Pages

Sunday, November 02, 2008

மிகுதா! நீ பதில் போட்டு ஒரு வருசம் :(

மிகுதன் போய் ஒரு வருஷம் ஆகி விட்டது.

என் வலைப்பதிவு வாசகனாகி, பின் என் ஊர்க்காரன் என்று அறிமுகப்படுத்தி, பின்னர் எமது தேசத்தைக் காக்கும் விடுதலை வீரன் என்று தன்னைக் காட்டாமலேயே பல காலம் என்னோடு மின்னஞ்சல் தொடர்பில் இருந்தவன் என் தம்பி மிகுதன். தொடர்பில் இருந்த காலம் வரை அதை அவன் சொல்லாமல் தன் செயலில் மட்டும் காட்டியவன். கடந்த ஆண்டு தமிழ்செல்வன் அண்ணா, மற்றும் சக போராளிகளுடன் அரக்க அரசின் இயந்திரக் கழுகால் விதையாகிப் போய் விட்டான்.

உன்னைப் பற்றி நினைக்கும் போதே, தட்டச்சும் போதே தானாக என் கண்கள் எரிந்து குளமாகிறதே. அந்த மிகுதன் நீ தானா என்று மீண்டும் மீண்டும் ஒவ்வொரு தளமாகச் சென்று அவதியாக அலைந்த அந்த போன வருஷக் கணங்கள் இன்னும் அப்படியே. அது அவன் தானா என்று நான் அவனுக்கு அன்று இரவு போட்ட மின்னஞ்சலுக்கு பதில் இன்னும் வரவில்லை....


மிகுதா !

மீண்டும் எனக்கொரு மடல் எழுதுவாயா?


Sent: Tuesday, 18 September, 2007 12:28:35 PM

Subject: mail from miguthan

வணக்கம் பிரபாண்ணா

தங்களது பதிவுகள் பார்த்தேன்
மிகவும் மகிழ்ச்சி
ஒன்றையும் மறக்காதுதான் மனிதர்கள் வாழ்கின்றார்கள்
அதனைச் சொல்வதற்குத்தான் அவர்களால் இயல்வதில்லை
நீங்களும் கொக்குவில் இந்துவில் தான் படித்தீர்கள் என்பதை பதிவின் மூலம் அறிந்தேன்
நானும் 89 தொடக்கம் 95 வரை அங்குதான் படித்தேன்
கார்த்திகேசு இல்லம்
அத்துடன் உங்களது நல்லூர் பற்றிய பதிவை பார்த்தேன்
சின்னொரு வேண்டுகோள்
தமிழின் பெருமைகளைத் தனியே சைவ உறையிட்டு வெளியிடுவதென்பது அதனை வாசிப்பவர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்திவிடும் என்றே நினைக்கின்றேன்
எனக்கு அத்தகைய ஓர் உணர்வு அவ்வளவுதான்!

உங்களது யாழ்ப்பாணச் சரித்திரம் பற்றிய தொடுப்பு மிகவும் பிரையோசனமாக இருந்தது.

நன்றியண்ணை.
உங்களுக்கு நினைவிருக்கின்றதா?
ஒருமுறை மகேந்திரம் அதிபர் நவராத்திரியில் சோடியாக பாட்டுப்பாடியதற்காக நிகழ்ச்சியை குழப்பியது.
எப்படியிருந்தது யாழ்ப்பாணம். இப்ப கேபிள் டிவியோடையே இளசுகளின்ர காலம் கழியுதாம்

விரைவில எல்லாத்துக்கும் வழிசமைப்பம் அண்ணா

நன்றி
மிகுதன்

மரணம்
காரணம் அற்றது
நியாயம் அற்றது

கோட்பாடுகளும்
விழுமியங்களும்
அவ்விடத்தே
உறைந்துபோக - கவிஞர் சேரன்

21 comments:

  1. //விரைவில எல்லாத்துக்கும் வழிசமைப்பம் அண்ணா
    ///


    நம்பிக்கை வரிகளின் வழியில் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையோடே செல்வோம்!

    ReplyDelete
  2. விதைகள் விழுவது அழிந்து போக அல்ல... அதிலிருந்து பல மடங்கு விருட்சங்களை உருவாக்கத்தான்.

