"உனக்குத் தெரியுமா நான் உன்னை நினைப்பது" எழுபதுகளில் ஆரம்பித்து இன்றும் நம்மவர் நெஞ்சங்களில் மெல்லிசையாய் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல். இந்த ஈழத்து மெல்லிசைப்பாடலுக்குப் பின்னால் அந்தக் காலத்தில் புகழ்பூத்து விளங்கிய எம்.பி.பரமேஷின் எழுத்தாக்கமும், குரலினிமையும் இணைந்திருக்கின்றது. ஈழத்துப் படைப்பாளிகளை ஆவணப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக ஈழத்து மெல்லிசை மன்னன் எம்.பி.பரமேஷ் அவர்களை அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக வானலையில் சந்தித்தேன். ஈழத்தின் முக்கியமானதொரு இசைக்கலைஞனின் வாழ்வின் பெரும்பகுதியை வானலை வழியே பகிரும் வகையில் இரண்டு மணி நேரமாக அவரது வாழ்வியல் அனுபவங்களை எங்களுக்குத் தந்தார். அதனை இங்கே ஒலி, மற்றும் எழுத்து வடிவ ஆவணமாக உங்களுக்குப் பகிர்கின்றேன்.
எம்.பி.பரமேஷ் அவர்களின் புகழ்பூத்த மெல்லிசைப்பாடல் "உனக்குத் தெரியுமா நான் உன்னை நினைப்பது பாடலைக் கேட்க
எம்.பி. பரமேஷ் அவர்கள் வழங்கிய பேட்டியின் பகிர்வு ஒலி வடிவில்
கேட்க
தரவிறக்க
இந்த இரண்டு மணி நேர ஒலிப்பகிர்வைபெற்ற திரு எம்.பி.பரமேஷ் அவர்கள் இதை சந்திரகெளரி சிவபாலன் மூலமாக முழுதுமாகத் தமிழில் தட்டச்சிப் பகிர்ந்து கொண்டதால் அதனை எழுத்து வடிவ ஆவணமாகவும் பகிரக் கூடியதாக இருக்க்கின்றது. அந்த வகையில் சந்திரகெளரி சிவபாலன் அவர்களுக்கும் எனது நன்றிகள்.
ஈழத்து இசை ரசிகர்களைப் பொறுத்தவரையில், அவர்கள் தமிழ் சினிமாப் பாடல்களுக்கு நிகராகவும் மிகையாகவும் ஈழத்து மெல்லிசைப் பாடல்களையும் பொப் இசைப் பாடல்களையும் ரசித்தனர், போற்றிப் பாதுகாத்தனர். அந்தவகையில் ஈழத்து மெல்லிசை மன்னன் என்று கௌரவ பட்டம் பெற்ற சிறந்த மெல்லிசைப் பாடகர் எம்.பி. பரமேஷ் அவர்கள் இன்றைய தித்திக்கும் வெள்ளி நிகழ்ச்சியில் இணைந்திருக்கின்றார்.
~~உனக்குத் தெரியுமா நான் உன்னை நினைப்பது’’ என்ற பாடலுடன் எம்.பி. பரமேஷ் அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு அறிமுகமாகின்றார்.
எம்.பி. பரமேஷ் : வணக்கம்! பிரபா
கானாபிரபா:
ஈழத்து மெல்லிசை மன்னர் எம்.பி.பரமேஷ் அவர்களே, உங்களுக்கு அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபத்தில் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு இன்றைய சிறப்பு நிகழ்ச்சியிலே கலந்து கொள்வதற்கான நன்றியையும் தெரிவித்துக் கொண்டு இந்த அரிய சந்தர்ப்பத்திலே உங்கள் ஆரம்ப காலம் இசைப் பயணம் எப்படி அமைந்திருந்தது என்னும் விபரத்தைச் சற்று
விரிவாகச் சொல்லுவீர்களா?
எம்.பி.பரமேஷ்:
ஆரம்பகாலத்திலே இவ்வாறு வானொலிகள் என்னைப் பேட்டி காணவேண்டும். வானொலிகளில் என் பாடல்கள் ஒலிக்க வேண்டும். திரைப்படப்பாடல்களுக்கு இணையாக என் பாடல்கள் அமைய வேண்டும் என்ற எவ்வித கற்பனைகளும் எனக்கு இருந்ததில்லை. எனது தந்தையார் அவர்கள் ஒரு பிள்ளைப் பாட்டுக் கவிஞர். நீங்கள் அனைவரும் படித்த பாலபோதினி என்னும் அரிவரிப் புத்தகமாகிய பாலபோதினியில் ~~அந்த மரம் ஆலமரம் அழகான நல்ல மரம்’’ என்ற பாடலை எழுதி பிள்ளைப்பாட்டுக் கவிஞர் என்ற கௌரவ விருதை இந்தியக் கலைஞர்கள் மத்தியில் பெற்றுக் கொண்டார். அவரின் அருளும்; அவரிடம் நான் கற்ற தமிழறிவுமே என்னைக் கவிஞனாக்கியது. சில இசைக்குழுக்களில் பாடுவதற்கு நான் ஆசைப்பட்டேன். ஆனால் சந்தர்ப்பங்கள் நழுவி விட்டன. ஆனால், இசைத்துறையில் எனக்கிருந்த ஆர்வத்திற்கு யாரும் காரணமல்ல. எனது தாயார் ஹார்மோனியம் வாசிப்பார். அவரிடமிருந்தே நானும் கோணோஷும் ஹார்மோனிய வாத்தியத்தைக் கற்றுக் கொண்டோம். ஆனால், அவர் எங்கள் குருவாக இருக்கவில்லை.
கானா பிரபா:
உங்களுக்கு இந்த இசையின் மீது எப்படி நாட்டம் உருவானது? அதன் தொடர்ச்சியாக நீங்கள் பாடகரான கதையை நான் அறிய விரும்புகின்றேன். அத்துடன் நீங்கள் இப்படி ஒரு சிறந்த பாடகனாவதற்கு உங்கள் தந்தையாரின் க வித்திறனும் ஒரு காரணமாக இருந்திருக்கின்றது இல்லையா?
எம்.பி.பரமேஷ்:
நிச்சயமாக. அவருடைய அருளும். அவர் என்னை ஊக்குவித்த விதமும் இந்த அளவிற்கு என்னை உருவாக்கியிருக்கின்றது. நாங்கள் எல்லோருமாக குடும்பத்தில 8 பிள்ளைகள் அதில் நான் கூடுதலாக அவருடைய புத்தகங்ளைச் சேகரித்தும் அவருடன் பல இடங்களுக்குச் சென்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் சைவநற்சிந்தனை என்ற நிகழ்ச்சிக்கு அவர்; சொற்பொழிவாற்றச் செல்லும் போது அவருடன் சென்றும் என் தந்தையுடனேயே அதிகமான பொழுதைக் கழிப்பேன். அங்கு பிரபல கலைஞர்கள் விவியம் நமசிவாயம், திரு.நடராஜா, திரு சுந்தரலிங்கம் இவர்களுடன் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் என்னைப் பாடும்படிக் கேட்பார்கள். நானும் பாடுவேன். அப்போதே அவர்கள் என் தந்தையிடம் சொல்வார்கள் உங்களுடைய மகன் ஒரு பாட்டுக்காரனாக வருவான் என்று. அது எனக்கொரு ஆசீர்வாதமாகக் கிடைத்தது. ஆனால், இசைத்தட்டு தயாரிக்க வேண்டும் என்ற முயற்சி எப்படி வந்ததென்றால், சில இசைக்குழுக்கள் எமக்கு முன்பு இருந்தன. அவற்றில் நான் பாடியிருக்கின்றேன். பாடகர்கள் இல்லாத போது ஆரம்பப் பாடல்கள் கூடப் பாடியிருக்கின்றேன். பின் வேறு கலைஞர்கள் வந்த போது அதிலிருந்து விலகிக் கொண்டேன். அவ்வேளை ஒரு இசைக்குழு அமைக்க வேண்டும் என்று நாம் எண்ணிய போது எங்கள் வகுப்பில் படித்த முகுந்தன், மோகன், கங்கா, சிவானந்தன், மற்றும் எனது வகுப்பு நண்பர்கள் என்னை வைத்து ஒரு இசைக்குழு ஆரம்பிப்போம் என்ற போது கோணேஸ் அவர்களும் இணைந்து கொண்டார்கள். அவருடன் இணைந்தே மகேஷ் அவர்களும் இணைந்து கொண்டார்கள். இந்த இணைப்பிலேயே பரமேஷ்கோணேஷ் என்ற பெயரும் உருவானது. இப்படியான முயற்சிகளில் நாம் பெற்ற வெற்றிகளில், முதலில் நான் பாடிப்புகழ் பெற்ற ~~உனக்குத் தெரியுமா.....’’ என்ற பாடலானது முதலில் இந்த வரிகளில் அமையவில்லை. ~~துணிந்து செல்லடா! துயர் சுவரைத் தாண்டடா! பணிந்து செல்வதா’’ என்ற வரிகளில் ஒரு வீரம் சொரியும் பாடலாகவே அமைந்திருந்தது. இந்தப் பாடலைத்தான் காதல் பாடலாக நான் மாற்றிப் பாடினேன். இதுவே இசைத்தட்டிலும் வந்தது. இதுவே எனது ஆரம்பம். இதற்கு முன் எப்படி ஒவ்வொரு படிகளாக நான் முன்னேறினேன். என்பது பற்றிய விபரங்களை எனது அடுத்த புத்தகத்தில் விபரமாக எழுதுகின்றேன்.
