2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த வெளிநாட்டு படைப்பிலக்கியம் வகைமையில் எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய பயங்கரவாதி நாவலுக்கு வழங்கப்பட்டது.
இது குறித்து அவரோடு நமது ATBC வானொலிக்காக நிகழ்த்திய நேர்காணலைக் கேட்க
https://youtu.be/qeaC_IwehUw?si=RrO1hfiBjwj9yFFJ
பேட்டியில் முன்வைத்த கேள்விகளில் சில
வன்னியிலிருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் நோக்கி வரும் ஒரு இளைஞன், அதாவது அந்தக் காலகட்டத்தில் இரண்டு உலகங்களாக இருந்த சூழலில் உங்கள் நாவல் ஆரம்பிக்கின்றது.
இதை உங்கள் நிஜவாழ்வோடு பொருத்திக் கொண்டு தான் தொடக்கினீர்களா?
பல்கலைக்கழக வாழ்வு எனும் போது பேராதனைப் பல்கலைக்கழகத்தை மையப்படுத்தி ஏராளம் புனைவிலக்கியங்கள் வந்திருக்கின்றன, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சூழல் ஒரு புது அனுபவம், ஆனாலும் ஆரம்ப அத்தியாயங்கள் ஒரு வழக்கமான பல்கலைக்கழகக் களமாகத் தொடங்கிப் பின் நீங்கள் தொடும் எல்லைகள் பரந்ததாக இருக்கிறது.
எடுத்த எடுப்பிலேயே ஒரு கடினமான களச் சூழலைக் காட்டக் கூடாது என்ற எண்ணத்தோடே தான் எழுதினீர்களா?
ஒரு தனி மனிதனின் பயணத்துக்குள் அவனுக்குள்ளும், சந்திக்கின்ற மனிதர்களுக்குள்ளும் இருக்கும் போரியல் அவலங்களை ஒட்டுமொத்த ஈழத்தமிழ்ச் சமுதாயம் அந்தக் காலப் பகுதியில் நோக்கிய அவலம் நிறைந்த போர்க்கால வரலாறாக்கி இருக்கிறீர்கள்
எழுதும் போதே இதையெல்லாம் நிறைத்துத்தான் எழுத எண்ணி இருந்தீர்களா?
இந்த நாவலின் திருப்புமுனையாக சோழனின் பாகம் வரும் போது அற்புதமான விளக்கத்தைத் தென்னைமரவடி என்ற இடப்பெயர் வரலாற்றோடு கலந்து கொடுத்திருக்கிறீர்கள். உண்மையில் கதையின் மாமூல் போக்கை மாற்றியமைத்தது அந்த இடத்தில் இதான் சோழனின் பாகத்தை வைத்தே தனியாக இன்னொரு நாவல் எழுதலாம் என்று நினைத்தேன். இதுமாதிரி இந்தக் கதைமாந்தர்களைத் தனியே பிரித்தெடுத்து விரித்துக் கதை பண்ணும் எண்ணம் உள்ளதா?
உங்களின் படைப்புகளுக்குச் சிங்களச் சமூகத்தில் இருந்து வந்த பிரதிபலிப்புகள் எவ்வாறமைந்தன?
கானா பிரபா
0 comments:
Post a Comment