எனது முந்திய பதிவில் "தயவு செய்து பாதணிகளோடு உட் செல்லாதீர்" என்று இன்ரநெற் கபே போன்ற இடங்களில் போட்டிருந்ததாகச் சொல்லியிருந்தேன். பதிவு போட்டு அடுத்த நாள் யாழ்ப்பாணம் ரவுணுக்குப் போய் விட்டுத் திரும்புகையில் ஒரு கடையில் இப்படிப் போட்டிருந்ததைப் பார்த்தேன் "நீங்கள் பாதணிகளுடனும் உள்ளே வரலாம்" அவ்வ்வ் :-((((
வெள்ளைக்கார்ட் வெள்ளாளர்
தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோயிலுக்குப் போய் விட்டு கே.கே.எஸ் றோட்டில் ஆட்டோவில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். மருதனார்மடம் இராமனாதன் கல்லூரியில் இருந்து சாரி சாரியாக செம்பாட்டு மண் பரவிய உடுபிடவைகள் அணிந்து ஒரு ஐம்பது பேருக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள் அடங்கலாகப் பயணிக்கிறார்கள். "எங்கே போய் விட்டு இவர்கள் போகிறார்கள்" என்று ஆட்டோக்காரரின் வாயைக் கிளறுகிறேன். இவர்கள் வருமானம் குறைந்த சனம், வெள்ளைக்கார்ட்டுக்கு நிவாரணக்காசு வாங்குபவர்கள். வெளிநாடுகள் செய்யும் நிதியுதவியை இங்கேயுள்ள விதானைமார் (கிராமசேவகர்) இப்படியான சனத்துக்குக் கொடுக்கும் போது சும்மா கொடுத்தோம் என்றிராமல் ஏதாவது தோட்ட வேலையைச் செய்ய வைத்துக் கொடுப்பார்கள்" என்று சொல்லிய அவர் "இந்தச் சட்டம் எல்லாம் தாழ்த்தப்பட்ட சனத்துக்குத் தான் தம்பி, எனக்குத் தெரிய எத்தனையோ வெள்ளாம் ஆட்கள் இந்த வெள்ளைக்கார்ட் நிவாரணம் எடுக்கிறவை ஆனால் விதானையாரை தங்கட அணைவுக்குள்ள வச்சிருக்கினம் என்பதால ஓசியில் அவைக்குப் பணம் கிடைக்கும்" என்று பெருமினார். அந்த நேரம் சாதி ஒழிப்புப் போராளி எழுத்தாளர் டானியல் என் நினைவுக்கு வந்தது தவிர்க்க முடியாது இருந்தது.
எங்கட ஊர் லக்சறி கார் வகைகள் இவை தான். வெளிநாடுகளில் இந்தக் காரெல்லாம் லட்சக்கணக்கான டொலர் பெறுமே ;-)
யாழ் நிலம் வேணும் பராசக்தி யாழ் நிலம் வேணும்
யாழ்ப்பாணத்துக்கு ஆயுட்காப்புறுதி நிறுவனங்கள் முதல் லொட்டு லொசுக்குக் கடைகள் எல்லாம் சமீபகாலமாக முற்றுகையிடுக்கின்றன. கஸ்தூரியார் வீதி போன்ற பிரதான வீதிகளின் கட்டிடங்களின் அடுக்குகள் மூன்று, நான்கு என உயருகின்றன. இடிபாடான கடைகளின் சொந்தக்காரை "நாளை நமதே" பாட்டுப் பாடி சேர்ந்த சகோதரங்கள் மாதிரி தேடிப்பிடிக்கிறார்கள். ஒரு வர்த்தகர் என் காதில் போட்ட சமாச்சாரம் இது, யாழ்ப்பாணத்தில் இருந்த தன் கடையை 35 லட்சத்துக்கு விற்க இருந்தாராம் ஒருவர். இப்போது அந்தக் கடையை தென்னிலங்கையின் ஒரு பெரும் வர்த்தக நிறுவனம் வருஷம் 18 லட்சத்துக்கு வாடகைக்குக் கேட்டிருக்கிறதாம் என்றால் பாருங்களேன்.
