skip to main | skip to sidebar

"மடத்துவாசல் பிள்ளையாரடி"

"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்"

Pages

  • Home

Sunday, December 07, 2008

வலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்

இன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பதிவுகளையாவது "மடத்துவாசல் பிள்ளையாரடி" தளத்தில் இட்டு வருகின்றேன்.

நான் பார்த்து ரசித்தவைகளோ, கேட்டவைகளோ, பாதித்தவைகளோ அனுபவப்பதிவுகளாகவும், அதே நேரம் ஈழத்துப் படைப்பாளிகள், கலைஞர்கள் மற்றும் ஈழ வரலாற்று விழுமியங்களை இயன்றவரை ஒலி மற்றும் எழுத்து ஆவணப்படுத்தலாகவும் இப்பதிவுகளை இன்று வரை எழுதி வருகின்றேன். எனது பதிவுலக முதல் ஆண்டில் நிறையவே எனது வாழ்வியல் அனுபவம் சார்ந்த பதிவுகள் வந்த அதே வேளை இரண்டாவது ஆண்டிலும் மூன்றாவது ஆண்டிலும் படைப்பாளிகளை, கலைஞர்களை ஆவணப்படுத்தும் பதிவுகள் அதிகம் இடம்பிடித்துக் கொண்டன.

மடத்துவாசல் பிள்ளையாரடி தவிர்ந்து,
என் பயணப் பதிவுகளுக்காக உலாத்தல்
ஒலி மற்றும் இசைக்காக றேடியோஸ்பதி
வீடியோ காட்சித் தொகுப்புக்காக வீடியோஸ்பதி
அவுஸ்திரேலிய நடப்புக்கள் குறித்த கூட்டு வலைப்பதிவு
பாடகி பி.சுசீலாவிற்கான கூட்டு வலைப்பதிவான இசையரசி
என்றும் வலைப்பதிவுகளைக் கட்டி மேய்க்கின்றேன் ;-)

கடந்த ஆண்டு பேரலை போல புறப்பட்டு வந்த ஈழத்து வலைப்பதிவர்கள் பலர் இந்த ஆண்டில் காணாமல் போனது வருந்தத் தக்க ஒரு விடயம். நாட்டின் சூழ்நிலைகளால் திசைமாறிய பறவைகளாய் அவர்கள் உலகெங்கும் சிதறடிக்கப்பட்ட கொடுமை தான் அதற்கு முதற் காரணம். ஆனாலும் கடந்த ஓராண்டு வாசிப்பில் தாயகத்தின் வலி தோய்ந்த நினைவுகளையும், வரலாற்றையும் பதியும் சிறந்த வலைப்பதிவர்களில் புதிதாகக் கிட்டிய இரண்டு எழுத்தாற்றல் மிக்க வலைப்பதிவர்களை இந்த நேரத்தில் சொல்லி வைக்கின்றேன்.ஒருவர் கிடுகுவேலி என்ற பெயரில் வலைப்பதிவை நடத்தும் கதியால் என்ற புனைப்பெயரில் ஒட்டிக் கொண்டிருப்பவர். மற்றவர் சொல்வதெல்லாம் உண்மை என்று இரண்டாண்டுக்கு முன்னரே வலைப்பதிவை ஆரம்பித்து சில மாதங்களுக்கு முன்னர் தான் தொடர்ச்சியாகத் தன் பதிவுகளைத் தரும் அருண்மொழி வர்மன்.

கடந்த மூன்று வருஷங்களில் இந்த வலையுலகிலும் ஆயிரம் அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன. எதை எழுத வேண்டும் எழுதக் கூடாது என்று ஒரு கூட்டமும் எத்தனை தரம் பின்னூட்டம் வந்திருக்கு, எத்தனை முறை பின்னூட்டக்கூடாது என்று ஒரு கூட்டமும், தேசியவாதியா/ நாட்டுப்பற்றாளனா என்று தீர்மானிக்கும் புலம்பெயர்ந்து இணையத்தில் மட்டும் அரசியல் அல்லது அதிமேதாவியாகக் காட்டிக் கொள்ளும் ஒரு கூட்டமும் என்று இந்த மூன்றாவது ஆண்டிலும் முகுதுக்கு முன்னாலும் பின்னாலும் பேசிக்கொண்டிருக்க அவர்களை புறங்கையால் விலக்கி விட்டு என்னால் முடிந்த அளவுக்கு எழுதிக் கொண்டிருக்கின்றேன். அநாநியாக வந்து தொந்தரவுப் பின்னூட்டம் போடுபவர்களை இலகுவாகவே அவரின் முகமூடியைக் கழற்றி அவரும் ஒரு தெரிந்த நண்பர் தான் என்பதை நிரூபிக்கும் கண்காணிப்பு கருவிக்கும் நன்றி ;)

தொடர்ந்தும் எழுத எனக்கு மனதில் உறுதி வேண்டி விடைபெறுகின்றேன். கடந்த என் ஓராண்டுப் பதிவுகளில் தம் கருத்துக்களை இட்டுச் சென்ற படைப்பாளிகள் எஸ்.ராமகிருஷ்ணன், இரா.முருகன் மற்றும் பின்னூட்டல் மூலம் இதுவரை என்னுடன் பயணித்த/பயணிக்கின்ற உறவுகளுக்கு என் நேசம் கலந்த நன்றிகள்.

வலைப்பதிவில் ஒரு வருஷம்

2006 ஆம் ஆண்டில் வலைப்பதிவில் என் ஒரு வருடப் பதிவுகளின் தொகுப்பாய்.

வலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று

2007 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் தொகுப்பு

தொடர்ந்து 2008 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகளை இங்கே தருகின்றேன்.

நந்தனம் - ஒரு வேலைக்காரியின் கனவு

" ஞான் கண்டு, ஞானே கண்டுள்ளு, மாத்ரம் கண்டிடுள்ளு, அது உன்னியட்டா வேஷத்தில் வந்தது"
கணவன் மார்பில் புதைந்து கொண்டு அழ ஆரம்பிக்கின்றாள் பாலாமணி. அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் எமது கண்கள் தானாகவே பனிக்கின்றன.



புலம்பெயர் வாழ்வில் பொங்கல்...!

காலையில் நேயர்களோடு இணைந்து நேரடி வாழ்த்துப் பரிமாறல்களோடு சிறப்பு வானொலி நிகழ்ச்சியாகக் கழிகின்றது. ஊரைப் பிரிந்து வாழும் உறவுகளின் மனத்தாங்கல்களோடும், வாழ்த்து நிகழ்ச்சி மலரும் நினைவுகளாகவும் அமைந்தது அந்த நிகழ்ச்சி. இத்தைப்பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியில் பகிரப்பட்ட இரண்டு கவிதைகள் வழக்கத்துக்கு மாறாக இத்தைப்பொங்கல் நாளுக்குப் புது அர்த்தம் கற்பிக்கின்றன.



எனக்குப் பிடித்த என் பதிவுகளில் ஒன்று

"எல்.வைத்யநாதன் என்கிற வைத்தி மாமா கிட்ட நிறையவே நாங்க கற்றிருக்கின்றோம், காலைலே அஞ்சு மணிக்கு ஆரம்பிச்சு பத்து மணிக்கும் அவரோட கிளாஸஸ் போகும், அவர் சொல்லிக் கொடுக்கும் போது அதை ஒரு பிரவாகம் மாதிரி அதை எடுப்பார். ஆனந்த பைரவி ராகத்தை எடுத்தாருன்னா இன்னிக்கு ஒரு மாதிரியும், அடுத்த நாள் வேறோர் அணுகுமுறையில் அதைக் கொடுப்பார்.





புத்தகச் சாம்பலில் பூத்ததொரு நூலகம்...!

அந்த விசாலமான மண்டபத்தின் தரை முழுவதுமே சாந்தும் சாம்பலுமின்றி, வேறெதுவும் காணப்படவில்லை. ஓர் இடுகாட்டின் மத்தியில் நிற்பது போன்ற உணர்ச்சி பரவியது.