கானா பிரபா
நிச்சயமாக ~~; இனிய இசைப்யணங்களில்’’ என்ற உங்கள்
புத்தகத்தில் உங்கள் ஆரம்பகால நிகழ்வுகள் ஆரம்ப கால
அழகான புகைப்படங்கள் எல்லாம் இணைக்கப்பட்டு மிக
அழகாக உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்த நூலிலுள்ள
விடயங்களைப் பார்க்கும் போது இந்த காலகட்டத்திலே ஒரு
மெல்லிசை என்ற வடிவத்திலே இப்படியான பாடல்கள்
இல்லாத காலத்திலே ஒரு இடத்தைத் தக்க வைக்க
வேண்டும் என்ற ஒரு முனைப்பு உங்களுக்கு
வந்திருக்கின்றது. இந்த காலகட்டத்தில் நித்திகனகரெட்ணம்
அண்ணா அவர்கள் பொப் இசைப் பாடல்கள் என்னும் ஒரு
பாணியிலே தன்னுடைய பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தார்.
இந்த மெல்லிசை என்றால் என்ன என்பது பற்றி
உங்களுடைய பார்வையில் கூறுவீர்களா?
எம்.பி.பரமேஷ்: நித்திகனகரெட்ணம் அவர்கள் எனக்கு மூத்தவர். எனது
உறவினரும் கூட அவருக்குக் கொடுக்கப்பட்ட ~~பொப் இசை
பிதா’’ என்ற கௌரவவிருது மிகமிகப் பொருத்தமானது. யார்
அந்தப் பட்டத்தைக் கொடுத்தார்கள் என்பது எனக்குத்
தெரியாது. இந்த பொப் இசை என்னும் துள்ளிசையில்
முதன்முதலில் தமிழில் வந்த முதல் பாடல் பாடியவர்
சந்திரபாபு அவர்கள். இவர் இலங்கையில் பிறந்தவர். இதன்
பின் இல் கிற்றார் வாத்தியத்தைக் கையில்
வைத்துக் கொண்டு நித்திக்கனகரெட்ணம் அவர்கள்
முதல்முதலில் பாடினார். ஆனால், இசைத்தட்டு முதல்முதலில்
செய்தது நாங்கள் தான். இதை நான்
ஏற்றுக்கொள்ளுகின்றேன். இக்காலத்தில் ஏ.இ. மகோகரன்,
அமுதன் அண்ணாமலை, ரெனிஸ் சிவானந்தன், ராமச்சந்திரன்,
டேவிட் ராஜேந்திரன், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில்
இருந்து பலர் பொப் இசைப் பாடல்களைப் பாடியிருந்தார்கள்.
இதைவிட அப்துல் கமீட் அவர்கள், ஒவ்வொரு
சனிக்கிழமைகளிலும் பொப் இசை நிகழ்ச்சியை மிகமிகத்
திறமையாக நடாத்தியிருந்தார். அதைக் கேட்பதற்கு அத்தனை
வானொலிப் பெட்டிகளும் ஒவ்வொரு வீடுகளிலும் இயங்கிக்
கொண்டிருக்கும். அக்காலம் போல் மீண்டும் வரவேண்டும்
என்பதே எனது ஆசை. அக்காலத்தில் சின்னமாமியே பாடல்
எப்படிப் பிரபலம் அடைந்ததோ அதே போல் இக்காலத்திலும்
ஏ.இ. மனோகரன், நித்திகனகரெட்னம் பாடலை எல்லோரும்
விரும்பிக் கேட்கின்றாhகள். திருகோணமலையைச்: சேர்ந்த திரு
இமானுவேல் அவர்கள் ~~சித்திரக் கன்னியர் ஊர்வலம்
போகும்’’ என்ற பாடலைப் பாடியிருந்தார். இதைவிட
டென்மார்க் நாட்டில் வாழும் திரு சன் அவர்கள் ~~குளிரடிக்குது
கண்ணே பொன்னம்மா....’’ பாடலைப் பாடியிருந்தார். இதுவே
சிங்களத்தில் ~~ஒஞ்சிலிசிலி சில்ல மலோயா....’’ என்ற வடிவில்
வந்தது. ஒரு தமிழர் பாடிய பாடல் சிங்களத்திலும் மேலாக
ஒலித்ததும் பெருமையான விடயமாக இருந்தது. இது பற்றி
நீங்கள் அறிந்தவற்றையும் கூறுங்களேன.;
பிரபா: இல்லை இது பற்றிய விபரங்கள் நீங்கள் சொன்னபோதுதான்
அறிந்து கொண்டேன். ஆனால் இந்த மெல்லிசைப் பாடலில்
தனித்துவம் மிக்கவராக நீங்கள் இருக்கின்றீர்கள் அந்த
மெல்ல்லிசைப்பாடலின் வரைவிலக்கணங்கள் பற்றிச்
சொல்வீர்களா?
எம்.பி.பரமேஷ்: மெல்லிசை என்பது பாடலை
இசையமைப்பவர் அந்தக் கட்டத்திற்குள் போய்ப் பாடலை
இசையமைப்பார். இது அந்த நேரத்திற்குரிய தன்மையைக்
குறிக்கும். திருமணவீட்டில் இசைக்கும் மங்கள இசை எவ்வாறு
மக்கள் மனதிற்குள் சென்று அந்த திருமணவிழாவை அவர்கள்
அநுபவிக்கச் செய்கின்றதோ, அந்த நடைபெறும் சம்பவத்திற்கு
எது மென்மையாக அமைகின்றதோ அதுவே மெல்லிசை
எனப்படும். உண்மையில் மிகமிகக் கடினமான இசை. கர்நாடக
இசையினை 5,6 வாத்தியங்களுடன் இணைத்து ஆலாபனை,
தாளக்கட்டு இவையெல்லாம் சேர்த்து இசைக்கின்றார்கள்.
ஆனால் மெல்லிசை அப்படியல்ல எங்களுக்கென்று ஒரு
உரிமை இருக்கின்றது. நாம் எந்த ராகத்தையும் எதற்குள்ளும்
புகுத்துவோம். தவறான இசையைக் கூட
கொடுத்துவிட்டு அதற்கு ஒரு இனிமையைப் புகுத்துவோம்.
அதனாலேயே ஒரு இனிமையான இசையும் வருகின்றது.
இதற்கு கர்நாடக இசையில் சந்தர்ப்பம் இல்லை. இதனால்
மெல்லிசை உடனேயே மக்கள் மனதில் இடம்பிடிக்கின்றது.
உருளைக்கிழங்கு இருக்கின்றதே, அதை ஏழைகளின் உணவு
என்பார்கள். ஆனால், அதுவே இன்று பிரதான உணவாக
இருக்கின்றது. இதே போல்த்தான் நாட்டுக்கூத்து, நாட்டுநடனம்
இவையெல்லாம் காட்டுமிராண்டிகள் செய்யும் நடனம் என்று
ஒரு காலத்தில் இருந்தது. இதே நடனம் தான் பின்
துள்ளிசையாக மாறியது. ~~பொப் இசையில் பாடல் கேட்டு
ஆட்டம் போடுங்கள்’’ என்ற பாடலில் இதுபற்றி நான்
குறிப்பிட்டிருக்கின்றேன். மெல்லிசை என்பது மெல்லப்
பாடுவதல்ல. மெல்லிசை என்பது மென்மை இசை. ஒரு
கவிஞன் சூழ்நிலைக்கேற்ப பாடலை இயற்ற இந்த
சூழ்நிலையை மெருகேற்ற இசைப்பதுதான் மெல்லிசை
எனப்படும். சோகவரிகள் என்னும் போது அந்த
சோகவரிகளுக்கேற்ப சோகத்தைக் கூட்டுவது தான்
மெல்லிசை. இது மிகக் கடினமான இசை.
கானாபிரபா:
ஆம் மிகச்சிறப்பாக மெல்லிசைக்குரிய விளக்கத்தைக்
குறிப்பிட்டிருந்தீர்கள். இலஙகை வானொலி இதற்கு ஆற்றிய
பங்களிப்பினையும் பி.எச். அப்துல்கமீட் மெல்லிசை என்றொரு
நிகழ்ச்சி நடத்தியமை பற்றியும் குறிப்பிட்டிருந்தீர்கள்.
இலங்கை வானொலியிலே உங்கள் அறிமுகம் எப்படி
ஏற்பட்டிருந்தது?
