாக இருந்திருக்கிறேன். (இப்போவும் வசீகரமாகத்தானே இருக்கிaர்கள்!)

மிக நிச்சயமாக!!

April 30, 2011 7:05 PM

Post a Comment

Newer Post Older Post Home

About Me

My Photo
கானா பிரபா
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
View my complete profile

Blog Archive

  • ►  2023 (3)
    • ►  March 2023 (1)
    • ►  February 2023 (1)
    • ►  January 2023 (1)
  • ►  2022 (25)
    • ►  December 2022 (2)
    • ►  November 2022 (2)
    • ►  October 2022 (3)
    • ►  September 2022 (2)
    • ►  August 2022 (1)
    • ►  July 2022 (2)
    • ►  June 2022 (1)
    • ►  May 2022 (3)
    • ►  April 2022 (1)
    • ►  March 2022 (3)
    • ►  February 2022 (3)
    • ►  January 2022 (2)
  • ►  2021 (33)
    • ►  December 2021 (4)
    • ►  November 2021 (2)
    • ►  October 2021 (5)
    • ►  September 2021 (2)
    • ►  August 2021 (4)
    • ►  July 2021 (1)
    • ►  June 2021 (5)
    • ►  May 2021 (1)
    • ►  April 2021 (3)
    • ►  March 2021 (2)
    • ►  February 2021 (1)
    • ►  January 2021 (3)
  • ►  2020 (28)
    • ►  December 2020 (4)
    • ►  November 2020 (3)
    • ►  October 2020 (1)
    • ►  September 2020 (1)
    • ►  August 2020 (2)
    • ►  July 2020 (3)
    • ►  June 2020 (3)
    • ►  May 2020 (4)
    • ►  April 2020 (3)
    • ►  March 2020 (2)
    • ►  February 2020 (2)
  • ►  2019 (19)
    • ►  December 2019 (3)
    • ►  November 2019 (1)
    • ►  October 2019 (1)
    • ►  August 2019 (1)
    • ►  July 2019 (3)
    • ►  June 2019 (2)
    • ►  May 2019 (2)
    • ►  April 2019 (1)
    • ►  March 2019 (2)
    • ►  February 2019 (2)
    • ►  January 2019 (1)
  • ►  2018 (25)
    • ►  December 2018 (2)
    • ►  November 2018 (1)
    • ►  October 2018 (5)
    • ►  September 2018 (1)
    • ►  August 2018 (3)
    • ►  July 2018 (1)
    • ►  June 2018 (3)
    • ►  May 2018 (1)
    • ►  April 2018 (1)
    • ►  March 2018 (2)
    • ►  February 2018 (3)
    • ►  January 2018 (2)
  • ►  2017 (20)
    • ►  December 2017 (2)
    • ►  November 2017 (3)
    • ►  October 2017 (2)
    • ►  September 2017 (2)
    • ►  August 2017 (1)
    • ►  July 2017 (1)
    • ►  June 2017 (1)
    • ►  May 2017 (3)
    • ►  April 2017 (1)
    • ►  March 2017 (1)
    • ►  February 2017 (2)
    • ►  January 2017 (1)
  • ►  2016 (18)
    • ►  December 2016 (2)
    • ►  November 2016 (3)
    • ►  October 2016 (1)
    • ►  September 2016 (1)
    • ►  August 2016 (1)
    • ►  July 2016 (2)
    • ►  June 2016 (3)
    • ►  May 2016 (1)
    • ►  April 2016 (1)
    • ►  March 2016 (1)
    • ►  February 2016 (1)
    • ►  January 2016 (1)
  • ►  2015 (20)
    • ►  December 2015 (3)
    • ►  November 2015 (1)
    • ►  October 2015 (2)
    • ►  September 2015 (1)
    • ►  August 2015 (1)
    • ►  July 2015 (2)
    • ►  June 2015 (1)
    • ►  May 2015 (1)
    • ►  April 2015 (3)
    • ►  March 2015 (1)
    • ►  February 2015 (3)
    • ►  January 2015 (1)
  • ►  2014 (22)
    • ►  December 2014 (3)
    • ►  November 2014 (2)
    • ►  October 2014 (2)
    • ►  September 2014 (1)
    • ►  August 2014 (3)
    • ►  July 2014 (2)
    • ►  June 2014 (1)
    • ►  May 2014 (1)
    • ►  April 2014 (1)
    • ►  March 2014 (1)
    • ►  February 2014 (2)
    • ►  January 2014 (3)
  • ►  2013 (16)
    • ►  December 2013 (2)
    • ►  November 2013 (1)
    • ►  October 2013 (2)
    • ►  September 2013 (1)
    • ►  August 2013 (1)
    • ►  July 2013 (1)
    • ►  June 2013 (1)
    • ►  May 2013 (2)
    • ►  April 2013 (1)
    • ►  March 2013 (1)
    • ►  February 2013 (1)
    • ►  January 2013 (2)
  • ►  2012 (16)
    • ►  December 2012 (2)
    • ►  November 2012 (1)
    • ►  October 2012 (1)
    • ►  September 2012 (1)
    • ►  August 2012 (1)
    • ►  July 2012 (1)
    • ►  June 2012 (2)
    • ►  May 2012 (1)
    • ►  April 2012 (1)
    • ►  March 2012 (2)
    • ►  February 2012 (1)
    • ►  January 2012 (2)
  • ▼  2011 (26)
    • ►  December 2011 (3)
    • ►  November 2011 (2)
    • ►  October 2011 (1)
    • ►  September 2011 (1)
    • ►  August 2011 (1)
    • ►  July 2011 (3)
    • ►  June 2011 (5)
    • ►  May 2011 (1)
    • ▼  April 2011 (2)
      • "சத்யசாயி சென்ரர்" மானிப்பாய் வீதி, தாவடி
      • ஈழத்துத் திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன் பேசுகிறார்
    • ►  March 2011 (2)
    • ►  February 2011 (1)
    • ►  January 2011 (4)
  • ►  2010 (29)
    • ►  December 2010 (2)
    • ►  November 2010 (2)
    • ►  October 2010 (2)
    • ►  September 2010 (4)
    • ►  August 2010 (6)
    • ►  July 2010 (2)
    • ►  June 2010 (1)
    • ►  May 2010 (2)
    • ►  April 2010 (3)
    • ►  March 2010 (1)
    • ►  February 2010 (2)
    • ►  January 2010 (2)
  • ►  2009 (28)
    • ►  December 2009 (2)
    • ►  November 2009 (3)
    • ►  October 2009 (3)
    • ►  September 2009 (1)
    • ►  August 2009 (2)
    • ►  July 2009 (2)
    • ►  June 2009 (4)
    • ►  May 2009 (3)
    • ►  April 2009 (2)
    • ►  March 2009 (2)
    • ►  February 2009 (1)
    • ►  January 2009 (3)
  • ►  2008 (30)
    • ►  December 2008 (4)
    • ►  November 2008 (3)
    • ►  October 2008 (2)
    • ►  September 2008 (3)
    • ►  August 2008 (1)
    • ►  July 2008 (2)
    • ►  June 2008 (3)
    • ►  May 2008 (2)
    • ►  April 2008 (3)
    • ►  March 2008 (1)
    • ►  February 2008 (1)
    • ►  January 2008 (5)
  • ►  2007 (53)
    • ►  December 2007 (1)
    • ►  November 2007 (3)
    • ►  October 2007 (2)
    • ►  September 2007 (14)
    • ►  August 2007 (16)
    • ►  July 2007 (2)
    • ►  June 2007 (2)
    • ►  May 2007 (1)
    • ►  April 2007 (4)
    • ►  March 2007 (2)
    • ►  February 2007 (4)
    • ►  January 2007 (2)
  • ►  2006 (35)
    • ►  December 2006 (3)
    • ►  November 2006 (1)
    • ►  October 2006 (3)
    • ►  September 2006 (3)
    • ►  August 2006 (1)
    • ►  July 2006 (13)
    • ►  June 2006 (1)
    • ►  May 2006 (3)
    • ►  April 2006 (1)
    • ►  March 2006 (2)
    • ►  February 2006 (2)
    • ►  January 2006 (2)
  • ►  2005 (4)
    • ►  December 2005 (4)

