Pages

Monday, December 01, 2008

ஊரெல்லாம் வெள்ளக்காடு

முந்தின நாளையில தலைநகர் கொழும்பில உத்தியோகம் பார்க்கிறவை இருந்திட்டு எப்பவாவது விடுமுறைக்கு யாழ்ப்பாணம் வரேக்க வாறவை போறவைக்கெல்லாம் கொழும்பைப் பற்றித்தான் ஏகத்துக்கும் புளுகித் தள்ளுவினம். அப்படி ஒருத்தர் கொழும்பால வந்து யாழ்ப்பாணத்தில் இருக்கும் தன் கூட்டாளியைக் கண்டு பேச்சுக் கொடுக்கிறார்.
"அதை ஏன் கேக்கிறாய்! அங்கத்தைய (கொழும்பு) றோட்டில சோறு போட்டுச் சாப்பிடலாம் அவ்வளவு சுத்தமான தரமான றோட்டுக்கள்"
உடனே யாழ்ப்பாணத்தவர், " உங்கட ஊரில சோறு மட்டும் தான் போட்டுச் சாப்பிடலாம், ஆனா இங்கத்தைய றோட்டில கறி, குழம்பெல்லாம் விட்டுச் சாப்பிடலாம்" என்றாராம் விட்டுக் கொடுக்காமல்.
அவர் அப்படிச் சொன்னதன் அர்த்தம் யாழ்ப்பாணத்து றோட்டுக்கள் குண்டும் குழியுமாக இருக்கும், எனவே குழம்பை ஊத்தினாலும் வழிஞ்சோடாது எண்ட அர்த்தத்தில். இந்தப் பகிடி கன வருஷத்துக்கு முந்தி சிரித்திரன் இதழின் முன் அட்டையில் வந்தது. நான் நினைக்கிறன் அந்த யாழ்ப்பாணத்துப் பாத்திரம் சின்னக்குட்டி என்று.

எங்கட ஊர்ப்பக்கம் தார் றோட்டுப் போடுவதே அரிது, அப்படியிருக்க பராமரிப்பு வேற நடக்குமா என்ன? எப்பவாவது யாராவது புண்ணியவான் றோட்டுப் போடுவம் என்று முடிவெடுத்தாலும் பறிக்கும் சல்லிக்கல்லில் அரைவாசிக்கு மேல் றோட்டுப் போடும் ஒப்பந்தகாரர் வீட்டு மதில் கட்டத்தான் போய் விடும். மிச்சம் மீதி சல்லிக்கல் கும்பலை ஆங்காங்கே பறித்து விட்டிருப்பார்கள். பிறகு றோட்டுப் போடும் நாளுக்கு முன்னரே அதில் அரைவாசி றோட்டால் போற பெடியள் எறிஞ்சு விளையாடவே போய்விடும். மிச்சம் மீதிக் கல்லை வச்சுக் கொண்டு றோட்டுப் போட்டால் அது கச்சான் அலுவா மாதிரி தார் பாதி கல் பாதியாக இளிச்சுக் கொண்டிருக்கும். நல்ல மாரி மழை அடிச்சால் அந்த றோடும் பெயர்ந்து குண்டும் குழியுமாக மீண்டும் தன் பழைய வாழ்க்கைக்குப் போய் விடும். இதான் எங்கட உள்ளூர் தெருக்களின் நிலை.

காங்கேசன்துறை வீதி யாழ்ப்பாணத்துக்குப் போகும் பெருந்தெரு. அதில் கோண்டாவில் மேற்கு எக்ஸ்போ வீடியோ கடையடியில் இருந்து தான் மதகு எண்ட ஒரு சாமானே ஆரம்பிக்குது. நல்ல மழைக்காலம் வந்தால் இந்த மதகுகள் தான் தடையில்லாமல் நீரை கொண்டு செல்ல உதவ வேணும். ஆனால் மதகு கூட காதலில் தோல்வியடைந்தவன் தாடி வளர்த்த மாதிரி நெருஞ்சி முள் பற்றையால் மூடி மறைச்சிருக்கும் மண் திட்டி. இந்த லட்சணத்தில் மழைநீர் எப்படி வெள்ளம் ஏற்படாமல் போய்ச்சேரும்? தொண்ணூற்றி இரண்டாம் ஆண்டு மாவீரர் தின வாரத்தில் எங்கள் ஊருக்கு கிடைத்த ஒரு பேறு இந்த மதகுகள் துப்பரவானது. ஒவ்வொரு வீட்டுக்காறரும் அந்தந்த வீட்டுக்கு முன்னால் உள்ள வீதியையும், மதகுகளையும் சுத்தம் செய்யவேணும் எண்டு அறிவிப்பு வந்தது. இப்படி ஏதாவது அறிவிப்பு முறையான இடத்தில இருந்து வந்தால் மறுபேச்சில்லாமல் எங்கட சனம் திருந்திவிடும்.

