ஏராளம் கதைகளினூடாகவும், திரைப்படங்களினூடாகவுமே தரிசித்த கனவுலகத்தை நேரில் பார்க்கவேண்டும் என்ற ஆசை யாருக்குத் தான் இருக்காது? என் பால்ய காலத்தில் எங்கள் அம்மம்மா வீட்டில் தமிழகத்தில் வெளியாகும் வார சஞ்சிகைகளில் இருந்து, தினத்தந்தி போன்ற பத்திரிகைகளின் வாரப்பத்திரிகைகளும் வந்தபோது அவற்றையெல்லாம் புதினம் பார்க்கும் பிரியத்தில் தேடிப்படித்து வளர்ந்தவன். சில தமிழக நண்பர்களைப் புலம்பெயர் வாழ்வில் சந்திக்கும்போது அங்குள்ள் நிலவரங்களை விசாரிக்கும் போது "என்னங்க நம்மூர்க்காரர் மாதிரி இவ்வளவும் தெரிஞ்சு வச்சிருக்கீங்க" என்று வாயை அகல விரிப்பார்கள். என்னைப் பொறுத்தவரை எனக்குப் பிடித்தமான வாழ்வியல் சூழலை உருவாக்க இந்தக் கற்பனாலோகம் வழிவகுத்தது. சென்னை வானொலி நிலையமும், விவித்பாரதியும் என் பால்யம் கடந்த பதின்ம வயதுக்காலங்களில் வழித்துணையாய் வந்தன.
தாயகத்தில் கடும் யுத்தம் நடந்த சூழலில் ஏழு ஆண்டுகள் ஊர்ப்பக்கமும் தலைகாட்ட முடியவில்லை. என்னைப் போல புலம்பெயர் தமிழர்களுக்கு அப்போது ஊருக்குப் போகவேண்டும் என்ற நினைப்பு வந்தால் சென்னைக்கு ஒரு எட்டு போய் நாலு படமும், தி.நகரில் உடுப்பும் வாங்கி வந்தால் போதும் என்ற நிலையில் இருந்ததையும் சொல்லிவைக்கவேண்டும்.
அதுநாள் வரை தமிழக வார சஞ்சிகைகளின் வழியாகவும், பல்வேறு கதைகளினூடாகவும் கற்பனையில் சிருஷ்டித்திருந்த சென்னை மாநகருக்குச் செல்லும் வாய்ப்பு, என் புலம்பெயர் வாழ்வில் ஏழு ஆண்டுகள் கழித்துக் கிட்டியது. 2002 ஆம் ஆண்டு அப்போது நான் பணிபுரிந்த Oracle நிறுவனத்தின் பணி நிமித்தம் பெங்களூர் செல்லவேண்டிய தேவை ஏற்பட்டது. அப்போதெல்லாம் இன்றைய சூழல் போல வலைப்பதிவு நண்பர்களோ அல்லது ட்விட்டர், ஃபேஸ்புக் சமூக வட்டங்களோ அவ்வளவு இல்லாத காலம். சென்னையில் யாரைத் தெரியும் என்று கேட்டால் முதற்பந்தியில் சொன்ன, தமிழக வார சஞ்சிகைகளில் வந்த முகம் தெரியாத எழுத்தாளர்களைத் தான் சொல்லலாம், அவர்களுக்கு என்னைத் தெரியாதது வேறு விஷயம் ;-)
ஒரு வார இறுதியை சென்னைக்குச் சென்று பார்த்து வரலாமே என்று நினைத்து, பெங்களூரில் பணிபுரிந்த சக நண்பர்களிடம் விசாரித்து சதாப்தி எக்ஸ்பிரஸில் போகலாம் என்று ஏற்பாடுகளைச் செய்தேன்.