எம்.பி.பரமேஷ்: இலங்கை வானொலியில் மதிப்பிற்குரிய எஸ். மயில்வாகனம்
அவர்கள். தற்பொழுது கனடாவில் வசிக்கும் நாகலிங்கம்
அவர்கள் ஐ.ஏ.எஸ் நிறுவனத்தினால் அரங்கேற்றம் என்ற
நிகழ்ச்சியை ஆரம்பித்தார்கள். இதில் பலரும் போய்ப்
பாடுவார்கள்: லத்தீப் அவர்கள் இசையமைத்துக்
கொண்டிருந்தார்கள். பாடலைக் கொடுப்பார்கள். பாடகர்கள்
பாடுவார்கள். மூன்று பாடல்களைக் கொடுப்பார்கள். இந்த
மூன்று பாடல்களைப் பாடுபவர்களில் முதல்
இடம்பிடிப்பவருக்கு 25 ரூபாய்கள் பரிசாகக் கிடைக்கும். இந்த
வேளையில் எங்கள் இசை நிகழ்ச்சிகளைப் பார்த்த
மயில்வாகனம் அவர்களும் செந்தில்மணி அவர்களும் இந்த
அரங்கேற்றம் நிகழ்ச்சிக்கு ஒலிப்பதிவு செய்யும் படிக்
கேட்டார்கள். நானும் கோணேஸ{ம் சம்மதித்து ஒரே
தடவையில் 5 வார நிகழ்ச்சிகளை ஒரே தடவையில்
ஒலிப்பதிவு செய்தோம். இது வழமையாக பம்பலப்பிட்டியில்
இருந்த ரணவீர ஸ்ரூடியோவில் நடைபெறும். இங்கு பலரும்
வருவார்கள். லத்தீப் அவர்கள் போலன்றி இசைத்தட்டிலுள்ள
இடை இசையை அப்படியே வாசிப்போம். இதனால் ஒரு தனிப்
பெருமை எங்களுக்குக் கிடைத்தது. 52 வாரங்கள் தொடர்ந்து
இந்நிகழ்ச்சி நடைபெற்றது. நான் அங்கு பாடிய பாட்டு ~~பட்டுப்
பூச்சி பட்டுப் பூச்சி பாப்பா’’ என்ற பாடல். இந்தப் பாடல்
வேதா அவர்கள் இசையமைக்க ஜெய்சங்கர் நடித்திருநந்தார்.
மிகப் பிரபல்யமான பாடல் அதில் முதல் பரிசு எனக்குக்
கிடைத்தது. இந்த நிகழ்ச்சிக்குத் திருக்கோணமலையிலிருந்தும்
சிலரை அழைத்து வரும்படிக் கேட்டிருந்தார்கள். அப்படிப்
பாடியவர்கள் தான் என் மனைவி மாலினிக்கு முன் என்னுடன்
பாடியவர்கள். இப்போது கனடா நாடடில் வாழ்ந்து
கொண்டிருக்கும் கே.ஆர்.கமலா அவர் சகோதரி பமலா, விமலா
ஆகியோர் எமிலி கிரௌடன் அவர் இப்போது எங்கே வாழ்ந்து
கொண்டிருக்கின்றார் என்று எனக்குத் தெரியாது. மற்றும் பலர்.
இவர்களைத்தான் பின்பு எமது இசைக்குழுவில் சேர்த்துக்
கொண்டோம். இவ்வாறே அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து
கொண்டிருக்கும் ரோலின் வில்லியம் என்ற பெண்மணி கூட
பாடியிருந்தார். இவர் ~~ பளிங்கினால் ஒரு மாளிகை’’ என்ற
பாடலைப் பாடினார். இதைவிட ரெஜினா,
கே.எஸ்.பாலச்சந்திரன், கெங்காதரன் போன்றோரும்
எங்களுடன் பாடினார்கள். இந்த 52 நிகழ்ச்சிகளையும்
எத்தனை ஆயிர்ம் பேர் கேட்டிருப்பார்கள். இலங்கை
வானொலியில் ஒருவர் பாடிவிட்டால், தமிழகம் எங்கும்
கேட்கும். ஏனென்றால், வானொலி என்றால் அது ஒன்றுதான்
வேறு ஒன்றும் இருக்கவில்லை. சினிமாப் பாடல்கள் என்றால்
அது இலங்கை வானொலிதான். தற்பொழுதுதான்
இந்தியாவில் சினிமாப் பாடல்களை வானொலிகளில்
ஒலிபரப்புகின்றார்கள். இந்த சந்தர்ப்பம் தான் எங்களுக்கு
அமைந்திருந்தது. அதற்கு எஸ்.பி.மயில்வாகனம்
அவர்களுக்கும் நாகலிங்கம் அவர்களுக்கும் நன்றி கூற
வேண்டும். மற்றது பி.எச்.அப்துல் கமீட் அவர்கள் மெல்லிசை
நிகழ்ச்சி நடத்தவில்லை. பொப் இசை நிகழ்ச்சியையே
சனிக்கிழமைகளில் 3 மணியிலிருந்து 3.30 மணிவரையில்
நடத்தியிருந்தார்.
கானா பிரபா: ஆமாம். இந்த பொப் இசை என்று நிகழ்ச்சியில் ஆரம்ப
காலகட்டங்களில் நித்தி அண்ணா போன்றவர்கள்
பாடியிருப்பார்கள் இல்லையா?
எம்.பி.பரமேஷ்: நிச்சயமாக இல்லை. நான்,
கோணேஷ், நித்தி, ஏ.இ.மனோகரன் போன்றோர்
வானொலிக்குள் போகாமல் வெளியிலிருந்தே
பிரபலமானவர்கள். பிரபலமான பின்பு தான் வானொலிக்
கலையகத்திலிருந்து அழைப்புக்குள் கிடைத்தன.
பரமேஷ்கோணேஷ் இசைத்தென்றல் நிகழ்ச்சிக்கு
வானொலியில் 15 நிமிடங்கள் விளம்பரஙங்கள் கொடுத்தோம்.
நாங்களாகவே இசைத்தட்டு தயாரித்துக் கொடுத்த பின்பு
தான் வானொலியில் அது ஒலிபரப்பப்பட்டு எங்களைப்
பிரபலமாக்கியது. நித்தி;, மனோகரன் கூட இப்படித்தான்.
இதனால் வானொலிக்கு வெளியில் நின்று நாம்
பிரபல்யமானோம்.
பிரபா:
இப்போது எம்.பி.பரமேS அவர்களுடன் உரையாடுவதற்கு வந்திருப்பவர் பொப்
இசையின் பிதா எனப் போற்றப்படும் நித்தி கனகரெட்ணம்
அவர்கள்.
நித்திகனகரெட்ணம்:வணக்கம் பரமேஸ். பரமேஸ் அவர்கள் எனது உறவினரும்
கூட. பரமேஸ் அவர்கள் சொன்னது போல் நான் அந்த
இசையை 1967 இல் ஆரம்பிக்கும் போது பொப் இசை என்ற
பெயரை வைக்கவில்லை. சிவநாயகம் ஆசிரியர் அவர்கள்
தான் இந்தப் பெயரை வைத்தார். பரமேஸ் அவர்கள்
ஆரம்பித்த காலகட்டத்திலேயே நானும் அந்த பொப்;
இசைக்குள் குதித்துக் கொண்டேன்.
பிரபா: அந்தக் காலகட்டத்திலே பொப் இசை, மெல்லிசை போன்ற
வடிவங்களுக்கு ரசிகர்களுடைய வரவேற்பு எப்படி இருந்தது.
நித்திகனகரெட்ணம்:மிகவும் வரவேற்பு இருந்தது பரமேஸ் சொன்னது போல்
வானொலி என்ற வட்டத்தினுள் இல்லாமல் வெளியிலேயே
திருகோணமலை யாழ்ப்பாணத்தில் பிரபலமடைந்து 2
வருடங்களுக்குப் பின்பு தான் வானொலி எங்களை
தங்களுக்கூடாகப் பாடும்படி அழைத்தது. அதற்கு முன்னமே
ஒரு தனித்துவமாகவே இயங்கினோம்.
கானாபிர: வேறு வேறுபட்ட இசை வடிவங்களில் இலங்கையில்
பிரபலமடைந்த நீங்கள் இருவரும் ஒன்றாகத் தோன்றிய
மேடைகள் அக்காலத்தில் அமைந்திருந்தனவா?
நித்திகனகரெட்ணம்:இல்லை, இல்லை. நான் 3 வகையான கிற்றார் வாத்தியத்தை
வைத்துக் கொண்டு பொப் இசையைப் பாடிக்
கொண்டிருந்ததனால், நானும் அவரும் ஒன்றாக இணைந்து
நிகழ்ச்சிகளை நடத்தும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
பரமேஸ் அவாகள் சக்சஸ்போன் என்னும் ஆங்கில
வாத்தியத்தை வாசித்தார். பப்பா மிஸ்கின் என்பவர் ரம்பட்
வாசித்தார். அந்த வகையில் வித்தியாசமான முறையில்
தங்கள் இசையை இசைத்துக் கொண்டார்கள். ஆனால் பின்பு
பப்பா மிஸ்கினை இணைத்துப் பாடக்கூடிய நிலை எனக்கு
ஏற்பட்டது. ஆனால் எங்களால் சேர்ந்து எங்கள் இசைகளைக்
கொண்டு போகக் கூடிய முறையில் அமைக்கவில்லை.
