கடந்த நான்கு நாட்களும் வலையுலகச் சூழல் தேசியத் தலைவர் பிரபாகரன் குறித்தான மரண மாயைக்குள் சிக்கித் திசைமாறிப் போய்க் கொண்டிருக்கும் நிலையைப் பார்க்கும் போது இந்த விஷயத்திலும் இலங்கை அரசு வென்றுவிட்டது போல, கடந்த 4 நாட்களில் தலைவர் குறித்தான மாயைச் செய்திகளால், இலங்கை அரசு செய்த, செய்து வரும் பெரும் மனிதப் பேரவலம் மறைக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் பதிவர் சுந்தரவடிவேல் அவர்கள் கொடுத்திருந்த பதிவு நாம் செய்ய வேண்டிய உடனடிக் களப்பணிகளைக் காட்டுவதாக இருக்கின்றது. இந்தச் செய்தி இன்னும் எட்டாத பலரைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் சுந்தரவடிவேல் அவர்களின் அனுமதியோடு அந்தப் பதிவை மீள் இடுகையாகத் தருகின்றேன். கீழே தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னூட்டங்களும் அந்தப் பதிவில் இருந்து.
மூலப்பதிவின் சுட்டி
1. வன்னி அவலங்களை வெளியுலகிற்குச் சொன்ன மூன்று மருத்துவர்களை இலங்கையரசு பிடித்து வைத்துள்ளது. இந்த மூவரும் போரின்போது கொல்லப்பட்ட தமிழ்ப் பொதுமக்களின் எண்ணிக்கையைக் குறித்துப் பொய்யான செய்திகளை வெளியிட்டார்கள் என்று கூறி இவர்களைக் கைது செய்து "விசாரித்து" வருகிறது சிறீலங்கா அரசு. எவ்வித வசதிகளும் அற்ற நிலையிலும் இம்மருத்துவர்கள் வன்னியில் நின்று தங்களாலான அளவுக்கு உயிர்களைக் காப்பாற்றியவர்கள். இவர்களைத் தடுத்து வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம். இவர்களை விடுவிக்குமாறு Reporters without Borders கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து மனுக்களை அனுப்பலாம். அல்லது உங்கள் பிரதிநிதிகளின் அலுவலகங்களை அழைத்துப் பேசலாம். விபரங்கள் தெரிந்தவுடன் பகிர்கிறேன்.
2. பிரபாகரனின் மரணச் செய்தியினைச் சுற்றியே தமிழர்கள் தம் கவனத்தை வைத்திருக்க வேண்டும் என இலங்கையரசும், அதன் தோழமை நாடுகளும் விரும்புகின்றன. இதன் காரணம், போரில் நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள், போரியல் குற்றங்கள், சிறீலங்கா அரசு இனிமேல் தமிழர்களைக் காட்டி சர்வதேசத்திடம் பிச்சையெடுக்கப் போடவிருக்கும் நாடகங்கள் அனைத்தின் மீதும் மக்களின் கவனம் திரும்பிவிடக் கூடாது என்பதே. இதனைப் பதிவர்கள் உணர்ந்து, மேற்சொன்ன போரியல் குற்றங்கள், சிறீலங்கா அரசுக்கு என்னவிதமான உதவிகளை யார் செய்யப் போகிறார்கள், ஐ.நா அடுத்து என்ன செய்யப் போகிறது, பல்வேறு நாடுகளில் என்னவிதமான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது குறித்தே கவனத்தைச் செலுத்த வேண்டும். இதுவே மனிதநேயம் கொண்டவர்கள் செய்ய வேண்டியது. புலியெதிர்ப்பையும், தமிழின எதிர்ப்பையுமே கடமையாகக் கொண்ட சில பழங்கொட்டைப் பதிவர்களும், நீதிமான்களும் பொத்திக் கொண்டுவிட்டனர். அவ்வளவுதான் அவர்களது மனிதவுரிமைப் பற்று! ஒருவேளை மகிந்தவின் லட்டு அவர்கள் வாயிலும் இனித்துக் கிடக்கலாம். கவனத்தைத் திருப்பும் பதிவுகளைப் புறக்கணித்தலே இப்போதைய தேவை.
அந்தப் பதிவில் வந்த தேர்ந்தெடுத்த பின்னூட்டங்கள் சில
Balaji-paari said...
சு.வ.,
நீங்கள் சுட்டி இருப்பது மிகவும் முக்கியமானது.
தலைவரின் இருப்பை எளிதில் மறுதலித்து, அதன் மூலம் இந்த போராட்டம் முடிவுக்கு வந்ததாக கூறப்படுவது, இலங்கை அரசின் திட்டமிட்ட திசை திருப்பல் மட்டுமே. நாம் இந்த நேரத்தில் செய்ய வேண்டியது வன்னியில் நிகழ்ந்த துயரத்தையும், இலங்கை அரசின் போர்க் குற்றங்களையும் மக்களிடத்தில் கொண்டு செல்வதேயாகும்.
