skip to main | skip to sidebar

"மடத்துவாசல் பிள்ளையாரடி"

"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்"

Pages

  • Home

Saturday, May 03, 2008

My Daughter the Terrorist - மூன்று பெண்களின் சாட்சியங்கள்

அப்ப தொண்ணூற்றி இரண்டாம் ஆண்டு, எங்கள் கல்லூரி விளையாட்டு மைதானமே களை கட்டுத்து. பின்னை என்ன, நாலு வருஷத்துக்குப் பொதுவிலை, கன காலத்துக்குப் பிறகு எங்கட பள்ளிக்கூடத்தில் நடக்கிற விளையாட்டுப் போட்டி எல்லோ.ஒரு பக்கம் செல்லையா இல்லம், இன்னொரு பக்கம் சபாபதி, கார்த்திகேசு இல்லங்கள், அங்காலை சபாரட்ணம் இல்லம் எண்டு மைதானத்தின்ர ஒவ்வொரு மூலையில் இருக்கும் பெரிய மரங்களுக்குக் கீழ நிண்டு ஒவ்வொரு விளையாட்டு இல்லக்காரரும் தங்கட அணியில் விளையாடுற ஆட்களை எடுத்துக் கொண்டு நிற்கினம். இஞ்சாலை கடந்த நாலு வருஷமா விளையாட்டுப் போட்டி நடக்காததால மானம் காப்பாற்றுப்பட்ட தெம்பில் நாகலிங்கம் இல்லக்காரர் இருக்கிறம்.

முந்தி நடந்த போட்டிகளில் எல்லாம் எங்கட இல்லக்காரர் பெருந்தன்மையோட விளையாட்டுக் கேடயங்களையும், கப்புகளையும் மற்ற இல்லக்காரருக்குக் கொடுத்து விடுவினம். இந்த முறை எப்படியாவது சாதிக்கவேணும் எண்ட துடிப்பும் வெறியும் எல்லாரின் மனசிலையும் இருந்தது. ஒரு ஓரமாக நிண்டு இல்லக்காரரோட வேடிக்கை பார்க்கிறன். பெண்களுக்கான தேர்வு நடக்குது. முதலில் உயரம் பாய்தல், பிறகு நீளம் பாய்தல் இரண்டிலும் அவள் தான் அதி உச்ச இலக்கை அடைஞ்சு தெரிவு செய்யப்படுகிறாள். ஆளை எனக்குத் தெரியும், எங்கட வயசு சீ வகுப்பில படிக்கிற மாதினியின்ர தங்கச்சி தான் அவள். நல்ல மா நிறமும் களையான தோற்றமுமாக ஒரு ஐயர் பொம்பிளை மாதிரி இருப்பாள். இவள் தான் எங்கட இல்லத்தின்ர மானத்தைக் காப்பாற்றுவாள் மச்சான், பக்கத்தில் நின்ற மணிகரன் சொல்லுறான் என்ர காதுக்குள்ள. அடுத்த நாள் அதே நேரம் விளையாட்டுப் பயிற்சி நடக்குது, ஆனா அவள் வரேல்லை. இயக்கத்துக்குப் போட்டாளாம், அவள் வகுப்புப் பெண் ஒருத்தி சொன்னாள்.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

இன்று My Daughter the Terrorist ஆவணப்படம் பார்க்கும் போது மாதினியின் தங்கை தான் நினைவுக்குள் வந்தாள்.

"எங்கட உண்மை முகம் வந்து வெளியில இருக்கிறவைக்குத் தெரியாது, அதால தான் எங்கள வந்து பயங்கரவாதிகள் எண்டு சொல்லுகினம்"

அடந்த காட்டில் மழை வெள்ளச் சக்தியிலே பாய்ந்தோடிக் கொண்டு வேவு பார்க்கும் போராளி புகழ்ச்சுடர் இப்படிச் சொல்வதில் இருந்து இந்த ஆவணப்படம் ஆரம்பிக்கின்றது.

போராளிகள் புகழ்ச்சுடர், தர்சிகா மற்றும் தர்சிகாவின் தாய் அன்ரனியா இந்த மூன்று நிஜப்பாத்திரங்கள் தான் படம் முழுக்கப் பேசுகின்றன. புகழ்சுடரும் தர்சிகாவும் மாலதி படையணியில் ஏழு வருஷமாக இருக்கும் கரும்புலிப் போராளிகள். போராளிகளின் வாழ்வியல், போராளிகளைக் களத்துக்கு அனுப்பிவிட்டிருக்கும் பெற்றோர் இந்த இரண்டு பக்கத்தையும் மாறி மாறி போரியல் வரலாற்றாடோடு பிணைத்தவாறே நிஜமான காட்சிகளின் தொகுப்பாக ஒத்திகை இல்லாத படைப்பாக அமைகின்றது இது.

