skip to main | skip to sidebar

"மடத்துவாசல் பிள்ளையாரடி"

"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்"

Pages

  • Home

Saturday, December 13, 2008

Madagascar கொணர்ந்த கார்ட்டூன் நினைவுகள்

தர்மத்தின் வாழ்வதை சூது கவ்வும், மீண்டும் தர்மம் ஜெயிக்கும் இதையே பெரும்பாலான கார்ட்டூன் கதைகளின் சாரமாக வைத்து வித விதமான பாத்திரங்களையூம், அவற்றுக்கான களங்களையும் வைத்துக் கதை பண்ணி விடுவார்கள். இப்போதெல்லாம் பிரபல ஹாலிவூட் நடிகர்கள் மற்றும் நகைச்சுவை தனி நடிப்பாளர்களின் குரலை படத்தின் பின் குரலுக்கும் பயன்படுத்துவதும், நகைச்சுவையை அள்ளித் தெளித்து ஆங்காங்கே பாடல்களையும் செருகி நூறுவீத பொழுது போக்கு உத்தரவாதம் அளித்து விடுவார்கள். அந்த வரிசையில் இடம்பிடித்திருக்கின்றது இன்று நான் பார்த்த Madagascar: Escape 2 Africa.

வரும் வாரம் தான் அவுஸ்திரேலியாவில் Madagascar: Escape 2 Africa திரையிடப்பட இருக்கின்றது. ஆனால் இந்த வார இறுதியில் பிரீமியர் ஷோவாக மூன்று காட்சிகள் மட்டும் இட்டிருந்தார்கள். முதல் நாள், முதல் ஷோவில் பார்க்கும் த்ரில்லை அனுபவிக்க எண்ணி இந்தப் படத்துக்குப் போவதென்று முடிவு கட்டினேன். கிராமத்தில் இருந்து பட்டணத்துக்கு வேலை தேடி வருபவன் கணக்காக மெல்பனில் பட்டப்படிப்பை முடித்து விட்டு எட்டு வருஷத்துக்கு முன் சிட்னிக்கு வேலை தேடி வந்த காலத்தில், வார நாளில் ஒரு நாள் காலை பொழுது போகாமல் Dinosaurs என்ற கார்ட்டூன் படத்துக்குப் போய் நான் மட்டுமே அந்தப் பெரிய அரங்கில் இருந்து படம் பார்த்ததை இன்னும் பெருமையாகச் சொல்லிக் கொள்வேன் ;)
பின்னர் Finding Nemo என்ற இன்னொரு கார்ட்டூன் திரைப்படத்துக்கும் போய் அரங்கத்தில் அமர்ந்தால் சுற்றி வர மூன்று மாசக் குழந்தையில் இருந்து முப்பது வயது அம்மாக்கள். நடுவே நான் தனித்தீவில் விடப்பட்ட Nemo போல. படம் தொடங்கி முடியும் வரை இருபக்கமும் இருந்த வாண்டுகளும் என்னை முறைத்துக் கொண்டே இருந்தது போல ஒரு பிரமை இருந்தது. இம்முறை அந்தமாதிரி எதுவிதமான அசம்பாவிதங்களும் நடந்து விடாமல் இருக்க நண்பரின் மூன்று வாண்டுகளை பாதுகாப்புக் கவசமாக வைத்துக் கொண்டு Madagascar: Escape 2 Africa பார்க்கப் போனேன்.

Madagascar மூன்றாண்டுகளுக்கு முன்னர் வந்து சிறுவர்களின் உலகத்தையே சந்திரமுகி கணக்காட்டம் (வசூலில்) கலக்கு கலக்கிய படம். நியூயோர்க் நகரத்தின் Central Park Zoo வில் இருக்கும் பெங்குவின்கள் தமது கூண்டுச் சிறைவாசம் வெறுத்து நகரத்துக்குத் தப்பியோட முனைய Marti என்னும் அதே மிருகக்காட்சிசாலை கைதியும் தானும் வெளியுலகத்தைக் காண வேண்டும் என்று தப்பியோட அவரைத் தேடி அவரது நண்பர்கள் Alex (சிங்கம்), Melman (ஒட்டகம்), Gloria (நீர்யானை) என்று அவர்களும் திருட்டுத்தனமாக வெளியே வந்து நகரத்தை அதகளம் பண்ணி, மடகாஸ்கார் தீவெல்லாம் அலைவது என்று போகும். அந்தப் படம் கொடுத்த வசூல் தெம்பில் வந்திருக்கின்றது Madagascar: Escape 2 Africa.

இந்தப் படத்தில் ஆரம்பத்தில் மிருகக்காட்சிச் சாலையின் ராஜாவாக இருந்து கலக்கிய Alex என்ற சிங்கத்தின் பூர்வீகம் எப்படி இருந்தது என்று 80 களுக்கு முந்திய காலத்து பழிவாங்கும் பாணி தமிழ் சினிமாவின் எழுத்தோட்டத்துக்கு முந்திய காட்சியமைப்பு போல இருக்கின்றது. ஆபிரிக்காவின் காட்டு ராஜாவான Zuba வுக்கும் காட்டு ராணி Florrie க்கும் பிறந்த Alex பச்சிளம் பாலகனாக இருந்த வேளை ஒரு நாள் வேட்டைக்காரர் கையில் அகப்பட்டு கூண்டில் அடைபட்டு போகும் போது, தன் தந்தையின் ஆக்ரோஷமான தாக்குதலால் நிலைகுலைந்த வேட்டைக்காரர்களின் ஜீப்பில் இருந்து வழி தவறி நதியில் விழுகின்றது Alex இருந்த பெட்டி. அது மெல்ல நதிகளைக் கடந்து மிருகக் காட்சிச் சாலையில் வந்து சேர்கின்றது. வேட்டைக்காரர்களின் துப்பாக்கிக் குண்டில் அடிபட்ட காட்டு ராஜா Zuba வழியில் சாய்கிறார்.