அந்தநாளும் வந்தது. டாக்ஸி மூலம் ரயில் நிலையம் வந்து சதாப்தி எக்ஸ்பிரஸ் வரும் மேடையைத் தேடிப் பிடித்து நிற்கிறேன். பக்கமெல்லாம் தமிழ் வாடை. எல்லாம் பார்த்து வந்தாலும் உள்ளூரப் பயம் இந்த மேடையில் தான் சதாப்தி வருமா அல்லது சொதப்பி விடுமா என்று நினைத்து அருகில் தன் குடும்பத்தோடு அளவளாவிக் கொண்டிருந்த ஒரு ஐம்பதைத் தொடும் குடும்பஸ்தரிடம் சென்று தமிழில் கேட்கிறேன்
"இந்த ப்ளாட்பாரத்தில் தான் சென்னை ரெயில் நிக்குமாங்க?"
"ஆமாங்க" என்றவர் என்னை ஏற இறங்கப் பார்த்து விட்டு "ஐ கேன் ஸ்பீக் இங்கிலீஷ் டூ"
என்றார். (என்னை வேற்றுலகவாசியாக எண்ணியிருப்பாரோ)
சதாப்தியும் வந்தது. இந்தியாவில் முதன்முதலில் ஒரு ரயில் பயணம். ஏற்கனவே தமிழக சஞ்சிகைகளில் ரயில்களில் நிலவும் குளறுபடிகளை எழுதியதால் உள்ளூரப் பயத்துடன் ஏறினால், முற்றிலும் மாறுபட்ட அனுபவமாக இருந்தது. சாப்பாடு எல்லாம் கொடுத்து உபசரித்தது புதுமையாக இருந்தது. எனக்குப்பக்கத்தில் ஒரு சிங்களவர். புட்டபர்த்தி போய்விட்டுச் சென்னைக்குப் போகிறாராம். இரவு எட்டுமணி என்று நினைக்கிறேன் சென்னை சென்ட்ரலை ரயில் இன்னும் சில நிமிடங்களில் தொட்டுவிடும் என்று ஒரு அறிவிப்பு ஒலிக்கிறது. யன்னல் கதவு வழியே வெளியே பார்க்கிறேன். வெளியே தமிழ்ப்பெயர்ப் பலகைகளில் கடைகளின் பெயர்களை அடுக்காகக் காட்டிக் கொண்டே நிதானமாகப் போகிறது ரயில். ஒரு குழந்தை போல எட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டே நான். ஆகா கனவுலகம் வந்தாச்சு என்று உள்ளூரப் பேசிக்கொள்கிறேன். சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் ஆகா, உன்னை எத்தனை எத்தனை கதைகளில் படித்திருப்பேன். கூட்டமும், இரைச்சலுமான ஜனசமுத்திரத்தில் நானோ சந்தோஷத்தின் உச்சியில்.
சென்டல் ஸ்டேஷனில் இருந்து ஒரு வாடகை டாக்சி மூலம் மாரிஸ் ஓட்டலுக்குப் போகிறேன். "சென்னைக்குப் போனால் மாரிஸ் ஓட்டலுக்குப் போ" என்று என் அண்ணன் முன்னரேயே சொல்லிவைத்தார். மாரிஸ் ஓட்டல் உரிமையாளர் முன்னர் இலங்கையில் தான் தொழில்பார்த்தவர். எங்கள் அப்பப்பாவுக்கு அந்தக் காலத்தில் நன்கு தெரிந்தவர். அந்தப் பழக்கத்தில் எங்கள் ஊரவர்கள் சென்னைக்குப் போனால் மாரிஸ் ஓட்டலில் தான் தங்குவார்கள். சிலர் மாதக் கணக்கில் அறைகளை வாடகைக்கு எடுப்பதும் உண்டு.
