சொந்த நாட்டில் வாழ்வைத் தொலைத்து, கடல் கடந்த நாடுகளுக்கு பாதுகாப்பான வாழ்வைத் தேடி ஓடி அடைக்கலம் புகுந்த ஈழத்தமிழ்ச்சமுகம் கடந்த கால் நூற்றாண்டு காலமாக தமது புலம்பெயர் வாழ்வைத் தொடர்ந்து வருகின்றது. இந்த நிலையில் நம் புலம்பெயர் சமூகத்தை எட்ட நின்று பார்ப்பவனுக்கு அக்கரைப் பச்சையாய் இருக்கும். ஆனால் அனுபவித்துப் பார்த்தால் எப்படியிருக்கும் என்பதை இலக்கியமாகவும், திரைப்படங்களாகவும் படைத்திருப்பதோடு பாடல்களாகவும் வந்து புலம்பெயர் வாழ்வியலின் யதார்த்தத்தைக் காட்டியிருக்கின்றன. அப்படியானதொரு படைப்பு இங்கிலாந்தின் லூசியம் பகுதி நண்பர்களால் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் வெளியான "பூபாளம்" என்ற தமிழ் ரெகே பாடல்களாக வந்து தனித்துவமான படைப்பாக இன்றும் இருக்கின்றது. இந்தப் படைப்பு வந்து இருபது வருஷங்கள் கடந்தும் புலம்பெயர் வாழ்வியலின் இன்றைய சூழலை இது காட்டுவதும் கசப்பான உண்மை. அந்த வகையில் லூசியம் நண்பர்களின் இந்தப் பாடல்களை எழுத்தாக்கியும், ஒலிவடிவிலும் இங்கே பகிர்கின்றேன்.
அன்னம்மாக்கா பொன்னம்மாக்கா ஓடியாருங்கோ
தாயகத்தில் இருந்து பெற்றோரைத் தம்முடன் இருக்க அழைத்து வந்து, பிள்ளை பராமரிப்பாளர்களாகவும், வீட்டுக்காவல்காரகளாகவும் அமைத்த பெருமை கூட புலம்பெயர் வாழ்வினைச் சாரும். அந்தச் சூழலில் ஒரு புலம்பெயர் மூத்த குடிமகள் பாடும் பாடல் இப்படி இருக்கும்.
அன்னம்மாக்கா பொன்னம்மாக்கா ஓடியாருங்கோ
இந்த நாட்டில் எங்கள் கதை கேட்டுப் பாருங்கோ
சீமையிங்கு சொர்க்கமென்று யோசிக்காதைங்கோ
சீரழிஞ்ச வாழ்க்கையிது சொல்லக் கேளுங்கோ
அன்னம்மாக்கோய்.....அன்னம்மாக்கா பொன்னம்மாக்கா ஓடியாருங்கோ
இந்த நாட்டில் எங்கள் கதை கேட்டுப் பாருங்கோ......
மூத்தவன் முருகன் முழு நாளும் வேலை
இளையவன் ராசன் ராப்பகல் வேலை
நடுவிலான் நகுலன் அங்குமிங்கும் வேலை
எப்பவுமே நித்திரை தான் எங்களுக்கு வேலை
அன்னம்மாக்கோய்.....அன்னம்மாக்கா பொன்னம்மாக்கா ஓடியாருங்கோ
இந்த நாட்டில் எங்கள் கதை கேட்டுப் பாருங்கோ......
மரக்கறி மட்டின் கறி பிறிஜ்ஜினில் பல நாளில்
சூடு காட்டிச் சாப்பிட்டு என் நாக்குச் செத்துப் போச்சுதடி
சனி ஞாயிர் தும்மலடி ஹீற்றராலே தலையிடி
உயிர் வாழ இங்கு வந்து உருமாறிப் போனேனடி
அன்னம்மாக்கோய்.....அன்னம்மாக்கா பொன்னம்மாக்கா ஓடியாருங்கோ
இந்த நாட்டில் எங்கள் கதை கேட்டுப் பாருங்கோ......
