ஐஸ்கிறீம் என்ற பெயர் காணாமற் போய்க் குளிர்களி என்று மாறியதும், விறகு காலை போய் மர அரிவு ஆலையாக மாறியதும், துர்க்கா என்ரபிறைசஸ் மறைந்து கொற்றவை கால்நடைத்தீனி வாணிபம் என்று மாற்றம் பெற்றதுமாக நிறைய மாற்றங்கள். அப்போது ஒரு வேடிக்கைப் பார்வையோடு எள்ளிநகையாடியவர்களும் இருக்கிறார்கள்.
ஆனால் காலம் செல்லச் செல்ல அந்த மாற்றமே அங்கே வாழும் சமூகத்தின் புழக்கத்தில் அதிகம் வந்துகலந்துவிட்டதை அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்து இப்போது புலம் பெயர்ந்திருப்பவர்களால் நன்கு உணரமுடியும். எப்போதும் நல்ல விஷயங்கள் ஆரம்பத்தில் கசக்கத்தான் செய்யும், காலம் கடந்து நீண்ட நோக்கில் பார்க்கும் போது அதன் அறுவடை செழுமையாக இருக்கும். இதைத் தான் நேற்றுக்கூட ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டிருக்கும் போது என் மனதில் ஓட்டிக்கொண்டிருந்தேன்.
செந்தமிழ்ச் செல்வர் சு. சிறீ கந்தராஜாவின் "தமிழின் பெருமையும் தமிழரின் உரிமையும்" என்ற அந்த நூல் வெளியீடு விழாவில் திரு. தேவராஜா அவர்கள் ஆய்வுரை பகிர்ந்தபோது "தமிழோடு 25 வீத சமஸ்கிருதம் கலந்து மலையாளமாகியும், 50 வீத சமஸ்கிருதக்கலப்பில் தெலுங்காகியும், 75 வீதக்கலப்பில் கன்னடமாகியும்" தமிழ்மொழி கிளைமொழிகளாகித் தன் அடையாளத்தைத் தொலைத்துக்கொண்டு போவதையும் குறிப்பிட்டிருந்தார். இந்த நூலில் கூட நூலாசிரியர் இப்படிச் சொல்கிறார், "1100 ஆண்டுகளுக்கு முன்னர் - அதாவது கி.பி. 9 ஆம் நூற்றாண்டுவரை கன்னடமொழி தமிழாகவே இருந்தது. 900 ஆண்டுகளுக்கு முன்னர் - அதாவது கி.பி. 11 ஆம் நூற்றாண்டுவரை தெலுங்கு மொழி தமிழாகவே இருந்தது. 700 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 13 ஆம் நூற்றாண்டு வரை மலையாளம் தமிழாகவே இருந்தது".
கன்னடமும், தெலுங்கும், மலையாளமும் தமிழிலிருந்து தோன்றாமல் விட்டிருந்தால் இன்றைக்கு இந்தியாவிலே இருக்ககூடிய தமிழனின் தொகை 21 கோடி என்கின்றார்.
ஓவ்வொரு முறை என் தாயகத்துக்கோ தமிழ்நாட்டுக்கோ செல்லும் போதோ நான் வாங்க நினைப்பது ஒரு தமிழ் அகராதி. ஆனால் புத்தகத்தின் கனம் தடைபோட்டுவிடும். அடுத்தமுறை போகும் போது ஒரு தமிழ் அகராதியை வாங்கிக் கடல் அஞ்சல் மூலமாவது அனுப்பிவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது எனக்குக் கிடைத்தது "யாழ்ப்பாணத் தமிழ் அகராதி".
தமிழ்மண் பதிப்பகம் சென்னை, மற்றும் சேமமடு பதிப்பகம் கொழும்பு ஆகிய பதிப்பாளர்களால் மே 14, 2006 ஆம் ஆண்டு மீள்வெளியிடப்பட்ட இப்புத்தகம் மெல்பன் தமிழ்ச்சங்கத்தால் அவுஸ்திரேலியாவில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. கையெட்டும் தூரத்தில் கிடைக்கும் கனியை விடலாமோ? உடனே வாங்கிவிட்டேன்.
புத்தகத்தை வாங்கி விரிக்கும் போது ஆச்சரியமான வகையில் இருப்பது இதன் முதற்பதிப்பு. 1842 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்து அமெரிக்கன் மிஷன் அச்சகத்தில் அச்சிடப்பட்டு யாழ்ப்பாண புத்தகச் சங்கத்தால் 10 ஷில்லிங் அல்லது 5 ரூபாய்க்கு விற்கப்பட்டதாம்.