பரமேஷ்: பப்பா மிஸ்கின், கிளம்கோனர் இவர்கள் இருவரையும் விட
நாங்கள் இளமையானவர்கள். பப்பா மிஸ்கின் இலணடனில்
இறந்துவிட்டார். அவருக்கும் எனது அஞ்சலிகள். இவாகளைக்
கூறும் போது பப்பா மிஸ்கின் எங்களைத் தூக்கிவிட்டு
உச்சத்துக்குக் கொண்டு போனவர். எங்களுக்கு மேலும்
உற்சாகத்தைத் தந்தவர். குடிகாரன் எப்படிக் குடிக்க
வேண்டும் என்பதற்கு ஒரு இலக்கணமாக வாழ்ந்தவர். ரம்பற்
அவர்கள் கைகளில் நின்று விளையாடும். இவர்களைத்
தனியே வாசிக்கவிட்டு அவர்களுக்கென்றே கைத்தட்டல்கள்
அமோகமாக வந்து விழும். இவர்கள் போக்குவரத்து,
தங்குமிட வசதிகள் எல்லாம் செய்து கொடுத்து
இவர்களுக்காகப் பல செலவுகள் செய்தோம். இதுவும்
எங்கள் இசைத்தென்றல் நிகழ்ச்சிகள் வெற்றி பெற்றதற்கு
காரணமாக அமைந்தன. அவர்கள் எங்கள் குரு என்று
சொல்லலாம்.
நித்தி;கனகரெட்ணம்: பப்பா மிஸ்கின் என்னுடைய ~~கள்ளுக்கடை பக்கம்
போகாதே.....’’ ~~சின்னமாமியே .....’’ ~~திங்கட்கிழமை
வெள்ளிக்கிழமை.....’’ போன்ற பாடல்களுக்கும் அருமையாக
ரம்பட் வாசித்தார். சிங்களம், ஆங்கிலம், தமிழ் என்ற
வித்தியாசம் இல்லாமல் இசை வாசித்த ஒரு முதிர்ந்த
சுத்தமான மனதுடன் இசை தந்த ஒரு இசைக்கலைஞன்
பப்பா மிஸ்கின். இவர் இறந்து போனாலும் என்றும் எனது
மனதில் நிறைந்திருக்கும் ஒரு இசைக்கலைஞன்.
பரமேஷ{க்கு மட்டுமன்றி எனக்கும் கூட அவர் மனதில்
நிறைந்திருக்கும் ஒரு கலைஞன்.
பரமேஷ்: அதாவது அனைத்துச் சிங்களப் பாடல்களிலும் அவர்
பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும். இதைப் பற்றி
மேவின் றொற்றிக்கோ கூறுவார். தெரிந்தால் அவரைப்
பற்றியும் கூறுங்கள்.
நித்திகனகரெட்ணம்: மேவின் ரொற்றிக்கோ என்பவர் தமிழ்நாட்டில் பல
பாடல்களுக்குப் பெரிய அளவில் ரெகோடிங் செய்தவர்.
அவர் எனக்குப் பல பாடல்களுக்கு உதவியிருக்கின்றார்.
என்னை மிகவும் நண்பனாகவும் ஆசிரியன் போலவும்
வற்புறுத்தி பாடல்களுக்கு இசையமைப்பார். என் இடுப்பில்
வந்து இடித்து இடித்து பாடல்களின் கவிவடிவம் வெளியே
வர மிகவும் உதவியாகப் பெரிய அளவில் பாடுபட்டார்.
அப்படியான ஒரு கலைஞன் அவர். அப்படியே தான்
பரமேஷ் அவர்களுக்கும் உதவியிருப்பார் என்று
நினைக்கின்றேன். இந்தவகையில் அவர் எங்கள: பேருக்கும்
புகழுக்கும் மிகவும் உதவியாய் இருந்தவர் என்றதனால்
அவரை என்றும் நான் நினைப்பேன். என் வீட்டில் அவர்
படத்தை வைத்திருந்து அடிக்கடி பார்த்துக் கதைப்பேன்.
இப்படியான ஒரு கலைஞன் இப்போதுள்ள பாடகர்களுக்கோ
இசை ஆர்வலர்களுக்கோ கிடைப்பது மிகவும்
அருமையாகத்தான் இருக்கும் என்று நான் நினைக்கின்றேன்.
பிரபா: அதேவேளை பரமேஷ் அண்ணா! நான் நினைக்கின்றேன்.
நீங்கள் இருவரும் வானலையில் சந்திப்பது இதுதான்
முதல்தடவை என்று.
நித்திக்கனகரெட்ணம்:நாங்கள் எப்போதும் உறவினர்களாக வீட்டில் சந்தித்துக்
கொள்வோம். பரமேஷ் ஒரு கலைஞனாக, ஒரு கவிஞனின்
மகனாக, ஒரு கவிஞனாக இருந்த போதும், அவர் எனது
~~கள்ளுக்கடைப் பக்கம்...’’ என்ற பாடலின் வரிகளை
நன்றாக இரசித்தார். நான் எப்போதும் அவரை ஒரு
இரசிகனாகத்தான் பார்க்கின்றேன். நித்தி! உங்கள் வரிகள்
இப்படிப் போகின்ற போது நான் மிகவும்
பெருமையடைகின்றேன். மிகவும் சிறப்பாக இருக்கின்றது
என்றெல்லாம் புகழ்வார். உறவினர் என்பதற்கு மேலாக
அவரை ஒரு இரசிகனாகத்தான் அவரை நான்
பார்க்கின்றேன். ஒரு கலைஞனாகவும் ஒரு இரசிகனாகவும்
இருக்கும் ஒரு சிறப்பு அவருக்கு உண்டு.
பரமேஷ்: நாங்கள் ஒரே மேடையில் தோன்றாததற்குக் காரணம்
என்னவென்றால், எப்படி ரஜனிகாந்த், கமலஹாசனை ஒரே
மேடையில் போட்டால் அந்தத் தயாரிப்பாளர் முறிந்து
போவாரோ, அதேபோல் நித்திக்கனகரெட்ணம்,
ஏ.ஈ,மனோகரன், பரமேஷ்கோணேஷ் இசைக்குழுவை ஒரே
மேடையில் போட்டாலும் நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு
பணம் அந்த அளவில் கொடுக்க முடியால் போய்விடும்.
மட்டக்களப்பு எங்கள் கோட்டை என்று சொல்லலாம்.
எத்தனை முறை நிகழ்ச்சி நடத்தினாலும் பணத்தை
அள்ளிஅள்ளிக் கொடுப்பார்கள். அதேவேளை
திருகோணமலையில் அநுமதிச்சீட்டுக்கள் வீடுகளுக்குச்
சென்று நாங்கள் விற்பதில்லை. மண்டபத்திலேயே வந்து
அனைவரும் அநுமதிச்சீட்டுக்களை வாங்குவார்கள்.
எங்களுக்குள் எங்தவிதப் பிரிவினைகளும் இல்லை.
ஆனால், இதுதான் முதல்தடவையாக நாங்கள் இருவரும்
போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுகின்றோம்.
பிரபா: நன்றி நித்தி அண்ணா! இந்நிகழ்ச்சியில் நீங்கள் கலந்து
கொண்டமைக்காகாவும் உங்கள் பழைய நினைவுகளைப்
பகிர்ந்து கொண்டமைக்காகவும்.
நேயர்களே! நீங்களும் எம்.பி. பரமேஷ் அவர்களோடு
கலந்து உரையாடி மகிழலாம். ஆம் இப்போது பாடும் மீன்
தந்த கலைஞன் அண்ணன் சிறிஸ்கந்தராஜா அவர்கள்
கலந்து கொள்ளுகின்றார். மட்டுநகர் தம்மை வாழ வைத்த
நகர் என்று பரமேஷ் அவர்கள் குறிப்பிட்டிருந்தார். அங்கு
நிகழ்ச்சிகளைப் பார்த்த அநுபவம் உங்களுக்கு
இருக்கின்றதா?