அடுத்த இரண்டு நாட்கள் சென்னை உலாத்தல். இந்த உலாத்தலில் அதுநாள் வரை கற்பனையில் உலாவிய இடங்களின் பெயர்களை ஞாபகம் வைத்து தியேட்டர்களையும் விகடன், குமுதம், அலுவலகங்கள் அமைந்த இடங்களையும் சரவணபவன் உள்ளிட்ட உணவகங்களையும், ஹிக்கின் பாதம்ஸ் போன்ற புத்தகசாலைகளையும், தி.நகர் போன்ற சனத்திரள் மிகு கடை வீதிகளையும், சந்து பொந்துக்களில் இருந்த சிறுபுத்தக நிலையங்கள் என்று ஒவ்வொன்றாத் தேடித் தேடிப் பார்த்துக் கண்களில் பதிந்து கொண்டேன். மெரீனா சென்று காலாற நடந்தேன். கபாலீஸ்வரரைத் தரிசித்தேன். தி.நகர் முருகேசன் தெருவுக்குப் போய் இசைஞானி இளையராஜாவின் வீட்டுக்கு முன் பழியாய்க் கிடந்து அவரைப் பார்க்க ஆசைப்பட்டு, பின் காவலாளிகளால் வஞ்சிக்கப்பட்டு அவ்விடத்தை விட்டு அகன்றேன். சுள்ளென்ற வெய்யில் என்னைப் பதம் பார்த்தாலும் கிடைத்த இரண்டு நாட்களையும் பரிபூரணமாகப் பயன்படுத்தவேண்டும் என்ற வெறியில் ஒவ்வொரு இடமாக ஆட்டோவில் அலைந்தேன், தயார் செய்து அடுக்கிவைக்கப்பட்ட பதார்த்தங்கள் ஒவ்வொன்றையும் உருசிக்கும் ஆவல் போல். பழக்கப்பட்ட தெருக்கள் போல அளைந்தேன், எல்லாமே புத்தகங்களில் படித்த அனுபவங்கள் இப்போது கண்ணுக்கு முன்னால்.
தேவி தியேட்டரில் கன்னத்தில் முத்தமிட்டால் படம் ஓடிக்கொண்டிருந்தது. சரி தியேட்டர் அனுபவத்தையும் சந்திப்போம் என்று நினைத்து டிக்கெட் வாங்கி உள்ளே சென்று படம் பார்க்க ஆரம்பித்தேன். என்னைச் சுற்றி எல்லாம் தமிழ் முகங்கள் ஆனால் நானோ அந்நியன், தமிழால் உறவினன் என்று அப்போது நினைத்தது இப்போதும் நினைப்பில்.
கன்னத்தில் முத்தமிட்டால் படத்தின் உருக்கமான அந்தக் கடைசிக் காட்சி. எனக்கு முன்னால் சீட்டில் இருந்த நடுத்தரவயதுப் பெண்மணிகள் சேலைத்தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டே பார்க்கின்றார்கள். பக்கத்தில் ஒரு விசும்பல் கேட்கிறது, எனக்குப் பக்கத்தில் இருந்த ஒரு நடுத்தர வயது ஆண்மகனும் அந்தக் காட்சியோடு ஒன்றித்ததன் வெளிப்பாடு அது. உண்மையில் அந்தக் கணநேரம் படம் தந்த உணர்வை விட, எங்கள் நாட்டின் அவலக் கதை பேசும் அந்தக் காட்சியைப் பார்த்துக் கலங்கியதை நேரே கண்டு நெகிழ்ந்தேன். ஒரு சாதாரண படம் தானே என்று ஒதுக்கிவிட்டுப் போகமுடியும் ஆனால் இந்த உணர்வின் சாட்சியாகத் தமிழகத்தவர் இன்றுவரை ஈழத்தமிழர்களுக்காக இயங்கிவருகிறார்கள் என்பதற்கான மிகச்சிறிய உதாரணம் அது. தமிழகத்தவர் ஈழத்தமிழர்களுக்காக உணர்வு பூர்வமாக இயங்கும் அதே தளத்தில் ஈழத்தமிழர்களும் தமிழகத் தமிழர்களுக்காக இயங்குகிறார்களா என்றால் இல்லை என்பேன் துணிந்து.
சாந்தி தியேட்டர் பக்கமாக ஒரு குளிர்பானக் கடை. ஒரு கொக்கோ கோலா போத்தலை வாங்கிவிட்டு அந்த இடத்தில் கொஞ்சம் குடித்துவிட்டு, நான் சவாரி செய்த அதே ஆட்டோவில் ஏறி சில எட்டுப் பயணித்திருப்போம். பின்னால் ஒருவர் ஓடிவந்தார் "யோவ் யோவ்" என்று கூப்பாடு போட்டுக் கொண்டே எனக்கோ பயம் தொற்றிக்கொண்டது. என்னதான் துணிந்து தனியனாக ஊர் சுற்ற வந்தாலும் யாராவது ஏமாற்றுக்காரரிடம் வசமாக மாட்டிவிடுவேனோ, அது இந்த ஆளோ என்று பயம் கவ்வ, "ஆட்டோவ நிறுத்துங்க, யாரோ கூப்பிடுறாங்க" என்றேன்.
