இணையத்தில் இயன்றவரை தாயக விடுதலைப் போராட்டம் சார்ந்து என் கருத்தை இதுவரை பதியாமல் விட்டுவைத்தேன். அதற்குப் பல காரணங்கள், எமது தாயகத்துக்கான செயற்பாடுகள் வெறுமனே எழுத்துக் குவியல்களாக இல்லாமல், அந்த ஊடகச் செயற்பாடுகளில் தக்கோரும் மிக்கோரும் செய்ய வேண்டிய பணி, அதை அவர்களே செய்யவேண்டும் என்று இது நாள் வரை ஒதுங்கியிருந்தேன். ஆனாலும் இன்றைய சூழ்நிலையில் என் மனதுக்குள் உழன்று கொண்டிருக்கும் விஷயங்களைப் பேசா மடந்தையாக வெறுமனே விட்டுவிடுவதில் அர்த்தமில்லை என்று நினைத்து சில விஷயங்களைச் சொல்லலாம் என்றிருக்கின்றேன். இந்தக் கருத்துக்கள் என் சுய எண்ணத்தில் தோன்றியவை மட்டுமே ஆய்வு/வாய்வு பகுதியில் அடக்க எனக்கு உடன்பாடில்லை.
000000000000000000000000000000000000000000000000000000000000
மீண்டு(ம்) வந்த தமிழக எழுச்சி
நேற்று முன் தினம் வானொலி கலந்துரையாடல் நிகழ்ச்சி செய்து முடிக்கும் தறுவாய், அதிகாலை 1 மணி ஆகும் போது ஒரு பெண் நேயர் தொடர்பு கொள்கின்றார்.
"இன்றைக்கு தமிழகத்தவர்களை நோக்கி உங்கள் உதவி வேண்டும் என்று கையேந்தும் நீங்கள், இன்று வரை இலங்கையில் உள்ள மலையகத்தமிழர்கள் மீது உங்கள் கரிசனை இருந்ததா?, இலங்கையில் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்ட காலகட்டங்களில் உங்கள் செயற்பாடுகள் எப்படி இருந்தது? இப்படி எனக்கு தெரிந்த இலங்கையின் மலையகத் தமிழர் ஒருவர் கேட்டார், ஆனால் அதற்கு என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை" என்றும் அந்த நேயர் சொன்னார்.
உண்மையைச் சொல்லப் போனால் இந்தக் கேள்வி வருவது முதல் தடவை அல்ல. உலகத்திலேயே மிகக்கொடுமையான விஷயம் இப்படியான விஷயங்கள் பற்றிப் பேசும் போது எழுந்தமானமாக விதைக்கப்படும் கருத்துக்கள் குறித்த இந்த வரலாற்றின் கறைபடிந்த பக்கங்களின் நிஜ வரலாற்றையே சமாதி கட்டிவிடும் அபாயம் இருப்பதால் அண்மையில் வெளிவந்த "இலங்கையில் தமிழர்" என்ற கலாநிதி முருகர் குணசிங்கம் அவர்களின் ஆய்வு நூலில் இருந்து சில பகுதிகளை முன் வைக்கின்றேன்.
சோல்பரி ஆணைக்குழுவினரின் சிபாரிசுக்கு இணங்க, டி.எஸ்.சேனநாயக்கா, தான் ஏற்கனவே திட்டமிட்டபடி, 1948 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் திகதி "இந்தியர் பிரசாவுரிமை மசோதா"வை பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரில் முன்வைத்தார்.(Ceylon Parliamentary debates, 4 August 1948) இதைத் தொடர்ந்து மிகவும் காரசாரமான வாதப்பிரதிவாதங்கள் டிசெம்பர் 1948 வரையில் இடம்பெற்றன.
முஸ்லீம் பிரதிநிதிகளும், குறிப்பாக ரி.பி.ஜாயா, எம்.எஸ்.இஸ்மாயில், ஏ.சின்னலெப்பை போன்றவர்களும் அரசுக்கு இவ்விடயத்தில் தமது ஆதரவை அளித்தனர். இவர்களை விட இலங்கைத் தமிழ் பிரதிநிதிகளும், ஒரு சில இந்தியத்த் தமிழ்ப் பிரதிநிதிகளும் குறிப்பாக , ஜி.ஜி.பொன்னம்பலம், சி.சுந்தரலிங்கம், கே.கனகரட்ணம், வி.நல்லையா, எஸ்.யூ.எதிர்மன்னசிங்கம், ரி.ராமலிங்கம், ஏ.எல்.தம்பிஐயா போன்றவர்கள் கூட இந்த விஷயத்தில் அரசுக்கு ஆதரவு வழங்கினர்.
தமிழ்ப்பிரதிநிதிகளில் எஸ்.ஜே.வி.செல்வநாயகம், பி.குமாரசிறி, கே.ராஜலிங்கம், டி.ராமானுஜம், எஸ்.சிவபாலன், எம்.சுப்பையா, எம்.தொண்டமான் சி.வன்னியசிங்கம், வி.வேலுப்பிள்ளை போன்றவர்கள் தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர். (பக்கம் 590 - 591 )
இந்தியத் தமிழர் பிரசாவுரிமை மசோதா விவாதத்தில் பாராளுமன்றத்தில் அதை எதிர்த்துக் குரலெழுப்பிய இரண்டு முக்கியமான தலைவர்களில் ஒருவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்கள் மற்றையவர் சி. தொண்டமான் அவர்கள். இந்தியத் தமிழர் பிரசாவுரிமை, சட்டம் முலம் பறிக்கப்படுவதால் ஏற்படப்போகும் நிரந்தரமான பாதிப்புக்களை நன்கு உணர்ந்திருந்த இரு தலைவர்களும், மூன்று மாதங்களுக்கு மேலாகத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாராளுமன்றக் கூட்டத்தொடர் கூட்டத்தில், மணித்தியாலக்கணக்கில் தமது வாதப் பிரதிவாதங்களை ஏற்கனவே தமிழ்ப்பிரதிநிதிகளின் உதவியுடன் உரிய முறையில் முன்வைத்த போதிலும் இறுதியில் அம் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு , இந்தியத் தமிழரின் பிரசாவுரிமை 1948 டிசெம்பர் 10 பறிக்கப்பட்டது. 1948 ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியத் தமிழரின் பிரசாவுரிமை பறிக்கப்பட்டதன் எதிர் விளைவாக செல்வநாயகம் அவர்களும், திருவாளர்கள் வன்னியசிங்கம், நாகநாதன் போன்ற அரசியற் தலைவர்களும் தமிழர் காங்கிரசில் இருந்து விலகி, இலங்கை தமிழ் அரசுக் கட்சி (Tamil Federal Party) என்ற அரசியல் கட்சியை டிசெம்பர் 1949 ஆம் ஆண்டில் ஆரம்பித்தார்கள். (பக்கம் 595, இலங்கையில் தமிழர், கலாநிதி முருகர் குணசிங்கம்)
மேற் சொன்ன விஷயங்கள் மலையகத்தில் வாழ்ந்த இந்தியத் தமிழர் பால் எமது தலைவர்களுக்கு இருந்த கரிசனையும் அதன் விளைவாக ஏற்பட்ட அரசியல் வரலாற்றுத் திருப்பத்தையும் எடுத்துக் காட்டுகின்றது.
தொண்டமானின் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பின்னாளில் சி.சந்திரசேகரனின் மலையக மக்கள் முன்னணி போன்றவை தனியே மலையகம் வாழ் இந்தியத் தமிழர் நலனை நோக்கிய தம் செயற்பாடுகளை அவ்வப்போது அமையும் இலங்கையின் அரசாங்கத்த்தில் சேர்வதன் மூலம் செய்யலாம் என்ற நோக்கில் செயற்பட்டார்கள். ஆனால் மலையகத் தமிழரின் வாழ்வியல் என்பது இப்படியான அரசில் அங்கம் வகிக்கும் பிரதிநிதித்துவங்கள் போல இது நாள் வரை பெருத்த மாற்றங்களைக் கொண்டு வரவில்லை. போராளிக்குழுக்கள் பல உருவெடுத்த போது ஈரோஸ் இயக்கம் மலையகத்தையும் இணைந்த தமிழீழ எல்லையாக வகுத்தது ஒரு வரலாறு.
முதலில் இந்தியத் தமிழரில் பதம் பார்த்த சிங்களப் பேரினவாதம் அடுத்துக் கைவைத்தது ஈழத்தின் பூர்வகுடிகளாக வாழ்ந்து வந்த ஈழத்தமிழரை. அந்தப் பக்கம் போய் வரலாற்றை நீட்டி முழக்குவதை விட இந்த இடத்தில் அதை நிறுத்தி விட்டு விஷயத்துக்கு வருகின்றேன்.
