அவரின் பவள விழா நிகழ்வுகள் டிசெம்பர் மாதம் 21 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நிகழ ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
ஈழத்துப் படைப்பாளிகளில், சமூக சிந்தனை கொண்ட களப் பணியாளராகத் திருமதி கோகிலா மகேந்திரன் அவர்களின் செயற்பாடுகள் பன்முகப்பட்டவை. எழுத்தாளர் என்ற எல்லையைத் தாண்டி, உள வள ஆலோசகராக அவரின் பணி இன்னும் காத்திரமானது. தான் கொண்ட எழுத்துக் களத்தில் ஒரு எல்லைக்குள் நிற்காமல் பல்வேறு கூறுகளைத் தொட்டு அவரின் எழுத்துகள் பரந்து விரிந்தது போலவே அவரின் சமூக இயக்கமும் நிகழ்கிறது.
எழுத்துலகில் நாவல்கள், சிறுகதைகள், நாடகப் பிரதிகள், கட்டுரைத் தொகுப்புகள் என்று பரந்து விரிந்த இலக்கியச் செயற்பாட்டுக்காக அரச விருதுகள் பலவற்றைப் பெற்றிருக்கின்றார்.
மாணவ சமூகத்தை நாடகர்கள் மற்றும் சிறுகதை எழுத்தாளர்களாக உருவாக்கிய விதத்தில் இன்று பல்லாண்டுகள் கடந்தும் அவரின் ஆளுமைத் திறனை நன்றி பாராட்டுகிறார்கள்.
இந்த வேளை திருமதி. கோகிலா மகேந்திரன் அவர்களின் பன்முகப்பட்ட செயற்பாடுகளை நான்கு கூறுகளில் ஒலிப் பகிர்வுகளாக எடுத்திருந்தேன்.
அவற்றைக் கேட்க
எழுத்தாளர் லெ.முருகபூபதி
https://www.youtube.com/watch?v=ojzPnjx7s0k
எழுத்தாளர் பாடும் மீன் சு.ஶ்ரீகந்தராசா
https://www.youtube.com/watch?v=UwO19M7YPWw
கிருஷ்ணானந்தன் (வளர் சஞ்சிகை ஆசிரியர்)
https://www.youtube.com/watch?v=7iqrZVCMnss
பேராசிரியர் பிரவீணன் மகேந்திரராஜா
https://www.youtube.com/watch?v=pOUHpDdLIkQ&t=1s
திருமதி. கோகிலா மகேந்திரன் அவர்களது சமூகப் பணி பல்லாண்டு காலம் நீடித்துத் தொடர வேண்டி வாழ்த்துவோம்.