சந்திரசேகரப் பண்டிதர், மற்றும் சரவணமுத்துப் பிள்ளை ஆகியோரை ஆசிரியராகக் கொண்ட இந்நூல் கனதியான அட்டையோடு 486 பக்கங்களோடு வெளிவந்திருக்கிறது. பின் அட்டையில் இருக்கும் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனின் "பதிப்பரசர் எங்கள் படை" என்ற கவிதை மூலம் இந்நூலை மீள்பதிப்பாகக் கொண்டுவந்த கோ.இளவழகனை விதந்து பாடுகின்றார்.
நூலை விரிக்கின்றேன்.
அளவையம்பதி தமிழ்ப்புலவன் வேலுப்பிள்ளை குமாரன் கனகசபாப்பிள்ளையின் சிறப்புப் பாயிரம் முதலில் அணி செய்கின்றது. அந்த நேரிசையாசிரியப்பாவை எல்லோரும் புரிந்துகொள்ளும் விதத்தில் சந்தக்கவி இராமசாமியால் சீர்கள் பிரிக்கப்பட்டு இப்பதிப்பில் கொடுக்கப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து உடுவைநகர் முத்துக்குமாரசுவாமி சிதம்பரப்பிள்ளையின் இருபத்து நான்கு சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் அமைகின்றது.
அளவையம்பதி தமிழ்ப்புலவன் வேலுப்பிள்ளை குமாரன் கனகசபாப்பிள்ளையின் சிறப்புப் பாயிரம் முதலில் அணி செய்கின்றது. அந்த நேரிசையாசிரியப்பாவை எல்லோரும் புரிந்துகொள்ளும் விதத்தில் சந்தக்கவி இராமசாமியால் சீர்கள் பிரிக்கப்பட்டு இப்பதிப்பில் கொடுக்கப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து உடுவைநகர் முத்துக்குமாரசுவாமி சிதம்பரப்பிள்ளையின் இருபத்து நான்கு சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் அமைகின்றது.
முதற்பதிப்பின் முன்னுரையில் (1842 ஆம் ஆண்டு) அமெரிக்கன் அச்சகத்தாரால் இப்படித் தொடர்கின்றது. "தமிழ்மொழியின் சொல்வளத்தை அகரவரிசையில் முழுமையாகத் தரும் முதல் முயற்சியாக உருவாக்கப்பட்ட இவ்வகராதி தமிழுலகின் முன்னர் சமர்ப்பிக்கப்படுகின்றது. அவ்வகராதியில் 58,500 சொற்கள் உள்ளன. அதாவது சதுரகராதி முழுவதிலும் அடங்கிய சொற்களை விட நான்கு மடங்கு சொற்கள்".
தமிழ்மக்களிடையே தமது மதத்தைப் பரப்ப முனைந்த முதற்பெரும் பாதிரியார் முதலே அகராதி முறைமை வழியாகத் தமிழைத் தமது விளக்கப்பதிவிட் கொண்டுவருவதற்கு மேலை நாட்டு மரபு வழி வந்த அகராதி முறைமையக் கையாண்டுள்ளனர். (வீரமாமுனிவரின் சதுரகராதி) புரட்டஸ்தாந்தக் கிறீஸ்தவர்கள் இம்முயற்சியில் அறிவியல் பூர்வமான அணுகுமுறைமையே மேற்கொண்டனர். இவர்களுள்ளும் யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்டியங்கப் புறப்பட்ட மிசனரிமார்கள் தொடக்கத்திலிருந்தே அகராதி முயற்சியில் ஈடுபட்டனர். ஜோசப் நைற் பற்றி பேராயர் செபநேசன் சந்துள்ள செய்திகளை நோக்குக. ஜோசப் நைற் மெதடிஸ்ட மிஷன் பாதிரியாராகிய பர்சிவலுடன் இணைந்து செயற்பட்டார் என்பது முக்கியமான செய்தியாகும். இந்த பர்சிவல் தான் ஆறுமுக நாவலரின் ஆரம்பகால உந்து ஆற்றலாக விளங்கியவர். " என்று கூறிச் செல்கின்றார்.
மீளப்பதிப்பில் வாழ்த்துரை வழங்கிய தகைசார் ஓய்வு நிலைப் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் கூற்றில் " அகராதி என்பது அதன் உருவிலும் உள்ளடக்கத்திலும் மேலைத்தேய பண்பாட்டு வழி வந்ததாகும். தமிழ்மரபில் நிகண்டு முறைமையே உண்டு. அம்முறையினுள் அகராதியில் கிடைப்பன போன்ற சொல்லுக்கான கருத்து தரப்படாது. மாறாகச் சொற்கள் தொகுதிகளாத் தரப்படும். சிவனுக்குரிய பெயர்கள், கடலுக்குக்குரிய பெயர்கள் என தொகுதி முறையிலேயே வரும். உண்மையில் ஆங்கில மரபுப்படி இவை ஒரு பொருளுக்கான பல பெயர்கள் (Synonyms) எனவே கொள்ளவேண்டும்.