ஐம்பது வருஷத்துக்குப் பிறகு இந்த வருஷம் தான் எங்கட ஊரில் கண்காணாத வெள்ளமாம். எங்கட ஆட்கள் பிரமிப்பை வெளிப்படுத்தும் விதமே தனி. கன மழை அடித்தது என்றால் "பேய் மழை பெய்தது" என்பினம், அதிக வெள்ளப்பெருக்கு என்றால் "ஊரெல்லாம் வெள்ளக்காடு" என்று ஆச்சரியம் கொட்டுவினம். ஊரில் இருந்து வெள்ளத்தைச் சாட்சியம் பறையும் படங்கள் வந்திருந்தன.

எனக்கு நினைவு தெரிய இதே மாதிரி எண்பதாம் ஆண்டுகளின் நடுப்பகுதியிலும் ஒருக்கால் மழை வெள்ளம் வந்து ஊரே வெனிஸ் நகரமாக இருந்தது. எல்லா உள்ளூர் றோட்டுகளும் நெஸ்லே ரின்பாலை கடும் தேயிலைச் சாயம் போட்டுக் கலக்கின நிறத்தில ஒரே மழை வெள்ளமா இருந்தது. பள்ளிக்கூடங்களுக்கும் விடுமுறை. எங்கட வீட்டில் இருந்து பிள்ளையாரடிப் பக்கம் போகவே முடியாத வெள்ளம். ஏனெண்டால் எங்களூரில் "குளக்கரை" என்ற ஒரு பகுதி இருந்தது. குபேரன் எண்டு பெயரை வச்சுக் கொண்டு பிச்சை எடுப்பது போல குளக்கரை எண்டு பெயர் தான் ஆனால் அது ஒரு வறண்டு போன பள்ளக் காணி. சொந்தமாக மலசலகூடம் இல்லாதவர்கள் ஒதுங்கப் போவதுக்கும், எங்கள் ஊர் பற்பொடி ஆலைக்கு நெல் உமியை எரித்து எடுப்பதற்கும் அந்த இடம் தான் பயன்படும். மாரி மழை வந்து விட்டால் வர்ண பகவானின் முதல் தாக்குதல் இந்த "குளக்கரை" தான். அப்படியே முழு மழை வெள்ளத்தையும் வாரிக் குடித்து திக்கு முக்காடி றோட்டுப்பக்கமும் வந்து முறையான வாய்க்கால் வசதி இல்லாததால் உள்ளூர் றோட்டையும் தன் நிலைக்கு ஆக்கி ஒரே வெள்ளக்காடாய் ஆக்கிவிடும். அந்தக் குளக்கரைப் பக்கம் றோட்டால் போனால் மார்கழி சீசன் சங்கீதக் கச்சேரியை தவளை, நீர்ப்பாம்பு வகையறாக்கள் இரவிரவாகக் கொடுப்பினம். விடியும் போது பார்த்தால் றோட்டில் வழிந்தோடிய வெள்ளத்தில் வயிறு வெடிச்சுச் செத்த தவக்கைமார் ஆங்காக்கே இருப்பினம்.

இந்தக் குளக்கரையைத் தான் பின்னர் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி இடம்பெயர்ந்து எங்கள் ஊரில் இயங்கியபோது திருத்தி விளையாட்டு மைதானமாக்கப் படாதபாடு பட்டவை. டி.சே தமிழனுக்கு நினைப்பிருக்கும் எண்டு நினைக்கிறன்.

அந்த எண்பதுகளில் வந்த பெரு வெள்ளத்தில் போக்குவரத்துக்காக லொறி டயரை மிதக்க விட்டு ஏறிப்போனவர்களும், வாழைக்குத்திகளைப் பிணைச்சல் இட்டு சவாரி செய்தவர்களும் உண்டு.தாவடிச்சந்திக்கு அங்கால் இருக்கும் நந்தாவில் பக்கம் அதை விட மோசம். காங்கேசன் துறை வீதியில் மிதக்கும் நந்தாவில் நிலப்பரப்பு கடும் ஆழம் கொண்டது. அந்த நேரம் மழை வெள்ளம் நிரம்பி தப்பித் தவறி நந்தாவில் வெள்ளத்தில் விழுந்தவர் நேராக பரலோகம் தான் செல்லலாம், வேறு உபாயங்கள் இல்லை.

கொக்குவில், கோண்டாவில், நந்தாவில், இணுவில் என்று காரணப்பெயர்கள் வந்ததுக்கு காரணமே ஒரு காலத்தில் இந்த ஊர்களில் எல்லாம் குளங்கள் இருந்தனவாம். "வில்" என்றால் குளம். காலவோட்டத்தில் குளங்கள் மாயமாகி மழை வந்தால் தான் பூர்வீகத்தையே இவை நினைவுபடுத்துகின்றன.

ஈரச்சதுப்பு நிலத்தால் நடந்து வந்தால் பாட்டா செருப்பின் பின்புறம் சேற்றில் ஒற்றி பின்னங்கால்கள் எல்லாவற்றிலும் படிந்து போகும்.

"மழையே மழையே மொத்தப் பெய் என்று பாடினால் மழை நிண்டு போயிடுமாம், மழையே போ போ எண்டால் தான் கன மழை பெய்யும்" என்று முன்னர் கூட்டாளி ஒருவன் சொன்ன ஆலோசனையை நானும் அமுல்படுத்தியிருக்கிறேன்.

