
ஆங்கிலம் மற்றும் பிறமொழிகளைத் தாயகமாகக் கொண்ட புலம்பெயர் சூழலில் தமிழ்மொழிக் கல்வி என்பது இங்கு வாழும் சிறார்களுக்கு ஒரு சவால் மிகுந்த காரியம். வீட்டில் பேச்சுவழக்கில் பேசப்படும் தமிழை, வார இறுதியில் இயங்கும் தமிழ்ப்பாடசாலைகளில் இன்னொரு வடிவில் உள்வாங்கும் சிறுவர்கள் சந்திக்கும் சிக்கல்களுக்குத் தீர்வாக தமிழ்மொழிக்கல்வியில் பேச்சுவழக்கைக் கலப்பதன் அவசியம் குறித்து பரந்துபட்ட ஆய்வொன்றைச் செய்திருந்தவர் முனைவர் சீதாலட்சுமி அவர்கள்.
சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தின் ஒரு பகுதியான தேசியக் கல்விக் கழகத்தில் ஆசிய மொழிகள் மற்றும் பண்பாடுகள் துறையில் இணைப் பேராசிரியராக உள்ள முனைவர் சீதாலட்சுமி ராமசாமி அவர்கள் கடந்த மாதம் சிட்னிக்கு வந்திருந்தார்.
தமிழகத்தின் திருச்சிப் பிரதேசத்தில் பிறந்த இவர் ஆகாசவாணியின் "இளைய பாரதம்" மூலமாகத் தன் ஊடகப் பங்களிப்பையும் வழங்கிருந்தார்.
நியூசவுத்வேல்ஸ் தமிழ்ப்பாடசாலைகள் கூட்டமைப்பின் அனுசரணையில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றுக்காக வந்திருந்த அவரை அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சார்பில் வானொலி நேர்காணல் கண்டிருந்தேன்.
இந்தப் பேட்டியின் வாயிலாக சிங்கப்பூரின் தமிழ் இயங்கும் சூழல்,மற்றும் தன் ஆய்வுப்பணி அனுபவங்களை விரிவாகவும் சிறப்பாகவும் பகிர்ந்து கொள்கிறார் முனைவர் சீதாலட்சுமி இராமசாமி அவர்கள்.
தரவிறக்கிக் கேட்க
நேரடியாகக் கேட்க
0 comments:
Post a Comment