
வானொலி கேட்கும் அனுபவம் என்பது தொட்டிலில் இருந்து என் சுடுகாடு வரை ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு வடிவத்தில் இருக்கும் போல. என் பதின்ம வயசுக்காலம் வரையான வானொலி கேட்பு அனுபவங்களை முன்னர் ஆகாச வாணியும் விவித் பாரதியும்....! என்ற பதிவில் சொல்லியிருக்கிறேன். இரண்டாவது கட்ட அனுபவத்தில் நானும் ஒரு ஒலிபரப்பாளனாக, நிகழ்ச்சித்தயாரிப்பாளனாகவும் இணைந்து பணியாற்றக் கூடிய வாய்ப்புக்கிட்டியிருக்கின்றது. கிட்டத்தட்ட 12 வருஷங்கள் கடந்த ஒலிபரப்பு அனுபவங்கள் சுகமும் சவாலும் நிறைந்த கலவையாகத் தான் பயணிக்கிறது. அது ஒருபுறமிருக்க, வானொலி நேயராகத் தொடரும் பயணத்தின் இன்னொரு பரிமாணத்தைத் தான் இங்கே சொல்ல வந்துள்ளேன். அதுதான் இணையவானொலிகள் என்றதொரு பரிமாணம்.
இணைய வானொலிகளில் தமிழ்ச்சேவை செய்து வரும் வானொலிகள் பல இன்னும் இந்த செல்பேசியூடான வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டும். நான் கேட்டவரை THR ராகாவின் ஒலிபரப்பின் ஒலித்துல்லியம் மகா அருமை. சிங்கப்பூர் வானொலியையும் முதலிடத்தில் சேர்த்துக் கொள்வேன் ஆனால் இடையிடையே வரும் மக்கரை சரிசெய்து

இப்போதெல்லாம் செல்பேசி நிறுவனங்கள் செல்போனில் பாவிக்கும் இணையப் பாவனையைத் தாராளமாக்கியிருக்கின்றன. எனவே அதிக கட்டணம் ஆகும் என்றெல்லாம் பயந்து பயந்து வானொலியைக் கேட்க வேண்டிய காலமும் மெல்ல மறைகிறது.
காதுக்குள்ளே இன்ரநெற் றேடியோவைக் கேட்டுக் கொண்டே பதிவு எழுதுவதும் கூடச் சுகம் சுகமே... ;-)
13 comments:
//எதிர்பாராத நேரத்தில் த்ரில்லாக வந்து பாயும் பாடலைக் கேட்கும் அனுபவமே தனிதான்/
இந்த ஒரு காரணம் மட்டுமே இன்றும் கூட வானொலி என் கொண்டாட்டத்துக்குரிய ஆகச்சிறந்த மீடியாவாக இருக்கின்றது பாஸ் :)
//ஒலிக்கட்டுப்பாட்டுக் கருவியில் (control Panel) உள்ள ஒலிக்கட்டுப்பாட்டு முள்ளை மெல்ல மெல்ல மெதுவாகக் குறைத்து முடிக்கும் போது தான்//
சில சமயங்களில் எனக்கு கோவம் வந்துடும்! ஆஸ்திரேலியா வானொலி 1ல தித்திக்கும் வெள்ளி பண்ற ஆளும் இப்படி செய்வாரு! அவுரு மட்டும் என் கையில சிக்கட்டும் அப்ப இருக்குடி ராசா :)
அட! மீ டூ ஸேம் ஸேம்! நோக்கியா இண்டர்நெட் ரேடியோ மூலமாத்தான் பல வானொலிகளை ரசிச்சு கேக்கமுடியுது ! என்ன இன்னும் ஊர்ல ஒலிபரப்பாகுற வானொலிகளும் இணையத்தில் கிடைக்கப்பெற்றால் இன்னும் சிறப்பாக இருக்கும் !
பிரபா லண்டன் லங்காசிறிfm தான் சிறப்பானது இது என்கருத்து.
