Pages

Wednesday, August 04, 2021

ஈழத்து இலக்கியப் படைப்பாளி தாமரைச் செல்வி




இன்று ஈழத்தின் மூத்த இலக்கியப் படைப்பாளி தாமரைச்செல்வி (ரதிதேவி கந்தசாமி) அவர்களின் பிறந்த நாள் ஆகும்.

இவர் 1973 ஆம் ஆண்டிலிருந்து 200 க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், ஆறு நாவல்களும், மூன்று குறு நாவலகளும் எழுதியிருக்கின்றார்.

ஏழாவதாக இவர் படைத்த “உயிர் வாசம்” என்ற நாவல் அவுஸ்திரேலியாவுக்குப் படகு மூலம் வந்த ஈழ ஏதிலியர்களின் அவலங்களைச் சுமக்கும் படைப்பாகும். இது 2020 ஆம் ஆண்டின் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் கே.பி.பாலசந்தர் நினைவு விருதைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

வன்னி மண்ணின் பிறந்த அந்த மக்களின் வாழ்வியலோடு, ஈழத்துச் சமூகத்தின் பல்வேறு சமூகச் சிக்கல்களைத் தன் எழுத்துகளில் கொண்டு வந்த விதத்தில் இவரின் படைப்புகள் அந்தந்தக் காலத்தின் கண்ணாடியாகத் திகழ்கின்றன.








தாமரைச் செல்வி எனும் வன்னியின் மூத்த பெண் படைப்பாளி – அகளங்கன்



எழுத்தாளர் தாமரைச் செல்வி அவர்களின் தேர்ந்தெடுத்த படைப்புகள் ஈழத்து நூலகத்தில் வாசிக்கக் கிடைக்கின்றன.





ஞானம் சஞ்சிகை அட்டைப்பட அதிதி தாமரைச் செல்வி



எழுத்தாளர் தாமரைச் செல்வி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் உரித்தாகுக.

கானா பிரபா

No comments:

Post a Comment