தமிழ்மக்களிடையே தமது மதத்தைப் பரப்ப முனைந்த முதற்பெரும் பாதிரியார் முதலே அகராதி முறைமை வழியாகத் தமிழைத் தமது விளக்கப்பதிவிட் கொண்டுவருவதற்கு மேலை நாட்டு மரபு வழி வந்த அகராதி முறைமையக் கையாண்டுள்ளனர். (வீரமாமுனிவரின் சதுரகராதி) புரட்டஸ்தாந்தக் கிறீஸ்தவர்கள் இம்முயற்சியில் அறிவியல் பூர்வமான அணுகுமுறைமையே மேற்கொண்டனர். இவர்களுள்ளும் யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்டியங்கப் புறப்பட்ட மிசனரிமார்கள் தொடக்கத்திலிருந்தே அகராதி முயற்சியில் ஈடுபட்டனர். ஜோசப் நைற் பற்றி பேராயர் செபநேசன் சந்துள்ள செய்திகளை நோக்குக. ஜோசப் நைற் மெதடிஸ்ட மிஷன் பாதிரியாராகிய பர்சிவலுடன் இணைந்து செயற்பட்டார் என்பது முக்கியமான செய்தியாகும். இந்த பர்சிவல் தான் ஆறுமுக நாவலரின் ஆரம்பகால உந்து ஆற்றலாக விளங்கியவர். " என்று கூறிச் செல்கின்றார்.
அணிந்துரை வழங்கிய பேராயர் கலாநிதி.எஸ்.ஜெபநேசனின் குறிப்பில்"யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய மிஷனரிமாரின் இன்னொரு பங்களிப்பினை ஆராயப் புகுவோம். மூன்று மிஷன் சங்கங்களையும் சேர்ந்த ஆரம்பகால் மிஷன் தொண்டர்கள் ஒரு தமிழ்-ஆங்கில அகராதி இல்லாத குறையை உணர்ந்து அதனை நிவர்த்தி செய்வதற்கான பணியை மேற்கொண்டனர்.
1818 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வந்திறங்கிய ஜோசப் நைற் என்பார் தமது பணியைத் தொடங்கிய நேரத்திலிருந்தே ஒரு பாரிய தமிழ் அகராதிகான தரவுகளைத் திரட்டத்தொடங்கினார். கொழுமைச் சேர்ந்த காபிரியேல் திசேரா (இவர் தமிழும் ஆங்கிலமும் அறிந்த தமிழர்), உடுவிலைச் சேர்ந்த சந்திரசேகரப் பண்டிதர், இருபாலையை சேர்ந்த சேனாதிராய முதலியார், லெஸ்லியல் மிஷன் போசிவர் உட்பட பல அறிஞர்களின் உதவியைப் பெற்றுக் கொண்டார். துரதிஷ்டவசமாக ஜோசப் நைற் தமது வேலை பூர்த்தியாகு முன்னரேயே இவ்வுலக வாழ்வினை நீத்தார்.
உடுவிலில் பணியாற்றிய அமெரிக்க மிஷனரியாகிய லீவை ஸ்போல்டிங் என்பார் ஜோசப் நைற் அவர்களின் நண்பராகவிருந்த காரணத்தால் மறைந்த ஜோசப் நைற் திரட்டியவற்றைப் பெற்று , சாமுவேல் ஹற்சின்ஸ் என்ற மிஷனரி மூலமாக 1842 ஆம் ஆண்டு அச்சுவாகனமேற்றினார். "
உடுவிலில் இருந்த பெண்கள் பாடசாலை மாணவிகள் இந்நூலுக்கான படியெடுக்கும் பணியைப் பாடசாலை முடிந்த பின்னரும் தொடங்கும் முன்னரும் செய்தனர். யாழ்ப்பாண அகராதி என்பதால் யாழ்ப்பாணத்தமிழுக்கான அகராதி இது என்று நினைப்பது தவறு. ஆனாலும் யாழ்ப்பணத்துத் தமிழ்ச்சொற்களும் இதில் இடம்பெற்றுள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. பொன்னத்துப் பெட்டி - தாலி, கூறை வைத்துக்கொண்டு போம் பெட்டி, கசட்டைத் தயிர் -ஆடை நீக்கின தயிர் போன்றன அவற்றுட் சில என்கின்றார் அறிமுகவுரை வழங்கிய பா.ரா.சுப்பிரமணியன்.