படத்தில் வின்சர் தியேட்டருக்குப் பக்கமாக எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கும் அடுக்குமாடிக் கடைத்தொகுதி ஒன்று
இந்த நிலையில் தமது வீடுகளை 30 லட்சத்துக்கும் குறைவாக விற்று விட்டு தப்பினோம் பிழைச்சோம் என்று கொழும்பில் அடுக்குமாடியில் முதலிட்டுக் கொண்டவர்களும் வெளிநாட்டில் தமது வீட்டின் மோர்ட்கேசுக்குப் போட்டவர்களும் நாடு திரும்பி மூக்காலும் வாயாலும் அழுகின்ற நிலமையைப் பார்க்கக் கூடியதாக இருந்தது. வெறுங்காணிகளுக்கு இருக்கும் மவுசு தமன்னா கால்ஷீட் போல எகிறிவிட்டது.
மருதனார்மடச் சந்தைக் காட்சி
வெளிநாடுகளில் shopping mall எனப்படும் கடைவளாகங்கள் ஒவ்வொரு நகரிலும் இருப்பது தவிர்க்க முடியாதது, யாழ் நகரச் சந்தைப்பகுதி நெருக்கடி நிறைந்த பகுதியாக மாறும் போது அதைச் சூழவுள்ள பகுதிகள் மெல்ல மெல்ல நகரமயமாகிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் கீழேயுள்ள படத்தில் இருப்பது நாவலர் றோட்டில் உள்ள லக்சன் பிளாசா
நாம வேற வீட்ல பிறந்திருக்கலாம்டா
அழகன் படத்தில் மம்முட்டிக்கு நிறையக் குழந்தைகள், அவரின் கண்டிப்பினால் மனம் வெதும்பி ஒரு பையன் சொல்லுவான் "நாம வேற வீட்ல பிறந்திருக்கலாம்டா" இதே மாதிரியான ஒரு உரையாடலை சமீபத்தில் கேட்டேன். தற்போது தமிழில் ஆடி கழிந்து ஆவணி பிறந்திருக்கிறது, ஏகப்பட்ட கல்யாண வீடுகள், சாமத்தியச் சடங்குகள், குடிபுகுர்தல்கள் இவற்றை விட நல்லூர் கந்தசுவாமி கோயில், செல்வச்சந்நிதி முருகன் ஆலயம், மஞ்சவனப்பதி முருகன் ஆலயம், தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோயில் மகோற்சவங்கள் இவற்றையும் விட சின்னச் சின்னக் கோயில்களுக்கும் மகோற்சவங்கள் களைகட்டுகின்றன. இதனால் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக புலம்பெயர் தமிழர்கள் படையெடுக்கிறார்கள். நமது சமூகத்தில் புதிதாக முளைத்திருக்கும் சாதி "பொறின் சனம்". இதனைக் கவனித்த, இவ்வளவு நாளும் போர்க்காலத்தில் எல்லாம் தன் நிலத்தை விட்டு அகலாத சிறீமான் பொதுஜனம் ஒன்று மடத்துவாசல் பிள்ளையாரடியில் வைத்து இப்படிச் சொன்னது தன் நண்பரிடம் "டோய் மச்சான்! வெளிநாட்டுச் சனம் நிறைஞ்சு போச்சு இப்ப , பேசாம நாங்கள் இந்த இடத்தை விட்டு இடம்பெயரவேணுமடாப்பா"
அடுத்த கோள் மூட்டலில் செல்வச் சந்நிதியானுடன் சந்திக்கிறேன்...;-)
15 comments:
அந்த கறுப்பு குட்டி ப்ளசரு பார்த்ததும் எனக்கு முதன்முதலா கார்ல போன ஞாபகம் கிர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு சுத்திக்கிட்டு வந்திருச்சு! இதே மாதிரி சின்ன காரு நீலக்கலரு அம்பாசிடரு !
//பொறின் சனம்//அப்படின்னா புலம் பெயர்ந்தவர்களா?