மழைக்காலம் வந்து விட்டால் காதுக்குள் வந்து கிசுகிசுத்து விட்டு ரத்ததானம் கேட்கும் நுளம்புப்படையை விரட்டுவது எங்கள் வீட்டு முற்றத்தில் இருக்கும் வேப்பமரத்தின் கொட்டைகள், அவற்றை ஏற்கனவே பதப்படுத்திக் காயப்போட்டு வைத்திருப்போம். அதுவும் இல்லாவிட்டால் இருக்கவே இருக்கு, மில்க்வைற் என்ற எங்களூர் உள்ளூர் உற்பத்தி நிறுவனம் செய்த "நீம்" என்ற வேப்பம் கொட்டைகளை அரைத்துப் பொடி செய்த பாக்கெட்டுக்கள். அவற்றை வாங்கி சட்டியிலே தணல் போட்டு அந்தப் பொடியைத் தூவிவிட்டால் நுளம்புகள் கொழும்பைத் தாண்டி ஓடும்.

எங்களைப் பொறுத்தவரை கீரிமலை, கசோர்னா பீஸ் போன்ற கடற்கரைக்கு எல்லாம் போய் காலில் நீரை நனைத்து விளையாட முடியாது, நேவிக்காறன் விளையாடி விடுவான். ஏழைக்கேற்ற எள்ளுப் பொரி போல எங்களைப் போல சிறு நடு றோட்டில் இருக்கும் வெள்ளக் குவியலைக் கண்டால் போதும். அதுவரை வீதி ஓரமாகப் போனவர்கள், சடாரென்று வீதிக்குக்கு குறுக்கால் போய் வெள்ளத்தை ஒரு கலக்குக் கலக்கி, சிலசமயம் ஆளுக்காள் காலால் நீரை எத்தி விளையாடி விட்டு வந்தால் தான் பாவ விமோசனம் கிடைக்கும். ஊர் நாய்களின் எச்சங்கள் கலந்த வெள்ளத்தை இப்ப நினைத்தால் இலேசாக குமட்டுது. வெள்ளம் கலக்கிய முதல் நாள் பெரிசாக மாற்றம் ஏதும் இருக்காது. அடுத்த நாள் இரண்டு காலில் பாதங்களைச் சுற்றி மெதுவாகக் கடிக்க ஆரம்பிக்கும். அடுத்த நாள் பின்னேரம் வாக்கில் காலெல்லாம் சொறிஞ்சு தடிச்சு புண்களாக மாறி எங்களின் முதல் நாள் குற்றத்தை ஒப்புவிக்கும். நீர்ச்சிரங்கின் கைங்கர்யம் அது.
"உமக்கு நல்லா வேணும்! உம்மை ஆர் ஆள் விட்டது வெள்ளம் கலக்கச் சொல்லி" முதுகில் நாலு சாத்தி விட்டு எங்கள் வீட்டு வைத்தியம் ஆரம்பமாகும், வேறென்ன பழைய வேஷ்டியை கிழித்து மண்ணெண்ணையை அதில் ஒற்றி காலைச் சுற்றிக் கட்டுவாள் அம்மா.

படங்கள் நன்றி: தாயகத்தில் இருந்து

45 comments:

  1. "அதை ஏன் கேக்கிறாய்! அங்கத்தைய (கொழும்பு) றோட்டில சோறு போட்டுச் சாப்பிடலாம் அவ்வளவு சுத்தமான தரமான றோட்டுக்கள்"//

    ஐயோ! ஞாபகப் படுத்தி விட்டுடீங்களே!!

    ReplyDelete
  2. கொசுவத்தி நல்லா சுத்தியிருக்கீங்க.

    மழைக்காலத்துக்கு ரொம்பத் தேவையானதும் கூட.

    ReplyDelete
  3. கொசுவத்தி நல்லா இருக்கு தல... எங்க ஊர் ரோடில் இதே மாதிரி தான் போடுவாங்க...கிட்டத்தட்ட தாவணி மாதிரின்னு சொல்லுவோம்.. பட்டும்படாம இருக்கும்...:)

    ReplyDelete
  4. //புதுகைத் தென்றல் said...
    "அதை ஏன் கேக்கிறாய்! அங்கத்தைய (கொழும்பு) றோட்டில சோறு போட்டுச் சாப்பிடலாம் அவ்வளவு சுத்தமான தரமான றோட்டுக்கள்"//

    ஐயோ! ஞாபகப் படுத்தி விட்டுடீங்களே!!
    //

    என்னது பாஸ் சாதத்தையா?? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  5. வெள்ள்ம் நிரம்பிய ஊர் படங்களை கண்டதும் நினைவுகள் வெள்ளமாக அடித்து வந்திருக்கின்றன போல தெரியுதே!