"வீட்டை இழந்தம், வீட்டுக்காரரை இழந்து, பிள்ளையளுக்குப் படிப்பில்லை, நாங்கள் நினைச்சது வேற, பிள்ளையள் வளர்ந்த விதம் வேற, எல்லாரும் ஆளுக்கொரு பக்கம்"
தர்சிகாவின் தாய் தன் கோணத்தில் தன் குடும்பத்தின் நிலையைச் சொல்கிறார்.

தர்சிகாவின் தாய் தன் கோணத்தில் சொல்லும் நியாயங்களும், தர்க்கங்களும் நாட்டின் பொதுவான இனப்பிரச்சனையின் குரலாக ஒலிக்கின்றது. மறுபக்கம் போராளிகள் தர்சிகாவும், புகழ்ச்சுடரும் சொல்லும் நியாயங்களும் தர்க்கங்களும் இதுதான் இன்று எமக்கு விதிக்கப்பட்ட ஒரே விதி/வழி என்ற பக்கமாகக் காட்டப்படுகின்றது. இடைக்கிடை ஒலிக்கும் சிறு சிறு துண்டங்களாலான இவர்களின் பேச்சோட்டத்தோடு இதுவரை நாள் நடந்த தாக்குதல் நிகழ்வுகளில் சிலவும், பேரினவாதத்தின் கோர அனர்த்தத்தின் விளைவால் அடுக்கி வைக்கப்பட்ட அப்பாவிகளின் சடலங்கள், இடிபாடுகளுக்குள் இருந்து எட்டிப்பார்க்கும் சிறுவன், துணிக்கொட்டகைக்குள் இடம் பெயர்ந்த குடும்பம், பொத்தல் குடிசைக்குள் வாழ்க்கை நடத்தும் இளம் குடும்பம் என்று போரின் சுவடுகள் காட்சிகளாகவும், சம்பவங்களாகவும் விரிகின்றன.

இந்தப் படம் நோர்வே நாட்டின் Beate Arnestad இயக்கத்தில் Morten Daae இன் படத்தொகுப்பு மற்றும் தயாரிப்பில் 2007 இல் வெளியான 60 நிமிட ஆவணப்படம் (Documentary). இந்தப் படத் தயாரிப்பாளருக்கு கொலை மிரட்டலும் போயிருக்கின்றது. இங்கே செய்தி
ஆங்கிலம், பிரெஞ்சு, நோர்வேஜியன் subtitle உடன் முழுமையாக தமிழில் ஒலியமைப்போடும் தான் இது படமாக்கப்பட்டிருக்கின்றது. உரையாடலையும், சம்பவங்களையும் கோர்த்த நேர்த்தி, சுருக்கமான ஆனால் சுருக் ஆன பேச்சாடல்,Frank Alvegg இன் ஒளிப்பதிவு என்று எல்லாவற்றிலும் ஒரு சீரமைப்பு இருக்கின்றது இப்படத்தில்.

இயக்குனர் Beate Arnestad பற்றி Norwegian Film Institute இல், Beate Arnestad worked for many years and in many different positions at Norwegian broadcaster NRK, mainly in the divisions of culture and entertainment. Her first documentary was "Where the waves sing" (2002), tracing the life of a former painter and governor in the forgotten Danish-Norwegian colony Tranquebar in India.
While living in Sri Lanka from 2003 to 2006, she started exploring the concept of women in war, which turned into the film "My daughter the terrorist."She is currently starting work on a new documentary, this time based on recent African history.

Man International Film Festival இல் Best International Feature-length Document என்ற பிரிவில் இப்படத்திற்காக இயக்குனருக்கு விருது கிடைத்திருக்கின்றது. Norwegian Short Films Festival இல் Best Norwegian Documentary என்ற விருதும் இப்படத்திற்கு எட்டியிருக்கின்றது. மேலதிக விபரங்களுக்கு Snitt Film Production