"எமக்கு ஏன் இந்தக் கொடுமையைச் செய்தார்கள்?"

கலங்கிய கண்களோடு யாழ் பொது நூலகர் திருமதி நடராஜா அப்போது கேட்கின்றார்.



எழுத்தாளர் செ.யோகநாதன் - சில நினைவலைகள்

செ.யோகநாதன் குறித்து இரண்டு நினைவுப்பகிர்வுகளை, செ.யோகநாதன் அவர்களின் அஞ்சலிக்கூட்டத்தினைத் தொடர்ந்து எடுத்திருந்தேன். அவற்றின் ஒலியும் வடிவையும், செங்கை ஆழியான் வழங்கும் கருத்துக்களின் எழுத்து வடிவையும் இங்கே தருகின்றேன்.










"The Kite Runner" - பட்டம் விட்ட அந்தக் காலம்...!

இடுப்பை விட்டு நழுவும் காற்சட்டையை மெல்ல மேலே இழுத்து விட்டு நானும் இந்தப் பெடியன்களுடன் மாலை நேர விளையாட்டில் ஐக்கியமாவேன். அந்த விளையாட்டுக்களில் ஒன்று தான், சோளகக் காலத்து பட்டம் பறக்கவிடுதல். அவரவர் தம் அதி வீர பராக்கிரமங்களைத் தம் பட்டங்களைப் பறக்க விடுதலில் காட்டுவார்கள்.








"ஈழமண் தந்த குயில்" வர்ணராமேஸ்வரன்

அப்போது தோன்றிய ஈழத்துப் பாடகர்களில் ஒருவர் தான், "ஈழத்து இசைவாரிதி" வர்ணராமேஸ்வரன் அவர்கள். தொண்ணூறுகளில் இளையோராக இருந்த எம்மை ஈர்த்த வர்ணராமேஸ்வரன் அவர்களை, ஈழத்துக் கலைஞர்கள், படைப்பாளிகளை ஒலி ஆவணப்படுத்தும் முயற்சி வாயிலாகச் சந்தித்தேன். இதோ அவர் தொடர்ந்து பேசுகின்றார்.







தாய்லாந்து சிறையில் வாடும் ஈழத்தமிழ் அகதிகள் (நேரடி அனுபவம்)

தாய்மண்ணின் தாகத்தோடு எஞ்சிய உயிரை மட்டும் கையில் பிடித்தபடி வீட்டை, தோட்டத்தை, உடன்பிறந்தோரை, உற்றாரை மொத்தத்தில் தாய்நிலத்தையே விட்டு ஓடிவந்தவர்கள், இன்று தம் குடும்பங்களோடு எந்தவிதக் காரணமும் இன்றி அந்நிய நாட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழரின் துயரம் எத்தனை பேருக்குத் தெரியும்?



தாய்லாந்துச் சிறையில் வாடும் ஈழத்தமிழ் அகதிகள் (ஆங்கில மூலம்)



குட்டிக்கண்ணா போய் வா...!

பல கண்ணன்கள் இசையுலகில் இருக்க இவன் குட்டிக்கண்ணன் என்று பெயர்பெற்றான்.அவனின் சிறுவன் குரல் இருக்கும் வரை சிறுவனாக பாடினான்.ஆடினான் மக்கள் மனங்களை கொள்ளை கொண்டான்.








My Daughter the Terrorist - மூன்று பெண்களின் சாட்சியங்கள்

"எங்கட உண்மை முகம் வந்து வெளியில இருக்கிறவைக்குத் தெரியாது, அதால தான் எங்கள வந்து பயங்கரவாதிகள் எண்டு சொல்லுகினம்"

அடந்த காட்டில் மழை வெள்ளச் சக்தியிலே பாய்ந்தோடிக் கொண்டு வேவு பார்க்கும் போராளி புகழ்ச்சுடர் இப்படிச் சொல்வதில் இருந்து இந்த ஆவணப்படம் ஆரம்பிக்கின்றது.



கிடுகுவேலியும், ஒரே கடலும்...!

கிடுகுவேலி நாவலில் வரும் நிர்மலாவைப் போலத் தான் ஒரே கடலில் வரும் தீப்தி. நிர்மலாவுக்குத் தேவை தன் அபிலாஷைகளைப் புரிந்து தன்னோடு இருந்து வாழக்கூடிய அன்பான கணவன். தீப்தியும் கூட தன் ஆசாபாசங்களைப் புரிந்துகொள்ளாமல் வேலையில்லாக் கணவனின் பிள்ளை மெஷினாகவும், சாப்பாட்டு இயந்திரமாகவும் இருக்கும் நிலையில் ஒரு மேதாவி ஆணொருவனின் புத்திசாலித்தனமும், பரிவும் இவளை ஈர்க்கையில் தன்னையே இழக்கத் தயாராகிறாள்.



மேளச்சமா...!

அரை வட்டமாக இருந்து கொண்டு முதலில் அடக்கமாக ஆரம்பிக்கும் மேளச்சமா. பிறகு மெல்ல மெல்ல நாதஸ்வரங்களின் தனி ஆவர்த்தனம். பிறகு ஒராள் சொல்ற வாசிப்புக்கு பதில் சொல்லுமாற் போல இன்னொருவர் வாசிப்பார். மெல்ல மெல்ல ஆரம்பிச்சு பெரிய மழையடிக்குமாப் போல இந்த மேளச்சமா களைகட்டும்.






சிவத்தமிழ்ச் செல்வி சோதியிற் கலந்தார்..!

தங்கம்மா அப்பாக்குட்டி என்றதோர் ஈழத்தின் ஆன்மீகச் சொத்து, ஆருமில்லாப் பெண்களின் ஆறுதற் சொத்து, நேற்று சிவபூமியாம் ஈழபதி யாழ்ப்பாணத்தில் இறைவனடி சேர்ந்தார்.தனது எண்பத்து நாலு வயது வரை தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தைத் தன் ஆன்மீக நிலைக்களனாகவும், ஆதரவற்ற பெண்களின் புகலிடமான துர்க்கா மகளிர் இல்லத்தைத் தனது அறத்தின் நிலைக்களனாகவும் வைத்து அறத்தொண்டாற்றிய பெருந்தகை அவர்.





"எரியும் நினைவுகள்" உருவான கதை

தென்னாசியாவின் சிறந்த நூலகமாகப் போற்றப்பட்டுப் பேணிப்பாதுகாக்கப்பட்ட அந்த அறிவுக்களஞ்சியம் ஒரே இரவில் சாம்பல் மேடாகப் போகின்றது.கனத்த மெளனத்தைக் கலைக்க ஆரம்பிக்கின்றது "எரியும் நினைவுகள்" வழியே வரும் சாட்சியங்கள்






ஒரு நினைவுப்பதிவும், ஒரு திரைப்பதிவும்

இலங்கை வானொலி என்னும் ஊடகம் உலகத் தமிழ் வானொலி ஒலிபரப்புக்கு முன்னோடியாக இருந்த காலம் அது. தனித்துவம் மிக்க ஒலிபரப்புக் கலைஞர்கள், படைப்பாளிகளை உருவாக்கிய அந்த வானொலிக் களத்தில் தோன்றிய சிறப்பு மிகு கலைஞன் அமரர் திரு. ஜோர்ஜ் சந்திரசேகரன் அவர்கள்.






ஒளிச்சுப் பிடிச்சு...!

அப்ப தான் பங்கர் வெட்ட வேணும் எண்ட யோசினை பரவலா எல்லாருக்கும் ஒரு தேவையா மாறீட்டுது. ஒவ்வொரு வீட்டிலும் வீட்டு முற்றத்திலோ, பின் வளவுக்குள்ளையோ ஒரு சோலை மறைப்பான நிலம் தேடி ஆள் உயரத்துக்கு "ட" வடிவத்தில கிடங்கு வெட்டி, கிடங்குக்கு மேல் மரக்குற்றிகளை அடுக்கி மூடி மறைத்து விட்டு, அதுக்கு மேலை மண் மூடி நிரவி விடுவினம்.