    ReplyDelete
  6. //நெஸ்லே ரின்பாலை கடும் தேயிலைச் சாயம் போட்டுக் கலக்கின நிறத்தில ஒரே மழை வெள்ளமா இருந்தது//

    இப்பவும் அப்படித்தான் தெரியிறது! :)

    ReplyDelete
  7. //ஈரச்சதுப்பு நிலத்தால் நடந்து வந்தால் பாட்டா செருப்பின் பின்புறம் சேற்றில் ஒற்றி பின்னங்கால்கள் எல்லாவற்றிலும் படிந்து போகும்.//

    செம கடுப்பு பாஸ்!

    பின்னாடி வந்த ஸ்கூல் பிகருங்களெல்லாம் சிரிக்கும்! வெள்ளைச்சட்டை சேறு அடிச்சு போயிருக்கறத பார்த்து! அப்பவெல்லாம் அப்பாவ நினைச்சு கோவம் கோவமா வரும்! ஒரு லெதர் செருப்பு வாங்கிக்கொடுத்த நல்லா ஜம்முன்னு இருக்கும்லன்னு!

    ReplyDelete
  8. //உமக்கு நல்லா வேணும்! உம்மை ஆர் ஆள் விட்டது வெள்ளம் கலக்கச் சொல்லி" முதுகில் நாலு சாத்தி விட்டு எங்கள் வீட்டு வைத்தியம் ஆரம்பமாகும்,//

    ஹய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!

    நல்லா முதுகில சாத்தி, ஒதைச்சு துவைச்சு எடுத்திருக்காங்க போல பாஸ் உங்களை!

    எங்க அந்த கதை சொல்லுங்களேன் கேக்க ஜாலியா இருக்கும்!

    ReplyDelete
  9. //(கொழும்பு) றோட்டில சோறு போட்டுச் சாப்பிடலாம் அவ்வளவு சுத்தமான தரமான றோட்டுக்கள்///
    ?????

    ReplyDelete
  10. //"அதை ஏன் கேக்கிறாய்! அங்கத்தைய (கொழும்பு) றோட்டில சோறு போட்டுச் சாப்பிடலாம் அவ்வளவு சுத்தமான தரமான றோட்டுக்கள்"//

    இதுமாதிரி அமெரிக்கா போய் வந்தவங்க சொல்லுவாங்க அந்தக் காலத்தில!! :-))

    ReplyDelete
  11. //மிச்சம் மீதி சல்லிக்கல் கும்பலை ஆங்காங்கே பறித்து விட்டிருப்பார்கள். பிறகு றோட்டுப் போடும் நாளுக்கு முன்னரே அதில் அரைவாசி றோட்டால் போற பெடியள் எறிஞ்சு விளையாடவே போய்விடும். மிச்சம் மீதிக் கல்லை வச்சுக் கொண்டு றோட்டுப் போட்டால் அது கச்சான் அலுவா மாதிரி தார் பாதி கல்பாதியாக இளிச்சுக் கொண்டிருக்கும்.//

    எல்லா ஊரிலயும் இப்படிதானா! :-)) நிரைய விஷயங்கள் எங்க ஊர் மாதிரிதான் இருக்கு!

    ReplyDelete
  12. //ஐம்பது வருஷத்துக்குப் பிறகு இந்த வருஷம் தான் எங்கட ஊரில் கண்காணாத வெள்ளமாம். எங்கட ஆட்கள் பிரமிப்பை வெளிப்படுத்தும் விதமே தனி. கன மழை அடித்தது என்றால் "பேய் மழை பெய்தது" என்பினம், அதிக வெள்ளப்பெருக்கு என்றால் "ஊரெல்லாம் வெள்ளக்காடு" என்று ஆச்சரியம் கொட்டுவினம். ஊரில் இருந்து வெள்ளத்தைச் சாட்சியம் பறையும் படங்கள் வந்திருந்தன//

    :-))) சூப்பர்!!

    ReplyDelete
  13. கொழும்புவின் சுத்தமான சாலைகள் ஞாபகம் வந்தது.

    (உங்களுக்கு கருகாம சோறுவடிக்கத் தெரியலை என்பதற்காக எப்பவும் சோறு ஞாபகமாவே இருந்தா எப்படி ஆயில்ஸ்)

    :))))

    ReplyDelete
  14. //எல்லா உள்ளூர் றோட்டுகளும் நெஸ்லே ரின்பாலை கடும் தேயிலைச் சாயம் போட்டுக் கலக்கின நிறத்தில ஒரே மழை வெள்ளமா இருந்தது//

    அது என்ன ரின்பால்?? புதுசா இருக்கு!!

    //குபேரன் எண்டு பெயரை வச்சுக் கொண்டு பிச்சை எடுப்பது போல குளக்கரை எண்டு பெயர் தான் ஆனால் அது ஒரு வறண்டு போன பள்ளக் காணி. //

    எல்லா ஊரிலயுன் அதுதான் கதை!!

    ReplyDelete
  15. //சடாரென்று வீதிக்குக்கு குறுக்கால் போய் வெள்ளத்தை ஒரு கலக்குக் கலக்கி, சிலசமயம் ஆளுக்காள் காலால் நீரை எத்தி விளையாடி விட்டு வந்தால் தான் பாவ விமோசனம் கிடைக்கும்.//

    அய்யே..அழுக்கு பசங்க!! ;-))

    ReplyDelete
  16. சூப்பரா இருந்தது பதிவு கானாஸ்! அதுவும் உங்க நடையில்...நல்ல ஞாபகச் சிதறல்கள்!! :-)..அப்புறம் வழக்கம்போல் கடைசில உங்க டச்சிங் செண்டிமென்ட்!