சிறிஸ்கந்தராஜா: ஆம் நிச்சயமாக. ஈழத்தின் இரு இசை இமயங்கள் கலந்து
கொண்டு பேசியமை மிகச் சிறப்பைத் தந்தது. இந்த
பரமேஷ்கோணேஷ் அவர்களுடைய பாடல்களையெல்லாம்
இலங்கை வானொலியினர் ஏன் போடுவதில்லை என்னும்
கேள்வி ஒரு காலம் இருந்தது. அதன் பின் இவர்கள்
பாடல்கள் எல்லாம் வரத் தொடங்கிய பின் மக்களிடையே
வரவேற்பு இருந்தது. வானொலி, தொலைக்காட்சி போன்ற
ஊடகங்கள் ஊடாகத்தான் பல கலைஞர்கள்
பிரபலமடைகின்றார்கள். புல திரைப்பட நடிகர்களுக்கும் கூட
தொலைக்காட்சிகள் வாழ்வாதாரம் தந்து கொண்டு
இருக்கின்றது. அந்த முகவரி தேவைப்படுகின்றது. ஆனால்,
இலங்கை வானொலிதான் இந்தியாவில் கூட பேசப்பட்ட ஒரே
வானொலியாக இருந்த போதிலும்கூட வானொலிக்கு
வெளியே இருந்து தமது திறமையை வெளிக்காட்டிப் புகழ்
பெற்று அதன் பின் வானொலிக்குத் தமது திறமையைப்
பயன்படுத்திய ஒரு உத்தம கலைஞர்கள் இந்த
பரமேஷ்கோணேஷ் அவர்களும் நித்திக்கனகரெட்ணம்
அவர்களும். பரமேஷ்கோணேஷ் அவர்களுடைய ~~உனக்குத்
தெரியுமா....’’ என்னும் பாடல் இன்னும் நான்
பாடிக்கொண்டுதான் இருப்பேன். எனது மனைவி கேட்பார்,
~~இப்போதும் இந்தப் பாடல் உங்களுக்கு மனப்பாடமாக
இருக்கின்றதா’’ என்று. மனதுக்குப் பிடித்த பாடல் மனதை
விட்டு அகலமாட்டாது. ஆனால், பாடசாலையில் படித்த பல
பாடங்கள் மறந்துவிட்டன. இவருடைய செவ்வி மிகச்
சிறப்பாக இருக்கின்றது. பரமேஷ் அவர்களே! இப்போதும்
நீங்கள் நிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டிருக்கின்றீர்களா?
பரமேஷ்: ஆம், எனது பிள்ளைகள் ரிதம்ஸ் என்ற பெயருடைய
இசைக்குழுவை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். எனது
மூத்த மருமகன் வேலையின் நிமித்தமாக ரெக்ஸஸ் என்னும்
இடத்திற்குச் சென்றிருக்கின்றார். அதனால் சில
காலங்களுக்கு இசை நிகழ்ச்சிகளை இடைநிறுத்தி
வைத்திருக்கின்றோம்.
சிறிஸ்கந்தராஜா: நல்லது பிரபா. அது எனது பழைய நினைவுகளை மீட்டக்
கூடியதாகவும். வளருகின்ற கலைஞர்களுக்கு
வழிகாட்டியாகவும் இருக்கும் என்று நம்புகின்றேன். பரமேஷ்
அவர்களே! கோணேஷ் அவர்கள் இப்போது எங்கே
இருக்கின்றார் என்று அறிய ஆவலாக இருக்கின்றோம்.
பரமேஷ்: அவர் இப்போது ஐ.ரி:ஆர் என்னும் வானொலியை நடத்திக்
கொண்டிருக்கின்றார். இப்போது அது ஐரோப்பாவில்
ஒலிபரப்பப்படுவதில்லை.
சிறிஸ்கந்தராஜா: நல்லது. அப்படியானால் இப்போதும் அவர் கலையோடுதான்
சம்பந்தப்பட்டிருக்கின்றார் என்னும் போது சந்தோசமாக
இருக்கின்றது.
அவர் விடைபெற மீண்டும் ஒரு நேயர் மெல்போனில் இருந்து
இணைகின்றார்.
நேயர் 3: யாழ்ப்பாணத்தில் வீரசிங்கம் மண்டபத்தில் நான் மிகச்சிறுவனாக
இருக்கும் போது உங்கள் நிகழ்ச்சியைப் பார்த்திருக்கின்றேன்.
மிகவும் அழகாக கவர்ச்சியாகப்
பார்வையாளர்களுக்கு இருக்கும். எத்தனை தடவைகள்
யாழ்ப்பாணத்தில் உங்கள் நிகழ்ச்சிகளைச் செய்தீர்கள்?
பரமேஷ்: 5 நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கின்றோம். நீங்கள் குறிப்பிட்டது
போல் எங்கள் வெற்றிக்குக் காரணம் விளம்பரங்களும் குறிப்பிட்ட நேரத்திற்கு நிகழ்ச்சிகளை நாங்கள்
ஆரம்பிப்பதும் தான். காசிப்பிள்ளை அரங்கில் போட்டியாக நடந்த
நிகழ்ச்சியை மறக்க முடியாது. அது என்னவென்றால்,
அரியாலையில் இருந்து இருபகுதியினர் எங்களிடம் நிகழ்ச்சிக்காக
முற்பணம் கட்டினார்கள். இருவரிடமும் நாங்கள் பணம்
வாங்கிவிட்டோம். எங்களுக்குத் தெரியாது இந்நிகழ்ச்சி ஒரே
மேடையில் நடக்கப் போகின்றது என்னும் விடயம். அன்று
நாங்கள் நிகழ்ச்சிக்குப் போய்க் கொண்டிருக்கும் போது
கைதடியில் வைத்து எங்களைக் கடத்திக் கொண்டு
போய்விட்டார்கள். எங்கள் மேடையில் பாடிவிட்டுத்தான் அங்கு
போக வேண்டும் என்றார்கள். பின் ஒருவாறாக இருவரையும்
சமாதானப்படுத்தி இரு நிகழ்ச்சிகளையும் செய்தோம். இது
மிகவும் சுவாரஸ்யமான நிகழ்ச்சியாக இருந்தது.
நேயர் 3: அந்தக் காலத்தில் இந்தியச் சினிமாப் பாடல்கள் பிரபல்யமாக
இருந்த காலத்தில் பொப் இசைப்பாடல்கள், பரமேஷ்கோணேஷ்
பாடல்கள் 4, 5 வருடங்கள் மிகப் பிரபல்யமாக இருந்தன.
தமிழகத்தினருக்கே ஒரு விழிப்புணர்வூட்டிய பாடல்கள் என்று
சொல்லலாம்.
நேயர்: அந்தக் காலத்து இளைஞர்கள் பெல்பொட்டம் அணிந்து கொண்டு
இந்தப் பாடல்களைத்தான் பாடிக் கொண்டு திரிவார்கள்.
பரமேஷ்: இலங்கையில் மூவின மக்களையும் ஒன்றிணைத்த பாடல்கள்
இவையென்று சொல்ல வேண்டும். ஓன்றாகப் பாடியாடி
மகிழ்வார்கள்.
கானா பிரபா: இப்போது இணைந்து கொண்டிருக்கும் நேயர் ஒரு இசைப்பிரியர்
அத்துடன் கிற்றார் வாத்தியம் இசைப்பதில் வல்லவர்,
இதுமட்டுமல்ல பரமேஷ் அவர்கள் எங்கே இருக்கின்றார் என்று
அவரைத் தேடி வெறியோடு அலைந்து கொண்டிருக்கும் ஒரு ரசிகர்.
ரவி: நானும் இந்த உனக்குத் தெரியமா என்ற பாடலில் மயங்கி
நேயர் 4 ரசித்தவனே. வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு
நானும் சென்றிருந்தேன். இவர்கள் வைத்த இசைப் போட்டியிலே
நானும் கலந்து கொண்டு வெற்றியீட்டியமையினால் பணப்
பரிசினையும் பெற்றிருந்தேன். அதற்குப் பின் இவர்களுடைய
பாடல்களில் எனக்கு மிகவும் ஆர்வம் இருந்தது. முதல் இசைத்
தட்டில் வெளிவந்த 4 பாடல்களும் பள்ளிக்கூடப் பாடங்களை விட
மிகவும் மனப் பாடமாக இருந்தன. பரமேஷ் அண்ணா! இந்த
ஆர்வத்தில்த்தான் திருகோணமலைக்கு நான் வந்திருந்தேன். நீங்கள்
பயிற்சி செய்யும் போதெல்லாம் உங்களிடம் வருவேன். பயிற்சியில்
மயங்கி உங்கள் வீட்டு வாசலில் இருப்பேன். எனது அத்தான்
டொக்டர் நவபாலச்சந்திரன் அவர்கள் அங்கு வாழ்ந்தார். அவரிடம்
தான் திருகோணமலைக்கு வந்திருந்தோம்.
ரவி: நான் எக்கவுன்டன்ஸி படித்துக் கொண்டிருந்த போது உங்கள்
பயிற்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்து தான் போவேன்.
இசைத்தட்டுக்களும் வாங்கி வைத்திருந்தேன். ~~பாடல் எனக்கிது
முதல் தரம்தான்.....’’ இந்தப் பாடல் பிரேமா பாடியிருந்தார் என்று
நினைக்கின்றேன். இந்தப் பாடலுக்கு மேலாக பின்னணி இசை
மிகச்சிறப்பாக இருந்தது. நான் நினைத்தேன் நீங்கள் பாடல்களை
எழுத கோணேஷ் அவர்கள்தான் இசை அமைப்பார் என்று அது
உண்மையா? உங்கள் பாடல் வரிகள் அத்தனையும் அருமையானது.
