"மொரீஷியஸ் அரசு
தமிழை மூன்றாம் இடத்துக்கு மாற்றி நோட்டுகளை அச்சிட்டார்கள். ஆனால் காலா,
காலமாக நிலவிவரும் நடைமுறையை மாற்றக் கூடாது, இது வரலாற்றைக்
களங்கப்படுத்தும் செயல் என்று கண்டனங்களைத் தெரிவித்ததோடு அங்குள்ள
தமிழர்களோடு மொரீஷியஸ் பூர்வீகப் பிரஜைகளும் போராடினார்கள். இதன் விளைவாக,
அச்சிட்ட அத்தனை பண நோட்டுகளையும் முடக்கிவிட்டு, வழமை போல பழைய முறையில்
பண நோட்டுகளை தமிழை இரண்டாம் இடத்தில் வருமாறு செய்து அச்சிட்டு
வெளியிட்டிருக்கிறார்கள்" - பேராசிரியர் உமாதேவி அழகிரி
மொரீசியஸ் நாட்டிலிருந்து சிட்னி முருகன் சைவ நெறி மாநாட்டிற்கு வந்திருந்த திருமதி உமா தேவி அழகிரி அவர்களுடன் உரையாடும் வாய்ப்புக் கிட்டியது. மொரீசியஸ் நாட்டில் தமிழர் வாழ்வு , இந்து மதத்தின் பரம்பல், என பல் வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டார் பேரா. உமாதேவி. குறிப்பாக இன்றைய தலைமுறைத் தமிழராக அங்கு பிறந்து வாழும் அவர் தன்னுடைய பேட்டி முழுதும் சுத்தமான தமிழில் பேசியது பெரும் வியப்பை அளித்தது.
பேட்டியின் முழுமையான ஒலிவடிவத்தைக் கேட்க
பேரா. உமாதேவி அழகிரியின் பேட்டியிலிருந்து சில பகுதிகள் எழுத்தில்
கானா பிரபா- குங்குமப் பொட்டோடும், காஞ்சிபுரம் பட்டுச் சேலையோடும் உங்களை பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது......
உமா - ரொம்ப மகிழ்ச்சி நான் முதன் முறையாக ஆஸ்திரேலியாவுக்கு வந்திருக்கிறேன் இது ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு.நான் மொரீசியசில் பிறந்திருந்தாலும் கூட , சென்னைதான் எனக்குப் பிடிக்கும். அதனால் அடிக்கடி நான் சென்று வருவேன். மொரீசியஸ் தீவில் சுமார் 70,000 தமிழர்கள் இருக்கிறார்கள். மொத்த சனத்தொகையில் 8 விழுக்காட்டினர் தமிழர்கள். இந்தியப் பெருங்கடலின் சின்ன தீவு தான் மொரீசியஸ். எரிமலையில் இருந்து உருவான இந்த தீவு. இயற்கை வளம் கொண்டதாக இருக்கிறது. பல்லின மக்களும் இங்கு வாழ்ந்தாலும் சுமார் 275 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சியின் போது தமிழகத்தின் திருநெல்வேலி, தஞ்சாவூர், சித்தூர் போன்ற பகுதிகளில் இருந்து மூன்று கட்டங்களாக இங்கு தமிழர்கள் குடியேறினார்கள்.

கானா பிரபா - உங்கள் குடும்பத்தினர் எந்த ஊரில் இருந்து வந்தார்கள்?
கானா பிரபா - நீங்கள் மூன்றாம் தலைமுறை ஆனால் தூய தமிழில் அழகாக உரையாடுகின்றீர்கள். இங்கே புகலிடச் சூழலில் இரண்டாம் தலைமுறையே தமிழ் கலாசாரத்தை பேண சிரமப்படுகிறோம். உங்கள் கணவரின் குடும்பம் பற்றி?
கானா பிரபா - சுத்தமான தமிழில் பேசுறீங்க, மொரிசீயசில் தமிழ் கல்வி எப்படி உள்ளது?
கானா பிரபா - பாடசாலையைத் தாண்டி தமிழர்கள் தங்களுக்குள் தமிழில் பேசிக் கொள்கிறார்களா?
கானா பிரபா - மொரீசியஸ் நாட்டு பண நோட்டில் ஒரு தமிழர் முகம் உள்ளது அது யார்?
உமா
- இது ஒரு வரலாற்றுக் குறிப்பு. மொரீசியஸ் வளர்ச்சிக்கு தமிழர்கள் அளித்த
கொடையை அவர்கள் மறுக்கவில்லை.அரங்கநாதன் சீனிவாசன் என்கிற மூத்த தமிழ்
தலைவரின் படம் அது அவர் தமிழர்களின் வாழ்வியல் மேம்பாட்டிற்காக உழைத்தவர்.
மொரீஷியஸ்
நாட்டுப் பணத்தில் தமிழ் இரண்டாம் மொழியாக இருந்து வருகின்றது. ஆனால்
சமீபகாலத்தில் தமிழர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் மொரீஷியஸ் அரசு
தமிழை மூன்றாம் இடத்துக்கு மாற்றி நோட்டுகளை அச்சிட்டார்கள். ஆனால் காலா,
காலமாக நிலவிவரும் நடைமுறையை மாற்றக் கூடாது, இது வரலாற்றைக்
களங்கப்படுத்தும் செயல் என்று கண்டனங்களைத் தெரிவித்ததோடு அங்குள்ள
தமிழர்களோடு மொரீஷியஸ் பூர்வீகப் பிரஜைகளும் போராடினார்கள். இதன் விளைவாக,
அச்சிட்ட அத்தனை பண நோட்டுகளையும் முடக்கிவிட்டு, வழமை போல பழைய முறையில்
பண நோட்டுகளை தமிழை இரண்டாம் இடத்தில் வருமாறு செய்து அச்சிட்டு
வெளியிட்டிருக்கிறார்கள்.
கானா பிரபா - மொரீஷியஸ் நாட்டில் நிலவும் தமிழர்களின் பண்பாட்டு நிகழ்வுகள் என்ன?
உமா - தைபூச காவடி, மகாசிவராத்திரி, தீபாவளி, போன்ற பண்டிகைகள் அங்கு கொண்டாடப்படுகின்றன. அதுவும் தை பூச காவடி என்பது மிகச்சிறப்பான பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.அந்நாளில் அங்கு பொது விடுமுறை என்பதால் பல்லின மக்களும் தை பூச காவடி எடுப்பார்கள். கிறிஸ்தவர்கள் கூட காவடி தூக்குவார்கள்.
கானா பிரபா - உங்கள் பணிகளில் நீங்கள் பெருமைப்படும் விஷயம் என்ன?
உமா - மொரீஷியஸ் தமிழச்சி என்ற வகையில் இந்த தலைமுறையினருக்கு தமிழ் கற்றுக் கொடுக்க விரும்புவதையே நான் பெருமையாக நினைக்கிறேன். அங்குள்ள பள்ளிகளில் தமிழ் படிக்கும் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை உருவாக்குகிறேன். இன்னொரு பக்கம் மொரிசியஸ் தமிழர்களின் வரலாற்றை, மொழியை,பண்பாட்டு நகர்வை ஆய்வு செய்து ஆவணப்படுத்துகிறேன் இதுதான் நான் பெருமைப்படும் விஷயம்.
மேற்கண்ட பேட்டியை ஒலிவடிவில் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காகவும், எழுத்துப் பதிப்பை தமிழ் அவுஸ்திரேலியன் சஞ்சிகைக்காகவும் பகிர்ந்து கொண்டேன்.
0 comments:
Post a Comment