ஏற்கனவே நடந்த கள நிலவரங்கள், யுத்த அனர்த்தங்கள் போன்றவற்றின் காட்சித் தொகுப்புக்களை வைத்துக் கொண்டு, களத்தின் சாட்சியங்களாக மூன்று பெண்களை வைத்துக் கொண்டு நம் தரப்பு நியாயங்களைக் கோடிட்டுக் காட்டுகின்றது. அதற்குப் பக்கம் பக்கமான வசனங்களோ, செயற்கையான காட்சிகளோ தேவை இருக்கவில்லை. நமது நிஜ வாழ்வில் நம் தமிழ் சமூகத்துக்கு அளிக்கப்பட்ட, அளித்து வரும் மோசமான பேரினவாத யுத்தமும் அதனால் பாதிக்கப்பட்ட இந்த மூன்று பெண்களுமே சாட்சியங்களாக அமைகின்றன.
"அவை சொல்றது, நல்ல ஒரு பிள்ளை, உங்கட பிள்ளை நல்ல ஒரு கெட்டிக்காரி எண்டு சொல்லிக் கொண்டிருக்கிறாங்கள்" பேசிக்கொண்டிருக்கும் தர்சிகாவின் தாய் முகத்தில் வெள்ளாந்தியான களை ஒட்டிக் கொள்ள, பார்க்கும் நமக்கு கண்கள் பனிக்கிறன. எமது தாய்மாருக்குத் தான் தம் பிள்ளைகளை மற்றவர்கள் உயர்த்திப் பேசும் போது அது கொடுக்கும் இன்பம் எவ்வளவு பெரியது என்பதை இந்தக் காட்சியின் களத்தையும் நெகிழ வைக்கின்றது.


"அவள் சேர்ச்சுக்குப் போவாளோ தெரியாது" என்று ஒரு காட்சியில் தர்சிகாவின் தாய் சொல்ல
பிறிதொரு காட்சியில்

"இப்ப மாதா இவ்வளவுக்காவது இப்பிடி இருக்கினம், ஆனா யுத்த காலத்தில வந்து மேரி மாதா வந்து இப்பிடி இருக்கேல்லை. தூள் தூளாத் தான் இருந்தவ, அப்படித்தான் எங்கட உறவுகளும் தூள் தூளாப் பிரிஞ்சிருந்தவை. இந்த நேரத்திலை நாங்களும் தனியத்தான் பிரிஞ்சிருக்கிறம், அதே நேரம் அவையளோட (தேவாலயத் திருவுருவச்சிலைகள்) நான் பேசிக் கொண்டிருப்பன், மனம் விட்டுக் கதைச்சுக் கொண்டிருப்பன். உங்களுக்கு நான் தொண்டு செய்ய நான் வரப்போறன் என்னை நீங்கள் ஏற்றுக் கொள்வீரா எண்டு நான் அவையளோட கதைச்சுக் கொண்டிருப்பன்"

யுத்த இடிபாடுகளுளோடு இருக்கும் தேவாலய முன்றலில் திருவுருவங்களுக்கு மத்தியில் தர்சிகா பேசிக்கொண்டிருக்கிறார். கை லேஞ்சியிலால் பொங்கும் அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டே மடிக்கணினியின் திரையில் தன் மகள் பேசும் அந்தக் காட்சியை அவரின் தாய் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

ஒரு நாள் இரவில் ஊரிழந்து நிர்க்கதியாகி இடம்பெயர்ந்த காலத்தில் இருந்து போராளியாக மாறிய நினைவுகளை மீட்கின்றார் போராளிப் பெண் புகழ்ச்சுடர்.

"பிறண்ட்ஷிப் எண்டிறத விட ஒராளின்ர இன்ப துன்பங்களில மற்ற ஆள் பங்கெடுப்பம், இந்த அணிக்குள்ளை இருக்கேக்க ஆளுக்காள் உதவியா இருப்பம், வேற ஒரு அணிக்குப் பிரிஞ்சு போறதுக்கும் பிரச்சனை இல்லை, போவம்" போராளிகளுக்கு இடையில் இருக்கும் நட்புறவுகள், களத்தில் நிகழும் விடங்கள் என்று காட்சிகள் மாறுகின்றன.

"சின்னப்பிள்ளையா இருக்கேக்க பள்ளிக்கூடம் போகேலாது, சேர்ச்சுக்குப் போகேலாது, எண்டேக்கை பிள்ளை வீட்டுக்கை தானே அடைபட்டுக் கிடக்குது அதல பிள்ளைக்கு விரக்தி, எனக்கு சுதந்திரமா எங்கேனும் இருக்கோணும் எண்டு" தன் பிள்ளையைக் களத்துக்கு அனுப்பிய பிரிவுத்துயர் இருந்தாலும் தர்சிகாவை நியாயப்படுத்துகின்றாள் தாய்.