மூங்கில் பூக்கள் - குணசீலன் - கூடெவிடே

இந்த மூங்கில் பூக்கள் நாவலை மலையாளத் திரையுலகின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான பத்மராஜன் (தன்மத்ரா, காழ்ச்சா திரைப்படங்களைத் தந்த பிளெஸ்ஸியின் குருவும் கூட) இந்த மூங்கில் பூக்கள் நாவலை மலையாளத்தில் "கூடெவிடே (In Search of a Nest)" என்ற பெயரில் படமாக்கியிருக்கின்றார்.






ஓய்ந்து விட்ட கான(மூர்த்தி)சுரம்

ஈழத்தாய் பெரும் நாதஸ்வர வித்துவான்களையும், தவில் மேதைகளையும் ஈன்ற வரிசையில் வி.கே.கானமூர்த்தி - வி.கே.பஞ்சமூர்த்தி இரட்டையர்களின் வாசிப்பும் தனித்துவமானது என்பதை ஈழமண் கடந்த புலம்பெயர் தமிழ் உலகமே அறியும்.







என் சினிமா பேசுகிறது...!

தியேட்டர் பற்றி அந்த பால்யகாலத்தில் என் சகவாலுகளுடன் பேசும் போது, "திரைக்கு பின்னால் இருந்து தான் ஆட்கள் நடிக்கினமாம், ரோச் லைட் அடிச்சு தான் இங்காலிப்பக்கம் தெரியுமாம்" என்று அறிவுபூர்வமாகப் பேசியதும் நினைப்பிருக்கு.







லைப்ரரி சேர் காட்டிய "ராஜம் கிருஷ்ணன்" இன்னும் பலர்

முதுபெரும் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனின் பேட்டியை வாசித்ததும் மனம் கனக்கின்றது. மெல்ல என் மடியில் புத்தகத்தை வைத்து விட்டு பழைய நினைவுகளுக்கு என் மனம் தாவுகின்றது.






"மிருதங்க பூபதி" A.சந்தானகிருஷ்ணன்

ஈழத்தின் கலைஞர்கள், படைப்பாளிகளை வலைப்பதிவு வழியே ஆவணப்படுத்தும் முயற்சியின் தொடர்ச்சியாக இப்பதிவு வாயிலாக ஈழத்தின் புகழ்பூத்த மிருதங்கக் கலைஞர் கலாபூஷணம் திரு A.சந்தான கிருஷ்ணன் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பினைப் பதிவு செய்கின்றேன்.








"மாயினி" குறித்து எஸ்.பொ. பேசுகிறார்...!

எஸ்.பொன்னுத்துரை அவர்களை ஒலிப்பகிர்வு கண்டு அந்த நிகழ்வுக்காக அனுப்பவிருந்தேன். அவர் தன் உள்ளக்கிடக்கையைப் பகிரும் போது, இந்தப் பகிர்வு பலரைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் ஒலியை தட்டச்சியும், ஒலிப்பகிர்வாகவும் இங்கே தருகின்றேன்.






ஊரெல்லாம் வெள்ளக்காடு

ஐம்பது வருஷத்துக்குப் பிறகு இந்த வருஷம் தான் எங்கட ஊரில் கண்காணாத வெள்ளமாம். எங்கட ஆட்கள் பிரமிப்பை வெளிப்படுத்தும் விதமே தனி. கன மழை அடித்தது என்றால் "பேய் மழை பெய்தது" என்பினம், அதிக வெள்ளப்பெருக்கு என்றால் "ஊரெல்லாம் வெள்ளக்காடு" என்று ஆச்சரியம் கொட்டுவினம்.
Posted by கானா பிரபா at 3:15 PM Email This BlogThis! Share to X Share to Facebook

81 comments:

சென்ஷி said...

வாழ்த்துக்கள் கானா...

மேன்மேலும் இன்னமும் பல சிகரங்களை தொட எனது வாழ்த்துக்கள்..

பதிவு தொகுப்பு மிகவும் அருமை :))

December 07, 2008 8:00 PM
MyFriend said...

வாழ்த்துக்கள் கானா...

மேன்மேலும் இன்னமும் பல சிகரங்களை தொட எனது வாழ்த்துக்கள்..

பதிவு தொகுப்பு மிகவும் அருமை :))

December 07, 2008 8:06 PM
M.Rishan Shareef said...

எனது இதயம்கனிந்த நல்வாழ்த்துக்கள் நண்பரே :)

(ட்ரீட்டை பார்சலாக அனுப்பினாலும் ஏற்றுக்கொள்ளப்படும் )

December 07, 2008 8:08 PM
G.Ragavan said...

மனமார்ந்த வாழ்த்துகள் பிரபா. மூன்று முப்பதாகி முந்நூறாகட்டும். :-)

உங்களுடைய பல பதிவுகளைப் படித்துக் களித்தவன் என்ற வகையிலும் உங்களோடு இசையரசி வலைப்பூவில் கைகோர்த்தவன் என்ற வகையிலும் உங்களை வாழ்த்துகிறேன்.

December 07, 2008 8:40 PM
கொழுவி said...

பேரலைகள் தணிந்தாலும் அவ்வப்போதெழும் சீறுமலைகளை தட்டிக்கொடுத்து வளர்க்கும் வரம் கைவரப் பெறுவீராக..

வாழ்த்துகளுடன்
கொழுவி
கொண்டோடி
இவர்களுடன்
காவடி

December 07, 2008 8:53 PM
கானா பிரபா said...

சென்ஷி, மைபிரண்ட்

மிக்க நன்றி ;)

December 07, 2008 8:57 PM
கானா பிரபா said...

ரிஷான்

ட்ரீட்டை றேடியோஸ்பதியில் பெற்று கொள்ளவும் ;)

//G.Ragavan said...
மனமார்ந்த வாழ்த்துகள் பிரபா. மூன்று முப்பதாகி முந்நூறாகட்டும். :-)//

வாங்க ராகவன்

பதிவுகளைத் தானே சொன்னீங்க, வயசை இல்லையே ;)

மிக்க நன்றி

December 07, 2008 9:01 PM
Tech Shankar said...

Congrats dear buddy

Great work.

December 07, 2008 9:01 PM
sathiri said...

வணக்கம் கானா உங்கள் படைப்புக்களை விரும்பிப் படிப்பேன் அதிலும் முக்கியமாய் பயண அனுபவங்களை ஏனெனில் எனக்கும் பயணம் செய்வது பிடிக்கும் வாழ்த்துக்கள்

December 07, 2008 9:16 PM
Thamiz Priyan said...

வாழ்த்துக்கள் தல!

December 07, 2008 9:30 PM
கோபிநாத் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் தல ;))

December 07, 2008 9:37 PM
ஆதித்தன் said...

இழக்கும் நம்பிக்கையை உங்கள் வார்த்தைகள் மீளக்கட்டியெழுப்புகின்றன.
பல்லாண்டுகாலம் தொடரட்டும் உங்கள் பணி.

December 07, 2008 9:38 PM
கானா பிரபா said...

கொழுவி

உங்களைப் போன்ற மூத்த குடிமக்கள் ஆசி கிடைப்பது பெருமை ;)

// Sharepoint the Great said...
Congrats dear buddy//

நன்றி நண்பா

December 07, 2008 9:44 PM
சந்தனமுல்லை said...

வாழ்த்துக்கள் கானாஸ்! உங்க பதிவுகளை கடந்த வருடங்களில் வாசித்திருந்தாலும், இந்த வருடத்தில்தான் பின்னூட்டங்களிடத் தொடங்கினேன்! உங்க மடத்துவாசல் பிள்ளையாரடியும், ரேடியோஸ்பதியும், உலாத்தலும் எனக்குப் பிரியமான வலைப்பூக்கள்,in that order! நாங்கள்தான் நன்றி சொல்லனும், இப்படி சுவாரசியமான் நேரத்தை எங்களுக்கு வழங்குவதற்கு! பப்புவும் இதேமாதிரி சொல்லும்வரை நீங்க வலைபதிந்துக்கொண்டே இருக்கணும்னு வேண்டிக்கறேன்!! :-)

December 07, 2008 9:45 PM
தமிழ்பித்தன் said...