இந்நூல் மானிப்பாய் அகராதி என்றும் அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. தஞ்சை தமிழ்த்தென்றல் என்பவரிடம் மூலநூலைப்பெற்று விடுபட்ட 100 பக்கங்களைப் புதுக்கோட்டை ஞானாலயா கிருஷ்ணமூர்த்தியிடம் பெற்று மீள் உருவாக்கம் செய்யப்பட்டதாகப் பதிப்பாளர்கள் கூறுகின்றார்கள்.
இந்த அகராதி நாற்பது டொலர் பெறுமதி என்றாலும் நூலில் பொதிந்திருக்கும் வரலாற்றுக் குறிப்புக்களுக்கும், தமிழ் அகராதிச் சொல் விளக்கத்துக்கும் எவ்வளவு கொடுத்தாலும் தகும்.
31 comments:
நல்ல விடயங்களை இணைத்து வருகிறீர்கள் பிரபா. என்னுடைய சிறுபராயத்திலும் இந்த நூலை பார்த்த அநுபவம் உள்ளது. ஆங்கில தமிழ் அகராதி என்று நினைக்கிறேன்.
மின்னூல் வடிவில் இருக்கும் என்றால் அனைவருக்கும் உபயோகப் படும்.
நன்றி பிரபா.
தேவன்
வணக்கம் தேவன்
இந்த நூல ஆங்கில-தமிழ் அகராதி அன்று. தமிழ்ச் சொற்களுக்குப் புழக்கத்தில் உள்ள அல்லது பதிலீடான வேறு சொற்கள். நீங்கள் குறிப்பிடும் பழைய அகராதியின் பெயர் என் நினைப்புக்கு இப்போது வரவில்லை. உங்கள் கருத்தோடு உடன்படுகின்றேன். மின்னூலாக இவை வருமிடத்துத் தேவையான சொற்களைப் பக்கம் தேடாமல் சில நொடிகளில் பெற்றுவிடலாம் இல்லையா?
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள்.
இப்படி ஒரு அகராதியைப் பற்றிக் கேள்விப்படவில்லை. அறிமுகத்துக்கு நன்றிகள். எனக்கும் ஒன்று ஓடர் பண்ணிவிடுகிறீர்களா?
மதம் பரப்ப வந்தவர்கள் இப்படிப் பல நல்ல சேவைகள் செய்துள்ளனர் (தமது தேவை கருதியும் தான்). பதிவுக்கு நன்றிகள்.
இதை எழுதித் தொகுத்தவர் அமெரிக்க மிசன் பாதிரியார் நைற். இவர் யாழ்ப்பாணத்தையோ அல்லது மானிப்பாயோ சேர்ந்தவர் அல்ல.
இவருக்கு உதவியாக இருந்த சந்திர சேகர பண்டிதரும், சரவணமுத்துப்பிள்ளையும் பாதிரியார் இறந்த பின்னர் தங்கள் பெயரில்
தங்கள் ஊர் பெயரில் பிற்காலத்தில் வெளியிட்டார்கள்.
இது ஒரு மோசடி . மோசடிக்கு இன்று புகழாரம்.
வணக்கம் சிறீ அண்ணா
இப்புத்தகத்தைப் சிட்னியில் பெறுவது குறித்த விபரங்களைப் பெற்றுத் தருகின்றேன்.
//இதை எழுதித் தொகுத்தவர் அமெரிக்க மிசன் பாதிரியார் நைற். இவர் யாழ்ப்பாணத்தையோ அல்லது மானிப்பாயோ சேர்ந்தவர் அல்ல.//
வணக்கம் அநாமோதய நண்பரே
இந்த நூலில் ஜோசப் நைற் இன் அரும்பணி பற்றி பதிப்பாளர் உட்பட, உரை வழங்கிய எல்லா அறிஞர்களுமே விதந்து கூறியிருக்கின்றார்கள். அதை என் பதிவிலும் இட்டேன்.
நூலின் முகப்பு அட்டையில் அவர் பெயர் விடுபட்டிருப்பது மிகப்பெரும் தவறு என்பதையும் நான் ஒப்புக்கொள்கின்றேன். அதே வேளை சந்திர சேகர பண்டிதரும், சரவணமுத்துப்பிள்ளையும் ஆகியோரின் உறுதுணைப் பணியும் இருட்டடிப்புச் செய்யமுடியாதவை.
