


பிரம்மஸ்ரீ ந.வீரமணி ஐயர் யாத்த "நல்லை முருகன்" பாடலை, மோகன்ராஜ் இசையமைப்பில் ரகுநாதன் பாடுகின்றார்.
நாதம் கேட்குதடி.......நல்லூர் நாதம் கேட்குதடி....
நாதம் கேட்குதடி நல்லூர் நாதம் கேட்குதடி
நல்லூர் நாதன் கோபுர ஆலய மணி நாதம் கேட்குதடி
நல்லூர் நாதன் கோபுர ஆலய மணி நாதம் கேட்குதடி
கீதம் ஒலிக்குதடி.....கீதம் ஒலிக்குதடி.....
அன்பர் பாடி பரவி உவகை குதித்திடும்
கீதம் ஒலிக்குதடி..........
அன்பர் பாடி பரவி உவகை குதித்திடும்
கீதம் ஒலிக்குதடி..........
நாதம் கேட்குதடி ..........
நல்லூர் நாதன் கோபுர ஆலய மணி நாதம் கேட்குதடி
ஒலியின் அலைகள் விரவிச் செவியில்.......
ஒலியின் அலைகள் விரவிச் செவியில்
ஓம் முருகா.........ஓம் முருகா.......ஓம் முருகா
ஒலியின் அலைகள் விரவிச் செவியில்
ஓம் முருகா என ஒலிக்குதடி
கலியுகத் தெய்வம் கந்தனென்றே மனம் கனிந்து
மெத்தாய் உருகுதடி
கலியுகத் தெய்வம் கந்தனென்றே மனம் கனிந்து
மெத்தாய் உருகுதடி
மலியும் கனிகள் குலுங்கும் நல்லையில்
மலியும் கனிகள் குலுங்கும் நல்லையில்
மால் மருகன் அருள் இருக்குதடி
மால் மருகன் அருள் இருக்குதடி
வலிவும் வனப்பும் வளமும் அருளும்
வடிவேலவன் புகழ் பாடியே
அடியார் தொழக் கவிபாடிடும்
வலிவும் வனப்பும் வளமும் அருளும்
வடிவேலவன் புகழ் பாடியே
அடியார் தொழக் கவிபாடிடும்
நாதம் கேட்குதடி.......நல்லூர் நாதம் கேட்குதடி....
நாதம் கேட்குதடி...... நல்லூர் நாதம் கேட்குதடி....
நாதம் கேட்குதடி.......நல்லூர் நாதம் கேட்குதடி....
நாதம் கேட்குதடி...... நல்லூர் நாதம் கேட்குதடி....



புகைப்படங்கள் 2005 ஆம் ஆண்டு நல்லைக் கந்தன் தீர்த்தோற்சவத்தில் எடுக்கப்பட்டவை.
படங்கள் நன்றி: ஊடகவியலாளர் துஷ்யந்தினி கனகசபாபதிப்பிள்ளை
(முதற்படம் நன்றி: கெளமாரம் தளம்)
9 comments:
நல்ல பாடல். வீரமணி ஐயா அவர்களின் பாடலை மலைநாடான் அவர்கள் வலைப்பூவிலும் கேட்டிருக்கிறேன்.
சப்பரப் படங்கள் மிக அழகு. கூட்டம் சிறப்பாக இருக்கிறது என்பதும் புரிகிறது.
அப்பாடி இன்றாவது உங்கள் பக்கத்தை திறக்க முடிந்ததே!!
அருமையான படங்கள்..அங்கு இருப்பது போன்ற உணர்வு வருது.
//G.Ragavan said...
நல்ல பாடல். வீரமணி ஐயா அவர்களின் பாடலை மலைநாடான் அவர்கள் வலைப்பூவிலும் கேட்டிருக்கிறேன்.//
வணக்கம் ராகவன்
மலைநாடான் முன்னர் வீரமணி ஐயர் இயற்றிய கற்பக வல்லியின் பாடலைத் தந்திருந்தார். இது ஈழத்துக் கலைஞர்களின் இசை மற்றும் குரலில் வந்தருக்கின்றது. சப்பர மற்றும் தேர்ப்படங்கள் இந்த ஆண்டு எடுக்கப்பட்டவை, தீர்த்தப் படங்கள் 2005 எடுக்கப்பட்டவை
//வடுவூர் குமார் said...
அப்பாடி இன்றாவது உங்கள் பக்கத்தை திறக்க முடிந்ததே!!
அருமையான படங்கள்..அங்கு இருப்பது போன்ற உணர்வு வருது. //
வணக்கம் வடுவூர் குமார்
படங்கள் அதிகம் இருப்பதால் பதிவு வருவது கொஞ்சம் தாமதிக்கின்றது. வருகைக்கு நன்றி
ஆஹா, இரவில் எடுத்த படங்கள் இன்னமும் அதிகமாக பிராகசிக்கின்றனவே!
இதற்கு முன் நீங்கள் போட்ட அவ்வளவு பதிவுகளும் இந்த கணினியில் திறக்க முடியவில்லை,என்ன பிர்ச்சனை என்று தெரியவில்லை.
ஆனால் இன்று திறந்துவிட்டது.
பிரபா!
கடைசி 4 படமும் தீர்த்தத் திருவிழாப் படங்களா??
வேறு திருவிழாப் படம் போல் உள்ளது.( வள்ளி தெய்வயானை ஒன்றாக வெள்ளையில்)
இனிய பாடல் இப்போதே கேட்கிறேன்.
வணக்கம் யோகன் அண்ணா
இந்தப் பதிவில் இருக்கும் படங்கள் அனைத்துமே 2005 தீர்த்தோற்சவ நாள் எடுக்கப்பட்டவை.
புதிய படங்கள் இரண்டை நிறைவான நல்லூர்ப் பயணத்தில் இட்டிருக்கின்றேன்.
//ஜீவா (Jeeva Venkataraman) said...
ஆஹா, இரவில் எடுத்த படங்கள் இன்னமும் அதிகமாக பிராகசிக்கின்றனவே! //
வருகைக்கு நன்றிகள் ஜீவா, படங்கள் அற்புதமாக இருக்கின்றன இல்லையா?
//வடுவூர் குமார் said...
இதற்கு முன் நீங்கள் போட்ட அவ்வளவு பதிவுகளும் இந்த கணினியில் திறக்க முடியவில்லை,//
வாங்க வடுவூர் குமார்
இப்பவாவது நீங்கள் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சி
Post a Comment