துரத்தி வந்தவர் "போத்தலைக் குடுத்துட்டுப் போங்க தம்பி" என்றார்.
அப்போது தான் சோடாப்போத்தலைத் திருப்பிக் கொடுக்கும் நடைமுறை ஞாபகத்தில் வந்து அசட்டுச் சிரிப்புடன்
"இந்தாங்கோ" என்றேன்
"குடிச்சுட்டுக் குடுங்க தம்பி, சிலோனா?"
"ஆமாங்க"
பின்னாளில் இரண்டு முறை நீண்ட விடுமுறையில் சென்னைக்குப் பயணப்பட்டாலும் இனிப் பயணப்படப்போகும் காலத்தையும் சேர்த்தே சொல்கிறேன் சென்னைக்கு வரும் போது என் தாய்வீட்டுக்கு வரும் உணர்வு எப்போதும்.
சென்னை தின வாழ்த்துக்கள்
2004 ஆம் ஆண்டில் நான் சென்னை வந்தபோது எடுத்த சில படங்கள்
தாஜ் கன்னிமாராவில் தங்கியிருந்த போது எதிர்பாராதவிதமாக நடிகர் நாகேஷ் ஐச் சந்தித்தேன். ரோட்டரி க்ளப் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிய நிகழ்வு அங்கு நடைபெற்றிருந்தது.
ஏவிஎம் ஸ்டூடியோ சென்றபோது பேரழகன் படப்பூஜையில் கலந்து கொண்டேன். படத்தில் நடிகர் சூர்யா, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் ரத்னவேலு
கவிஞர் அறிவுமதி அவர்களின் அலுவலகத்தில்
கவிஞர் அறிவுமதி அவர்களை அவர் அலுவலகத்தில் சந்தித்த போது
பிரபலமான கல்யாண மண்டபம் ஒன்று (பெயர் சட்டென்று மறந்து விட்டது) எட்டிப்பார்த்தேன், திருமணம் ஒன்று
34 comments:
அடுத்த முறை இந்தியா வரும்போது சென்னை மட்டும் அல்லாமல் கோவை, மதுரை போன்ற ஊர்களுக்கும் கண்டிப்பாக வரவேண்டும் பிரபா .... இப்பொழுது எத்தனை பேர் உங்களை சந்திக்க ஆவலாக உள்ளனர் :) ட்வீட்டரில் மட்டும் 3000 பேர் உங்கள் பின்னால் .... மறக்க வேண்டாம் !
lovely post!
2002ல் நான் அங்கின தான் திரிஞ்சனான்; வாறதென்டு ஒரு கோல் போட்டிருக்கலாமே?
Hey I follow you in twitter.This is an awesome blog. I am really proud. To think of those things, janathiral, veyil etc... which irritates me has excited you.
Now I am not in India, and I love what you have written..and what chennai is.... I was desperately thinking that you shouldnt write something bad about chennai as a twist at the end of the blog.
அதே தளத்தில் ஈழத்தமிழர்களும் தமிழகத் தமிழர்களுக்காக இயங்குகிறார்களா என்றால் இல்லை என்பேன் துணிந்து... That should have been because of the politicians.
A feel good blog... Thank you so much. I enjoyed thinking that you have sweet memories of your HOMELAND.
நண்பரே சென்னையைப் பற்றி நான் கூறியதைத் தவறாகப் புரிந்திருக்கிறீர்கள். நான் சொன்னது ஈழத்தமிழர்களுக்காகத் தமிழகத்தவர் கொடுக்கும் ஆதரவு அளவுக்கு ஈழத்தமிழர் தமிழக தமிழர்களுக்காப் பரிந்து பேசுவதில்லை என்றேன்
/"சென்னை என்னை வா வா என்றது!"/
இப்போதும் தான். விரைவில் உங்களை சந்திப்போம் என்னும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.
