Pages

Thursday, February 26, 2026

வெறுங்கால்கள்


வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன் தான்யா

என்று சொன்னாலும், வெளிநாட்டில் பொது உடமைகளைச் சேதப்படுத்துவதில் கீழைத்தேயத்தவரை விட மோசமாகவும் இங்கு நடப்பதுண்டு.

புத்தம்புது ரயில் பெட்டிகளில் சாயம் எறிந்து கிறுக்கி விடுவது என்று அது தொடரும்.

இன்னொரு விஷயம், ரயிலில் இருக்கைக்கு நேரெதிர் ஆசனத்தில் பாதணியோடு கால் போட்டு இருப்பார்கள். அதனால் அப்படியான செய்கை வேண்டாம் என்று அறிவிப்புப் பலகை இருக்கும். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நீட்டிய கால் நமக்கு அருகில் நீண்டிருக்கும். பயங்கரக் கடுப்பாக இருக்கும்.

இரண்டு நாட்களுக்கு முன் வேலை முடிந்து வீடு திரும்புகிறேன். எனது ஆசனப் பக்கத்திலும் நேரெதிர்ப்பக்கமும் யாரும் இல்லை. அடுத்த தொடர்வண்டி நிலையத்தில் ஒரு வயதான சீனப் பெண்மணியும், நான்கு வயது மதிக்கத்தக்க குழந்தையும் ஏறுகிறார்கள்.

எனக்கு நேரெதிர் ஆசனத்தில் அமர்கிறார்கள்.

அந்தக் குழந்தை முதலில் செய்த காரியம், தன் பாதணிகளைக் கழற்றி மெதுவாகக் கீழே வைத்து விட்டுச் சம்மணமிட்டுக் கொள்கிறது.

சரி அந்தக் குழந்தைக்கு பாதணியோடு சம்மணமிட்டு இருக்க அசெளகரிகமாக இருக்கும் போல அதனால் தான் தன் பாதணியைக் கழற்றி வைத்திருக்கிறது என்று நினைத்து விட்டுப் போனில் மூழ்கிப் போனேன்.

பயணம் தொடர்கிறது. நிமிர்ந்து பார்த்தால் அந்தக் குழந்தை தன் மென் பாதங்களை இருக்கையில் படாமல், நீட்டாமல் தன் பாட்டியாரின் தொடையில் வைத்து விட்டு இருக்கிறது.

சின்ன மனிதர் பெரிய மனசு ❤️

கானா பிரபா

படப்பிரதி Chat GPT வடிவமைப்பு

No comments:

Post a Comment