பேரப்பிள்ளை பலரடி பெயர்களோ புதிதடி
ஆசையாகக் கதைத்திட இங்கிலீசு வேணுமடி
அந்தரத்தில் வாழ்க்கையடி எவருமே பிசியடி
உண்ணாணைத் தான் சொல்லுறேண்டி
எங்கள் வாழ்க்கை போச்சுதேடி
அன்னம்மாக்கோய்.....அன்னம்மாக்கா பொன்னம்மாக்கா ஓடியாருங்கோ
இந்த நாட்டில் எங்கள் கதை கேட்டுப் பாருங்கோ......
குளிருக்கு விஸ்கியடி வெயிலுக்கு பியறடி
குறுக்காலை போவார் கண்டதுக்கும் தண்ணியடி
ஆணென்ன பெண்ணென்ன எதுக்குமே சமமடி
இங்கத்தையன் டான்ஸ் தான் எங்களுக்கு ஸ்ரைலடி
அன்னம்மாக்கோய்.....அன்னம்மாக்கா பொன்னம்மாக்கா ஓடியாருங்கோ
இந்த நாட்டில் எங்கள் கதை கேட்டுப் பாருங்கோ......
கலைக்கூடப் பள்ளிக்கூடக் கொமிற்றிகள் பலதடி
கூட்டத்தையே கேள்வி கேட்டுக் கண்டபடி கெடுபிடி
படிச்சவர் பழையவர் எனப்பல பேரடி
பதவிக்கும் பெயருக்கும் போட்டி போட்டு அடிபிடி
அன்னம்மாக்கோய்.....அன்னம்மாக்கா பொன்னம்மாக்கா ஓடியாருங்கோ
இந்த நாட்டில் எங்கள் கதை கேட்டுப் பாருங்கோ......
கூழ் தன்னோ கஞ்சி தன்னோ குடிச்சிடப் போறேனடி
வயல்வெளி வரம்பிலே நடந்திட வாறேனடி
கொண்ட நாடு விட்டு வந்து கந்தறுந்து போனோமடி
கப்பலிலோ வள்ளத்திலோ முத்தம் வரப்போறேனடி
அன்னம்மாக்கா பொன்னம்மாக்கா ஓடியாருங்கோ
இந்த நாட்டில் எங்கள் கதை கேட்டுப் பாருங்கோ
சீமையிங்கு சொர்க்கமென்று யோசிக்காதைங்கோ
சீரழிஞ்ச வாழ்க்கையிது சொல்லக் கேளுங்கோ
ஐயோ ஐயோ இதுதானே லண்டன்
தாயத்தில் இருந்து வந்ததும் நான்கு, ஐந்து பேராக ஒரே அறையில் தங்கிப் படிப்பதும், வேலை செய்வதும், களியாட்டம் செய்வதுமான இளையோர் வாழ்வியல் இப்படி இருக்கும்.
ஐயோ ஐயோ இதுதானே லண்டன்
இருபது வருசமாச்சு இங்கென்ன கண்டன்
ஒண்டு ரண்டு மூண்டு நாலு அஞ்சு ஆறு ஏழு
எட்டு மணி ஆகிப்போச்சு பள்ளிக்கூடம் ஓடு
ஓடிப்போன களைப்புத் தீர Pubக்கும் ஓடு
College fees கட்ட வேணும் வேலைக்கும் ஓடு
டேய் எழும்படா பள்ளிக்கூடம் போகேல்லையே
காலமை தான் வேலையால் வந்தனான் அண்ணை
Assignment செய்து முடிக்கோணும் எண்டாய்?