"எத்தினையோ இழப்புகளுக்கு மத்தியில் தான் என்ர பிள்ளை இருக்குது, ஒரு தர்சிகா இல்லை ஆயிரம் தர்சிகாகள் இருக்கிறாங்கள் இருக்கிறாங்கள் எல்லாத்தையும் இழந்து கொண்டு
என்ர பிள்ளையைப் போல எத்தனையோ பிள்ளையள் கை காலை இழந்து, கண்களை இழந்து....

"பெரிய நன்றி..பெரிய சந்தோஷமாவும்... நேரடியாக கண்டமாதிரி இருக்கு
தர்சிகா, பழைய சம்பவங்களைச் சொல்லுறா........."


படப்பிடிப்பாளரின் மடிக்கணினியில் தோன்றிப் பேசிய தர்சிகாவைக் கண்ட அவரின் தாய் அன்ரனியாவின் கண்களில் நீராக நன்றிப்பெருக்கைக் காட்டியவாறே பேசுறா. ஆவணப்படம் முடியுது.

எங்கள் வீட்டில் காத்திருக்கும் எம் பிள்ளைகள்
அமிலி, டானியல், ஜோனாஸ், டட்விக், மிக்கெல் ஆகியோருக்கும்....
இலங்கையில் வீடே இல்லாத பிள்ளைகளுக்கும்...

இந்தப் படம் சமர்ப்பணம் என்று நிறைகின்றது. மனதில் பெரிய பாரம் ஏறிக்கொள்கின்றது.
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்......

படங்கள் நன்றி: My Daughter the Terrorist திரைப்படத்தின் காணொளியில் இருந்து எடுக்கப்பட்டவை
Posted by கானா பிரபா at 7:56 PM Email This BlogThis! Share to Twitter Share to Facebook

25 comments:

M.Rishan Shareef said...

அன்பின் கானா பிரபா,

விழி நனைக்க வைத்துவிட்டது உங்கள் பதிவு.
இதனை இணையத்தில் பார்க்கமுடியுமா நண்பரே?
முடிந்தால் சுட்டி கொடுங்கள்.

May 04, 2008 12:45 AM
கானா பிரபா said...

அன்பின் ரிஷான்

வாசித்துக் கருத்தளித்தமைக்கு நன்றி.

இணையத்திலும் சுட்டிகள் இருக்கின்றன. ஆனால் நான் பதிவில் குறிப்பிடவில்லை. காரணம்
இது தற்போது தான் உலகளாவிய ரீதியில் விற்பனையில் இருப்பதால் அதன் சுட்டியைக் கொடுப்பதால் உரிமைப் பிரச்சனை எழலாம் என்பதால்.

May 04, 2008 12:51 AM
ஆயில்யன் said...

//வேற, பிள்ளையள் வளர்ந்த விதம் வேற, எல்லாரும் ஆளுக்கொரு பக்கம்"
///

இது உண்மையிலேயே என்னால் உணரப்பட்ட விஷயம் என் ஈழத்து நண்பர் சொல்ல கேட்டேன் கிட்டதட்ட 15 வருடங்களுக்கு மேலாகியும் இதுவரையிலும் நேரிலேயே சந்திக்க முடியாத சகோதரர்களாய் :((

May 04, 2008 2:49 AM
Jay said...

முழுதாக வாசிக்கவில்லை... குறும்படத்தை வாசித்துவிட்டு வருகின்றேன்.

May 04, 2008 4:20 AM
கோபிநாத் said...

அவர்கள் சொல்லி இருப்பதில் நிறைய விஷயங்களை சில நண்பர்கள் மூலம் கேட்டுயிருக்கிறேன்.

கண்ணீர் தான் வருகிறது தல ;(

May 04, 2008 8:44 AM
கானா பிரபா said...

//ஆயில்யன். said...
இது உண்மையிலேயே என்னால் உணரப்பட்ட விஷயம் என் ஈழத்து நண்பர் சொல்ல கேட்டேன் கிட்டதட்ட 15 வருடங்களுக்கு மேலாகியும் இதுவரையிலும் நேரிலேயே சந்திக்க முடியாத சகோதரர்களாய் :((//

15, 20 வருஷங்களுக்கு மேல் முகம் பார்க்காதவர்கள் இருக்கிறார்கள், கூடவே இன்னும் உயிரோடு இருக்கின்றார்களா உறுதிப்படுத்த முடியாதவர்கள் பல நூறு தேறும் ஆயில்யன்.

May 04, 2008 1:07 PM
ரசிகன் said...

ஒரு தலைமுறை இளங்குருத்துக்கள் முழுவதுமாய்,சராசரி வாழ்க்கையின்றி ,போராட்ட நிலைக்கு இனவாதத்தால் தள்ளப்பட்ட அவலம். ”வாழ்க்கையே போர்க்களம்”என்ற வார்த்தை இவர்களுக்குத்தான் மிகப் பொருந்தும்.