இத்தகைய அவலத்தை மேற்குலக நாடுகள் அவதானித்து இருப்பது, ஐரோப்பிய யூனியன் அழைத்துள்ள சர்வ தேச விசாரணை-யில் இருந்து அறிந்து கொள்ள இயலும். மேலும், நார்வே தற்போது உள்ள நிலைமை பற்றி கூறுவதையும் மனதில் கொள்ள வேண்டும். கனடிய வானொலியில், இலங்கை அரசிற்கான பண உதவிகள் தொடர்பான விவாதத்தில் குறிப்பிடப்பட்ட இலங்கைக்கு மூன்றாவது பார்வையாளர்கள் இல்லாமல் பண உதவிகள் செய்யக்கூடாது என்ற வட அமெரிக்கர்களின் கருத்தும் முக்கியமானது. மேலும் கனடா தமிழ் காங்கிரஸின் செய்தி தொடர்பாளர் திரு. பூபாளபிள்ளை தெரிவித்திருக்கும் கருத்துக்களும் குறிப்பிடத்தக்கது.
Anonymous said...
///போரியல் குற்றங்கள், சிறீலங்கா அரசுக்கு என்னவிதமான உதவிகளை யார் செய்யப் போகிறார்கள், ஐ.நா அடுத்து என்ன செய்யப் போகிறது, பல்வேறு நாடுகளில் என்னவிதமான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது குறித்தே கவனத்தைச் செலுத்த வேண்டும்///
புலம் பெயர்ந்த தமிழர்கள் தங்கள் நாடுகளில் இலங்கை அரசின் போர்க்குற்றங்களை பதிவு செய்யவும், அதைப் பற்றி சட்டப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு செய்யவேண்டியவைகள் குறித்த விவாதங்களை தாங்கள் வாழும் நாட்டில் உள்ள (அதிலும் போர்க்குற்றங்கள் பற்றிய விவகாரங்களில் தேர்ந்த வழக்கறிஞர்கள், ஆய்வாளர்கள் ஐரோப்பிய நாடுகளில் அதிகம்) ஆய்வாளர்கள், வழக்குரைஞர்களை அழித்து பரவாலான விவாதங்களை ஊடகங்களில் நடத்துவத்ன் மூலம் ஒன்றுபட்டு இயங்க வேண்டும். அது தான் இப்போதைய உடனடித்தேவை.
இந்திய அரசும், ஊடக சதியாளர்களும், வழக்கம் போல புனுகு பூசும் வேலைகளை தொடங்கி, 25 கோடி உதவிப்பணம், இனங்களிடையே ஆன புரிந்துணர்வு, சம உரிமைகளைப் பெற அமைதிவழிப் போராட்டம் என்று இலங்கை அரசைக் காப்பாற்றும் நடவடிக்கைகளில் இறங்குவார்கள். இன்று வேண்டியது சம உரிமை அல்ல; ஒரு போர்க்குற்றவாளி தனது பதிப்புக்குள்ளானவருக்கு அதைத் தரமுடியாது.
மாறாக இவை இரண்டுமே
1. காயப்பட்ட, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி, தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்ட மக்களை பாதுகாத்து, விரைவில் அவர்களை அவர்களது பாரம்பரிய பிரதேசங்களுக்கு அனுப்ப முயற்சி
2. இலங்கையின் போர்க்குற்றங்களை நேர்மையாக விசாரித்து தண்டனை மற்றும் அதில் பங்கு பெற்ற மற்ற நாடுகளை அம்பலப்படுத்துதல்.
இதில் முன்னதை அரசு முன்னெடுக்கவிடாமல் மனித உரிமை அமைப்புகள், செஞ்சிலுவை சங்கம் வழியாக அய்.நா மற்றும் அரசு சாரா அமைப்புகள் வழியாக உதவி செய்ய வேண்டி போராட்டங்களை நடத்தி உதவிப்பொர்ட்களை அனுப்புவதை புலம்பெயர்ந்த தமிழர்கள் செய்யவேண்டும்
இரண்டாவது வேலையான போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கான போராட்டங்களை வலுப்படுத்தி அதன் அடிப்படையி குற்றவாளியான இலங்கை அரசுக்கும் அதன் தோழமை நாடுகளுக்கும் தமிழர்களை புணரமைப்பு செய்வதற்கு எந்தத் தகுதியும் இல்லை என்ற அடிப்படையின் கீழ் அதன் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குவது; அரசு சாரா, அய்ரோப்பிய ஒன்றியம் போன்ற அமைப்புகளை இப்பணிக்கு ஈடுபடுத்துவது.
இப்பணிகளே இப்போது தலையானவை.
-தங்கமணி
சயந்தன் said...