ஆரும் எழுதுவாங்கள் பார்த்தெழுதலாம்
ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ இதுதானே லண்டன்
இருபது வருசமாச்சு இங்கென்ன கண்டன்
பிஎஸ்ஸி, எம் எஸ் ஸி, ஏஎச்ஸி, ஏபிசிடி
கஷ்டப்பட்டுப் படித்தவர்கள் வேலையின்றி பெற்றோல் சைற்றில்
காசு பணம் வேணுமய்யா என்ன செய்வோம் இந்த நாட்டில்
யோசியாதை நல்ல காலம் சனிமாற்றம் அடுத்த வீக்கில்
தம்பி ! என்ன இன்ரவியூவுக்கு வந்தது போகேல்லையே?
போகேல்லையண்ணை
ஏன்
பயமாக்கிடக்குது, அதுசரி நீங்கள் இன்ரவியூவுக்குப் போனீங்கள் என்ன மாதிரி?
என்ன வழமையான "சொறி" எண்டு எழுதித்தாறது தான்
நீங்கள் சம்பளம் குறைஞ்சாலும் பட்டையளோட வேலை செய்திருக்கலாம்
ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ இதுதானே லண்டன்
இருபது வருசமாச்சு இங்கென்ன கண்டன்
போன் பில், காஸ் பில், கரண்ட் பில், றேட் பில்
வீடு வாசல் வாங்கினோர்கள் நிக்கிறார்கள் றோட்டில்
காசு கூடிக் குடிப்பவர் வாழ்கிறார்கள் டோலில்
புட்டியோடு அலைந்தவர் வாழ்கிறார்கள் சிக்கில்
என்ன உவன் புலவன் குடியை விட்டுட்டானாம்
அண்ணை இவன் சின்னவனுக்கு ஊரிலை சீதனத்தோடையெல்லே கலியாணம் பேசுகினமாம்
அவன் முந்தியொரு பின்லண்ட்காறியோடை எல்லே இருந்தவன்?
அதுக்கு முதல் அவன் ஒரு வெள்ளையையும் வச்சிருந்தவன் அண்ணை
ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ இதுதானே லண்டன்
இருபது வருசமாச்சு இங்கென்ன கண்டன்
இடியப்பம் புட்டு கருவாடு கத்தரிக்காய்
தமிழ்ப்படம் புதுப்படம் கமராக் கொப்பி தானிருக்கு
புதுப்புது சைசில போத்தில் கள்ளு வந்திருக்கு
பள்ளிக்கூடப் பெடியளுக்குப் பாதிவிலை போட்டிருக்கு
அண்ணை கருவப்பிலை இருக்குதோ?
என்னண்ணை உந்தப் படக்கொப்பி முழுக்க எழுத்துகள் குறுக்க மறுக்கை ஓடுது
ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ இதுதானே லண்டன்
இருபது வருசமாச்சு இங்கென்ன கண்டன்
கொலிச் பார்ட்டி விலேச் பார்ட்டி டிஸ்கோ பார்ட்டி
டான்ஸ் ஆடப் போவார் இன்னொன்றைக் கூட்டி
குடும்பியும் தோடும் குளு குளு ஆட்டமும்
குறுக்காலை போவார் குழப்பத்தில் முடிப்பார்
என்ன உவன் ஜெயலலிதா காப்பிலி போய்பிறண்டோட நிக்கிறாள்?
ஏன் நீங்கள் இனத்துக்கொண்டு வச்சிருக்கலாம் அவளவை ஆசைக்கொண்டு
வாச்சிருக்கக் கூடாதே?
தம்பி! நாங்கள் டிஸ்கோ ஒண்டு நடத்துறம் றிக்கட் எடுங்கோவன்
மிச்சக்காசு முழுக்க அங்கை ஊரிலை கஷ்டப்பட்ட ஆட்களுக்குத் தான் அனுப்பப் போறம்
இதிலை எங்கை அண்ணை மிச்சம் வாறது?
ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ இதுதானே லண்டன்
இருபது வருசமாச்சு இங்கென்ன கண்டன்
விம்பிள்டன் , ஹம்மர்ஸ்பீல்ட், ஸ்கர்ச்போர்டில் படமாம்
விசிலடி தடியடி நடக்கின்ற இடமாம்
புளியடி வேம்படி பெட்டையாலை சண்டையாம்
புதுப்புதுக்காறிலை பொல்லுத் தடி வந்ததாம்
என்ன தம்பி ஒரு படம், பாட்டுக் கச்சேரி
நிம்மதியாப் பார்க்கேலாமைக் கிடக்குது
ஓமண்ணை தாய்தேப்பன் காணியைப் பூமியை
வித்து அங்கையிருந்து அனுப்பி விட
பெடியள் பொறுப்பில்லாம நடக்குதுகள்
எல்லாரும் அப்பிடியில்லை
இன்சினியர், சொலிசிற்றர், எக்கவுண்டன், டாக்குத்தர்
எண்டு நம்மை மறந்திட்ட எங்கள் சில தமிழராம்
அவர் வழி பெயர் சொல்ல தமிழ் தெரியாப் பிள்ளையளாம்
தாய்மொழியை மாற்றிடலாம் தோல் நிறத்தை மாற்றலாமோ
என்ன உவர் செல்லையற்றை பிள்ளையள்
பாட்டுக்கச்சேரி அரங்கேற்றமாமே
அவையள் தமிழ் கதைக்கமாட்டினமே
அவையளுக்கும் விருப்பமில்லையே
தமிழ் தெரியாத பிள்ளையளுக்கு
தமிழ்க்கலையள் என்னத்துக்கு?
ஓ அது இப்ப பிறெஸ்டிஜ் இஷ்ஷுவோ
ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ இதுதானே லண்டன்
இருபது வருசமாச்சு இங்கென்ன கண்டன்
டேய்! குடிச்சுப் போட்டு உங்களுக்கு வெறியெண்டாப் போய்ப் படுக்கிறதை விட்டுட்டு
என்னடா பாட்டு வேண்டிக்கிடக்குது?
டேய் போய் படுங்கடா
I am a Tamil, I can Speak Tamil
புலம்பெயர்ந்த வாழ்வியலில் அடுத்த தலைமுறைத் தமிழ்ப்பிள்ளைகளை விட தமிழைப் புறக்கணிக்கும் கைங்கர்யத்தை அதிகம் செய்வது தாயகச்சூழலில் வாழ்ந்து கழித்துப் புலம்பெயர்ந்த உறவுகளே. அந்தக் கொடுமையை இந்தச் சிறுவன் சொல்லிப் பாடுகின்றான் இப்படி
I am a Tamil, I can Speak Tamil
I wonder why some don't speak Tamil
இங்கிலண்டில் பிறந்தேன் இங்கிலீசு கதைப்பேன்
எங்கு நான் வாழ்ந்தாலும் அங்கு தமிழ் கதைப்பேன்
எம் தமிழ்ப் பெற்றோர் வீட்டை தமிழ் கதைப்பார்
நான் தமிழ் கதைக்க நல்ல வழி வகுத்தார்
I am a Tamil, I can Speak Tamil
I wonder why some don't speak Tamil
இப்ப வந்த தமிழரும் எங்கள் தமிழ் மறந்தார்
இந்த நாட்டு வாழ்க்கையில் எங்கள் நிலம் மறந்தார்
I am a Tamil, I can Speak Tamil
I wonder why some don't speak Tamil
ப்ரென்சும் ஜேர்மனும் பியூச்சரில் ஹெல்ப்பாம்
எம் தமிழ் மறந்து எத்தனையோ மொழிகள் கஷ்டப்பட்டுப் படிப்பார்
எங்கள் தமிழ் மட்டும் இல்லையென்று சொல்வார்