இங்கும் போராளிகளைப் பற்றிய குறும்படங்கள் கிடைக்கின்றன. நினைவில் எழுதியதற்க்காய் பிரபா மாம்ஸ்க்கு நன்றிகள்.

May 04, 2008 2:51 PM
கானா பிரபா said...

// Mayooresan said...
முழுதாக வாசிக்கவில்லை... குறும்படத்தை வாசித்துவிட்டு வருகின்றேன்.//

இந்த விவரணத்தைப் பார்க்கும் வாய்ப்பிருந்தால் பாருங்கள்.

//கோபிநாத் said...
அவர்கள் சொல்லி இருப்பதில் நிறைய விஷயங்களை சில நண்பர்கள் மூலம் கேட்டுயிருக்கிறேன்.//

வருகைக்கு நன்றி தல

May 04, 2008 6:01 PM
Sakthy said...

வணக்கம் பிரபா...
இணையத்தில் ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருந்தோம். உங்கள் பகிர்விற்கு நன்றிகள்

May 05, 2008 4:26 AM
Haran said...

பிரபா அண்ணா,
நல்ல பதிவு... நான் இந்தன் சிறு பகுதியைப் பார்த்தேன்... மிகவும் அருமையக இருக்கிறது... மற்றும்படி... எமது மக்களுக்காக இவர்கள் படும் பாடு... அவர்கள் மன நிலை... மனத்திடம்... கோட்பாடு... குறிக்கோள் போன்றவற்றை வெளிப்படுத்தும் ஒரு ஆவணமும் கூட... தீவிரவாதிகள் என்று பலரும் கூறுவது போன்று... இவர்கள் உண்மையிலேயே தீவிரவாதிகளா... அல்லது அவ்வாறு சித்தரிக்கப்படுபவர்களா என்பதனை எடுத்துக் காட்டுகிறது....
நன்றி உங்கள் பதிவுக்கு...

May 05, 2008 3:42 PM
கானா பிரபா said...

// ரசிகன் said...
ஒரு தலைமுறை இளங்குருத்துக்கள் முழுவதுமாய்,சராசரி வாழ்க்கையின்றி ,போராட்ட நிலைக்கு இனவாதத்தால் தள்ளப்பட்ட அவலம். ”வாழ்க்கையே போர்க்களம்”என்ற வார்த்தை இவர்களுக்குத்தான் மிகப் பொருந்தும்.//

மிகச்சரியாகச் சொல்லியிருக்கின்றீர்கள் நண்பா.

தங்கள் வருகைக்கு நன்றி

May 05, 2008 8:24 PM
கானா பிரபா said...

//Sakthy said...
வணக்கம் பிரபா...
இணையத்தில் ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருந்தோம். உங்கள் பகிர்விற்கு நன்றிகள்//

வாசித்துக் கருத்தளித்தமைக்கு மிக்க நன்றி சக்தி

May 05, 2008 10:14 PM
கானா பிரபா said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹரன்

தற்போது இந்த இறுவட்டு விற்பனையில் இருக்கின்றது. வாங்கிப்பாருங்கள்.

May 06, 2008 4:30 PM
ஹேமா said...

வணக்கம் பிரபா.
உங்களுக்குக் கருத்துச் சொல்லும் அளவிற்கு நான் இல்லை.அற்புதம் உங்கள் படைப்புக்கள்.வாழ்த்துக்கள்.
வளரட்டும் தமிழ்.

May 09, 2008 12:26 AM
தமிழ் விரும்பி said...

இது உங்கள் பதிவு. அதில் உங்கள் முத்திரை இருக்கும். வலிக்காமல் வாழ்க்கை இல்லைத்தான். ஆனால் தமிழனுக்கு வலிகள் அதிகம். விழியில் சொரியும் அருவிகள்......இதுதான் அந்த விடுதலை வேங்கைகளின் வரலாறுகள். உங்கள் மூலம் செல்லும் போதுதான் இப்படித்தான் தமிழர் வாழ்வு என்பதை எல்லோரும் உணருகிறார்கள் போலும். எல்லோரும் அறியட்டும். ஆண்ட தமிழினம் மீண்டும் ஒருமுறை ஆழ நினைப்பதில் என்ன பிழை..............?

May 09, 2008 3:17 PM
கானா பிரபா said...

ஹேமா மற்றும் தமிழ்விரும்பி

பதிவை வாசித்துத் தங்கள் உணர்வைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றியைச் சொல்லிக் கொள்கின்றேன்.

