இலங்கை வானொலி மற்றும் பிபிசி புகழ் வானொலியாளர் சுந்தா சுந்தரலிங்கம் அவர்களின் மனைவி.
கடந்த 24 ஆண்டுகளாக வானொலியின் பரம ரசிகையாக இருந்து அவ்வப்போது தன்னுடைய விமர்சனப் பகிர்வுகள் ஆக்கங்களைத் தன் கைப்பட எழுதி அனுப்பி வந்தவர்,
ஒவ்வொரு நாளும் அவரின் மின்னஞ்சலில் தான் விழிப்பேன்.
வலைப்பதிவில் பகிரும் ஒவ்வொரு ஆக்கங்களையும் படித்துத் தன் கருத்துகளை நயம்பட உரைப்பார்.
டொமினிக் ஜீவா, பேராசிரியர் சிவத்தம்பி போன்ற பெரும் ஆளுமைகளுக்கு என்னை அறிமுகப்படுத்தி வைத்தவர்.
யாரையும் புறம் பேச மனம் வராது.
என்னுடைய முதல் வாசகியாக இருந்து வழி நடத்தியவர்களில் மறைந்த எழுத்தாளர் அன்புச் சகோதரி திருமதி. அருண் விஜயராணியோடு திருமதி சுந்தரலிங்கம் ஆன்ரியும் என் வாழ்நாளில் மறக்க முடியாதவர்கள்.
ஆழ்ந்த இரங்கல்களுடன்
போய் வாருங்கள் ஆன்ரி ! 🙏
கானா பிரபா
No comments:
Post a Comment