

1. 47 நாட்கள் திரைப்படம்
மூலக்கதை: 47 நாட்கள்
எழுதியவர்: சிவசங்கரி
இயக்கம்: கே.பாலசந்தர்
நடிப்பு: சிரஞ்சீவி, ஜெயப்பிரதா
2. உதிரிப்பூக்கள்
மூலக்கதை: சிற்றன்னை (படத்தில் பல மாற்றம் செய்யப்பட்டது)
எழுதியவர்: புதுமைப்பித்தன்
இயக்கம்: மகேந்திரன்
நடிப்பு: அஸ்வினி, விஜயன்
3. மறுபக்கம்
மூலக்கதை: உச்சிவெய்யில்
எழுதியவர்: இந்திரா பார்த்தசாரதி
இயக்கம்: கே.எஸ்.சேதுமாதவன்
நடிப்பு: சிவகுமார், ஜெயபாரதி
4.கண்சிவந்தால் மண் சிவக்கும்
மூலக்கதை: குருதிப்புனல்
எழுதியவர்: இந்திரா பார்த்தசாரதி
இயக்கம்: ஸ்ரீதர் ராஜன்
நடிப்பு: சிவகுமார், ஜெயபாரதி
5. முள்ளும் மலரும்
மூலக்கதை: முள்ளும் மலரும்
எழுதியவர்: உமாசந்திரன்
இயக்கம்: மகேந்திரன்
நடிப்பு: ரஜினிகாந்த், ஷோபா
6. இருவர் உள்ளம்
மூலக்கதை: பெண்மனம்
எழுதியவர்: லஷ்மி
இயக்கம்: எல்.வி.பிரசாத்
நடிப்பு: சிவாஜி கணேசன், சரோஜா தேவி
7. இதயவீணை
மூலக்கதை: இதயவீணை
எழுதியவர்: மணியன்
இயக்கம்: கிருஷ்ணன், பஞ்சு
நடிப்பு: எம்.ஜி.ஆர், லஷ்மி
8. சொல்லத்தான் நினைக்கிறேன்
மூலக்கதை: இலவு காத்த கிளி
எழுதியவர்: மணியன்
இயக்கம்: கே.பாலசந்தர்
நடிப்பு: சிவகுமார், ஜெயசித்ரா

10. மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்
மூலக்கதை: கயல்விழி
எழுதியவர்: அகிலன்
இயக்கம்: பா.நீலகண்டன்
நடிப்பு: எம்.ஜி.ஆர், லதா
11.மோகமுள்
மூலக்கதை: மோகமுள்
எழுதியவர்: தி.ஜானகிராமன்
இயக்கம்: ஞான.ராஜசேகரன்
நடிப்பு: அபிஷேக், நெடுமுடி வேணு
12.ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
மூலக்கதை: ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
எழுதியவர்: ஜெயகாந்தன்
இயக்கம்: பீம்சிங்
நடிப்பு: லஷ்மி, நாகேஷ்
13.சில நேரங்களில் சில மனிதர்கள்
மூலக்கதை: சில நேரங்களில் சில மனிதர்கள்
எழுதியவர்: ஜெயகாந்தன்
இயக்கம்: பீம்சிங்
நடிப்பு: லஷ்மி, ஸ்ரீகாந்த்
14.தில்லானா மோகனாம்பாள்
மூலக்கதை: தில்லானா மோகனாம்பாள் (மூலக்கதையின் ஒருபகுதி)
எழுதியவர்: கொத்தமங்கலம் சுப்பு
இயக்கம்: ஏ.பி.நாகராஜன்
நடிப்பு: சிவாஜிகணேசன், பத்மினி
14.சொல்ல மறந்த கதை
மூலக்கதை: தலைகீழ் விகிதங்கள்
எழுதியவர்: நாஞ்சில் நாடான்
இயக்கம்: தங்கர் பச்சான்
நடிப்பு: சேரன், ரதி
14.விக்ரம்
மூலக்கதை: விக்ரம்
எழுதியவர்: சுஜாதா
நடிப்பு: கமல்ஹாசன், அம்பிகா
