அணுகுண்டுஅழிவிலிருந்தும் ஃபீனிக்ஸ் பறவைபோல் உயிர்த்தெழுந்த ஜப்பானிய தேசத்திற்கு எனது வேலை செய்யும் நிறுவனம் தொடர்பான வேலைத்திட்டத்திற்கு கடந்த மூண்டு வருஷத்துக்கு முன்னால போயிருந்தன். என்ர டயரியின் பதிவிலிருந்து இதுவரை அச்சேறாத அந்தப் பேனாப் பதிவு இதோ.
சிட்னியிலிருந்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு எட்டரை மணித்தியாலப் பயணம் அது. ஜப்பானின் சர்வதேச விமானத் தளம் நரிற்றா (Narita) என்று அழைக்கப்படுகின்றது. பிளேனில இருந்து இறங்கியதும் முதல் வேலையாகப் பணமாற்று அலுவலகம் சென்றேன். பொதுவாகக் கீழைத்தேய நாடுகளுக்குச் செல்லும் போது ஒரு சில

ஜப்பானில் நான் போன வேளை இதமான காலநிலை எண்டாலும் ஒருவிதப் புழுக்கம் நிலவியது. சாலைப் போக்குவரத்து சீராக இருந்தது. இதற்காகவே செய்யப்பட்டது போல Taxi

ஹோட்டல் அறையில் பைபிளின் புதிய ஏற்பாடு ஜப்பானிய மற்றும் ஆங்கில மொழிப் பதிப்புக்கள் இருந்தன. களைபாறிக்கொண்டே தொலைக்காட்சிப் பொட்டியை முடுக்கினேன். BBC, CCN தவிர அனைத்தும் ஜப்பானியச் சனல்கள் ஆனால் ஒன்றில் கூடக் குலுக்கல் நடனங்களோ அல்லது சினிமா நடிகர் நடிகையரின் அரிய பெரிய(?) பறைசாற்றல்களைக் காணோம். அறிவியல் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளே நிரம்பியிருந்தன. ஜப்பானிய ஹோட்டல்களில் டிப்ஸ் வழங்குவது தடைசெய்யப்பட்டிருக்கிறது. அப்படியே வழங்கினாலும் அது கொடுக்கப்படுவரை அவமானப்படுத்துவது போலவாம்.
ஜப்பானியருடைய எழுத்து முறை சித்திரவடிவில் அமைந்தது. ஒவ்வொரு ஜப்பானிய எழுத்தையும் நுணுக்கமாகப் பார்த்தால் அது சொல்லவந்த செய்தியின் படவடிவில் தான் இருக்கும். உதாரணமாக மரம் என்பதற்கு மரவடிவில் ஒரு எழுத்து இருக்கும்.
இவர்களுடைய மொழியில் மூன்று விதமான உட்பிரிவுகள் காணப்படுகின்றன.
Hiragana என்பது ஜப்பானியப் பூர்வீக எழுத்து வடிவங்களாக 46 எழுத்துக்களைக் கொண்டும் உதாரணம்:

Kanji என்பது சீனமொழிக்கலப்பு எழுத்துக்களாக புழக்கத்தில் 45 எழுத்துக்களைக் கொண்டும்
உதாரணம்:

Katakana என்பது மற்றைய பிறமொழிக் கலப்பு வடிவங்களாக 46 எழுத்துக்களைக் கொண்டும்
உதாரணம்:

