Saturday, April 14, 2007
புத்தாண்டில் என் புதுத்தளம்
அன்பின் வலையுலக நண்பர்களுக்கு இனிய சித்திரைப் புதுவருட வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். இணையப் பரப்பில் தனி நபர் பக்கங்கள் வர ஆரம்பித்த காலகட்டத்தில், நானும் ஒப்புக்கு நம்தமிழ்.கொம் என்ற இணையப்பக்கம் ஆரம்பித்ததோடு சரி உருப்படியாக ஒன்றும் செய்யாமல் அந்தப்பக்கம் வீணாகப் போனது தான் மிச்சம். கடந்த ஒருவருட கால வலைப்பதிவுலகின் என் பங்கிற்கு நானும் ஏதோ செய்யமுடிந்தது என்ற தெம்பில் மீண்டும் தனியான இணையப்பக்கம் தேடிப் போய்விட்டேன்.
கொஞ்சக்காலத்துக்கு என் புளக்கர் பதிவிலும் தனித்தளத்திலும் சமகாலத்தில் பதிவுகளைக் கொடுக்கவிருக்கிறேன்.
பின்னர் முழுமையாக என் தனித்தளங்களில் பதிவுகள் வர ஆரம்பிக்கும். எத்தனை நாள் தான் புளக்கரின் முதுகில் சவாரி செய்வது?
சித்திரைப் புதுவருடப் பிறப்புக்கு என் தளத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்தவேண்டும் என்ற என்ற முனைப்பு மட்டுமே என்னிடமிருந்தது. ஆனால் அதற்கு முழுமையான செயல்வடிவம் கொடுத்துப் பேருதவி புரிந்த மதியின் செயற்பாட்டுக்கு பெரும் நன்றியறிதலை இந்த வேளை சொல்லிக்கொள்கின்றேன்.
புதுத் தளத்தின் கட்டிடவேலைகள் இன்னும் நடந்துகொண்டிருக்கின்றன. ஆனாலும் வீடு கட்டும் போதே ஓவ்வொரு கல்லாகத் தொட்டுப் பார்க்கும் பரவசம் இதிலும் இருக்கிறது.
இதோ என் தளங்கள்.
மூலப்பதிவுத்தளம்
மடத்துவாசல் பிள்ளையாரடி
உலாத்தல்
றேடியோஸ்பதி
நேசம் கலந்த நட்புடன்
கானா.பிரபா
25 comments:
பிரபா!
புதிய தள முயற்சிக்கும், புத்தாண்டுக்குமான நேசம் கலந்த வாழ்த்துக்கள்
பிரபா
புத்தாண்டு வாழ்த்துக்கள்,
புது தளமா..வாழ்த்துக்கள்.. காத்துக்கொண்டிருக்கிறோம்...
மலைநாடான், மங்கை
உங்களுக்கு என் வாழ்த்துக்கள் உரித்தாகுக. நன்றி
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
புதுத்தளம் வந்தால் சொல்லி அனுப்பவும்.புத்தளத்திற்கு எனது வாழ்த்துகள்
வாங்க துர்கா
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும் உரித்தாகட்டும். புதுத்தளம் முழுமையாக முடிந்ததும் சொல்கிறேன்.
புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்கள் இணைய சேவைகள் மேலும் ஓங்க வாழ்த்துக்கள்
கானா பிரபா புதிய தளம் ஆரம்பித்துள்ளீர்கள், புத்தாண்டு,மற்றும் புதிய தள அமைப்பு வாழ்த்துக்கள்.
பிரபா, புதுவருட வாழ்த்துக்கள்!
புதிய தளமா ... கலக்குங்க!
தமிழ்ப்பித்தன், விஜே, தென்றல்
வாழ்த்துக்களுக்கு நன்றி, உங்களுக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள்.
பிரபா
எனதும் என் குடும்பத்தினரதும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
புதுமுயற்சிக்கும் வாழ்த்துக்கள்.
அன்புடன்
சாதாரணன்
இனிய நாளில் துவங்கும் உங்கள் புதிய தமிழ் சேவை வெற்றியடைய வாழ்த்துகிறேன்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே!