அப்பு வாழ்த்துக்கள் கலக்கல்கள் தொடரட்டும்....
இணையம் வாழ்விலே நேரிலே சந்திக்கவே மாட்டோம் என்று தெரிந்தும் நல்ல நண்பர்கள் ஆக்குகிறது,,,,,

December 07, 2008 9:45 PM
geevanathy said...

நல்வாழ்த்துக்கள்....
தொடரட்டும் உங்கள் பணி

December 07, 2008 9:50 PM
கிரி said...

//கடந்த மூன்று வருஷங்களில் இந்த வலையுலகிலும் ஆயிரம் அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன. எதை எழுத வேண்டும் எழுதக் கூடாது என்று ஒரு கூட்டமும் எத்தனை தரம் பின்னூட்டம் வந்திருக்கு, எத்தனை முறை பின்னூட்டக்கூடாது என்று ஒரு கூட்டமும், தேசியவாதியா/ நாட்டுப்பற்றாளனா என்று தீர்மானிக்கும் புலம்பெயர்ந்து இணையத்தில் மட்டும் அரசியல் அல்லது அதிமேதாவியாகக் காட்டிக் கொள்ளும் ஒரு கூட்டமும் என்று இந்த மூன்றாவது ஆண்டிலும் முகுதுக்கு முன்னாலும் பின்னாலும் பேசிக்கொண்டிருக்க அவர்களை புறங்கையால் விலக்கி விட்டு என்னால் முடிந்த அளவுக்கு எழுதிக் கொண்டிருக்கின்றேன். அநாநியாக வந்து தொந்தரவுப் பின்னூட்டம் போடுபவர்களை இலகுவாகவே அவரின் முகமூடியைக் கழற்றி அவரும் ஒரு தெரிந்த நண்பர் தான் என்பதை நிரூபிக்கும் கண்காணிப்பு கருவிக்கும் நன்றி ;)//

:-))))))))))))))

புறம் கூறுபவர்களை பொருட்படுத்தாமல் இருப்பதே அவர்களுக்கு கொடுக்கும் சரியான பதில்

கானா பிரபா நீங்கள் தொடர்ந்து பல நல்ல பதிவுகளை தர என் அன்பான வாழ்த்துக்கள்.

அன்புடன்
கிரி

December 07, 2008 9:58 PM
ஆயில்யன் said...

வாழ்த்துக்கள் கானா !

December 07, 2008 9:59 PM
ஆயில்யன் said...

//இணையம் வாழ்விலே நேரிலே சந்திக்கவே மாட்டோம் என்று தெரிந்தும் நல்ல நண்பர்கள் ஆக்குகிறது,,,,,///


ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்!

December 07, 2008 10:02 PM
முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள் பல.. :)

December 07, 2008 10:02 PM
கானா பிரபா said...

மிக்க நன்றி சாத்திரி

வலைப்பதிவு எழுதுவதற்காகவே சென்ற பயணம் கம்போடியா பதிவாக வந்து கொண்டிருக்கு.

தமிழ்பிரியன்

நன்றி ;)

தல கோபி

சங்கம் சார்பில் நன்றி ;)

December 07, 2008 10:16 PM
கானா பிரபா said...

ஆதித்தன்

உங்கள் பின்னூட்டம் மூலம் தாயத்து வலைப்பதிவராகிய உங்கள் அறிமுகமும் கிடைத்திருக்கு நன்றி

சந்தனமுல்லை

தொடந்த வாசிப்பும் உங்கள் கருத்துக்களும் மிக்க நன்றி, பப்புவுக்கும் ஏத்த மாதிரி எழுத முயற்சிக்கிறோம் ;)

தமிழ்பித்தன்

மிக்க நன்றி அப்பு ;)

December 07, 2008 10:19 PM
தமிழ் ஓவியா said...

வாழ்த்துக்கள் தோழர்.
உங்கள் பயணம் தொடரட்டும்.

எனது வலைப்பக்க முகவரி:http://thamizhoviya.blogspot.com

December 07, 2008 10:32 PM
கானா பிரபா said...

தங்கராசா ஜீவராஜ்

மிக்க நன்றி நண்பா

கிரி

நிச்சயமாக உங்கள் ஆலோசனையை செவிமடுப்பேன். மிக்க நன்றி

ஆயில்யன்

மிக்க நன்றி

December 07, 2008 10:56 PM
கானா பிரபா said...

முத்துலெட்சுமி

வாழ்த்துக்கு நன்றி

தமிழ் ஓவியா

மிக்க நன்றி, உங்கள் தொடுப்பைத் தந்தமைக்கும்.

December 07, 2008 10:57 PM
HK Arun said...

எவரும் தொடாத பல பதிவுகளை உங்கள் தளத்தில் காணக்கூடியதாக இருக்கின்றது.

காலத்துக்கு தேவையான பதிவுகளை காலத்தோடு பொருந்தும் விதமாக பதிந்து வருகின்றீர்கள்.

உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

நன்றி
அன்புடன் அருண்

December 07, 2008 10:59 PM
தமிழ் said...

வாழ்த்துகள் நண்பரே

December 07, 2008 11:05 PM
சந்தனமுல்லை said...

/பப்புவுக்கும் ஏத்த மாதிரி எழுத முயற்சிக்கிறோம் ;)/

நன்றி கானாஸ்! நான் சொல்லவந்தது பப்பு வளர்ந்து பதிவுகள் படிக்கும் காலம் வரும் வரை நீங்கள் எழுதவேண்டுமென்பதே(குறைந்தது 25 வருடங்கள்?)! :-))

December 07, 2008 11:23 PM
கானா பிரபா said...

மிக்க நன்றி அருண்

மிக்க நன்றி திகழ்மிளிர்

// சந்தனமுல்லை said...
நன்றி கானாஸ்! நான் சொல்லவந்தது பப்பு வளர்ந்து பதிவுகள் படிக்கும் காலம் வரும் வரை நீங்கள் எழுதவேண்டுமென்பதே//

சிஸ்டர்

அதைத்தானே நானும் சொன்னேன், அவ வளரும் போது நான் எழுதுவது பிடிக்கணுமே ;)

December 07, 2008 11:46 PM
Paheerathan said...

வாழ்த்துக்கள் பிரபா தொடருங்கள் உங்கள் எழுத்துக்களை ..............எனது முதல் பதிவுக்கும் வரவேற்ப்பு அளித்தவர் நீங்கள்தான் :)
அனானிகளை கண்டுபிடிக்கும் அந்த இரகசியம் என்ன ?

December 08, 2008 12:32 AM
Anonymous said...

வாழ்துக்கள் அண்ணா.......................

December 08, 2008 12:53 AM
கப்பி | Kappi said...

வாழ்த்துகள் தல!!

December 08, 2008 2:47 AM
சரவணகுமரன் said...

வாழ்த்துக்கள்...

December 08, 2008 3:18 AM
ஹேமா, said...

வணக்கம் பிரபா.உங்கள் 3 வயதுக் குழந்தையோட அழகு நடை போடுகிறீர்கள்.விழுந்து எழும்பும்போது அப்பிடி இப்பிடியெண்டு சின்னச் சின்னக் காயங்கள் வரத்தான் செய்யும்.மருந்து போட்டபடியே தொடர்ந்தும் நடவுங்கோ.

உலகம் தெரியாத என்னைப் போலச் சிலருக்கு உங்கள் வலத்தளம் நாங்கள் தேடும்...உலவும் சின்ன உலகம் போல.பலவற்றை அறிந்து கொள்கிறோம்.இன்னும் இன்னும் எதிர்பார்க்கிறேன்.பிரபா மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

வாழ்த்துச் சொல்ல நன்றாகப் பிந்திவிட்டேன்.மன்னிக்கவேணும்.

December 08, 2008 3:56 AM
சின்னக்குட்டி said...