அந்தக் காலகட்டத்து அரசியல் நிலைமைகளில் எங்கள் தலைவர்களால் செய்ய முடிந்தது இது மட்டுமே, எங்களுக்குள்ளேயும் சில களைகள் இருந்த போதிலும் கூட. ஆனால் தொடர்ச்சியாக லயங்களில் அடைபட்டு தொழுவத்தில் அடைக்கப்பட்ட கன்றுகள் போல வாழ்ந்து வந்த இன்னும் வாழ்ந்து வருகின்ற மலையகத்தமிழருக்கு எமது அரசியல் தலைமைகள் எவ்வளவு தூரம் தம் தார்மீகப் பணியைச் செய்யவில்லையோ அதே அளவுக்கு மலையகத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன் பேர்வழி என்று ஒவ்வொரு அரசுகள் அமையும் போதும் ஒட்டிக் கொள்ளும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் செய்யவில்லை என்பது கசப்பான உண்மையும் கூட. கால ஓட்டத்தில் தம் பிள்ளைகளை பணியாளர்களாக இலங்கையின் இன்ன பிற பாகங்களுக்கு அனுப்பிய போது எமது சமூகத்தில் (தமிழ், சிங்களம் உட்பட்ட) நிலவிய எசமானத்துவமும் கூட வரலாற்றில் எந்த வித சப்பைக்கட்டுக்களுக்கும் இடம் தராதவை.
ஆனால் ஆண்டாண்டு காலம் சாத்வீக வழியில் சிங்கள அரசுகளிடம் நியாயம் கேட்டு சாத்வீக வழியில் போராடி அதுவும் முடியாமல் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மூலம் ஒரு அறுதியான முடிவு எடுக்கப்பட்டு தமிழீழம் என்ற தேசமே முடிந்த முடிவு என்றான போது இந்த இலட்சியத்துக்காக தோன்றிப் பின் கால ஓட்டத்தில் நிலை மாறித் தடம் மாறிப் போனவர்கள் பலர். இன்றைக்கு எமக்கு ஒரே நம்பிக்கை தமிழீழ விடுதலை புலிகள் மட்டுமே.
1990 களில் வடபகுதியில் புலிகளின் அரசாங்கம் அமைந்த போது வந்த முக்கியமான ஒரு சீர்திருத்தத்தை இங்கே சொல்லி வைக்க விரும்புகின்றேன். ஆண்டாண்டு காலமாக குலத்தொழிலாக முடி சீர்திருத்தம் செய்து வந்த நாவிதர்கள் இனிமேல் வாடிக்கையாளர் வீடுகளுக்குப் போய் இந்த வேலையைச் செய்ய முடியாது, அவர்கள் உங்கள் கடைகளுக்குத் தான் வரவேண்டும் என்ற செயற்பாட்டை முன் வைத்தார்கள். இப்படியான பன்முகப்படுத்தப்பட்ட விடுதலையே நாம் எதிர்பார்த்தது, அதைத் தான் இலக்காகக் கொண்டு இந்த இயக்கம் செயற்படுத்தி வருகின்றது. எமக்கான இலட்சியம் நிறைவேறும் போது இந்த சமூக விடுதலை மலையகத் தமிழருக்கும் உரித்தானதே.
1983 இல் தமிழகத்தில் எழுந்த ஈழ ஆதரவு என்பதற்கும் இப்போது எழுந்த எழுச்சிக்கும் பாரிய வித்தியாசங்கள் என்பது உங்களுக்கு நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஒரு காலகட்டத்தில் தமிழக அரசியல் இயக்கங்கள் செய்த பெரும் பணியை இன்று சாதாரண தமிழ் நாட்டுத் தமிழன் செய்கின்றான். இத்தனை சட்ட திட்டங்கள் போடப்பட்டும் அங்கே எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஈழத்தமிழனுக்காக இன்றைக்கு தமிழகத்தில் இருக்கும் மூன்றாம் தலைமுறை குரல் கொடுக்கின்றதென்றால் அதுவொன்றும் சாதாரண விஷயமல்ல. முத்துக்குமரன் வரிசையிலே தன்னைத் தீக்கிரையாக்கி நியாயத்தை நிறுவும் தமிழகத் தமிழன் அளவுக்கு ஈழத்தமிழன் தமிழக விஷயத்தில் இருப்பானா என்பது எண்ணிப் பார்க்க முடியாதது.
ஆனால் நொடிக்கொரு தடவை இந்தியத் தேசியம் பேசி ஜன்னலுக்குள் நின்று கொண்டு எமது வாழ்வுரிமைப் போரைக் கொச்சையாக்கும் ஊடகவியலாளர்களும், ஈழத்தமிழன் பிரச்சனையை பகடைக்காயாக வைத்து வாழ முயலும் இந்திய அரசியல்வாதிகளை என் செய்வது. சிங்களக் குள்ளநரி அரசாங்கம், அப்போது அரசியல் முதிர்ச்சியற்ற (இப்போது ராகுல் காந்தி இருப்பது போல ) இருந்த ராஜீவினை மாற்றி ஈழத்தில் அமைதிகாக்கவென வந்த படையினை வைத்து நடாத்திய கொடூரப் படுகொலைகள், பாலியல் வல்லுறவுகள், எல்லாமே கண் முன்னே நடந்த கோர வரலாறுகள். இன்றும் அந்த வலிகளைத் தாங்கிக் கொண்டே வாழப்பழகிக் கொண்டோம். அதன் பின் நிகழந்த ராஜீவ் படுகொலை, அதை வைத்து எடுத்துக் கொண்ட ஈழ எதிர் நிலைப்படுகள், நரசிம்மராவ் ஆட்சியில் கேணல் கிட்டு உட்பட்ட முக்கியஸ்தவர்களைப் பலியெடுத்ததில் இருந்து இன்று மூன்றாம் கட்ட ஈழப் போரில் தனது தார்மீகப் பணியை நேரடியாக ஆற்றி வரும் காங்கிரஸ் பேரியக்கம் இந்த நிமிஷம் வரை இறந்த ஆறாயிரத்துச் சொச்சம் ஈழத்தமிழ் அபலைகளின் உயிரைப் பறித்த பணியில் பங்கு போட்டுக் கொள்கின்றது. இந்தக் கணக்கு அடுத்த நிமிஷத்தில் இருந்து இன்னும் முன்னூற்றுச் சொச்சமாக கூடப் போகின்றது, நாளை இன்னும் முன்னூறாகக் கூடும். இன்னும் எத்தனை பேரை நீங்கள் காவு எடுத்து பழி தீர்த்துக் கொள்ளப் போகின்றீர்கள்?
புலிகள் வேறு தமிழர்கள் வேறு. தமிழர்களுக்கான நியாயங்களை ஏற்கிறோம், புலிகளை ஒழித்து விட்டு இது பற்றிப் பேசலாம் என்று சொல்லிக் கொள்ளும் அறிஞர் கூட்டமும் இருக்கின்றது. யாழ்ப்பாண பெரிய ஆஸ்பத்திரியிலோ, மட்டக்களப்பு வைத்தியசாலையிலோ புலி என்ற ஒரு இனம் பிறப்பதாக இதுவரை எந்த வைத்திய சான்றுகளும் இல்லை. தமிழர்களின் உரிமைகளைப் பேசத் திராணியுள்ள, செயற்படுத்தும் வல்லமை கொண்ட ஒரேயொரு அமைப்பு புலிகள் தான். அது தேசியத் தலைவர் பிரபாகரன் காலத்துக்குப் பின்னும் தொடரும் என்பதை வரலாறு சொல்லும் வரை காத்திருக்கப் போகின்றீர்களா?
ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை கலைஞர், ஜெயலலிதா என்ற இன்றைய முக்கிய அரசியல் தலைவர்கள் மீதான எதிர்பார்ப்பு வித்தியாசமானது. இன்றைக்கு
தமிழீழமே தீர்வு" என்று சொல்லிவைத்து நாளைக்கு இன்னொன்று பேசும் ஜெயா அரசியல் பழகிப் புளித்த ஒன்று. அந்த நிலையில் ஒருபோதும் கலைஞரை வைத்திருக்க விரும்பவில்லை. இன்றைக்கு ஒரு அறுதிப்பெரும்பான்மை இல்லாத மாநில ஆட்சியை வைத்துக் கொண்டு கலைஞரால் காவிரித் தண்ணீர் ஒரு பாட்டில் கூடப் பெற முடியாது என்பதும் எல்லோருக்குமே தெரியும். ஈழத்தமிழ் அகதிகள் தமிழ் நாட்டுக்கு படிக்க வரும் போது கோட்டாவை அதிகப்படுத்தும் அளவுக்கு அதிகாரம் இருக்கின்றது கலைஞர் ஆட்சி என்ற நன்றி விசுவாசத்தைக் காட்டும் அதே நேரம் 1992 ஆம் ஆண்டு தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு ஈழத்தின் பெரும் ஆளுமை பேராசிரியர் சிவத்தம்பி வந்த போது அவமானப்படுத்த முடியும் அளவு அதிகாரம் படைத்தது ஜெயாவின் ஆட்சி என்ற வரலாற்றையும் மறைக்க முடியவில்லை. ஆனால் இன்றைகொரு பேச்சு நாளைக்கொரு பேச்சு என்று இதே ஜெயா பாணி அரசியலை இவர் நடத்தும் போது ஜெயலலிதா அளவுக்குத் தாழ்ந்து தானா செயற்பட வேண்டும் என்ற தார்மீகக் கோபமே ஈழத்தமிழரிடையே எழுந்தது. அவை பதிவுகளாக வெளிப்பட்ட போது, அதற்குப் பலனாகக் கிடைத்தது "வெளிநாட்டில் தட்டுக் கழுவிப் பிழைக்கும் ஜென்மமே" என்ற பின்னூட்டப் பட்டம்.
மூன்றாம் கட்ட ஈழப்போரின் கோடரிகாம்பு கருணாவைப் பேட்டி எடுத்து குமுதத்தில் போட்டிருந்தார் ஒரு தமிழகக் கவிஞர். இப்படியானவர்களைப் பேட்டி எடுக்கும் போது ஒரு தெளிந்த அரசியல் பார்வை இருக்க வேண்டும் அல்லது மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். கருணா தன் தரப்பு நியாங்களைச் சொல்லும் போது எல்லாவற்றைக் கேட்டு ஒலிப்பதிவு செய்து வந்து ஒப்புவிக்கும் கருவியாக இருந்தால் அதற்குப் பேர் பேட்டியா? மட்டக்களப்பில் யாழ்ப்பாணத்தமிழர்களை விரட்டி அடித்தும் மட்டக்களப்பு பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் உட்பட்ட கல்வியாளர்களைக் காவு எடுத்தும், கொழும்பில் இருந்த வர்த்தகர்களைக் கடத்திக் கப்பம் கேட்டும், கப்பம் கொடுத்தும் அவர்களில் சிலரைக் கொன்று குவித்ததும் தான் கருணா கண்ட ஜனநாயகம். லண்டனுக்கு கள்ள பாஸ்போர்ட்டில் ஓடி, பின் இலங்கை அரசின் கெளரவ அமைச்சராகும் வரை கருணாவின் ஜனநாயகக் கனவு தொடர்கின்றது.
தனி ஈழம் என்பது சாத்தியம் இல்லை என்று கருணா சொன்னாராம் அதற்குத் தலைவர் மறுத்து விடாப்படியாக இருந்தாராம் இது பேட்டியில் வந்த ஒரு கருத்து. அதை வாசிக்கும் போது பெருமையாக இருந்தது. காரணம் கூடப்பிறந்த உறவு மாத்தையா முதல் கருணா வரை எவன் எமது உரிமைப் போராட்டத்துக்கு எதிராக இருக்கிறானோ அவன் மன்னிக்க முடியாத குற்றவாளி என்ற தேசியத் தலைவரின் உறுதியும் செயற்பாடும் கருணா வாயிலாகவே வெளிப்பட்டிருக்கின்றது.
இந்த வேளை கருணாவோடு புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து பின் கருணாவின் பாசறையில் நடக்கும் லீலைகளை காட்டிய சாட்சியத்தை இங்கே பகிர்கின்றேன், அத்தோடு இன்னொன்றும், தமிழக ஊடகங்கள் இன்றைக்கு எவ்வளவு தூரம் எமது மக்களின் துன்ப துயரங்களில் பங்கெடுத்திருக்கும் அளப்பரிய பங்கோடு, நடு நிலமையாகச் செயற்படுகின்றேன் பேர்வழி என்ற கணக்கில் இப்படியான அரைகுறைப் பேட்டிகளைக் கொடுத்துத் தாமும் குழம்பி மற்றவனையும் குழப்பியடிக்கும் வேலைகள் தேவை தானா? இதோ இனி அந்த வாக்கு மூலம்
Startling information about murders, abductions, recruitment of child soldiers and other criminal activities and human rights violations committed by Karuna Group are coming to light. It is now confirmed that Karuna Group led by LTTE’s former Eastern Commander Vinayagamoorthy Muralitharan (aka Colonel Karuna) is behind the recent abductions and murders of Tamil businessmen in Colombo and a spate of other killings in the North East. Solid evidence of Karuna Group’s involvement in the abductions emerged when a prominent member of the group namely Kantharajah of Urani, Batticaloa was arrested at Kotahena in a Police undercover operation recently. Insider information from Karuna Group reveals the master-minds behind the abductions and murders committed with the full knowledge of the Sri Lankan Government authorities.
Abductions of Tamil Businessmen
The abduction racket is masterminded by Pillaiyan, the so-called Supreme Commander of the Karuna Group. He is the most trusted lieutenant of Karuna and was involved in several murders including the killing of Tamil journalist Nadesan in Batticaloa.
He is reported to be under the protection of Sri Lanka’s Military Intelligence and operates from the Panagoda Army Camp. He is assisted by Rudra Master who also functions as the spokesman for the group calling himself as Thooyavan, and is also based at the Panagoda Army Camp. If you ask journalists who interviewed Thooyavan they will tell you that he is reachable only by cell phone, proof that he cannot give a landline number for fear of exposing his Panagoda Military Camp residency. Other Karuna group members directly associated with the abduction racket are Seelan and Vinoth.
Karuna Group’s abduction team consists of twenty members who are all Tamil youths from Eastern Province. They utilize five white vans for abductions. The abduction racket is conducted with the active connivance and protection of the Sri Lankan Military Intelligence.
Abducted Tamil businessmen are often taken to Karuna Group’s Base Camp in Theevuchenai located in the Polonnaruwa-Batticaloa border. They demand and obtain ransoms ranging from ten to fifty million rupees from relatives of the abducted businessmen. Earlier the abducted businessmen used to be released after ransom payment but now they are routinely killed once ransom monies are paid. Dead bodies of businessmen thus killed have been dumped in the jungles of Sinhapura and Theevuchenai in the Polonnaruwa district. Recently abducted businessman Sriskandarajah was similarly killed and dumped in the Polonnaruwa jungles. Relatives of Sriskandarajah, a well known sugar merchant, have recently told media that they paid Rupees 30 million to the abductors but despite paying ransom Karuna’s men had killed him. Rudra Master, Seelan and Vinoth are directly behind the recent abductions of 42 Tamil businessmen from Colombo. Seelan was solely responsible for the abduction and murder of businessman Pullikutty and other businessmen from Vavuniya. Karuna group abduction team camped in Vavuniya for ten days and conducted the abduction and killing of these Vavuniya businessmen.
Pillaiyan and his abduction team are known to have collected over five hundred million rupees through the abduction racket. He has banked millions of rupees in the accounts of a Batticaloa businessman and has also opened several bank accounts in fictitious names. He owns three luxury vehicles. He is known to pay lavishly to members of the Sri Lankan Military Intelligence and buys them vehicles and other luxury goods. Sri Lankan Military authorities does not yet know that Pillaiyan who is protected by the Sri Lankan Military Intelligence was responsible for the murder of a Sri Lankan Army officer who was investigating into the abductions. He cunningly sent this army officer on a motor cycle to Welikanda, got him killed by his men there and then put the blame on the LTTE.
Abduction and murder of TRO officials
Karuna Group was responsible for the abduction of seven TRO humanitarian workers in January this year. The abduction was widely condemned by UN agencies, Amnesty International and other international agencies and received wide publicity. Relatives of these unfortunate TRO workers are living in the hope that the seven abducted are still alive and would be released.
However, the truth is otherwise. All the seven TRO workers were killed by Karuna Group members on very days they were abducted.
Pillaiyan is directly responsible for the murder of these seven TRO workers. The abductions of the TRO workers took place at a time when it was announced that the Sri Lakan Government and the LTTE will be meeting in Geneva and that the question of Karuna Group activities will be raised at the Geneva meeting. The Sri Lankan Military Intelligence and the Karuna Group wanted to disrupt the Geneva meeting. The Military Intelligence then came up with the abduction plan and entrusted the job to Pillaiyan.