15.காயத்ரி
மூலக்கதை: காயத்ரி
எழுதியவர்: சுஜாதா
நடிப்பு: ரஜினிகாந்த், ஸ்ரீதேவி
16. கரையெல்லாம் செண்பகப்பூ
மூலக்கதை: கரையெல்லாம் செண்பகப்பூ
எழுதியவர்: சுஜாதா
நடிப்பு: ப்ரதாப், ஸ்ரீபிரியா
தவிர கல்கியின், தியாகபூமி, பார்த்திபன் கனவு, ஜெயகாந்தனின் ஊருக்கு நூறு பேர் (இயக்கம் லெனின்)போன்ற நாவல்களும் திரைபடங்களாக வந்தவை. விடுபட்ட சில படைப்புக்கள் உங்களுக்குத் தெரிந்தால் பகிர்ந்து கொள்ளலாம். மேற்கூறிய படங்களில் நாவலில் தொனித்த அதே உணர்வை எந்தப்படம் உங்களுக்குத் தந்தது என்றும் சொல்லலாம்.
63 comments:
பிரபா,
தங்கர்பச்சனின் 'அழகி' படம் கூட, அவரின் கொடிமுந்திரிகை (?) சிறுகதைத் தொகுப்பிலுள்ள ஒரு கதையிலிருந்து எடுக்கப்பட்டது என்றுதான் எங்கையோ வாசித்ததாய் நினைவு.
வணக்கம் டி சே
நீங்கள் சொல்லும் போதுதான் எனக்கும் எங்கோ படித்த ஞாபகம் வருகிறது. சிறுகதையின் பெயர் தான் நினைவில் இல்லை.
இந்த பதிவில் உள்ள புகைபடங்களை இதற்கு முன்னர் நான் பார்த்தது இல்லை. ரேர் கலெக்ஷனாக தோன்றுகிறது. இது போன்று மேலும் சில படங்கள் இருந்தால் பதிப்பிக்கவும்
வணக்கம் பாலசந்தர் கணேசன்
இப்படங்கள் அண்மையில் நான் இந்தியா சென்றபோது வாங்கிய இயக்குனர் மகேந்திரனின் நல்லதொரு படைப்பான "சினிமாவும் நானும்" என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டது. அந்நூல பற்றிய பார்வையைப் பின்னர் தருகின்றேன்.
Sujatha's "Priya" was taken as movie. Rajinikanth and Sridevi have acted on that movie. Also another important movie is "Nandu" by Sivasankari
தெய்வா
ஆம், நீங்கள் சொல்லும் படைப்புக்களில் நண்டு சிறந்த படைப்பு, ஆனால் மகேந்திரனுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்த படம்.
சிவசங்கரியின் 'குட்டி' கதையும் படமாக அதே பெயரில் வந்ததே.
வணக்கம் துளசிம்மா
குட்டி கதையை இயக்கியவர் ஜானகி விஸ்வநாதன் அல்லவா.
அதுபோல் சுஜாதாவின் பூக்குட்டி என்ற சிறுவர் படைப்பும் நிலாக்காலம் என்று வந்தது.
அழகிக்குரிய சிறுகதையின் பெயர் 'கல்வெட்டு' என்று நினைக்கிறேன்.
அவர் 'ஒன்பது ரூவா நோட்டு' நாவலையும் படமாக்குவதாக 'படம் காட்டிக்கொண்டிருந்தார்'. என்போன்றவர்களுக்கு ஏமாற்றம் தான் மிச்சம்.
ஜெயகாந்தனின் இன்னொரு கதையை விட்டுவிட்டீர்கள்.