காலம் அப்படியே நிகழ்காலத்துக்குத் தாவுகின்றது. முந்திய படத்தின் இறுதிக் காட்சியில் வந்து மீண்டும் ஒட்டுகின்றது. King Julien & Maurice (Lemur -ஒருவகை பாலூட்டும் குரங்கினம், தேவாங்கு என்று இதை எங்களூரில் அழைப்பார்கள்)இன் விருந்தினர்களாக இருந்த Alex (சிங்கம்)அவரது நண்பர்கள் Marti(வரிக்குதிரை),Melman (ஒட்டகம்),Gloria (நீர்யானை), கூடவே ஒட்டிக் கொள்ளும் இரண்டு லூசுக் குரங்குகள் சகிதம் பெங்குவின்களின் விமானத்தில் நியூயோர்க் நகரத்துக்குக் கிளம்புகிறார்கள். ஆனால் விதியின் சதி அணில் ரூபத்தில் வந்து விமானத்தில் நாசவேலை செய்ய அந்த விமானம் ஆபிரிக்காவின் காட்டில் வந்து விழுகின்றது. ஆபிரிக்காவின் காட்டு ராஜா Zuba, காட்டு ராணி Florrie ஆகியோர் இங்கே வந்து அடைக்கலம் கேட்கும் Alex தமது பிள்ளை தான் என்று கண்டு பாசமழை பொழிகிறார்கள் (பாட்டு சீன் உண்டு). தமது மகன் Alex ஐ காட்டு ராஜாவாக்க முடிவெடுக்கும் போது, அதுவரை அண்ணன் எப்போது சாவான் திண்ணை எப்போது காலியாகும் என்று காத்திருக்கும் நம்பியார் ரூபத்தில் இருக்கும் Makunga என்ற இன்னொரு சிங்கம் தடையாக வந்து தன் சூழ்ச்சியால் தானே முடிசூடிக் கொள்கின்றது. தம் பதிவியையும் கெளரவத்தையும் இழந்த பழைய காட்டுராஜா Zuba குடும்பத்திற்கு எப்படி மீண்டும் சந்தோஷ வாழ்வு வருகின்றது, Alex தனது நண்பர்கள் மூலம் எப்படி இந்த காட்டின் தண்ணீர்ப் பிரச்சனையைத் தீர்த்து வளம் செழிக்க வைத்து தன் சமயோசிதத்தால் ஆட்சியைப் பிடித்தான் என்பதே Madagascar: Escape 2 Africa சொல்லும் கதை.

Etan Cohen கதையில் Eric Darnell, Tom McGrath ஆகியோர் இயக்கத்தில் வந்திருக்கின்றது இப்படம். ஆரம்பம் முதல் நளினமான நகைச்சுவையும் அந்தந்தப் பாத்திரங்களுக்கு ஏற்ற கச்சிதமான குரலையும், இனிய இசையும் பாடல்கள் உட்பட கொடுத்து அதற்கேற்றாற் போல சாதாரண கதை என்றாலும் ரசிக்கும் படி எடுத்திருப்பது இப்படத்தின் மிகப்பெரிய அனுகூலம்.
ஓவ்வொரு பாத்திரங்களையுமே சிறப்பாகக் காட்டியிருக்கின்றார்கள்.

ஆபிரிக்கா காட்டுக்குள் விழுந்து அங்குள்ள மிருகங்களிடம் அரைகுறை ஆங்கிலத்தில் (அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்று நினைத்து) சைகை பாஷை பேசிக் காட்டி நடிக்கும் Alex ஒருபுறம். மிருகங்களின் ஆபிரிக்க நடன விருந்தில் பாட்டின் நடுவே வரும் "சிக்கச் சிக்கச் ச்சா" என்று வரும் வரியை கேட்டு "சிக்கச் சிக்கச் ச்சா, what's that?" என்று கேட்டு விட்டு தானும் அதைப் பாடி ஆடும் King Julien (Lemur) படம் முழுக்க வந்து கலக்கும் குறும்புத் தனங்களும், தனக்கு மகப்பேற்று விடுமுறை (Maternity leave) கேட்டும் கொடுக்காத விமான ஓட்டி பெங்குவினை அதன் அந்தரங்க விஷயத்தை போட்டோ மூலம் காட்டி பிளாக் மெயில் செய்யும் குரங்கின் குரங்குச் சேட்டை, Gloria (நீர்யானை) மேல் மையல் கொள்ளும் Melman (ஒட்டகம்) தனது தூய காதலை நிரூபிக்க உயிரைக் கொடுக்கும் விஷயங்கள் என்று எல்லாமே ஒரு கார்ட்டூன் படத்தைப் பார்க்கின்றோம் என்பதை மறக்கடித்து விடுகின்றது.

இறுதிக் காட்சியில் அந்தக் காட்டின் வரட்சியைப் போக்க Alex (சிங்கம்)எடுக்கும் முயற்சியை ஒருபுறம் காட்டிக் கொண்டே, இன்னொரு புறம் King Julien (Lemur)இன் ஆலோசனைப் பிரகாரம் காட்டின் ஒரு திக்கில் இருக்கும் எரிமலைக்கு பலி கொடுத்தால் தான் ஆண்டவன் அருள் புரிவார் என்று நம்பி மிருகங்கள் ஒன்று சேர்ந்து ஏகமனதாக தன் உயிரைப் போக்க Melman (ஒட்டகம்)ஐ பலியாடாக ஆக்க நினைக்கையில் வஞ்சகச் சுறா அந்த எரிமலையில் வீழ்ந்து சாவதுமாகக் காட்டி அந்த மூட நம்பிக்கை மூலம் தான் தண்ணீர் கிடைத்தது போலவும் காட்டியது வித்தியாசம். "ஆண்டவனுக்கு கடல் உணவு தான் கிட்டியிருக்கு" ன்று King Julien சொல்வது கலக்கல் கலகல.

நண்பர்களின் ஒற்றுமையான செயற்பாடு மூலம் உயர்ந்த வெற்றி கிட்டுகின்றது என்ற நல்ல செய்தியையும் குழந்தைகளுக்கும், ஏன் பெரியவர்களுக்கும் சொல்லி வைத்து முடிக்கின்றது இப்படம்.

எண்பதுகளின் ஆரம்பத்தில் ரூபவாஹினி தொலைக்காட்சி வந்த போது அது எதைப் போடுதோ அதை மட்டும் சாப்பிடும் நிலை இருந்தது. அப்போது அறிமுகமானவை தான் ஐந்தரை மணி வாக்கில் வந்து போகும் கார்ட்டூன் கதாபாத்திரங்கள். தொட்டிலில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் போல என் பால்யகாலத்தில் அதிகம் பாதித்த இந்த கார்ட்டூன் படங்கள் இன்று வரை அதே ரசனையுடன் பார்க்க வைக்கின்றன. மனம் ஒடுங்கி கவலை ஆக்கிரமிக்கும் போது இளையராஜாவின் பாட்டுக்கு நிகராக ஒத்தடம் கொடுப்பது கைவசம் இருக்கும் கார்ட்டூன் சரக்குகள் தான்.