    ReplyDelete
  17. ம்.. எங்க ஊருலயும் மழைன்னா குளம்கட்டி நிக்கும் தண்ணி.. சேரடிச்ச டிரஸ்கள் கோவமா வரும் பள்ளி கல்லூரிக்கு போகும் போது.. இதுல என்ன கொடுமைன்னா ..போனதுக்கப்பறம் விடுப்பு விட்ட சேதி தெரியும்..

    ReplyDelete
  18. ///ஆயில்யன் said...
    //உமக்கு நல்லா வேணும்! உம்மை ஆர் ஆள் விட்டது வெள்ளம் கலக்கச் சொல்லி" முதுகில் நாலு சாத்தி விட்டு எங்கள் வீட்டு வைத்தியம் ஆரம்பமாகும்,//
    ஹய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!
    நல்லா முதுகில சாத்தி, ஒதைச்சு துவைச்சு எடுத்திருக்காங்க போல பாஸ் உங்களை!
    எங்க அந்த கதை சொல்லுங்களேன் கேக்க ஜாலியா இருக்கும்!///

    ரிப்பீட்ட்ட்ட்ட்டே... தல நேயர் விருப்பம்.. ஒரு பதிவா போட்டுடுங்க..;))

    ReplyDelete
  19. புதுகைத் தென்றல்

    கொழும்பில் நீங்க இருந்த ஞாபகம் வந்துடுச்சா ;)

    // varun said...
    //(கொழும்பு) றோட்டில சோறு போட்டுச் சாப்பிடலாம் அவ்வளவு சுத்தமான தரமான றோட்டுக்கள்///
    ?????//

    வருண்

    ஒருகாலத்தில் கொழும்பு றோட்டுக்கள் நல்லா இருந்ததை வச்சுக் கொண்டு வந்த உரையாடல் அது.

    ReplyDelete
  20. //சந்தனமுல்லை said...
    //"அதை ஏன் கேக்கிறாய்! அங்கத்தைய (கொழும்பு) றோட்டில சோறு போட்டுச் சாப்பிடலாம் அவ்வளவு சுத்தமான தரமான றோட்டுக்கள்"//

    இதுமாதிரி அமெரிக்கா போய் வந்தவங்க சொல்லுவாங்க அந்தக் காலத்தில!! :-))
    //

    ஆச்சி அது லாங்க் லாங்க் ஏகோ காலமாச்சே! (அதானே பார்த்தேன் ஆச்சி அது மனோரமா யங்க்ஸ்டாரா இருந்த காலமாச்சே!)

    ReplyDelete
  21. //சந்தனமுல்லை said...
    //சடாரென்று வீதிக்குக்கு குறுக்கால் போய் வெள்ளத்தை ஒரு கலக்குக் கலக்கி, சிலசமயம் ஆளுக்காள் காலால் நீரை எத்தி விளையாடி விட்டு வந்தால் தான் பாவ விமோசனம் கிடைக்கும்.//

    அய்யே..அழுக்கு பசங்க!! ;-))
    //

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

    ReplyDelete
  22. //புதுகைத் தென்றல் said...
    கொழும்புவின் சுத்தமான சாலைகள் ஞாபகம் வந்தது.

    :))))
    ///



    அய்யய்யோ!
    பாஸ் நான் நம்பிட்டேன் பாஸ்
    நான் நம்பிட்டேன்!

    ReplyDelete
  23. //தாவணி மாதிரின்னு சொல்லுவோம்.. பட்டும்படாம இருக்கும்...:)
    //

    நானும் ரொம்ப நாளா நோட்டீஸ்க்கினு இருக்கேன் அநியாயத்துக்கு தாவணி கனவுகள் வருது ஆமாம் சொல்லிப்புட்டேன்!

    ReplyDelete
  24. /முத்துலெட்சுமி-கயல்விழி said...
    ம்.. எங்க ஊருலயும் மழைன்னா குளம்கட்டி நிக்கும் தண்ணி.. சேரடிச்ச டிரஸ்கள் கோவமா வரும் பள்ளி கல்லூரிக்கு போகும் போது.. இதுல என்ன கொடுமைன்னா ..போனதுக்கப்பறம் விடுப்பு விட்ட சேதி தெரியும்..
    ///

    அக்காவை வைச்சு காமெடி பண்ணியிருக்காங்க! - பாவம்!

    எங்களுக்கெல்லாம் வீட்ல இருக்கும்போதே தெரிஞ்சுப்பூடும் லீவு வுட்டது :))))

    ReplyDelete
  25. எம் மக்களின் அவலங்கள் கடவுளுக்கும் கண் இல்லையோ என்பதுபோல.என்றாலும் அந்தப் புகைப் படங்களைப் பாருங்கள்.
    அவர்கள் முகங்களில் உள்ள சந்தோஷங்களை.எது இல்லாமல் போனாலும் நிறைந்த துணிவும் நம்பிக்கையும்தான் அவர்கள் வாழ்வோடு.

