ஜி.யு.போப் எனத் தமிழர்களால் அறியப்பட்ட ஜோர்ஜ் உக்லோ போப், 1820ஆம் ஆண்டில் கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவில் உள்ள பெடெக் எனும் ஊரில் பிறந்தார்.
உலகின் செம்மொழிகளில் ஒன்றாகிய தமிழ் மொழியை அவர் தனது 17வது வயதிலேயே கற்கத் தொடங்கினார். அவர் 1839ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிற்குச் சென்றார். அங்கு அவர் தமிழ் மொழியில் புலமை பெற்றார்.
திருக்குறள், திருவாசகம், நாலடியார் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தமை இவரது சிறப்பான சேவையாகும்.
இந்தியாவில் 42 ஆண்டுகள் சேவையாற்றியபின் 1881ஆம் ஆண்டில் இங்கிலாந்து திரும்பிய திரு போப், அங்குள்ள ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றி பெரும் புகழ் பெற்றார்.
கனடாவில் பிறந்த ஜி.யு.போப் கிட்டத்தட்ட 40 ஆண்டுகாலம் தமிழ்நாட்டில் தமிழ்ப் பணியாற்றினார். ( சிங்கை தமிழ் முரசு செய்திக் குறிப்பு)
இந்நிலையில், திரு போப் பிறந்து கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் பிறந்த ஊரான பெடெக்கிலேயே கடந்த வாரம் சனிக்கிழமை 15ஆம் தேதி அவரது சிலை திறந்துவைக்கப்பட்டது.
ஜி.யு.போப் அவர்களது திருவுருவச் சிலை முல்லைதீவு ராசாந்தனால் வடிவமைக்கப்பட்டு அங்கே கலைக்கூடத்தில் காட்சிக்கும் வைக்கப்பட்டிருக்கிறது.
கனேடியத் தமிழ்ப் பேரவையின் முன்னாள் தலைவரும் ஜி.யு.போப் சிலை திறப்புக் குழுவின் தலைவருமான சிவன் இளங்கோ அவர்களை இந்த முன்னெடுப்பு குறித்த விபரங்களை ஒரு செவ்வியாக எடுத்திருந்தேன். அத்தோடு நிகழ்வினை ஒளிப்பகிர்வாக Krishna Live வழி திரு தென்புலோலியூர் கிருஷ்ணலிங்கம் அவர்கள் வழங்கியிருந்தார். அவரின் அனுமதியோடு குறித்த நிகழ்வினையும் இச் செவ்வியோடு இணைத்துப் பகிர்கிறேன்.
https://www.youtube.com/watch?v=KxvzqyySye0
அன்புடன்
கானா பிரபா
0 comments:
Post a Comment