பலவகையான கார்ட்டூன் தொலைக்கார்ட்சித் தொடர்கள் தந்த திருப்தியை நான் பார்த்த கார்ட்டூன் முழு நீளப்படங்கள் கொடுக்கவில்லை. The Lion King, Finding Nemo, Shrek, Madagascar போன்றவை விதிவிலக்கானவை .

"He Man" என்ற ஒரு கார்ட்டூன் தொடர் வந்தது. எங்கே அநீதி நடக்கிந்தோ அப்போது தன் செருகிய வாளை உயரப் பிடித்துச் சபதம் செய்வான் He Man அப்போது பயந்தாங்கொள்ளிப் புலிக்கும் வீரம் வந்து ஒரு முறை பலமாக உறுமி விட்டு அவனின் வாகனமாக மாற, எதிரிகளை உண்டு இல்லையென்று ஆக்கி விடுவான். "He Man" போலவே வீட்டில் இறைச்சிக்கு வெட்டப் பாவிக்கும் நீண்ட கத்தியை எடுத்து ஒரு முறை நான் கத்த பின்னால் அம்மா வந்து பறித்தெடுத்ததும் நினைப்பிருக்கு.

Spider Man, Super Man போன்றவை மற்றைய கார்ட்டூன் தொடர்களோடு ஒப்பிடும் போது ஏனோ அதிகம் ஈர்க்கவில்லை. இப்போது வார இறுதியில் தொலைக்காட்சியின் காலை நிகழ்ச்சியை போட்டால் அதிகம் வருவது மோசமான வன்முறை கலந்த கார்ட்டூன் படங்கள்.

டிஸ்னியின் தயாரிப்பில் வந்த Mickey Mouse ஐயும் Tom and Jerry ஐயும் யாரால் மறக்க முடியும். அந்தப் பாதிப்பில் டிஸ்னியின் Golden Collection ஐயும் வாங்கி வைத்திருக்கிறேன்.

ஒரு வித அசட்டுச் சிரிப்பை நாய் சிரிக்க, எங்காவது ஆபத்தில் மாட்டி தப்புவது Scooby-Doo வின் கதையம்சம். ஏறக்குறைய எல்லா Scooby-Doo தொடர்களும் ஒரேமாதிரித் தான். யாராவது ஒரு நபர் வேஷம் போட்டுக் கொண்டே Scooby-Doo கூட்டத்தைத் துரத்துவது தான் எல்லாக் கதைகளிலும் இருக்கும். அந்த தொலைக்காட்சி தொடர் தந்த சிறப்பை அதன் முழு நீள சினிமா கொடுக்கவில்லை. (அதையும் நான் விடவில்லை ;)

"guess who" என்று விட்டு மரத்தைத் துளை போடும் Woody Woodpecker செய்யும் அட்டகாசங்கள் காலத்தால் மறக்க முடியாதவை. அந்த மரங்கொத்திப் பறவை "கொக்கககோ கோ கொக்கககோ கோ" என்று கத்திக் கொண்டே வந்து தன் குறும்பு வேலைகளை ஆரம்பிக்கும். அந்த கார்ட்டூன் படம் முடியும் தறுவாயில் அதே "கொக்கககோ கோ கொக்கககோ கோ" சொல்லி அழுது கொண்டே அது படும் அவஸ்தையைக் காட்டும். Woody Woodpecker போலச் சத்தம் போட்டுப் பழகுவது என் பால்ய கால சுட்டிப் பட்டியலில் ஒன்று. Woody Woodpecker ஐத் தேடி எடுத்து அதையும் பொக்கிஷமாக்க வேண்டும் என்ற ஆசை இன்று Madagascar பார்த்ததும் வந்தது. முதலில் போனது ஒரு முக்கியமான டிவிடிக்களை விற்கும் இடம். அவர்கள் கணினியில் தட்டிப் பார்த்துவிட்டு டிவிடியில் வந்தது ஆனால் இருப்பில் இல்லை என்று இன்னொரு கடைப் பக்கம் கையைக் காட்டினார்கள். அந்தக் கடைக்குப் போனால் கிறிஸ்மஸ்ஸுக்குப் பின் தான் வரும் என்றசொல்லி Sanity என்ற இன்னொரு கடையைக் காட்டி அங்கு போனால் விற்பனைப் பெண்மணி சொல்கிறாள், "அது ரொம்ப பழைய சரக்காச்சே" என்றாள். எனக்கு வயசு போட்டுதோ என்று உள்ளுக்குள் சுரீர் என்றது. பின் அவளே தேடிப் பிடித்து பாகம் 3 உம் பாகம் 4 உம் இருக்கு என்றாள். இன்னொரு மூலையில் இருந்த கடை தேடி பாகம் 1 ஐயும் 2 ஐயும் எடுக்க வலை விரித்தேன். டிவிடிக்களில் காணவில்லை, அங்கிருந்த பெண்மணி சொன்னாள் கீழே இருக்கும் அரங்கத்தில் Kids Section இல் இருக்கும் என்றாள் (அப்பாடா எனக்கு வயசாகவில்லை ;-).
நாலையும் சுருட்டிக் கொண்டு வந்து முதலாவது சீடியை டிவிடி பெட்டியின் வாயில் திணித்தேன். Guess who? It's Woody Woodpecker.

படங்கள் நன்றி: பல்வேறு தளங்கள்
உபகுறிப்புக்கள் உதவி: Madagascar: Escape 2 Africa
Posted by கானா பிரபா at 9:24 PM Email This BlogThis! Share to X Share to Facebook

40 comments:

G.Ragavan said...

என்னோட மனசுல இருக்குறத அப்படியே எடுத்து எழுதீட்டீங்களே....

எனக்கும் நீங்க சொன்னதெல்லாம் பிடிக்கும். அதுலயும் சின்ன வயசுல அந்த ஹிமேன்... அவரோட புலி. அப்புறம் ஒரு குட்டிச்சாத்தான் பறந்துக்கிட்டு வருமே. அது எல்லாமே பிடிக்கும்.

இப்ப வர்ர கார்டூன்கள்ள உண்மையிலேயே வன்முறை நெறைய இருக்கு.

உட்டி உட் பெக்கரும் ரொம்பப் பிடிக்கும்.

