தீபாவளி நாளில் விருந்துண்டு, அலைந்து திரிந்து மதியம் மூன்று மணி காட்சிக்குப் படம் பார்ப்பதே போராட்டம் தான் ஆனாலும்
நம்மவர் படைப்புக்காக நம்மாலான ஆதரவு என்று படம் துவங்கும் வரை நித்திரையோடு போராடி வெற்றி கண்டேன்.
சரி இனி என் பார்வையில் போராட்டம்
ஒரு பக்கம் அவன் காதலில் சாதிக்க முனைவது தான் அதிகம் பிரயத்தனப்படுத்தப்படுகிறது. காற்பந்திலேயே அதிக கவனம் எடுத்திருக்கலாம். இது ஈழத்தவரின் பொதுவான பிரச்சனை. எனக்கும் கூட 
படம் ஆரம்பித்து இடைவேளை வரை தேவை இல்லாத ஆணிகளாக, அந்தக் காதலிக்கும் காட்சிகள், காதலியின் அண்ணனோடு மோதல் போன்றவற்றை நறுக்கி இருக்கலாம்.
இடைவேளைக்குப் பின்னர் வெகு விறுவிறுப்பு. அதையே முன் பாகத்தில் செய்திருக்கலாம்.
தன் காதலியின் அவல அழைப்பைக் கேட்டதும், துடிதுடித்துப் போயிருக்க வேண்டாமோ? இசையமைப்பாளர் கவனித்துக் கொள்வார் என்று அப்படியே உறைந்த மீனாட்டம் இருக்கிறார். அல்லது அந்த நேரம் தயாரிப்பாளரான அப்பா ஷூட்டிங் பார்க்க வந்து விட்டதால் வந்த பயபக்தியோ?
குறிப்பாக அவலச் சாவு அடையும் பள்ளி மாணவன், போ*தையால் தன்னை அழித்த இளைஞன், போ*தைப் பொருள் விற்கும் இளைஞன், கோல் கீப்பர், பொருள் விற்கும் இளைஞனின் மனைவி என்று ஒவ்வொருத்தரும் வெகு யதார்த்தமான நடிப்பு. அதுவும் அந்த கோல் கீப்பர் தன் நண்பனின் முடிவைக் கண்டு அலறும் போது உண்மையில் மெய் சிலிர்த்துக் கண்ணீரை வரவழைத்தது.
பின்னணி இசையிலும் சரி, பாடல்களிலும் சரி அவர் தென்னிந்திய பெரும்பாகத்துச் சினிமாவோடு போடக்கூடிய தரத்தில் அள்ளி வழங்கி இருக்கிறார்.
ஆரம்பத்தில் தேவா திரைப்படங்களுக்கு இசையமைத்துப் புகழ் பெற முன்னர் அவரின் ஏராளமான பக்திப் பாடல்களைப் பாடியவர் கோவை கமலா.
கோவை கமலா ஈழத்துத் தாயகப் பாடல்களையும் வழங்கியவர்.
கானா பிரபா
08.11.2026


0 comments:
Post a Comment