வணக்கம் பிரபா..எனது வலைபதிவு துரோணருக்கு இந்த ஏகலைவனின் மனமார்ந்த வாழ்த்துக்கள்

December 08, 2008 8:04 AM
Anonymous said...

வாழ்த்துக்கள் கானா

December 08, 2008 9:17 AM
jeevagv said...

சொல்லிற் சிறப்பாகும் சொல்லாமலும் உயர்வாகும்

தங்கள் செயற்கரிய தொண்டுகள், வாழ்த்துக்கள் பிரபா.

December 08, 2008 10:33 AM
கானா பிரபா said...

தங்கள் அன்புக்கு மிக்க நன்றி தங்க கம்பி

வருகைக்கு நன்றி பகீரதன்

கண்காணிக்கத் தான் ஏகப்பட்ட செக்கர்கள் இலவசமாகவே கொட்டிக் கிடக்கே ;)

கவின்

மிக்க நன்றி

December 08, 2008 12:38 PM
அருண்மொழிவர்மன் said...

பிரபா....


முதலில் என்னை பற்றி குறிப்பிட்டு, சிலாகித்து எழுதயமைக்கு பெரு நன்றிகள். இது எனக்கு பெரும் ஊக்கமும், உற்சாகமும் தந்துள்ளது

இந்த மூன்றாண்டுகளில் நீங்கள் எமக்கு தந்த விடயங்கள் தான் அதிகம். அதிலும் குறிப்பாக எனக்கு. சில தனிப்பட்ட பிரச்சனைகள் காரணாமாக மிகுந்த மன உளைச்சலின் மத்தியில் பதிவுகள் இடாமல் இருந்தபோது நீங்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு ஒரு மடல் அனுப்பி நலம் விசாரித்து தொடர்ந்து எழுதும்படி கேட்டீர்கள். இத்தனைக்கும் எமது அறிமுகம் வலைப்பதிவு ஊடாக மட்டுமே ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு எனது நிரலில் பதிவு கருவி பொறுத்துவதில் சிக்கல் ஏற்பட்டபோது நீங்களாகவே முன்வந்து அதை சரியானபடி இணைத்து தந்தீர்கள். எனது பதிவுகளுக்கு நீங்கள் தரும் ஆக்கபூர்வமான விமர்சனம் அடுத்து சொல்ல வேண்டிய விடயம்.

பிரபா, இந்த பணி இனிவரும் காலங்களிலும் தொடரவேண்டும். மேலும், உங்கள் ஆக்கங்களை ஒரு தொகுப்பாக வெளியிடலாமே.....

வேறென்ன பிரபா,
உங்கள் சாதனைகளுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்,

December 08, 2008 3:55 PM
கிடுகுவேலி said...

வாழ்த்துக்களும் வணக்கங்களும்!!!

ஈழமண் பெருமைப்பட வேண்டிய ஒரு படைப்பாளி நீங்கள். எமது கலை, கலாசார விழுமியங்கள் பற்றிய காலத்தால் காணாமல் போன பல அரிய விடயங்களை இதன் வாயிலாக அறியத்தந்தீர்கள். இசை மீது கொண்ட உங்களின் தீராத காதல் மூலம் அந்தக் கலைஞர்களை இணையத்தில் ஏற்றி கௌரவித்திருக்கிறீர்கள். இந்த கலை, கலாசாரம் பேணும் உங்களின் மகத்தான பணி தொடரவேண்டும். என்றும் எங்களின் பக்கபலம் உங்களுக்கு. நல்லைக்கந்தனின் ஆசி எந்நாளும் உங்கள் பக்கம். தொடருங்கள். வீறு நடை போடுங்கள். ஒருநாள் இருள் விடியும்.

என்னையும் பொருட்டாக மதித்து உங்கள் வலைப்பூவில் இணைத்துள்ளீர்கள். மோதிரக்கையால் பெற்ற குட்டு போல் உள்ளது. நன்றி.

December 08, 2008 4:00 PM
கானா பிரபா said...

கப்பி மிக்க நன்றி

ஹேமா

மிக்க நன்றி தொடர்ந்தும் உங்கள் கருத்துக்களைப் பகிர்வதற்கும், இந்த ஆண்டு கானமூர்த்தி அவர்களின் பதிவுக்கு நீங்கள் செய்த உதவியையும் மறவேன்.

சின்னக்குட்டியர்

பெரிய வார்த்தை எல்லாம் பேசுறியள் ;)

December 08, 2008 4:13 PM
வாசுகி said...

வணக்கம். உங்கள் படைப்புக்களை விரும்பிப் படிப்பேன்.ஆனால் comment எழுதுவது இதுவே முதல் தடவை.
உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்.
முக்கியமாக உங்கள் பயணக்கட்டுரைகள் அருமை.

December 08, 2008 5:53 PM
Anonymous said...

வாழ்த்துக்கள்!

அநானியாக வந்துள்ளேன். முடிந்தால் கண்டுபிடியுங்களேன்.

December 08, 2008 6:06 PM
pudugaithendral said...

பதிவு தொகுப்பு மிகவும் அருமை :))//

நானும் ரிப்பீட்டிக்கறேன்.

3 வருஷம் ஆச்சா. அப்ப எனக்கு மூத்த பதிவர்னு சொல்லுங்க.

வாழ்த்துக்கள்.

ரேடியோஸ்பதியில் இன்னும் அதிகம் நேயர் விருப்பப்பாடல்கள் கொடுங்க.

December 08, 2008 9:38 PM
Haran said...

உங்களுடைய பதிவுகளும், பணியும் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
உங்களைப் போன்றவர்களைப் பார்க்கும்போது தான் எனக்குள்ளும் எழுத வேண்டும் என்னும் ஒரு ஆர்வம் தூண்டப்படுகிறது... நேரமின்மையை ஒரு சாட்டாக அடிக்கடி கூறிக்கொண்டிருக்கிறேன்... மனமுண்டானால் இடமுண்டு என்று கூறுவார்கள்...

ஒரு சிறிய காலப்பகுதியில் தொடர்ந்து எழுதுவது என்பதே பெரிய விடயம்... ஆனால் நீங்கள் தொடர்ந்து 3 வருடங்களாக பதிவுகளைத் தந்துகொண்டிருப்பதற்காக எனது பாராட்டுக்கள்....
எனது ஒரு அவா... ஈழத்து மக்களுடைய அவதிகளையும் நீங்கள் போன்றோர் எழுதவேண்டும் (இன்னும் அதிகமாக)

December 08, 2008 10:39 PM
கானா பிரபா said...

சின்ன அம்மணி, ஜீவா வெங்கட்ராமன்

மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

December 08, 2008 10:43 PM
கானா பிரபா said...

அருண்மொழிவர்மன், கதியால்

உங்கள் இருவருக்கும் இருக்கும் நல்ல எழுத்தாற்றலும் கொடுக்கும் விதமும் இன்னும் பலரைச் சென்றடைய வேண்டும் என்ற ஆசை எனக்குள் இருக்கின்றது.

December 08, 2008 10:44 PM
கானா பிரபா said...

வருகைக்கு மிக்க நன்றி வாசுகி, பயணக்கட்டுரைகளை முடிந்தளவு இன்னும் விபரமாகத் தருகின்றேன்.

அநானி நண்பரே

குறும்பு ;)

புதுகைத்தென்றல்

மூன்று வருஷம் என்றாலே மூத்த பதிவரா அவ்வ்வ்

December 08, 2008 10:47 PM
மாயா said...

வாழ்த்துக்கள் அண்ணா !

December 08, 2008 11:17 PM
ஆதவன் said...

வணக்கம்
நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.

http://www.thamizhstudio.com/

Add a Gadget - ல் இதை பயன்படுத்துக

வழி --> Add a Gadget --> select HTML/JavaScript

Title : தமிழ் ஸ்டுடியோ.காம்

Content : img alt="தமிழ் ஸ்டுடியோ.காம்" src="http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg"/>

December 08, 2008 11:32 PM
ஆதிரை said...