I am a Tamil, I can Speak Tamil
I wonder why some don't speak Tamil
மிருதங்கம் வீணை இங்கிலீசில் படிப்பார்
தமிழ் தன்னைப் படிக்க கொஞ்ச நேரம் ஒதுக்குவார்
எங்கள் மொழி கதைத்தால் தரமென்ன குறைவோ
ஆதியான மொழி எங்கள் தமிழென்று தெரியுமோ
I am a Tamil, I can Speak Tamil
I wonder why some don't speak Tamil
அப்பு, ஆச்சி, ஆன்ரி ஓடியாருங்கோ
"தம்பி காசு அனுப்புவான் ஆறுதலா அவனுக்கு ஒரு கலியாணம் கட்டி வைக்கலாம்" இப்படியான மனப்போக்கு கொண்ட பெற்றோர் தாயகத்தில் இருக்கையில் முப்பது கடந்து நாற்பதை எட்டிப்பார்க்கும் நரையோடு இருக்கும் இளைஞனின் தவிப்பு பாடலாக இப்படி:
தபேலா இசையுடன்
அப்பு, ஆச்சி, ஆன்ரி ஓடியாருங்கோ
எனக்கொரு கலியாணம் செய்து தாருங்கோ
காசு பணம் உழைக்கலாம் யோசிக்காதேங்கோ
குடும்பத்துக்கேற்ற பெண்ணைப் பாருங்கோ
பொறு தம்பி பொறு தம்பி இப்பதானே முப்பத்தஞ்சு
அப்பு, ஆச்சி, ஆன்ரி ஓடியாருங்கோ
முருகற்ற மூத்ததுக்கு மொன்றியல்ல பெடியன்
கனகற்ற கடைசிக்கு ரண்டு மூண்டு போய்(boy) பிறண்ட்
மயிலற்ற மகளுக்கு கியூவில பெடியள்
ஒருத்தி கூட மிச்சமில்லை, இங்கு நானும் என்ன செய்ய
பொறு தம்பி பொறு தம்பி இப்பதானே முப்பத்தஞ்சு
அப்பு, ஆச்சி, ஆன்ரி ஓடியாருங்கோ
கந்தற்ற மகளின்ர குறிப்பைக் கொஞ்சம் பாருங்கோ
கொழுந்தற்ற மச்சாளிற்ற கதையை மெல்லப் போடுங்கோ
குருவற்ற கெளரிக்கு வயதென்ன கேளுங்கோ
பிளீஸ்..பிளீஸ்..பிளீஸ்...பிளீஸேதுஞ்செய்யுங்கோ
பொறு தம்பி பொறு தம்பி இப்பதானே முப்பத்தஞ்சு
அப்பு, ஆச்சி, ஆன்ரி ஓடியாருங்கோ
காலமைல வேலை, கஷ்டப்பட்டுச் செய்யிறன்
கண்டறியாப் படிப்பில கனகாலம் போக்கிப் போட்டன்
கறி புளி சமைக்கத் துணையொண்டைத் தேடுறன்
காத்திருந்து காத்திருந்து கோட்டை விட்டுட்டன்
பொறு தம்பி பொறு தம்பி இப்பதானே முப்பத்தஞ்சு
அப்பு, ஆச்சி, ஆன்ரி ஓடியாருங்கோ
கோயில், குளம், டிஸ்கோ குறிவைக்கப் போறன்
கே றேஸ் காறில குட்டி பார்க்கப் போறன்
கறுவலோ வெள்ளையோ கொண்டுவரப் போறன்
கடைசியா உங்களுக்கு எச்சரிக்கை செய்யிறன்
என்ர மிஸிஸ் வேர்க்குக்கு போறா......
வெளிநாட்டு வாழ்க்கையில் ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானம் என்பது போல, குழந்தை பராமரிப்பு, வீட்டு வேலை, சமையல் என்று எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யும் ஒரு ஆண்மகன், தன் மகனைத் தாலாட்டுகிறார் தன் புலம்பல்களைச் சொல்லி.