Followers

Powered by Blogger.

கண்காணிப்புக்குழு

eXTReMe Tracker

Popular Posts

  • மேளச்சமா...!
    "மச்சான்! பிள்ளையாரடி கொடியேறி விட்டுது" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...
  • "அண்ணை றைற்"
    கடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...
  • வலைப்பதிவில் ஒரு வருஷம்
    தமிழ் வலைப்பதிவுலகில் நானும் என் உள்ளக் கிடக்கைகளை எழுத வேண்டும் என்று நினைத்து எழுத ஆரம்பித்து இன்றோடு ஒரு வருஷம் ஓடி விட்டது. இன்பத் தமிழ்...
  • என் இனிய மாம்பழமே....!
    பரமசிவன் குடும்பத்தில் ஒரு ஞானப்பழம் குறித்த பிரச்சனை வந்தது மாதிரி எங்கள் வீட்டிலும் வந்தால் "ஞானப்பழத்தை நீங்களே வச்சுக்கொள்ளுங்கோ, எ...
  • கே.எஸ்.பாலச்சந்திரனின் "கரையைத் தேடும் கட்டுமரங்கள்"
    கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள் ஈழத்தின் தனி நடிப்புக் கலைஞராக ,வானொலி, தொலைக்காட்சிக் கலைஞராக,சினிமா நடிகராக ரசிகர் மனதில் நீங்கா இடம்பிடித்த ...
  • நான் உங்கள் ரசிகன்
    முந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, இன...
  • திரையில் புகுந்த கதைகள்
    "திரையில் புகுந்த கதைகள்" என்ற வானொலிப்படைப்பை நான் வழங்கியபோது சேர்த்த சில விஷயங்களை இங்கே பகிர்கின்றேன்.மலையாள சினிமா உலகு போல்...
  • வலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்
    இன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத...
  • வாடைக்காற்று
    செங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் " வாடைக்காற்று எழுதினாரே, அவரா?" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற்...
  • கலாநிதி க.குணராசா வழங்கிய "சூளவம்சம் கூறும் இலங்கை வரலாறு
    செங்கை ஆழியான் என்ற புனைபெயரில் நாவல்களை, சிறுகதைகளைப் படைத்த கலாநிதி குணராசா அவர்கள் தன்னுடைய சொந்தப் பெயரில் மாணவருக்கான புவியியல், வரலாற்...

Social Icons

Featured Posts

 
Copyright (c) 2010 "மடத்துவாசல் பிள்ளையாரடி". Designed for Video Games
Download Christmas photos, Public Liability Insurance, Premium Themes