வருகைக்கு நன்றி ஆயில்யன் ;)
உங்கள் கருத்துக்கு நன்றி நேசன்
Cool 94.7 ஆசியாவிலேயே சிறந்ததாகத் தேர்வு செய்யப் பட்டுள்ளது உண்மையா,
இதில் என்ன சூட்சுமம்.
இந்தப் பதிவில் வருவது போன்று லொள்ஸ் தங்கள் நிலையம் செய்வதுண்டா. :)
http://ibnuzubairtamil.blogspot.
com/2011/01/blog-post_17.html
என்ன இருந்தாலும் அந்தக் கால இலங்கை வானொலிக்கு
ஈடாக எதுவும் கிடையாது. இஸ்லாமிய நிகழ்ச்சிகளும் சரி
பாட்டுக்குப் பாட்டு,திரை விருந்து போன்ற சினிமா நிகழ்ச்சிகளும் சரி,
காலை நேரப் 'பிறந்த நாள் இன்று பிறந்த நாள் நாம் பிள்ளைகள்
போலே தொல்லைகள் இல்லா மலர்ந்த நாள்' அப்ப்பப்பா,அம்மம்மா என்று
உறவுகளோடு ....அப்பப்பா.........
\\பாடலை ஒலிபரப்பும் போது சட்டென்று வெட்டி விடுவது போலத் துண்டாடுவது செவிட்டில் பளாரென அறைவது போலத் துண்டாடுவதுடுவது உயிர்க்கொலைக்குச் சமானமானது என்று நினைப்பதுண்டு//
உண்மையிலும் உண்மை..
நீங்க சொல்ற அடுத்த ஒலிக்குறைப்பு என்ன கருணைக்கொலையா..
அய்யா சாமி பாட்டைப்போடுங்கய்யா முழுசா..:))
அழகாக பகிர்வுல ;)
உங்கள் நிகழ்ச்சி எல்லாம் நேரடியாக கேட்பேன்னு நானும் நினைச்சுக்கூட பார்க்கவில்லை ! ;)
\\பாடலை ஒலிபரப்பும் போது சட்டென்று வெட்டி விடுவது போலத் துண்டாடுவது செவிட்டில் பளாரென அறைவது போலத் துண்டாடுவதுடுவது உயிர்க்கொலைக்குச் சமானமானது என்று நினைப்பதுண்டு\\
இந்த மாதிரி அதிக உயிர்க்கொலைகள் இங்க நடக்கும் தல...கூடவே இசையமைத்தவர் பெயரை பாடியதாகவும் பாடியவர் பெயரை மாற்றியும் சொல்லும் போது நேராக போயி ஒங்கி செவிட்டில் பளாரென அறையலாம் போல இருக்கும் ;))
வாங்க அரபுத்தமிழன்
அந்த லொல்ஸ் எல்லாம் கிடையாது ;0, இலங்கை வானொலியும் தன் சுயத்தை இழந்து பலகாலமாயிற்று :(
வாங்க முத்துலெட்சுமி
ஒலிக்குறைப்பு தவிர்க்க முடியாதது, நிகழ்ச்சி முடிய 3 நிமிடம் இருக்கும் போது என்ன பண்ணலாம் ? ;)
me the fan of anthakala radio programmes.
இப்ப எஃபெம்க்கள் போர் பாஸ்
வருகைக்கு நன்றி தல கோபி ;)
வணக்கம்! தம்பி!
உம்மட
எடுப்புக்கும், சாய்ப்புக்கும்- நான்
(படத்துக்கும்,எழுத்துக்கும்)
எடுபட்டுப் போய்க்
கனகாலம்.
காலம் பிந்தினாலும் காரியமில்லை.
நல்லதை, நயத்தைப் பற்றி
ஒண்டும் பாராட்டாமல் பறையாமல்
கிடக்கிறது வடிவில்லை தானே?
வளரட்டும் உம்மட
எடுப்பும் சாய்ப்பும்.
பாட்டும்,பூராயமும்(பேட்டியும்).
அன்புடன்
ந.குணபாலன்
Post a Comment