Pillaiyan accepted the task and then put together a team under the leadership of Sinthujan (aka Preetheepan), a ruthless murderer from the Karuna Group that was based at Theevuchenai. The team led by Sinthujan consisted of Yogan, Kumar, Sirancheevi, Jeyanthan and Pulendran.
On the 29th January, this special team received a telephone call from Pillaiyan that a TRO Van was coming from Batticaloa. Pillaiyan instructed his handpicked team to waylay it as soon as it passed the Welikanda Army Check Point and capture the TRO workers. The team members on receiving the message immediately left the Theevuchenai Base Camp with weapons and awaited near the Welikanda Army Check Point for the arrival of the TRO van. As soon as the TRO van went past the Army Check Point, the Karuna group team followed it and took the van along with the occupants to Theevuchenai.
There were five people in the TRO van, two males and three females. TRO identified them as Kasinathar Ganeshalingam, North East Province Secretary of Pre-School Education Development Centre (PSEDC), Ms S.Doshini, PSEDC Coordinator for Manmunai North, Ms Punniyamoorthy Nadeswary, Pre-School teacher at the Vavunatheevi pre-school, Ms Chitravel Sivamathi, Pre-School teacher at the Vavunatheeevu pre-school and driver Thangarasa.
Sinthujan separated the two males and took them away allegedly for questioning but killed both of them shortly afterwards. He shot and killed these two elderly Tamils with his handgun.
The three women were questioned by Sitha Master (aka Preetheep) of the Intelligence Unit of the Karuna Group. It is this same Sitha Master who murdered Batticaloa TNA Parliamentarian Joseph Pararajasingham at St Marys Cathedral, Batticaloa while the TNA Parliamentarian was participating in a midnight Christmas mass. Sashi (aka Shanthan) and Jeevan (aka Thilakan) of Karuna Group Intelligence Unit were also involved in the questioning.
While questioning they came to know that one of the three female TRO workers was a relative of a Karuna group member and she was thereafter separated from the others. Sitha Master then took this female TRO worker with him in his vehicle. This female TRO worker is now living with Sitha Master as his wife. The other two female TRO workers were handed over to Sinthujan and were later released. They later made statements at the Batticaloa Police and there were reports that the Batticaloa Police harassed them by detaining the two overnight.
The second abduction of the TRO workers came the very next day, the 30th January. On that day by around mid-day, the team received another phone call from Pillaiyan who said that a second TRO van was on its way. This second van too was waylaid at the same spot. This time, there were many passengers in the van. They took the van away along with five TRO workers and chased away others. According to TRO statement, the five TRO workers abducted on the 30th January were Ms Thanuskody Premini (TRO Head Accountant and an Eastern University student), Shanmuganathan Swenthiran (TRO Accountant from Santhiveli), Thambirajah Vasantharajan (TRO Accountant from Santhiveli), Kailayapillai Ravinthiran (TRO accountant from Palugamam) and Arulnesarasa Satheesharan (Accounts trainee). The TRO van was driven to Theevuchenai where the four males were taken into the jungles and shot dead without any investigations.
The lone female TRO worker Thanuskody Premini was mercilessly raped by Sinthujan and at least fourteen other Karuna Group members. Her cries could be heard all over the jungles of Theevuchenai that night. She was finished off next morning and this beautiful TRO Head Accountant’s ravaged body became fertilizer to the shrubs and bushes of the Theevuchenai jungle which bore silent testimony to the misdeeds of the animals of the Karuna Group.
How can President Mahinda Rapakse who eloquently lectured the UN General Assembly about his human rights credentials permit his Military Intelligence to protect and nurture animals like Pillaiyan and his Karuna Group? How is that the European Union recommended that a murderous clique like Karuna Group be given a part in a negotiated settlement to the Sri Lankan Tamil problem?
The leader of the Karuna Group, Vinayagamoorthy Muralitharan (Karuna), is safely holed up in a neighbouring country and gives media interviews over conference calls and internet. His two English-speaking children are attending English medium schools in a foreign country while his cadres are abducting children of the poor mothers of Batticaloa and Ampara to be trained as mercenary child soldiers in the service of the Sri Lankan Army to kill their own Tamil brethren.
Despite these atrocities committed by Karuna’s men, chauvinist forces in Sri Lanka’s South are promoting Karuna as the leader of the proposed separated Eastern Provincial Council.
The London Times recently reported the large scale abductions of children by Karuna group and according to this report up to 900 under aged children from the East have been forcibly recruited by them as child soldiers. The true figure of recent forceful recruitment by Karuna’s men number 1300. They are all based near Sri Lankan military camps in the Batticaloa Polonnaruwa border area to be used as mercenary soldiers to fight along with the Sri Lankan army. In one well documented incident recently Karuna’s men joined on the side of the Sri Lankan Army at the recent Vahari attack and many died.
புலம்பெயர் தமிழரும் திலீபன் கண்ட கனவும்
1987 ஆம் ஆண்டு சின்னப் பையனாக வீட்டு கேற் பக்கம் நிற்கின்றேன். ஒரு லவுட்ஸ்பீக்கர் கட்டிய ஆட்டோவில் கண்ணாடி போட்ட இளைஞன் வந்து ஏதேதோ எழுச்சியோடு பேசுகின்றார். இறுதியில் கண்ணாடி போட்ட இளைஞன் என்ற திலீபன் சொன்ன "மக்கள் புரட்சி வெடிக்கட்டும்" என்ற வார்த்தை மட்டும் அப்படியே காதுக்குள் நின்றது. இன்று அது உலகம் பூராகவும் கைகூடியிருக்கின்றது.
எமது தாயக விடுதலைப் போராட்டம் ஒரு அமைப்பு சார்ந்து அந்த அமைப்பின் உலகளாவிய பிரதிநிதிகளின் வழிகாட்டலோடு தொடர்ந்து இன்று முழுமையாக மக்கள் மயப்படுத்தப்பட்டு விட்டது. நாளைக்கு ஒரு பேரணி என்றால் ஓவ்வொரு தமிழனுக்கும் போனில் அழைக்கவும், ஈமெயில் எழுதி அழைக்கவும் , வீதியில் இறங்கிப் போராடவும் கூடிய சூழ்நிலைக்கு மாறி விட்டோம்.
கதிர்காமர் குழுவினர் ஒவ்வொரு நாடு நாடாகச் சென்று தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடைசெய்யும் போது நாம் பேசா மடந்தைகளாகி விட்டோம் என்ற உண்மையும், அதன் விளைவாக இப்போது நாம் அனுபவித்து வருபவையும் காலம் கடந்து தான் உறைக்கின்றது.
தேசியத் தலைவர் பிரபாகரன் உலகத்தமிழர்களை நோக்கி இரண்டு மாவீரர் தின உரைகளின் போதும் கொடுத்த பாரிய வேண்டுகோளை அந்த நேரத்து செய்தியாக எடுத்துக் கொண்டு "தலைவர் எல்லாம் பார்த்துக் கொள்ளுவார்" என்று ஒதுங்கிப் போன கூட்டம் ஒரு புறம், புலிகளின் போர்த் தந்திரம் என்று வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்காகப் பார்த்து ஆய்வு எழுதிய கூட்டம் இன்னொரு புறம். புலிகள் ஒன்றும் Super man ஜாதி இல்லை, இராணுவச் சமநிலையில் சிறீலங்கா இராணுவத்துக்கு சற்று அதிகமாக இருந்தவர்களை இன்றைய மூன்றாம் கட்ட ஈழப்போர் மகாபாரதக் கண்ணன் சூழ்ச்சி போல பிராந்திர "வல்லுறவால்" ஒடுக்க முயலும் நிலை தான் இப்போது.
பரீட்சைக்கு முதல் நாள் படிச்சுப் பாஸ் ஆக வேண்டிய நினைப்பில் நாங்கள். இனிமேலாவது சர்வதேசத்துக்கு எமது உரிமைப் போராட்டத்தின் நியாத்தை இன்னும் இன்னும் பேசுவோம். தமிழுக்குள்ளே ஆய்வு வட்டமடிப்பதோடு ஆங்கிலம், பிரென்ச் போன்ற பல்லூடக மொழிகளின் மூலம் உடனுக்குடன் அங்கு நடக்கும் அவலத்தைக் கொண்டு போவேமே. இலங்கை அரசாங்கத்துக்கு நியாயம் கற்பிக்க ஹிந்து உட்பட நிறையவே ஆங்கிலப் பணியாளர்கள் இருக்கின்றர்கள், அவர்களைப் போன்று எமக்கான ஆங்கில ஊடகங்களை விசாலப்படுத்த முயல்வோம். எமக்குள்ளே இருக்கும் சின்னச் சின்னக் கருத்து வேறுபாடுகளைக் களைந்து ஒரே அணியில் நிற்போம். “நான் பெரிது நீ பெரிது என்றில்லாமல் நாடு பெரிது என்று வாழுங்கள்” என்று அந்தத் தலைவன் சொன்னதை செயற்பாட்டில் காட்டுவோம்.