    ReplyDelete
  26. //(கொழும்பு) றோட்டில சோறு போட்டுச் சாப்பிடலாம் அவ்வளவு சுத்தமான தரமான றோட்டுக்கள்//

    இப்பத்தய கொழும்பு றோட்டுகளில கப்பலே ஓட்டலாம்... சமுத்திரம் போல தான் இருக்கு...!!

    //எங்களைப் பொறுத்தவரை கீரிமலை, கசோர்னா பீஸ் போன்ற கடற்கரைக்கு எல்லாம் போய் காலில் நீரை நனைத்து விளையாட முடியாது//

    இப்ப ஏலும் எண்டு இலங்கை சனநாய்யக சோசியலிச குடியரசின்ர தலைவர் சொல்லுறாராம்... :)

    ReplyDelete
  27. வாங்க தமிழ்பிரியன்

    ஒவ்வொரு ஊரிலும் கோட் வேட் வச்சிருப்பாங்க போல, உங்கூர்ல தாவணி போல ;)

    அடிவாங்கியதைக் கேட்கவும் நேயர் விருப்பமா :(

    ReplyDelete
  28. //ஆயில்யன் said...
    வெள்ள்ம் நிரம்பிய ஊர் படங்களை கண்டதும் நினைவுகள் வெள்ளமாக அடித்து வந்திருக்கின்றன போல தெரியுதே!//

    உண்மைதான் ஆயில்யன், பழைய நினைவுகளைக் கிளறி விட்டது

    //பின்னாடி வந்த ஸ்கூல் பிகருங்களெல்லாம் சிரிக்கும்! வெள்ளைச்சட்டை சேறு அடிச்சு போயிருக்கறத பார்த்து!//

    அதெல்லாம் தணிக்கை செஞ்சுட்டேன் ;)

    ReplyDelete
  29. // ஆயில்யன் said ... (December 01, 2008 9:07 PM) :
    //உமக்கு நல்லா வேணும்! உம்மை ஆர் ஆள் விட்டது வெள்ளம் கலக்கச் சொல்லி" முதுகில் நாலு சாத்தி விட்டு எங்கள் வீட்டு வைத்தியம் ஆரம்பமாகும்,//

    நல்லா முதுகில சாத்தி, ஒதைச்சு துவைச்சு எடுத்திருக்காங்க போல பாஸ் உங்களை!

    எங்க அந்த கதை சொல்லுங்களேன் கேக்க ஜாலியா இருக்கும்//

    சின்னப்பாண்டி கேக்கறார்ல, சொல்லுங்க, நாங்களும் கேட்ட மாதிரி இருக்கும்

    ReplyDelete
  30. நுளம்புக்காக ஒரு செடியை முறிச்சுக்கொண்டு வந்து யன்னல்களின் தொங்கவிட்ட ஞாபகமிருக்கு ஆனால் செடின்ர பெயர்தான் மறந்திட்டுது. வசந்தனண்ணாவ கேட்டால் சொல்லுவார ஆனால் ஆளைக் காணேல்ல.

    வெள்ளத்தப் பற்றி ஒரு பாட்டிருக்கல்லா 1-2ம் வகுப்பு புத்தகத்தில? வெள்ளத்தில் கல்லெறிந்து விளையாட வேண்டாம் வீண்சண்டையால் வழுக்கி விழவேண்டாம் அங்கால சொறி சிரங்கைப் பற்றியெல்லாம் வரும்.

    ReplyDelete
  31. //சந்தனமுல்லை said...
    சூப்பரா இருந்தது பதிவு கானாஸ்! அதுவும் உங்க நடையில்...நல்ல ஞாபகச் சிதறல்கள்!! :-)..அப்புறம் வழக்கம்போல் கடைசில உங்க டச்சிங் செண்டிமென்ட்!//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சந்தனமுல்லை, சின்ன வயசு ஞாபகங்கள் அழியாத கோலங்கள்.

    ReplyDelete
  32. //முத்துலெட்சுமி-கயல்விழி said...
    ம்.. எங்க ஊருலயும் மழைன்னா குளம்கட்டி நிக்கும் தண்ணி.. சேரடிச்ச டிரஸ்கள் கோவமா வரும் பள்ளி கல்லூரிக்கு போகும் போது.. இதுல என்ன கொடுமைன்னா ..போனதுக்கப்பறம் விடுப்பு விட்ட சேதி தெரியும்..//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி முத்துலெட்சுமி

    ReplyDelete
  33. எங்கள் ஊருக்கே போன மாதிரி இருந்தது

    ReplyDelete
  34. எங்கட ஊர்ப்பக்கம் தார் றோட்டுப் போடுவதே அரிது, அப்படியிருக்க பராமரிப்பு வேற நடக்குமா என்ன? எப்பவாவது யாராவது புண்ணியவான் றோட்டுப் போடுவம் என்று முடிவெடுத்தாலும் பறிக்கும் சல்லிக்கல்லில் அரைவாசிக்கு மேல் றோட்டுப் போடும் ஒப்பந்தகாரர் வீட்டு மதில் கட்டத்தான் போய் விடும். மிச்சம் மீதி சல்லிக்கல்.....