மடகாஸ்கர்-2 இங்க வந்தப்ப மொத நாள் மொதக் காட்சின்னு பாத்தாச்சு. ரசிச்சாச்சு.

December 14, 2008 12:10 AM
Nimal said...

எனக்கும் கார்டூன் படங்கள் பார்ப்பதில் அலாதி பிரியம் உண்டு. ஆனாலும் உங்கள் அளவுக்கெல்லாம் பார்த்திருப்பேனா தெரியாது. :)

December 14, 2008 12:13 AM
sathiri said...

மடகஸ்க்கார் பாக்கிற வயசா இது . என்ன கொடுமை

December 14, 2008 12:18 AM
கானா பிரபா said...

சாத்திரியார்

நல்ல படைப்புக்கள் பார்க்க வயசு தடை இல்லை ;)

December 14, 2008 12:28 AM
கானா பிரபா said...

//G.Ragavan said...
என்னோட மனசுல இருக்குறத அப்படியே எடுத்து எழுதீட்டீங்களே....//

வாங்க ராகவன்

நம்ம ரசனை பல இடங்களில் ஒத்துப்போவது மகிழ்ச்சியா இருக்கு. நீங்களும் முதல் ஷோவே பார்த்திட்டீங்களா ;)

இப்ப வர்ர கார்ட்டூன் தொடர்கள், விளையாட்டுப் பொருட்கள் எல்லாமே கத்தியும் ரத்தமும் பார்க்காம விடமாட்டாங்க போல.

December 14, 2008 1:36 AM
சந்தனமுல்லை said...

சுவாரசியமா இருக்கு. நானும்,சாரி நாங்களும் பார்த்துட்டு வர்ரோம்...

December 14, 2008 1:52 AM
சென்ஷி said...

அட நீங்களும் நம்ம கேசுதானா.. :))

என்கிட்டயும் கொஞ்சம் கலெக்ஷன்ஸ் டிவிடி தேடி வாங்கி வச்சுருக்கேன்.

ஓக்கே. மடகாஸ்கர் பார்த்துடறோம் :)

December 14, 2008 2:04 AM
ஆயில்யன் said...

எனக்கு டாம் & ஜெர்ரி பார்க்கிறதுன்னா அம்புட்டு இஷடம் தல நல்லா இருக்கு!


நிறைய கேரக்டர்ஸ் சொல்லியிருக்கீங்க பார்க்கிறேன் வாய்ப்பு கிடைச்சா!

December 14, 2008 4:55 AM
ஆயில்யன் said...

நிறைய கேரக்டர்ஸ் நிறைய தகவல்கள்

நல்ல சுவாரசியமா இருக்கு. நாங்களும்,சாரி நானும் பார்த்துட்டு வர்றேன் :))))))

December 14, 2008 4:56 AM
கானா பிரபா said...

// நிமல்-NiMaL said...

எனக்கும் கார்டூன் படங்கள் பார்ப்பதில் அலாதி பிரியம் உண்டு. ஆனாலும் உங்கள் அளவுக்கெல்லாம் பார்த்திருப்பேனா தெரியாது. :)//

வாங்கோ நிமல் ;-)

இப்ப இலங்கையில் கார்ட்டூன் படங்களும் அதிகமாக தொலைக்காட்சியில் வருவதும் இல்லை என்று நினைக்கிறேன்.

December 14, 2008 8:22 AM
கானா பிரபா said...

//சந்தனமுல்லை said...
சுவாரசியமா இருக்கு. நானும்,சாரி நாங்களும் பார்த்துட்டு வர்ரோம்...//

இந்த வீக் எண்ட் பப்புவை கூட்டிக் கொண்டு போய் எஞ்சாய் பண்ணுங்க சிஸ்டர்

December 14, 2008 9:54 AM
Anonymous said...

How come you forget Tom & Jerry, I Still love watching them,with my kids we also watch woody woodpecker
Can you remember "You just wait" serial

MANO

December 14, 2008 12:23 PM
கானா பிரபா said...

//சென்ஷி said...
அட நீங்களும் நம்ம கேசுதானா.. :))

என்கிட்டயும் கொஞ்சம் கலெக்ஷன்ஸ் டிவிடி தேடி வாங்கி வச்சுருக்கேன்.//

ஆஹா, தூண்டில் போட்டா நிறையப் பேர் மாட்டுறாங்களே ;) இந்தப் படத்தையும் மிஸ் பண்ணாதீங்க.

December 14, 2008 2:41 PM
கானா பிரபா said...

//தங்ககம்பி said...
நல்ல விமர்சனம்.இங்கே நீங்க சொன்னதெல்லாம் எனக்கும் பிடிக்கும். //

வணக்கம் தங்ககம்பி

நீங்க சொன்ன பட்டியலில் ஒரு சில தவிர்த்து மற்றவற்றைப் பார்த்திருக்கின்றேன். iceage இன்னும் பார்க்கவில்லை. மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு

December 14, 2008 5:27 PM
ஹேமா said...

பிரபா,நானும் என் மனநிலையைப் பொறுத்து கார்ட்டூன் பார்ப்பேன்.பகிடி பண்ணுவீங்களோ தெரியாது. பென்குயின் கார்ட்டூன் நிறையப் பிடிக்கும்.

பிரபா,சில கார்ட்டூன்கள் குழந்தை
களின் மனநிலையை வக்கிரமாக்கிக் கொண்டு வருகிறது என்கிறார்களே.
அதாவது டொம்&ஜெரி கலைபட்டு அடிபடுவது,ஏமாத்துவது என்பது.
பிள்ளைகளின் மனதிலும் அந்தக் கொடூர மனநிலை படிகிறது என்கிறார்களே.என்ன சொல்கிறீர்கள் இதுபற்றி?

December 14, 2008 10:19 PM
Anonymous said...

எனக்கும் கார்ட்டூன் என்றால் ரொம்ப பிடிக்கும் அண்ணா.அது மட்டும்தான் பார்க்க வீட்டுல விடுறாங்க.குழந்தைகள் எல்லாம் மத்த படம் பார்க்க கூடதாமே :P

December 14, 2008 11:23 PM
கானா பிரபா said...

//ஆயில்யன் said...
எனக்கு டாம் & ஜெர்ரி பார்க்கிறதுன்னா அம்புட்டு இஷடம் தல நல்லா இருக்கு!//

வாங்க பாஸ்

டாம் & ஜெர்ரி ஒரே மாதிரி துரத்தல் என்றாலும் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது இல்லையா.