உள்ளன. இவற்றில் Kanji என்பது மிகவும் சிக்கலான சொற்சேர்க்கை தாங்கியது. இது 1200 வருடங்களுக்கு முன்பு பெளத்தகுருமாரால் கொண்டுவரப்பட்டது.
டோக்கியோ நகரைவிட்டு சிட்னி திரும்பும்வரை என்னால் காணமுடியாததாக இருந்தவை குப்பைத் தொட்டிகள். வீதிகளின் நடைபாதைகளில் இந்தக் குப்பைத்தொட்டிகளைக் காணமுடியாதிருந்தது. ஆனாலும் சுற்றுச்சூழல் மிகவும் சுத்தமாக இருந்தது. ஜப்பானியர்கள் தாம் வழிநெடுகில் உபயோகித்துத் தீர்ந்த குப்பைகளின் இருப்பிடமாகத் தம் காற்சட்டைப் பைகளை உபயோக்கிறார்களோ என்னவோ...
நான் அவதானித்திருந்த இன்னொரு விடையம் குடைகள். குடைகளுக்கான பாதுகாப்புப் பெட்டகங்கள் (Lockers) எல்லாக் கடைத்தொகுதி மற்றும் முக்கிய நிலையங்களில் உள்ளன. கர்ணனுடைய கவசகுண்டலம் போல்ச் சராசரியாக எல்லா ஜப்பனியரும் குடையுடன் திரிகிறார்கள்.
நான் தங்கியிருந்த நகரத்தில் ஒரு மாலைப்பொழுது உலாவியபோது என்ற The Taj எழுத்து கண்ணில் பட்டது. நான்கு நாட்களாக ஜப்பானிய மற்றும் சீன உணவைச் சாப்பிட்டுச் சலித்துப் போன எனக்கு இந்த உணவகத்தைக் கண்டபோது பக்கத்துவீட்டுக்காரரைப் பார்த்த திருப்தி ஏற்பட்டது. இந்த உணவகத்தில் இந்தியச் சமையலாளியின் கைவண்ணத்தில் நல்ல இந்திய உணவுகள் கிடைக்கின்றன. இந்தியர்கள் பலரையும் கண்டேன்.

1. மிக மலிவாக இருக்கும் பொருட்கள் ஜப்பானின் நுகற் பாவனைக்கு ஏற்றவிதத்தில் மட்டுமே உள்ளன. அவற்றிற்குச் சர்வதேசப் பாவனை உத்தரவாதமும் கிடையாது.
2. சர்வதேசத்தரத்திலும் பாவனைக்கேற்றவிதத்திலும் உள்ளபொருட்களின் விலை பன்மடங்கு அதிகம்.

தங்கநிறப்பூனைச்சிலை நிறைந்த செல்வத்தையும் வெள்ளி நிறப்பூனை கல்வியைப் பெருக்கும் என்றும் கொண்டு அவற்றை வைத்திருக்கிறார்கள்.
தம்கடைகளின் வெளியே உப்பு நிறந்தசட்டிகளை வைத்திருக்கிறார்கள். இதன்மூலம் துர்தேவதைகள்
என்னுடன் பயணத்தில் உடன்வந்த சீன நண்பர் மூலம் சீனர்களின் நம்பிக்கை இரண்டை அறியக்கூடியதாக இருந்தது.
1. சீனர்கள் ஒருவரின் பிறந்தநாளின் போது கடிகாரத்தை வழங்குவது கிடையாது.
அப்படி வழங்குவது பிறந்தநாள் கொண்டாடுபவரை நரகலோகத்திற்கு அனுப்புவதற்கான ஆசிவழங்குவது போலவாம்.
2. ஏதாவது சுபகாரியம் சம்பந்தமான விடையங்களை சிவப்புமைப் பேனாவால் எழுதமாட்டார்களாம்.
ஒருமுறை ஜப்பானில் வெளிவரும் ஆங்கில நாளிதழைப் பார்த்தபோது ஈழத்தின் வன்னிக்குச் சென்று
வந்த ஜப்பானிய நிருபர் ஒருவர் தன் அனுபவத்தை எழுதி இருந்தார்.
முதல் பந்தியிலேயே வன்னியில் இன்னொரு அரசாங்கம் சுயமாக இயங்குவதாகக் குறிப்பிட்டிருந்தார்
நான் புறப்படும் தினம் Asakusa என்ற இடத்திற்குச் சென்றிருந்தேன். நகரவாழ்க்கையிலிருந்து சற்று விலகிய இடமாக அது இருந்தாலும் நகரத்தின் பாதிப்புக்களும் சில இருந்தன. குதிரையில் பணம் கட்டிவிளையாடும் அன்பர்களுக்கான சூதாட்ட விடுதிகளும் அங்கிருந்தன. ஜப்பானிலிருந்து ஞாபகமாக ஏதாவது வாங்கி வரவேண்டும் என்றால் இந்த இடத்திற்குத்தான் வரவேண்டும் , அவ்வளவிற்கு அதிகமான ஜப்பானியக் கலைப்பொருட்களின் கடைகள் அங்கிருந்தன.

