Tuesday, May 30, 2006
உலாத்தல் - ஒரு முன்னோட்டம்
"எந்தநேரமும் உலாத்தல் தான் உவனுக்கு" இது என்ர அம்மா என்னைப்பற்றி.
ஒரு இடத்தில பொறுமையாக இருக்கும் பழக்கம் எனக்குக் கிடையாது. என்னைப்பொறுத்தவரை படிப்போ, வேலையோ, வாசிப்போ, இசையோ, அல்லது நான் படைக்கும் வானொலி நிகழ்ச்சிகளோ, அடிக்கடி மாறிக்கொண்டேயிருக்கும்.
அதுபோலவே அடிக்கடி புதுசு புதுசாக இடங்களைப் பார்ப்பதும், பார்ப்பதோடு மட்டும் நின்றுவிடாது அந்த இடங்களைப் பற்றிய பதிவுகளை என் நாட்குறிப்பில் எழுதுவது கூட எனக்கு ஆனந்தம் தரும் விடயங்கள்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன் நான் சென்ற கேரள விஜயம், ஒரு முழுமையான பயணதொடரை ஆக்குவதற்கான முனைப்பை எனக்குள் தூண்டியிருக்கின்றது. யதார்த்தபூர்வமான மலையாள சினிமாப் படைப்புக்களை நான் தொடர்ந்து பார்த்துவரும் போது எம் யாழ்ப்பாணத்து வாழ்வியல் தடத்தை நினைவுபடுத்தியது தான் என் இந்தக் கேரளப் பயணத்தின் தூண்டுகோல்.
நான் சென்ற நாடுகளிலும், இடங்களிலும் வித்தியாசப்பட்டு என் பிறந்தகத்துக்குச் சென்ற திருப்தியோடு இந்தப் பயண நினைவுகளை அசைபோட்ட இருக்கிறேன்.
கேரளப் பயணத் தொடர் முடிந்ததும் இன்னும் தொடரும் பல உலாத்தல்கள்.
கண்டதும், கேட்டதும், படித்ததுமாக நான் உள்வாங்கிய விடயங்களோடு தொடந்து என் சக வலைப்பூவில் உலாத்த இருக்கின்றேன்.
இதன் முகவரி:
http://www.ulaathal.blogspot.com/
நேசம் கலந்த நட்புடன்
கானா.பிரபா
9 comments:
//"எந்தநேரமும் உலாத்தல் தான் உவனுக்கு"//ஓம், நாடு படுற பாட்டிலை:)
எண்டாலும் உங்கட அனுபவங்களையும் தாங்கோ. கேரளாவைப் பற்றியும் கொஞ்சம் தெரிஞ்சு வைப்பம்.
நல்ல தொடக்கம் பிரபா. ஆவலுடன் காத்திருக்கிறேன். ஓரிடத்தில் நில்லாமல் ஓடும் ஆறுதான் ஊரை வளப்படுத்துகிறது. உங்கள் பதிவுகளும் அப்படியே வளம் பெருக்கட்டும்.
உவன் என்ற சொல் தமிழ் இலக்கணத்தில் மிகச் சிறப்பானது. இன்று தமிழகத்தில் அது, இது, உது, அவன் இவன் உவன் என்று சொல்வது வழக்கொழிந்தாலும் ஈழத்தில் பிழைத்திருப்பது மகிழ்ச்சி தருகிறது.
நான் ஜூன் 16, 17, 18 தேதிகளில் பெங்களூரில் இருப்பேன். அப்பொழுது நீங்களும் அங்கு இருப்பீர்களா?
//என்னைப்பொறுத்தவரை படிப்போ, வேலையோ, வாசிப்போ, இசையோ, அல்லது நான் படைக்கும் வானொலி நிகழ்ச்சிகளோ, அடிக்கடி மாறிக்கொண்டேயிருக்கும்//
கலியாணம் முடிச்சு கனகாலமோ? இல்லாட்டி கொஞ்சக்காலமோ? கவனமப்பு..
அன்பு பிரபா!கேரள பயணபதிவுகளை
'உலாத்தலில்' எதிர்பார்க்கிறோம்.
வாழ்த்துக்கள்.
அன்புடன்,
(துபாய்)ராஜா.
சிறீ அண்ணா, ராகவன், கொளுவி, ராஜா தங்கள் வருகைக்கு என் நன்றிகள்.
ராகவன்,
நான் ஜூன் 10 வரை தான் பெங்களுரில் இருப்பேன்:-(
தங்களை மீண்டும் சந்திக்க முடியாதது வருத்தமாக இருக்கிறது.
கொளுவி
உம்மட கேள்விக்கு என்ர பதில் இருக்கட்டும். உம்மட பேருக்கும் உமக்கும் நல்ல பொருத்தம் இருக்கும் போல :-)
"ma blog has been updated" endu oru mail varume?????
வணக்கம் சினேகிதி
மன்னிக்கவும், தொடர்ந்து பதிவுகளை எழுதிக்கொண்டிருந்ததால் தனிமடல் போட இயலவில்லை:-(
//"ma blog has been updated" endu oru mail varume?????//
கானா பிரபா அந்தக் "கட்டத்"தைத் தாண்டி விட்டார்:)
Kanags said...
//கானா பிரபா அந்தக் "கட்டத்"தைத் தாண்டி விட்டார்:) //
ஐயோ அப்படியில்லை அண்ணா :-)
Post a Comment