பெரும்பாலான வீடுகளில் இதுதான் பொதுவான கதையாம் ;-)
Come on Mohan, come on..don't cry
mummy will be here in a minute
சோ றற சோ.......றொகான் சோ றற சோ
என்ர மிஸிஸ் வேர்க்குக்கு போறா
காசு கனக்க ஏர்ண் பண்ணி வாறா
சலறி கொண்டு சேலுக்கு போவா
சில்லறை தான் மிச்சம் கொண்டு வருவா
சோ றற சோ...... றொகான் சோ றற சோ
சோறு கறியோ வெறி சொறியப்பா
களைச்சுப் போனேன் ரேக் எவே என்பா
உங்கள் சமையல் நல்ல ரேஸ்ரப்பா
ஐயோ நீங்கள் வெரி நைஸ் என்பா
சோ றற சோ...... றொகான் சோ றற சோ
வீக் எண்டெல்லோ விசிற்றிங் அப்பா
நீங்கள் போங்கோ ஷொப்பிங் என்பா
நாலுபேர் போல் நாங்களுமப்பா
வாங்க வேணும் புதுக்கார் என்பா
உடுப்பில் வேண்டும் ஒழுக்கம் எண்டால்
ஐயோ நீங்கள் வெறி றிமோட் என்பா
எங்கள் கல்சரும் நல்லதெண்டு சொன்னால்
இண்டிபெண்டன்ற் நான் ஷட்டப் யூ என்பா
செலவு வேண்டாம் சேமிப்பம் எண்டால்
ஸ்ரேரஸ் எல்லோ குறைஞ்சிடும் என்பா
நன்மை தீமையேதும் சொல்லிப்போட்டனெண்டால்
நல்லாய்ச் சொல்லும், ஐ டோண்ட் கேர் என்பா
சோ றற சோ...... றொகான் சோ றற சோ
என்ர மிஸிஸ் வேர்க்குக்கு போறா
காசு கனக்க ஏர்ண் பண்ணி வாறா
சலறி கொண்டு சேலுக்கு போவா
சில்லறை தான் மிச்சம் கொண்டு வருவா
நன்றி: பாடல்களை ஆக்கி அளித்த லூசியம் நண்பர்களின் பூபாளம் இசைக்குழு
புகைப்படம்: Hello Magazine
23 comments:
அனைத்தும் உண்மை அனுபவித்தபின்னர் தான் தெரிகின்றது
வந்தி
பட்ட பின்பு ஞானி ;)
போட்டோ சூப்பர்
பாடல் வரிகள் - ஃபீலிங்ஸ் - ஊர் ஞாபகமெல்லாம் வருதுங்க !
செம பாட்டுங்க பாஸ்
வருகைக்கு நன்றி ஆயில்ஸ் மற்றும் ஜீவ்ஸ்
oru sve sekar naadakathula intha annamakka ponnamakka paatu ketuirukken
யதார்த்தங்களின் தொகுப்புக்கள்...! நன்றி பிரபா....!! தொடரட்டும்...!!!
அனைத்தும் உண்மை
\\பேரப்பிள்ளை பலரடி பெயர்களோ புதிதடி
ஆசையாகக் கதைத்திட இங்கிலீசு வேணுமடி\\
சென்னையிலும் இப்படி தான் தல இருக்கு நிலைமை...
தல சும்மா சொல்லக்கூடாது..கலக்கல் தொகுப்பு தல ;)
Anonymous said...
oru sve sekar naadakathula intha annamakka ponnamakka paatu ketuirukken
//
எஸ்,.வி.சேகர் பயன்படுத்தியதாக நானும் அறிந்தேன்
கதியால் said...
யதார்த்தங்களின் தொகுப்புக்கள்...! நன்றி பிரபா....!! தொடரட்டும்...!!!
//
மிக்க நன்றி கதியால்
ஹ்ம்ம்...கடைசி பாட்டு நீங்க முன்னாடியே போட்டிருக்கீங்களா?
புதியன புகுதல்?