வாழ்த்துக்கள் நண்பரே...
உங்கள் எழுத்துக்கள் இன்று போலவே என்றும் நிச்சயம் பேசப்படும்.

December 09, 2008 5:43 AM
Anonymous said...

வாழ்த்துக்கள் பிரபா,தொடர்ந்தும் சிறப்பான பதிவுகளை தாருங்கள்,கலையும்,திறமும்,அறிவும் கொட்டி கிடக்கும் இணுவையூரானுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்....

December 09, 2008 8:14 AM
அப்புச்சி said...

வாழ்த்துக்கள் பிரபா,தொடர்ந்தும் சிறப்பான பதிவுகளை தாருங்கள்,கலையும்,திறமும்,அறிவும் கொட்டி கிடக்கும் இணுவையூரானுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்....

December 09, 2008 8:15 AM
தமிழ் மதுரம் said...

வாசலுக்கு இன்றோடு மூன்று வயதாகி விட்டதாம்!
ஏதோ பெருமிதத்தில் குழந்தயைப் பிரசவித்த தாய் போல
பிரபா அதனைப் கை பிடித்து தவழ விடுகிறார் வலையில்!
கால் பிடித்து குழந்தை தவழுகையில் காலுடைக்க ''கெற்றப் போலுடன்''பலராம்!
அவர் காது பின்னே குறை குற்றம் கூறு வோரும் உளராம்!
நவரசம் கலந்து இணுவையூர் கோயிலில் பெற்றதைப் போல எல்லாமே
மடத்தில் கிடைப்பதாய் பெருமிதம். நான் கூட இரு வருடம் முன் வலை எழுத நினைத்தது இந்த வாசல் பார்த்துத் தானாம்.
வாழ்கையில் எமையெல்லாம் ஒன்றாக்க இனணயம் இருக்கையில் இனிக் கவலையும் ஏனாம்???
என் காதில் கேட்டது போல் பல சின்னவர்களுக்கு எழுதக் கடிவாளமிட்டதும் இந்த மடம்தானாம்.
ஆனாலும் இணுவையூரப்பா! ஒரு சில குறைகளுமுண்டப்பா!
அதையும் அழகாய் நிவர்த்தி செய்திடப்பா!
அடக்கி ஒடுக்கப்படும் எங்கள் அன்னை மண் வாழ் உறவுகள் கதைகள் இங்கே தணிக்கை எனும் கிடப்பில் இருப்பதாய்க் கேள்வி!
ஏன் பிரபா, உண்மைக்கு ஏதுடா வேள்வி (வேலி) என்பதை மறந்ததாய் நினைத்து விட்டாயா??
ஒடுக்கப்படுவோர் பற்றி உன் பதிவில் இன்னும் ஓங்கி எழுதப்பட வேண்டும்! புதைந்து கிடக்கும் எம் தாயக நினைவுகள் புலம் அறிந்து உணர்ந்திட வழி காட்டிட வேன்டும்!
எப்போது பிரபா இவையெல்லாம் பதிவாகும்??
இல்லை அவை எவர் செய்தால் என்ன நான் இப்படியே இருப்பேன் எனும் நினைவாகுமா??
தப்பேதும் மடத்துவாசலில் இதை விட வேறு உள்ளதாய் எனக்கும் தெரியவில்லை. இப்போது வாழ்த்துகிறேன் நீ எம் தேச வலி, நினைவு சுமந்து இன்னும் பல ஆண்டுகள் பயணிக்க!
வாழ்த்தும் நானோ முப்பாலும் கற்காது மூன்றாம் பால் மட்டும் கற்ற ஓர் அப்பாவித் தமிழன்!

December 09, 2008 1:44 PM
கானா பிரபா said...

ஹரன்

தொடர்ந்து உங்கள் பதிவுகளை தொடர்ச்சியாக எதிர்ப்பார்க்கின்றேன்.

வருகைக்கு நன்றி மாயா

மிக்க நன்றி ஆதிரை

December 09, 2008 8:17 PM
கானா பிரபா said...

அப்புச்சி

தங்கள் அன்புக்கு மிக்க நன்றி

மெல்பன் கமல்

உங்களிடமிருந்தும் நம் தாயகத்தின் பதிவுகளை எதிர்பார்க்கின்றேன், நன்றி

December 09, 2008 8:20 PM
தாசன் said...

வாழ்த்துக்கள் அண்ணா !

December 09, 2008 8:46 PM
வசந்தன்(Vasanthan) said...

வாழ்த்து கானா பிரபா.

என்ர வலைப்பதிவுக்கு நாலு வருசம் முடிஞ்சுது எண்டதை ஞாபகப்படுத்தினது உம்மட இடுகை.

அதுக்கொரு நன்றி.
;-)

December 10, 2008 1:37 AM
கானா பிரபா said...

கமல்

மிக்க நன்றி

தாசன்

நீண்ட நாளுக்கு பின் காண்பதில் சந்தோஷம்

வசந்தன்

மிக்க நன்றி, உங்கள் ஆரம்ப காலப்பதிவுகளை மீண்டும் எதிர்பார்க்கின்றேன்

சன் ஒப் கொழுவி மற்றும் காவடி

மன்னிக்கவும், உங்கள் பின்னூட்டங்கள் சிலரைப் புண்படுத்தும் என்பதால் தணிக்கை குழு வெட்டி விட்டது ;)

December 10, 2008 8:09 PM
அப்புச்சி said...

அன்பின் பிரபா

தங்களின் பின்னூட்டத்தை எதிர்பார்க்கிறேன்

அன்புடன்
அப்புச்சி

December 12, 2008 8:24 AM
Anonymous said...

ஆர்வம் மிக்க உங்கள் படைப்புக்களைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன்.
மூன்று வருடங்களைப் பூர்த்தி செய்யும் இன் நாளில் என் மனப்பூர்வமான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.-சக்தி-

December 12, 2008 10:39 AM
கானா பிரபா said...

அப்புச்சி

தங்கள் படைப்பை வாசித்தேன், காலத்துக்கு ஏற்றதொரு வேண்டுகோள். இன்னும் உங்க‌ள் ப‌திவுக‌ளை எதிர்பார்க்கின்றேன்.

ச‌க்தி அக்கா

உங்க‌ளைப் போன்ற‌ உற‌வுக‌ளின் க‌ருத்துக்க‌ளை அறிவ‌தில் ம‌ட்ட‌ற்ற‌ ம‌கிழ்வ‌டைகின்றேன்.

December 12, 2008 11:08 AM
வெற்றி said...

கா.பி,
வாழ்த்துக்கள்.

December 12, 2008 7:36 PM
Anonymous said...

வாழ்த்துக்கள் பிரபா.

மூன்று வருடங்களா?
எனக்கு ஒரு பின்னூட்டமிடவே மேல் மூச்சு வாங்குகிறது.

வாழ்க வளமுடன்.

அன்புடன்,
தபோதரன்,
உப்ப்சாலா, ஸ்வீடன்

December 12, 2008 9:14 PM
கானா பிரபா said...

வருகைக்கு நன்றி வெற்றி

நீண்ட காலமாக உங்களை வலைப்பதிவில் காணவில்லையே?

வாருங்கள் தபோதரன்

ஆரம்பத்தில் ஈழத்தில் இருந்த காலம் எழுதிய பின் நீண்ட இடைவெளிக்குப் பின் கிடைத்த ஒரு எழுத்தூடகம் இந்த வலைப்பதிவு. அதில் இறங்கிப் போனது தான் மூன்றாண்டுகள் ஓடியே விட்டன.

December 13, 2008 1:25 AM
நாகு (Nagu) said...

வாழ்த்துக்கள் கானா.

ஈழத்து இசை,இலக்கியம் மற்றும் வரலாறு உங்கள் பதிவின்மூலம்தான் எனக்கு நன்கு அறிமுகமாகியது.