மற்றும் உங்கள் இசைத்தட்டுக்கள் இருந்தால் தயவுசெய்து உங்கள்
புத்தகத்துடன் அனுப்பி வைப்பீர்களா? என்று கேட்டபடி மற்றைய
நேயர்களுக்கு வழிவிட்டு விடைபெறுகின்றேன்.
பரமேஷ்: இசையமைப்பது என்பது நானே தான். கோணேஷ் எனக்கு
உதவியாத்தான் இருந்தார். என்னுடைய பெயரை மட்டும் போடுவது
அவருக்கு கௌரவக் குறைவு என்ற காரணத்தினால்த்தான்
பரமேஷ்கோணேஷ் என்று போட்டேன். கோணேஷ் அவர்கள் கனடா
போனதன் பின் எந்த இசையமைப்புக்களும் செய்யவில்லை.
ஆனால், எங்களுடைய இசைத்தட்டுக்களைத் தனது வானொலியில்
போடும் போது இசை எம்.பி.கோணேஷ் என்று ஒலிபரப்பினார். நான்
அதைத் தடைசெய்தேன். பெயரைப் பிரிக்கக் கூடாதென்று. நீங்கள்
நினைப்பது தவறில்லை. நான் அப்படித்தான் இலங்கையில்
உறுதிப்படுத்திக் கொண்டிருந்தோம். 8 வருடங்களின் பின் அவர்
எங்களை விட்டுப் பிரிந்து செல்ல நானும் எனது மனைவி
மாலினியும் இணைந்தே இசைத்தட்டுக்களை நடத்திக்
கொண்டிருந்தோம். தொடர்ந்து 14 வருடங்கள் செய்தோம்.
அப்போதும் பரமேஷ்கோணேஷ் என்றே நடத்திக் கொண்டிருந்தேன்.
ஏனென்றால், திரும்பவும் அவர் என்னுடன் வந்து செய்வார் என்ற
எண்ணம் இருந்தது. அந்தப் பெயருக்கே ஒரு தனி மரியாதை
இருந்தது. எனது மனைவி வீதியில் போகும் போது கேட்பதை
வீட்டிற்கு வந்து சொல்வார். ~~என்ன நீங்கள் இருவரும் இப்படியொரு
ஒற்றுமையா?’’ என்று. வீதியில் போகும் போது பரமேஷ்கோணேஷின்
மனைவி போகுதென்றே சொல்வார்கள்.
பிரபா: உங்களுடைய புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கின்றீர்கள். 8 இலக்கம்
உங்களுக்குப் பொருந்துவதில்லை. 8 ஆவது நிகழ்ச்சியுடன் தான்
உங்கள் தம்பி கோணேஷ் உங்களை விட்டுப் பிரிந்து போனதாக
குறிப்பிட்டிருக்கின்றீர்கள். அவர் பிரிந்து போனதற்குரிய காரணத்தைக்
கூற முடியுமா?
பரமேஷ்: அவரின் திருமணத்தின் பின்பே பிரிவினை ஏற்பட்டது. என்னுடன்
மட்டுமல்ல. ஜேர்மனியில் கூட அவருக்குப் பிரச்சனைகள் இருந்தது.
நான் பிறருடன் சகஐமாகப் பழகும் போது கட்டுப்பாடு போடுவார்.
அவர் அப்படி யாருடனும் பழக மாட்டார். நான் நண்பர்களைத் தேடி
வர அவர் அந்த நட்பை உடைத்துவிடுவார். அது தான் பிரிவினை
ஏற்பட்டதற்குக் காரணம் என்று சொல்ல முடியாது. பிரிவினை ஏன்,
எப்படி ஏற்பட்டது என்று எனக்குத் தெரியாது. அவருக்குத்
தெரிந்திருக்கும்.
ரவி: உங்கள் பாடல் வரிகள் மிகவும் எனக்குப் பிடிக்கும். அக்காலத்தில்
ஓட்டோகிராப் எழுதும் போது ~~ இதயம் ஒரு வழிப்பாதை ....’’ என்ற
வரிகளை எழுதுவேன்.
பரமேஷ்: இதை நான் ஒரு இந்திய இசையமைப்பாளரிடம் கொடுக்கவிருந்தேன்.
அப்போது எனது மகளின் தோழி கூறினார். இந்தப் பாடல் வரிகள்
சில நாட்களில் திரைப்படத்தில் வரும். அதனால், இதைக்
கொடுக்காதீர்கள் என்று சொன்னார். ~~இந்தத் தெருவிளக்கணைந்தால்
மறுவிளக்கு. மணவிளக்கணைந்தால் புது வழக்கு மலர்ச்சரம்
அருந்தும் மலர் இருக்கும். மனச்சரம் அறுந்தால் எது இருக்கும். நீ
வாழுமிடம் எங்கே?’’ இந்த வரிகளைப் பார்த்த எனது தந்தையே
சந்தோஷப்பட்டார்.
( அவர் விடை பெற அடுத்த நேயர் இணைகின்றார்)
நேயர்4 அருண்விஜயராணி:
வணக்கம். நான் சிறுவயதில் ரசித்த ஒரு பாடகரை இன்று கொண்டு வந்திருக்கின்றீர்கள். உண்மையில் எனக்குச்சந்தோஷமாக இருக்கின்றது பிரபா. அவர்களுடைய பாடல்கள் எனக்கு இன்னும் மனதில் இருக்கின்றது. சாஸ்திரமுறைப்படிப் பாடல்களை விரும்பாத
காலத்தில் இவர்களுடைய பாடல்கள் மிகவும் வரவேற்பைப் பெற்றன. எளிமையான பாடல்
வரிகள் இந்திய இசைக்கு ஒப்ப இசையமைக்கப்பட்டிருந்தமை வரவேற்கப்பட்டது. வணக்கம்
அண்ணா! உங்களுடைய குரலைப் பல வருடங்களின் பின் கேட்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது. நீங்கள் பாடிய பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் ~~நான் உன்னைத் தேடும்; நேரம்‘‘ அந்தப் பாடல் உங்களுக்கு நினைவிருக்கிறதா? அந்த வரிகள் மிகவும் சிறப்பான வரிகள். ~~பூவில் மலர் தேடும் வண்டாய் நாளும் மலர் தேட வேண்டாம். நாதம் பல மீட்ட இங்கு நல்ல ஒரு வீணை போதும் எத்தனை வருடங்கள் கழித்தும் அந்த வரிகள் என்மனதில் இடம் பிடித்திருக்கின்றது. இந்தப் பாடல்கலை நீங்காளாகவேதான் எழுதுவீர்களா? அத்தனை பாடல் வரிகளும் சிறப்பானவை.
பரமேஷ்:
அனைத்துப் பாடல் வரிகளையும் நானாகவே எழுதுவேன். அன்று நான் எழுதிய பாடலுக்கு எனது மகள் பிரபாலினி பிரபாகரன் இசையமைத்திருக்கின்றார். அப் பாடலை உங்களுக்கு அனுப்பி வைக்கின்றேன். ( பாடல் வந்த பின் ) எப்படி இருக்கின்றது பாடல். அப்பாவை மிஞ்சிவிடுவார் மகள் என்று நினைக்கின்றீர்களா? நடிகர் விஜய் இன் தந்தையார் கூறியதைத் தான் இப்போது நான் நினைவு கூறுகின்றேன். அவர் வீதியில் நடந்து கொண்டு செல்லும் போது முதல் டைரக்ரர் நடந்து போகின்றார் என்பார்களாம். இப்போது வீதியில் போகும் போது விஜயின் அப்பா போகின்றார் என்பார்களாம்.
கானாபிரபா:
உங்கள் கலையுலக வாரிசு பிரபாலினி பிரபாகரன் பற்றிச் சொல்லியிருந்தீர்கள். உங்கள் காதல் மனைவி மாலினி பரமேஷ் பற்றி சிறிது கூறுங்களேன்.
பரமேஷ்: அவரை நாம் இழந்துவிட்டோம்: சங்கீத பூஷணமாக இருந்து அரங்கேற்றம் செய்த பின் அப்படியே இருந்து விடாது மெல்லிசைக் கலைஞர்களுக்கு ஒரு கௌரவத்தைக் கொடுத்தவர் இவர். நான் ஒரு சங்கீத பூஷணமாயிருந்தாலும் ஒரு மெல்லிசைக் கலைஞனை நான் திருமணம் செய்கின்றேன் என்று அவர் என்னைத் திருமணம் செய்ததை நான் என்றும் மறக்க முடியாது. அந்தக் காலத்தில் ஒரு பெண் பாடகி எடுப்பதென்றால், மிகவும் கஷ்டம். இப்படியிருக்கும் போது என்னை இவர் திருமணம் செய்தது என் இசைக்குழுவில் இருந்த எல்லோருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. ஏனென்றால், நிரந்தரமாக ஒரு பாடகி எங்களுக்குக் கிடைத்துவிட்டார் என்பதுதான். மாலினிக்கு முன் நான் நன்றி கூற வேண்டியவர்கள் ஈ.ஆர்,பிரேமா, எமிலி குரௌடர், கமலா, பமலா, விமலா போன்றோர். திருமணத்தின் பின் தான் மாலினி என்னோடு இணைந்து பாடுவதற்கு வந்தார். கர்நாடக சங்கீதம் படித்தவர்கள் மெல்லிசை பாடக் கூடாது என்று நம்பப்பட்ட காலத்திலேயே
அவர் வந்தார். நான் பல விளக்கங்கள் கொடுத்தேன். சீர்காழி கோவிந்தராஜன், சௌந்தரராஜன், ஜேசுதாஸ் போன்றோர் மெல்லிசைப் பாடல்கள் பாடவில்லையா என்றெல்லாம் உதாரணங்கள் காட்டினேன். அவர் என்னோடு இணைந்திருந்த காலத்தில் சிறப்பான பல பாடல்களைத் தந்திருந்தார். ஜேர்மனியில் நாங்கள் வெளியிட்ட சங்கீத சாம்ராஜ்யம் என்ற இசைத்தட்டில் அவருடைய பாடல்கள் இருக்கின்றன.