May 09, 2008 8:45 PM
King... said...

என்ன பிரபா விவரணப்படம் பாத்துதான் இது விளங்க வேணுமா... உதுக்குத்தான் நான் சொல்லுறது வேண்டாம் உந்த யுத்தம் எண்டு ஒருத்தரும் கேக்குறியள் இல்லையே... நான் என்ன செய்யுறது...

(ஐயே... ஒயாட்ட சிங்கள புளுவங்த...)

நன்றி உங்கள் பகிர்வுக்கு...

May 10, 2008 7:53 PM
கானா பிரபா said...

வாங்கோ கிங்

உது ஈழத்தவர் அல்லாதவர்களைத் தான் முக்கியமாக மையப்படுத்தி வெளிநாட்டவரால் எடுத்தது. அத்தோடு எடுத்த விடயதானத்துக்கு அப்பால் போகாமல் கச்சிதமாகவும் கொடுத்திருந்தார்.

May 11, 2008 1:01 AM
Shan Nalliah / GANDHIYIST said...

Dear Praba,
You are doing well! That is the work of Inuvil soil,where I too come from!!!
Please link my bloggs: worldtamilrefugeesforum.blogspot.com,worldtamileconomicforum.blogspot.com...sarvadesatamilercenter.blogspot.com....
call me!

May 18, 2008 5:52 AM
கானா பிரபா said...

மிக்க நன்றி ஷண், உங்களைப் போன்ற பெரியவர்களின் கருத்துக்கள் எனக்கு உற்சாகமளிக்கின்றன. உங்கள் இணைப்பைக் கொடுத்து விடுகின்றேன்.

May 24, 2008 6:25 PM
Shan Nalliah / GANDHIYIST said...

Dear Praba,
Keep doing your great services!

Shan Nalliah/Norway

May 25, 2008 6:21 PM
Unknown said...

நன்றி பிரபா மெல்பேனில் இந்த இறுவெட்டு எங்க வாங்கலாம்

August 22, 2008 4:02 AM
கானா பிரபா said...

வணக்கம் நண்பரே

மெல்பனில் உள்ள ஈழத்தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளை அணுகினால் கிடைக்கும் என்று நினைக்கின்றேன். சிட்னியில் விற்றுத் தீர்ந்ததாக அறிகின்றேன். நான் சுட்டிய இயக்குனரின் இணையத்தளத்திலும் நேரடியாக கொள்வனவு செய்யலாம் என்று நினைக்கின்றேன்.

August 22, 2008 8:47 PM
Anonymous said...

Piraba,
This is true. What we have lived, longed for and lost: hope the clouds will be moved away one day and the sun will shine on our sky too.

Ravini

March 12, 2010 1:22 AM
Shan Nalliah / GANDHIYIST said...

ALMIGHTY GOD IS WITH US! WE GET OUR HARMONY;FREEDOM;HAPPINESS AS WELL AS PROGRESS/UNITY!

March 12, 2010 10:25 PM

Post a Comment

Newer Post Older Post Home

About Me

My Photo
கானா பிரபா
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
View my complete profile