'சினிமாவுக்குப் போன சித்தாளு'. தலைவாசல் விஜய் நாயகனாக நடித்த படம். நான் இன்னும் பார்க்கவில்லை.
கமலின் ஆளவந்தான் கூட கமலே எழுதிய 'தாயம்' கதைதானே?
கி.ராஜநாராயணின் "கிடை", அம்சன்குமார் மூலம் 'ஒருத்தி' என்ற பெயரில் வந்தது. ஆனால் அதை 'திரைப்படம்' என்ற பேரில் சேர்க்க முடியுமா? லெனின் இயக்கிய 'ஊருக்கு நூறு பேர்' போலத்தான் வர்த்தக நோக்கத்துக்காக எடுக்கப்படாத படைப்பு.
வசந்தன்
மேலதிக தகவல்களுக்கு என் நன்றிகள்.
சில படைப்புக்கள் தொலைக்காட்சி நாடகமாகவும் வந்தன.
இயக்குனர் வசந்த், சா. கந்தசாமியின் "தக்கையின் மீது நான்கு கண்கள்" என்ற சிறுகதையைக் குறும்படமாகவும் அண்மையில் தந்திருந்தார். பாலுமகேந்திராவின் "கதை நேரம்" சின்னத்திரையில் புகுந்த கதைகளாக இருந்தன.
Hi Prabha:
I dunno if you could call the movie Vikram adapted from the story written by Sujatha. In my perception, the story line for the movie was written in form of story in Kumudham. I also remember that they used stills from movie as illustrations in the print version.
Cheers
D the D
வணக்கம் D The Dreamer
நீங்கள் சொல்லும் விக்ரம், குமுததில் தொடராக வந்தது, கம்பியூட்டர் எழுத்து என்று பிரபலப்படுத்தியிருந்தார்கள். என் பதிவில் 14 வதாக இட்டிருக்கிறேன்.
//மகேந்திரனின் நல்லதொரு படைப்பான "சினிமாவும் நானும்"//
சமீபத்தில் சிங்கை நூலகத்தில் இருந்து இந்த புத்தகத்தை படித்தேன்..படித் 'தேன்'!
Prabha:
Perhaps I was not clear.
I did see Vikram in your list. But I dispute the claim that the Novel Vikram was filmed as a Movie. I think they finalized the story for the film and while filming it Sujatha wrote it as a story in Kumudham. That is why they had used the still photographs from the movie as illustration for the story.
Cheers
D the D
வணக்கம் ஜோ
உண்மையில் தேனான புத்தகம் தான் அது.
வணக்கம் D The Dreamer
நீங்கள் சொல்வது சரி, அத்திரைக்கதையே குமுதத்தில் வந்தது. புத்தகமாகப் பின்னரே வந்தது.
சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள்.
கானா பிரபா,
மகேந்திரன் தன்னுடைய அந்த புித்தகத்தில் ..'முள்ளும் மலரும்' படம் வெளிவர முடியாத நிலையில் கமல் தனிப்பட்ட முறையில் செய்த உதவியை குறிப்பிட்டு எழுதியிருந்தார் .பலரும் அறியாத செய்தி அது!
நல்ல Informative(?) பதிவு கானா பிரபா.
மெட்டி, இது எப்டி இருக்கு, பொய்ம்முகங்கள் போன்ற படங்களும் கதைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டவையே.
கானா பிரபா,
நல்ல பதிவு.
நன்றி!!
//ஜோ / Joe said...
கானா பிரபா,
மகேந்திரன் தன்னுடைய அந்த புித்தகத்தில் ..'முள்ளும் மலரும்' படம் வெளிவர முடியாத நிலையில் கமல் தனிப்பட்ட முறையில் செய்த உதவியை குறிப்பிட்டு எழுதியிருந்தார் .பலரும் அறியாத செய்தி அது! //
அது மட்டுமா, இன்னும் அது போலப் பல சுவாரஸ்யங்களையும் சொல்லியிருந்தார் அல்லவா
//சுரேஷ் (penathal Suresh) said...