அஜித் ஒரு கருத்து சொன்னால் போராட்டம், அர்ஜின் ஒரு கருத்துச் சொன்னால் போராட்டம் போன்ற புறக்கணிப்புப் போராட்டம் என்பது எவ்வளவு தூரம் இன்றைய காலகட்டத்தில் முக்கியமானவை என்பதை நாம் அறிவோமா? அஜித்துக்கும் அர்ஜினுக்கும் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை நாராயணனுக்கும் நம்பியாருக்கும் கொடுத்து எம் பணியைச் செய்தோமா?
அஜித்தோ அர்ஜினோ எமக்காப் பேசினாலும் சரி பேசாவிட்டாலும் சரி ஒன்றுமே ஆகப்ப்போவதில்லை, மாறாக எங்கள் பொன்னான நேரம் தான் போய்த் தொலையும் என்ற உண்மை எப்போது எங்களுக்கு உறைக்கும்.
0000000000000000000000000000000000000000000000000000000
சிறீலங்கா இராணுவம் உங்களை வரவேற்கின்றது
இலங்கை அரசாங்கம் வன்னி மக்களை ரட்சித்து விட்டதாம், ஏ9 பாதையும் வெகு சீக்கிரத்தில் வருமாம், இனியென்ன எல்லாம் சுகமே என்று ஆறுதல்படும் கூட்டத்தையும் பார்க்க முடிகின்றது. புலிகளை ஓரம் கட்டுவது வரை தமிழ்க்கூட்டாளிகளைச் சேர்த்து ஜனநாயகம் பேசும் சிங்களப் பேரினவாதம், "பற தெமுலு" என்று துரத்தும் காலமும் வராமற் போகாது.
கிழவர்களையும், கிழவிகளையும் தூக்கிக் கொண்டு போகும் பெண் சிப்பாய்களும், சாப்பாட்டுக்கு கையேந்தி நிற்கும் கூட்டத்துக்கு சோற்றுப் பார்சல்களை எறியும் சிப்பாய்களும் ஸ்டார்ட், ரெடி, ஆக்க்ஷன் கணக்காகப் போஸ் கொடுப்பது எல்லாம் பார்ப்பதற்கு வடிவாகத் தான் இருக்கின்றது.
1995 ஆண்டு முதல் 2009 வரையும் 14 வருஷங்கள் யாழ்ப்பாணப் பிரதேசம் ஒரு திறந்த வெளிக் கசாப்புக் கடை. காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரை மட்டும் தான் உங்கள் வாழ்வு என்று கட்டிப் போடும் ஊரடங்குச் சட்டம். விசாரணை எல்லாம் கிடையாது சந்தேகம் இருந்தால் ஒரே போடு துப்பாக்கி உமிழும் குண்டு பதம்பார்க்கும் வெற்றுடல்கள் அடுத்த நாட் காலை வீதியோரங்களில் நாய்கள் மோந்து பார்க்கக் கிடக்கும். இந்த வரலாற்றோடு இப்போது வன்னியில் இருந்து வந்த சனங்களும் சேர்ந்து கொள்வார்கள். ஒரேயொரு வித்தியாசம், முன்பெல்லாம் ஒவ்வொன்றாக எடுப்பார்கள், இனிமேல் கொத்துக் கொத்தாக எடுத்துக் கொள்வார்கள். ஏற்கனவே வன்னியில் இருந்து வந்து தொலைந்து போன 26,184 பேரோடு இந்தக் கணக்கு ஆரம்பிக்கின்றது. மேலதிக செய்திக்கு
ஒருமுறை இங்குள்ள வானொலி ஒன்றுக்கு முன்னாள் இந்திய இராணுவ அதிகாரி கேணல் ஹரிஹரன் சொன்ன கருத்து இப்போது ஞாபகத்துக்கு வருகின்றது. "நில ஆக்கிரமிப்பு செய்து குறைந்த பட்ச சால்ஜாய்ப்புக்களோடு தமிழர்களைத் திருப்திப் படுத்த சிங்கள அரசு முயலுமானால் இந்தப் போராட்டம் இன்றோ நாளையோ முடியப்போவதில்லை" என்று.
இன்றைக்கு எவ்வளவுக்கெவ்வளவு ஈழத்தமிழர் செயற்பாடுகளும், தமிழகத் தமிழர்களின் எழுச்சியும் பிரமாண்டமாக எழுந்திருந்திருக்கின்றதோ அவ்வளவுக்கவ்வளவு சிங்கள இனத்துவேஷமும் இன்னும் இன்னும் கிளர்ந்திருக்கின்றது. நீறுபூத்த நெருப்பாக இருந்தது தமிழர்களின் எழுச்சி மட்டுமல்ல, சிங்களப் பேரினவாதமும் கூட.
இப்போது தெளிவாகவே இந்த இரண்டு அணிகளும் தெரிகின்றன. இனிமேல் எமது தார்மீக உரிமைகளை இவர்களுக்குச் சொல்லி நியாயம் கேட்ட காலம் போய் விட்டது காரணம், இவ்வளவு காலமும் மாறி மாறி ஆட்சி செய்த இரண்டு பெரும்பான்மை சிங்களக் கட்சிகளுமே ஈழத்தமிழினத்தின் தார்மீக உரிமையான தேச விடுதலை என்பது எவ்வளவு தூரம் நியாயமானது என்பதை உணர்ந்திருப்பதால் தான் கூட்டு நாடுகளோடு இணைந்து எப்படியாவது நசுக்கப்பார்க்கின்றது. எனவே சர்வதேசத்துக்குத் தான் எம் அடுத்த கட்டப் பணி தேவையாக இருக்கின்றது.
தமிழ் நேசன் இணையத்தில் ஒரு அன்பர் சொல்லியிருந்தார் இப்படி
From: One Tamil in Tamil Eelam, 16 June 2008
Dear Sinhalese:
I understand that you are upset by us. Indeed, it appears that you are quite upset, even angry.
Today, it is the "barbarism of LTTE terrorism", yesterday it was the Federal party, before that it was the "favouritism of the British". It appears that Tamils, who could achieve equality and who, therefore, could live, upset you.
Indeed, every few years you seem to become upset by us. You were upset in 1956, in 1958, in 1961 and in 1977 and went on acts of arson, rape, pillage, murder and plain barbarity and we were scornfully asked to go to the Federal party for help.
Of course, dear Sinhalese, long before there was a Tamil tiger, we the Tamil people - upset you. And we go back a long way in the history of Sinhala upset. We upset the "Great" Sinhala King Dutugemunu and you still use his "history" to teach your young ones to be more upset by us.
Reds are upset and monks are upset. The radical Sinhalese are upset and the gentle "Sinhalese moderates" are upset. We upset the Sinhala Hamudawa who massacred tens of thousands of us; we upset the Sinhala police who, collaborated with rioters and killed, burnt and slaughtered untold numbers of us.
And it is because we became so upset over upsetting you, dear Sinhalese, that we decided to leave you - in a manner of speaking - and establish a Tamil state. The reasoning was that living in close contact with you, as resident-strangers, we upset you, irritate you and disturb you. What better notion, then, than to leave you (and thus love you) - and have you love us and so, we decided to come home - home to the same land we were driven to in 1983.
Having left you and your pogroms and riots, having taken our leave from you to live alone in our own little state of Tamil Eelam, we continue to upset you.
Well, dear Sinhalese, consider the reaction of a normal Tamil from Tamil Eelam:
In 1956 and 1958 and 1961 and 1977, there was no "Tamil terrorism" to impede peace between Tamils and Sinhalese. Indeed, there was no Kotias (Tigers) to upset anybody. Nevertheless, the same Sinhalese slaughtered thousands of Tamils in Hingurakgoda, Polonnaruwa, Minneriya and Colombo. Indeed, in 1958 so many Tamil men, women and children were mercilessly hunted down in Polonaruwa Sugar plantation.
Dear Sinhalese, why did you massacre hundreds of Tamils in one day in 1958? Why did you carry out the1977 pogrom and made 75,000 refugees. Could it have been your anger over Tiger terrorism in 2007? And why were thousands of Tamil men, women and children slaughtered in pogroms between 1956-83? Was it because Sinhalese were upset over Tiger terrorism in 1996?