Blog Archive

  • ►  2023 (3)
    • ►  March 2023 (1)
    • ►  February 2023 (1)
    • ►  January 2023 (1)
  • ►  2022 (25)
    • ►  December 2022 (2)
    • ►  November 2022 (2)
    • ►  October 2022 (3)
    • ►  September 2022 (2)
    • ►  August 2022 (1)
    • ►  July 2022 (2)
    • ►  June 2022 (1)
    • ►  May 2022 (3)
    • ►  April 2022 (1)
    • ►  March 2022 (3)
    • ►  February 2022 (3)
    • ►  January 2022 (2)
  • ►  2021 (33)
    • ►  December 2021 (4)
    • ►  November 2021 (2)
    • ►  October 2021 (5)
    • ►  September 2021 (2)
    • ►  August 2021 (4)
    • ►  July 2021 (1)
    • ►  June 2021 (5)
    • ►  May 2021 (1)
    • ►  April 2021 (3)
    • ►  March 2021 (2)
    • ►  February 2021 (1)
    • ►  January 2021 (3)
  • ►  2020 (28)
    • ►  December 2020 (4)
    • ►  November 2020 (3)
    • ►  October 2020 (1)
    • ►  September 2020 (1)
    • ►  August 2020 (2)
    • ►  July 2020 (3)
    • ►  June 2020 (3)
    • ►  May 2020 (4)
    • ►  April 2020 (3)
    • ►  March 2020 (2)
    • ►  February 2020 (2)
  • ►  2019 (19)
    • ►  December 2019 (3)
    • ►  November 2019 (1)
    • ►  October 2019 (1)
    • ►  August 2019 (1)
    • ►  July 2019 (3)
    • ►  June 2019 (2)
    • ►  May 2019 (2)
    • ►  April 2019 (1)
    • ►  March 2019 (2)
    • ►  February 2019 (2)
    • ►  January 2019 (1)
  • ►  2018 (25)
    • ►  December 2018 (2)
    • ►  November 2018 (1)
    • ►  October 2018 (5)
    • ►  September 2018 (1)
    • ►  August 2018 (3)
    • ►  July 2018 (1)
    • ►  June 2018 (3)
    • ►  May 2018 (1)
    • ►  April 2018 (1)
    • ►  March 2018 (2)
    • ►  February 2018 (3)
    • ►  January 2018 (2)
  • ►  2017 (20)
    • ►  December 2017 (2)
    • ►  November 2017 (3)
    • ►  October 2017 (2)
    • ►  September 2017 (2)
    • ►  August 2017 (1)
    • ►  July 2017 (1)
    • ►  June 2017 (1)
    • ►  May 2017 (3)
    • ►  April 2017 (1)
    • ►  March 2017 (1)
    • ►  February 2017 (2)
    • ►  January 2017 (1)
  • ►  2016 (18)
    • ►  December 2016 (2)
    • ►  November 2016 (3)
    • ►  October 2016 (1)
    • ►  September 2016 (1)
    • ►  August 2016 (1)
    • ►  July 2016 (2)
    • ►  June 2016 (3)
    • ►  May 2016 (1)
    • ►  April 2016 (1)
    • ►  March 2016 (1)
    • ►  February 2016 (1)
    • ►  January 2016 (1)
  • ►  2015 (20)
    • ►  December 2015 (3)
    • ►  November 2015 (1)
    • ►  October 2015 (2)
    • ►  September 2015 (1)
    • ►  August 2015 (1)
    • ►  July 2015 (2)
    • ►  June 2015 (1)
    • ►  May 2015 (1)
    • ►  April 2015 (3)
    • ►  March 2015 (1)
    • ►  February 2015 (3)
    • ►  January 2015 (1)
  • ►  2014 (22)
    • ►  December 2014 (3)
    • ►  November 2014 (2)
    • ►  October 2014 (2)
    • ►  September 2014 (1)
    • ►  August 2014 (3)
    • ►  July 2014 (2)
    • ►  June 2014 (1)
    • ►  May 2014 (1)
    • ►  April 2014 (1)
    • ►  March 2014 (1)
    • ►  February 2014 (2)
    • ►  January 2014 (3)
  • ►  2013 (16)
    • ►  December 2013 (2)
    • ►  November 2013 (1)
    • ►  October 2013 (2)
    • ►  September 2013 (1)
    • ►  August 2013 (1)
    • ►  July 2013 (1)
    • ►  June 2013 (1)
    • ►  May 2013 (2)
    • ►  April 2013 (1)
    • ►  March 2013 (1)
    • ►  February 2013 (1)
    • ►  January 2013 (2)
  • ►  2012 (16)
    • ►  December 2012 (2)
    • ►  November 2012 (1)
    • ►  October 2012 (1)
    • ►  September 2012 (1)
    • ►  August 2012 (1)
    • ►  July 2012 (1)
    • ►  June 2012 (2)
    • ►  May 2012 (1)
    • ►  April 2012 (1)
    • ►  March 2012 (2)
    • ►  February 2012 (1)
    • ►  January 2012 (2)
  • ►  2011 (26)
    • ►  December 2011 (3)
    • ►  November 2011 (2)
    • ►  October 2011 (1)
    • ►  September 2011 (1)
    • ►  August 2011 (1)
    • ►  July 2011 (3)
    • ►  June 2011 (5)
    • ►  May 2011 (1)
    • ►  April 2011 (2)
    • ►  March 2011 (2)
    • ►  February 2011 (1)
    • ►  January 2011 (4)
  • ►  2010 (29)
    • ►  December 2010 (2)
    • ►  November 2010 (2)
    • ►  October 2010 (2)
    • ►  September 2010 (4)
    • ►  August 2010 (6)
    • ►  July 2010 (2)
    • ►  June 2010 (1)
    • ►  May 2010 (2)
    • ►  April 2010 (3)
    • ►  March 2010 (1)
    • ►  February 2010 (2)
    • ►  January 2010 (2)
  • ►  2009 (28)
    • ►  December 2009 (2)
    • ►  November 2009 (3)
    • ►  October 2009 (3)
    • ►  September 2009 (1)
    • ►  August 2009 (2)
    • ►  July 2009 (2)
    • ►  June 2009 (4)
    • ►  May 2009 (3)
    • ►  April 2009 (2)
    • ►  March 2009 (2)
    • ►  February 2009 (1)
    • ►  January 2009 (3)
  • ▼  2008 (30)
    • ►  December 2008 (4)
    • ►  November 2008 (3)
    • ►  October 2008 (2)
    • ►  September 2008 (3)
    • ►  August 2008 (1)
    • ►  July 2008 (2)
    • ►  June 2008 (3)
    • ▼  May 2008 (2)
      • கிடுகுவேலியும், ஒரே கடலும்...!
      • My Daughter the Terrorist - மூன்று பெண்களின் சாட்ச...
    • ►  April 2008 (3)
    • ►  March 2008 (1)
    • ►  February 2008 (1)
    • ►  January 2008 (5)
  • ►  2007 (53)
    • ►  December 2007 (1)
    • ►  November 2007 (3)
    • ►  October 2007 (2)
    • ►  September 2007 (14)
    • ►  August 2007 (16)
    • ►  July 2007 (2)
    • ►  June 2007 (2)
    • ►  May 2007 (1)
    • ►  April 2007 (4)
    • ►  March 2007 (2)
    • ►  February 2007 (4)
    • ►  January 2007 (2)
  • ►  2006 (35)
    • ►  December 2006 (3)
    • ►  November 2006 (1)
    • ►  October 2006 (3)
    • ►  September 2006 (3)
    • ►  August 2006 (1)
    • ►  July 2006 (13)
    • ►  June 2006 (1)
    • ►  May 2006 (3)
    • ►  April 2006 (1)
    • ►  March 2006 (2)
    • ►  February 2006 (2)
    • ►  January 2006 (2)
  • ►  2005 (4)
    • ►  December 2005 (4)