    ம்......இது வேறை ஒன்றையும் எனக்கு நினைவு படுத்துது அண்ணா. மெல்போர்னில இருக்கும் போதும் எங்கள் ஊர் நினைவுகளைக் கண் முன்னே கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி. அண்ணா அது சரி அவுஸ்ரேலியாவில எப்பவாவது இப்படிப் பெரிய மழை பெய்யுமாமே?? உவா.. சிநேகிதி அக்கா சொல்லுறது 'குடை பிடிச்சு செருப்புமிட்டு புத்தகமும் கொண்டு குடு குடென நடந்து வரும் குழந்தைகளே கேளிர்... என்ற தங்கத் தாத்தாவின்ர பாட்டைத் தானே......

    ReplyDelete
  35. என்ர நினைவுக்கு 1993 கடைசியில நல்ல மழை பெஞ்சது. அதுக்கு பிறகு நான் அறிய இப்பதான். உது மழையோ அல்லது கடலைக் கொண்டுவந்து கொட்டினது போலவல்லோ கிடக்கு. தாவடி சந்தில கழுத்து வரை நிண்டிச்சாம். பெரிய பெரிய மரங்கள், இவை காலத்தால் அழியாம நிண்ட சரித்திர மரங்கள் எல்லாம் பாறிண்டு விழுந்து போச்சு. உதாரணத்துக்கு நல்லூர் கைலாய பிள்ளையார் கோவில் மரம். இயற்கையும் எம்மை விட்டு வைத்ததா?

    பிரபா, நல்ல பதிவு. மழையைக்கண்டால் எங்கட பொடியளிண்ட ஆனந்தத்திற்கு அளவிராது பாருங்கோ. சும்மா சைக்கிளை தூக்கி சுத்திக்கொண்டு உந்த இடமெல்லாம் திரிவாங்கள். கல்லெடுத்து வெள்ளத்திற்க 'தெத்தி' எறிவாங்கள். எப்ப வருமோ?

    ReplyDelete
  36. // ஹேமா said...
    எம் மக்களின் அவலங்கள் கடவுளுக்கும் கண் இல்லையோ என்பதுபோல.என்றாலும் அந்தப் புகைப் படங்களைப் பாருங்கள்.
    அவர்கள் முகங்களில் உள்ள சந்தோஷங்களை.//

    வணக்கம் ஹேமா

    கதியால் சொன்னது போல நிறைய பழம்பெரும் மரங்கள் எல்லாம் பாழ்பட்டு விட்டனவாம். இந்தப் பெருமழையால் பெரும் போர் சற்றுப் பின்னடவைக் கொடுத்தது தான் ஒரே ஆறுதல்.

    ReplyDelete
  37. //நிமல்-NiMaL said...


    இப்பத்தய கொழும்பு றோட்டுகளில கப்பலே ஓட்டலாம்... சமுத்திரம் போல தான் இருக்கு...!!//

    வாங்கோ நிமல்

    வாங்கிற கடனை குண்டுக்கு செலவழித்தால் றோட்டும் குண்டும் குழியுமாத்தான் இருக்கும் ;)

    கீரிமலை எல்லாம் போகலாமா :(

    //சின்ன அம்மிணி said...
    நல்லா முதுகில சாத்தி, ஒதைச்சு துவைச்சு எடுத்திருக்காங்க போல பாஸ் உங்களை!//


    வாங்க சின்ன அம்மணி

    தப்புச் செய்தா பலனை அனுபவிக்கணும் தானே ;) இதுல நீங்களும் நேயர் விருப்பமா ஆகா

    ReplyDelete
  38. \\அதுவரை வீதி ஓரமாகப் போனவர்கள், சடாரென்று வீதிக்குக்கு குறுக்கால் போய் வெள்ளத்தை ஒரு கலக்குக் கலக்கி, சிலசமயம் ஆளுக்காள் காலால் நீரை எத்தி விளையாடி விட்டு வந்தால் தான் பாவ விமோசனம் கிடைக்கும்\\

    இதெல்லாம் செய்யமால் இருந்தால் தான் தப்பு தல ;))

    நமக்கு இதெல்லாம் சகஜம்...அடியும் சேர்த்து தான் ;))

    ReplyDelete
  39. //சினேகிதி said...
    நுளம்புக்காக ஒரு செடியை முறிச்சுக்கொண்டு வந்து யன்னல்களின் தொங்கவிட்ட ஞாபகமிருக்கு ஆனால் செடின்ர பெயர்தான் மறந்திட்டுது. //


    தங்கச்சி

    எனக்கும் அந்தச் செடி மறந்து போச்சு, வெள்ளம் கலக்கத்தான் தெரியும் பாடப்புத்தகத்திலை இருந்தது மறந்து போச் ;)