K.Arivukkarasu said...
அடுத்த முறை இந்தியா வரும்போது சென்னை மட்டும் அல்லாமல் கோவை, மதுரை போன்ற ஊர்களுக்கும் கண்டிப்பாக வரவேண்டும் பிரபா ..//
கண்டிப்பாக வருவேன் சார் உங்களைப் போன்ற உறவுகளைக் காண.
Vijayashankar said...
lovely post!//
மிக்க நன்றி நண்பரே
நிரூஜா said...
2002ல் நான் அங்கின தான் திரிஞ்சனான்; வாறதென்டு ஒரு கோல் போட்டிருக்கலாமே?//
ம்கும் ம்கும் ம்கும்
Raghavan Kalyanaraman said...
/"சென்னை என்னை வா வா என்றது!"/
இப்போதும் தான். விரைவில் உங்களை சந்திப்போம் என்னும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.//
கண்டிப்பா சார்
நண்பரே சென்னையைப் பற்றி நான் கூறியதைத் தவறாகப் புரிந்திருக்கிறீர்கள். நான் சொன்னது ஈழத்தமிழர்களுக்காகத் தமிழகத்தவர் கொடுக்கும் ஆதரவு அளவுக்கு ஈழத்தமிழர் தமிழக தமிழர்களுக்காப் பரிந்து பேசுவதில்லை என்றேன்//
Yeah I got your point.... Thats what i said, may be eezhathamizharkal are fed up of indian (tamil) politicians and think that the normal public also are like that.
\\சென்னை தின வாழ்த்துக்கள்\\
தல நீங்க சொல்லி தான் விஷயமே தெரியுது ;))
நானும் வருஷம் வருஷம் கேட்டுக்கிட்டு தான் இருக்கேன்...எங்க.! ;))
எனக்கு பொறாமையா இருக்கு பிரபா அண்ணா... எத்தனையோ முறை சென்னை போனாலும் இன்னும் நினைத்தபடி ஊர் சுத்தமுடிஞ்சதில்லை.. என் லிஸ்ட்ல இருக்கிற இடமெல்லாம் உங்க லிச்ட்லயும் இருக்கிறது சந்தோசம்...
என்ன அருமையான ஒரு பதிவு! நன்றி பிரபா :-) இதைவிட ஒரு சிறந்த வாழ்த்து மடல் சென்னை தினத்திற்கு கிடைத்திருக்க முடியாது. இங்கேயே பிறந்து வளர்ந்த நான் நினைக்கும் அதே எண்ணங்கள் உங்களுக்கும் உள்ளது என்பதை அறியும் பொழுது நானும் நீங்களும் ஒருவரே என்று உணர முடிகிறது.நன்றி :-)
amas32
Beautiful writter up Praba. As i was reading, there was lil smile, hint of excitement, wanting to see the place and the part of kannathil muthamiddal brought little tear as well! you are an amazing writer :)
தல கோபி
வருவோம் ;)
காற்றில் எந்தன் கீதம் said...
எனக்கு பொறாமையா இருக்கு பிரபா அண்ணா... எத்தனையோ முறை சென்னை போனாலும் இன்னும் நினைத்தபடி ஊர் சுத்தமுடிஞ்சதில்லை.// ;) ஆகா ஒரு லீவு எடுத்துட்டு இந்த இடங்களைப் பார்த்திட்டு வாங்கோ
amas said...
என்ன அருமையான ஒரு பதிவு! நன்றி பிரபா :-) //
மிக்க நன்றி மேடம் ;)
Bhar said...
Beautiful writter up Praba. // மிக்க நன்றி நண்பா
பல தகவல்கள் அறிந்து கொள்ள முடிந்தது...
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...
மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன்
வணக்கமும்,வாழ்த்துக்களும் பிரபா. உலகெங்கும் உள்ள தமிழர்கள் அனைவருக்கும் சென்னை மிகவும் விருப்பமான இடமாக இருப்பது என் அனுபவத்தில் கண்ட உண்மை.
2006ல் நீங்கள் திருவனந்தபுரம் வந்திருந்த போது சந்திக்கமுடியாமல் போனது. இறைவன் அருளால் என்றாவது ஒரு நாள் எங்காவது நிச்சயம் சந்திப்போம்.