நல்ல Informative(?) பதிவு கானா பிரபா// :-)))
தங்கள் கருத்துக்கு நன்றி சுரேஷ்,சிவபாலன்
கானா பிரபா,
நான் இதுவரை அறிந்திராத தகவல்கள் இவை. பதிவுக்கு மிக்க நன்றி.
வருகைக்கு நன்றி வெற்றி
வணக்கம் பிரபா,
உங்கள் வாசகன் நான்
பொன்னகரம், இது புதுமைப்பித்தனின் ஒரு கதை
நடிகர்சரத்பாபு
யாருக்காக அழுதான் யெயகாந்தனின் கதை
நடிகர் நாகேஷ்
அன்புடன்
பிரகலாதன்
வணக்கம் பிரகலாதன்
தங்களின் மேலதிக தகவல்களுக்கு என் நன்றிகள்
சிவசங்கரியின் ஒரு நாவல் திரைப்படமான நினைவு உள்ளது.
மிகப்பெரிய வெற்றி அடைந்த படங்கள் தில்லானா மோகனாம்பாளும் முள்ளும் மலரும். இரண்டு படத்திலும் கதையின் சாரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு அதனை திரைக்கு ஏற்ற வகைக்குக் கொடுத்திருந்தார்கள்.
புத்தகம் பார்க்கும் எண்ணத்தைக் கொடுத்த படம் சில நேரங்களில் சில மனிதர்கள்.
பிரபா!
செங்கை ஆழியான் ;தன் கதை ஒன்று நடிகர் சுந்தரராஜனால்;சுடப்பட்டுப் படமாக்கப்பட்டது. என ஒரு செய்தி வாசித்ததாக ஞாபகம்; உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா!; கோமல் சுவாமிநாதனின் கதை தானே "தண்ணீர், தண்ணீர்". மோகமுள் தான் கதையாகவும் படித்த ஞாபகம் உண்டு. படம்; கதை தந்த திருப்தியைத் தரவில்லை. இது என் நிலை!
யோகன் பாரிஸ்
வணக்கம் ராகவன்
நான் குறிப்பிடாத் ஆனால் படமான சிவசங்கரியின் நாவல் "அவன்,அவள்,அது" இதைத்தான் நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள் என்று நினைக்கின்றேன்.
மேலதிகதகவல்களுக்கும் என் நன்றிகள்
வணக்கம் யோகன் அண்ணா
சென்கை ஆழியானின் அந்தக் கதை வாடைக்காற்று. நாளை வரை காத்திருங்கள் அதைப் பற்றிய பதிவு ஒன்று வர இருக்கிறது.
கோமல் சுவாமி நாதனின் " தண்ணீர் தண்ணீர்" ஒரு மேடை நாடகம்.
உங்களின் அதே மன நிலை தான் மோகமுள் பார்க்கும் போது எனக்கிருந்தது.
தமிழ் படங்களில் மிக குறைவான படங்களே புத்தகத்திலிருந்து திரைப் படமாக மாற்றப்பட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் இது போல புத்தகத்திலிருந்து திரைப் படமாக வெளி வந்திருக்கும் படங்கள் மிக மிக அதிகம். ஆங்கிலப் படங்களைப் பார்த்து நான் பல புத்தகங்களை படித்திருக்கிறேன். இது போன்ற திரைப் படங்கள் புத்தகங்களுக்கும் ஒரு விளம்பரம்.
இந்தப் பதிவு நன்றாக எழுதப் பட்டிருந்தாலும் எங்கள் தானைத் தலைவரை பற்றி எழுதியதற்கு கண்டணம் தெரிவித்துக் கொள்கிறேன் :-))))
வணக்கம் குமரன்
ஆங்கிலப் படங்கள் அதிகம் நாவல்களைத் தழுவி வரக்காரணம், தனியாக கதைக்கான அலசல் பிரிவை தயாரிப்பு நிறுவனங்கள் கொண்டிருப்பதும், பெரும்பாலான இயக்குனர் வேலை, குறிப்பிட்ட கதையைப் படமாக்குவதுமே, இல்லையா?