    ReplyDelete
  3. மிகவும் சுமையாக உள்ளது அண்ணா!

    :((((

    ReplyDelete
  4. :(((

    //விதைகள் விழுவது அழிந்து போக அல்ல... அதிலிருந்து பல மடங்கு விருட்சங்களை உருவாக்கத்தான்//

    அதே வார்த்தைகள்தான் என்னிடமிருந்தும்!!

    ReplyDelete
  5. //விரைவில எல்லாத்துக்கும் வழிசமைப்பம் அண்ணா...//
    தாயக விடிவிற்காய் நம்பிக்கையோடு இருந்த வீரனின் வார்த்தைகள்..
    நாமும் நம்புவோம் ...

    ReplyDelete
  6. தாயகத்தில் இருப்பதால்...வாய் மூடி அழுகின்றேன். கண்களில் மட்டும் அந்த வீரனுக்காக கண்ணீருடன்

    ReplyDelete
  7. //தமிழின் பெருமைகளைத் தனியே சைவ உறையிட்டு வெளியிடுவதென்பது//
    இது தனியே இடப்படும் உறையல்லவே!
    தமிழையும், சைவத்தையும் இரண்டாய் பிரிக்க இயலுமா என்னே!

    ReplyDelete
  8. லட்சியவேங்கைகள் தோற்பதில்லை என்பதற்கேற்ப வாழ்ந்தவர்கள் இவர்கள். அவரது நம்பிக்கை நிறைவேறும் என்று நாமும் நம்புவோம்

    நம்பிக்கை தானே வாழ்க்கை

    ReplyDelete

  9. விதை ஒன்று போட சுரை ஒன்று முளைக்காது” என்ற வாக்குக்கேற்ப

    விதையாய் விழுந்த வித்துக்கள் மரமாய் எழுவார்கள்,

    அந்த மரத்தின் நிழலில் நாமும் நம் சந்ததியும் சுதந்திர காற்றை சுவாசித்திருப்போம்!!!

    ReplyDelete
  10. //ஒன்றையும் மறக்காதுதான் மனிதர்கள் வாழ்கின்றார்கள்
    அதனைச் சொல்வதற்குத்தான் அவர்களால் இயல்வதில்லை//

    அவர்களால் சொல்ல இயலாததை நீங்கள் உங்கள் பதிவுகளூடாக சொல்லிவருகிறீர்கள்.

    தொடரட்டும் உங்கள் சேவை.

    நன்றி

    ReplyDelete
  11. உங்கள் சோகத்தில் பங்கெடுக்கிறேன்.
    கானா பிரபு போண்றவர்கள் இந்த கொடுமைகளை மேலை நாட்டு அரசுகளுக்கு எடுத்துரையுங்கள்.

    ReplyDelete
  12. மாவீரனுக்கு வணக்கம்
    :(

    ReplyDelete
  13. நாளை
    விடியும்
    சரித்திரம்
    படைக்க
    புறப்பட்ட
    பூக்கள்
    புலர்ந்து
    கொள்ளும்

    ReplyDelete
  14. வணக்கம் பிரபா.கனத்த மனங்களை இறக்க முடியாமல் சுமை தாங்கிகளாய் நாங்கள்.
    எப்போ....?

    ReplyDelete
  15. மாவீரர்.....!
    என்ன மகத்தான வார்த்தை. அதற்குள் எப்படித்தான் வாழ்கிறார்களோ? எத்தனை தியாகங்கள். எத்தனை துன்பங்கள். எத்தனை இழப்புக்கள். இன்னும் இன்னும் எத்தனை எத்தனை.....!
    நீங்கள் வித்தாக விழுந்தீர்கள்!
    விருட்சமாக எழுவீர்கள்!! வீரவணக்கங்கள்!

    ReplyDelete
  16. உயிர்விடும் வேளையில் உங்களின் வாயது
    உரைத்தது தமிழீழம் - அதை
    நிரை நிரையாகவே நின்றினி விரைவினில்
    நிச்சயம் எடுத்தாள்வோம்
    தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும்
    தனியர(சு) என்றிடுவோம் - எந்த
    நிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின்
    நினைவுடன் வென்றிடுவோம்.

    ReplyDelete