நேயர் 5:
வணக்கம், எம்.பி.பரமேஷ், பிரபா.
புழைய நினைவுகளை மீட்டுகிறது இன்றைய நிகழ்ச்சி. இந்தப் பரமேஷ் கோணேஷ் எல்லாம் இருந்தார்கள் இப்போது என்ன ஆனார்கள் என்று நான் பல தடவை நினைத்துப் பார்ப்பேன். இன்று அவரின் உள்ளங்கவர்ந்த நேயர்களை அழைத்து அவரை இன்று முன் கொண்டு வந்திருக்கின்றீர்கள். மிக்க சந்தோஷமாக இருக்கின்றது. நான் அவருடைய நிகழ்ச்சியை சிறீதர் தியேட்டரிலே பார்த்திருக்கின்றேன். நான் சிறுவனாக இருக்கும் போது இதைப் பார்த்தேன். இந்தக் காலத்து இளைஞர்களுக்கு இப் பாடல்கள் ஒரு கூத்தாட்டமாக இருந்தது. அந்தக் காலத்தில் திருமணவீடுகள், பிறந்தநாள் வீடுகளில் இப்பாடல்களே ஒலிக்கும். மிகவும் துள்ளிசையாகத்
துள்ளாட்டமாக இப்பாடல்கள் அமைந்திருக்கும். மிகவும் இந்தப் பேட்டியை நான் அநுபவித்துக் கேட்டேன். வணக்கம் பரமேஷ் அண்ணா! உங்கள் பாடல்களை மிகவும் லயித்துக் கேட்கும் ஒரு ரசிகன் யான். தீருகோணமலையில் ஒரு புத்தகம் வந்தது அதில் உங்களைப் பற்றிய விபரங்களைப் பார்த்திருக்கின்றேன் .நீங்கள் போடும் கண்ணாடிச்சட்டம் ஒரு ஸ்ரைலாக இருக்கும். கண்ணன் கோஷ்டியில் இருக்கும் கண்ணன் என்பவருடைய தலைமயிர் வெட்டைச் சிலர் கண்ணன் வெட்டு என்று வெட்டுவது போல் அந்தக் கண்ணாடிச் சட்டம் ஒரு ஸ்ரைலாக ஆக வந்தது. இப்படி ஒரு கலைஞரை இன்று கொண்டு வந்திருக்கின்றீர்கள் க.பிரபா சந்தோஷமாக இருக்கின்றது. ஒரு கவிஞன் பாடகன் என்பதைவிட ஒரு அறிவிப்பாளருக்குரிய குரல்வளம் இவருக்கு இருக்கின்றது.
நல்லது பிரபா! இந்த அரிய சந்தர்ப்பத்தை எனக்கு வழங்கியமைக்கும் பழைய நினைவுகளை மீட்டச்
செய்தமைக்கும் நன்றி கூறுகின்றேன்.
( நான் வாழும் இடம் எங்கே….என்னும் பாடல் ஒலிபரப்பப்படுகிறது.)
கானா பிரபா:
இந்த இனிமையான பாடலை எழுதி இசையமைத்துப் பாடியிருந்தவர் எம்.பி.பரமேஸ்
அவர்கள். நல்லது பரமேஷ் அண்ணா! உங்களுக்கு இந்த மெல்லிசை மன்னன் என்ற பட்டத்தைத் தந்தவர் யாரென்பதைக் கூறுவீர்களா? அந்த அந்த அநுபவங்களைக் கொஞ்சம் மீட்டுங்களேன்.
பரமேஷ்:
1972 ம் ஆண்டு எனக்கும் கோணேஷ் அவர்களக்கும் மகேஷ் அவர்களுக்கும் இந்தக் கௌரவ விருது வீரசிங்கம் மண்டபத்தில் வைத்து கலையரசு சொர்ணலிங்கம் அவர்கள் கொடுத்திருந்தார். இது எனக்குப் பெருமையாக இருந்தது. மெல்லிசை மன்னன் விஸ்வநாதன் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட விருதல்லவா. இவ்விருது கிடைத்தன் பின்பு தான் நான் மெல்லிசை மன்னனாக வாழவேண்டும் என்று இன்றும் புதிய பாடல்களை எழுதிப் பாடிக் கொண்டிருக்கின்றேன். என்னுடைய பிள்ளைகளையும் இசைத்துறையில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றேன். இவ்விருது கிடைத்த போது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருந்தது. ஏனென்றால், என்னுடைய மனைவி மாலினியுடைய குடும்பத்தினர் அனைவரும் அன்ற அங்கு மேடையின் முன்புறத்தில் இருந்தார்கள். அது எனக்குப் பெருமையாக இருந்தது. இதை ஒழுங்குபடுத்தியவர்களை மறந்துவிட்டேன். அவர்கள் இதை மன்னிக்க வேண்டும்.
தென்னிந்தியாவில் விஸ்வநாதன் ராமமூர்த்தி போல் எங்களுக்கு நீங்கள் இருவரும் தான் என்று எங்களுக்கு இந்த விருதை வழங்கினார்கள். கலையரசு சொர்ணலிங்கம் அவர்கள் கே.பி. சுந்தராம்பாளைக் கூட ஈழத்துக்கு அழைத்து வந்து மேடையேற்றியவர். நவாலியூரைச் சேர்ந்தவர். திரைப்படம் தயாரித்த ரகுநாதன் கூட நவாலியூரைச் சேர்ந்தவர் தான். அப்படிப்பட்ட ஒருவரிடம் இந்த விருதைப் பெற்றது பெருமையாக இருந்தது. இதைவிட பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்கள் இயல்இசைக்கலைஞர் என்ற விருதைக் கொடுத்தார். எங்களிடம் இருந்த திறமை அந்தச் சிறுவயதில் எங்களுக்குத் தெரியவில்லை. இவர்கள் எடுத்தச் சொல்லும் போது தான் எங்களுக்குத் தெரிந்தது. ஆனால், இப்போதும் நான் அந்தத் துறையை விட்டு நீங்கவில்லை. இந்த கலையரசு சொர்ணலிங்கம் அவர்களும் பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்களும் யாரும் நெருங்க முடியாத கௌரவம் பெற்றவாகள். ஆனால் எனது தந்தையாரிடம் மதிப்புக் கொண்டவர்கள். துந்தையாரின் செல்வாக்கும் இவர்களுக்கு எங்களை அடையாளப்படுத்தியிருக்கும்.
கானா பிரபா:
உங்கள் காதல் மனைவி மாலினியவர்களும் நீங்களும் இணைந்து மெல்லிசைப் பாடல்கள் ஏதாவது பாடியிருக்கின்றீர்களா?
பரமேஷ்:
அவர் ஆரம்பத்தில் சினிமாப் பாடல்களைப் பாடுவார். என்னோடு இணைந்து சங்கீத சாம்ராஜ்யம் இசைத்தட்டில் பல பாடல்கள் பாடியிருக்கின்றார். 2000ஆம் ஆண்டு அவரை நான் இழந்ததனால் தொடர்ந்தும் என்னால் அவருடன் பாடமுடியாமல் போய்விட்டது. எனவே மேடையில் அன்றி இசைத்தட்டில் நாமிருவரும் இணைந்த மெல்லிசைப் பாடல்கள் பாடியிருக்கின்றோம்.
கானா பிரபா:
மெல்லிசைப் பாடல்களுடன் இணைத்து திரைஇசைப் பாடல்களையும் நீங்கள் பாடுவீர்கள் என்று கூறியிருக்கின்றீர்கள். ஈழத்துத் திரைப்படப் பாடல்களில் உங்கள் பங்களிப்பு
எப்படியிருந்தது?