சரி, சரி விடுங்க தல,
பொழச்சுப் போயிர்றேன்:-))
நல்லதொரு பதிவு கானபிரபா
சினிமாவுக்குள் சிந்திக்க வைக்கும் உங்கள் பணி தொடரட்டும்.
அதற்கான நன்றிகள்.
"உயர்வான ஒரு சினிமாவே ஒரு இலக்கியம்தான்!.
அதே சமயம் இலக்கியம் சார்ந்து நல்ல ரசனையோடு
ஒரு திரைப்படம் உருவாகும் போது
அந்தத் திரைப்படத்தின் இரட்டிப்பு வெற்றியும் சிறப்பும் உன்னதமானது."
-மகேந்திரன்
(சினிமாவும் நானும் புத்தகத்திலிருந்து............)
உருப்படியான திரைக் கதை உருவாகாத காரணத்தால்
பல தமிழ் திரைப்படங்கள் தோல்வி கண்டன.
ஆனால்
சத்யஜித் ரேயின் பெரும்பாலான படங்கள்
நாவல்களிலிருந்து உதித்தவை.
வெற்றி கண்டவை..........
இவர் நாவலைப் படமாக்கும் போது
அதை திரைக்கு ஏற்ற விதத்தில் மாற்றங்களைக்
கொண்டு வந்தார்.
இதில் அவருக்கும் நாவலாசிரியர்களுக்குமிடையே
பல முரண்பாடுகள் தோன்றின.
அப்போது ரே
"மூலக் கதை அல்லது கதை உங்களுடையதுதான்.
ஆனால் திரைக் கதை என்னுடையது" என்றார்.
இதுதான் ரே அவர்களது வெற்றிக்கு காரணம்.
இப்பதிவு கண்டதும்
கதையை வாசித்து விட்டு படத்தை பார்ப்பதா?
அல்லது
படத்தைப் பார்த்து விட்டு கதையை வாசிப்பதா?
என்று யோசிக்கிறேன்.
குளப்பிட்டீங்க பிரபா?
வணக்கம் பிரபா நல்லதொரு பதிவு....சிவாஜி நடித்த பழைய குலமகள் ராதை படமும் அகிலனின் நாவல் தான்...ஜெயகாந்தனின் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் நாவலும் படமாக வந்தது.
நாமக்கல் கவிஞரின் படைப்பான MGR & பானுமதி நடித்த "மலை கள்ளன்" படத்தை சேர்க்கவும். இது MGR க்கு மாபெரும் வெற்றிப்படம்.
வணக்கம் அஜீவன்
மகேந்திரனின் மேற்கோள்களோடு உங்கள் சிறப்பான, தனித்துவமான பின்னூட்டம் தந்திருக்கிறீர்கள். பல நாவல்களைப் படித்துவிட்டுப் படம் பார்த்தால் ஏமாற்றம் தான் மிஞ்சும், ஆனாலும் நாவல் தரும் சுகத்தை இரண்டரை மணி நேர சினிமா தருவது கடினமே.
வணக்கம் சின்னக்குட்டி
அகிலனின் பாவை விளக்கு படமும் சிவாஜி நடிப்பில் வந்தது.
வணக்கம் குறும்பன்
கல்கியின் பார்த்திபன் கனவு போன்ற படங்கள் தோல்வியைத் தழுவிய காலத்தில் வந்து வெற்றி பெற்ற மலைக்கள்ளனை மறக்கமுடியுமா?