பிரபா!
நானும் தமிழ் அகராதியின் தந்தை "வீரமா முனிவர் " நினைவு நாளான (4 பெப்ருவரி) இன்று அவர் பற்றி ஓர் பதிவு போட்டேன். நீங்களும் அகராதி உருவாக்கத்தில் மிசனரிகளுக்குள்ள பங்கு பற்றிக் குறிப்பிட்டுள்ளது. பெருமகிழ்வைத் தருகிறது.இத் தகவல் எனக்குப் புதிது.
ஆனால் சிலர் இன்னும் மிசனரிகள்; வெளிநாட்டவர் செய்த நல்லவற்றை மறைக்க முற்படுவது.ஏனென்றே
புரியவில்லை.
நல்ல பதிவு இப்படித் தேடித் தாருங்கள்.
யோகன் பாரிஸ்
சரியான அகராதி பிடிச்ச மனுசன் எண்டதை காட்டிபோட்டியள்.
அறிந்தவனுக்குத்தான் அதன் அருமை தெரியும்.
தமிழில் ஒவ்வொரு சொல்லுக்கும் எவ்வளவோ அர்த்தங்களிருக்கு, அப்பிடிப்பாக்கேக்கை நாங்கள் அறிஞ்ச சொற்கள் அணுவளவுகூட இல்லை எண்டுதான் சொல்லுவன்.
எனக்கும் உந்த தமிழ் அகராதிகள் வாங்கிறதில சரியான விருப்பம்,ஆனா ஆசைப்பட்டுத் தொட்டிடுவன் பாரங் கண்டு விட்டிடுவன்
தவல்களுக்கு நன்றி
வணக்கம் யோகன் அண்ணா
மேலைத்தேயர் செய்த நல்ல விஷயங்களுக்கான அங்கீரம் உரியமுறையில் கொடுக்கப்படல் வேண்டும். இது போன்ற பல முயற்சிகள் மூலம் பழைய உபயோகமான விடயங்கள் மீள் பதிப்பில் வரவேண்டும். உங்கள் ஆதங்கமும் புரிகின்றது.
கானா பிரபா,
இது நானும் போட்டிருக்க வேண்டிய பதிவு.
வெளியீட்டு விழாவோடயே போட்டிருக்க வேணும்.
நல்ல்து செய்தீர்.
இதற்கு யாழ்ப்பாண அகராதி என்று பெயர் வைத்தது அதை உருவாக்கியவர்களோ, வெளியிட்டவர்களோ அல்லர். இந்த அகராதி அந்தப் பெயரில்தான் நூற்றாண்டுக்கும் மேலாக புழங்கி வந்துள்ளது. தமிழ்நாட்டிலும் இதே பெயரில்தான் இவ்வகராதி சொல்லப்பட்டு வந்துள்ளது.
இவ்வகராதியைத் தொகுத்தவர்கள் இதற்கு வைத்த பெயர் 'பெயரகராதி'. தமிழ்நாட்டில்தான் இது யாழ்ப்பாண அகராதியாகச் சொல்லப்பட்டது. பின் அதுவே நிலைத்துவிட்டது. இது மானிப்பாய் அச்சுக்கூடத்தி்ல் அச்சிடப்பட்டதால் 'மானிப்பாய் அகராதி' என்ற பெயரும் பயன்பாட்டிலிருந்தது.
இரு நூற்றாண்டுகளின் முன் எங்கள் தமிழ் எப்படியிருந்ததென்று மேம்போக்கான பார்வையொன்றைப் பெறலாம். மூலப்படிக்கு எழுதப்பட்ட முன்னுரையின் மணிப்பிரவாள நடையே சான்று. ஏராளம் வடசொற்கள் புழங்கியிருக்கின்றன.
பூராயம், பூராயக்கதை என்ற சொற்களும் வருகின்றன; ஆனால் இன்று பயன்படுத்தும் பொருளை முழுமையாக் கொண்டிராமல்.
முசுப்பாத்தி என்ற சொல் வராமல் அதன் அடிகளான, முசிதல், முசிப்பாற்றி, முசிப்பாற்றல் என்பனவும் வருகின்றன. எனவே முசுப்பாத்தி என்பது இந்நூல் எழுதப்பட்ட பின்னர் ஏற்பட்ட திரிபு.
'பறை' என்ற வினையும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளது.
கதை, கதைத்தல் என்ற வினைகளும் வருகின்றன.