இங்கே இருக்கும் ஒரு ஈழ மக்கள் வீட்டில் ஒருமுறை உங்கள் நல்லூர் கோவில் பதிவைக் காட்டினேன். அவர்கள் கண்கள் பனிக்க கணினியின் முன்னே விழுந்து சேவிக்கவிருந்தார்கள். அதுவும் சுவையான அனுபவம். நான் மிகவும் ரசித்தது கல்லடியார் கதைகள்.

தொடரட்டும் உங்கள் தொண்டு.

December 14, 2008 6:38 AM
கானா பிரபா said...

வணக்கம் நாகு

உங்கள் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன். என்னாலான சிறு முயற்சியாகவே ஈழத்துப் படைப்பாளிகளையும், படைப்புக்களையும் அறிமுகம் செய்கின்றேன். அது உங்களைப் போன்றவர்களைப் போய்ச் சேர்வது உண்மையில் நிறைவான விடயம். உங்கள் நண்பர்களையும் விசாரித்ததாகச் சொல்லுங்கள்.

December 14, 2008 8:10 AM
தமிழன்-கறுப்பி... said...

உங்களின் கொள்கைகளோடு தனித்துவயமாய் மிளிர்ந்துகொண்டிருக்கிறீர்கள் அண்ணன். நான் வலைக்கு வந்தது உங்களையெல்லாம் பார்த்துதான்...

December 22, 2008 11:51 PM
தமிழன்-கறுப்பி... said...

நான் அடிக்கடி சொல்லி இருப்பது போல எங்கே இருந்துதான் இவ்வளவு நேரம் ஒதுக்குகிறீர்களோ தெரியாது ஆனாலும் உங்கள் பொறுமையும் திறமையும் உங்கள் வெற்றிக்கு சான்று...


தொடரட்டும் உங்கள் பணியும் வெற்றிகளும்...

வாழ்த்துக்கள் அண்ணன்...

December 22, 2008 11:58 PM
தமிழன்-கறுப்பி... said...

யாழ்ப்பாணத்தின் கலாச்சாரத்தை பதிவு செய்து கொண்டிருப்பவர்களில் நீங்கள் செய்கிற பணி அவசியமானது அண்ணன் அந்த வகையில் இந்த தொகுப்பு இன்னும் பெருகவும் நிறையவும் வாழ்த்துக்கள்...

December 23, 2008 12:02 AM
கானா பிரபா said...

வருகைக்கு மீண்டும் நன்றிகள் தமிழன்

உங்களைப் போன்ற உறவுகளின் நட்புக் கிடைத்ததும் இந்த வலைப்பதிவால் கிடைத்த பயன்.

December 23, 2008 10:38 PM
புதுகை.அப்துல்லா said...

வாழ்த்துகள் கானா அண்ணா. நான் கடந்த ஓராண்டாக உங்கள் வாசகன். குறிப்பாக ரேடியோஸ்பதிக்கு. இன்னும் நல்ல நல்ல பாட்டுத் தொகுப்பா குடுங்க...ஒரு நூறு வருஷத்துக்கு :)

December 24, 2008 2:53 AM
King... said...

வாழ்த்துக்கள் அண்ணன்...

December 24, 2008 6:02 AM
பாலராஜன்கீதா said...

வாழ்த்துகள் பிரபா.

December 24, 2008 7:59 AM
ILA (a) இளா said...

மாம்ஸ் வாழ்த்துக்கள். கொஞ்ச நாளா வலைப் பக்கம் வர முடியல, தாமசத்துக்கு மன்னிக்கனும்

December 24, 2008 8:17 AM
ILA (a) இளா said...

//(ட்ரீட்டை பார்சலாக அனுப்பினாலும் ஏற்றுக்கொள்ளப்படும் )///
ஹ்ம்ம்,. ஆகட்டும்..

December 24, 2008 8:17 AM
Anonymous said...

வாழ்த்துககள்

December 24, 2008 8:19 AM
கானா பிரபா said...

புதுகை அப்துல்லா

உங்கள் அன்புக்கு நன்றி நிச்சயம் தருவேன்

வருகைக்கு நன்றி கிங்

December 24, 2008 3:42 PM
கானா பிரபா said...

பாலராஜன்கீதா

தங்கள் அன்புக்கு மிக்க நன்றி

இளா

வாங்க தல, அதெல்லாம் பிரச்சனை இல்லை ;)

கவின்

மிக்க நன்றிகள்

December 24, 2008 11:08 PM
Anonymous said...

வாழ்த்துகள் பல சகோதரா... :)

January 14, 2009 6:21 PM
கானா பிரபா said...

மிக்க நன்றி தூய்ஸ்

January 14, 2009 7:05 PM

Post a Comment

Newer Post Older Post Home

About Me

My Photo
கானா பிரபா
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
View my complete profile