பரமேஷ்:
அதாவது ஈழத்தில் நாங்கள் வாழ்ந்த காலப்பகுதியில் 36 படங்கள் தான் வெளிவந்தது என
தம்பிஐயா தேவதாஸ் அவர்கள் எழுதிய புத்தகத்தில் இருந்துதான் அறிந்த கொண்டேன். இந்த 36 படங்களும் நாங்கள் பிரபல்யமாக முன்பே வந்துவிட்டன. இசையமைக்கும் ஒரு சந்தர்ப்பமும் கிடைத்தது. மஞ்சள்குங்குமம் என்ற படத்திற்கு இசையமைப்பதற்கு எம்.பி.பாலன் அவர்கள் அழைத்திருந்தார். அங்கு போனபோது மோகன் ரங்கனுடைய தந்தையவர்கள் திரு. முத்துசாமி அவர்கள் இசையமைத்துக் கொண்டிருந்தார். நாங்கள் கொங்கோ, போன்றவற்றை நாங்கள் பயன்படுத்துவதை அவர்கள் விரும்பவில்லை. அப்போது இசை எங்களுக்கு தொழிலாக இருக்கவில்லை. ஆனால், முத்துசாமி போன்றோருக்கு தொழிலாக இருந்தது. அதன்பின் அவரே இசையமைத்தார்.. ஆனால் இப்படம் ராணி தியேட்டரில் வெளியான போது வீரசிங்கம் மண்டபத்தில் எங்கள் இசைத்தென்றல் நிகழ்ச்சி 2 நாட்கள் வெற்றி நடைபோட்டது. அப்படத்திற்கு சென்றவர்களை விட எங்கள் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அதிகம். அதனால், அவர்கள் ஒரு பெரிய பலகையில் இந்தப் படத்திற்கு இசையமைத்தவர்கள் பரமேஷ்கோணேஷ் என்று எழுதிவிட்டார்கள். இதனால் இந்தப் படம் இன்னும் 3 நாட்கள் அதிகமாக ஓடியது. இதனைத் திரு.வாசகர் அவர்கள் இது தவறு என்று கண்டித்து விமர்சனத்தைத் பத்திரிகையில் எழுதியிருந்தார். பின்பு டென்மார்க்கில் இருக்கும் சன் அவர்கள் படத்திற்குப் பாடும்படி கேட்டிருந்தார். இவரும் அர்ஜுனன் என்பவரும் இணைந்து கலியுககாலம் என்னும் ஒரு படம் எடுத்திருந்தார். இந்தப்படம் கலியுககாலய என்னும் சிங்களப் படத்தை டப் பண்ணி எடுக்கப்பட்டது. இந்தப் படத்தில் சுஜாதா அத்தநாயக்கா அவர்களுடன் இணைந்து ~~கலியுககாலம் மனம்போல் வாழ்வு இனியொரு குறையில்லை’’ என்னும் பாடலை அவர் கேட்டதற்கமைய நான் பாடியிருந்தேன். இதனையே கே.எஸ்.ராஜா இப்பட விளம்பரத்திற்கு
பயன்படுத்தியிருந்தார். இந்தப் பாடலுக்காகவே இந்தப் படம் சிறப்பாக ஓடியது. திருகோணமலையில் மாத்திரம் 2 வாரங்கள் இப்படம் ஓடியது. எனவே இந்த ஒரு திரைப்படத்திலேயே நான் பாடியிருக்கின்றேன். திரைப்படத்தில் பாடவேண்டும் என்ற ஆசை எங்களுக்கு இருந்தில்லை. ஏனென்றால், திரைப்படத்தைவிட எங்களுடைய இசைத்தென்றல் நிகழ்ச்சி பிரபல்யமாக இருந்தது.
கானா பிரபா:
மேடை நிகழ்ச்சிக்கென்றே பல ரசிகர்களை நீங்கள் கொண்டிருக்கின்றீர்கள். இலங்கையில் பிரபல்யமாக இருந்த இசையமைப்பாளர்கள் முத்துசாமி, ரொக்சாமி இவர்களைப் பற்றிச் சொல்வீர்களா?
பரமேஷ்:
ரொக்சாமி என்பவருடைய பெயர் ஆரோக்கியசாமி. தனது பெயரை ரொக்சாமி என்று மாற்றியிருந்தார். இவர் அதிகமாக சிங்களப்படங்களுக்குத் தான் இசையமைத்திருந்தார்.
கோகிவர்த்தனி சிவராஜாவும் எஸ்.கே.பரராஜசிங்கமும் பாடிய ஒரு ஈழத்துப் பாடலுக்கு அவர் இசையமைத்திருந்தார். இது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ~~நெஞ்சினில் ஊறும் நினைவுகள் யாவும் உன் உறவன்றோ என் உயிரே’’ என்ற அருமையான பாடல். எங்களுடைய முதலாவது இசைத்தட்டு சிறப்பாக வந்ததுக்குக் காரணம் சிறந்த இசைக்கலைஞர்களை நாம் பயன்படுத்தியிந்தோம். குறிப்பாக பப்பா மிஸ்கின், கிளன் குரோனர், மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த முறைப்படி சங்கீதம் கற்ற இசைக்கலைஞர்கள் போன்றோர் காரணமாய் இருந்தார்கள். இவர்கள் எங்களுக்கு ஏற்றாற் போல் மனச்சந்தோஷமாய் தொழிற்பட்டதும் சிறப்பாய் இருந்தது. இந்த உனக்குத் தெரியுமா என்ற பாலின் முதலில் வரும் Pயைழெ இசையை இசைத்தவர் திரு ரொக்சாமி அவர்கள்தான். சில தோல்விகள் எங்களுக்கு வெற்றியாக அமைந்தன. சில இசைக்கலைஞர்கள் எங்களை விட்டுப் பிரிந்து போனார்கள். இவர்கள் போன பின் நானும் கோணேஷும் இணைந்து இசைப்பதிவுகள் செய்தோம். இதனால் பல மேடைநிகழ்ச்சிகள் எமக்கு வந்தன. அப்போதுதான் பப்பாமிக்சின் கிளன் குரோனர் போன்றோருக்கு மேலதிக பணம் கொடுத்து மேடைநிகழ்ச்சிகளுக்கு அழைத்திருந்தோம்.
ஏனென்றால், புதிய கஞைர்கள் உருவாக வேண்டும் என்பதே எனது விருப்பமாகும். மேலும் பல சிறப்பான கேள்விகள் கேட்டு என்னை மகிழ்சிப்படுத்தியிருந்தீர்கள். இந்த வேளையில் உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகின்றேன்.
கானா பிரபா:
நன்றி அண்ணா! இதேவேளை உங்கள் அடுத்த புத்தகமும் விரைவில் வெளிவரவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் உங்கள் புதிய பாடல்களையும் எதிர்பார்த்துக் காத்திருந்து நிகழ்ச்சியை நிறைவுசெய்கின்றேன்.
(தாய்நாடு விட்டுப் புலம்பெயர்ந்து நாம் வாழ்ந்து கொண்டிருந்தபேர்தும் சிறுவயதில் எமது சிந்தனையில் கலந்துவிட்ட சில நினைவுகள், இன்னும் பசுமரத்தாணி போல் மனதில் பதிந்திருக்கின்றன. அவற்றை நடைமுறை வாழ்வுச் சில நினைவுகள் தட்டி எழுபபுவதோடு அதனோடு தொடர்பு கொண்ட பல நடந்து முடிந்த நிகழ்ச்சிகளும் மூளைப்பதிவிலிருந்து எடுத்துவரபப்படுவதும் இயற்கையே. இவ்வாறே என்னைத் தட்டி எழுப்பிய நிகழ்ச்சி தாய்நாட்டில் பலரையும் தட்டி எழுப்பும் என்னும் நம்பிக்கையில்;; விரல்கள் தந்த படைப்பு இதுவாகும். மறைந்து நிற்பன என்றும் மறைந்து நிற்பதில்லை. அது மறுவடிவம் பெறுவதே முயற்சி மிக்க மனிதவாழ்வின் நியதி.)
படங்கள் நன்றி: ஈழத்து மெல்லிசை மன்னன் எம்.பி.பரமேஷ் அவர்களின் "என் இனிய இசைப்பயணங்களில்)
3 comments:
அருமை அண்ணா...! எமது ஊர் கலைஞர்களைப் பற்றி உங்கள் வாயிலாக நிறைய அறிந்து கொள்கிறோம். தொடரட்டும் உங்கள் முயற்சி.
அருமையான பதிவு பிரபா, எங்களை தாய்நாட்டுக்கே அழைத்து போய் விட்டீர்கள். திருமலையில் கோணேசர் ஆலயம், பத்திரகாளி அம்மன் கோயில் திருவிழா நடைபெறும் போதும் இவர்களின் இன்னிசை விடிய விடிய நடக்கும். அப்போது எனக்கு பத்து வயது மணலில் இருக்க இடம் கூட இல்லாமல் யாரோ ஒரு அம்மாவின் மடியில் இருந்து கொண்டு இசை நிகழ்ச்சி பார்த்ததை இன்னும் என்னால் மறக்க முடியாது. அது ஒரு இனிமையான காலம்.
அன்புடன் மங்கை
வருகைக்கு நன்றி கதியால்
ஸ்வேதா
பதிவை இணைக்கிறேன் ;)
Blogger yarl said...
அருமையான பதிவு பிரபா, எங்களை தாய்நாட்டுக்கே அழைத்து போய் விட்டீர்கள். //
மிக்க நன்றி சகோதரி
Post a Comment