The same twisted faces, the same hate, the same cry of "para demala" (foreign Tamils!) that we hear and see today, were seen and heard then. The same people, the same dream - Sinhala Buddhism only. What you failed to do yesterday, you dream of today.
Dear Sinhalese, you stood by and cheered on when the Sinhala police burnt down our beloved Jaffna library.
You stood by when Sinhala police massacred attendees at an International Tamil Cultural event in Jaffna.
You contributed and stood by in 1983 genocide, wildly cheered by wild mobs in every Sinhala town and city in your land.
You drove millions of Tamils to the North-East, thus suggesting Tamil Eelam is our only Homeland. When we come here to establish Tamil Eelam, alas that upsets you again. It appears that you are hard to please.
And since we know that the Sinhalese dream daily of our extinction, we will do everything possible to remain alive in our own homeland. If that bothers you, dear Sinhalese, well ? - think of how many times in the past you bothered us.
In any event, dear Sinhalese, if you are bothered by us, here is one Tamil in Eelam who could not care less and, frankly doesn't give a damn !
ஆகவே சோற்றுப் பார்சலுக்கு கையேந்தும் கூட்டமாக எம்மினத்தைக் காட்டி இந்த உரிமைகளைக் கட்டிப் போடமுடியாது என்பதை நாம் தொடர்ந்து செய்யப்போகும் செயற்பாடுகளும் இந்தப் பேரினவாதத்துக்கு மட்டுமல்ல சர்வதேசத்துக்கும் புரியவைக்கும், புரியவைக்கும் விதத்தில் செய்வோம்.
24 comments:
உணர்வுகளோடு ஒத்துப்போகிறேன் சகோதரா!
//கதிர்காமர் குழுவினர் ஒவ்வொரு நாடு நாடாகச் சென்று தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடைசெய்யும் போது நாம் பேசா மடந்தைகளாகி விட்டோம் என்ற உண்மையும், அதன் விளைவாக இப்போது நாம் அனுபவித்து வருபவையும் காலம் கடந்து தான் உறைக்கின்றது.//
உண்மைதான்!
//நாம் தொடர்ந்து செய்யப்போகும் செயற்பாடுகளும் இந்தப் பேரினவாதத்துக்கு மட்டுமல்ல சர்வதேசத்துக்கும் புரியவைக்கும், புரியவைக்கும் விதத்தில் செய்வோம்//
பொதுவாகவே இக்கொடூரங்களை கண்டு இரக்கம் கொள்ளும் எல்லா தமிழர்களின் மனதில் கொழுந்துவிட்டுக்கொண்டிருக்கும் தீக்கனலாய் இவ்வரிகள்!
உங்கள் ஆதங்கங்களை கொட்டி தீர்த்து விட்டீர்கள். புரியாத சில விஷயங்களை புரிந்து கொள்ள முடிகிறது. நன்றி கானாஸ்!
//தமிழுக்குள்ளே ஆய்வு வட்டமடிப்பதோடு ஆங்கிலம், பிரென்ஞ் போன்ற பல்லூடக மொழிகளின் மூலம் உடனுக்குடன் அங்கு நடக்கும் அவலத்தைக் கொண்டு போவேமே.//
முக்கியமாக ஐரோப்பிய நாடுகளில் வாழும் புலம் பெயர் தமிழர்கள் செய்ய வேண்டியது மொழி தாண்டுவோம்.அதற்கான சாத்தியங்களும் நட்புக்கான வட்டங்களும் உங்களுக்கு அமைந்திருக்கிறது.இபோதைக்கு ஊடகங்களில் ஈழம் குறித்த பார்வை விழுவதற்கும் கூட புலம் பெயர் மக்களின் குரல்களே.
இந்தக் கணத்தில் உங்கள் குரல்களை ஒலிக்கச் செய்யவாவது உதவிய அத்தனை நாடுகளுக்கும் தமிழன் நன்றி சொல்லியே ஆகவேண்டும்.அதே நேரத்தில் புலம்பெயர் தமிழர்களின் குரல் உரிமைக்கான தீர்வு ஏற்படும் வரையில் நீர்த்துப் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும் அவசியம்.
தமிழகம் பொறுத்த வரையில் உண்மையான உணர்வாளர்கள் பலர் இருந்தாலும் தற்போதைய சூழலில் அரசியல் சண்டைகளை ஜெயித்து வரவேண்டிய கால கட்டத்திலும் அதுவே பிரச்சினையின் மையத்தை விட்டு நகர்ந்து விடும் அபாயத்திலும் நாட்களை நகர்த்துகிறது.
இருந்தும் வரும் காலங்கள் தமிழகத்தில் உரிமைக் குரலை உயர்த்திப் பிடிக்கும் என நம்புவோம்.
பிரபா!
மலையத்தில் உள்ள இந்திய வம்சாவளி மக்கள் அடிமைப்படுத்தப்பட்ட மக்களாகவே இருப்பதற்குக் காரணம், அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும், கட்சிகளே. இவை இந்தியாவில் மத்திய அரசுக்கு தாளமிடும் தமிழக அரசிலும் கீழானவை. அதனால்தான் எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தொண்டமான் குடும்பம் அமைச்சராகிவிடுகிறது. ஆனால் பாவம் மக்கள் மட்டும் ஆங்கிலேயன் அமைத்துக் கொடுத்த லயன்களிலே ஏதுமற்றவர்களாக இருந்து வருகிறார்கள். இதைப்போலவேதான் வடக்குக்கிழக்கின் பூர்விகத் தமிழரும் வாழவேண்டுமென இந்தியாவும், இலங்கையும் விரும்புகின்றன. இந்த வேறுபாடு சொல்லிப்புரிய வைப்பது மிகக்கடினம்.. ஆனாலும் சொல்லி வைப்போம்.
உணர்வுப்பகிர்வுக்கு நன்றி...
உங்களது உணர்வுகளை உணர முடிகின்றது. களத்தில் இழப்புகளை அறிந்தவர்களின் முன்னால் சுகபோகிகளாக தமிழக மக்களாகிய எங்களால் எதையும் சரியான அளவில் உணர முடியாது.
இன்றைய சூழலில் எனக்கு இருக்கும் வருத்தம், ஆயுதங்கள் வாங்க அள்ளிக் கொடுத்த நம் புலம் பெயர் சொந்தங்கள், பட்டினியுடன் சிங்கள வேட்டை நாய்களின் முன்னால் கொட்டடிகளில் அடைபட்டுக் கிடக்கும் நம் உறவுகளுக்கு உதவ முயற்சிகள் செய்யாமல் இன்னும் வால் பிடித்துக் கொண்டு இருப்பது தான்... :(
எழுந்திரு!
விழித்துக் கொள்!!
லட்சியத்தை அடையும் வரை நில்லாதே!!!
என்ற ஸ்லோகத்தை அன்று விவேகானந்தர் ஈழத்தமிழருக்காகத் தான்
சொல்லிச் சென்றாறோ!?
இலங்கையில் நடந்தவை... நடப்பவை... எல்லாவற்றையும் அறிந்திருந்தால் கருத்து சொல்ல முடியும். தமிழன் அடி வாங்குகிறான் என்பது புரிகிறது. சிங்களன் அடிக்கிறான் என்பதும் புரிகிறது. ஒன்று சேர்ந்து வாழும் வழியே கண்ணுக்கெட்டிய தூரத்தில் தெரியவில்லை. ஒத்துவரைலைன்னா அத்துட்டு வர வேண்டியதுதான்.
எல்லாம் நல்லதே நடக்கனும். நடக்கும்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஆயில்யன் மற்றும் நல்லவன்
நம்பிக்கையுடன் இருப்போம் தல.
நீங்கள் ஈழத்து படைப்பாளிகளை பற்றி நிறைய எழுதியுள்ளீர்கள்.
ஈழப்போராட்டம் பேசும் நூல்களை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்.
ஆனால் போராட்டம் பற்றிய உங்கள் கருத்துகளை அறியமுடியவில்லை.
இந்த பதிவில், நீங்கள் இதுவரை எழுதாததிற்கு காரணமும் எழுதியிருக்கிறீர்கள்.
நன்றி.
நிறைய விடயங்களை ஆதாரங்களுடன் எழுதியுள்ளீர்கள்.
மலையதமிழர் பிரச்சினை, ஈழத்தின் ஆரம்ப கால போராட்டம் பற்றி
பலருக்கு தெரியாது. முக்கியமாக ஈழத்தமிழருக்கும் கூட.
இந்த பதிவு வாசிப்பவர்கள் ஓரளவேனும் புரிந்து கொள்ளலாம்.