//நல்ல சுவாரசியமா இருக்கு. நாங்களும்,சாரி நானும் பார்த்துட்டு வர்றேன் :))))))//

ஆமாம்மா, நீங்க அல்ல நீங்களும் கட்டாயம் பார்க்கணும் பாஸ் ;)

December 14, 2008 11:30 PM
கானா பிரபா said...

//Anonymous said...
How come you forget Tom & Jerry, I Still love watching them,with my kids we also watch woody woodpecker
Can you remember "You just wait" serial
MANO//

வணக்கம் மனோ

Tom & Jerry பற்றி பதிவில் சொல்லியிருக்கிறேனே, மறக்க முடியுமா அதை. You just wait பார்த்ததா ஞாபகம் இல்லை. வருகைக்கு நன்றி.

December 14, 2008 11:34 PM
கோபிநாத் said...

\\சென்ஷி said...
அட நீங்களும் நம்ம கேசுதானா.. :))

என்கிட்டயும் கொஞ்சம் கலெக்ஷன்ஸ் டிவிடி தேடி வாங்கி வச்சுருக்கேன்.

ஓக்கே. மடகாஸ்கர் பார்த்துடறோம் :)
\\

அதான் மாப்பி சொல்லிட்டான்..."பார்த்துடறோம்"ன்னு கண்டிப்பாக செய்துடுவோம் ;))

December 15, 2008 2:10 AM
Anonymous said...

You just wait is the Russian Cartoon, wolf & the hare are the main characters. Wolf chasing hare all the time and end up in trouble saying you just wait.(REF: Wikpedia).

December 15, 2008 2:30 PM
கானா பிரபா said...

//ஹேமா said...
பிரபா,நானும் என் மனநிலையைப் பொறுத்து கார்ட்டூன் பார்ப்பேன்.பகிடி பண்ணுவீங்களோ தெரியாது. பென்குயின் கார்ட்டூன் நிறையப் பிடிக்கும்.//


வாங்கோ ஹேமா

‍எங்கள் கூட்டணியில் இன்னொரு ஆள் ;), சுவிஸ் நாட்டில் அந்த நாட்டுக்கே தனித்துவமான பிரபலமான கார்ட்டூன் பாத்திரங்கள் இருக்கா? அதாவது மிக்கி மெளஸ் மாதிரி?

முன்பு வந்த கார்ட்டூன்களில் ஏமாற்றுவது குறித்த கரு இருந்தாலும், இப்போது அதை விட மோசமாக எல்லாம் இரத்தம் பார்க்கும் படைப்புக்களும், வீடியோ கேமும் வந்துட்டுதே

December 15, 2008 2:33 PM
pudugaithendral said...

கார்ட்டுன் பாக்கணும்னு அப்பாவை கெஞ்சி கூத்தாடி பாப்போம். டோனால்ட் டக், ஹீமேன், ஜங்கிள் புக் இதெல்லாம்தான் அப்ப ப்ரபளம்.

உங்களை மாதிரி என் தம்பியும் செய்வான்.

ஹீ மேன் த மாஸ்டர் ஆப்ஃத யுனிவர்ஸுன்னு அப்பா தூங்கிகிட்டு இருக்கும்போது தம்பி கத்தியதில் எழுந்து அப்பா அடித்த அடியில் தம்பி 2 நாளைக்கு பேசவே முடியவில்லை.
:))))))

December 15, 2008 7:45 PM
வாசுகி said...

பதிவு நல்லா இருக்கு.
யாருக்கு தான் கார்டூன் பிடிக்காது. எனக்கு ஏனோ Shrek,Tom and Jerry நல்லா பிடிக்கும். இருந்தாலும்
உங்கள் அளவுக்கு நான் கார்டூன் பார்ப்பதில்லை தான். ஆனால் இப்ப உங்கள் பதிவு வாசித்த பின் ஒரு ஆர்வம் வந்திருக்கு.

//வார நாளில் ஒரு நாள் காலை பொழுது போகாமல் Dinosaurs என்ற கார்ட்டூன் படத்துக்குப் போய் நான் மட்டுமே அந்தப் பெரிய அரங்கில் இருந்து படம் பார்த்ததை இன்னும் பெருமையாகச் சொல்லிக் கொள்வேன்//
ரொம்ப பெருமை தான். ஹி ஹி ஹி.

நன்றி

December 15, 2008 8:16 PM
கானா பிரபா said...

//unknown blogger) said...
எனக்கும் கார்ட்டூன் என்றால் ரொம்ப பிடிக்கும் அண்ணா.அது மட்டும்தான் பார்க்க வீட்டுல விடுறாங்க.குழந்தைகள் எல்லாம் மத்த படம் பார்க்க கூடதாமே :P//

ஆமாமா, உங்கள மாதிரி பிள்ளைங்களை கண்டிப்பா வளர்க்கணும் தங்கச்சி ;)

//கோபிநாத் said...


அதான் மாப்பி சொல்லிட்டான்..."பார்த்துடறோம்"ன்னு கண்டிப்பாக செய்துடுவோம் ;))//

வாங்க தல ;)

//MANO said...
You just wait is the Russian Cartoon, wolf & the hare are the main characters.//

மேலதிக செய்திக்கு ந்ன்றி மனோ, தேடி எடுத்துப் பார்க்கின்றேன்.

December 15, 2008 8:21 PM
கானா பிரபா said...

//புதுகைத் தென்றல் said...
கார்ட்டுன் பாக்கணும்னு அப்பாவை கெஞ்சி கூத்தாடி பாப்போம். டோனால்ட் டக், ஹீமேன், ஜங்கிள் புக் இதெல்லாம்தான் அப்ப ப்ரபளம்.

உங்களை மாதிரி என் தம்பியும் செய்வான்.//

வாங்க புதுகை

உங்க தம்பியும் நம்ம கட்சியா ;)


//வாசுகி said...
பதிவு நல்லா இருக்கு.
யாருக்கு தான் கார்டூன் பிடிக்காது. எனக்கு ஏனோ Shrek,Tom and Jerry நல்லா பிடிக்கும். இருந்தாலும்
உங்கள் அளவுக்கு நான் கார்டூன் பார்ப்பதில்லை தான். ஆனால் இப்ப உங்கள் பதிவு வாசித்த பின் ஒரு ஆர்வம் வந்திருக்கு.//

வாங்கோ வாசுகி

தாயகத்தில் இருந்து புது வலைப்பதிவராக வந்திருக்கிறீங்கள், நன்றி. கார்ட்டூன் இப்ப மஜெஸ்டிக் சிற்றியில் சீடிக்களாவே எடுக்கலாம் தானே, தவறவிட்டவைகளை எடுத்துப் பாருங்கள்.