கத்தரி என்பதற்கு வழுதுணை என்ற பெயர் தரப்பட்டுள்ளது. இந்தப்பேர் இன்று மட்டக்களப்புப் பக்கம் மட்டும் புழக்கத்தில் இருக்கிறது. (இச்சொல்தான் கத்தரிக்காய்க்குரிய சரியான வேர் என்று நித்தி கனகரத்தினம் சொல்வார்) இந்நூலில் இடம்பெற்றதால் வழுதுணை என்ற சொல் யாழ்ப்பாணத்தாரும் பயன்படுத்தியிருந்தனர் என்று கருதலாமா? (அல்லது இன்றும் யாழ்ப்பாணத்தில் எங்காவது இச்சொல் பயன்பாட்டிலுள்ளதா?)
அகரவரிசை ஒழுங்கில் குழப்பமுண்டு. இது மூல நூலிலேயே இருக்கிறதா, அல்லது இப்போது மீள்வெளியிடும்போது வந்த மாற்றமா தெரியவில்லை.
முச, முசி, முசு போன்ற தொடர்களின் பின்னால்தான், இவையெல்லாவற்றுக்கும் முன்னர் வரவேண்டிய 'முச்' தொடர் வருகிறது. எல்லாத் தொடரிலும் உயிர்மெய்கள் அனைத்தும் முடிந்தபின்தான் மெய்யைத் தொகுக்கிறார்கள். அதாவது ப, பா, பி, பீ, பு.... என்று வந்து இறுதியில்தான் ப் வருகிறது.
அந்த நேரத்தில் யாழ்ப்பாணத்தார் தமிழ்நெடுங்கணக்கு அட்டையில் மெய்யை வலப்பக்கத் தொங்கலில் வரிசைப்படுத்தியிருப்பார்களோ?;-)
பிரபா,
தனியொரு அகராதியை வைத்துக் காலம் தள்ள முடியாது. அதுவும் யாழ்ப்பாண அகராதி இன்று எவ்வளவுக்குக் கைகொடுக்கும் என்று தெரியவில்லை. (க்)ரியாவின் தற்காலத் தமிழகராதி பெரிதும் பயனுள்ளது.
ஆனால், இந்த யாழ்ப்பாண அகராதி ஒரு காலத்தின் பதிவு.
தோண்டினால் இன்னும் நிறைய சுவாரசியமான விசயங்கள் கிடைக்கும்.
வணக்கம் வசந்தன்
விரிவான உங்கள் தகவல்களுக்கு நன்றிகள். ஒரு தமிழ்ப் பண்டிதர் கத்தரிக்காய் விற்ற பெண்ணிடம் போய் " மாதே மாதே இவ் வழுதுளங்காய் (கத்தரி) விலை என்னே? என்று கேட்கவும், உந்தாள் எதையே கோக்குது என்று அந்தப் பெண் புருஷனிடம் போட்டுக்கொடுக்கவும் , புலவர் அடிவாங்கிய கதை ஞாபகத்துக்கு வருகுது.
உண்மைதான் ஒரு அகராதியில் குறிப்பிட்ட காலவரையறைக்குட்பட்ட சொற்பதங்கள் தான் இருக்கும். அடுத்தமுறைப் பயணத்தில் "க்ரியாவை"யோ மதுரைத் தமிழ் அகராதியையோ வாங்க வேணும்.
கா.பி,
நல்ல பதிவு.
/* 91 ஆம் ஆண்டு காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் நடைமுறைப்படுத்தப்பட்ட விடயம் தூய தமிழ்ப்பெயரிடல். கடைப்பெயர்ப்பலகைகளில் இருந்து ஆரம்பித்து நடைமுறைப்பயன்பாடுச் சொற்கள் வரை இவை புகுத்தப்பட்டுக்கொண்டிருந்தன.*/
இன்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவுப் பகுதிகளில் உள்ள வியாபார நிறுவனங்கள் முதல் எல்லாம் தூய தமிழில் தான் பெயர்ப்பலகைகள் உள்ளது. உண்மையில் கிளிநொச்சியில் பல தமிழ்ச் சொற்களை இப் பெயர் பலகைகள் மூலம் அறிந்து கொண்டேன்.
இந்த தமிழ் அகராதி நானும் பல காலமாகத் தேடிக் கொண்டிருக்கும் ஒரு நூல். எப்போது எனக்குக் கிடைக்குதோ பார்ப்போம்.
ஒரு சின்னத் தகவல்; முதல் முதல் தமிழ்-ஆங்கில அகராதியும் யாழ்ப்பாணத்தில் தான் வெளிவந்தது என அறிகிறேன். இதுபற்றி இன்னும் சில ஆய்வுகள் செய்ய வேண்டும்.
//செல்லி said...