நல்ல கலெஷன்..பாஸ்..
:-)யாரப்பா இசை??? அனுபவங்கள் எல்லாம் நன்று.
Theepan said...
அனைத்தும் உண்மை//
வருகைக்கு நன்றி தீபன்
கோபிநாத் said...
தல சும்மா சொல்லக்கூடாது..கலக்கல் தொகுப்பு தல ;)//
நன்றி தல
சந்தனமுல்லை said...
ஹ்ம்ம்...கடைசி பாட்டு நீங்க முன்னாடியே போட்டிருக்கீங்களா? //
இரண்டு பாட்டு மீள் இடுகை ஆச்சி
U.P.Tharsan said...
:-)யாரப்பா இசை??? அனுபவங்கள் எல்லாம் நன்று.//
யூபி
அதான் லூசியம் நண்பர்கள் என்று சொன்னேனே ;0
வெளி நாட்டு வாழ்க்கையினை அப்பட்டமாக வெளிப்படுத்தும் பாடல்கள் அருமை. எங்களுக்கு அறிமுகப்படுத்திய பிரபா அண்ணாவுக்கு நன்றிகள்.
வருகைக்கு மிக்க நன்றி கமல்
நல்ல தொகுப்பு..
தமிழ் மொழி பேசறது பத்திய சின்னப்பையன் பாட்டு ரொம்பவே நல்லா இருக்கு..
என்னை மன்னிக்க வேண்டும்! கொஞ்ச நாளா ஒரே இந்த எலக்சன் தலைவலி! இஞ்ச இருந்து அங்கத்தயான் யோசனை! மன்னிப்பீரகள் என நினைக்கிறன்!
இண்டைக்குத்தான் கொஞ்சம் ஓய்வு!
என்ன இவ்வளவு நாளும் வேலையில்லாமல் வேலை தேடி அலைஞ்சது! இப்ப ஒரு 2 நாளா ஒரு பெரிய மலையில ஒரு மாசம் Englishபேசத் தெரிந்த ஆள் வேலைக்கு வேணுமெண்டாப்போல போறனான்.என்ன கழுவல் துடையல்தான்!
சத்தியமா உந்தப் பாட்டுக்கள் ஏதோ ஒரு வகையில உண்மையையும் - நோக்களையும் சொல்லுகிறது! பலர் பல மாதிரி! சிலர் சிலமாதிரி என்பதுபோல நான் படும் வேதனையை யாருக்கச் சொல்ல!
எனக்கு இசைஞானியின் "சொர்க்கமே என்றாலும்" அந்தப் பாட்டுத்தான் ஒவ்வொரு நாளும் அடிக்கடி கேட்பேன்! இப்ப இவ்வளவு பாட்டும் எனக்கு மேலதிகமாக வந்திருக்கு! ரொம்ப நன்றி! English என்றாலும் பரவாயில்லை - நானிருக்கும் இடத்தில் டொச்!
சின்னப் பெடியனின் பாட்டில் 2 வரிகளை தமிழில் ரைப் பண்ணத் தவறிவிட்டீங்கள்!
ரொம்ப நன்றி! எங்களுடைய ஒட்டுமொத்த வேதனையையும் சொல்லியமைக்கு!
யதார்த்தங்களின் தொகுப்புக்கள்...! நன்றி
www.tamilarkalblogs.com தமது இணையதளத்தினை அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் விதமாகவும் வலைப்பதிவாளர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் போட்டியொன்று நடாத்த திட்டமிட்டு உள்ளது. போட்டியில் வெற்றிபெறும் 10 பதிவர்களுக்கு 25 GB's of Space மற்றும் 1 Domain Name இலவசமாக வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு http://www.tamilarkalblogs.com/page.php?page=announcement இந்த இணைப்பினை பார்க்கவும்.
Thanks Kana done a good work again.Thanks
nam unmai valkayai thanthullirkal.nandri
THANK YOU
Post a Comment