    முரளிக்கண்ணன்

    வருகைக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  40. பிரபா,
    நேரத்துக்கு ஏத்த பதிவு, இம்முறை உங்கள் உவமைகள் அடி தூள். அதிலும் காதலில் தோல்வி அடைந்தவன் தாடி வளார்த்தமாதிரி, டின்பாலுக்க தேயிலை கலந்த மாதிரி என்பதெல்லாம அற்புதம்

    சுதுமலையில் எங்கள் அப்பம்மா வீட்டில் பின்சுவரொன்றில் 1954 ல் வந்த பெரும் வெள்ள மட்டத்தை பொழிந்து வைத்துள்ளார்கள். கிட்ட தட்ட அந்த அளவு வந்துவிட்டதாம் வெள்ளம். இதில் ஒரு கவலை என்னவென்றால், வன்னியில் ஏற்கனவே தொற்றுநோய்கள் பரவுவது அதிகம். இப்படியிருக்க வெள்ளாத்தின் பாதிப்பு எப்படி மக்களை பாதிக்குமோ என்பதுதான்......

    ReplyDelete
  41. //மெல்போர்ன் கமல் said...
    /ம்......இது வேறை ஒன்றையும் எனக்கு நினைவு படுத்துது அண்ணா. மெல்போர்னில இருக்கும் போதும் எங்கள் ஊர் நினைவுகளைக் கண் முன்னே கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி. அண்ணா அது சரி அவுஸ்ரேலியாவில எப்பவாவது இப்படிப் பெரிய மழை பெய்யுமாமே?? உவா.. சிநேகிதி அக்கா சொல்லுறது 'குடை பிடிச்சு செருப்புமிட்டு புத்தகமும் கொண்டு குடு குடென நடந்து வரும் குழந்தைகளே கேளிர்... என்ற தங்கத் தாத்தாவின்ர பாட்டைத் தானே......//



    வாங்கோ கமல்

    அதென்ன வேற ஒண்டை நினைவு படுத்துது?, அவுஸ்திரேலியாவிலும் பெய்யும் ஆனா இதே வெள்ளம் வராது.
    போன கிழமை பனிக்கட்டியால வருண பகவான் எறிஞ்சு விளையாடினவர்,

    சினேகிதி சொல்ற பாட்டு நீங்கள் சொன்னதாகத் தான் இருக்கவேணும். அந்த செடி என்னண்டு தெரியுமா?

    ReplyDelete
  42. // கதியால் said...
    மழையைக்கண்டால் எங்கட பொடியளிண்ட ஆனந்தத்திற்கு அளவிராது பாருங்கோ. சும்மா சைக்கிளை தூக்கி சுத்திக்கொண்டு உந்த இடமெல்லாம் திரிவாங்கள். கல்லெடுத்து வெள்ளத்திற்க 'தெத்தி' எறிவாங்கள். எப்ப வருமோ?//

    வாங்கோ கதியால்

    அதுவெல்லோ ஆனந்தம், நீங்கள் சொன்னது போல இந்த நிஷா புயல் பயங்கரமான அழிவையும் கொடுத்ததென்னவோ உண்மை.


    // கோபிநாத் said...


    இதெல்லாம் செய்யமால் இருந்தால் தான் தப்பு தல ;))

    நமக்கு இதெல்லாம் சகஜம்...அடியும் சேர்த்து தான் ;))//

    தல

    நீங்க நம்ம செட்டு தானே ;)


    // அருண்மொழிவர்மன் said...
    பிரபா,


    சுதுமலையில் எங்கள் அப்பம்மா வீட்டில் பின்சுவரொன்றில் 1954 ல் வந்த பெரும் வெள்ள மட்டத்தை பொழிந்து வைத்துள்ளார்கள். //

    அருண்மொழி வர்மன்

    உங்கள் நினைவுகளையும் பகிர்ந்தமைக்கு நன்றி, சுதுமலை பக்கம் எல்லாம் மழை வந்தால் கேட்கவா வேணும்.

    ReplyDelete
  43. யாழ்ப்பாணத்தில இந்த வருடம் மழை பாடாய்ப்படுத்தி விட்டுது (வன்னியிலும் தான்)

    யாழ் நகர்ப்பகுதியெங்கும் வீடுகளுக்குள்ளும் , கிணற்றினுள்ளும் வெள்ளம் புகுந்து பெரிய அவலமான நிலமையுள்ளதாம் !!!

    அங்குள்ளர்கள் எவளவத்தை தான் தாங்குவார்களோ தெரியவில்லை :(

    ReplyDelete
  44. வணக்கம் மாயா

    யாழ்ப்பாணத்தில் ஓரளவு சமாளித்தார்கள், வன்னி நிலமைகள் தான் மிகவும் கொடுமையானதாக இருந்தன, இப்போதும்.

    ReplyDelete
  45. நுளம்புக்காக ஒரு செடியை முறிச்சுக்கொண்டு வந்து யன்னல்களின் தொங்கவிட்ட ஞாபகமிருக்கு ஆனால் செடின்ர பெயர்தான் மறந்திட்டுது.//

    அது காய்ஞ்சோண்டி..

    ReplyDelete