//ஆனால் ஆண்டாண்டு காலம் சாத்வீக வழியில் சிங்கள அரசுகளிடம் நியாயம் கேட்டு சாத்வீக வழியில் போராடி அதுவும் முடியாமல்//
சாத்வீக வழியில் நடந்த போராட்டங்களை எல்லாம் எமது மக்கள் சுலபமாக மறந்துவிட்டார்கள்.
உங்கள் பதிவு ஓரளவு ஆறுதலை தருகிறது.
http://www.youtube.com/watch?v=kN3Ct4KcH1Y&feature=related
இங்கு பாட்டை பாடுபவர் யார்?
அந்த குரல் கண்ணீரை வர வைக்கிறது.
ஈழ கலைஞர்கள் பற்றி நீங்கள் தெரிந்து வைத்திருப்பதால் கேட்கிறேன்.
முடிந்தால் சொல்லவும்.
வணக்கம் ராஜ நடராஜன்
தமிழகமும், புலமும் சேர்ந்து செய்யவேண்டியது உலக நாடுகளின் கவனத்தை ஈர்ப்பது தான். மிக்க நன்றி உங்கள் வருகைக்கு
வணக்கம் மலை நாடான்
மூடிமறைக்கப்படும் வரலாறுகளோ அல்லது அரைகுறை ஞானமோ பல எதிர்வினைகளை ஆற்றக் கூடும், எங்களால் இயன்றதை இப்படியான தரவுகள் மூலம் காட்டி நிற்போம்.
வருகைக்கு நன்றி தமிழன்
வணக்கம் தமிழ்ப்பிரியன்
இராணுவம் மீட்ட வன்னி மக்களை கணவன் வேறு, மனைவி வேறு, பிள்ளைகள் வேறு என்று கூண்டுச் சிறைகளில் அடைத்திருப்பதை அங்குள்ள வெளி நாட்டு உதவி நிறுவன ஊழியரே சுட்டிக் காட்டியிருந்தார், இந்த நிலையில் புலம்பெயர் தமிழர்கள் இவர்களுக்கு உதவி செய்வதை நினைத்தும் பார்க்க முடியாத நிலமை அது தான் உண்மை.
எப்போதோ எழுதியிருக்க வேண்டிய உங்க உணர்வுகளை இப்போது சரியான சமயத்தில் வெளிகொணர்ந்துள்ளீர்.
ஈழத்தில் நடக்கும் கொலைகள் தமிழகத்தில் சிலர் அரசியலாக்கிக் கொண்டிருக்கின்றனர். உண்மையில் உதவும் மனப்பான்மை இருக்கிறதா என்று தெரியவில்லை..
நமது சகோதரர்கள் அங்கே தினமும் மாண்டுக்கொண்டிருக்கின்றனர். :-(
//Anonymous said...
http://www.youtube.com/watch?v=kN3Ct4KcH1Y&feature=related
இங்கு பாட்டை பாடுபவர் யார்?
அந்த குரல் கண்ணீரை வர வைக்கிறது.//
வணக்கம் நண்பரே
இவர் பெயர் பொன் சுந்தரலிங்கம், ஈழத்தில் புகழ்பூத்த பாடகர்களில் ஒருவர், எழுச்சிப் பாடல்களும் பல பாடியிருக்கின்றார், இன்னொரு குறிப்பிடத்தக்க பாடல் "உயிரினும் மேலான தாய் நாடு இன்று உடலங்கள் எரிகின்ற பேய் வீடு"
//இணையத்தில் இயன்றவரை தாயக விடுதலைப் போராட்டம் சார்ந்து என் கருத்தை இதுவரை பதியாமல் விட்டுவைத்தேன்.//
காலதாமதமான உங்கள் உணர்வுப்பகிர்வுக்கு நன்றி...
//தமிழுக்குள்ளே ஆய்வு வட்டமடிப்பதோடு ஆங்கிலம், பிரென்ச் போன்ற பல்லூடக மொழிகளின் மூலம் உடனுக்குடன் அங்கு நடக்கும் அவலத்தைக் கொண்டு போவேமே,..//
உன்மைதான் அது புலம் பெயர் ஈழ தமிழ் சமுகத்தால் தான் எடுத்து செல்ல முடயும் என என்னுகேரன்.இபோதைக்கு ஊடகங்களில் ஈழம் குறித்த பார்வை விழுவதற்கும் கூட புலம் பெயர் மக்களின் குரல்களே. புலம் பெயர்ந்த போராட்டங்களில் கூட அதிக அளவில் இந்திய தமிழர்களை காணமுடியவில்லை என்பது வருத்தமாக இர்ருகிறது.
எல்லாம் நல்லதே நடக்கனும் என்று எண்ணாமல் அதற்கான் முயற்சியில் ஈழ தமிழ் சமுகம் செயல்படட்டும்.
அருண்
வணக்கம் பிரபா ..
//
புலிகளை ஒழித்து விட்டு இது பற்றிப் பேசலாம் என்று சொல்லிக் கொள்ளும் அறிஞர் கூட்டமும் இருக்கின்றது.//
இது என்ன ? எனக்கும் இது புரியவே இல்லை .. மேதமை பொருந்திய தமிழக அம்மையார் அடிகடி சொல்லுவது இது தான்,இப்போது இன்னும் சுதி ஏறி இருக்கிறது ......
இன்னும் காலம் முடிந்து விடவில்லை.. நாம் எல்லோரும் உரத்து குரல் கொடுத்தால் முடியாதது எதுவும் இல்லை..நன்றிகள் பிரபா ..
தெரிந்துக் கொள்ள பல அரிய செய்திகள் இருக்கின்றன. நல்ல பதிவு.
//அரசியல் முதிர்ச்சியற்ற (இப்போது ராகுல் காந்தி இருப்பது போல )//
இது போன்ற கண்டுபிடிப்புகளைத் தவிர்த்து இருக்கலாம். அதென்ன குறிப்பாக ராகுல்காந்தி? இந்தியாவில் மற்ற அரசியல்வாதிகள் எல்லாம் அரசியல் முதிர்ச்சியானவர்களா? ராகுலுக்கு மட்டும் தான் இல்லையா?. டீக்கடை செய்தித் தாள்களில் அரசியல் படிப்பவனெல்லாம் பெரிய சாணக்கியன் மாதிரி பீலா விட்டுக் கொண்டிருக்கும் போது அரசியல் பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறந்து பிறந்தநாள் முதல் அரசியல் காற்றை சுவாசித்து வாழ்பவருக்கு அரசியல் முதிர்ச்சி இருக்காதா? ராகுலே அரசியல் அனுபவம் போதாது என்று தான் சொல்கிறார். ஆனால் அது தன்னடக்கம் மட்டுமே. மோடியோ அத்வானியோ பிரகாஸ் கராட்டோ மாயவதியோ , யாரானாலும் பதிலடி கொடுக்கும் அளவு அரசியல் அறிவு ராகுலுக்கு இருக்கு. உங்கள் விஷமப் பிரச்சாரத்தை கண்டிக்கிறேன்.
மற்றவகையில் பயனுள்ள தகவல் பொதிந்த பதிவு தான்.
Anonymous said...
எழுந்திரு!
விழித்துக் கொள்!!//
விழித்துவிட்டோம், இனி செயற்பாட்டில் தீவிரம் காட்டுவோம், நன்றி நண்பரே
// G.Ragavan said...
எல்லாம் நல்லதே நடக்கனும். நடக்கும்.//
மிக்க நன்றி ராகவன்
வருகைக்கு நன்றி கோபி
// வாசுகி said...
அறியமுடியவில்லை.
இந்த பதிவில், நீங்கள் இதுவரை எழுதாததிற்கு காரணமும் எழுதியிருக்கிறீர்கள்.
நன்றி.//
மிக்க நன்றி வாசுகி, தேவை ஏற்படும் பட்சத்தில் என் கருத்துக்களை வழங்குவேன்.
//.:: மை ஃபிரண்ட் ::. said...
எப்போதோ எழுதியிருக்க வேண்டிய உங்க உணர்வுகளை இப்போது சரியான சமயத்தில் வெளிகொணர்ந்துள்ளீர்.//
வருகைக்கு நன்றி மைபிரண்ட்
உங்கள் கருத்துக்கு நன்றி அருண்
// Sakthy said...
வணக்கம் பிரபா ..
//
புலிகளை ஒழித்து விட்டு இது பற்றிப் பேசலாம் என்று சொல்லிக் கொள்ளும் அறிஞர் கூட்டமும் இருக்கின்றது.//
இது என்ன ? எனக்கும் இது புரியவே இல்லை ./
வணக்கம் சக்தி
ஆயிரமாயிரம் மறவர்களின் குருதி மழையில் கிடைக்கும் தேசத்தை குரங்கு அப்பம் பிரித்த கதையாய் நியாயம் கற்பிக்கும் கூட்டம் இது.