December 15, 2008 9:40 PM
மாயா said...

// இப்ப இலங்கையில் கார்ட்டூன் படங்களும் அதிகமாக தொலைக்காட்சியில் வருவதும் இல்லை என்று நினைக்கிறேன். //அதென்னவோ உண்மைதான் ஆனாலும் வார நாட்களில் ஓரிரு மணித்தியாலங்கள் கார்டூன் படங்களை போடுவதுண்டு . . . (எல்லாம் சீரியல்கள் செய்த மாயம்)

கார்ட்டூன்படங்கள் மட்டுமே தலைமுறை தாண்டி குழந்தைகளால் (பெரியர்களால்கூட) ரசிக்கப்படுகிறது

December 16, 2008 9:51 PM
தமிழ் மதுரம் said...

மெல்பனில் பட்டப்படிப்பை முடித்து விட்டு எட்டு வருஷத்துக்கு முன் சிட்னிக்கு வேலை தேடி வந்த காலத்தில், வார நாளில் ஒரு நாள் காலை பொழுது போகாமல் Dinosaurs என்ற கார்ட்டூன் படத்துக்குப் போய் நான் மட்டுமே அந்தப் பெரிய அரங்கில் இருந்து படம் பார்த்ததை இன்னும் பெருமையாகச் சொல்லிக் கொள்வேன் ;)//

உதெப்ப நடந்தது?? அப்போ நீங்கள் இன்னும் சின்னப் பிள்ளைதானே???

December 17, 2008 5:57 AM
கானா பிரபா said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாயா

வருகைக்கு நன்றி கமல்

December 18, 2008 12:56 PM
Anonymous said...

There is an unusual japanese animation movie by name "sprited away" Excellent production. Little older children and adults can enjoy! Maybe scary for young kids!

December 19, 2008 12:56 PM
கானா பிரபா said...

ஜப்பானிய கார்ட்டூன் சித்திரம் குறித்துப் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே

December 20, 2008 11:08 AM
KABEER ANBAN said...

தூர்தர்ஷனில் தொடர்ந்து வந்த ஜங்கிள் புக் மோக்ளியும்(வால்ட் டிஸ்னி அல்ல) ஒரு ஜப்பான் அனிமேஷன் தயாரிப்பு தான்.

//....ஒரு கார்ட்டூன் படத்தைப் பார்க்கின்றோம் என்பதை மறக்கடித்து விடுகின்றது //

பெரியவர்களையும்குழந்தைகளாக்கும் சக்தி- குழந்தைகளைத் தவிர-கார்டூன் படங்களுக்கே உண்டு :)

December 20, 2008 1:53 PM
கானா பிரபா said...

வாருங்கள் கபீரன்பன்

தகவலுக்கும் நன்றி

December 20, 2008 5:44 PM
U.P.Tharsan said...

நல்ல பதிவு கானா. அனேகமாக நீங்கள் இதில் குறிப்பிட்டுள்ள கார்டூன்கள் எல்லாமே என்னிடம் இருக்கின்றன. ஆனால் என்ன ஒளித்து ஒளித்துதான் போட்டு பார்கவேண்டியிருக்கு.

தங்களைபோலவே நானும் என்னுடைய அன்ரியுடய பிள்ளைகளுக்கு படம் காட்டும் தோரணையில் படம் பார்த்துவிட்டு வந்தேன். படம் சூப்பர்

December 29, 2008 12:33 AM
கானா பிரபா said...

வாங்கோ தர்சன்

கார்ட்டூன் படங்களைப் பார்ப்பதும் அவற்றை நினைத்து ரசிப்பதும் சந்தோஷமான விஷயங்களில் ஒன்றல்லவா.

December 29, 2008 10:47 PM
ரவி said...

தனி விமர்சனமா எழுதலாம்னு நினைச்சேன்...

நீங்க முந்திட்டீங்க...

பென்குயின்கள் செய்யும் காமெடியும் அவை பேசும் வசனங்களும் வயிற்று வலியை வரவழைப்பது நிச்சயம்...

காதல் ஆக்ஷன் த்ரில் வில்லத்தனம் எல்லாம் பட்டையை கிளம்ப்பும் ஒரு படம் இது...!!!

December 29, 2008 11:12 PM
கானா பிரபா said...

வாங்க ரவி

நீங்களும் படம் பார்த்திட்டீங்களா, உங்க பார்வையிலும் கொடுக்கலாமே, ஆவலோடு எதிர்பார்க்கின்றேன்.

December 30, 2008 10:54 PM
Anonymous said...

பதிவுக்கு நன்றி கானா பிரபா. நீங்கள் குறிப்பிட்ட எல்லா கார்ட்டூன்களும்
எனக்கும் நல்ல விருப்பம்.இந்த இரண்டு கழுதை வயசிலும்என்னுடைய மருமகள்மாரை
மடியில் வைத்துக்கொண்டு கார்ட்டூன்கள் பார்த்து அவர்களோடு சேர்ந்து
கெக்கட்டமிட்டுச்சிரித்து மகிழும்போது பொழுது போவதே தெரியாது. இங்கு
ரொறன்ரோவில் நண்பரின் பிள்ளைகளுக்குப் பிறந்தநாட்பரிசாக நான்கு
வட்டுக்கள் கொண்ட டிஸ்னி கார்ட்டூன் தொகுப்பொன்றைக்
கொடுத்திருந்தேன். அதன் பின்னர் அவர்கள் என்னை "கார்ட்டூன் மாமா" என்று
அன்போடு அழைப்பதைப் பெருமையோடு உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். ரொம்
& ஜெர்ரி MGM தயாரிப்பு என்று நினைவு

January 05, 2009 10:28 AM
கானா பிரபா said...

வணக்கம் கரவெட்டியான்

உங்கள் அனுபவங்களைக் கேட்கவும் சந்தோஷமாக இருக்கிறது. அந்த நான்கு இறுவட்டு கார்ட்டூன்களில் டிஸ்னியின் ஆரம்பகாலத் தொகுப்பு ஒன்றும் வந்திருந்தது.