சிறை என்ற திரைப்படமும் நாவலை தழுவி எடுக்கப்பட்டதுதான்
//சிறை என்ற திரைப்படமும் நாவலை தழுவி எடுக்கப்பட்டதுதான்//
ஆமாம், அது அனுராதா ரமணனின் கதை, சக்தியின் இயக்கம், தொடர்ந்து அனுராதா ரமணனின் கூட்டுப்புழுக்கள் என்ற படத்தையும் எடுத்திருந்தார்கள்.
மூலக்கதை சிதறாமல் வந்த படங்களில் 'சிறை' குறிப்பிடத்தக்கது. இதன் வெற்றிக்கு, எம்.எஸ்.வீ யின் இசையும் ஒரு காரணம்.இப்படத்தின் முகப்பு இசையை இயக்குனர் சக்தியின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் உணர்வுபூர்வமாக வடிவமைத்திருந்தார்.
ஜேர்மனி தோத்தபிறகு தான் சிலபேரை வலைப்பக்கம் காணமுடியுது, உங்களைச் சொல்லேல்லை மலைநாடான்:-)
சிறை பற்றிய மேலதிக தகவல்களுக்கு என் நன்றிகள்.
நிழல் நிஜமாகிறது இயக்கம் கே.பாலசந்தர் நடிகர். கமல் ஷோபா சுமித்திரா
முலக்கதை ஆசிரியர் சேதுமாதவன்
மறுபக்கம் படமும் இவருடையது தான்
செல்வா
பிரபா, மேலும் சில
கண்ணாமூச்சி - ராஜேந்திரகுமார் ( அதே பெயரில்)
அவன் அவள் அது - சிவசங்கரி (ஒரு சிங்கம் முயலாகிறது )
வணக்கத்துக்குரிய காதலியே - ராஜேந்திரகுமார் ( அதே பெயரில் )
கள்வனின் காதலி - கல்கி - (அதே பெயரில்)
புவனா ஒரு கேள்விக்குரி - மகரிஷி ( அதே பெயரில் )
பத்ரகாளி - மகரிஷி - (அதே பெயரில்)
வட்டத்துக்குள் சதுரம் - மகரிஷி - அதே பெயரில்
மெட்டி - ஜே.மகேந்திரன் - அதே பெயரில்
இன்று நீ நாளை நான் - சி.ஏ.பாலன். (நாவல் நினைவிலில்லை)
மோகம் முப்பது வருஷம் - மணியன் - அதே பெயரில்
தில்லானா மோகனாம்பாள் - கொத்தமங்கலம் சுப்பு - அதே பெயரில்
இது எப்படி இருக்கு - சுஜாதா - (அனிதா இளம் மனைவி )
பொய்முகங்கள் - சுஜாதா - ( காகிதச் சங்கிலிகள் )
பெண்ணுக்கு யார் காவல் - சுஜாதா - (ஜன்னல் மலர்)
பாவை விளக்கு - அகிலன் - (அதே பெயரில் )
சுமைதாங்கி - ராகி ரங்கராஜன் - ( குறுநாவல் பெயர் நினைவிலில்லை)
நந்தா என் நிலா - புஷ்பா தங்கதுரை - ( அதே பெயரில் )
ஒரு வீடு இருவாசல் - அனுராதா ரமணன் ( பெயர் நினைவிலில்லை)
கதைகள் திரைப்படங்களாகும் போது அதிக சமயங்களில் ஏமாற்றத்தைத்தான் தந்தன.
முள்ளும் மலரும் கதையை வாசிக்கும் போதிருந்த விறுவிறுப்பு படத்தில் வரவில்லை என்றே எனக்குத் தோன்றியது.
படத்தைப் பார்த்த பின் ஏதோ ஒருவித ஏமாற்றந்தான் மனதில் இருந்தது.
இதே போல சிவசங்கரியின் 47நாட்களும,; கதை வாசிக்கும் போது மனக்கண்ணில் ஓட விட்ட கற்பனைக்கு ஈடாக அமையவில்லை.