Asakusa வில் Temple of Kume என்ற ஆலயம் உள்ளது. பண்டைய காலத்திலே Heinai என்ற ஆட்சியாளன் மக்களை மிகவும் துன்புறுத்தி நாட்டை ஆண்டு வந்தானாம். பின்னர் ஒரு காலகட்டத்தில் அவன் மனம் திருந்தி இந்த ஆலயத்தில் தஞ்சம் புகுந்தானாம்.
அன்றிலிருந்து இந்த இடத்திற்கு வருபவர்களுக்கு நல்வாழ்க்கைக்கானஆசீர்வாதம் வழங்கப்படுவதாக நம்பப்படுகிறது. இந்த ஆலய முன்றலில் 100 ஜப்பானிய ஜென்னைச்
செலுத்தினால் தகரப்பேணியில் உள்ள குச்சிகளில்
ஒன்றைஎடுக்கலாம்.
அருகில் இருக்கும் தபால் பெட்டிகளில் அந்தக் குச்சியில் உள்ள இலக்கத்தை ஒத்த இலக்கமுள்ள இலக்கம் பொருத்தப்பட்ட பெட்டியைத் திறந்தால் சுருட்டப்பட்ட காகிதம் இருக்கும்.
அக்காகிதத்தில் ஜப்பானிய மொழியிலும் ஆங்கில மொழியிலும் சிலவாசகங்கள் உள்ளன. அவை இந்தத் துண்டை எடுத்த நபரின் எதிர்காலம் பற்றிய குறிப்புக்களாக உள்ளன. இந்த நபரின் குறிப்பிட்ட எதிர்காலம் சரியில்லை எனும் பட்சத்தில் அருகில் உள்ள கம்பிவலையில் அந்தத்துண்டைக்கட்டி
வழிபடவேண்டும்.
இந்த ஆலயத்தின் உட்புறம் பெரிய உண்டியல்
அமைக்கப்பட்டிருக்கிறது.
அதில் காசை எறிந்து வழிபடவேண்டும். அந்த ஆலயத்தின் உள் எந்தவொரு விக்கிரமும்
இல்லையென்றாலும் ஆலயச்சுற்றாடலில் சிறு சிறு புத்தர் சிலைகள் உள்ளன.
இந்த மார்ச் 1945, 2ஆம் உலகப்போரின் போது அழிக்கப்பட்டதாம்.
பின்னர் 1978 ஆம் ஆண்டில் இந்த ஆலயத்தின் 1350 ஆவது ஆண்டு நிறைவி
ன்போது சுற்றுலாத்துறையினால் இந்த ஆலயம் புனரமைக்கப்பட்டது.
நான் சென்றவேளை ஜப்பான் பாரிய பொருளாதாரப் பின்னடைவைச் சந்தித்திருந்தது.
வேலையில்லாதோர் படை 6% வீதத்தைத் தொட்டிருந்தது. இருப்பினும் ஜப்பானியர்களின் கடின உழைப்பின் முன் எவரும் நிற்கமுடியாது. காலையில் வேலைக்கு வரும் பலர் இரவு ஒன்பது மணிக்கு மேல் தான் கதிரையைவிட்டு எழும்புவார்கள்.
அவுஸ்திரேலியா, சிட்னியில் 5.30 மணியுடன் பெரும் கடைத்தொகுதிகள் இழுத்து மூடப்பட்டுவிடும். ஆனால் டோக்கியோவில் 9 மணிக்கு மேல் கடைத்தொகுதிகள் திறந்திருப்பது சர்வசாதாரணம்.
சிட்னி திரும்பியதும் ஊருக்குப் போன் எடுத்தேன்.
மறுமுனையில் அப்பா.
" அப்பா! ஜப்பான்காரன்கள் ஓய்வொழிச்சல் இல்லாம நல்லா வேலை செய்வான்கள்"
இது நான்.
" ஏன் நாங்கள் மட்டும் என்ன குறைச்சலே தம்பி? நான் வெள்ளன மூண்டு நாலு மணிக்கு எங்கட தோட்டத்துக்குக் தண்ணி இறைக்கப் போவன், பிறகு எட்டுமணிக்குப் பள்ளிக்கூடம் போய் வாத்தியார் வேலை, பின்னேரம் திரும்பவும் தோட்டவேலை, ஆடுகளுக்கு குழைவெட்ட வேணும்"
இது என்ர அப்பா.