January 06, 2009 9:44 PM
தமிழன்-கறுப்பி... said...

அண்ணன் உண்மையில் நீங்கள் ஒரு அசாதாரணமான ஆள்தானண்ணன்..
எவ்வளவு நேரங்கள், எவ்வளவு விசயங்கள்...

நான் இதுவரையும் ரசிச்சு பார்த்தது என்றால் Tom and Jerry மட்டும்தான், இங்கேயும் இரவு 9 இலிருந்த 10 வரை பார்க்க கிடைக்கும்...
முன்னர் இரவுப்பணியில் இருக்கும் பொழுது அனேகமாய் பாக்கிற விசயங்களில் இதுவும் ஒன்று எத்தனை தடவைகள் பார்த்தாலும் அதே உற்சாகம்...:)

January 12, 2009 12:19 AM
கானா பிரபா said...

வாங்கோ தமிழன்

எல்லாமே ஆர்வமும், இவற்றில் இருக்கும் பிரியமும் தான் நேர ஒதுக்கீட்டுக்குக் காரணங்கள், ரொம் அண்ட் ஜெர்ரியை வெறுக்காதார் உண்டோ ;)

January 12, 2009 9:08 AM

Post a Comment

Newer Post Older Post Home

About Me

My Photo
கானா பிரபா
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
View my complete profile

Blog Archive

  • ►  2025 (7)
    • ►  April 2025 (1)
    • ►  March 2025 (2)
    • ►  February 2025 (3)
    • ►  January 2025 (1)
  • ►  2024 (25)
    • ►  December 2024 (3)
    • ►  November 2024 (1)
    • ►  October 2024 (1)
    • ►  September 2024 (1)
    • ►  August 2024 (1)
    • ►  July 2024 (4)
    • ►  June 2024 (3)
    • ►  May 2024 (1)
    • ►  April 2024 (2)
    • ►  March 2024 (3)
    • ►  February 2024 (3)
    • ►  January 2024 (2)
  • ►  2023 (19)
    • ►  December 2023 (1)
    • ►  November 2023 (1)
    • ►  October 2023 (4)
    • ►  September 2023 (1)
    • ►  August 2023 (1)
    • ►  July 2023 (2)
    • ►  June 2023 (1)
    • ►  May 2023 (1)
    • ►  April 2023 (3)
    • ►  March 2023 (2)
    • ►  February 2023 (1)
    • ►  January 2023 (1)
  • ►  2022 (25)
    • ►  December 2022 (2)
    • ►  November 2022 (2)
    • ►  October 2022 (3)
    • ►  September 2022 (2)
    • ►  August 2022 (1)
    • ►  July 2022 (2)
    • ►  June 2022 (1)
    • ►  May 2022 (3)
    • ►  April 2022 (1)
    • ►  March 2022 (3)
    • ►  February 2022 (3)
    • ►  January 2022 (2)
  • ►  2021 (33)
    • ►  December 2021 (4)
    • ►  November 2021 (2)
    • ►  October 2021 (5)
    • ►  September 2021 (2)
    • ►  August 2021 (4)
    • ►  July 2021 (1)
    • ►  June 2021 (5)
    • ►  May 2021 (1)
    • ►  April 2021 (3)
    • ►  March 2021 (2)
    • ►  February 2021 (1)
    • ►  January 2021 (3)
  • ►  2020 (28)
    • ►  December 2020 (4)
    • ►  November 2020 (3)
    • ►  October 2020 (1)
    • ►  September 2020 (1)
    • ►  August 2020 (2)
    • ►  July 2020 (3)
    • ►  June 2020 (3)
    • ►  May 2020 (4)
    • ►  April 2020 (3)
    • ►  March 2020 (2)
    • ►  February 2020 (2)
  • ►  2019 (19)
    • ►  December 2019 (3)
    • ►  November 2019 (1)
    • ►  October 2019 (1)
    • ►  August 2019 (1)
    • ►  July 2019 (3)
    • ►  June 2019 (2)
    • ►  May 2019 (2)
    • ►  April 2019 (1)
    • ►  March 2019 (2)
    • ►  February 2019 (2)
    • ►  January 2019 (1)
  • ►  2018 (25)
    • ►  December 2018 (2)
    • ►  November 2018 (1)
    • ►  October 2018 (5)
    • ►  September 2018 (1)
    • ►  August 2018 (3)
    • ►  July 2018 (1)
    • ►  June 2018 (3)
    • ►  May 2018 (1)
    • ►  April 2018 (1)
    • ►  March 2018 (2)
    • ►  February 2018 (3)
    • ►  January 2018 (2)
  • ►  2017 (20)
    • ►  December 2017 (2)
    • ►  November 2017 (3)
    • ►  October 2017 (2)
    • ►  September 2017 (2)
    • ►  August 2017 (1)
    • ►  July 2017 (1)
    • ►  June 2017 (1)
    • ►  May 2017 (3)
    • ►  April 2017 (1)
    • ►  March 2017 (1)
    • ►  February 2017 (2)
    • ►  January 2017 (1)
  • ►  2016 (18)
    • ►  December 2016 (2)
    • ►  November 2016 (3)
    • ►  October 2016 (1)
    • ►  September 2016 (1)
    • ►  August 2016 (1)
    • ►  July 2016 (2)
    • ►  June 2016 (3)
    • ►  May 2016 (1)
    • ►  April 2016 (1)
    • ►  March 2016 (1)
    • ►  February 2016 (1)
    • ►  January 2016 (1)
  • ►  2015 (20)
    • ►  December 2015 (3)
    • ►  November 2015 (1)
    • ►  October 2015 (2)
    • ►  September 2015 (1)
    • ►  August 2015 (1)
    • ►  July 2015 (2)
    • ►  June 2015 (1)
    • ►  May 2015 (1)
    • ►  April 2015 (3)
    • ►  March 2015 (1)
    • ►  February 2015 (3)
    • ►  January 2015 (1)
  • ►  2014 (22)
    • ►  December 2014 (3)
    • ►  November 2014 (2)
    • ►  October 2014 (2)
    • ►  September 2014 (1)
    • ►  August 2014 (3)
    • ►  July 2014 (2)
    • ►  June 2014 (1)
    • ►  May 2014 (1)
    • ►  April 2014 (1)
    • ►  March 2014 (1)
    • ►  February 2014 (2)
    • ►  January 2014 (3)
  • ►  2013 (16)
    • ►  December 2013 (2)
    • ►  November 2013 (1)
    • ►  October 2013 (2)
    • ►  September 2013 (1)
    • ►  August 2013 (1)
    • ►  July 2013 (1)
    • ►  June 2013 (1)
    • ►  May 2013 (2)
    • ►  April 2013 (1)
    • ►  March 2013 (1)
    • ►  February 2013 (1)
    • ►  January 2013 (2)
  • ►  2012 (16)
    • ►  December 2012 (2)
    • ►  November 2012 (1)
    • ►  October 2012 (1)
    • ►  September 2012 (1)
    • ►  August 2012 (1)
    • ►  July 2012 (1)
    • ►  June 2012 (2)
    • ►  May 2012 (1)
    • ►  April 2012 (1)
    • ►  March 2012 (2)
    • ►  February 2012 (1)
    • ►  January 2012 (2)
  • ►  2011 (26)
    • ►  December 2011 (3)
    • ►  November 2011 (2)
    • ►  October 2011 (1)
    • ►  September 2011 (1)
    • ►  August 2011 (1)
    • ►  July 2011 (3)
    • ►  June 2011 (5)
    • ►  May 2011 (1)
    • ►  April 2011 (2)
    • ►  March 2011 (2)
    • ►  February 2011 (1)
    • ►  January 2011 (4)
  • ►  2010 (29)
    • ►  December 2010 (2)
    • ►  November 2010 (2)
    • ►  October 2010 (2)
    • ►  September 2010 (4)
    • ►  August 2010 (6)
    • ►  July 2010 (2)
    • ►  June 2010 (1)
    • ►  May 2010 (2)
    • ►  April 2010 (3)
    • ►  March 2010 (1)
    • ►  February 2010 (2)
    • ►  January 2010 (2)
  • ►  2009 (28)
    • ►  December 2009 (2)
    • ►  November 2009 (3)
    • ►  October 2009 (3)
    • ►  September 2009 (1)
    • ►  August 2009 (2)
    • ►  July 2009 (2)
    • ►  June 2009 (4)
    • ►  May 2009 (3)
    • ►  April 2009 (2)
    • ►  March 2009 (2)
    • ►  February 2009 (1)
    • ►  January 2009 (3)
  • ▼  2008 (30)
    • ▼  December 2008 (4)
      • ஈழத்துக் கலைஞர் டொக்டர் இந்திரகுமார் நினைவாக
      • Madagascar கொணர்ந்த கார்ட்டூன் நினைவுகள்
      • வலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்
      • ஊரெல்லாம் வெள்ளக்காடு
    • ►  November 2008 (3)
    • ►  October 2008 (2)
    • ►  September 2008 (3)
    • ►  August 2008 (1)
    • ►  July 2008 (2)
    • ►  June 2008 (3)
    • ►  May 2008 (2)
    • ►  April 2008 (3)
    • ►  March 2008 (1)
    • ►  February 2008 (1)
    • ►  January 2008 (5)
  • ►  2007 (53)
    • ►  December 2007 (1)
    • ►  November 2007 (3)
    • ►  October 2007 (2)
    • ►  September 2007 (14)
    • ►  August 2007 (16)
    • ►  July 2007 (2)
    • ►  June 2007 (2)
    • ►  May 2007 (1)
    • ►  April 2007 (4)
    • ►  March 2007 (2)
    • ►  February 2007 (4)
    • ►  January 2007 (2)
  • ►  2006 (35)
    • ►  December 2006 (3)
    • ►  November 2006 (1)
    • ►  October 2006 (3)
    • ►  September 2006 (3)
    • ►  August 2006 (1)
    • ►  July 2006 (13)
    • ►  June 2006 (1)
    • ►  May 2006 (3)
    • ►  April 2006 (1)
    • ►  March 2006 (2)
    • ►  February 2006 (2)
    • ►  January 2006 (2)
  • ►  2005 (4)
    • ►  December 2005 (4)