வணக்கம் பிரபா,
விரிவான பதிலாக பின்னூட்டமிடவேண்டும் என்பதால் சற்று தாமதமாகவே என் பின்னூட்டம் அமைகின்றது. இந்தக் கட்டுரையில் நிறைய தகவல்களாஇ கோர்த்து தந்துள்ளீர்கள். இது போன்ற எம் வரலாற்றுச் சுவடுகளை நாம் சரியான முறையில் பதியாமலேயே விட்டுவிட்டோம். இதில் நாம் பலவீனப்பட்டுவிட்டோம். அண்மையில் தமிழகத்தில் நடைபெற்ற ஆதரவுக் கூட்டங்களில் உண்மையான அக்கறையுடன் பேசிய பலருக்குக் கூட இலங்கைத் தீவுடன் ஈழத்தமிழர்களுக்கு இருக்கின்ற உரித்தும், பூர்வீகமும் தெரியவில்லை. நாம் கூட அப்படியான வரலாற்று ஆய்வுகளில் சரியான ஆர்வம் காட்டவில்லைதான்.
ஒரு உதாரணத்துக்கு அமெரிக்காவின் CIA தளாத்தில் இலங்கை பற்றி க்உறிப்பிட்டுள்ளதை பாருங்கள். “The first Sinhalese arrived in Sri Lanka late in the 6th century B.C. probably from northern India. Buddhism was introduced in about the mid-third century B.C., and a great civilization developed at the cities of Anuradhapura (kingdom from circa 200 B.C. to circa A.D. 1000) and Polonnaruwa (from about 1070 to 1200). In the 14th century, a south Indian dynasty established a Tamil kingdom in northern Sri Lanka. The coastal areas of the island were controlled by the Portuguese in the 16th century and by the Dutch in the 17th century. The island was ceded to the British in 1796, became a crown colony in 1802, and was united under British rule by 1815. As Ceylon, it became independent in 1948; its name was changed to Sri Lanka in 1972. Tensions between the Sinhalese majority and Tamil separatists erupted into war in 1983. Tens of thousands have died in the ethnic conflict that continues to fester. After two decades of fighting, the government and Liberation Tigers of Tamil Eelam (LTTE) formalized a cease-fire in February 2002 with Norway brokering peace negotiations. Violence between the LTTE and government forces intensified in 2006 and the government regained control of the Eastern Province in 2007. In January 2008, the government officially withdrew from the ceasefire, and by late January 2009, the LTTE remained in control of a small and shrinking area of Mullaitivu district in the North.
’’
எமது வரலாறு இப்படித்தான் திரித்துச் சொல்லப்படுகின்றது. சிங்கள அரசு பிற நாட்டவரிடமும், பிறா மொழியினரிடமும் எமக்கெதிராக செய்யப்பட்ட பிரச்சாரத்துடன் ஒப்பிடப்படும்போது நாம் குறைந்த பட்ச சுய விளக்கத்துக்கான பிரசாரத்தைக் கூட செய்யவில்லை.
இது நெருக்கடி வேளை தான், எனினும் இனியேனும் விழித்தெழுவோம்
Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
தெரிந்துக் கொள்ள பல அரிய செய்திகள் இருக்கின்றன. நல்ல பதிவு.
//அரசியல் முதிர்ச்சியற்ற (இப்போது ராகுல் காந்தி இருப்பது போல )//
இது போன்ற கண்டுபிடிப்புகளைத் தவிர்த்து இருக்கலாம். அதென்ன குறிப்பாக ராகுல்காந்தி?//
வணக்கம் சஞ்சய்
இத்தனை ஆயிரம் மக்களைப் பலியெடுத்த இந்தப் பிரச்சனை எல்லாம் பெரும் பிரச்சனையே இல்லை என்றாரே கடந்தவாரம் இவர், அந்த அறிவு முதிர்ச்சியைத் தான் சொன்னேன்.
'தமிழனுக்கு என்றோர் நாடும் இல்லை
தமிழன் இல்லாத நாடும் இல்லை'
ஆண்ட தமிழினம் மீண்டுமொரு முறை ஆழநினைப்பதில் என்ன பிழை.
அன்புக்குரியவர்களே!
இதுதான் வேண்டும். இந்த எழுச்சிதான் வேண்டும். ஆனால் இந்த எழுச்சிக்கு நாம் இத்தனை விலைகளை கொடுக்க வேண்டி இருந்தது. பரவாயில்லை. விலை இல்லாமல் எதையும் அடைய முடியாது. அவரவர் தத்தம் தேசத்தில் ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு என்னென்ன வழிகளில் போராடலாமோ தயவு செய்து அதை தொடருங்கள்.
30 வருடமாக எமக்கான விடுதலை என்று தமது உயிரை கொடுத்து களத்திலே போராடும் போராளிகளுடன் ஒப்பிடும் போது நாம் என்ன பெரிதாக செய்துவிட்டோம். கையில் கிடைத்தவற்றுடன் ஓடி ஓடி ஒடி ஓட இடமில்லாமல் விட்டில் பூச்சிகள் போல மடிந்தும், காயம் அடைந்தும் சரியும் அந்த மக்கள் படும் துயரத்துடன் ஒப்பிட்டால் நாம் என்ன துயர் அடைந்தோம்.
அவர்கள் வாழ்நாள் பூராகவும் படும் துயருக்கு நாம் அண்மைக்காலமாகத்தானே எழுச்சியோடு போராடி வருகிறோம். காலம் காலமாக எமக்காக, எங்கள் உறவுகளுக்காக போராடும் போராளிகளையும், அவர்களை தாங்கி நின்ற மக்களுக்காகவும் இப்பொழுது நாம் போராடுவோம். இதை கூட செய்ய முடியவில்லை என்றால் நாம் மரம் ஆகிவிடுவோம். வரலாறு எம்மை மன்னிக்காது.
தலைவன் நினைத்தது நடக்கும். அவன் ஒரு தீர்க்கதரிசனமான சூரியத்தலைவன். அவனது கருத்துகளும் முடிவுகளும் எப்படியானது என அருகில் இருந்தவர்களுக்கு தெரியும். காலமும் வரலாறும் விரைவில் அதை உணரும்.
சற்றும் தளர்ந்து விடாதீர்கள். அந்த போராளிகள் இப்பொழுதும் தளராமல் அந்த மக்களுடன் நின்று போராடுகிறார்களே! அந்த மக்கள் இன்றும் இம்மியளவும் தங்கள் விடுதலைக்கான ஆதரவை விலக்காமல் அந்த தலைவனுடனேயே இருக்கிறார்களே! ஆகவே நாமும் ஆத்மார்த்தமாக அகிம்சையாக அமைதியாக உலக நாடுகளின் மனச்சாட்சியை தட்டி எழுப்புவோம்.
தியாகி திலீபன் 22 ஆண்டுகளுக்கு முன்பு கண்ட கனவு இப்போது நனவாகிறது. இன்னும் மனம் தளராமல், கடுகளவேனும் சோராமல், காலத்தின் திசையில் விடுதலையை விரைவு படுத்துவோம்.
ஆணவம் மிகுந்தவனின் கூர்மையற்ற முடிவுகளால் சிறிலங்கா அரசு சந்திக்கும் பிரச்சினைகளை எமக்கு சாதகமாக்குவோம். அவனை மேலும் சிக்கலுக்குள்ளாக்குவோம்.
விடுதலையை வென்றெடுப்போம். வெல்வோம். வாழ்வோம்.
---- நன்றி கானாபிரபா. காலத்தின் கண்ணாடியாக வந்த பதிவு. அருமையான விடயங்கள். இதுதான் பதிவுப்புயலுக்கு முந்திய அமைதியோ என நினைக்க வைக்குது. தொடருங்கள். வாழ்த்துக்கள்!!
//அருண்மொழிவர்மன் said...
வணக்கம் பிரபா,
விரிவான பதிலாக பின்னூட்டமிடவேண்டும் என்பதால் சற்று தாமதமாகவே என் பின்னூட்டம் அமைகின்றது.//
வணக்கம் அருண்மொழிவர்மன்
நீங்கள் பின்னூட்டத்தில் சொன்னது போல எமது வரலாறுகள் முறையாக எடுத்துச் செல்லாததால் தான் பல பின்னடைவுகளைச் சந்தித்திருக்கின்றோம், மிக்க நன்றி உங்கள் விரிவான கருத்துக்கு,
தமிழன் விரும்பி
உங்கள் விரிவான கருத்துக்கு மிக்க நன்றி
Post a Comment