மீண்டும் எனக்கொரு மடல் எழுதுவாயா?
Sent: Tuesday, 18 September, 2007 12:28:35 PM
Subject: mail from miguthan
Sent: Tuesday, 18 September, 2007 12:28:35 PM
Subject: mail from miguthan
வணக்கம் பிரபாண்ணா
தங்களது பதிவுகள் பார்த்தேன்
மிகவும் மகிழ்ச்சி
ஒன்றையும் மறக்காதுதான் மனிதர்கள் வாழ்கின்றார்கள்
அதனைச் சொல்வதற்குத்தான் அவர்களால் இயல்வதில்லை
நீங்களும் கொக்குவில் இந்துவில் தான் படித்தீர்கள் என்பதை பதிவின் மூலம் அறிந்தேன்
நானும் 89 தொடக்கம் 95 வரை அங்குதான் படித்தேன்
கார்த்திகேசு இல்லம்
அத்துடன் உங்களது நல்லூர் பற்றிய பதிவை பார்த்தேன்
சின்னொரு வேண்டுகோள்
தமிழின் பெருமைகளைத் தனியே சைவ உறையிட்டு வெளியிடுவதென்பது அதனை வாசிப்பவர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்திவிடும் என்றே நினைக்கின்றேன்
எனக்கு அத்தகைய ஓர் உணர்வு அவ்வளவுதான்!
உங்களது யாழ்ப்பாணச் சரித்திரம் பற்றிய தொடுப்பு மிகவும் பிரையோசனமாக இருந்தது.
நன்றியண்ணை.
உங்களுக்கு நினைவிருக்கின்றதா?
ஒருமுறை மகேந்திரம் அதிபர் நவராத்திரியில் சோடியாக பாட்டுப்பாடியதற்காக நிகழ்ச்சியை குழப்பியது.
எப்படியிருந்தது யாழ்ப்பாணம். இப்ப கேபிள் டிவியோடையே இளசுகளின்ர காலம் கழியுதாம்
விரைவில எல்லாத்துக்கும் வழிசமைப்பம் அண்ணா
நன்றி
மிகுதன்
மரணம்
காரணம் அற்றது
நியாயம் அற்றது
கோட்பாடுகளும்
விழுமியங்களும்
அவ்விடத்தே
உறைந்துபோக - கவிஞர் சேரன்

13 comments:
சாண் ஏற முழம் சறுக்கிறது என யாழ் களத்தில் ஒருவர் எழுதியிருந்தார்.கவலையும் கண்ணீரும் எமக்கு தீராத வரமாக வாய்த்துள்ளதுபோலும்.:(
கேட்ட நிமிடத்தில் இருந்து நெஞ்சம் எரிகின்றது. என்னால் மட்டுமல்ல எங்களால் இந்த உணர்விலிருந்து விலக முடியவில்லை.
இங்கும் கூட என்னால் ஆறுதல் கூற இயலாமல் நண்பர்களின் கண்ணீர் முகம் கண்டு கவலையோடு அமர்ந்திருக்கிறேன்..!
ஆழ்ந்த கவலையும், இரங்கலும்!
மீண்டும் மனபலம் பெற்று இன்னும் வேகமாய் எழுங்கள்! தமிழீழ கனவுகள் நிறைவேறும்!
பிரபா யாராலும் தாங்கமுடியாத இழப்புத்தான். சுப அண்ணாவின் சிரித்தமுகம் தான் நெஞ்சில் நிற்கின்றது. உங்களுடைய நண்பர் மிகுதனும் வீரச்சாவடைந்தார் எனும் பொழுது உங்களின் நிலையை என்னால் உணரமுடிகின்றது.
போராட்டம் என்றால் இழப்புகள் சகஜம்தான் ஆனால் எம்மால் சில இழப்புகளை அப்படி எடுக்கமுடியாமல் இருக்கின்றது
என்றோ ஒருனாள் மாண்டவீரர் கனவு பலிக்கும்.
\\ஆயில்யன் said...
இங்கும் கூட என்னால் ஆறுதல் கூற இயலாமல் நண்பர்களின் கண்ணீர் முகம் கண்டு கவலையோடு அமர்ந்திருக்கிறேன்..!\\
இங்கேயும் அதே நிலைதான் :((
பட்ட காலிலே படும், கெட்ட குடியே என்பது போல, நம் இனத்திற்கு கண்ணீர் மட்டும் தான் சொந்தம் என்றாகிவிட்டது.
வருத்தத்தை பகிர்ந்து கொள்ள தோழர்களுடன் நானும்.
நண்பர்களே
தற்காலிக ஆறுதல் அளித்தமைக்கு நன்றி. இன்னும் மனம் இதை ஏற்க மறுக்கின்ற்து.
பிரபா அண்ணா,
நமக்கும் நம் மக்களுக்கும் விரைவிலேயே ஒரு விடிவு கிடைக்கப்போகின்றது, அதனாலேயே இறைவன் இவர்கள் இவ்வுலகிற்கு வந்ததன் நோக்கம் நிறைவேறியதாக அவரகளை மீண்டும் அழைத்துவிட்டான். தொடர்ந்து பாருங்கள், பெரியவர்கள் பலர் இறைவனிடம் சென்றுவிடுகிறார்கள்; அவர்கள் இங்கு வந்த கடன் முடிவடைந்ததால்.
தமிழீழம் விரைவில்...
என்னத்தை சொல்லுறது. இவையின்ர சாவை வைத்து கண்ட கண்ட ஆக்கள் எல்லாம் அரசியல் செய்யினம்.
//Haran said...
பிரபா அண்ணா,
நமக்கும் நம் மக்களுக்கும் விரைவிலேயே ஒரு விடிவு கிடைக்கப்போகின்றது//
அந்த நம்பிக்கை தான் இன்னும் ஒட்டியிருக்கின்றது.
//aaru said...
என்னத்தை சொல்லுறது. இவையின்ர சாவை வைத்து கண்ட கண்ட ஆக்கள் எல்லாம் அரசியல் செய்யினம்.//
வீண் சீண்டல்காரர்களைப் புறங்கையால் ஒதுக்கிவிட்டு எமது சிந்தனை மேலானதாக இருக்கட்டும். அவர்களுக்குப் பதில் கொடுப்பதே நேர விரயம்.
ஆழ்ந்த மனவருத்தமும் துக்கமும் தேங்கி நிக்குது.
நம் நம்பிக்கை வீண் போகாது.
//செல்லி said...
ஆழ்ந்த மனவருத்தமும் துக்கமும் தேங்கி நிக்குது.
நம் நம்பிக்கை வீண் போகாது.//
நம்பிகை தான் இன்று எமக்கு இருக்கும் ஒரே பலம், காத்திருப்போம்.
Post a Comment