மனசு நெகிழவச்ச பதிவு பிரபா.
நாகேஷோட படம்? என்ன ஒரு அபாரமான நடிகர்!!!!!
அற்புதம்!!!!
மனதினை நெகிழ்த்திய பதிவு. மீண்டும் தமிழகம்/இந்தியா வாருங்கள் நண்பரே..
சென்னை எல்லோரையும் வா வா என்று வாழ்த்தி அழைக்கும். வந்து வாழ்ந்தாரும் உண்டு. வீழ்ந்தாரும் உண்டு. வீழ்ந்து மீண்டாரும் உண்டு. பலப்பல அதிசயங்களை தன்னகத்தே வைத்திருக்கும் சென்னை உண்மையிலேயே ஒரு அற்புத நகரம்.
நீங்கள் குறிப்பிட்ட பயணத்தின் போதுதானே பெங்களூரில் நாம் சந்தித்தோம்? சில திரைப்படத் தட்டுகளைக் கூட வாங்கினீர்களே.
சதாப்தி ரயில் நன்றாக இருக்கும். நீங்கள் சொன்னது போல குடிக்கத் தண்ணி, சாப்பாடு, படிக்க பேப்பர் (காலை வண்டியில்) கிடைக்கும்.
அந்தச் சிங்களவரோடு ஆங்கிலம் பேசினீர்களா? சிங்களம் பேசினீர்களா? உங்களுக்கு சிங்களம் பேச வருமா?
மாரீஸ் ஓட்டல் எங்கிருக்கிறது? எழும்பூர் பக்கமா?
சென்னையில் நிறைய மாற்றங்கள். அடுத்து வரும் போது உங்களை பார்க்க வேண்டிய இடங்களுக்கு அழைத்துச் செல்கிறேன். :)
துபாய் ராஜா
கண்டிப்பாக ஒருநாள் சந்திப்போம் என்ற ஆவலோடு
உள்ளேன்
வருகைக்கு நன்றி துளசிம்மா
அன்பின் வெங்கட் நாகராஜ்
கண்டிப்பாக வருவேன்
ஜீ.ரா
இது நமது சந்திப்புக்கு முந்திய பயணம். எனக்கு சிங்களம் பேச வராது ஆங்கிலம் தான் ;)
ஓட்டல் மாரிஸ், சோழா ஓட்டல் பக்கமா இருக்கு
மாரீஸ் நல்லாவே இருக்குது. அண்ணன் மகளின் நிச்சயதார்த்தம் அங்கேதான் நடந்துச்சு.
பாஸ் அதே 2002லதான் நாங்க கொழும்பு கிளம்பியது.கன்னத்தில் முத்தமிட்டால் படத்தை பார்க்கும் பொழுதெல்லாம் ஆஷிஷுக்கு அப்போ ஜுரம் வரும். (ஆரம்பத்துல அயித்தான் மட்டும் அங்கே இருந்தாக) இப்ப சென்யோரே பாட்டில் பிஜிமார்ட்டின் காட்டும் போது அப்படியே வலதுபக்கம் திரும்பினா நம்ம வீடும்மான்னு கொசுவத்தி சுத்துது.
உங்களுக்கு சென்னை கொசுவத்தி எங்களுக்கு கொழும்பு கொசுவத்தி பாஸ்
மிகச்சிறந்த நெகிழவைக்கும் பதிவு.அடுத்த முறை மதுரை மற்றும் தென் தமிழ்நாட்டுக்கும் வாங்க.
தியாகராஜன்
மிகச்சிறந்த நெகிழவைக்கும் பதிவு.அடுத்த முறை மதுரை மற்றும் தென் தமிழ்நாட்டுக்கும் வாங்க.
தியாகராஜன்
புதுகை பாஸ் நன்றி ;)
மிக்க நன்றி அன்பின் தியாகராஜன் கண்டிப்பாக வருவேன் உங்களையும் சந்திக்கும் ஆவலோடு
Super boss... you may planned to trip for Trichirappali too ...
http://sivaparkavi.wordpress.com/
sivaparkavi
Post a Comment