குழந்தை இலக்கியத்திற்காக மத்திய அரசால் அளிக்கப்படும் சாகித்ய அகடாமி தருவது பால சாகித்ய புரஸ்கார் விருது 2020ம் ஆண்டுக்கான இந்த விருது தமிழ்மொழி பிரிவில் யெஸ்.பாலபாரதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இரண்டாயிரங்களின் முற்பகுதியில் வலைப்பதிவுலகம் வழியாக அறிமுகமான நண்பர் பாலபாரதி அந்தக் காலத்தில் கவிதை, கட்டுரைகள் தாண்டி சமூக விழிப்புணர்வு செயற்பாடுகளால் ஒரு மனித நேயராக அடையாளப்பட்டவர்.
குழந்தை இலக்கியத்தின் பொற்காலத்தில் அவரும் வாழ்ந்த காலத்தால் இன்று சிறுவர் நவீனங்களைத் தொடர்ச்சியாக எழுதிப் பதிப்பித்து வருகின்றார்.
அவை வெறும் வாசிப்பனுபவம் தாண்டி, குழந்தைகளுக்கு விழிப்புணர்வும் எழவேண்டும் என்ற அவரது சிந்தனையே செயல் வடிவமாக அமைந்திருக்கின்றது. அதன் வெளிப்பாடாக அமைந்த
சாகித்ய அகாதமியின் பால சாகித்ய புரஸ்கார் விருது கிடைத்த மரப்பாச்சி சொன்ன ரகசியம் நூல் கூட
“குழந்தை தன்னை சுற்றி நடக்கும் பாலியல் அத்துமீறல்களை கண்டு பயப்படாமல் அதை வெளியில் உடனே கத்தி சொல்ல வேண்டும் என்பதை மரப்பாச்சி பொம்மை சொல்லிக்கொடுக்கும்.”என்ற அடி நாதத்தில் எழுந்தது.
“ஆட்டிசம்” குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரங்களையும், நிகழ் செயற்பாடுகளையும் செய்து வரும் யெஸ்.பாலபாரதி இந்தப் பேட்டியின் வழியே அத்தகு நெகிழ் தருணங்களையும் பதிவு செய்கின்றார்.
https://www.youtube.com/watch?v=MxXPpKrPnlo&t=7s
பால சாகித்ய புரஸ்கார் விருது பெறும் எழுத்தாளர், நண்பர் யெஸ்.பாலபாரதிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்
கானா பிரபா
28.09.2021
0 comments:
Post a Comment