சிறை படம் லட்சுமியின் நடிப்புடன் மிக அருமையாக அமைந்திருந்தது.
வணக்கம் செல்வா
நீங்கள் சொல்வது சரி, நிழல் நிஜமாகிறது சேதுமாதவனின் படைப்பாக முன்னதாக மலையாளப்படமாகவும் வந்தது.
வணக்கம் இகாரஸ் பிரகாஷ்
நிறையவே நிறைவான தகவல்களைத் தந்திருக்கிறீர்கள்.
இன்னும் சொல்லவெண்டுமென்றால் அறிஞர் அண்ணாவின் ரங்கூன் ராதா,
மற்றும் ஜெயகாந்தனின் காவல் தெய்வம் போன்றவையும் திரையில் புகுந்த கதைகளே.
வணக்கம் சந்திரவதனா அக்கா
நீங்கள் சொல்வது சரி, அதுபோல் முள்ளும் மலரும் திரைப்படமானபோது கதையின் ஒரு பகுதியே படமானதாக மகேந்திரன் குறிப்பிட்டிருக்கிறார்.
hi gana prabhu..this is a great post..thanks a lot..
வணக்கம் கார்த்திக்
தங்கள் வருகைக்கு என் நன்றிகள்
சுஜாதா அவர்களின் அனுமதி இல்லாமலேயே அவரின் ஜேகே என்ற கதை ஏர்போர்ட் என்ற பெயரில் நடிகர் சத்யராஜ் அவர்களை கதாநாயகனாகக் கொண்டு எடுக்கப்பட்டது என்று சொல்வார்கள்
புதிய தகவலுக்கு நன்றிகள் லதா
/ஜேர்மனி தோத்தபிறகு தான் சிலபேரை வலைப்பக்கம் காணமுடியுது, உங்களைச் சொல்லேல்லை மலைநாடான்:-)
/
ம்...:-(
////13.சில நேரங்களில் சில மனிதர்கள்
மூலக்கதை: மோகமுள்
எழுதியவர்: ஜெயகாந்தன்//
Hi, It should be corrected.
1- இருவர் உள்ளம்- ரமணி சந்திரன் இல்லையா?
2- இது சத்தியம்- ரா.கி.ரங்கராஜன் என்று நினைக்கிறேன்.
ஜாவர் சீதாராமன் அவர்களின் நாவல் படமாக்கப்பட்டுள்ளதா?
மறுப்பக்கம் படத்தில் ராதாவை குறிப்பிட மறந்தது ஏனோ :-)
குருதிபுனலா கண் சிவந்தால் மண் சிவக்கும்? புதிய தகவல்.
// மலைநாடான் said...
/ஜேர்மனி தோத்தபிறகு தான் சிலபேரை வலைப்பக்கம் காணமுடியுது, உங்களைச் சொல்லேல்லை மலைநாடான்:-)
/
ம்...:-( //
:-)))
கானா பிரபா said...
//சுரேஷ் கண்ணன் said...
////13.சில நேரங்களில் சில மனிதர்கள்
மூலக்கதை: மோகமுள்
எழுதியவர்: ஜெயகாந்தன்//
Hi, It should be corrected. //
தவறைக்காட்டியமைக்கு நன்றிகள் சுரேஷ் கண்ணன். Type பண்ணும் போது ஒரே மாதிரி இருக்கும் சொற்களைக் copy பண்ணும்போது ஏற்பட்ட தவறு அது. திருத்திவிட்டேன் இப்போது.
வணக்கம் உஷா
இருவர் உள்ளம் என்ற பெயரிலும் ரமணிச்சந்திரன் கதை எழுதியிருக்கலாம் ஆனால் அதுவல்ல இது. ஜவார் சீதாராமனின் நாவலான பணம் பெண் பாசம் என்பதும் படமானதாக ஒருதகவல்.