Blog Archive

  • ►  2025 (7)
    • ►  April 2025 (1)
    • ►  March 2025 (2)
    • ►  February 2025 (3)
    • ►  January 2025 (1)
  • ►  2024 (25)
    • ►  December 2024 (3)
    • ►  November 2024 (1)
    • ►  October 2024 (1)
    • ►  September 2024 (1)
    • ►  August 2024 (1)
    • ►  July 2024 (4)
    • ►  June 2024 (3)
    • ►  May 2024 (1)
    • ►  April 2024 (2)
    • ►  March 2024 (3)
    • ►  February 2024 (3)
    • ►  January 2024 (2)
  • ►  2023 (19)
    • ►  December 2023 (1)
    • ►  November 2023 (1)
    • ►  October 2023 (4)
    • ►  September 2023 (1)
    • ►  August 2023 (1)
    • ►  July 2023 (2)
    • ►  June 2023 (1)
    • ►  May 2023 (1)
    • ►  April 2023 (3)
    • ►  March 2023 (2)
    • ►  February 2023 (1)
    • ►  January 2023 (1)
  • ►  2022 (25)
    • ►  December 2022 (2)
    • ►  November 2022 (2)
    • ►  October 2022 (3)
    • ►  September 2022 (2)
    • ►  August 2022 (1)
    • ►  July 2022 (2)
    • ►  June 2022 (1)
    • ►  May 2022 (3)
    • ►  April 2022 (1)
    • ►  March 2022 (3)
    • ►  February 2022 (3)
    • ►  January 2022 (2)
  • ►  2021 (33)
    • ►  December 2021 (4)
    • ►  November 2021 (2)
    • ►  October 2021 (5)
    • ►  September 2021 (2)
    • ►  August 2021 (4)
    • ►  July 2021 (1)
    • ►  June 2021 (5)
    • ►  May 2021 (1)
    • ►  April 2021 (3)
    • ►  March 2021 (2)
    • ►  February 2021 (1)
    • ►  January 2021 (3)
  • ►  2020 (28)
    • ►  December 2020 (4)
    • ►  November 2020 (3)
    • ►  October 2020 (1)
    • ►  September 2020 (1)
    • ►  August 2020 (2)
    • ►  July 2020 (3)
    • ►  June 2020 (3)
    • ►  May 2020 (4)
    • ►  April 2020 (3)
    • ►  March 2020 (2)
    • ►  February 2020 (2)
  • ►  2019 (19)
    • ►  December 2019 (3)
    • ►  November 2019 (1)
    • ►  October 2019 (1)
    • ►  August 2019 (1)
    • ►  July 2019 (3)
    • ►  June 2019 (2)
    • ►  May 2019 (2)
    • ►  April 2019 (1)
    • ►  March 2019 (2)
    • ►  February 2019 (2)
    • ►  January 2019 (1)
  • ►  2018 (25)
    • ►  December 2018 (2)
    • ►  November 2018 (1)
    • ►  October 2018 (5)
    • ►  September 2018 (1)
    • ►  August 2018 (3)
    • ►  July 2018 (1)
    • ►  June 2018 (3)
    • ►  May 2018 (1)
    • ►  April 2018 (1)
    • ►  March 2018 (2)
    • ►  February 2018 (3)
    • ►  January 2018 (2)
  • ►  2017 (20)
    • ►  December 2017 (2)
    • ►  November 2017 (3)
    • ►  October 2017 (2)
    • ►  September 2017 (2)
    • ►  August 2017 (1)
    • ►  July 2017 (1)
    • ►  June 2017 (1)
    • ►  May 2017 (3)
    • ►  April 2017 (1)
    • ►  March 2017 (1)
    • ►  February 2017 (2)
    • ►  January 2017 (1)
  • ►  2016 (18)
    • ►  December 2016 (2)
    • ►  November 2016 (3)
    • ►  October 2016 (1)
    • ►  September 2016 (1)
    • ►  August 2016 (1)
    • ►  July 2016 (2)
    • ►  June 2016 (3)
    • ►  May 2016 (1)
    • ►  April 2016 (1)
    • ►  March 2016 (1)
    • ►  February 2016 (1)
    • ►  January 2016 (1)
  • ►  2015 (20)
    • ►  December 2015 (3)
    • ►  November 2015 (1)
    • ►  October 2015 (2)
    • ►  September 2015 (1)
    • ►  August 2015 (1)
    • ►  July 2015 (2)
    • ►  June 2015 (1)
    • ►  May 2015 (1)
    • ►  April 2015 (3)
    • ►  March 2015 (1)
    • ►  February 2015 (3)
    • ►  January 2015 (1)
  • ►  2014 (22)
    • ►  December 2014 (3)
    • ►  November 2014 (2)
    • ►  October 2014 (2)
    • ►  September 2014 (1)
    • ►  August 2014 (3)
    • ►  July 2014 (2)
    • ►  June 2014 (1)
    • ►  May 2014 (1)
    • ►  April 2014 (1)
    • ►  March 2014 (1)
    • ►  February 2014 (2)
    • ►  January 2014 (3)
  • ►  2013 (16)
    • ►  December 2013 (2)
    • ►  November 2013 (1)
    • ►  October 2013 (2)
    • ►  September 2013 (1)
    • ►  August 2013 (1)
    • ►  July 2013 (1)
    • ►  June 2013 (1)
    • ►  May 2013 (2)
    • ►  April 2013 (1)
    • ►  March 2013 (1)
    • ►  February 2013 (1)
    • ►  January 2013 (2)
  • ►  2012 (16)
    • ►  December 2012 (2)
    • ►  November 2012 (1)
    • ►  October 2012 (1)
    • ►  September 2012 (1)
    • ►  August 2012 (1)
    • ►  July 2012 (1)
    • ►  June 2012 (2)
    • ►  May 2012 (1)
    • ►  April 2012 (1)
    • ►  March 2012 (2)
    • ►  February 2012 (1)
    • ►  January 2012 (2)
  • ►  2011 (26)
    • ►  December 2011 (3)
    • ►  November 2011 (2)
    • ►  October 2011 (1)
    • ►  September 2011 (1)
    • ►  August 2011 (1)
    • ►  July 2011 (3)
    • ►  June 2011 (5)
    • ►  May 2011 (1)
    • ►  April 2011 (2)
    • ►  March 2011 (2)
    • ►  February 2011 (1)
    • ►  January 2011 (4)
  • ►  2010 (29)
    • ►  December 2010 (2)
    • ►  November 2010 (2)
    • ►  October 2010 (2)
    • ►  September 2010 (4)
    • ►  August 2010 (6)
    • ►  July 2010 (2)
    • ►  June 2010 (1)
    • ►  May 2010 (2)
    • ►  April 2010 (3)
    • ►  March 2010 (1)
    • ►  February 2010 (2)
    • ►  January 2010 (2)
  • ►  2009 (28)
    • ►  December 2009 (2)
    • ►  November 2009 (3)
    • ►  October 2009 (3)
    • ►  September 2009 (1)
    • ►  August 2009 (2)
    • ►  July 2009 (2)
    • ►  June 2009 (4)
    • ►  May 2009 (3)
    • ►  April 2009 (2)
    • ►  March 2009 (2)
    • ►  February 2009 (1)
    • ►  January 2009 (3)
  • ▼  2008 (30)
    • ▼  December 2008 (4)
      • ஈழத்துக் கலைஞர் டொக்டர் இந்திரகுமார் நினைவாக
      • Madagascar கொணர்ந்த கார்ட்டூன் நினைவுகள்
      • வலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்
      • ஊரெல்லாம் வெள்ளக்காடு
    • ►  November 2008 (3)
    • ►  October 2008 (2)
    • ►  September 2008 (3)
    • ►  August 2008 (1)
    • ►  July 2008 (2)
    • ►  June 2008 (3)
    • ►  May 2008 (2)
    • ►  April 2008 (3)
    • ►  March 2008 (1)
    • ►  February 2008 (1)
    • ►  January 2008 (5)
  • ►  2007 (53)
    • ►  December 2007 (1)
    • ►  November 2007 (3)
    • ►  October 2007 (2)
    • ►  September 2007 (14)
    • ►  August 2007 (16)
    • ►  July 2007 (2)
    • ►  June 2007 (2)
    • ►  May 2007 (1)
    • ►  April 2007 (4)
    • ►  March 2007 (2)
    • ►  February 2007 (4)
    • ►  January 2007 (2)
  • ►  2006 (35)
    • ►  December 2006 (3)
    • ►  November 2006 (1)
    • ►  October 2006 (3)
    • ►  September 2006 (3)
    • ►  August 2006 (1)
    • ►  July 2006 (13)
    • ►  June 2006 (1)
    • ►  May 2006 (3)
    • ►  April 2006 (1)
    • ►  March 2006 (2)
    • ►  February 2006 (2)
    • ►  January 2006 (2)
  • ►  2005 (4)
    • ►  December 2005 (4)

Followers

Powered by Blogger.

கண்காணிப்புக்குழு

eXTReMe Tracker

Popular Posts

  • "அண்ணை றைற்"
    கடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...
  • திரையில் புகுந்த கதைகள்
    "திரையில் புகுந்த கதைகள்" என்ற வானொலிப்படைப்பை நான் வழங்கியபோது சேர்த்த சில விஷயங்களை இங்கே பகிர்கின்றேன்.மலையாள சினிமா உலகு போல்...
  • நான் உங்கள் ரசிகன்
    முந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, இன...
  • வாடைக்காற்று
    செங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் " வாடைக்காற்று எழுதினாரே, அவரா?" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற்...
  • வலைப்பதிவில் ஒரு வருஷம்
    தமிழ் வலைப்பதிவுலகில் நானும் என் உள்ளக் கிடக்கைகளை எழுத வேண்டும் என்று நினைத்து எழுத ஆரம்பித்து இன்றோடு ஒரு வருஷம் ஓடி விட்டது. இன்பத் தமிழ்...
  • வலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்
    இன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத...
  • மேளச்சமா...!
    "மச்சான்! பிள்ளையாரடி கொடியேறி விட்டுது" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...
  • சிதம்பரத்தில் ஓர் அப்பாவிசாமி!
    இந்தப் பதிவினை எழுதுவதற்கு முன் நிறைய யோசித்தேன். ஆனாலும் இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதம் கடந்த பின்பும், என்னால் ஜீரணிக்கமுடியாத நிகழ்வாக அம...
  • என் இனிய மாம்பழமே....!
    பரமசிவன் குடும்பத்தில் ஒரு ஞானப்பழம் குறித்த பிரச்சனை வந்தது மாதிரி எங்கள் வீட்டிலும் வந்தால் "ஞானப்பழத்தை நீங்களே வச்சுக்கொள்ளுங்கோ, எ...
  • அறிந்திரன் சிறுவர் சஞ்சிகை - சிறுவர் இலக்கிய உலகில் ஓர் புத்தொளி
    சில வாரம் முன் வலையுலகத்தை மேய்ந்த போது திடீரென்று கண்ணில் பட்டது அறிந்திரன் சிறுவர் சஞ்சிகை பற்றிய ஒரு அறிமுகம். அதைக் கண்டதும் என் பால்ய ந...

Social Icons

Featured Posts

 
Copyright (c) 2010 "மடத்துவாசல் பிள்ளையாரடி". Designed for Video Games
Download Christmas photos, Public Liability Insurance, Premium Themes