Pages

Friday, December 05, 2025

வலைப்பதிவு உலகில் நிறைந்த என் 20 ஆண்டுகள் ❤️ ✍🏻

இதே நாள் டிசெம்பர் 5 ஆம் திகதி 2005 ஆம் ஆண்டில் எனக்கென ஒரு வலைப்பதிவை "மடத்துவாசல் பிள்ளையாரடி" என்ற பெயரில் ஆரம்பித்து இன்றோடு 20 ஆண்டுகளை நிறைவு செய்து 21 வது ஆண்டில் காலடி வைக்கிறேன்.

இதுவரை 

509 பதிவுகள் ✍🏻

"ஈழத்து நினைவுகளுக்கும், எம்மவர் குறித்த சிலாகிப்புக்களுமாக"

மடத்துவாசல் பிள்ளையாரடி தளத்திலும்

http://kanapraba.blogspot.com/

960 பதிவுகள் ✍🏻

"என்னை உயிர்ப்பித்து வைத்திருக்கும் நல்மருந்தாய் அமையும் 

இசைப் பகிர்வுகளுக்காக"

றேடியோஸ்பதி தளத்திலும்

http://www.radiospathy.com/

139 பதிவுகள் ✍🏻

"எனக்கு உலாத்தப் பிடிக்கும், அதைவிட உலாத்தியதைப் பேசப் பிடிக்கும் அதற்காக"

உலாத்தல் தளத்திலும்

http://ulaathal.com

என்று வகைப்படுத்தி எழுதியிருக்கிறேன், இன்னும் தொடர்வேன்.

240  பதிவுகள் ✍🏻

வீடியோஸ்பதி தளத்திலும்

https://www.youtube.com/c/videospathy

காணொளி ஊடகத்துக்காக வீடியோஸ்பதி வலைத் தளம், இரண்டு வருட காலத்துக்குள் கணிசமான இடுகைகளை அதில் இட்டிருக்கிறேன். 

தொடர்ந்து இன்னும் இதில் தீவிரமாக இறங்கவுள்ளேன்.

தவிர ஈழத்து முற்றம்

http://eelamlife.blogspot.com/

இசையரசி, கங்காரு தேசம் போன்ற குழுமத் தளங்களிலும் பங்களித்திருக்கிறேன். அவை தனிக்கணக்கு.

இன்றைய சூழலில் வலைப்பதிவுப் பகிர்விலிருந்து இடம் மாறி ஃபேஸ்புக், ட்விட்லாங்கர் போன்ற தொழில் நுட்ப வாகனங்களுக்குப் பல மூத்த பதிவர் நிரந்தரமாக இடம் மாறிய சூழலில், தொடர்ந்தும் வலைப்பதிவில் இயங்கும் மிகச் சிலரில் நானும் ஒருவன் என்ற வகையில் பெருமை கொள்கிறேன்.

ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்றைப் பற்றி எழுதுகிறேன். அது நான் வாழ்ந்த தேசத்து நினைவுகளாகவோ, என்னை உயிர்ப்பித்து வைத்திருக்கும் இசையாகவோ அன்றில் அந்தந்த நேரத்து மன உணர்வின் வெளிப்பாடாகவோ அமைகின்றது. எழுதுவதால் அந்த இறந்த காலத்தை உயிர்ப்பிக்கிறேன், அந்தக் கால கட்டத்துக்குள் சென்று வாழ்கிறேன். மனிதர்களை, வாழ்ந்த காலத்தை மீள வாசிக்கிறேன். எப்பேர்ப்பட்ட வரம் இது.

ஈழத்துப் படைப்பாளிகள், கலையுலகச் செயற்பாடுகள், பயண அனுபவங்கள், செவி நுகர் கனிகளாம் இசையின்பம் இவற்றைச் சுற்றியே என் வலையுலகப் பயணம் தொடர்கிறது.

இதுவரை 

✍🏻 “கம்போடியா - இந்தியத் தொன்மங்களை நோக்கி"

✍🏻 "பாலித் தீவு - இந்துத் தொன்மங்கள்  நோக்கி”

✍🏻 “அது எங்கட காலம்”  - ஈழத்து வாழ்வியல் நனவிடை தோய்தல்”

✍🏻  “SPB பாடகன் சங்கதி” - 3 பதிப்புகள்

✍🏻 “அது எங்கட காலம்”  - ஈழத்து வாழ்வியல் நனவிடை தோய்தல்” - திருத்திய பதிப்பு 

ஆகிய நூல்களை வெளியிட்டிருக்கிறேன். 

இந்த ஆண்டு முடிவதற்குள் மூன்று புத்தகங்களைக் கொண்டு வருவதற்கான வேலை செய்து கொண்டிருக்கிறேன். 

வரும் 2026 எனது அடுத்த முயற்சியாக என் சிறுகதைகளை நூலுருவில் கொண்டு வர இருக்கிறேன்.

தொடர்ந்து என் இரசனையும், தேடலும் வற்றாத கிணறாக ஊறிக் கொண்டிருக்க, வாசகராகிய உங்கள் ஆதரவோடு பயணத்தைத் தொடர்கிறேன்.

நேசம் கலந்த நட்புடன்

கானா பிரபா 

05.12.2025

❤️❤️❤️

No comments:

Post a Comment