ராதாவைக் குறிப்பிடவில்லை, மன்னித்துக்கொள்ளுங்கள்:-))
ஆமாம் பிரபா. அவன் அவள் அது. நல்ல பாடல்கள் இருந்தும் சரியான திரைக்கதை இல்லாததும் கொஞ்சம் காலத்துக்கு மீறிய கருத்தும் படத்தை வெற்றி பெறச் செய்யவில்லை என நினைக்கிறேன்.
நீங்கள் சொன்னது போல பணம் பெண் பாசமும் திரைப்படமாகியிருக்கிறது. சரிதா நடித்திருந்தார்கள் என நினைக்கிறேன். ஜாவர் சீதாராமன் எழுதிய கதை அது.
பெரும்பாலானோர் செய்யும் தவறு நாவலை அப்படியே படமாக எடுப்பதுதான்.
வணக்கத்திற்குரிய காதலியே படம் சிறப்பான படமே. வித்தியாசமான கதைக்களம். நல்ல திரைக்கதை. நல்ல இனிய பாடல்கள். ஸ்ரீதேவியின் சிறந்த நடிப்பு என்று பார்க்கத் திகட்டாத படம். ஏ.சி.திருலோகச் சந்தர் இயக்கம் என நினைவு. அதே போல பத்ரகாளியும்.
சத்யஜித்ரேயின் ஷொனோர் கெல்லா (தங்கக் கோட்டை) படத்தை நான் பார்த்திருக்கிறேன். கதையையும் படித்திருக்கிறேன் (ஆங்கில மொழி பெயர்ப்பில்). இரண்டும் இரண்டு விதத்தில் சிறந்து விளங்கும். ஆனால் ஜொய் பாபா ஃபெலூநாத் கதையில் இருந்த விறுவிறுப்பு திரைப்படத்தில் இல்லை. ஏமாற்றமே. ஆனைக்கும் அடிசறுக்குமல்லவா. இவையிரண்டுமே சத்யஜித்ரேயின் துப்பறியும் கதாநாயகன் ஃபெலூதாவின் கதைகள்.
தமிழில் நிறைய கதைகள் இருக்கின்றன. எடுத்தாளல் மிகக்குறைவு.
வணக்கம் ராகவன்
தங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் என் நன்றிகள்.
சிவசங்கரியின் ஒரு மனிதனின் கதை
சுஜாதாவின் கரையெல்லாம் செண்பகப்பூ, காய்த்ரி
பட்டுக்கோட்டை பிரபாகரின் சில கதைகள்
பாலக்குமாரனின் கதை என இன்னும் சில எழுத்தாளர்களின் கதைகள் திரைப்படமாக வெளிவந்திருக்கின்றன.
உங்கள் மூலமும், பின்னூட்டம் இட்ட நண்பர்கள் மூலமும் பல தகவல்கள்.
நன்றி.
வணக்கம் மஞ்சூர் ராஜா
சிவசங்கரியின் ஒரு மனிதனின் கதை அதே பெயரில் தூர்தர்ஷனின் நாடகமாகவும், தியாகு என்ற பெயரில் சினிமாவாகவும் வந்தது. தமிழக அரசின் மதுவிலக்குப் பிரச்சாரத்துக்கு இப்படம் பயன்பட்டது.
அண்ணா எழுதிய "சொல்லாதது" எனும் சிறுகதையில் ஒவ்வொரு வாக்கியமும் 'சொல்லாதது' என்றே
முடியும்.அச்சிறுகதை"தாய் மகளுக்குக் கட்டிய தாலி" எனும் திரைப்படமாக்கப்பட்டது.எம்.ஜி.ஆர்-ஜமுனா நடித்தனர்.தயாரிப்பு மற்றும்
இயக்குனர்:ஆர்.ஆர். சந்திரன்
மேலதிக தகவல்களுக்கு நன்றிகள் sivagnanamji
Post a Comment