//தற்போது தமிழில் ஆடி கழிந்து ஆவணி பிறந்திருக்கிறது, ஏகப்பட்ட கல்யாண வீடுகள், சாமத்தியச் சடங்குகள், குடிபுகுர்தல்கள் இவற்றை விட நல்லூர் கந்தசுவாமி கோயில், செல்வச்சந்நிதி முருகன் ஆலயம், மஞ்சவனப்பதி முருகன் ஆலயம், தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோயில் மகோற்சவங்கள் இவற்றையும் விட சின்னச் சின்னக் கோயில்களுக்கும் மகோற்சவங்கள் களைகட்டுகின்றன.//
ஆஹா! ஆஹா!! போன இடத்தில பெரியபாண்டிக்கு ஒரே விருந்து வாய்ப்புக்கள் தானா புகுந்து ஒரு கட்டு கட்டுங்க பாஸ் :))
ம்ம்ம்...
\\வெறுங்காணிகளுக்கு இருக்கும் மவுசு தமன்னா கால்ஷீட் போல எகிறிவிட்டது.\\
உங்களால மட்டும் தல இப்படி எல்லாம் உவமை சொல்ல முடியும் ;)))
கலக்க்கல், படங்கள் அருமை என்னாது யாழில் லக்சன் பிளாசாவா? விரைவில் யாழ்ப்பாணம் நவீனமாகிவிடும். எல்லாம் நன்மைக்கே
// ஆயில்யன் said...
ஆஹா! ஆஹா!! போன இடத்தில பெரியபாண்டிக்கு ஒரே விருந்து வாய்ப்புக்கள் தானா புகுந்து ஒரு கட்டு கட்டுங்க பாஸ் :))//
இல்லை சின்னப்பாண்டி கலியாணவீடுகளில் பெரும்பாலும் சைவ உணவுதான். கோயில் திருவிழாக்கள் நடப்பதால் வீடுகளிலும் சைவம் தான் ஆகவே பெரியபாண்டிக்கு அசைவ விருந்து கிடைப்பது கயிட்டம்
ஆயில்ஸ்
பொறின் = பாரின் அதாவது புலம்பெயர்ந்தவர்கள்.
பாஸ் 15 வருஷத்துக்கு அப்புறம் முதல் தடவை ஒரு ஊர்க்கொண்டாட்டத்து சாப்பாடு சாப்பிட்டேன். ஆனா நான் வந்த வேளை எல்லாமே பச்சைக் கறி தான் :(
I am reading your articles for a while so interesting specially the one you are writing now.expecting more like this with photos.
கோபிநாத் said...
ம்ம்ம்...
\\வெறுங்காணிகளுக்கு இருக்கும் மவுசு தமன்னா கால்ஷீட் போல எகிறிவிட்டது.\\
உங்களால மட்டும் தல இப்படி எல்லாம் உவமை சொல்ல முடியும் ;)))
//
வாங்க தல கோபி ;)
வாங்கோ வந்தி, இனி பிளாசாக்கள் மயம் தான் ;)
அன்பின் சாரங்கன் வருகைக்கு நன்றி, தொடர்ந்தும் தருகின்றேன்
//பதிவு போட்டு அடுத்த நாள் யாழ்ப்பாணம் ரவுணுக்குப் போய் விட்டுத் திரும்புகையில் ஒரு கடையில் இப்படிப் போட்டிருந்ததைப் பார்த்தேன் "நீங்கள் பாதணிகளுடனும் உள்ளே வரலாம்" அவ்வ்வ் :-(((// ஒருவர் பாதணியோடு உள்ளே வரலாமா எனக் கேட்டுக் கொண்டு அலைகிறார் என்ற செய்தி யாழ்ப்பாணம் முழுதும் பரவிவிட்டது போல :-)
ஆகா, இப்படியென்றால் ஏகப்பட்ட பிரச்சனைகளை பதிவில் சொல்லியிருப்பேனே ;)
அருமையான பதிவு தற்போதைய யாழ்ப்பாணத்தை பற்றி..
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே, தங்கள் வருகை மூலம் நல்லதொரு இணையத்தளத்தின் அறிமுகமும் எனக்குக் கிட்டியிருக்கின்றது தொடருங்கள் உங்கள் நற்பணியை
வின்சர் தியேட்டருக்குப் பக்கமாக எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கும் அடுக்குமாடிக் கடைத்தொகுதியில் யாரோ ஒருவர் எனது பெயரில் கடை ஒன்றைத் திறந்திருக்கிறார் போல இருக்கிறதே.
உங்கட சொந்தக்காரர் திறந்திருப்பாரோ என்னவோ ;)
Post a Comment