சரியான அகராதி பிடிச்ச மனுசன் எண்டதை காட்டிபோட்டியள்.
அறிந்தவனுக்குத்தான் அதன் அருமை தெரியும்.//
;-))
//தமிழில் ஒவ்வொரு சொல்லுக்கும் எவ்வளவோ அர்த்தங்களிருக்கு, அப்பிடிப்பாக்கேக்கை நாங்கள் அறிஞ்ச சொற்கள் அணுவளவுகூட இல்லை எண்டுதான் சொல்லுவன்.//
உண்மை செல்லி, இயன்றவரை இப்படியான அகராதிகள் துணையோடு சரியான, பொருத்தமான பதங்களை எம் எழுத்துத் தமிழில் பயன்படுத்துவதன் மூலமாவது தொலைந்துபோன சொற்களுக்கு நாம் புத்துயிர் கொடுக்கலாம்.
//வெற்றி said...
ஒரு சின்னத் தகவல்; முதல் முதல் தமிழ்-ஆங்கில அகராதியும் யாழ்ப்பாணத்தில் தான் வெளிவந்தது என அறிகிறேன். இதுபற்றி இன்னும் சில ஆய்வுகள் செய்ய வேண்டும்.//
வணக்கம் வெற்றி
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள். நீங்கள் குறிப்பிட்ட ஆங்கிலத் தமிழ் அகராதி பற்றித் தான் முதலில் பின்னூட்டமிட்ட தேவனும் குறிப்பிட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். எங்கோ அதைப்பற்றி சமீபத்தில் படித்திருந்தேன், தேடியெடுத்துப் பின்னர் விளக்கத்தை தருகின்றேன். அல்லது பின்னூட்டமிடும் அன்பர்கள் யாராவது கை கொடுப்பார்களா என்று பார்ப்போம்.
மிகவும் மெனக்கெட்டு எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள். இந்த முறை இந்தியாவில் இருந்து கிரியாவின் தற்காலத் தமிழகராதி வாங்கி வந்தேன். என் அக்காவும் நண்பர்களும் அது எப்படி தமிழ்-தமிழ் அகராதி இருக்க முடியும் என்று வியந்தனர். இப்படி இருக்கு சில தமிழர் நிலை :(
வணக்கம் ரவிசங்கர்
தங்கள் வருகைக்கு என் நன்றிகள். க்ரியாவை வாங்கி கப்பலில் அனுப்ப முடிவுசெய்துள்ளேன். உண்மையான தமிழ்ச் சொல் தேடித் திரியும் அவலநிலைக்குப் போய்விட்டோம் :-(
http://dsal.uchicago.edu/dictionaries/kadirvelu/
வணக்கம் பிரபா.. தெரியாத விசயங்களை தெரிய படுத்தியுள்ளீர்கள் இந்த பதிவின் மூலம் நன்றிகள்.
வணக்கம் தீவு
இணையம் மூலம் பார்க்ககூடிய தமிழ் அகராதியைத் தந்தமைக்கு மிக்க நன்றிகள். பேருதவி இது.
வணக்கம் சின்னக்குட்டியர்
தங்கள் வருகைக்கு நன்றிகள், பாலச்சந்திரன் அண்ணையின் ஒலிப்பதிவை உடன் தரமுடியாமல் தொழில்நுட்பம் தடை போட்டுவிட்டது. கூடிய சீக்கிரம் தருகின்றேன்.
ஒருவர் எழுதிய அகராதி அவருடைய அனுமதி இல்லாமல் அதுவும் அவருடைய பெயரை முன் அட்டையில் போடால் அச்சிட்டு வெளியிடுவது சட்டப்படி மிகத் தவறானது. ஆசிரியர் இறந்துவிட்டார் என்ற துணிவில்
அவரது பெயரை இருட்டடிப்பு செய்துவிட்டு வேறு நபர்களின் பெயரில்
வெளியிடுவது மோசடி இல்லையா? இது தற்செயல்லான தவறா?
அப்படியானால் இப்போது வெளியிட்டவர்கள் இந்தத் தவறு குறித்து பகிரங்கமான அறிக்கை இதுவரை வெளியிட்டார்களா?
இந்த நோக்கத்தை அகராதியில் "அபகரிப்பு" என்ற சொல்லின் கிழ் பார்வையிடவும்.
//Anonymous said...
அப்படியானால் இப்போது வெளியிட்டவர்கள் இந்தத் தவறு குறித்து பகிரங்கமான அறிக்கை இதுவரை வெளியிட்டார்களா?//
உங்களின் கேள்விக்கான பதிலை முன்னர் பின்னூட்டமாக இட்டிருக்கின்றேன்.