வாழ்த்துக்கள் பிரபா, புதிய பிரத்தியேக தளம் வைத்திருப்பதில் உள்ள நன்மை தீமைகளை சிறிது விளக்கமாகச் சொன்னால் நல்லது. நாமும் தொடங்கலாம்:)
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
புதிய தளத்திற்க்கும் வாழ்த்துக்கள்
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்துக்கள்.
நல்ல முயற்சி
அங்கும் வந்திடுகிறோம்.
உங்கள் தனித்தளங்கள் ஒவ்வொன்றின் மேலும் உதாரணமாக மடத்துவாசல் பிள்ளையார் மேல் உள்ள Home மற்றும் About இணைப்புக்களுக்கு அடுத்த படியாக உங்களது மற்றை தளங்களின் பெயர்களையும் அவற்றிற்கான இணைப்புக்களையும் கொடுத்திடுங்கள். மூலத் தளம் வராமல் ஒவ்வொரு தளத்திலிருந்தும் உங்கள் பிற தளங்களுக்குச் செல்ல முடியும்.
கா.பி,
புத்தாண்டு வாழ்த்துக்களும் , புது இணையத்தள புகுவிழா வாழ்த்துக்களும்.
/* அதற்கு முழுமையான செயல்வடிவம் கொடுத்துப் பேருதவி புரிந்த மதியின் செயற்பாட்டுக்கு */
ம்ம்ம், மதி ஒரு சகலகலாவில்லி போலத் தான் இருக்கு!!!
நண்பர்கள் அனைவரின் வாழ்த்துக்கும் வரவேற்பிற்கும் நன்றிகள்.
சிறீ அண்ணா
புளக்கர் எந்த நேரத்திலும் பிச்சுக் கொண்டு போகலாம்.அப்படி நேரும் போது எல்லாப் பதிவுகளுமோ நீரில் எழுதிய கோலம் தான். அத்தோடு நான் எடுத்திருக்கும் இந்த இணையத் தளச் சேவை செலவு குறைந்த, வசதிகள் அதிகம் கொண்டது.
றேடியோஸ்பதியின் தொழிற்பாடு இன்னும் விசாலமாகும் போது இதன் பயன்பாட்டை முழுமையாக அனுபவிக்கலாம்.
சயந்தன்
உங்களின் மேலான ஆலோசனைக்கு நன்றி, தளமேம்பாடு இன்னும் 90% க்கு மேல் இருக்கிறது. உங்களின் உதவியும் தேவைப்படும் ;-)
வெற்றி
புளக்கர் கணக்கிலிருந்து அத்தனை ஆவணங்களையும் சேதாரமின்றி அனுப்பி மேலும் பல உதவிகளைச் செய்தார் மதி.
Good luck with everything.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் பிரபா,
வணக்கம் பிரபா .. உங்களின் புதிய தள முயற்சி சிறப்புற இந்த சின்னக்குட்டியின் வாழ்த்துக்கள்.
சர்வேசன், விருபா, சின்னக்குட்டியர்
தங்கள் வாழ்த்துக்கும் வரவேற்பிற்கும் என் நன்றிகள்.
He He He
வெற்றி சொன்னதைக் கவனித்தீர்களா..?
//ம்ம்ம், மதி ஒரு சகலகலாவில்லி போலத் தான் இருக்கு!!!//
சகலகலா வில்லியாம்..;)))
ஐயோ கொழுவி, தெய்வமே!
நான் உமக்கு என்னய்யா கொடுமை செய்தனான்? :))) இப்பிடிக் கொழுவி விடுறீரே! பெயருக்கு ஏற்ற மாதிரித் தான் செயலும் இருக்கு.:))
கொழுவி, சுட்டிக்காட்டியதற்கு நன்றி. தட்டச்சும் போது பிசகி விட்டது.
மதி, தவறுக்கு வருந்துகிறேன். தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள்.
//சகலகலா வில்லியாம்..;)))//
வெற்றி!
அப்ப அப்பிடியில்லையோ?.. என்னவோ எனக்கு சாடையான சமிசியம் இருக்குத்தான்...:))
Post a Comment