கிட்டத்தட்ட 10 000 க்கும் மேற்பட்ட சடலங்களை இராணுவம் அப்புறப்படுத்தி வருகிறது. ராணுவ கமராக்கள் தங்களது இலக்குகளை மட்டும் அங்கிங்கென அசையாமல் படம்பிடிக்கிறது.
பொதுமக்கள்.. போராளிகளின்தாய்தந்தையர் மனைவியர் பிள்ளைகள்.. ஊனமுற்ற ஆயிரக்கணக்கான போராளிகள் என அனைவரும் எரித்துக் கொல்லப்பட்டனர்.
ஐநா செயற்கைகோள் மூலமாக தற்போதைய நிகழ்வுகளையும் படமெடுக்கவேண்டும். ஆனால் அது எடுத்த படங்களையே ஒளித்து வைக்கிறது.
உண்மையில் விமானமொன்றின் ஊடாக அவை பதிவு செய்யப்பட வேண்டியவை. யார்கேட்பார் யார் செய்வார்..?
களப்பிரர் said...
கிட்ட தட்ட இதே தோரணையில் நான் இப்பொழுது தான் எழுதினேன். முதலிலே பார்த்திருந்தால் இங்கு பின்னூட்டமாகவே போட்டிருக்கலாம்
http://tamilkuruthi.blogspot.com/2009/05/blog-post.html
தமிழ் சசி / Tamil SASI said...
சுந்தர்,
தற்போதைய உடனடி தேவை இது தான்.
என்னுடைய பதிவு...
வதந்திகளை புறக்கணித்து, மக்களின் பிரச்சனைகளை பேசுவோம்
http://blog.tamilsasi.com/2009/05/ignore-rumours-about-prabhakaran.html
பதி said...
பிரச்சனைகளை மக்களிடம் எடுத்துச் செல்லும் ஒவ்வொரு சிறு முயற்ச்சியும் வரவேற்கப்பட வேண்டியது. முக்கியமானது....
இங்கு பலரும் குறிப்பிட்டுள்ளதைப் போல ஊடக வதந்திப் போரில் சிக்காமல் இருப்பதே முதல் தேவையுமாகும்..
நம்மால் முடிந்த அனைத்து உதவிகளையும் உடனடியாகச் செய்ய முயல்வோம். அது சம்பந்தமான முன்னெடுப்புகள் ஏதும் நடந்தால் உடனடியாக மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்....
சுந்தரவடிவேல் said...
Please sign the following petition regarding the Doctors release!
http://www.pearlaction.org/action-alerts/2009/aa81.php
5 comments:
உண்மை தான் நண்பரே
பகிர்ந்தமைக்கு நன்றி தல..
நல்ல பதிவு பிரபா அண்ணா...
சும்மா ஒரு நக்கல் போட்டிருக்கிறன் அண்ணா...
நேரம் இருந்தா வந்து பாருங்கோ...
http://jsprasu.blogspot.com/2009/05/blog-post_21.html
முதல் வளைகுடாப் போரில் ஈராக் ராணுவ ஆக்கிரமிப்பில் வெளியேற்றப் பட்ட மக்கள் அனைவரும் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே குவைத் நாட்டின் உள்ளே தங்கள் சொந்த இடங்களுக்கு அனுமதிக்கப் பட்டார்கள்.புதை குண்டுகள் போன்றவைகளை அகற்றும் பணி இயல்பு வாழ்வுக்கான சீரமைப்புடனே நடைபெற்றது.எனவே இலங்கை அரசு போரினால் இடம் பெயர்ந்த மக்களை மீள் குடியேற்றுவதற்கான கால அவகாசங்களை நிர்ணயிப்பதற்கு தங்கள் சொந்த நலன் சார்ந்த காரணங்கள் இருக்கவேண்டும்.மக்களை தங்கள் சொந்த மண்ணுக்கு அனுப்பி வைப்பதன் மூலம் அவர்களாகவே தங்கள் கட்டமைப்புக்களை முன்னெடுப்பார்கள்.அதுவே சாத்தியமான எளிதான வழியும் கூட.இல்லை ராணுவம் கட்டமைப்புக்களை உருவாக்கிய பின்பே குடியேற்றம் என்பது உள்நோக்கம் கொண்டது.
போரின் தோல்விகள்,இலங்கை பிரச்சாரங்கள் அனைத்தின் முகங்களையும் கடந்து இடம் பெயர்ந்த மக்களுக்கான வாழ்வின் ஆதாரங்களை சிந்திப்பது பயன் தரும்.
தகவல் தொழில் நுட்ப வசதிகளை உணர்ச்சி வேகங்களுக்கும்,பொய்க் கதைகளுக்கும் உரமூட்ட இடம் தராமல் புத்தி கூர்மையோடு உபயோகிப்பதும் இப்போதும் இனி வரும் காலங்களின் தேவை.
Post a Comment