நீங்கள் பின்னூட்டம் போட்டதற்கு நன்றி. ஏன் தவறு செய்தவர்களை கண்டிக்க முடியவில்லை? ஏன் இந்த மோசடிகளை அம்பலப்படுத்த முனையவில்லை.?
இதென்னடா இது வம்பாப்போச்சு
இந்த நூலைப் பார்த்ததும் பரவசப்பட்டு அறிமுகம் கொடுக்கவேண்டும் என்று முனைப்பு இருந்தது. பின்னர் ஒரு நண்பர் இதைக் காட்டியபோது தான் பார்த்தேன். இதற்குமேல் என்னைக் கஷ்டப்படுத்தினால் அழுதுடுவன்.
உங்கள் நல்ல எண்ணத்தை புரிந்துகொண்டேன். உங்கள் மீது எதுவித தப்பும் இல்லை. சிலர் மற்றவர்களூடைய எழுத்தை திருடுவதை நாம் அனைவரும் கண்டிக்க வேண்டும்.
எனது கருத்தை பின்னுட்டமாக் வெளியிட்டதற்கு எனது நன்றி.
மிக்க நன்றி நண்பரே, நான் வேடிக்கையாகச் சொன்ன கருத்தையும் மனதில் வைத்துக்கொள்ளவேண்டாம்.
இந்தப் பதிவை வாசித்துவிட்டு ஒரு அன்பர் (தட்டச்சும் வசதி இல்லாததால்) தொலைபேசி மூலம் சொன்ன தகவல், தமிழ் ஆங்கில அகராதிக்கான விளக்கமாகவும் அமைகின்றது. இதோ
Joseph Knight, Spaulding ஆகிய இருவரும் ஆங்கில தமிழ் அகராதியை (English - Tamil Dictionary)1844 ஆம் ஆண்டு வெளியிட்டனர். பின்னர் 1852 ஆம் ஆண்டு Joseph Knight, Spaulding, Hutchings, Wislow ஆகியோர் திருத்திய பதிப்பாக இதை வெளியிட்டார்கள். பின்னர் இப்போது புதுடில்லியிலுள்ள Asian Educational Serivices (AES) திருத்திய பதிப்பாக(revised, Enlarged & Romanised) Appaswamy pillai யின் பணியோடு மீள் அச்சில் கொண்டுவந்திருக்கிறார்கள். (அட்டையில் இந்த நால்வரின் பெயரும் இருக்கிறதாம்)
தவிர Winslow என்பவர் 1862 ஆண்டு தமிழ் ஆங்கில அகராதியை வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது. தவிர இன்னும் பல சான்றோர்கள் அக்கால கட்டத்தில் இன்னும் பல ஆங்கில தமிழ் அகராதியை வெளிக்கொணர்ந்ததும் குறிப்பிடத்தக்கது.
//உண்மையான தமிழ்ச் சொல் தேடித் திரியும் அவலநிலைக்குப் போய்விட்டோம் :-(//
200 வருடமான பெரும் புயல், பூகம்பம். போன்ற பேரழிவுகளுக்கிடையிலும்
நம் அமுதத்தமிழ் உயிர்பிழைத்ததே தெய்வச்செயல் அன்றோ!
எல்லாம் நன்மைக்கேஎன்று சொல்வதற்கும்,
நம்முறவுக்கள் அகதிகளாக அகிலமெல்லாம் பரவியதற்கும் என்ன சம்பந்தம் என்று எண்ணுவேன்.
இப்ப விளங்கீட்டுது.
பாத்தி கட்டி வளர்த்த தமிழ் பயிரை பரெங்கும் விருத்தி செய்யவென்று.
தேமதுரத் தமிழோசை திக்கெல்லா ஒலிக்கின்ற தன்றோ!
உங்கள் தமிழ்பணி வாழ்க! வளர்க!!
மிக்க நன்றி நண்பரே,
நாம் எல்லோரும் இணைந்து எம்மால் இயன்ற தமிழ்ப்பணி ஆற்றுவோம்
hi few ppl mentioned of publishing online. This is a request for all tamil readers. As a printer I know how hard to a author to realase a book. Because tamil readers never buy sri lankan books. They buy ramanichandran jothidam and how to imporve life. As a book seller most of the tamils are intrested in this. Here I mention sri lankan tamils. because i know only them. they will spend lot of money on kumutham annantha vikadan but you must know one thing if 1/3rd of the people who buy tamil stroy books will buy a quality tamil mags from tamil nadu and ours then we can release mags here with confident.
https://viruba.blogspot.in/2017/06/blog-post.html
Post a Comment