Followers

Powered by Blogger.

கண்காணிப்புக்குழு

eXTReMe Tracker

Popular Posts

  • மேளச்சமா...!
    "மச்சான்! பிள்ளையாரடி கொடியேறி விட்டுது" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...
  • "அண்ணை றைற்"
    கடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...
  • வலைப்பதிவில் ஒரு வருஷம்
    தமிழ் வலைப்பதிவுலகில் நானும் என் உள்ளக் கிடக்கைகளை எழுத வேண்டும் என்று நினைத்து எழுத ஆரம்பித்து இன்றோடு ஒரு வருஷம் ஓடி விட்டது. இன்பத் தமிழ்...
  • என் இனிய மாம்பழமே....!
    பரமசிவன் குடும்பத்தில் ஒரு ஞானப்பழம் குறித்த பிரச்சனை வந்தது மாதிரி எங்கள் வீட்டிலும் வந்தால் "ஞானப்பழத்தை நீங்களே வச்சுக்கொள்ளுங்கோ, எ...
  • கே.எஸ்.பாலச்சந்திரனின் "கரையைத் தேடும் கட்டுமரங்கள்"
    கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள் ஈழத்தின் தனி நடிப்புக் கலைஞராக ,வானொலி, தொலைக்காட்சிக் கலைஞராக,சினிமா நடிகராக ரசிகர் மனதில் நீங்கா இடம்பிடித்த ...
  • நான் உங்கள் ரசிகன்
    முந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, இன...
  • திரையில் புகுந்த கதைகள்
    "திரையில் புகுந்த கதைகள்" என்ற வானொலிப்படைப்பை நான் வழங்கியபோது சேர்த்த சில விஷயங்களை இங்கே பகிர்கின்றேன்.மலையாள சினிமா உலகு போல்...
  • வலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்
    இன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத...
  • வாடைக்காற்று
    செங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் " வாடைக்காற்று எழுதினாரே, அவரா?" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற்...
  • கலாநிதி க.குணராசா வழங்கிய "சூளவம்சம் கூறும் இலங்கை வரலாறு
    செங்கை ஆழியான் என்ற புனைபெயரில் நாவல்களை, சிறுகதைகளைப் படைத்த கலாநிதி குணராசா அவர்கள் தன்னுடைய சொந்தப் பெயரில் மாணவருக்கான புவியியல், வரலாற்...

Social Icons

Featured Posts

 
Copyright (c) 2010 "மடத்துவாசல் பிள்ளையாரடி". Designed for Video Games
Download Christmas photos, Public Liability Insurance, Premium Themes