Followers

Powered by Blogger.

கண்காணிப்புக்குழு

eXTReMe Tracker

Popular Posts

  • "அண்ணை றைற்"
    கடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...
  • திரையில் புகுந்த கதைகள்
    "திரையில் புகுந்த கதைகள்" என்ற வானொலிப்படைப்பை நான் வழங்கியபோது சேர்த்த சில விஷயங்களை இங்கே பகிர்கின்றேன்.மலையாள சினிமா உலகு போல்...
  • நான் உங்கள் ரசிகன்
    முந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, இன...
  • வாடைக்காற்று
    செங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் " வாடைக்காற்று எழுதினாரே, அவரா?" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற்...
  • வலைப்பதிவில் ஒரு வருஷம்
    தமிழ் வலைப்பதிவுலகில் நானும் என் உள்ளக் கிடக்கைகளை எழுத வேண்டும் என்று நினைத்து எழுத ஆரம்பித்து இன்றோடு ஒரு வருஷம் ஓடி விட்டது. இன்பத் தமிழ்...
  • வலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்
    இன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத...
  • மேளச்சமா...!
    "மச்சான்! பிள்ளையாரடி கொடியேறி விட்டுது" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...
  • சிதம்பரத்தில் ஓர் அப்பாவிசாமி!
    இந்தப் பதிவினை எழுதுவதற்கு முன் நிறைய யோசித்தேன். ஆனாலும் இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதம் கடந்த பின்பும், என்னால் ஜீரணிக்கமுடியாத நிகழ்வாக அம...
  • என் இனிய மாம்பழமே....!
    பரமசிவன் குடும்பத்தில் ஒரு ஞானப்பழம் குறித்த பிரச்சனை வந்தது மாதிரி எங்கள் வீட்டிலும் வந்தால் "ஞானப்பழத்தை நீங்களே வச்சுக்கொள்ளுங்கோ, எ...
  • அறிந்திரன் சிறுவர் சஞ்சிகை - சிறுவர் இலக்கிய உலகில் ஓர் புத்தொளி
    சில வாரம் முன் வலையுலகத்தை மேய்ந்த போது திடீரென்று கண்ணில் பட்டது அறிந்திரன் சிறுவர் சஞ்சிகை பற்றிய ஒரு அறிமுகம். அதைக் கண்டதும் என் பால்ய ந...

Social Icons

Featured Posts

 
Copyright (c) 2010 "மடத்துவாசல் பிள்ளையாரடி". Designed for Video Games
Download Christmas photos, Public Liability Insurance, Premium Themes